ரஷ்யர்கள் பொதுவாக கடுமையான குளிருக்கு பழக்க பட்டவர்கள்.
அவர்களையே நடுங்க வைத்தது.. சில நாட்களுக்கு முன் 14.. 15 தேதிகளில் ஏற்பட்ட சீதோஷன மாற்றம்..
ரஷ்யாவின் Sakha Republic மாகாணத்தில் Oymyakonsky மாவட்டத்தில் உள்ளது Oymyakon எனும் தொலைதூர கிராமம்.
இது உலகிலேயே அதிக குளிரான கிராமம்.
1993ஆம் ஆண்டு இந்த ஊரில் பதிவாகிய -40 தான் உலகிலேயே அதிக குளிரான கிராமமாக இதை மாற்றியது.
ஆனால் இப்போது அந்த சாதனையை அதுவே முறியடித்து - 62 டிகிரி பதிவாகி உள்ளது.
அங்கே கண்ணின் இமைகள் கூட பணியில் உறைந்து போனது.
கார் கோளாறு ஆன சிலர் இறங்கி நடந்த போது பரிதாபமாக உறைந்து இறந்தார்கள்.
குளிரை அளக்க வைக்க பட்டு இருந்த தெர்மோமீட்டர்கள் வெடித்து சிதறின.
அங்கே கார்கள் பயன்பாட்டில் இல்லாத போதும் தொடர்ந்து ஆன் செய்து வைத்துள்ளார்கள் காரணம் அனைத்து வைத்தால் குளிரில் அடுத்த சில நிமிடத்தில் கார் பேட்டரிகள் உலர்ந்து போகின்றன.
மிக கடும் குளிருக்கு பழக்க பட்ட ரஷ்ய மக்களே பீதி கொள்ளும் அளவு திடீர் சீதோஷன மாற்றம் ஏற்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.