23/01/2018

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு...


உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் சித்திரவேலு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், பேருந்து கட்டணம் 67 விழுக்காடு உயர்த்தப்பட்டு இருப்பது, பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக எந்தவித அறிவுப்பும் இல்லாமல் இந்த கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதாகவும், கட்டண உயர்வு தொடர்பாக அரசு பொதுமக்களிடம் எந்த கருத்துக்களையும் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு தொடர்பாக அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும், எனவே இந்த கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது...

கங்கை கொண்ட சோழபுரம்...


உறுதியேற்ப்போம் நண்பர்களே...


இனி,  பற்பொடியில் இருந்து. குளியல் பொடி உப்பு மற்றும் மசாலா பொருட்க்கள் உள்ளிட்ட..

நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உள்ளூர் தயாரிப்பாகவே இருக்க வேண்டும்..

இதனால் நம் ஆரோக்கியம் பாதுகாக்கபடுவதோடு எந்த பன்னாட்டு நிறுவனமும் நம்மை சுரண்ட முடியாது...

உண்மை தானே தமிழா...


கலசப்பாக்கம் அதிமுக எம் எல் ஏ பன்னீர்செல்வம் மீது தாக்குதல்....


இந்த அடிமை தான் சட்டசபையில் உத்தமன் பன்னீரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று  புகழ்ந்தது...

அதனால் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்த தமிழன் ஒருத்தன் இந்த அடிமை மூஞ்சியிலேயே குத்தி இருக்கிறான்....

குத்தியவர்  சமீபத்தில் பாமகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர்.. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்....

தமிழக ஊழல் அரசே.. இவருக்கு என்ன பதில்..?


கரூர் மாவட்டம் ப.உடையாப்பட்டியில் பிறந்தவர் தமிழ் ஆசிரியர் வீரப்பன்...


1965-ல் நடைப்பெற்ற இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் போது தனது உடலை தீக்கு இரையாக்கி...

ஹிந்தி.. ஒழிக..
தமிழ்.. வாழ்க...

என  கரும்பலகையில் எழுதி அவர் பணியாற்றிய பள்ளி அருகே 11.02.1965-ம் நாள்..

கடவூரை அடுத்த அய்யம்பாளையத்தில் வீரமரணம் அடைந்தார்.

இவரது உடல் மணப்பாறை மாமுண்டி ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2015 ம் ஆண்டு இவ்வாசிரியருக்கு வெண்கலசிலை உருவாக்கி ஊர் பகுதியில் நிறுவ முயன்று விழா ஒன்றை 30.01.2016 அன்று ஏற்பாடு செய்தனர்.

இதற்கு அரசு தடை விதித்ததால் வீடு ஒன்றில் சாக்கில் கட்டியவாறு சிலை வைக்கப்பட்டு படத்திறப்பு மட்டுமே நடந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு அனுமதி அளிக்காதல் இன்றும் அதே நிலையே.. நிலவுகிறது..

மேலும் தற்போது பெய்த மழையினால் சிலை வைப்பதற்கு பல லட்சம் செலவில்  உருவாக்கப்பட்ட மணிமண்டபத்தில் செடிகள் வளர்ந்துவிட்டுன.

எனவே  எதிர்வரும் தலைமுறையினர் மொழியுணர்வை  ஊட்டும் வழிகாட்டியாகவும் விளங்க..

மொழிப்போர் தியாகிகள் தினத்திற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில்..

இந்த ஆண்டாவது மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்பது ஊர்பொதுமக்கள் & தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோளாக தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு உடனே நடவடிக்கை எடுக்குமா...?

ஆரியனும் திராவிடனும் ஒன்னு.. அதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...


ஆய கலைகள் அறுபத்து நான்கு...


அன்று தமிழன் வாழ்ந்து காட்டி விட்டுச் சென்ற வாழ்கையைத் தான், அறிவியல் கண்டு பிடிப்புகள் என இன்றைக்கு தினமும் ஒன்றாய் விஞ்ஞானம் தந்து கொண்டு உள்ளது...

இன்றைக்கு நாம் இந்த அறுபத்து நான்கையும் கற்க முடியாது என்றாலும், இதன் பெயரும் அது எதற்காக பயன்பட்டது என்பதையாவது தெரிந்து
கொள்வோமே...

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரமாகிறது...


