23/01/2018

அபான முத்திரை விளக்கம்...


முத்திரை பயிற்சிகளின் மூலம் உடலில் பஞ்ச பூதங்களை சமன்படுத்தலாம் என்பது நம் முன்னோர்களின் அரிய கண்டு பிடிப்பு.

மனிதனின் இயல்பான செயல்பாடுகளே முத்திரைப் பழக்கம். காலப்போக்கில் இதன் முக்கியத்துவத்தை நாம் மறந்து விட்டோம்.

நம் சாஸ்திரங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று வெள்ளைக்காரர்கள் நம்மவர்களை நன்றாக மூளைச்சலவை செய்துவிட்டு போய் விட்டார்கள். நாமும் அவர்களை நம்பி நம் சாஸ்திரங்களை இழந்து நிற்கிறோம்.

மீண்டும் நம் சாஸ்திரங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும். இதன் பயன் அளப்பரியது.

நாம் தினமும் காலையில் எழுந்தவுடன்  காலைக் கடன்களை முடித்து உடலை சுத்தி செய்கிறோம்.

அதாவது உடலுக்கு அக சுத்தி, புற சுத்தி இரண்டையையும் செய்கிறோம்.

புற சுத்தியை தண்ணீரில் நீராடுவதன் மூலம் எளிதில் செய்து கொள்ளலாம்.

அக சுத்தி என்பது உடல் தனக்கு தானே செய்து கொள்வது. அது இயல்பாக நடக்க வேண்டியது.

அக சுத்தி இயல்பாக நடக்கவில்லை என்றால் உடலில் கழிவுகள் தங்கி நோய்களை உருவாக்கும்.

இவ்வாறு இயல்பாக கழிவு நீக்கம் நிகழாத போது கை விரல்களை குறிப்பிட்ட முறையில் அழுத்திப் பிடித்தால் உடல் உரிய வேலையை தானே செய்து கொள்ளும்.

படத்தில் காட்டியுள்ள விரல்களை காலை எழுந்தவுடன் குறைந்தது 10 நிமிடங்கள் அழுத்திப் பிடித்தால் உடல் கழிவுகளான மலம், மூத்திரம் போன்றவை எளிதில் வெளியாகும். படத்தில் காட்டப்பட்டுள்ளது அபான முத்திரையாகும்.

அபானன் என்றால் வெளித்தள்ளுபவன் என்று பொருளாகும். கை விரல்கள் ஐந்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவையாகும்.

அதில் பெரு விரல் நெருப்புத் தத்துவத்தையும்.. ஆள் காட்டி விரல் வாயு தத்துவத்தையும்.. நடு விரல் ஆகாய தத்துவத்தையும்.. மோதிர விரல் நில தத்துவத்தையும்.. சிறு விரல் நீர் தத்துவத்தையும் குறிக்கின்றன.

உடல் உள்ள முத்தோசங்கள் என்பவை வாதம் (வாயு), பித்தம் (நெருப்பு),  கபம் ( நீர்) என்பவை ஆகும்.

இதில் நீரானது நிலத்தை பற்றி நிற்கும்,  நெருப்பும், காற்றும் ஆகாயத்தை பற்றி நிற்கும்.

அதாவது நீரை நிலம் உறிஞ்சிக் கொள்ளும், நெருப்பையும், காற்றையும் ஆகாயம் உறிஞ்சிக் கொள்ளும்.

இதன் அடிப்படையில் உடல் கழிவுகளை வெளியேற்ற ஆகாயத்தைக் குறிக்கும் நடு விரலும், நிலத்தைக் குறிக்கும் மோதிர விரலும் அபான முத்திரையின் மூலம் அழுத்தப்படுகின்றன.

இதன் பயன் மலசிக்கல் நீங்கும், மூல வியாதி குணமாகும், சிறு நீர் நன்றாக வெளியேறும். உடல் கழிவுகள் அனைத்தும் எளிதில் வெளியேறும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.