15/11/2017

லார்ட் லபக் தாஸ் யார்?


உண்மையில் லார்ட் லபக் தாஸ் ஒரு ஆங்கிலேயர் கிடையாது.

இந்த சொல் 1900 களில் சென்னையில் பெரிய நிலம் வாங்கி வசதியாக வாழ்ந்த குஜராத்திகளைக் குறிக்கும்.

(அந்த நிலம் இன்றும் பார்டர் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
குஜராத்திகள் இப்போதும் இருக்கிறார்கள்).

அவர்கள் பெயர் லாட் என்று தொடங்கி தாஸ் என்று முடியும்.

இன்றும் L.G.N road, V.N.Doss road, Mohan doss road, Gopal doss road ஆகியன இவர்களின் பெயரிலேயே அமைந்துள்ளன...

நாட்டில் தாலுக்கா தோறும் சிறுநீர் வங்கி அமைத்தால் , விவசாயிகள் யூரியா உரம் பெற உதவியாக இருக்கும். மேலும் யூரியா இறக்குமதியை குறைக்கலாம் - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஆலோசனை...


பலி – தமிழர் அறிவியல்...


தமிழர்கள் வாழும் கிராமங்களில் அடிக்கடி காணும் ஒரு காட்சி குலதெய்வ கோவிலில் ஆட்டையோ , சேவலையோ கழுத்தை அருத்து பூசாரி ஒருவர் இரத்தம் குடித்து குறி சொல்லுவார், அந்தநேரம் அவரின் உடல் துடித்தாடும் , அசுர பலம் அவருக்கு உண்டாகும், தைரியம் உண்டாகும், சிந்தனை கூர் அடையும், ஒருவித பதட்டம் ஏற்பட்டு அவரை அறியாமல் ஒரு ஆட்டம் ஆடுவார்…

இதை தமிழர்கள் சாமி ஆடுதல், முருகு, கருப்பு ஆடுதல் என பல்வேறு பெயர்களில் அழைப்பதுண்டு.. பலர் இதை ஒரு காட்டுமிராண்டி தனம் எனவும், அறிவுக்குப் புறம்பான உயிர்நேயம் அற்ற தனம் எனவும் தமிழர்களே பேசி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் வாழ்ந்த அனைத்து இன மக்களும் இதை கடைபிடித்தார்கள் , குறிப்பாக இஸ்லாமிய மக்கள் இதை இன்றளவும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

அப்படி என்ன இந்த பலி கொடுத்தலில் அறிவியல் இருக்கப்போகிறது ? அதை ஏன் உலகம் முழுவதும் மக்கள் கடைபிடித்தார்கள் ? இதற்கான பதிலில் தமிழரின் போர் மரபு மறைந்துள்ளது.

இயற்கையில் அனைத்து விலங்குகளிடமும் அட்ரினலின் (adrenaline) அல்லது எபிநெப்ரின் (Epinephrine) என்ற இயக்குநீர் (hormone) உள்ளது.

ஒரு விலங்கு அபாயத்தை உணர்ந்தால் இந்த இயக்குநீர் அதன் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். இந்த இயக்குநீர் அந்த விலங்கு தப்பித்து ஓட அல்லது எதிர்த்து சண்டையிட தேவையான உடனடி உடல் பலத்தை அந்த விலங்கிற்கு கொடுக்கும்.

அதாவது ஒரு விலங்கு தனக்கு ஆபத்து வருவதை உணர்ந்தவுடன் அட்ரினலின் அட்ரினலின் சுரப்பிகளில் சுரந்து இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவும், அட்ரினலின் முதலில் நரம்பு மண்டலத்தை வேகமாக இயங்க உந்துகிறது , அது அந்த விலங்கின் செயல், சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனை கூர்மை படுத்துகிறது.
நுரையீரல்களின் திறனை அதிகரித்து மூச்சு திறனை வேகப்படுத்தும், இதயத்துடிப்பை அதிகரிக்கும், இரத்தத்தை கால் நோக்கி நகர்த்தி வேகத்தை கூட்டும், தசைகளை இறுக்கம் பெற செய்து உடல் பலத்தை அதிகரிக்கும்.. மற்றும் உடல்கொழுப்பை உடனடியாக கரைக்கும், உடலில் உள்ள சக்கரையை உடனடியாக செரித்து அந்த விலங்கு சன்டையிடவோ அல்லது தப்பிக்கவோ தேவையான பலத்தை உடனடியாக தரும்.

இந்த இயக்குநீர் மனித உடலில் சுரந்தாலும் அதை அதிகரிக்க தமிழர்கள் கண்ட நுட்பம் தான் பலி கொடுத்து இரத்தம் குடித்தல், விலங்கின் கழுத்தை அடிப்பக்கமாக அறுத்தால் அந்த விலங்கின் இரத்தத்தில் பயத்தின் காரணமாக அதிகப்படியான அட்ரினலின் சுரந்து கலந்திருக்கும்.. அதை அப்படியே குடிப்பதின் மூலம் அசூர பலம் உடனடியாக நம் உடலில் உண்டாகும்..

சமீபமாக விக்ரம் நடித்து வெளியான இருமுகன் என்ற இல்லுமினாட்டி படம் இதை மையப்படுத்தி வெளியான படமே.

ஆதிகாலத்தில் தமிழர்கள் போருக்கு தயாராகும் முன் இதற்காகவே பலி கொடுத்தார்கள்.

அட்ரினலின் நமது சிந்தனையையும் அதிகரிப்பதினால் அதை சமுக பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுத்தினார்கள் இதுவே குறி கூறுதலாகவும்.. சாமியாடுதலாகவும் தோன்றுகிறது..

பலி கொடுத்தலும் தமிழர் மரபே.. அதுவும் ஓர் அறிவியலே.. அதை நாம் ஒருபோதும் இழந்துவிட கூடாது..

இதையும் தடைசெய்ய இலுமினாட்டிகள் தொடர்ச்சியாக பல முறை முயற்சி செய்து வருகிறார்கள்..

நம் அடையாளங்களை அழியாது காப்போம். உண்மையை ஆராய்வோம்...

நம்பும் படியே நடக்கும்...


அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர்.

அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய் வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது தான் காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்ததால் உடனடியாக ஒலிப் பெருக்கியில் அறிவித்தனர். யாரும் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைக் குடித்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவின் அறிகுறிகளையும் விவரித்தனர். உடனே அதில் குளிர்பானம் வாங்கிக் குடித்திருந்து அது வரை நோய்வாய்ப்படாதவர்களும் அந்த நோய் அறிகுறிகளை உணர ஆரம்பித்தனர்.

பலரும் மயங்கி விழ ஆம்புலன்ஸ்கள் பெருமளவு அங்கே தேவைப்பட்டன. எல்லோரிடமும் பயம் பரவியது. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அதற்குள் அந்த திடீர் நோயிற்குக் காரணம் அந்த குளிர்பானம் அல்ல என்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அதுவும் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட பிறகு நோயின் அறிகுறிகளை தங்கள் உடல்களில் உணர ஆரம்பித்தவர்கள் கூட சரியாக ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்தவர்கள் கூட திடீரென்று நலமடைந்தார்கள். சிறிது நேரத்தில் ஆரம்பத்தில் நோய் வாய்ப்பட்டவர்களைத் தவிர எல்லோரும் நலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் முதலில் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குடித்ததால் தான் அந்த நோய் ஏற்பட்டது என்று அறிவித்தவுடன் அதில் இருந்து குளிர்பானம் குடித்த அத்தனை பேரிடமும் அந்த நோயின் அறிகுறிகள் காண ஆரம்பித்ததும் பிரச்சினை அந்த குளிர்பான எந்திரத்தில் அல்ல என்பதை அறிவித்தவுடன் அந்த நோயின் அறிகுறிகள் காணாமல் போனதும் மனதினால் சாதிக்கப்பட்டவை. அது தான் அந்த நிகழ்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனதின் நம்பிக்கைகளின் சக்தி இது போன்ற எத்தனையோ ஆராய்ச்சிகளில் விளக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பீச்சர் (Dr. Henry Beecher) இது குறித்து விரிவான ஆராய்ச்சிகள் பலவற்றை செய்துள்ளார். அதில் ஒரு ஆராய்ச்சி நம்பிக்கைகள் ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள் குறித்தது. அந்த ஆராய்ச்சியில் 100 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு புதிய மருந்து வகைகளைக் கண்டுபிடித்திருப்பதாகவும் அதன் சக்தி பரிசோதனைக்காக இந்த ஆராய்ச்சி என்றும் அந்த மாணவர்களுக்குச் சொல்லப்பட்டது.