FREEDOM - 251...


251 ரூபாய்க்கி கைப்பேசினு கூவி கூவி விற்றான் மக்கள் நீங்களே பேராசையால் முன்பதிவு செய்து ஏமாந்தீர்கள்...

நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்தவனை நீங்கள் கண்டுக்கொள்ளவேயில்லை.. ஏன் எதிர்த்து ஓர் போராட்டமும் செய்யவில்லை..

இவர்களே நாங்கள் கூறிய நான்காம் ரக மக்கள்..

அடிமையாக இருப்பதை பெருமையாக நினைக்கும் ஆட்டு மந்தைக் கூட்டம்...

அபான முத்திரை விளக்கம்...


முத்திரை பயிற்சிகளின் மூலம் உடலில் பஞ்ச பூதங்களை சமன்படுத்தலாம் என்பது நம் முன்னோர்களின் அரிய கண்டு பிடிப்பு.

மனிதனின் இயல்பான செயல்பாடுகளே முத்திரைப் பழக்கம். காலப்போக்கில் இதன் முக்கியத்துவத்தை நாம் மறந்து விட்டோம்.

நம் சாஸ்திரங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று வெள்ளைக்காரர்கள் நம்மவர்களை நன்றாக மூளைச்சலவை செய்துவிட்டு போய் விட்டார்கள். நாமும் அவர்களை நம்பி நம் சாஸ்திரங்களை இழந்து நிற்கிறோம்.

மீண்டும் நம் சாஸ்திரங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும். இதன் பயன் அளப்பரியது.

நாம் தினமும் காலையில் எழுந்தவுடன்  காலைக் கடன்களை முடித்து உடலை சுத்தி செய்கிறோம்.

அதாவது உடலுக்கு அக சுத்தி, புற சுத்தி இரண்டையையும் செய்கிறோம்.

புற சுத்தியை தண்ணீரில் நீராடுவதன் மூலம் எளிதில் செய்து கொள்ளலாம்.

அக சுத்தி என்பது உடல் தனக்கு தானே செய்து கொள்வது. அது இயல்பாக நடக்க வேண்டியது.

அக சுத்தி இயல்பாக நடக்கவில்லை என்றால் உடலில் கழிவுகள் தங்கி நோய்களை உருவாக்கும்.

இவ்வாறு இயல்பாக கழிவு நீக்கம் நிகழாத போது கை விரல்களை குறிப்பிட்ட முறையில் அழுத்திப் பிடித்தால் உடல் உரிய வேலையை தானே செய்து கொள்ளும்.

படத்தில் காட்டியுள்ள விரல்களை காலை எழுந்தவுடன் குறைந்தது 10 நிமிடங்கள் அழுத்திப் பிடித்தால் உடல் கழிவுகளான மலம், மூத்திரம் போன்றவை எளிதில் வெளியாகும். படத்தில் காட்டப்பட்டுள்ளது அபான முத்திரையாகும்.

அபானன் என்றால் வெளித்தள்ளுபவன் என்று பொருளாகும். கை விரல்கள் ஐந்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவையாகும்.

அதில் பெரு விரல் நெருப்புத் தத்துவத்தையும்.. ஆள் காட்டி விரல் வாயு தத்துவத்தையும்.. நடு விரல் ஆகாய தத்துவத்தையும்.. மோதிர விரல் நில தத்துவத்தையும்.. சிறு விரல் நீர் தத்துவத்தையும் குறிக்கின்றன.

உடல் உள்ள முத்தோசங்கள் என்பவை வாதம் (வாயு), பித்தம் (நெருப்பு),  கபம் ( நீர்) என்பவை ஆகும்.

இதில் நீரானது நிலத்தை பற்றி நிற்கும்,  நெருப்பும், காற்றும் ஆகாயத்தை பற்றி நிற்கும்.

அதாவது நீரை நிலம் உறிஞ்சிக் கொள்ளும், நெருப்பையும், காற்றையும் ஆகாயம் உறிஞ்சிக் கொள்ளும்.

இதன் அடிப்படையில் உடல் கழிவுகளை வெளியேற்ற ஆகாயத்தைக் குறிக்கும் நடு விரலும், நிலத்தைக் குறிக்கும் மோதிர விரலும் அபான முத்திரையின் மூலம் அழுத்தப்படுகின்றன.

