திராவிடவாதிகள் தங்களின் சுய லாபத்திற்க்காக வடுக, கன்னடர், தெலுங்கர், மலையாளிகளின் அரசியல் மேலாதிகத்தை நியாயப்படுத்திட தமிழர்களை பல கூறுகளாக வெட்டி சிதைப்பதையே முக்கிய வேலையாகக் கொண்டுள்ளனர்.
ஆரியமும் இம் மண்ணில் தமிழின ஓர்மையை அழித்துவிட்டு, முழுமையாக ஆரிய கலப்பு செய்ய முடியாவிட்டாலும் ஆரிய கலப்பினமான வடுக, கன்னடர் தெலுங்கர் மலையாளிகள் செய்யும் சூழ்ச்சி தமிழின ஓர்மையை சிதைத்து விட செய்யும் முயற்சி,
இந்திய தேசிய மாயையை வலுப்பெற செய்கிற படியால், ஆரியமும், திராவிடமும் எப்பொழுதும் தமிழர்கள் முன் சில நேரம் பகையாளிகள் போலவும், சில நேரம் நண்பர்கள் போலவும் தோற்றம் தந்தாலும் தங்களுக்குள் கள்ளக்கூட்டும், கள்ளக்காதலும் கொண்ட ஓர்மைப் பட்ட இரு வகை வழி முறை என்பதை நாம் அறிவோம்.
கோனார் சமுதாய மக்கள் முல்லைத்திணையின் பூர்வீக மக்களாவர். தூய தமிழரான இடையர் குடியினரை எப்படியேணும் மடை மாற்றம் செய்து ஆரியமயப் படுத்திவிட துடிக்கிறது ஆரியமும், திராவிடமும்.
கோனாரை யாதவராக்குவதால் இந்திய மாயைக்குள் இழுத்துச் செல்ல முடிகிறது பிராமணியத்தால் சாதி, சாதியாய் சிதைத்துவிட்ட தமிழ் இனத்திற்க்குள் பெரிய அளவில் இனக் கலப்பு செய்ய முடியாவிடினும், அடிமை என்பதை விட ஆள்பவன் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள பெருமையை ஆசைக் காட்டி இந்திய தேசியம் என்கின்ற மாய வலைக்குள் சிக்கவைத்து விட்டது ஆரியம்.
கோனார் என்கின்ற தன் வம்ச வழி தமிழின தொழிற்ச்சார்ந்த அடையாளத்தை அடிமையெனக் கருதி யாதவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பட வைத்து விட்டது.
இதற்க்கு கோனார் சமுதாய மக்களில் டில்லிக்கு விசுவாசமுள்ள, திராவிடத்திற்கு துணை போகின்ற அல்லது திராவிட தலைமையில் உள்ள யாதவ வந்தேரிகளோடு கை கோர்த்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் துரோகிகள் யாதவர் என்று மடை மாற்று செய்து வருகின்றனர்.
“கோனாருக்கும், யாதவருக்கும் இன ரீதியாக யாதொரு சம்பந்தமும் இல்லை”
இந்த யாதவர்கள் யார்?
எங்கிருந்து எப்பொழுது தமிழகத்திற்க்குள் நுழைந்தார்கள்.
தமிழன் வந்தவனையெல்லாம் வாழ வைத்துவிட்டு, தன் அடையாளத்தை துறந்து, வந்தவனின் அடையாளத்தை தன் அடையாளமாக கொண்டாடி கோமாளியாய் போனதன் பின்னனிதான் என்ன என்பதை பார்ப்போம்..
வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட யாதவர் என்னும் இடையர் குடியினர் தெற்க்கு நோக்கி நகர்ந்து தக்காண பீட பூமி பகுதியில் ஓர் எழுச்சிப் பெற்ற அரசாக கி.பி.12 ம் நூற்றாண்டு வாக்கில் ஓர் அரசை நிறுவினர்.
அப்படி எழுச்சிப் பெற்ற யாதவர்களின் அரசுகளில் குறிப்பிடதக்க அரசு தேவகிரியின் யாதவர்களின் அரசாகும்.
ஆரம்பத்தில் மேலை சாளுக்கிய அரசுக்கு திறை செலுத்தி வந்தவர்கள், மேல சாளுக்கியரின் வீழ்சிக்குப் பின்னர் தனித்துவம் பெற்ற அரசாக நிலைப் படுத்திக் கொண்டனர். இவர்கள் மராட்டியப் பகுதியில் நாசிக்கில் இருந்து தேவகிரிவரை தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக்கிக் கொண்டு ஆண்டனர்.
கி.பி.12 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ம் நூற்றாண்டுகள் இறுதி வரையிலும் ஆண்டனர்.
