08/01/2019

நாடு முழுவதும் 2 நாட்கள் பந்த் அறிவிப்பு வரும் 8ம் தேதி , மற்றும் 9 ம் தேதி பந்த்...


தொழிலாளர் விரோதபோக்கையும் பணியாளர்களுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வரும் 8,9 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன....

பாஜக அடிமை அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய எம்எல்ஏ பதவி பறிபோனது...


இன்றுமுதல் ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு....


தமிழக அரசு அறிவித்துள்ள, பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய், இன்று(ஜன.,07) முதல், ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது..

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்புடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது.

அத்துடன், 1,000 ரூபாயும், பொங்கல் பரிசாக வழங்கப்படும் என, சட்டசபையில், கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது..

பரிசுப்பொருள் வினியோகத்தை, முதல்வர், பழனிசாமி, சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும், 1,000 ரூபாய், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

ரேஷன் கார்டுகள் கிடைக்காதோர் மற்றும் தவற விட்டோர், ஆதார் அட்டையை காட்டி பெற்றுக் கொள்ளலாம்...

உணவே மருந்து - எளிய இயற்கை மருத்துவம்...


1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

4) சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

5) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

6) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

7) சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

8 ) பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

9) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்...

திமுக - அதிமுக வின் பயத்தால்... திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து...


பிடில் / வயலின்...


இது மேல்நாட்டு இசைக்கருவி. இது தமிழ்நாட்டு மிடற்றிசைவாணருக்கு உதவி இசைக்கருவியாகக் கொண்டுவரப் பெற்று நீண்ட காலம் ஆகவில்லை. பாடுவதைப்போல் இசைக்கருவியில் வாசிக்கக் கூடும். எனினும் அது அத்துணை எளிதான காரியமன்று.

கேள்வியின் பயனாய் மிகவும் சாமான்னியமானவர் பாடிவரும் தெருப்பாட்டுகளில் அழகு விளங்குவது போல இக்கருவியில் இசைக்க இயலாது. இது மேல்நாட்டு இசைக்கருவியாயினும் இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அனுசரிக்க கூடுமென்பதை உறுதியாகக் கூறலாம்.

இவ்வாறு செய்வதற்கு முதலில் இக்கருவியைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பிறகு தந்திகள் அதற்குத்தக எடுத்தல் வேண்டும். அதன்பிறகு பயிற்சிமுறைகள் எல்லாம் அனுகூலமாய் இருத்தலும், இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும், பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும்.

அப்பொழுது தான் மிடற்றிசையிலிருந்து எழும் பாட்டை அனுசரித்து வாசிக்கக்கூடும். மிடற்றிசையைப் பிடில் கருவியில் அனுசரிக்கும் அறிவை அடைந்த ஒருவன், இலக்கண சேர்க்கைப் பெற்ற   மிடற்றிசை இவ்வாறானது என்பதைப் பிறருக்கு விளக்கிவரவும் எடுத்துக்கூறவும் முடியும். அக்காலத்தில் பாடுவோருக்கு யாழ்க்கருவியும், சாரந்தா என்ற கருவியுமே துணைக்கருவியாக இருந்தன.

பிடில் கருவியின் சுருதியின் தந்திகளைச் சுருதி செய்வதில் இரண்டு வகைகளுள்ளன. ஒன்று இந்திய முறையார் செய்வது, மற்றொன்று ஆங்கில முறையாற் செய்வது.

இந்திய முறையாற் சுருதி செய்வதில் இடமிருந்து வலமாக ‘4, 3, 2, 1’ ஆகிய தந்திகளின் முறையே மெலியுதானத்துக் குரல், அதாவது மந்தரஸ்தாயி ஸ, மெலியுத்தானத்து இளி, அதாவது மந்திரஸ்தாயி ப, சமன்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ஸ, சமந்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ப என்ற முறையில் சேர்க்கப் பெற்ற ‘ஸ-ப, ஸ-ப’ என்ற ஒலிக்கும், அதாவது மூன்றாவது தந்தியானது நாலாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும், இரண்டாவது தந்தி மூன்றாவது தந்தியின் நான்காவது சுரத்தை ஒலிப்பதாயும், முதலாவது தந்தியானது இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும் இருக்கும்.