இதன் பயன் மலசிக்கல் நீங்கும், மூல வியாதி குணமாகும், சிறு நீர் நன்றாக வெளியேறும். உடல் கழிவுகள் அனைத்தும் எளிதில் வெளியேறும்...

ஊஞ்ச மரத்தின் மருத்துவ குணங்கள்...


திராவிடமும் ஆரியமும் ஒன்றே...


ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைதான காஞ்சி ஜெயெந்திரன், பிறகு ஆட்சிக்கு வந்த திமுக வின் உதவியால் தான் அந்த வழக்கில் இருந்து விடுதலை அடைந்தார் என்பதை எந்த திமுக அனுதாபியாவது மறுக்க முடியுமா ?

திமுக காவல் துறையின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக சுமர் 75 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற்றபட்டனர், அதனாலே காஞ்சி ஜெயெந்திரன் விடுதலை ஆனார்...

மீண்டும் நீட் தேர்வு அராஜகம்...


நடுங்கும் கிராமம்...


ரஷ்யர்கள் பொதுவாக கடுமையான குளிருக்கு பழக்க பட்டவர்கள்.
அவர்களையே நடுங்க வைத்தது.. சில நாட்களுக்கு முன் 14.. 15  தேதிகளில் ஏற்பட்ட சீதோஷன மாற்றம்..

ரஷ்யாவின் Sakha Republic மாகாணத்தில் Oymyakonsky மாவட்டத்தில் உள்ளது Oymyakon எனும் தொலைதூர கிராமம்.

இது உலகிலேயே அதிக குளிரான கிராமம்.

1993ஆம் ஆண்டு இந்த ஊரில் பதிவாகிய -40 தான் உலகிலேயே அதிக குளிரான கிராமமாக இதை மாற்றியது.

ஆனால் இப்போது  அந்த சாதனையை அதுவே முறியடித்து - 62 டிகிரி பதிவாகி உள்ளது.

அங்கே கண்ணின் இமைகள் கூட பணியில் உறைந்து போனது.

கார் கோளாறு ஆன சிலர் இறங்கி நடந்த போது பரிதாபமாக உறைந்து இறந்தார்கள்.

குளிரை அளக்க வைக்க பட்டு இருந்த தெர்மோமீட்டர்கள் வெடித்து சிதறின.

அங்கே கார்கள் பயன்பாட்டில் இல்லாத போதும் தொடர்ந்து ஆன் செய்து வைத்துள்ளார்கள் காரணம் அனைத்து வைத்தால் குளிரில் அடுத்த சில நிமிடத்தில் கார் பேட்டரிகள் உலர்ந்து போகின்றன.

மிக கடும் குளிருக்கு பழக்க பட்ட ரஷ்ய மக்களே பீதி கொள்ளும் அளவு திடீர் சீதோஷன மாற்றம் ஏற்பட்டுள்ளது...

ஆண்டால் சர்ச்சையும்.. அடங்க மறுக்கும் அரசியலும்...


மல்லிகைப்பூ ஒரு கிலோ ஆறாயிரம் ரூபாய்க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி...


ஒரு கிலோ  மல்லிகைப்பூ ஆறாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி..

சங்கரன்கோவில் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப் பூ 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடும் பனிபொழிவு நிலவி வருவதால், மலர் செடிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி கருகி வருகின்றன. இதனால், பூக்களின் வரத்து குறைந்து அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது...

சென்னை மாநகர சொகுசு ஏசி பேருந்தில் கோயம்பேடு முதல் கேளம்பாக்கத்திற்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.117 உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்...


சென்னையில் மாநகர பேருந்து சேவையில் சொகுசு ஏ.சி. வால்வோ பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

ஆனால் பராமரிப்பு செலவு மற்றும் நஷ்டம் காரணமாக ஏ.சி. பஸ் சேவை குறைக்கப்பட்டது.

தற்போது கோயம்பேட்டில் இருந்து கேளம்பாக்கத்துக்கு ஒரே ஒரு வழித்தடத்தில் மட்டும் சொகுசு ஏ.சி. வால்கோ பஸ் இயக்கப்படுகிறது.

இதில் ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

பேருந்து கட்டண உயர்வால் கோயம்பேடு - கேளம்பாக்கம் ஏ.சி. பஸ்சில் இருமடங்கு கட்டணம் அதிகரித்து இருக்கிறது.

