02/12/2018

பானை போல வயிறு இருக்கா.. இலகுவாகக் குறைக்கலாம்...


உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விசயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது.

அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே மிக மேன்மையான (super) மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா...

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் (diet) இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

திணிப்பு...


பழனி கோவிலில் குருக்கள்களின் வசூல் வேட்டை...


திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி திருக்கோவிலில்  உளே உள்ள குருக்கள் அனைவரும் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்கின்றன கோவில் விபூதி மற்றும்  குங்குமதிர்காக, மக்கள் உண்டியலில் செலுத்தப்படும் பணத்தை எங்களிடம் கொடுங்கள் என்று உள்ளே உள்ள குருக்கள் வாங்கி கொள்கிறார்கள்.

இதற்கு  பழனி தேவஸ்தானம் போர்டு சரியான தீர்வு காண வேண்டும்,மக்கள் ஆகிய நாமும் பணத்தை உண்டியலில் மற்றும் செலுத்த வேண்டும், கோவில் உளே உள்ள குருக்கள் இடம் பணத்தை கொடுக்க வேண்டும்...

டோல்கேட்களை மூடி பாஜக கார்பரேட் முதலாளிகளுக்கு செருப்படி கொடுத்த கேரள அரசு...


பாஜக விற்கு செருப்படி கொடுக்கும் இந்திய விவசாயிகள்...


200 மீட்டர் , 300 மீட்டர் சிலைகள்.

ராமர் கோவில், சபரிமலா பிரச்சனைகள்.

முஸ்லீம் தீவிரவாதம், கிருத்துவ மதமாற்றம் என மத அரசியல்.

நடிகர்கள் அரசியல், அடிமைகளை கொண்டு ஆட்சி.

என எத்தனையோ வகையில் மக்களை திசை திருப்பி வந்த உங்களுக்கு வந்த சவுக்கடி தான் லட்சம் விவசாயிகள் ஒன்றுக்கூடிய இந்த புரட்சி பேரணி.

எங்கள் பேரிடர் நேரங்களில் ஒளிந்துக் கொண்டு, என் விவசாயி தற்கொலை நேரத்தில் வாய் மூடிக்கொண்டு, எங்கள் சிறு குறு தொழில்கள் மூடப்படும் போது கண்டும்காணாது இருந்துக்கொண்டு

அம்பானிக்கும், அதானிக்கும், நாட்டை விட்டு ஓடும் ஏமாற்று பேர்வழிக்கும், நடிகனுக்கும் மட்டும் நேரம் ஒதுக்கி பார்க்கும் அரசே.

பணக்காரனையும், மத தீவிரவாதியையும், வரி ஏய்ப்பு செய்பவனையும் முதலீடாய் கொண்டு டிவி, பத்திரிக்கைகளை வளைத்து இனி நீ செய்யும் எல்லா ஏமாற்று வேலைகளையும் மக்கள் கண்டுக் கொள்வார்கள்.

உன் மற்றும் உன்னை சூழ்ந்து நிற்கும் அடிமை  கூட்டத்தின் அரசியல் முடிவுரை எங்கள் விரல் மையில் எழுதப்படும்...

அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர் சில சங்க இலக்கியச் சான்றுகள்...


ஆரியத்தின் சாதியம் ஐந்து அடிப்படைகளைக் கொண்டது..

1. பிறப்பு அடிப்படை.
2. குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்ற விதி.
3. பிற பிரிவினருடன் கலவாமை / தனித்துவம் காத்தல்.
4. தீண்டாமை.
5. இவற்றை மீறுவோருக்குக் கடும் தண்டனைகள்.

தொல்காப்பிய நால்வகைத் தொழிற் பிரிவுகளில் இந்த ஐந்து அடிப்படைகளுமே இல்லை. மேலும், தொல்காப்பியர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்..

’ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75).

இதன் பொருள்..

’ஊர், பெயர்,தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’ என்பதாகும். எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட ’தர்மம்’ அல்ல என்பதை இந்த விதி விளக்குகிறது.

‘தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்க’ (மரபியல் 76).

-என்கிறார் தொல்காப்பியர்.

தலைமைப் பண்பைப் பொறுத்தவரை, அவரவரும் தமது நிலைமைக்கேற்பவே நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது இவ்விதி. தலைமைப் பண்பு என்பது, பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது, தொடர்புடையவர், குறிப்பிட்ட சூழலில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.