ஆங்கில முறையாற் சுருதி கூட்டுவதில் நான்காவது தந்தியின் ஐந்தாவது சுரம் மூன்றாவது தந்தியிலும், மூன்றாவது தந்தியின்  ஐந்தாவது சுரம் இரண்டாவது தந்தியிலும், இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரம் முதல் தந்தியிலும் ஒலிப்பதாய் சுருதியில் சேர்த்துக் கொள்வர். நான்காவது தந்தி பெரும்பாலும் (G) ஜி சுரத்திலேயே அதாவது மெலிவுத்தானத்து ப- என்ற சுர ஒலியே வரப்படுவதாய் வைத்துக் கொள்ளப் பெறுவதால், ‘4-3-2-1’ என்ற தந்திகள் முறையே ‘ப-ரீ-த-கா’ தந்திகள் என்ற பெயர்களில் வழங்கி வருகின்றன...

உலக அரசியலை புரிந்துக் கொள் தமிழா...


விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மனிதனின் செயலா? இறை சக்தியின் அருளா?


சாதாரணமாக மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது கண்டுபிடிப்புகள் தனி மனிதனால் நிகழ்த்தப்பட்ட அற்புதமாக தான் தோன்றுகிறது.

ஆனால் உண்மை வேறுவிதமாக தான் இருந்திருக்கிறது.

மேடம் கியூரி தன் சுயசரிதையில் இதை தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

அவர் ஒரு கண்டுபிடிப்பை பற்றிய குறிப்பை பாதி எழுதியிருந்த நிலையில் மேற்கொண்டு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. அவர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. நள்ளிரவை கடந்த நிலையில் அந்த குறிப்பை மேஜைமீது வைத்துவிட்டு தூங்க சென்றுவிட்டார்.

காலை எழுந்து பார்த்தபோது மீதி குறிப்புகள் நிறைவு செய்யப்பட்டிருந்தன.

அவருக்கு ஆச்சரியமாக போனது. அவர் வீட்டு பணியாளர்கள் அவ்வளவு படித்தவர்கள் கிடையாது. ஜன்னலும் கதவுகளும் நன்றாக தாளிடப்பட்டுதானிருந்தன.

பரம்பொருளின்மீது அவருக்கு நம்பிக்கையில்லை. அடுத்து அவர் நன்றாக கவனித்தபோது தான் தெரிந்தது மீதி எழுதப்பட்டிருந்த கையெழுத்துகளும் அவருடையதே என.

நன்றாக யோசித்து பார்த்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் அவருக்கு அதற்கான விடைகள் தோன்ற அரைதூக்கத்தில் தானே அதை எழுதியதை உணர்ந்துகொண்டார்.

அன்றிலிருந்து சரிசெய்யமுடியாத குறிப்புகளை அரைதூக்கத்தில் சரி செய்வதை வழக்கமாக்கிகொண்டாராம்.

ஆர்க்கிமிடிஸ் அவர்களுக்கு ஒரு கட்டளை மன்னரிடமிருந்து வந்தது. மன்னருக்கு பரிசாக வந்த தங்க ஆபரணத்தில் கலப்படமிருக்கிறதா என்பது தான் கட்டளை.

ஆர்கிமிடிஸ் எவ்வளவோ மூளையை குடைந்து பார்த்தார் விடை கிடைக்கவில்லை. மன்னர் ராஜதுரோக குற்றம் சுமத்திவிடுவாரோ என்ற பயம் வேறு.

ஒருநாள் தண்ணீர் தொட்டியில் முங்கி குளித்துகொண்டிருக்கும்போது திடீரென மின்னலென அதற்கான விடை கிடைத்தது.

அவர் நிர்வாணமாக அரசவையை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டார்.

வழிபோக்கர்கள் அவரை நிறுத்தினர். அவரோ ''விடை கிடைத்து விட்டது. விடை கிடைத்து விட்டது'' என சொல்லிக்கொண்டே இருந்தார்.

மக்கள் ஒருவழியாக அவரை சுயநினைவிற்கு கொண்டு வந்தனர்.