முன்பு இருந்த ஏ.சி. பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 16ம், அதிகபட்ச கட்டணம் ரூ.63ம் இருந்தது.

தற்போது குறைந்தபட்சம் ரூ. 27ம், அதிகபட்ச கட்டணம் ரூ.117ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை ஏ.சி. பஸ்சில் ஏறிய பயணிகள் இருமடங்கு கட்டண உயர்வை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இருந்த போதிலும் அந்த கட்டணத்தை கொடுத்து பயணம் செய்தனர். சிலர் கட்டணத்தை கேட்டு ஏ.சி. பஸ்சில் ஏறாமல் சாதாரண பஸ்சில் சென்றனர்...

மருத்துவ மனையில் ஜெயேந்திரர்...


நிலா விருந்து மூன்று...


Jan 31 : Super moon, blue moon, blood moon மூன்றும் ஒரே நேரத்தில்....

வரும் ஜனவரி 31 ஆம் தேதி நிலா நமக்கு ஒரே நேரத்தில் மூன்று விருந்து வைக்க உள்ளது..

அதாவது super moon , blue moon, blood moon இந்த மூன்று அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளன. கூடவே முழு சந்திர கிரகணம் எனும் நிகழ்வையும் சேர்த்து கொள்ள மறக்காதீர்கள்.

இந்த கலர் கலர் நிலாகள்... இவைகள் என்ன என்பதை பார்ப்போமா ?

Super moon : நிலா நம்மை நீள் வட்ட பாதையில் சுற்றுவதை நாம் அறிவோம். அப்படி சுற்றும் போது எப்போவாவது மிக மிக அருகில் வந்து போகும். அப்படி மிக அருகில் வரும் நிகழ்வுக்கு பெயர் சூப்பர் மூன். அன்றைக்கு நிலா வழக்கத்தை விட மிக பெரிதாக தெரியும் வழக்கமான வடிவத்தை விட 14 சதம் அதிகம் பெரிதாக 30 சதம் அதிக வெளிச்சமாக தெரியும்.

blue moon : இது நீல நிறத்தில் எல்லாம் தெரியாது சும்மா பெயர் தான் ப்ளூ மூன்.
ஒரே மாதத்தில் இரண்டாவது முழு நிலவு தோன்றினால் அந்த நிகழ்வு தான் blue moon.

Blood moon :  முழு சந்திர கிரகணத்தின் நடக்கும் ஒரு நிகழ்வு படி சூரிய கதிர்களில் உள்ள நீல நிறங்கள் வழியிலேயே சிதரடிக்க பட சிகப்பு நிறத்தை மட்டும் பிரதி பலிக்கும் ரத்த நிலா தான் blood moon.

இப்படி பூமிக்கு மிக பக்கத்தில் சூப்பர் மூனாக வந்து... கூடவே ப்ளூ மூணாகவும் வந்து... ரத்த நிறத்திலும் வரும்.. jan 31 ஆம் தேதி தெரிய போகும் முழு சந்திர கிரகணம் ஒரு மிக மிக அறிய நிகழ்வு...
கடந்த 150 ஆண்டுகள் கழித்து வரும் ஒரு அபூர்வ நிகழ்வு...

வெறும் கண்ணால் பார்க்க தடை இல்லை என்பதால் உங்கள் பகுதியில் தெரியும் பட்சத்தில் பார்த்து மகிழுங்கள்..

பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி...


எண்ணங்களுக்குக் காந்த சக்கி இருக்கிறது. அவற்றிற்குக் குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு.

எண்ணங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன.

எண்ணங்கள் பௌதீகப் பொருட்களாக உருப்பெறும்.

விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க...

1.கேளுங்கள் (ASK).
2.நம்புங்கள் (BELIEVE).
3.பெறுங்கள் (RECEIVE).

1. கேளுங்கள் : உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடன் கேட்கும் போது, விருப்பம் குறித்த தெளிவை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

2. நம்புங்கள் : கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது, மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும்.
கிடைத்து விட்டது என்ற அலைவரிசையில் ஒளிப்பரப்பும் போது அதை பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

3. பெறுங்கள் : வேண்டும் என்று விரும்புபவற்றிக்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்
வேண்டியதை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை மனத்தில் உருவாக்குவது தான் அக்க்காட்சிப் படைப்பாகும். . அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்கும்.
மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்...