மேற்கண்ட இரு விதிகளும் மிக விரிவாகப் பொருள் கொள்ளத்தக்கவை ஆகும். நால்வருணத்தின் அடிப்படைகளுக்கும் இவ்விதிகளுக்கும் முரண்பாடுகள் மட்டுமே இருக்கின்றன.

மேலும், நால்வருணக் கோட்பாடு வகுத்த அதிகாரப்படிநிலை..

1. பிராமணர்.
2. சத்ரியர்.
3. வைசியர்.
4. சூத்திரர்.

-என்பதாகும்.

தொல்காப்பியம் வகுத்த நான்குவகைப் பிரிவுகளின் அதிகாரப்படிநிலை..

1. அரசர்
2. அந்தணர்
3. வணிகர்
4. வேளாளர்

-என்பது.

இதில், பிராமணர் என்ற பிரிவே இல்லை.
பிராமணர் இருக்க வேண்டிய இடத்தில் அரசர் உள்ளார்.

அவருக்குப் பிறகே, அந்தணர் வருகிறார்.

அந்தணர் என்றால், அது ஆரிய பிராமணரைக் குறிப்பதாக, கற்பனையாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.

அந்தணர் என்போர் யார் என விரிவாகக் காண்போம்.

தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே, சங்க இலக்கியங்கள் பதிவு செய்த வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியும்.

ஐயர் என்ற சொல் ’தலைவர் / சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும்.

’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ’ஐயை’ என்பது தலைவியைக் குறிக்கும். ’ஐயா’ என்பது மரியாதையுடன் ஒருவரை விளிக்கும் சொல். இவ்வகையில்தான், ஐயர் என்னும் சொல், தலைவர் என்ற பொருள் தாங்கி நின்றது.

சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். சிந்துவெளித் தமிழரின் எழுத்துக்களைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார் -  முனைவர். இரா.மதிவாணன்.

சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதை இந்நூல் வாயிலாக உணரலாம்.

இந்நூலில் உள்ள அகர வரிசைச் சொற்களில் ஒன்று,

‘அய்யன்’ என்பதாகும்.

(Indus Script Dravidian / Dr.R.Mathivanan / Tamil Chanror Peravai / 1995 / பக் – 137)

(அ)ய்யஅன்
(அ)ய்ய(ன்) மாசோண(ன்) மன்னன்
(அ)ய்ய(ன்) வைகா சானஅன்
(அ)ய்ய(ன்) காங்கணஅன்
(அ)ய்ய(ன்)

(மேலது நூல் – பல்வேறு பக்கங்களில்)

ஐயர், என்றால் அதுவும் பிராமணர்தான், என்றால், சிந்துவெளித் தமிழரும் ஆரிய பிராமணர்தான் என்பார்களோ, திராவிடக் கோட்பாட்டாளர்கள்.

மேற்கண்ட நூலில் உள்ள ’சானஅன்’ என்னும் சொல் விரிவான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும். ஏனெனில், இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், அந்தனன், அய்யன் போன்ற, அறிவுத் துறைச் சொற்கள் உடன்வருகின்றன.

சாணார், என்போர் சான்றோர். இவரே, பின்னாட்களில் நாடாரெனும் சாதியரானார் என்ற கருத்து நெடு நாட்களாகக் கருத்துலகில் உள்ளது.

சிந்துவெளிச் சொற்களில், சானாஅர், அந்தனஅர், அய்யஅன் ஆகிய மூன்று சொற்களுக்கும் இந்த உறவு உள்ளதாகத் தெரிகிறது.

ஆரியர் வருகைக்கு முன்னரே, அய்யன் என்னும் சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.

ஐயர் என்பது, பிராமணரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பிராமணர்களாலேயே மாற்றிக் கொள்ளப்பட்டது.

அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின் போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே.

சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர் (பதிற்றுப் பத்து தெளிவுரை –புலியூர் கேசிகன்).

இவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர்.

குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன்.

இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமையவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை,

’இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமையவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.

குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்;

’இமையவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா?

இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய்.

மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்து கொண்டிருந்தன. வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கி விட்டன.

அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’.

அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு மகிழ்வுடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?

தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.

‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே.

வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

பாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள்.
ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள்.

விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.

இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர்.

உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர்.

பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.

எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;

‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்.... உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).

இவ்விதியில், ’தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார்.

அதாவது, குழுத் தலைவன், குடும்பத் தலைவன் என்று அனைத்து அலகுகளின் தலைமையில் உள்ளவன் என்று பொருள். இந்தத் தலைவன், அரசருக்காக செய்ய வேண்டிய / செய்யத்தக்க பங்களிப்புகள் தான் அகத்திணையியலில் கூறப்பட்டது.

அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.

இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.

ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை..

’அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக் கொண்டால் தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரிய பிராமணர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரிய பிராமணரே, உண்மையான / மறைமுக ஆட்சியாளர்களாக இருந்தனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரிய பிராமணர்கள் செய்து முடித்தனர்.

இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.

ஆரிய பிராமணரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.

நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே.

இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ’வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரிய பிராமணர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன்.

ஆயினும், அறிஞர் குணா அவர்களின் அரசியல் நிலைகளில் எனக்கு மாறுபாடுகள் உண்டு.

சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர்.

இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர்.

தமிழகத்திற்கு வந்தேறிய ஆரிய பிராமணரில் பலரும் தமிழகப் பார்ப்பாரோடு கலந்தனர்.

ஆகவே, பார்ப்பார் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பிரிவினரில் தமிழரும் உண்டு, ஆரிய பிராமணரும் உண்டு.

பார்ப்பார் எனும் சொல், குலத் தொழிலைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வந்த எல்லா ஆரிய பிராமணரும், உயர் நிலையில் வைக்கப்படவில்லை. அவர்களது நிலை, தமிழர் அரசுகள் வீழ்ந்த பிறகுதான் உயர்ந்தது.

பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை..

’தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’
(தொல்காப்பியம், கற்பியல்-36)

அகநானூற்று பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது..

’உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (’தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வெள்ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’
(அகநாநூறு 337).

குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.

‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’
(குறுந்தொகை 156)

பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன.

மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன.

குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம்.

தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது.

மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே... உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.

இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர்.

குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரிய பிராமணன் எனத் தெரிகிறது.

நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும்.

இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.

ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியப் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம்.

குறிப்பாக, அந்தணர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டது, தமிழ் மெய்யறிவாளர்களைத் தானே தவிர, ஆரிய பிராமணர்களை அல்ல.

தொல்காப்பியர், தமிழ்ச் சமூகத்தின் பிரிவுகளில் ஆரிய பிராமணர்களைக் குறிப்பிடக் கூட இல்லை.

ஆனால், மிகத் தவறான புரிதல்களால், திராவிடக் கோட்பாட்டாளர்கள், ‘தொல்காப்பியரே ஓர் ஆரிய பிராமணர்தான்’ என்று பரப்பிவிட்டார்கள்.

மூலமான சான்றுகளைப் படித்து, மெய்யான தமிழர் வரலாற்றை அறிய வேண்டியது தமிழர் கடமை...

தமிழீழ விடுதலைப் இயக்கத்தில் தமிழக இளைஞர்கள் பலர் தங்களை இணைத்துக் கொண்டு, மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் பங்காற்றிய செய்தி கிடைத்து இருக்கிறது...


ஏறக்குறைய 50,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றேறக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்; அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவரை சில தகவல்கள் தருகிறேன்.

வீரமரணம் அடைந்தோருக்கு புலிகள் வழங்கும் 'மாவீரர்' பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில் ஒரு கரும்புலி இரண்டு பெண் போராளிகள் உட்பட 14 பேரின் விபரங்கள்...

பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது
வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நட்டப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு
மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான
சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு

பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு..

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து
பண்டுவம் பெறும்போது வீரச்சாவு துயிலுமில்லம்:
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில்
இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது..

நடிகனுக்குப் பாலூற்றும் இளைஞரைப் பற்றிப் பேசிக் களைப்படைந்தோர் இனி
இவர்களைப் பற்றிப் பேசுங்கள்..

தமிழீழத்தை தங்களின் அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டு, மேடைகளில் உணர்ச்சி பொங்க பேசும் அயோக்கியர்களை அறிந்த அளவுக்கு..

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த இந்த மறத்தமிழர்கள் குறித்து நாம் இதுவரை அறியாமலே போய் விட்டோமே....

நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த சில யோசனைகள்...


உலகின் திகில் கிளப்பும் தீவு...


அல்டாப்ரா தீவு (Aldabra Island)...

செஷல்ஸ் நாட்டின் தீவு. லட்சக்கணக்கான ஆமைகள் வசிக்கும் தீவு.

1888-ல் செஷல்ஸ் அரசாங்கம் இந்தத் தீவில் ஒரு கிராமத்தை உருவாக்கி மக்களை வாழச் செய்தனர்.