சிவப்பு மாத்திரை (capsule) உடனடியாக அதிக சக்தி தரும் ஊக்க மருந்தாகவும் (super-stimulant), நீல மாத்திரை உடனடியாக அமைதிப்படுத்தும் மருந்தாகவும் (super-tranquilizer) மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகள் மாணவர்கள் அறியாமல் மாற்றப்பட்டிருந்தன. சிவப்பு மாத்திரை அமைதிப்படுத்தும் மருந்தாகவும், நீல மாத்திரை சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் இருக்க அவற்றை மாணவர்களுக்கு உட்கொள்ளக் கொடுத்தார்கள். ஆனால் ஐம்பது சதவீதம் மாணவர்கள் தாங்கள் என்ன மருந்து சாப்பிட்டோம் என்று தவறாக நம்பினார்களோ அதற்கேற்ற விளைவுகளையே தங்கள் உடலில் கண்டார்கள். இது வரை மருந்தே அல்லாத ஒன்றை மருந்தென்று (Placebo Effect) நம்பி அதற்கேற்றவாறு குணமான பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் டாக்டர் ஹென்றி பீச்சர் உண்மையான மருந்தையே கொடுத்து அதற்கு நேர் எதிரான ஒரு விளைவை மனிதன் தன் நம்பிக்கையால் ஏற்படுத்திக் கொள்கிறான் என்று கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் சிறப்பு.

யேல் பல்கலைக்கழக பேராசிரியர் (Dr. Bernie Siegel) அன்னியன் திரைப்படத்தில் வருவது போல பல ஆட்களாய் ஒருவரே மாறும் (Multiple Personality Disorders) வியாதியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தவர். அப்படி வேறொருவராக மாறும் போது வியக்கத்தக்க வகையில் அவர் உடலும், குணாதிசயங்களும் மாறுவதாக அவர் பரிசோதித்து கண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற மாற்றங்கள் வெறும் கற்பனை அல்ல என்று இதன் மூலம் தெரிகிறது.

இந்த ஆராய்ச்சிகளும், நம்முடைய சில அனுபவங்களும் சொல்லும் மகத்தான உண்மை இது தான் - மனம் எதை உண்மையென நம்புகிறதோ அதை உருவாக்க வல்லது. அந்த நம்பிக்கையின் ஆழத்திற்கேற்ப உருவாக்கத்தின் தன்மையும் இருக்கும்.  இருட்டில் கையில் பிடித்தது கயிறாக இருந்தாலும் அதை பாம்பு என்று எண்ணி பயக்கும் வரையில் உடலில் ஏற்படும் அத்தனை விளைவுகளும் பாம்பைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளாகவே இருக்கும். விளக்கைப் போட்ட பின் அது கயிறென்று உணர்ந்த பின் தான் அந்த பயத்தின் மாற்றங்கள் விலகும்.

உடலில் மட்டும் தான் நம் நம்பிக்கையின் விளைவுகள் வெளிப்படும் என்பதில்லை. எல்லாவற்றிலும் நம் நம்பிக்கைகளின் ஆதிக்கம் உண்டு. எதை நம்புகிறோமா அதற்கேற்ற தன்மைகளை நாம் நம்மிடம் உருவாக்கிக் கொள்கிறோம். அடுத்தவர்களிடமும் உருவாக்கி விடுகிறோம்.

மனம் அந்த அளவு சக்தி வாய்ந்தது என்றால் நாம் எப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நாம் கவனமாக இருக்கிறோமா? நம்முடைய நம்பிக்கைகளில் எத்தனை நம்மை பலப்படுத்துவனவாக இருக்கின்றன? எத்தனை நம்பிக்கைகள் நம்மை மெருகேற்றுவனவாக இருக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களில் தான் நம் வாழ்க்கையின் போக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று திடமாக நம்பும் ஒருவன் அப்படி அதிர்ஷ்டம் இல்லாதவனாகவே வாழ்ந்து மடிகிறான். ஒருசில விஷயங்களில் தொடர்ந்து சில முறை தோல்விகளும், சிக்கல்களும் ஏற்படலாம். அதை வைத்து உடனடியாக அதிர்ஷ்டமில்லாதவன் என்று நம்ப ஆரம்பிப்பது அப்படியே நம் வாழ்வைத் தீர்மானித்து விடுவது போலத் தான். அதே போலத் தான் நல்ல நம்பிக்கைகளும் நம் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவை. ‘எனக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார்’ என்ற நம்பிக்கையில் இருப்பவன் எல்லா சிக்கல்களிலும், பிரச்சினைகளிலும் முடிவில் ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கிறான். கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, கடவுள் அருள் அவனுக்கு உண்டோ, இல்லையோ, அந்த நம்பிக்கை அவனை அந்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றி விடும் என்பது உண்மை.

ஆழமாக எதை நம்பினாலும் அதற்கேற்ற சூழ்நிலைகளையும், தன்மைகளையும் ஈர்க்கக் கூடிய சக்தி நமது ஆழ்மனதிற்கு உண்டு. அதற்கேற்றபடி நம்முடன் பழகுபவர்களின் இயல்புகளை மாற்றும் சக்தியும் நமது ஆழ்மனதிற்குண்டு. அது சரி தவறு என்று பகுத்தறியும் சிரமத்தை அது எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அந்த சிரமத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் அறிவைப் பயன்படுத்தி நம் நம்பிக்கைகளில் நமக்கு நன்மை அல்லாதவற்றை அவ்வப்போது கண்டு களைந்து எறிந்து விட வேண்டும். நல்ல வலுவான நம்பிக்கைகளையே நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நல்லதை நம்புங்கள், வலிமையை நம்புங்கள், சுபிட்சத்தை நம்புங்கள். நம்பிக்கையின் படி சில நேரங்களில் நடக்காமல் போகலாம், எதிர்மாறாகக் கூட சில நேரங்களில் நடக்கலாம். அதை விதிவிலக்காக எண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். தொடர்ந்து நம்பி நன்மைகளை எதிர்பாருங்கள். விரைவில் அந்த நம்பிக்கையின் படியே நல்ல பாதைக்கு வாழ்க்கை நிகழ்வுகள் திரும்புவதை நீங்கள் காணலாம்...

உடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க...


உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும்.

பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது.

இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சரியான குடலியக்கத்திற்கு...

தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

தொண்டை புண்ணை சரிசெய்ய...

எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.

இளமையை தக்க வைக்க...

எலுமிச்சை அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க...

எலுமிச்சையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

எலுமிச்சையில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்தவிதமான நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

கொழுப்பை குறைக்க...

எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

குமட்டலை போக்க...

சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம்.

வாத நோயை சரிசெய்ய...

எலுமிச்சையில் நீர்ப்பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது.

புற்றுநோயை தடுக்க...

அனைவருக்குமே எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதேப் போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.

தலைவலியை போக்க...

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.

நாடாப்புழுக்களை அழிக்க...

குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக்கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.

உணவை செரிப்பதற்கு...

அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகிவிடும்.

உடலை சுத்தப்படுத்த...

தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

பற்களை ஆரோக்கியமாக வைக்க...

எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

காயங்களை குணப்படுத்த...

உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.

முகப்பருவை போக்க...

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.

கல்லீரல் பிரச்சனைக்கு...

எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

பிறப்புறுப்பை சுத்தமாக்க...

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதா? அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொருளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருக்கும்.

கண் பிரச்சனையை போக்க...

எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உணவில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சனைகளையும் சரிசெய்யலாம்

சிறுநீரகக் கற்களை கரைக்க...

எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜூஸை அவ்வப்போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்து விடும்...

பிஸ்தா பருப்பு நன்மைகள்...


ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா.

பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.

பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன.

பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும்.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேக வைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.

மணம் மற்றும் நறுசுவை நிறைந்த பிஸ்தா பருப்பானது ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்றவற்றில் பெருமளவு சேர்க்கப்படுகிறது...

நான் படித்த உளவியலில் இருந்து.. மாணவர்களுக்காக படிப்பது எப்படி என்பதற்கான சில பயிற்சி முறைகள்...


படிப்பதன் நோக்கம் என்ன? என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்..

பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், அறிவை பெருக்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பழக்கங்ளை நீக்கிக் கொள்வதற்கும், ஆளுமையை மேம்படுத்துவதற்கும் முழுமையாகப் பயன்படுவது தான் படிப்பதன் முக்கிய நோக்கம் – என்பதை பள்ளிப் பருவத்தில் அறிந்து கொண்டவர்கள் தங்கள் படிக்கும் பழக்கத்தை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்..