பாலஸ்தீனத்தில் நடப்பது இரு நாடுகளின் போர் இல்லை, அது ஒரு இனப்படுகொலையின் உச்சக்கட்டம்...


தமிழ் நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்தவன் எல்லாம் தமிழனாக போலி முகத்திரையில்...


தமிழ் நாட்டில் பிழைபதற்கு தன்னை தமிழன் என்று அறிமுகம் செய்துக் கொண்டான்..

இதனை நம்பி ஏமாந்த தமிழன்..

வந்தவன் பிழைத்து கொண்டான்...

இதில் யாரை குற்றம் சொல்லுவது ?

பிழைப்பு தேடி வந்தவனா?
வந்தவனை பிழைப்பதற்கு வழி விட்ட தமிழனையா ?

அந்த வகையில் தமிழனை இளித்த வாயனாக மாற்றி பிழைத்தவர்கள் பிழைத்து கொண்டு இருபவார்கள்..

தமிழா சிந்தித்து செயற்பட முன் வா..

பிழைப்புக்கு வந்தவனை புறக்கணிக்க வேண்டாமா ?

தமிழன் அழிந்து கொண்டு இருபது வந்தவனால் மட்டுமே..

இதனை புரிந்து கொண்டு தமிழன் செயற்பட வேண்டும்..

தமிழர்கள் நாம் தமிழர்களையே ஆதரிக்க வேண்டும்...

தமிழினமே விழித்துக்கொள்...


திருட்டு திராவிடம்...


கடவுள் இருக்கான் என்று சொல்பவனை கூட நம்பலாம்..

கடவுளே இல்லை என்று சொல்பவனை கூட நம்பலாம்..

நான் தான் கடவுள் என்று சொல்பவனை கூட ஓரளவு நம்பலாம்..

ஆனால் இந்த குறுப்பிட்ட கடவுள்கள் மட்டும் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவாளன்களை மட்டும் நம்பவே நம்பாதீங்க...

தினமும் பெட்ரோல் விலை ஏத்துற பாஜக-வுக்கு எப்படி தப்பா தெரியும்...


தமிழனிடம் கேள்வி கேட்க்கும் முன்பு.....


பருப்பறிவு திராவிட வியாதிகள் திராவிட ஒட்டுண்ணி கழகம், கட்சி, இயக்கங்கள் தங்களுக்குள் தாங்கலே முதலில் கேட்க வேண்டிய கேள்விகள்...

1. திராவிடன்  (தெலுங்கு கன்னட மலையாளி) என்றால் யார் ?

2. இவன் திராவிடன் என்று எந்த இரத்த பரிசோதனையை கூடத்தில் கண்டு பிடிப்பது ?

3. திராவிடனை ஆரியன் ஆட்சி அதிகாரம் செய்ய கூடாது திராவிடனுக்கு ஏன் இந்த இனவாதம் ?

4. மனிதனை மனிதனாக பார்க்காமல் ஏன் பார்பான் சாதியை வைத்து திராவிடன் சாதி பார்க்கின்றனர் ?

5. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கூற்றுப்படி திராவிட (தெலுங்கு கன்னட மலையாளி) இலக்கியம் அசுத்தம், திராவிட மன்னர்கள் ஆரிய அடிமை, திராவிட மொழி காட்டுமிராண்டி மொழி.... அப்படி என்றால் அசுத்த ஆரிய அடிமை காட்டுமிராண்டி திராவிட இழிவு தேவையா ?

6. திராவிடம் ஆதிதிராவிடம் என்று ஏன் திராவிட ஆட்சி அதிகாரம் திராவிடத்தை பிரித்தது ?

7. ஆதிதிராவிடம் உயர்ந்ததா அல்லது திராவிடம் உயர்ந்ததா ?

8. ஆதிதிராவிட ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஆதிதிராவிட கீ.வீரமணி, ஆதிதிராவிட எம்.ஜி.ஆர், கருணாநிதி, வைகோ, கொளத்துர்மணி என்று அழைத்தால் ஏன் திராவிடர்கள் ஆதிதிராவிட தன்மான உணர்ச்சியை மறுக்கின்றனர் ?

9. திராவிடம் என்றால் ஏன் ஆதிதிராவிடம் உள்ளே நுழைய முடிவதில்லை ?