ஆனால், குடிநீர் ஆதாராமற்ற இந்தத் தீவில் மக்களால் தொடர்ந்து வசிக்க முடியவில்லை.

இந்த வழி கப்பல்களில் போவோர் ஆமைகளை வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆமைகளே அழியும் நிலை ஏற்பட்டது.

ஆனால், 1950களுக்குப் பிறகு இந்த வழியில் போகும் கப்பல்கள் தீவை எட்ட பயப்படத் தொடங்கினர்.

காரணம் இன்றுவரைத் தெரியவில்லை.

பல ஆண்டுகள் யாரும் அதன் அருகே போகவில்லை.

இன்று ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...

என்னிடம் இருப்பதே இந்த ஒரு கோர்ட் தான் - ஐயா சகாயம்...


முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஹவான்னாவில் உள்ள தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் முருங்கை மரத்தை சாகுபடி செய்திருக்கிறார்...


தினமும் முருங்கை மரத்தை பராமரிக்கிற வேலையையும் காஸ்ட்ரோதான் செய்து வந்தார். அவர் நேசித்த முருங்கைக்கு பின்னால் முக்கியமான சம்பவம் காரணமாக இருகிறது.

கியூபாவிற்குப் பக்கத்து நாடான, ஹைட்டி தீவில் 2010-ம் வருடம் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் லட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பக்கத்து நாட்டில் நடந்த, இந்தத் தகவலைக் கேட்டவுடன் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்பி உதவி செய்தார். உதவி செய்யச் சென்றவர்கள், உடனே ஒரு செய்தியை அனுப்பினார்கள்.

அந்த செய்தியில் இங்கே பூகம்பம் ஏற்பட்டு அதிகமான மக்கள் இறந்துவிட்டனர். கூடவே காலரா நோய் வேகமாக பரவிக் கொண்டுள்ளது.

இந்த தகவலை கேள்விப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவத்தலைவரையும், முக்கியமான அதிகாரிகளையும் அழைத்துப் பேசியுள்ளார்.

ஹைட்டி தீவு மக்கள், காலரா நோயிலிருந்து மீண்டு வர என்ன செய்யலாம். இந்த நோய்க்கு என்ன தீர்வு, என்ன மருந்து கொடுக்கலாம் என அந்த கூட்டத்தில் விவாதித்தார்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பின்லே இன்ஸ்ட்டியூட் (Finlay Institute) மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர் கெம்பா ஹெர்கோ (Dr.Campa Huergo) ‘ஹைட்டி தீவு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடிய பொருள் இருக்கிறது' என சொல்லியிருக்கிறார்.

அந்த மருந்துப் பொருள் எங்கே இருக்கிறது, எப்படி வாங்கலாம் சொல்லுங்கள் என கேட்டார் ஃபிடல்..

இந்தியாவில் உள்ள முருங்கை இலைக்குத் தான், நோய் எதிர்ப்புச் சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்கின்ற திறனும் இருக்கிறது என்றார், டாக்டர் கெம்பா ஹெர்கோ.

இந்தியா என பெயரை கேட்டவுடனே காஸ்ட்ரோவோட புருவங்கள் விரிய ஆரம்பித்தன.

ஏனெனில் அவருக்கு இந்தியா மேல் எப்போதுமே தனிப் பாசம் உண்டு.

டாக்டர் கெம்பா ஹெர்கோவுக்கும் கூட இந்திய முருங்கை மேல் ஆர்வம் ஏற்பட்டது.

காரணம் பல வருஷமாக யோகா செய்து பலன் அடைந்திருந்தார்கள்.

இந்திய மருத்துவத்தில முருங்கை மரத்திற்கு பெரும் பங்கு இருக்கு..

இதை நம் முன்னோர்கள் எல்லா வழிகளிலும் நமக்கு சொல்லி விட்டார்கள்.. நாம் தான் சாப்பிடவில்லை..

இனி வெளிநாட்டுகாரன் சொல்லிட்டா சாப்டுவாங்க...

கேரளாவில் பாஜக விற்கு செருப்படி...


அதிர்வலைகள்...


ஒவ்வொரு மனிதனை சுற்றிலும் பல கண்களுக்கு தெரியாத  அதிர்வலைகள் இருக்கிறது...

மனிதனின் உயிரே ஒரு அதிர்வு தான்..

ஒவ்வொரு மனிதனும் உயிரினங்களும் அதிர்வலைகளுடன் இனைந்து இருக்கிறது.

அந்த அதிர்வலைகள் பிரபஞ்சத்தில் இனைந்து  இருக்கிறது.