எவ்வாறு படிக்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்வது தான் படிக்கும் பழக்கத்தின் முதல்படி ஆகும்.

ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.

வெவ்வேறு விதமான படிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி கற்றல் (Learning) கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தான் கற்கும் முறை சரியானது தானா? என்பதுகூட தெரியாமல் சில மாணவ – மாணவிகள் பள்ளிகளில் பாடங்களை படிப்பதும் உண்டு.

எனவே முறைப்படி கற்கும் கலையைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஒரு நிகழ்வில் இருந்து கூட பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் விளையாட்டாக விளையாடும் போதும் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

குறிப்பாக – நாம் பார்க்கும் பார்வைகள் (Sight), கேட்பவைகள் (Hearing), செய்யும் செயல்கள் (Doing) ஆகியவற்றின் மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்..

மெய், வாய், கண், மூக்கு, செவி – என்னும் இந்த ஐம்புலன்களும் (Five Senses) நம்மைச் சுற்றி நடக்கின்ற பல்வேறு தகவல்களை நம் மனதினுள் கொண்டுவருகிறது. இந்தத் தகவல்களை முறைப்படுத்தி தேவையானவற்றை மட்டும் உள்வாங்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே நெறிவாழ்க்கை வாழ்வதற்கான பயிற்சியை எளிதாகப் பெற்றுவிடலாம்..

பார்த்தல், கேட்டல், செய்தல் – ஆகிய 3 முறைகளையும் பயன்படுத்தி முறையாக கல்வி கற்க வேண்டும்..

பார்த்தல் எனப்படும் பார்வை என்பது தான் கற்பவருக்கு அவர் படித்தத் தகவல்களை எளிதான முறையில் நினைவில் கொண்டு வருவதற்கு உதவுகிறது. எனவே பாடத்தை கவனமுடன் படிக்கும் போது எவற்றையெல்லாம் படிக்க வேண்டும்? என்பதை மனதிற்குள் முதலில் காட்சிப்படுத்திக் (Visualisation) கொள்ள வேண்டும்.

காட்சிப்படுத்துதல் என்பது செய்ய வேண்டிய செயல்களை மனக்கண்ணில் கொண்டு வந்து ஒவ்வொன்றாக சிந்தித்து பார்ப்பது ஆகும்.

உதாரணமாக – இன்று மாலை படிக்க வேண்டும்? என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் காட்சிப்படுத்துதல் முறையில் இதனைப்பற்றி இப்படி கீழ்க்கண்டவாறு சிந்திக்கலாம்..

நான் பள்ளியை விட்டு 4 மணிக்கு வீட்டுக்கு புறப்பட வேண்டும். சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் போது மணி 4.30 ஆகிவிடும். முகம் கழுவ வேண்டும். அம்மா டீ தருவார்கள். அதனை சாப்பிட்டு முடிக்கும் போது மணி 5 ஆகிவிடும். அதன் பின்னர் முதலில் தமிழ் பாடத்தை படிக்க வேண்டும். ஆங்கிலப் பாடத்தை படித்தபின்பு அறிவியல் பாடத்தை முடிக்க வேண்டும். பின்பு ஹோம் வொர்க் கை செய்து முடிக்க வேண்டும். இரவு 7 மணி வரை படித்தபின்பு கொஞ்ச நேரம் டி.வி. பார்க்க வேண்டும் 7.30 மணிக்கு சாப்பிட்டு விட்டு செய்தித்தாள்கள் படிக்க வேண்டும். சாப்பிடும் போது அம்மாவிடமும், தங்கையிடமும் இன்று நடந்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 8.30 மணியிலிருந்து 10.30 மணிவரை மீண்டும் பாடங்களைப் படிக்க வேண்டும் – என்று காட்சிப்படுத்துதல் முறையில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்..

ஒரு திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள் போல செய்ய வேண்டிய பணிகளை முறைப்படுத்தி மனதிற்குள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதைத் தான் காட்சிப்படுத்துதல் என அழைப்பார்கள்..

படிப்பது மட்டுமல்ல, எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் காட்சிப்படுத்துதல் அந்த செயல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். செய்ய வேண்டிய செயல்களை காட்சிப்படுத்துதல் மூலம் முன்கூட்டியே திட்டமிட்ட பின்பு அதனை நடைமுறைப்படுத்துவது எளிதாகும்..

காட்சிப்படுத்துதலை அடுத்து எப்படி படிக்க வேண்டும்? என்பவற்றையும் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

படிப்பதற்காக நேரம் ஒதுக்கி வீட்டில் படிக்கும் நேரத்தில் தேவையான நோட்டுப் புத்தகங்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையான புத்தகங்களும், நோட்டுகளும் எங்கே இருக்கிறது? என்பதை கண்டு பிடிக்கும் விதத்தில் தேடுதல் வேட்டை யில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிவிடும்..

வகுப்பில் பாடவேளையில் எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்ட நோட்டுகளையும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குறிப்பு நோட்டுகளில் குறிக்கப்பட்ட மிகவும் முக்கியமான குறிப்புகளை மட்டும் கலர் பென்சில் கொண்டு அடிக்கோடு இட்டுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் முக்கியக் குறிப்புகளை மனதில் எளிய முறையில் பதியச் செய்யலாம்..

வகுப்பில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களையும் காட்சிப்படுத்துதல் முறையில் அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். தேவையான இடங்களில் படங்கள் வரையவும், வரைபடங்களை பயன்படுத்தவும் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். சிலவேளைகளில் பாடங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் இண்டர்நெட்டை பயன்படுத்தி இணையதளங்கள் மூலம் படிக்கும் பாடத்திற்கு உதவும் வகையில் அதிக தகவல்களை அதிகமாக சேகரித்துக் கொள்வதன் மூலமும் பாடங்களை எளிதில் கற்க இயலும்..

சிறந்த முறையில் படிப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு ஆடியோ சி.டிக்கள் (CD) வெளிவந்துள்ளன. அதைப்போலவே வீடியோ சி.டி.க்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடத்தை எளிதாக கற்கும் வகையில் அந்தவகை சி.டி.க்கள் உதவுவதால் அவைகளையும் பயன்படுத்தி கற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..

தனியாக இருந்து அறையில் படிக்கும் போது படித்தவற்றை திரும்ப ஒருமுறை புத்தங்களைப் பார்க்காமல் சொல்லிப் பார்த்து நினைவாற்றலை வளர்க்கலாம். மேலும் நெருங்கிய வகுப்பு நண்பர்களை சந்தித்தும் தான் படித்த பாடங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டு பாடம் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..

வகுப்பில் ஆசிரியர்கள் சிலவேளைகளில் குழு விவாதம் (Group Discussion) மூலம் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவார்கள். அந்த வேளைகளில் ஆர்வத்தோடு மற்ற குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கருத்துக்களை பரிமாறுவதற்கும், முரண்பாடுகள் இல்லாமல் மற்ற குழு உறுப்பினர்களோடு பழகுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும்.

குழு விவாதத்தின்போது ஒருவர் தனது பகுப்பாய்வு திறனையும் (Analytical Skill), முடிவெடுக்கும் திறனையும் (Decision Making Skill), பிறறோடு இணைந்து பழகும் திறனையும் (Interpersonal Skill) வளர்த்துக் கொள்வதற்கு அருமையான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு குழு விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும். அப்போதுதான் அறிவாற்றலையும், மற்றவர்களோடு பிரச்சினை இல்லாமல் இணைந்து பழகும் திறனையும் வளர்க்க இயலும்..

அறையில் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து பல மணிநேரங்கள் படிக்கும்போது களைப்பு ஏற்படலாம். இந்தக் களைப்பைப் போக்குவதற்கு இடையிடையே எழுந்துநின்று கொள்ளலாம். சிலவேளைகளில் புத்தகத்தை மூடி வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக கொஞ்சநேரம் நடந்தும் வரலாம். தொடர்ந்து படிக்கும்போது ஏற்படும் களைப்பை நீக்குவதற்கு இடையிடையே இடைவெளிவிட்டு (Breaks) படிப்பது நல்லது..

படித்த பாடங்கள் எளிதில் நினைவில் நிற்கும் வகையில் படித்தவற்றை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப்பார்ப்பது நல்லது.

இதேபோல் அறிவியல் பாடங்களில் உள்ள சோதனைகளை (Experiments) வீட்டில் தனியாக செய்து பார்த்து அந்தப் பாடம் பற்றி மேலும் கற்றுக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டும்..

