21/06/2021

வழுக்கை தலையில் முடிவளர....

 


வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...

தடுப்பு மருந்து பித்தலாட்டம்...


 

மூன்றாம் உலகப்போர் பற்றிய எச்சரிக்கை...

 


எடையை குறைக்கும் பட்டை இஞ்சி தேநீர்...

 


எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள்.

இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்...

பட்டை - 2 அங்குலம்

இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)

கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை - 2 துண்டுகள்

புதினா - 5-6 இலைகள்

தேன் - தேவையான அளவு

செய்முறை...

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்...

திமுக Vs அதிமுக பித்தலாட்டங்கள்...

 


பாஜக மோடி - திமுக ஸ்டாலின் சந்திப்பு இரகசியம்...

 


பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...

 


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடிமறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சி ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் அரசியல்வாதி என்று காட்டிக் கொள்பவர்கள் கூட இதனை பயன்படுத்திக்கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

கொரோனா 3ம் அலையை பரப்பும் பாஜக மோடி அரசு...

 


நீட் தேர்வு கொண்டு வந்தது திமுக... கையெழுத்து போட்டு அனுமதி கொடுத்தது அதிமுக...


 

பல்லியைக் கொல்லக் கூடாது ஏன்?.. வியப்பூட்டும் காரணங்கள்…

 


எந்த ஓர் உயிரினம் இவ்வுலகில் வாழ வேண்டும் என்றாலும், அதற்கு மற்றொரு ஜீவராசியின் துணை கட்டாயமாக்கப் பட்டுள்ளது..

இதில் பல்லிகளும் ஒன்றாகும், இதுக் கொல்லப்படக் கூடாத விலங்காக நம் இந்திய கலாச்சாரத்தில் வரையறுக்கப் பட்டுள்ளது.

கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது.. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது.

நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தை பல்லியின் உருவில் தான் வருகை தருகிறார்கள் எனவும், பூஜை அறைகளில் இருந்து முக்கியமான தருணங்களில் நமக்கு நல்லது, கெட்டது வரும் போது எச்சரிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது..

கடவுளின் செய்தியாளன்:

நமது இதிகாசங்களில் பல்லி கடவுளின் தூதர் அல்லது செய்தியாளன் என்று கூறப்பட்டுள்ளது..

இது கடவுளிடம் இருந்து நல்லது மற்றும் கெட்டது நடக்கவிருக்கும் செயல்கள் குறித்த செய்திகளை மனிதர்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கருதப்படுகிறது.

கடவுள் மற்றும் மனிதர்களிடையே இது தகவல் தொடர்பு ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை முன்னாளில் இருந்துள்ளது.

வரதராஜன் சுவாமி கோவில்:

காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகரகத்தில் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

இதை தொட்டு வணங்குவது சிறப்பிற்கு உரியதாக கருதப்படுகிறது.

இந்த பல்லிகள் இரண்டும் காந்தர்வர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் இறைவனிடம் வரம் பெற்று இக்கோயிலை கட்ட உதவினார்கள் என்ற கூற்றுகளும் நிலவி வருகின்றன.

அடையாளச் செய்தி:

நமது சாஸ்திரங்களில் ஒன்றாக கூறப்படுவது தான் பல்லி அல்லது கௌளி சாஸ்திரம்..

நமது உடல் பாகங்களில் பல்லி விழும் இடத்தை வைத்து நமது நேரத்தை பற்றியும், நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும்..

இது ஒருவகையான அடையாளச் செய்தியாக அறியப்படுகிறது.

இதனாலும் கூட பல்லியை கொல்லக் கூடாது என்று கூறுவது உண்டு..

கோவில்களில் வணங்கப்படும் பல்லிகள்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலில் பல்லி வணங்கப்படுகிறது. கடவுளை தரிசித்த பிறகு சுவற்றில் இருக்கும் பல்லி உருவத்தை வணங்குவதால் மங்களகரமான செயல் (அ) நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரின் உறவினர் ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்பு...

 


அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் புகாரில் கைது...

 


கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?

 


கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது.

கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...

சேராத காதலர்களின் நிலை...

 




இறுதிவரை 
சொல்லப்படாத காதல்கள்..

நிஜத்தில் 
இறந்து போனாலும்..

கனவுகளில்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்..

நிரந்தரமில்லாத 
மனிதர்கள் தான்...

நிரந்தரமாக 
மனதில் இருக்கிறார்கள்...

திமுக வும் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு ஏமாற்று வேலையும்...

 


திமுக வும்... நீட் தேர்வு ஏமாற்று வேலையும்...

 


அண்ட, பிண்ட விசாரம்...

 




அண்டத்திற்குள் பிண்டம்...
பிண்டத்திற்குள் அண்டம்...

அண்ட, பிண்ட விசாரம்...

பொதுவாக அண்டம் என்றால் இந்தப் பிரபஞ்சத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள்.

ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும்.

பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும்.

அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும்.

அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் சூட்டினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை.

அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் சூட்டைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளது.

மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது.

அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது சித்தபெருமக்கள் கூறி இருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே...

தமிழகத்தில் தயாரிக்கப்படும் நியூட்ரினோ ஆயுதங்கள்...

 


திமுக வுக்கு விளம்பரமே பிடிக்காது - 200உபிகள்...

 


௮ப்ப கீழ  இருக்கிறது ஒருவேளை ஜப்பான் நாட்டு துணை முதல்வர்களா இருக்குமோ.? 🙄

தமிழக ௮ரசு நியாய விலைக்கடைகளில் வழங்கபடும் 5 கிலோ இலவச ௮ரிசி 😅