இவரைப் போலவே தான் எடிசன் ஐன்ஸ்டீன் எடிங்க்டன் மேக்ஸ்ப்ளார்க் போன்ற மிகப் பெரிய விஞ்ஞானிகளின் வாழ்விலும் அதிசயம் நடந்ததாக அவர்களே கூறியிருக்கிறார்கள்.

வேதங்கள் மனிதனால் இயற்றப்பட்டவையல்ல என சொல்வதில் உண்மையில்லாமலில்லை.

குரான் முகமதுவால் பிறந்ததும் அப்படி தான், பைபிள் இயேசுவிடம் பிறந்ததும் அப்படிதான்.

எப்படி இது சாத்தியமென ஆராய்ச்சி செய்யும்போது மேடம்கியூரிக்கும் ஆர்க்கிமிடிசுக்கும் வேதத்தை இயற்றியவர்களுக்கும் முகமதுவுக்கும் இயேசுக்கும் நடந்தது ஒன்றே ஒன்று தான். அவர்கள் அந்த சமயங்களில் "தான்'' என்பதை இழந்தது தான்.

தன் சுயத்தை தன் அகங்காரத்தை இழக்கும் நிலை வரும்போது இயற்கையோடும் ஈஸ்வர தன்மையோடும், பரம் பொருளோடும் ஐக்கியமாகி போகிறார்கள்.

எண்ணங்களற்ற தியானநிலை கைகூடுகிறபோது உள்ளுணர்வு பிரம்மத்தோடு கலந்துவிடுகிறது.

வெளியுணர்வு நிலையில் கிடைக்காத விடைகள் பரமாத்மாவோடு கலந்த தன் உணர்வற்ற நிலையில் தானாக தோன்றி விடுகின்றன.

உலகில் இசை வல்லுனர்களாக இருக்கட்டும், விஞ்ஞானிகள் ஓவியர்கள் ஞானிகள் என யாராக இருந்தாலும் புதியதை படைக்கும்போது சத்திய ஜோதியின் சில கிரணங்கள் தங்கள் மீது பாய்ந்ததால் சாதித்தவர்களே.

சத்தியத்தின்மீது அவர்கள் கொண்டிருந்த இச்சையே இந்த செயல்களுக்கு அவர்கள் கர்த்தாவாகி போனார்கள்.

ஒரு நானூறு ஆண்டுகளாக விஞ்ஞானிகள் தான் என்ற விதத்திலே சாதனையாக தன் கண்டுபிடிப்புகளை பறைசாற்றிக்கொண்டார்கள்.

ஆனால் தற்போது ஐம்பது ஆண்டுகளாக எல்லா விஞ்ஞானிகளும் தான் என்பதை விடுத்து இயற்கையின் சாகசத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

முற்காலத்தில் ரிஷிகளும் ஆத்ம ஞானிகளும் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருந்தார்கள்.

அவர்கள் யாரும் தங்கள் சாதனையென எதனையும் பறைசாற்றி கொள்ளவில்லை.

ஒருவனின் சமர்ப்பணத்தினாலும் பிரம்மத்தின் ஒருங்கிணைப்பினாலும் இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் தோன்றக்கூடும்...

தமிழினமே விழித்துக்கொள்...


இங்கு கொட்டமடிக்கும் வந்தேறிய கூட்டத்திற்கு, யார் தமிழர் என்று தெரியவில்லையாம்...

தமிழா நம் இருப்பை காட்ட புறப்படு...

சிங்கப்பூரில் ஜோடியாக சுற்றிய கன்னடன் கமல்...


சகலகலா வல்லவன் படத்தில் வரும் ஹேப்பி நியூ இயர் என்ற பாடலுடன் புத்தாண்டை தமிழகமே கொண்டாடிய நிலையில், நடிகர் கமல் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்தார். 

அவருடன் விஸ்வரூபம் நாயகி பூஜா குமாரும் உடன் சென்றிருந்தார்.

அவர்கள் இருவரும் புத்தாண்டு கொண்டாட சிங்கப்பூர் வீதிகளில் வலம் வந்தனர், அப்போது கமலின் ரசிகர் ஒருவர்,  கமலுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விட்டார்...