படிப்பது என்பது நினைவுக் கலையை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என்பதை புரிந்து கொண்டவர்கள் சிறுவயது முதலே பாடங்களை ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்..

மனதை ஒருமுகப்படுத்தவும், திறமைகளை வளர்க்கவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் கல்விதான் மிகப்பெரிய துணை என்பதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்...

தமிழகத்தில் நீங்கள் இனவாதம் பற்றி பேசுகிறீர்களே.. மற்ற மாநிலத்தில் வாழும் தமிழனின் நிலையை எண்ணிப் பாருங்கள்... நண்பரின் கேள்வி இது...


பதில் : பிற மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் அங்கீகாரமோ அடையாளமோ வழங்கப்படவில்லையே, ஏன்?

சில கட்சிகள் பிறமொழியாளர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அரசியலில் இடம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் . நல்ல விடயம் தான். அது தான் சனநாயகப் பூர்வமானது.

ஆனால் அப்படிச் சொல்பவர்கள் ஆந்திராவில் 30 விழுக்காடு தமிழர்களும்.

கர்நாடகாவில் 33 விழுக்காடு தமிழர்களும்.

கேரளாவில் 30 விழுக்காடு தமிழர்களும் வாழ்கிறார்கள் .

அங்கு அவர்களுக்கு எத்தனை விழுக்காடு அரசியலில் இடம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்த்த பின்பே வழங்க வேண்டும்.

ஆனால் ஒரு விழுக்காடு கூட அந்த மாநிலங்களில் தமிழர்களுக்கு அரசியலிலும் சரி அரசு சார்ந்த பணியிலும் சரி இடம் வழங்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.

இது இப்படிச் சொல்கின்ற கட்சியினருக்கும் உங்களுக்கும் புரியுமா?

நோய் எப்படி உண்டாகிறது...


பச்சோந்தி பற்றிய சில தகவல்கள்...


ஓந்தி அல்லது பச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்கு குடும்பம்.

ஓந்திகளுள் ஒரு சில அவற்றின் மனநிலை, வெப்பம், ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை..

ஓந்திகளுள் சில இனங்கள், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவை.

இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்து கொண்டேயிருப்பதாகும்.

பச்சோந்திக்கு காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி.

அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும்.

பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு.

பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

அது மட்டுமின்றி தன்னுடைய இரு கண்களையும் 360°க்கு சுழலும் தன்மையையுடையது.

பச்சோந்திகள் கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி புற ஊதாக்கதிர்களையும் கண்டுணரவல்லது.

அத்துடன் இவைகள் நாக்கினாலே வேட்டையாடுகின்றன.

இதன் நாக்கு ஒட்டும் தன்மையையும் நீண்ட தூரம் நீட்டும் வகைலும் காணப்படுகிரமையினால், இதனால் இருந்த இடத்திலேயே இரையை வேட்டையாடலாம்.

பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள் மூலிகைப் பெயர்...


அருகம்புல்லும் வேரும் - உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும்.

அரசு - கர்பப்பை கோளாறு, மலட்டுத் தன்மை நீக்கும், சூட்டைக் குறைப்பது, சுரம்போக்கும், வீக்கம் குறைக்கும்.

அத்தி - மலமிளக்கி, காமம் பெருக்கு, நீரிழிவு, மூட்டுவலி, இரத்தமூலம் பெரும்பாடு.

அதிமதுரம் - காமாலை நோய், வெண்குஷ்டம், எலும்பு நோய், விக்கல், மார்புச்சளி, தும்மல், இருமல் போக்கும்.

அத்தி - மலச்சிக்கல், கால், மார்பு எரிச்சல், நீர்கடுப்பு அகற்றும்.

அமுக்ரா - அசதி, பசி இன்மை, முதுமை நீக்கம், காமம் பெருக்கும், சக்தி தரும்

ஆடாதொடை - இரத்தவாந்தி, சளிநோய், இசிவு நோய், கோழை இருமல், ஆஷ்துமா, சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

அம்மான் பச்சரிசி - நமைச்சல், தாய்ப்பால் அதிகரிப்பு, வீக்கம், வயிற்றுவலி, சிறுநீரில் போகும் இரத்தம் குணமாகும்.

ஆடு தீண்டாப் பாளை - பலமும் விந்தும் உண்டாகும். மாதவிலக்கைத் தூண்டும், தோல் நோய், மலச்சிக்கல், பூச்சி விஷம் நீக்கும். புண்கள் ஆறும். வாதநோய் நீங்கும். ஆஷ்துமா அகலும்.

ஓரிதழ் தாமரை - காமம் பெருக்கும், சிறுநீர் எரிச்சல், சிற்றின்ப பலவீனம் நீங்கும். சுரம், தலைவலி, வெள்ளை வெட்டைச் சூடு நீங்கும்.

கடுக்காய் - மலச்சிக்கல், பல், கண், காது, மூக்கு தொண்டை நோய்கள், பசியின்மை இரத்த மூலம், ஆண்மை இன்மை, அசதி நீங்கும்.

கல்யாண முருங்கை - மாதவிடாய் கோளாறு நீங்கும், அதிக எடையைக் குறைக்கும்.

கழற்சிக்காய் - அண்டவாய்வு, விதைவீக்கம் குறைக்கும்.

கண்டங்கத்திரி - மார்புச்சளி, தொண்டை கரகரப்பு, நுரையீரல் நோய்கள், பல்வலி போகும்.

கீழாநெல்லி - காமாலை, ஈரல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி
உண்டாகும்.

குப்பை மேனி - மார்புச்சளி, தோல் நோய்கள் போக்கும்.

குமரி இலை - வெள்ளை, வெட்டை சூடு, மலச்சிக்கல் போக்கும். உடல் குளிர்ச்சி
உண்டாகும்.

கோரைக் கிழங்கு - புத்திக் கூர்மை, முடி பக்குவப்படும்.

வல்லாரை - உடல் வலுபெறும், புத்தக் கூர்மைப்படும், நீர் பெருக்கி, மேகப்புண், கட்டி வீக்கம், விரை வீக்கம், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிறு குறிஞ்சான் - சர்க்கரை நோய், குணமாகும். கிருமி நாசினியாகப் பயன்படும்.

மணத்தக்காளி - உடல் உரமாக்கும், கோழை அகற்றும், வாய்ப்புண், கடவாய்ப்புண், இருமல், வயிற்றுப்புண், பாண்டு, பெருவயிறு நீங்கும்.

துளசி - சளி, இருமல் நீங்கும், காய்ச்சல், பசி இன்மை, கோபம், வெறி, தூக்கமின்மை நீங்கும்.

பொடுதலை - தலைப் பொடுகு நீங்கும்.

தாமரை - மார்பு இதய நோய் போகும்.

தான்றிக்காய் - பல்நோய் போகும், மலச்சிக்கல் நீங்கும், உடல் பலம் பெரும்.

துத்தி - மூலம், புழுப்பட்டபுண் குணம்பெற மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி, காமம் உண்டாக்கும்.

தும்பை - கோழை அகற்றும், தலைவலி, அசதி, இருமல், வெள்ளை, தாகம், நஞ்சு நீக்கும்.

தூதுவளை - மார்புச்சளி, காசம், இருமல், இரைப்பு, உடல் குத்தல், மந்தம் நீக்கும், ஆண்மை பெருக்கும், நரம்பு வலுப்பெறும்.

நஞ்சறுப்பான் - எல்லாவித நஞ்சும் நீங்கும், சளி கக்குவான் இருமல், வாய்வு பிடிப்பு குணமாகும், பூரம், வீரம், எட்டி, பாதரச விஷங்கள் நீங்கும்.

நாயுருவி - பல்நோய், வியர்வை, படை, தேமல், இரத்தமூலம், பேதி, இருமல், வெள்ளை, சிறுநீர் சிக்கல், சூதகத் தடை நீங்கும்.

நாவல் - பேதி, சீதபேதி, இரத்த பேதி, மதுமேகம், அதிமூத்திரம் தீரும், நீரிழிவு நீங்கும்.

நீர் வேம்பு - சுரங்கள் நீங்கும், விஷம் நீங்கும், தோல்நோய் போகும்.

நீர்முள்ளி - நீர்க்கட்டு, கால்வீக்கம், பாண்டு, வெள்ளை உடல் அசதி, பெரு வயிறு, நீர் எரிச்சல் நீங்கும்.

