15/11/2017

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள் மூலிகைப் பெயர்...


அருகம்புல்லும் வேரும் - உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும்.

அரசு - கர்பப்பை கோளாறு, மலட்டுத் தன்மை நீக்கும், சூட்டைக் குறைப்பது, சுரம்போக்கும், வீக்கம் குறைக்கும்.

அத்தி - மலமிளக்கி, காமம் பெருக்கு, நீரிழிவு, மூட்டுவலி, இரத்தமூலம் பெரும்பாடு.

அதிமதுரம் - காமாலை நோய், வெண்குஷ்டம், எலும்பு நோய், விக்கல், மார்புச்சளி, தும்மல், இருமல் போக்கும்.

அத்தி - மலச்சிக்கல், கால், மார்பு எரிச்சல், நீர்கடுப்பு அகற்றும்.

அமுக்ரா - அசதி, பசி இன்மை, முதுமை நீக்கம், காமம் பெருக்கும், சக்தி தரும்

ஆடாதொடை - இரத்தவாந்தி, சளிநோய், இசிவு நோய், கோழை இருமல், ஆஷ்துமா, சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

அம்மான் பச்சரிசி - நமைச்சல், தாய்ப்பால் அதிகரிப்பு, வீக்கம், வயிற்றுவலி, சிறுநீரில் போகும் இரத்தம் குணமாகும்.

ஆடு தீண்டாப் பாளை - பலமும் விந்தும் உண்டாகும். மாதவிலக்கைத் தூண்டும், தோல் நோய், மலச்சிக்கல், பூச்சி விஷம் நீக்கும். புண்கள் ஆறும். வாதநோய் நீங்கும். ஆஷ்துமா அகலும்.

ஓரிதழ் தாமரை - காமம் பெருக்கும், சிறுநீர் எரிச்சல், சிற்றின்ப பலவீனம் நீங்கும். சுரம், தலைவலி, வெள்ளை வெட்டைச் சூடு நீங்கும்.

கடுக்காய் - மலச்சிக்கல், பல், கண், காது, மூக்கு தொண்டை நோய்கள், பசியின்மை இரத்த மூலம், ஆண்மை இன்மை, அசதி நீங்கும்.

கல்யாண முருங்கை - மாதவிடாய் கோளாறு நீங்கும், அதிக எடையைக் குறைக்கும்.

கழற்சிக்காய் - அண்டவாய்வு, விதைவீக்கம் குறைக்கும்.

கண்டங்கத்திரி - மார்புச்சளி, தொண்டை கரகரப்பு, நுரையீரல் நோய்கள், பல்வலி போகும்.

கீழாநெல்லி - காமாலை, ஈரல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி
உண்டாகும்.

குப்பை மேனி - மார்புச்சளி, தோல் நோய்கள் போக்கும்.

குமரி இலை - வெள்ளை, வெட்டை சூடு, மலச்சிக்கல் போக்கும். உடல் குளிர்ச்சி
உண்டாகும்.

கோரைக் கிழங்கு - புத்திக் கூர்மை, முடி பக்குவப்படும்.

வல்லாரை - உடல் வலுபெறும், புத்தக் கூர்மைப்படும், நீர் பெருக்கி, மேகப்புண், கட்டி வீக்கம், விரை வீக்கம், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிறு குறிஞ்சான் - சர்க்கரை நோய், குணமாகும். கிருமி நாசினியாகப் பயன்படும்.

மணத்தக்காளி - உடல் உரமாக்கும், கோழை அகற்றும், வாய்ப்புண், கடவாய்ப்புண், இருமல், வயிற்றுப்புண், பாண்டு, பெருவயிறு நீங்கும்.

துளசி - சளி, இருமல் நீங்கும், காய்ச்சல், பசி இன்மை, கோபம், வெறி, தூக்கமின்மை நீங்கும்.

பொடுதலை - தலைப் பொடுகு நீங்கும்.

தாமரை - மார்பு இதய நோய் போகும்.

தான்றிக்காய் - பல்நோய் போகும், மலச்சிக்கல் நீங்கும், உடல் பலம் பெரும்.

துத்தி - மூலம், புழுப்பட்டபுண் குணம்பெற மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி, காமம் உண்டாக்கும்.

தும்பை - கோழை அகற்றும், தலைவலி, அசதி, இருமல், வெள்ளை, தாகம், நஞ்சு நீக்கும்.