கி.பி. 14 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமிய படையெடுப்புக்குப் பின் சுல்த்தானிய அரசுக்கு கப்பம் கட்டுபவர்களாக இருந்து இறுதியில் கப்பம் கட்ட தவறியமைக்காக ஆட்சி அதிகாரத்தை இழந்து இஸ்லாமிய அரசால் தண்டிக்கப்பட்டு, யாதவர் அரசு முடிவடைந்தது.
இவர்கள் கிருஷ்ண பகவானின் முன்னோரான “யாடு” என்னும் கடவுளின் வழிவந்தவர்கள் என இவர்கள் தங்களை சொல்லிக் கொண்டதால் யாதவர் என அழைக்கப் பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் தவிர ஹொய்சாளர்கள் மற்றும் காகத்தியர்கள் தக்காணத்தை ஆண்டனர். இம்மூன்று அரசுகளுமே இந்து சமயத்தை பேணி பாதுகாத்தன.
தென்னகத்தில் காகத்தியர்கள் இஸ்லாமிய சமயம் பரவுவதை பெரும் முயற்சி செய்து தடுத்து வந்தனர். காகத்தியர்கள் ஆரிய வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லப் படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதிகளில் இருந்து ஆட்சி செய்து வந்தனர்.
காகத்தியர்கள் பேணி வந்த இந்து சமயப் பற்று பின்னாளில் விஜய நகரப் பேரரசு எழுச்சிப் பெற தூண்டுகோலாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஏற்கனவே அலை, அலையாய் வந்து நம் தமிழ் மன்னர்களை முட்டாள்களாக்கி சுகம் அனுபவித்து வந்த கன்னட, வடுக, மராட்டிய பிராமணர்கள் தமிழகத்தில் உள்ள பாண்டிய, சோழ, சேர அரசுகளை பலவீனமடையச் செய்தனர்.
அவர்கள் தூண்டி விட்டு மூவேந்தர்களும் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளச் செய்து பலவீனமான அரசுகளாக ஆக்கி ஒற்றுமையைக் குலைத்தனர்.
இந்நிலையில் காகத்தியர்கள் டில்லி சுல்த்தானியர்களிடம் வீழ்ச்சி பெற்றப்பின், உருவான விஜய நகரப் பேரரசு தமிழகத்திற்க்குள் ஊடுருவி தமிழ் மன்னர்களை வீழ்த்தி, தமிழகத்தை சூறையாடி, தமிழின மக்களை கொன்று குவித்து வடுக ஆட்சியை அமைத்தது.
மராட்டியர்களும் தங்கள் பங்குக்கு தமிழகத்தின் தஞ்சை போன்ற முக்கிய பகுதிகளை கைப் பற்றி ஆண்டனர்.
இப்படி பரவலாக தமிழகத்திற்க்குள் அமைந்த அன்னிய ஆட்சியின் விளைவாக மராட்டிய மொழி மற்றும் வட மொழி பேசும் யாதவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வாழ தழைப்பட்டனர்.
இவ்வாறு தமிழகத்துக்கு அன்னியமான நாடோடிக் கூட்டமான யாதவர்கள் தமிழகத்தின் அரசியலையும், திராவிடக் கருத்தியலையும் சாதகமாக்கிக் கொண்டு ஆளுமைக் கூட்டமாக பரிணமிக்கலாயினர்.
இப்படி வந்தேரிகள் வாழ, ஆட்சி செலுத்த, அதிகாரம் பறிக்கப் படாமல் இருக்க ஈ.வெ.ராமசாமி என்னும் கன்னட தெலுங்கர் பல்வேறு வகையில் தமிழக மக்களை பிளவு படுத்தும் வேலையை செய்தார் என்பது, நாம் கவனிக்கத் தக்கது.
இம் மண்ணின் முல்லைத்திணை மக்களான கோனார் சமுதாய மக்களுக்கும், யாதவர் என்னும் நாடோடி ஆரிய, திராவிட கலப்பு இனக் கூட்டத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
கோனார் சமுதாய மக்கள் மடைமாற்றம் செய்யப்பட்டு, அவர்களின் பாரம்பரிய அப்பன், பாட்டன், முப்பாட்டன், பூட்டன், ஓட்டன் என காலம் காலமாய் வழங்கி வந்த திணை பகுதி அடையாளப் பெயரான கோனார் என்னும் சொல்லை கேவலமாகக் கருதி யாதவர் ஆக முயற்சிப்பது இழிவான செயலாகும். சர்வ தேசத்தமிழனும் வெட்கி தலைகுனிய தக்கதாகும்...
வாழ்க தமிழ்.. வெல்க தன்னுரிமை.. அடைவோம் மண்ணுரிமை...