நெரிஞ்சில் - குளிர்ச்சி உண்டாக்கும், சிறுநீர் பெருக்கும், காமம் பெருக்கும், சிறுநீர் கல்லடைப்பு, சிறுநீர் சதயடைப்பு, சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

நெல்லி - அழகுண்டாகும், குளிர்ச்சியாகும், மலமிளக்கும், சிறுநீர் பெருக்கும், வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, பிரமேகம் போகும்.

நொச்சி - கிருமி நாசினி, காய்ச்சல், குளிர்சுரம், வீக்கம், கீல்வாயு நீங்கும்.

நீர் பிரம்மி - மூளை வளர்ச்சியடையச் செய்யும், ஞாபக சக்தி உண்டாக்கும், காமம் பெருக்கும், கோழையகற்றும்.

பிரண்டை - உடல் உரமாக்கி, பசித்தூண்டி, மூலம் மந்தம், குன்மம், கழிச்சல், அஜீரணம், வயிற்றுவலி, இருமல், எலும்பு சக்தி பெறும்.

பூவரசு - உடல் உரமாக்கி, சொறி, சிரங்கு, கரப்பான் நீங்கும், கிருமி நாசினி, வீக்கம் நீங்கும், தோல் நோய் குணமாகும்.

பொன்னாங்கண்ணி - பசி உண்டாக்கும், கண்பார்வை கூட்டும், அழகு அதிகரிக்கும், எடை கூடும்.

மருதம்பட்டை - இரத்த அழுத்தம், நீரிழிவு, வெட்டை குணமாகும்.

மாவில்வம் - நீரிழிவு, கண்பார்வை மங்கல் குணமாகும்.

முசுமுசுக்கை - சளியைக் கரைக்கும், உடல் உரமாக்கும்.

முடக்கு அற்றான் - வாய்வு, இடுப்பு வலி, முழங்கால் வலி நீங்கும்.

முருங்கை - அதிக இரத்த அழுத்தம் குணமாகும், காமம் பெருக்கும், உடல் உரமாக்கும்.

மூக்கரட்டை - சிறு நீரகக் கோளாறு நீங்கும், கட்டி கரையும்.

வசம்பு - பசி உண்டாக்கும், இரத்தபித்தம், வாய் நாற்றம், சூலை, இருமல், ஈரல், யானைக்கால் நோய், நஞ்சு, நாடாப்புழு நீங்கும்.

வில்வம் - வியர்வை பெருக்கும், காமம் பெருக்கும், சுரம் நீங்கும் பெரும்பாடு, உடல்வலி நீங்கும்.

வேம்பு - புழுக்கொல்லி, பெருநோய், அம்மைப்புண், சொறிசிரங்கு,பித்தம், காமாலை, முற்றிலும் எல்லா நோய்களுக்கும் கொடுக்கலாம்.

கறிவேப்பிலை - இரும்புச் சத்து உள்ளது, பசித் தூண்டும், சீதபேதி, வயிற்றுளைச்சல் நீங்கும், முடிகறுக்கும்...

மொழிகளின் முதல் நூல்...


சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'சியபஸ்லகர' 1,000 ஆண்டுகள் பழமையானது.

தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நூல் 'மாபாரதம்' 1,000 ஆண்டுகள் பழமையானது.

கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'கவிராசமார்க்கம்' 1,170 ஆண்டுகள் பழமையானது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் 'தொல்காப்பியம்' 4,100 ஆண்டுகள் பழமையானது...

அளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு...


மெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர் - மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.

இந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. "இது என்னடா, ஆட்டுக் கூட்டம் துள்ளாட்டம் போடுதே"! மேய்ப்பவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆடுகளின் தீவனத்தை ஆராய்ந்தார். ஏதோ சிறுகனிகளைக் கொட்டையோடு அசைபோடுவதைக் கண்டார்.

ஞானப்பழம் நீயப்பா என்று பாடாமல் அந்தக் கனியைத் தானும் பொறுக்கி உண்டார். சதைப்பற்று இனிப்பாக இருந்தது. சுடாத பழத்தின் கொட்டையைச் சுட்டு வறுத்துத் தின்றார். சுறுசுறுப்பு அடைந்த உணர்வு. இரவில் தூக்கம் போச்சு.

எப்படியோ, எத்தியோபியக் காபிக் கொட்டையை நினைத்தாலே இனிக்கும். இலந்தைப்பழம் மாதிரி ருசித்துச் சாப்பிடுவர். அங்கு கண்டறியப்பட்ட காப்பிப் பழத்திற்கு "காஃப்பா" (Kaffa) என்ற நகர்ப் பெயரே மூலச்சொல் என்பார் ஒரு சாரார். காபிக் கொட்டை, குதிரைக் குளம்பு வடிவம் கொண்டதாம். அதனால் குளம்பைக் குறிக்கும் "காப்" என்ற ஆங்கிலச்சொல் அடிப்படையில் அதனைக் குளம்பி என்பார் மறுபக்கம்.

ஏதானாலும் காபியில் அடங்கிய முக்கியப் பொருளுக்குச் செல்லப்பெயர் காஃபீன் (Caffein). ஆனால் "காஃபின்" (Caffein) என்பது வேறு. சவப்பெட்டியைக் குறிக்கும். "கோஃபினோஸ்" (Kophinos) என்ற இதன் கிரேக்க அடிச்சொல்லுக்குக் "கூடை" என்று அர்த்தம்.

காபி என்றால் அதில் "காஃபீன்" (Caffein) மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதுதான் இல்லை. காபியில் கிட்டத்தட்ட 2000 வேதிமங்கள் அடக்கம். அனைத்திற்கும் வெவ்வேறு மருந்துக் குணங்கள் உண்டு. சொல்லப்போனால் காபியில் அடங்கிய பாலிஃபீனால் எனும் வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுமாம். பென்சில்வேனியாவில் ஸ்க்ரான்டன் பல்கலைக் கழக ஆய்வு முடிவு.

உலகின் முதல் காப்பிக்கடை முதலாளி இஸ்தான்புல் நகரில் ஓட்டோமான் சுல்தான். 1554-ம் ஆண்டு தொடங்கியது இந்தக் காபித் தூள் வியாபாரம். "கேஃப்" என்றால் பிரெஞ்சு மொழியில் காப்பி நிலையம் (Kophinos). "கஃபட்டேரியா" என்பது ஸ்பானிய மொழியில் "காப்பிக்கடை" (Coffee shop).

ஒருவழியாக, போப் கிளெமென்டைன் சம்மதத்துடன் காபி இத்தாலிக்கு அறிமுகம் ஆனது. கிறிஸ்தவர் அருந்தும் பானம் ஆக தேவாலய அங்கீகாரமும் பெற்றது. மத நல்லிணக்கத்தின் சின்னம் காபி என்றால் அது மிகையாகாது. இசுலாமியர், கிறிஸ்தவர் உணவோடு கலந்து காப்பியை இந்தியாவுக்குள் கள்ளச் சரக்காகக் கடத்தியது நம் ஊர் வியாபாரி. அரேபிய வர்த்தகத்தை முடித்துத் திரும்பும் வேளையில் மடியில் தங்கக் கட்டிகள் மாதிரி ஏழே ஏழு காபிக் கொட்டைகளை ஆசாமி ஒளித்து வைத்துக்கொண்டு வந்தாராம். தென் இந்தியாவில் சிக்மகளூர் தான் காபி காலடி பட்ட முதல் மண்.

1668 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் காபியைக் காப்பி அடித்தது அமெரிக்கா. நியூயார்க் நகரின் காலைச் சிற்றுண்டியில் காபி ஆவி பறந்தது. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் கழித்து ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா காபி குளிர்பானம் ஆயிற்று. டாக்டர் ஜான் எஸ். பெம்பர்ட்டன் என்கிற மருந்தியர் நிபுணர் காஃபீன், கொக்கோ இலைகள், சர்க்கரை, காய்கறிச் சாறு போன்றவை கலந்து 1886 ஆம் ஆண்டு கொக்கோ கோலா என்னும் பானம் தயாரித்தார்.

ஆயின், 1911 ஆம் ஆண்டு கொக்கோ கோலா கம்பெனிக்கு எதிராக அமெரிக்கா ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் அடங்கிய "காஃபீன்" உடலுக்குக் கேடு என்பது அரசுத் தரப்பு வாதம். குற்றம் சாட்டப்பட்டவர் உயிரோடு இருக்கும் போதே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது முதல் ஆச்சரியம். வழக்கில் அரசாங்கம் தோற்றதைத்தான் இந்தியர்கள் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. போகட்டும்.