தூதுவளை - மார்புச்சளி, காசம், இருமல், இரைப்பு, உடல் குத்தல், மந்தம் நீக்கும், ஆண்மை பெருக்கும், நரம்பு வலுப்பெறும்.

நஞ்சறுப்பான் - எல்லாவித நஞ்சும் நீங்கும், சளி கக்குவான் இருமல், வாய்வு பிடிப்பு குணமாகும், பூரம், வீரம், எட்டி, பாதரச விஷங்கள் நீங்கும்.

நாயுருவி - பல்நோய், வியர்வை, படை, தேமல், இரத்தமூலம், பேதி, இருமல், வெள்ளை, சிறுநீர் சிக்கல், சூதகத் தடை நீங்கும்.

நாவல் - பேதி, சீதபேதி, இரத்த பேதி, மதுமேகம், அதிமூத்திரம் தீரும், நீரிழிவு நீங்கும்.

நீர் வேம்பு - சுரங்கள் நீங்கும், விஷம் நீங்கும், தோல்நோய் போகும்.

நீர்முள்ளி - நீர்க்கட்டு, கால்வீக்கம், பாண்டு, வெள்ளை உடல் அசதி, பெரு வயிறு, நீர் எரிச்சல் நீங்கும்.

நெரிஞ்சில் - குளிர்ச்சி உண்டாக்கும், சிறுநீர் பெருக்கும், காமம் பெருக்கும், சிறுநீர் கல்லடைப்பு, சிறுநீர் சதயடைப்பு, சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

நெல்லி - அழகுண்டாகும், குளிர்ச்சியாகும், மலமிளக்கும், சிறுநீர் பெருக்கும், வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, பிரமேகம் போகும்.

நொச்சி - கிருமி நாசினி, காய்ச்சல், குளிர்சுரம், வீக்கம், கீல்வாயு நீங்கும்.

நீர் பிரம்மி - மூளை வளர்ச்சியடையச் செய்யும், ஞாபக சக்தி உண்டாக்கும், காமம் பெருக்கும், கோழையகற்றும்.

பிரண்டை - உடல் உரமாக்கி, பசித்தூண்டி, மூலம் மந்தம், குன்மம், கழிச்சல், அஜீரணம், வயிற்றுவலி, இருமல், எலும்பு சக்தி பெறும்.

பூவரசு - உடல் உரமாக்கி, சொறி, சிரங்கு, கரப்பான் நீங்கும், கிருமி நாசினி, வீக்கம் நீங்கும், தோல் நோய் குணமாகும்.

பொன்னாங்கண்ணி - பசி உண்டாக்கும், கண்பார்வை கூட்டும், அழகு அதிகரிக்கும், எடை கூடும்.

மருதம்பட்டை - இரத்த அழுத்தம், நீரிழிவு, வெட்டை குணமாகும்.

மாவில்வம் - நீரிழிவு, கண்பார்வை மங்கல் குணமாகும்.

முசுமுசுக்கை - சளியைக் கரைக்கும், உடல் உரமாக்கும்.

முடக்கு அற்றான் - வாய்வு, இடுப்பு வலி, முழங்கால் வலி நீங்கும்.

முருங்கை - அதிக இரத்த அழுத்தம் குணமாகும், காமம் பெருக்கும், உடல் உரமாக்கும்.

மூக்கரட்டை - சிறு நீரகக் கோளாறு நீங்கும், கட்டி கரையும்.

வசம்பு - பசி உண்டாக்கும், இரத்தபித்தம், வாய் நாற்றம், சூலை, இருமல், ஈரல், யானைக்கால் நோய், நஞ்சு, நாடாப்புழு நீங்கும்.

வில்வம் - வியர்வை பெருக்கும், காமம் பெருக்கும், சுரம் நீங்கும் பெரும்பாடு, உடல்வலி நீங்கும்.

வேம்பு - புழுக்கொல்லி, பெருநோய், அம்மைப்புண், சொறிசிரங்கு,பித்தம், காமாலை, முற்றிலும் எல்லா நோய்களுக்கும் கொடுக்கலாம்.

கறிவேப்பிலை - இரும்புச் சத்து உள்ளது, பசித் தூண்டும், சீதபேதி, வயிற்றுளைச்சல் நீங்கும், முடிகறுக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.