வாங்கின காசுக்கு மேல கத்துறான் இந்த டூபாக்கூர் நியூஸ் 7...


தயிரை விடச் சிறந்தது மோர்...


மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.

எத்தனைதான்  வண்ணவண்ணமான குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா?

வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், செரிமானம் சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு குவளை  பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும்.

கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா?

மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பொசுபரசு சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது.

எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும்.

அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க..

தேவையான பொருட்கள்:

தயிர் – 1/2 குவளை
தண்ணீர் – 1 ½ குவளை
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 குவளை  மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும்.

தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை குவளையில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:

வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.

கோடை காலத்தில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்...

மறதி தமிழனின் மிகப் பெரிய வியாதி...


சில கிராமங்களில் அரசியல் என்றால் என்ன என்பதே தெரியாமல் சிலர் சந்தோஷமாக வாழ்கிறார்கள்...


அங்கும் சென்று உங்கள் எந்த ஒரு  அரசியலையும்  திணிக்காதீர்...

கிராமங்களில் வாழும் மக்கள்  அவர்கள் அவர்களாக இருக்கட்டும்...

இந்தோனேசியா தமிழர்கள்...


இந்தோனேசியாவில் தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியேறினார்கள்..

1946ஆம் ஆண்டில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள்..

அதற்குப் பிறகு ஜாகர்தா நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்...

பாஜக மோடியின் சாதனை...


10 பேர் உயிரிழப்பு...



புதுக்கோட்டையில் வேனும், கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தனர். காயமுற்றவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 பேர், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று வேனில் திரும்பி கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், வேன் மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியது.
இந்த சம்பவத்தில் டிரைவர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மீட்பு படையினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்...

தாய்லாந்தில் தமிழர்கள்...


1830ஆம் ஆண்டில் தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது கிட்டதட்ட ஆயிரத்துக்கும் (1000) அதிகமான தமிழர் அங்கு வாழ்கிறார்கள்..

சிலர் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டு மொழியை அடியோடு இழந்து விட்டார்கள் மற்றும் சிலர் தமக்கடுத்த சங்கதியினர்க்கு தமிழ் கல்வியை தமது முயற்சியில் புகட்டிவருகின்றனர்...

பிரபஞ்ச இரகசியம்...


நமக்கு தேவையான அனைத்தையும் இப் பிரபஞ்சத்திடம் இருந்து நாமே பெறலாம்.

இப் பிரபஞ்சம் அனைவருக்கும் சொந்தம்.

இப் பிரபஞ்ச பேராற்றல் நமக்கு தேவையான அனைத்தையும்  கொடுப்பதற்கு தயாராக உள்ளது, நாம் தான் பெறுவதற்கு தயராக இல்லை. தவறு நம் மீது தான்..

அனைவருக்கும் சூரியன். சந்திரன் காற்று என இயற்கைக்கு உட்பட்ட அனைத்தும் சமமாகவே கொடுக்கிறது.

நாம் விரும்பியதை அடைய நமக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

இதற்காக நாம் யாரும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நமக்கு நாமே குரு.. நாம் தான் பில்கேட்ஸ்க்கு ஒரு சூரியன் நமக்கு ஒரு சூரியன் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம்.

நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம் இப் பிரபஞ்சத்திடம் கேட்கும் விதத்தில் தான் தவறு நடக்கிறது.

ஆக மொத்தத்தில் நம்முடைய புரிதல் கோணம் தான் தவறானது.

சரி இப்பொழுது இப் பிரபஞ்ச பேராற்றலை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதை பார்ப்போம்.

மிக மிக சுலபமான வழி முறையாக உள்ளதே, பலன் அளிக்கு்மா என நினைக்க வேண்டாம். பயன்படுத்தி பாருங்கள்  பலன் நிச்சயம்.

மந்திரம் சொல்ல வேண்டாம. தியானம் செய்ய வேண்டாம். பணம் செலவு செய்ய வேண்டாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.

நாம் சாதாரணமாக செயல்களில் ஈடு பட்டுக்கொண்டே  இப் பிரபஞ்ச சக்தியிடம் அனைத்தையும் பெறலாம்.