1970 ஆம் ஆண்டுகளில் காபி உலகப் பிரசித்தம். காஃபீன் குறித்து ஏறத்தாழ 4000 - 5000 ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்து உள்ளதாக ஜேம்ஸ் காஃப்லீன் (James Coughlin) கூறுகிறார். (இவர் பெயரில் வரும் "காஃப்" இருமல் தொடர்பானது?) தென் கலிஃபோர்னியாவில் நச்சியல் ஆய்வாளர். காபி குடித்தால் புற்றுநோய் வாய்ப்பு கால் பாகம் குறையும் என்பது இவர் கண்டுபிடிப்பு.

ஆனால் 1980 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தாமஸ் காலின்ஸ் நடத்திய ஆய்வு காபிப் பிரியர்களைச் சற்று அதிர வைத்தது. குறிப்பாக, கர்ப்பம் தரித்த அன்னையர் காபி குடித்தால் ஊனக்குழந்தை பிறக்குமாம்.

தம் பரிசோதனையில் இவர் சில எலிகளைத் தேர்ந்து எடுத்தார். எல்லாப் பிராணிகளைப் போலவே எலிகளுக்கும் தொண்டைக் குழிக்குள் சிறு குழாயைச் செருகி 200 காபிக்குச் சமமான அளவு பானத்தை ஊட்டினார். அடுத்த மூன்று வருடங்களாக மறுபரிசோதனை நடத்தினார். காபியைத் தண்ணீரில் கலந்து குடிக்கச் செய்தார். முடிவில் எலிக் குஞ்சுகளில் பிறவிக் குறைபாடுகள் அவ்வளவாக இல்லையாம்.

ஒரு நாளைக்கு நாலு நேரம் காபி குடித்தால் பித்தப்பையில் கற்கள் படியும் வாய்ப்பு 40 சதவீதம் என்பது ஒரு கணிப்பு. சிறுநீரகக் கற்கள் வராது. கல்லீரல் புற்று வராது. நீரழிவு நோய் உபாதை எழாது. பார்க்கின்சன் நோய் அண்டாது. நினைவாற்றல் கூடும். மன அழுத்தமும் அகலும். இப்படிப் பல!

இதற்கிடையில், காபியின் தீங்குகள் குறித்த விவாதங்களும் நடந்தேறின. ரத்த அழுத்தமும் அதிகரிக்குமாம். அதனால் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் காபியை நிறுத்த வேண்டும் என்றனர் மருத்துவர் சிலர். தொடக்கக் குடிகாரர்களிடம்தான் இந்தப் பிரச்சினை. பரம்பரைக் காபிக் குடியர்களிடம் ரத்த அழுத்தநோய்க் குறிகள் இல்லையாமே!

இருந்தாலும் ஒரு விஷயம் நம்பிக்கை அளிக்கிறது. காபி குடித்தால் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறதாம். அதற்காக அடுக்கு மாடியில் இருந்து ஆடி ஆடி வரும் சொகுசுவாசிகளே, இன்சுலின் மாத்திரைக்குப் பதில் காபி குடித்தால் சரிப்பட்டு வராது. காபியினால் இன்சுலின் ஊற்றுப் பெருகும் என்பதை திட்டவட்டமாக மறுக்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக் கழகப் பேராசிரியை லிண்டா பேக்கன்.

அது மட்டுமல்ல, காபி ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான். வேளாவேளைக்கு அருந்தவில்லை என்றால் பித்துப் பிடித்தவர் போல் ஆகிவிடுவராம்!

காபியினால் மூளைக்குச் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி என்பது எல்லாம் வெறும் மாயை. காபியே இது பொய்யடா வெறும் போதை மருந்துப் பையடா என்கிறார் ஜாக் ஜேம்ஸ். கால்வேயில் அயர்லாந்து தேசியப் பல்கலைக் கழகத்தின் உளவியல் நிபுணர்.

உளவியல் தொந்தரவுகள் உண்டோ, இல்லையோ கிடக்கட்டும். உடலியல் குறை நிச்சயம் என்று எச்சரிக்கிறார் ஹார்வார்டு பொதுச் சுகாதார கல்வியகப் பேராசிரியர் வால்டர் வில்லெட். காரணம் காப்பியினால் எலும்புகள் கால்சியம் என்கிற சுண்ணாம்புச் சத்து இழந்து பஞ்சு போல் ஆகுமாம்.

பில்டர் காபிக்கு என்ன மகிமையோ அறியோம். ஆனால் வடிகட்டாத (பில்டர் செய்யாத) காப்பியினால் கொலஸ்ட்ரால் சத்து அதிகரிக்கும். ஊளைச்சதை போடும். தஞ்சாவூர் பொம்மை மாதிரி கழுத்தும் இன்றி, காலும் இன்றி எத்தனை நாள் நிதானமாக நடக்க முடியும்?

அது சரி. சராசரி ஆரோக்கியவான் ஒரு நாளைக்கு எவ்வளவு காஃபீன் உட்கொள்ளலாம் என்றுதானே? ஒரு சிட்டிகை (280 மில்லிகிராம்) போதும். அதுவே 30 மடங்கானால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

அப்படியானால் தினந்தோறும் வடிகட்டாத (எஸ்ப்ரஸ்ஸோ) காபி ஒரே டம்ளர் உத்தமம். பில்டர் காபி என்றால் இரண்டு கோப்பைக்கு மேல் வேண்டாம். இன்ஸ்டன்ட் காப்பி என்றால் மூன்றரை குவளை.

இவ்வளவு சிரமம் ஏன்? "கையில் சுக்குடன் மல்லி இருக்கையில் காப்பி எதற்காக?" என்று "இசையமுது" இசைக்கிறார் பாரதிதாசன். நூற்றில் ஒரு வார்த்தை...

குஜராத்தில் பாஜக மோடிக்கு செருப்படி தயாரிகிக் கொண்டே இருக்கிறது...


குஜராத்தில் நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இரண்டு மாதங்களில் 12% செல்வாக்கு அதிகரித்து பாஜகவிற்கு இணையான வெற்றியை பெரும் என்று கருத்துக் கணிப்பு வந்துள்ளது..

இன்னும் தேர்தல் நடக்க ஒரு மாசம் இருக்கு....

பதனீர் – தமிழகத்தின் குளிர்பானம்...


நீர்... பதனீர் ஆம் அதுதான் பதனீர் – இயற்கை அளித்த இன்சுவை பானம்.

பனை – தமிழனின் தனிப்பெருஞ் சொத்து, தமிழ் மண்ணுக்கென்று உள்ள பல சிறப்புகளில் தலை சிறந்தது பனை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.01 கோடி பனை மரங்கள் உள்ளன. ஐந்து கோடி தமிழ் மக்களுக்கும் பங்கு வைத்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு பனை மரம் கண்டிப்பாகக் கிடைக்கும்..

செம்மண், சரளை, மணல், கரிசல் என்ற மண் வேறுபாடுகள் இன்றி எல்லா மண்ணிலும் வளர்ந்து பலன் தரும் பனை தமிழனின் பரம்பரைச் சொத்து ஆகும். தமிழனின் மூளைச் சோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பனைமரம்.

செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவைகளின் நச்சுக்கரங்களால் இன்னும் மாசுபடாமல் கொஞ்சம் பெருமிதத்துடன் வானளாவ வளர்ந்து நிற்கும் பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் பலன் தந்து கற்பக மரமாக காட்சியளிக்கின்றன..

பனை – உடை – ஆடு
தொன்றுதொட்டு வறண்ட மணற் பகுதிகளில் மனிதனை வாழ வைத்தது – பனை – உடை – ஆடு என்ற ஒருங்கிணைந்த சூழ்நிலை இணைப்பே (Integrated Biological Chain) ஆகும்.

பனை குடிசை அமைக்க உதவியது. குடிசைத் தொழில் மூலம் கருப்பட்டி தயாரிக்க, பனை பதநீரைச் சுரந்தது. உடை இத்தொழிலுக்கு எரிபொருள் தந்தது; மற்றும் நெற்றுக்களை உதிர்த்து ஆடு வளர்க்க உதவியது; பனை, உடை ஆகிய மரங்களின் கீழ்ப் புற்களும் வளர்ந்து, ஆடுகளுக்குத் தீவனமாகியது. ஆடுகள் இந்த மரங்களுக்கு உரமிட்டன. பணத்தேவையை ஆடும், கருப்பட்டியும் பூர்த்தி செய்தன.

இந்த அருமையான சுற்றுப்புறச் சூழல் சங்கிலியைச் சீமைக் கருவேல், வேலிக் கருவேல் ஆகியவை சிதைத்து விட்டன..