நமது உணர்வு முதற்கொண்டு எல்லாமே அதிர்வு தான்.

அந்த உணர்வுகளை (அதிர்வுகளை) இயற்கையிடம் மட்டுமே உணர முடியும்...

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பாணை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, மாநில அரசின் உரிமைகளை முழுவதும் பறிப்பதாகும்; தமிழக அரசு உடனடியாக இதை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை...


சுற்றுச்சூழல் சட்டவியலில் முன்னெச்சரிக்கை கோட்பாடு (Precautionary principle), இடர் தடுப்புக் கோட்பாடு (Prevention principle), தவறிழைப்பவரே பொறுப்பேற்பு கோட்பாடு (Polluter pays principle), ஒருங்கிணைவு கோட்பாடு (Integration principle), மக்கள் பங்கேற்பு கோட்பாடு (Public participation principle), நீடித்த வளர்ச்சிக் கோட்பாடு (Sustainable development principle) ஆகியவை முக்கியமானவை. ஐக்கிய நாடுகள் அவை முன்னெடுத்த இந்த கோட்பாடுகள் உலகின் அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய கடமை படைத்தவை.

இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தியாவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும், அனைத்து மாநிலங்களிலும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களும் இயங்கி வருகின்றன.

சுற்றுச்சூழலை பாதிக்கும் வாய்ப்புள்ள தொழிற் திட்டங்களுக்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய கட்டுப்பாடுகளையும், நெறிப்படுத்தல்களையும் விதித்து நிபந்தனைக்குட்பட்ட அனுமதி வழங்கும். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களை கலந்தாலோசித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் “சுற்றுச்சூழல் அனுமதி” (Environment Clearance) வழங்கும். இந்த சுற்றுச்சூழல் அனுமதியில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதையும், அந்த தொழிற் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது என்பதையும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தபின்னர் அந்த “திட்டம் கட்டுவதற்கான அனுமதி”யை (Consent to Establish) வழங்கும், அதன் பின்னர் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள விதம் விதிமுறைகளின்படி இருந்தால் திட்டத்தை "இயக்குவதற்கான அனுமதியை" வழங்கும் (consent to operate). இந்தத் திட்டத்தின் மூலம், பெருந்தொழில் திட்டங்களை அனுமதிப்பதில் மாநில அரசுக்கும், மாநிலத்தில் வாழும் மக்களுக்கும் ஓரளவு கட்டுப்பாடு இருந்தது.

மாநிலங்களுக்கான அந்த உரிமையை பறித்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சுற்ற்றிக்கை ஒன்றை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் அறிவித்துள்ளது. அதில், இனி மத்திய சுற்றுச்சூழல்  வழங்கும் “சுற்றுச்சூழல் அனுமதி” (Environment Clearance) மட்டுமே போதுமானது என்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் “தொழிற்திட்டம் தொடங்குவதற்கான  அனுமதி” (Consent to Establish) தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

நச்சுமிகுந்த கழிவுகளை வாயுவாகவோ, திரவமாகவோ, திடப்பொருளாகவோ வெளியேற்றும் ஆலைகள், அனல்மின் மற்றும் அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்கீது அறிவிக்கை 2006ன் படி மாநில சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி அவசியம். இவை இரண்டையும் பெற்ற பின்னர் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் consent to establish என்ற அனுமதியினைப் பெற்றால் மட்டுமே திட்டத்தை துவங்க இயலும், துவங்கிய பின்னர்கூட ஆண்டிற்கு ஒருமுறை Consent to operate என்ற தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியைப் புதுப்பித்தால் மட்டுமே ஆலை இயங்க முடியும்.

இந்த இரண்டு அனுமதிகளின் பலத்தால் சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாத பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு எளிதில் அனுமதி கிடைப்பதற்காக இந்த விதிகளை தளர்த்தி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கும் நிபந்தனைகளும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் நிபந்தனைகளும் ஒன்றாகவே இருப்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி அவசியமில்லை என அனைத்து மாநில அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பப்பட்ட உத்தரவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு தமிழ் மக்களின் எதிர்ப்பு காரணமாக “திட்டம் தொடங்குவதற்கான அனுமதி” (Consent to establish)-ஐ வழங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு விரும்பும் தொழிற்திட்டங்களை – அதன் பாதிப்பு குறித்து அக்கறை கொள்ளாமல் – மக்கள் மீது திணிக்கவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநில அரசுகளை மதிக்காமல் புறந்தள்ளவும் இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.