இதற்கு எல்லாம் என்ன செய்ய வேண்டும் மிக சுலபம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் மனதார நன்றி மூன்று முறை கூற வேண்டும்.

அவ்வளவு தான் மற்றதை இப்பிரபஞ்சம் நமக்கு தேவையானதை நடத்தி காட்ட தயாராகி விடும்.

இதை நாம் செய்வதற்கு மறந்து விடுவோம் இதையும் விட சுலபமான ஒரு வழி உள்ளது.

அது என்ன வென்றால் தற்காலத்தில் தொலைபேசி இல்லாமல் யாரும் இல்லை ஆகவே ஒவ்வொரு தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கும்  போதும் நன்றி என்ற ஒரு மாயாஜால வார்த்தயை கூறிவிட்டு பச்சை நிற வண்ணத்தை தொட்டு பேச தொடங்குங்கள்.

பிறகு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நல்ல ஒரு உயர்ந்த நிலையை அடையவதற்க உண்டான  தொடக்க பாதைக்கு இப்பிரபஞ்சம் பச்சை நிற கொடி அசைத்து காட்டி விடும்..

சரி இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.

நமக்கு ஒருவர் பரிசு பொருட்கள் அல்லது உதவி செய்யும் பொழுது நாம் என்ன கூறுகிறோம் நன்றி என்கின்ற வார்த்தையை கூறுகிறோம் அல்லவா அதே போல் தான் இதுவும்.

ஐஸ்டீன் சூத்திர படி எந்த ஒரு நேர் வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு..

அது போலவே இப்பொழுது இங்கே நமக்கு கொடுப்தற்கு முன்பே நன்றி கூறி விடுகிறோம். இப்பொழுது பிரபஞ்சம் நமக்கு கடமை பட்டு விடுகிறது நமக்கு தேவையை நிறைவு செய்யகிறது...

விசித்திர சடங்குகள்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஜெர்மனி நியூரம்பெர்கில், 1561 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி, அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை, ஒரு பயங்கரமான பறக்கும் தட்டு சம்பவம் சூரியனை மய்யமாக கொண்டு ஏற்பட்டது, இந்த  நியூரம்பெர்க், நகரத்தின் முன்னும், - பல ஆண்கள் மற்றும் பெண்கள் வானில் காண, அதன் கடைசி காலாண்டில் சந்திரனைப் போலவே, சூரியன் சிவப்பு அரை சுற்று வட்ட வடிவங்களுடன் தோன்றின.

மேலும் சூரியன், மேலே, கீழே மற்றும் இருபுறமும், சிகப்பு நிறமாகவும் ஓரளவு கருப்பு இரும்பு வண்ணமாகவும் இருந்தது. அவ்வாறே அதனின்  இருபுறமும் சிவப்பு, கருப்பு, நிறங்களில் பல பந்துகள் மற்றும் நீல நிறத்தில் நீண்ட உலோக உருண்டைகள் ஒரு வரிசையில் மூன்று மற்றும் ஒரு சதுரத்தில் நான்கு, என்ற வடிவத்தில் இருந்தன.

இந்த பந்துகள் நடுவில் இரத்த சிவப்பு பட்டைகள் இருந்தன, அவை பின்புறம் அடர்த்தியாகவும், முன்புறமாக புல்வெளிகளால் ஆன தண்டுகளைப் போன்ற முன்னுரையாகவும் இருந்தன, அவற்றில் இரண்டு பெரிய தண்டுகள் வலது பக்கம், இடது பக்கம், மற்றும் சிறிய மற்றும் பெரிய கம்பிகளில் மூன்று, நான்கு பந்துகள் காணப்பட்டன.

பின்னர் இவை அனைத்தும் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுத் தொடங்கியது, அதனால் சூரியனில் முதன்முதலாக இருந்து இரு பக்கங்களிலும் நின்று நின்று பறந்து, சூரியனுக்கு வெளியே நிற்கும்  சிறிய மற்றும் பெரிய பட்டைகள் பறந்து சென்றன. நீண்ட உலோக உருண்டைகள் தவிர மற்றவர்கள் தங்களுக்குள்ளேயே பறந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒருவருக்கொருவர் கடுமையாகப் போராடினார்கள்.