வேலிக் கருவேலின் நிழலில் பனை வளருவதில்லை. ஆனால் நம் நாட்டின் பூர்வீக உடையான வெள்வேல் உடையின் நிழலில் பனை செழித்து வளரும்..

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்.
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்..

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.

ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான்.

பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை..

பதனீரும், கள்ளும் சர்க்கரைப் பொருள் நிரம்பிய பதனீர் துரிதமாகப் புளித்து கள்ளாக மாறும் இயல்புடையது. பதனீர் சுரந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள்ளேயே பதனீரில் ஆல்கஹால் தோன்றிவிடும். பின்னர்ப் படிப்படியாக ஆல்கஹாலின் அளவு 5% அதிகரித்து விடும். இதுவே போதை தரும் கள்.

இவ்விதம் கள்ளாக மாறுவது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஈஸ்ட் பூசணங்களால் ஏற்படுகிறது. பதனீர் உடனுக்குடன் கள்ளாக மாறாமல் இருக்கவே, பதனீர் இருக்கும் பானையினுள் அடிக்கடி சுண்ணாம்பைத் தடவுகின்றனர்.

பதனீரிலே எல்லாம் இருக்கிறது ஆண், பெண் ஆகிய இருபால் மரங்களிலும் பதனீர் சேகரிக்கலாம்.

தினசரி ஒரு மரம் 10-12 லிட்டர் பதனீர் சுரக்கும். நல்ல சூழ்நிலையில் 18 லிட்டர் வரை பதனீர் பெறலாம்.

250 மில்லி லிட்டர் பதனீரில்,
அமிலகார நிலை 7.2
மொத்த சர்க்கரைப் பொருள் 26.8 கிராம்
இரும்பு 5.5 மில்லி கிராம்
கால்சியம் 35.5 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராம்
தையமின் 82.3 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின் 44.4 மில்லி கிராம்
வைட்டமின் சி 12.2 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம் 674.4 மில்லி கிராம்
புரதம் 47.7 மில்லி கிராம்
சக்தி 113.3 கலோரி
இவ்வாறு அனைத்து ஊட்டச் சத்துக்கள் நிரம்பிய பதனீர் ஒரு அருமையான பானமாகும்.

மெலிந்தோருக்குச் சிறந்த உரமாக்கி (Tonic) ஆகும். இலேசாகப் புளித்த கள் உடலுக்கு நன்மை பயப்பதாகும்.

இதில் நிறைய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உற்பத்தியாகி இருக்கும். எனவே அருந்துவோரிடம் வைட்டமின் பி பற்றாக் குறை தோன்றுவதில்லை. கோடைக் காலத்தில் தினந்தோறும் ¼ லிட்டர் முதல் ½ லிட்டர் வரை பதனீர் பருகி வர, உடலுக்கு மிகவும் நலம் பயப்பதுடன் கோடைக்கால நோய்கள் வராமலும் தடுக்கும்...

தமிழின் பெருமைகள்...

               
உலகில் சுமார் 6 ஆயிரம் மொழிகள் பழக்கத்தில் உள்ளன. அத்தனை மொழிகளிலும் 6 மொழிகள் தான் உலகத்திற்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்த பாரம்பரியம் உடைய மொழிகள்.

அவற்றில் தமிழ், சீனம், அண்மையில் ஹூப்ரு ஆகிய மொழிகள்தான் அறிவியல் யுகத்துக்கும் ஈடுகொடுத்து தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன.

பாடம் கற்கிற ஊடகமாகவும், பயன்பாட்டுக்குரிய வாழ்க்கை மொழியாகவும், தமிழ் நமக்கு வாய்த்திருக்கும் பெருமையை இன்னும் முழுமையாக நாம் உணரவில்லை.

ஆனால் உலகம் நன்றாக உணர்ந்திருக்கிறது. ஒரு மாநிலத்திற்குரிய மொழியாக இல்லாமல் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பேசும் உலக மொழியாகவே, சர்வதேச அளவில் தமிழ் மதிக்கப்படுகிறது.

அதற்கு சாட்சியாக உலகம் முழுவதும் 40 மொழிகளில் தனது ஒலிப்பரப்பைச் செய்கிற பி.பி.சி நிறுவனம் இந்திய மொழிகளில்  தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே ஒலிபரப்பைச் செய்கிறது..

42 மொழிகளில் ஒளிபரப்புச் செய்யும் சீன வானொலியும் இந்த இரண்டு மொழிகளுக்கு மட்டும் பெருமையளிக்கிறது.

சர்வதேச மொழிகளில் வெளியாகும் யுனெஸ்கோ கூரியர் பத்திரிக்கை இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வெளியாகிறது.

உலக வரைபடத்தில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவே இருக்கிறது.

ஜெருசலத்தில் உள்ள ஒலிவமலை தேவாலயத்தில் 68 மொழிகளில் எழுதப்பட்டுள்ள ஏசு அருளிய ஜெபம், இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில், தமிழ் வருடங்கள் அறுபதையும் குறிக்கும் வகையில் படிக்கட்டுகளுக்கு பிரபவ முதல் அட்சய வரையிலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன..

இன்று சர்வ வல்லமை பெற்றுள்ள இணைய தளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும், பயன்பாட்டு மொழியாக இந்திய மொழிகளில், ஏறத்தாழ தமிழ் முதலிடம் வகிக்கிறது என்பது பெருமைப்படத்தக்கது..

செம்மொழி :

காலத்தால் அளவிட இயலாத தொன்மை வாய்ந்த தமிழ் இயல், இசை, நாடகம் எனும் மூன்று பிரிவுகளாக வளர்ந்துள்ளது.. பல்வேறு வரிவடிவங்களைப் பெற்று, வளர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் மொழிகளை உருவாக்கி இன்று செம்மொழி எனும் அடைமொழியும் பெற்று இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மொழி நம் தாய் மொழி எனும் பெருமை அளவிட இயலாதது..

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் குகைகளிலும், கற்ப்பாறைகளிலும் கல்வெட்டாகவும், பின்னர் செப்புத் தகடுகளிலும், அதன்பின் எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டு வந்த தமிழின் வரிவடிவம் 1930-க்குப் பின் காகிதங்களிலும் அச்சிடப்பட்டு வருகிறது.

மேலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து கணிணி பயன்பாட்டிலும் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது...

தாய் மொழியாம் தமிழ் வழிக்கல்வி இன்னும் தமிழை வளர்க்கும் என்பது தெள்ளத் தெளிவு...

இலங்கை என்ற நாடு அல்ல அது தமிழ் ஈழம்.. உலக அரசியலும் தமிழர்களின் ஈழம் எனும் அரசியலை அடுத்த பதிவில் காணலாம்...


ஈழம் ஏன் அழிக்கப்பட்டது..? எதற்கு உலக அரங்கில் நாம் அகதிகளாக அழைக்கப்பட்டோம்..?

தமிழர் என்பதாலேயே அழித்தார்கள் என்று ஏன் ஊடகங்களில் தொடர்ச்சியாக காட்டப்பட்டது என்பதை அடுத்த பதிவில் காணலாம்...

பாஜக மைண்ட் வாய்ஸ்...


சீக்கியனும் தமிழனும் கொள்ளவில்லை என்றால் கோட்ஸே மாதிரி நாங்களே காலத்தில் இறங்கி இருப்போம் என்று நினைக்கிறானுங்க...

தமிழ் நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்த இந்திக்கார நாய்களின் வேலையை பாருங்கள்...


ரேசன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது - தமிழக அரசு அறிவிப்பு...


உளுத்தம் பருப்பு கொள்முதலை நிறுத்தி விட்டதாகவும், இனி ரேசன் கடைகளில் துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது...

தமிழை அழிப்பதற்கு தான் திராவிடம் என்பதற்கான ஒரு உதாரணம்...


ரெய்டுகளால் பரபரத்துக் கிடக்கும் தமிழகம்: தூக்கி வீசப்பட்ட 2000 ரூபாய் கட்டுகள்...



சசிகலா குடும்பத்தை குறிவைத்து தமிழகத்தில் நடைபெற்ற இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஈரோட்டில் பேருந்து நிலையத்தில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் நேற்று முந்தினம் இரவு 7 மணியளவில் ஒரு மஞ்சள் பை தனியாக கிடந்துள்ளது. வெகுநேரமாகியும் அது கேட்பாரற்று கிடந்ததால் அங்கு பழ வியாபாரம் செய்து வரும் ஒருவர் அதனை கவனித்து பையை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக புதிய இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள் இருந்துள்ளது.

