07/04/2021

கிராம்பு...

 


கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

என்ன சத்து?

கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

என்ன பலன்கள்?

கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சருமப் பிரச்னைகளுக்கு..

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்...

ஊ... ஊ... திமுகவுக்கு ஊதியாச்சு சங்கு.. உபிக்கெல்லாம் மறக்காம கொடுத்துடுங்க 200 ரூவா பங்கு...

 


பிராடு பாஜக வும்... பினாமி தேர்தல் ஆணையமும்...

 


எகிப்த்தை ஆண்ட தமிழன்...



எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC). இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக் கூறிக் கொண்டார்...

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மாற்றினார்.

அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர் காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வழிப்பட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர்.

இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும்.. பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்கள்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

தமிழக தேர்தல் ஆணையம் கலாட்டா...

 


அதிமுக செல்லூர் ராஜூ கலாட்டா...

 


விக்கல் வருவது ஏன்?

 


சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.

உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.

சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.

என்ன காரணம்?

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.

இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்ததொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.

நிறுத்த என்ன செய்வது?

மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.

வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.

அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது...

பாஜக பினாமி தேர்தல் ஆணையம் கலாட்டா...

 


எல்லாம் விதி வசம்...



நம் கையில் எதுவும் இல்லை 

என்பது பொய்..


அந்த விதியே 

நம் கையில் தான் உள்ளது 

என்பதே உண்மை...


இதனால் தான் 

குறி சொல்பவர்கள் 

நம் 'கைபார்த்து' பேசுவார்கள்...


கடவுள் எழுதி அனுப்பிய 

இரகசிய ஓலை 

நமது கையில் இருந்தும் 

நமக்கு தான் படிக்கத் தெரிவதில்லை...

😔😔😔

திருட்டு கம்யூனிசம் Vs பிராடு பாஜக...

 


திருட்டு திராவிடர்ஸ்...

 


ஒடுக்கப் பட்ட தலித் என்று அழைக்கப் படும் பறையர்கள் எல்லாம் சாக்கடை ஓரம், சாலை ஓரம் குடி இருக்க...

பெரியார் திடல் சுற்று வாழ வைக்க பட்டு  இருக்கும் ஏழைகள் யார் யார் என பாருங்க  நியாயம் மானவர்களே..

தியாகராய நகர் தமிழர் தலை நகரத்தில் தெலுங்கு பிராமணர்கள் மட்டும் குடி ஏறி வாழ  திருட்டு திராவிடர்களால் உருவாக்கப் பட்ட பகுதி என்பதையும் மறுக்க முடியாது...

அதிமுக அரசின் மருத்துவ கொலைகள்...

 


சாமானிய மக்கள் விரோதி பாஜக அய்யோக்கிய பயலுங்க...

 


பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவது எப்படி?



ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய மோசமான சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பெண்கள் எலி வால் போன்ற கூந்தலையும், ஆண்கள் வழுக்கைத் தலையையும் பரிசாகப் பெறுகின்றனர்.

மேலும் தங்களது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட பலர் கடைகளில் விற்கப்படும் பல மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.

ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டலாம் என்பது தெரியுமா?

இங்கு அந்த பூண்டை எப்படியெல்லாம் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் உங்களால் முடிந்ததை முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

வழி 1 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடேற்றி இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு அலச, தலைமுடியின் வளர்ச்சியைக் காணலாம்.

வழி 2 - பூண்டு எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி ஸ்கால்ப்பில் படும்படி தடவி, விரலால் சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவும் பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி 3 - பூண்டுகளை சூரியக்கதிர்கள் படும்படி வைத்து நன்கு உலர்த்தி, பின் அதை அரைத்து பொடி செய்து, கண்டிஷனருடன் சேர்த்து கலந்து, தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் பூண்டு சாற்றினை கண்டிஷனருடன் கலந்து பயன்படுத்தலாம். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வழி 4 -  ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

வழி 5 - 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருந்த தொற்றுகள் நீங்கி, மயிர்கால்கள் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.

வழி 6 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாறு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் தண்ணீர் மற்றும் 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை இந்த கலவையை தலைக்கு பயன்படுத்தும் முன்னும் நன்கு குலுக்கி பின் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இதனை குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்...

பாஜக அய்யோக்கிய பயலுக...

 


அடுத்து உலகத்தில் யார் தற்சார்பு பெருளாதாரம் வைத்து இருக்கனோ... அவனே உலக பணக்காரன்.. 😎