இந்த பந்துகள் அனைத்தும் அலைந்து திரிந்த மோதல்கள் மிகுந்த தீவிரமாக இருந்தபோது, பொருள்கள் தரையில் விழுந்து "பெரும் புகை" வெளிப்படுத்தியது.. அவர்கள் அனைத்தையும் எரித்தனர், அவர்கள் பூமியில் சூரியனைக் கீழே தள்ளிப் போயினர் "அவர்கள் அனைவரும் எரித்தனர் போல", பின்னர் அவர்கள் வீணாகி பூமி மீது மிகப்பெரிய புகை. இவை எல்லாம் கருப்பு நிறமாக இருந்தன. ஆனால் ஓரளவு மந்தமான, கறுப்பான இரும்பு வண்ண "ஒரு கருப்பு ஈட்டி போன்ற, மிக நீண்ட மற்றும் தடித்த, பொருள் மட்டுமே உறுதியாக இருந்தது.

நியூரெம்பெர் நகர குடியிருப்பாளர்களில் பலர் இந்த காட்சியை பார்வையிட்டனர். பிறகு அவற்றிற்கு என்ன விளக்கம் கொடுக்க வேண்டும் என்று அந்த மக்களுக்கு தெரியவில்லை, அது கடவுளிடமிருந்து வந்த ஒரு அடையாளமாக இருக்கும் என்று சொல்லுவதை தவிர.
இடைக் காலத்தில்கூட மத சந்தேகவாதிகள், இந்த யுஎஃப்ஒ சம்பவ கணக்குகளில் தங்களின் மத அடையாளத்தை புகுத்திவிட்டனர். "அன்றைய மக்கள் இந்த விசித்திரமான சம்பவத்தை கண்டிருக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கு விளக்கம் இவ்வாறே கொடுக்கப்பட்டது.

இத்தகைய அறிகுறிகள் எதுவாக இருந்தாலும், கடவுள் மட்டுமே அறிவார். சர்வவல்லமையுள்ள கடவுளால் பரலோகத்தில் இருந்து பலவிதமான அறிகுறிகளால் நம்மை சோதிக்க மனந்திரும்புதலுக்கு அனுப்பியுள்ளார், அதிஷ்டவசமாக, நாம் நன்றியுள்ளவர்களாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, பயபக்தியுள்ளாகவும் இருப்பதால், இந்த அடையாளங்களை நிராகரிக்க மாட்டோம்,

ஆனால் பரலோகத்தில் உள்ள தமது இரக்கமுள்ள தந்தையின் எச்சரிக்கையாக இதை இதயத்தில் எடுத்துக்கொள்வார்கள், தங்கள் வாழ்க்கையை மாற்றியமைப்பார்கள், இறைவனிடம் முறையிடுவார்கள், அவருடைய கோபத்தை வெளிப்படுத்திய இந்த சம்பவத்தை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இங்கே இருக்கவிடாமல், அவரது குழந்தைகள் வாழ, எங்களின் மீதான தண்டனை போக்க. தேவன் நமக்கு உதவிசெய்தார் ஆமென்.

இவர்கள் சந்தேகவாதியாக இருந்தாலும், இந்த பறக்கும் தட்டு சம்பவம், இவர்களாலே சந்தேகமில்லாமல் உண்மையாகிறது. ஆமென்...

குடியை மறக்க...


ஆந்திரா தமிழகத்தைத் தின்கிறது...


காட்பாடி அருகே உள்வாங்கிய எல்லை...

20 தமிழர்களைக் கொன்று, தமிழகக் கோவிலை ஆக்கிரமித்தது என ஆந்திராவின் அட்டூழியம் தற்போது காட்பாடி அருகே ஆந்திர எல்லை தமிழகத்திற்கு உள்ளே நீட்டிக்கும் வரை வந்துவிட்டது.

போன ஆண்டு தாளூர் எல்லையை கேரளா ஆக்கிரமித்தது.

தமிழர் எல்லையைக் காக்க ஒரு படை இல்லை.

தமிழ் மண் சுருங்கிக்கொண்டே வருகிறது...