அதில் இருந்து பணம் பல லட்சங்களில் இருந்து கோடியை தொடலாம் என்பதால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து பணத்தை ஒப்படைத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது சசிகலா குடும்பத்தை குறி வைத்து வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் இந்த ரெய்டில் இருந்து தப்பிக்க ஒரு கும்பல் இப்படி பணத்தை பல இடங்களில் வீசிச் சென்றுவிட்டு போயிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் சந்தேகிக்கப்படுகிறது...

கடந்த ஜனவரியில் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டதை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...


விசாரணை முடியும் வரை ஆயுதப்படை காவலர் மாயழகுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.....

ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 12...



உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தின் பகுதியில்  இன்று  நாம் காண இருப்பது 12-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும்.


இந்த 12-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது துருக்கி நாட்டில் வரும் மாதத்தில் மிகப்பெரிய கொடிய சம்பவம் ஒன்று நடக்க இருப்பதாகவும், அச்சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடிய முறையில் கொல்லப்படுவார்கள் என்ற செய்தியை 12-ம் தீர்க்க தரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.



நமது சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு சோகச் சம்பவத்தை போன்று மற்றொரு சோகச் சம்பவம் உடனே நடக்கவிருப்பதாகவும், அச்சமயத்தில் மலேசியா நாட்டிலும் இது போன்ற ஒரு விபத்து உடனே நடக்க உள்ளதாகவும் 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கனடா நாட்டில் மிகப்பெரிய அளவில் பூமி அதிர்வானது தற்போது ஏற்பட இருப்பதாகவும், அது ரிக்டர் அளவில் 7.7 ஆக இருக்கும் என்றும், அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு தருகின்றது.


சீனாவின் அத்துமீறல் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும், இதுவரை பொறுமை காத்த இந்தியா தற்போது ஒரு பதிலடியை கொடுக்க இருப்பதாகவும், இதனால் இந்தியா, சீனா இரு நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து உடனே நிறுத்துவதாக சீனா திடீரென்று அறிவிக்கும் என்றும், இதனால் இந்திய, சீன மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


வரும் ஆடி அமாவாசை அன்று தென்தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடக்க இருப்பதாகவும், அது நடந்து முடிந்த 7வது தினத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள 37வது தீர்க்க தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில சம்பவங்கள் உடனே நடக்க உள்ளதாக 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இனி தென்தமிழகம் முழுவதும் பூமியிலிருந்து சாமி சிலைகள் கண்டெடுக்கப்படும் அதிசய நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க உள்ளதாகவும், கீழடி அகழ்வராய்ச்சியில் நந்தி, சிவன் சிலைகள் கண்டெடுக்கும் சமயத்தில் தென்தமிழகத்தில் உள்ள ஒரு சிவலாயத்தில் மிகப்பெரிய அதிசயமொன்று நடைபெறும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

புரட்டாசி மாதம் கவனத்தில் கொள்ள வேண்டிய மாதம் என்றும், தமிழகத்திற்கு இது போதாத காலமாக இருக்கும் என்றும், பல முக்கிய சம்பவங்கள் துவங்கும் மாதமாக இம்மாதம் இருக்கும் என்றும், மூத்த தலைவர்கள் இறக்கும் காலமாக இது அமைய உள்ளதாக 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இந்திய தொலைக்காட்சி ஒன்றில் இந்தியாவில் நடக்கும் திடீர் சம்பவங்களைப் பற்றிய செய்திக் குறிப்புகளை இனி வெளியிடுவார்கள் என்றும், அச்சமயத்தில் நமது ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தை பற்றிய விவாதங்கள் அதில் இடம் பெற்று மக்கள் மனதில் நமது தீர்க்க தரிசனங்கள் தனி இடத்தை பெறும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இறைவன் வரும் இறுதிசபை இந்தியாவில் எங்கு உள்ளது என்ற கேள்விக்கு விடைகாண உலகம் முழுவதும் இருந்து மக்கள் குழு இந்தியா நோக்கி படை எடுப்பார்கள் என்றும், அப்பொழுது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ள ஒருவர் அந்த இறுதி சபையினை பற்றிய இரகசிய குறிப்பை அப்பொழுது செய்தி ஊடகங்களில் வெளியிடுவார் என்றும், இச்செய்தி 2018-ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


வாடிகனிலிருந்து இறையாளன் இயேசுவின் வருகையைப் பற்றி ஒரு பகிரங்க செய்தியினை தற்போது வெளியிடுவார்கள் என்றும், அச்செய்தி வெளியிட்ட 7-வது தினத்தில் நாம் ஏற்கனவே ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் வெளியிட்டுள்ள 27வது தீர்க்க தரிசனத்தில் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு செய்தி நடக்க துவங்கும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



கல்கி அவதாரத்தைப் பற்றி பல செய்திகள் இனி ஊடகங்களில் வெளியிடப்படும் நடவடிக்கைகளை பல குழுக்கள் ஈடுபடும் என்றும், அப்பொழுது யாரும் எதிர்பாராத சமயத்தில் வடதேசத்திலிருந்து ஒரு ஆன்மீக அமைப்பு தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு ஆன்மீகக் குடிலில் கல்கியின் ஆன்மா இடம் பெற்றிருக்கும் என்ற ஒரு வியப்பான செய்தியினை அவர்கள் வெளியிடுவார்கள் என்றும், அச்சமயத்தில் பாரதப் பிரதமரின் ஒரு செயல் இந்தியாவில் பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



உலகில் உள்ள எரிமலைகளில் ஒரு சில வெடிக்க உள்ளதாகவும், இதனால் உலக நாடுகள் அச்சமடையும் என்றும், அதேசமயத்தில் பூமிதட்டு ஒன்று இடமிருந்து வலமாக நகரத்துவங்கும் என்றும், இதனால் கடல் மட்டத்தில் பல மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் உருவாகி உலக மக்களை அச்சுறுத்தும் நிகழ்வு தற்சமயம் நடக்க உள்ளதாகவும், பிலிப்பைன்ஸ் நாடு மிக, மிக கவனத்தில் இருக்க வேண்டிய நாடு என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



திபெத்தியன் புத்தலாமா ஒருவருக்கு கொலை மிரட்டல் வரும் என்றும், இதனால் திபெத் நாட்டில் உள்ள புத்த மடாலயங்களில் ஒரு பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் என்றும், வரும் நவம்பர் மாதம் அங்கு ஒரு சோகச் சம்பவம் நடந்தேறிடும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இந்திய திருநாட்டில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களில் உள்ள கருவறைகளில் இனி பல அதிசயங்கள் தென்படும் என்றும், முக்திநாத் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு ஆலயம் உள்ள  தென்பகுதியில் பூமி சார்ந்த ஒரு நிகழ்வு உடனே நடக்க இருப்பதாக 12-ம் தீர்க் கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

போலிச்சாமியார் ஒருவன் தமிழகத்தின் காவல்துறையால் தற்போது கைது செய்யப்படுவான் என்றும், அவனின் பின்ணணியில் பல அரசியல்வாதிகள் இடம் பெற்றுள்ள செய்திகள் இனி ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியிடுவார்கள் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.




தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் யாவும் வரப்போகும் ஒரு பேராபத்திற்கான சமிக்கைகள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், சென்னை, மகாபலிபுரம், கடலூர், கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கேரளா, கிழக்கு கடற்கரை பகுதிகள் மிகுந்த கவனத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய பகுதிகள் என 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கடலில் ஒரு மிகப்பெரிய அதிசயம் ஒன்று தென்படும் என்றும், அது பசிபிக் கடலில் நடக்க உள்ள அதிசயமாக இருக்கும் என்றும், உலக விஞ்ஞானிகளை திரும்பி பார்க்க வைக்கக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய உள்ளதாக 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

முன்னணி நடிகர் ஒருவருக்கு இது போதாத காலம் என்றும், திடீர் ஒரு சம்பவத்தால் அந்த நடிகர் பெரிதும் பாதிப்பு அடைவார் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு செய்தியினை இங்கே வெளிப்படுத்துகிறது.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் இடம் பெற்றுள்ள 49-ம் தீர்க்க தரிசனத்தை நாம் இப்பொழுது முழுமையாக நினைவில் கொள்ள வேண்டும் என்று 12-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

உண்மைகள் உறங்குவதில்லை அது மக்கள் மனதில் இனி நிலைப்பெற்று ஜோதியாக மிளிரும் என்றும், அதுவரை நிகழ்வுகளை ஆழமாக கவனிப்போம் என 12-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...