இது இந்திய அரசமைப்பு சட்டக் கோட்பாடுகளுக்கும், சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கும் எதிரானதாகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒரு "அலுவலக குறிப்பு" (office memo) மூலமாக மாற்றியமைக்க முயற்சிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேலிக்கு உள்ளாக்கும் செயல்.     

மத்திய அரசின் இந்த எதேச்சதிகார – மக்கள் விரோதப்போக்கு கடுமையாக கண்டிக்கிறோம், தமிழக அரசு தன்னுடைய உரிமையை நிலைநாட்ட இதற்கான எதிர்ப்பு குரலை பதிவு செய்யவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு: வழ. சுந்தரராஜன், தொ.எண்: 9094596699...

கார்ப்பரேடின் அரசியலிருந்து நாம் மீள்வோம் என்கிற நம்பிக்கையில்...


ராமர் கோவில் வேண்டாம்.. கடன் தள்ளுபடி தான் வேண்டும்.. இந்து விவசாயிகள் முழக்கம்.. பாஜக அதிர்ச்சி...


டெல்லியில் போராடும் அகில இந்திய விவசாயிகள், தங்களுக்கு அயோத்யாவில் ராமர் கோவில் வேண்டாம், கடன் தள்ளுபடிதான் வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் இன்று விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு உள்ளனர்.

இன்னும் சில மணி நேரத்தில் விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட இருக்கிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

முக்கியம் என்ன...

இந்த போராட்டத்தில் 29 மாநில விவசாயிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதில் பலர் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள். உத்தர பிரதேசம் , குஜராத், கோவா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ஹரியானா உள்ளிட்ட பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

குஜராத் விவசாயிகள்...

இதில் 4 லட்சம் விவசாயிகள் தற்போது போராடி வருகிறார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் இருந்து 1000 விவசாயிகள் மட்டுமே சென்று இருக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் இருந்து 50 ஆயிரம் விவசாயிகள் வரை சென்றுள்ளனர். மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே அவருக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது இதுவே முதல்முறை.

உத்தர பிரதேச விவசாயிகள்...

அதேபோல் யோகியின் உத்தர பிரதேச விவசாயிகளும் 1 லட்சம் பேர் வரை இதில் திரண்டு உள்ளனர். அவர்கள் இதில் சொல்லும் முழக்கம் கவனிக்க வேண்டியது. எங்களுக்கு அயோத்யாவில் ராமர் கோவில் வேண்டாம்.. கடன் தள்ளுபடிதான் வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகிறார்கள். இது பாஜகவை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பாஜக...

பாஜக தங்களை ஏமாற்றிவிட்டதாக விவசாயிகள் கூறி வருகிறார்கள். மத்திய அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்...

காங்கிரஸ் - பாஜக இரண்டு கட்சியின் ஏமாற்று வேலைகள்...


அழைக்கிறது ஆபத்து.. இரசாயன விருந்து...


நாம் உண்ணும் உணவு வகைகளில் இன்று 1700க்கும் குறையாதவை செயற்கையான சுவைக்கூட்டுப் பொருள்களால் உருவானவை.

பானங்களிலும் பிஸ்கட்டுகளிலும் 100க்கும் குறையாத இரசாயனங்களையே பயன்படுத்துகின்றனர். கேக் மிக்ஸ், சாக்லெட், பிஸ்கட், மார்ஜரின், திடீர் உணவுவகைகள், குலோப் ஜாமூன் மிக்ஸ் என அனைத்திலும் நம்முடைய சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மோசமான இரசாயனங்கள் இருக்கின்றன

உண்ணத் தயாராக இருப்பதாலும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் இருப்பதாலும், நாம் இவற்றைக் கணக்கில் கொள்வது இல்லை. எனவே நமது உடலுக்கு பாதுகாப்பானவையா என்று எவரும் அக்கறை கொள்வதில்லை.

சுவைகூட்டுப் பொருள் என்பது தேவையில்லாத ஒன்றாகும். சுவை கூட்டுப் பொருளுக்கும் ஊட்டச் சத்துப் பொருளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. ‘ஊட்டச் சத்துக்கள் சேர்க்கப்பட்டவை’ என்று கூறப்படுவது இயற்கையான சத்துக்கள் அகற்றப்பட்டு, அவை இரசாயனங்களால் நிரப்பப்ட்டிருக்கின்றன என்று பொருளாகும். ஆனால் பெரும்பாலும் அகற்றப்படும் சத்துக்கள் நிரப்பப்படுவது கிடையாது.

ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட வெள்ளை ரொட்டியில் (பிரட்) 290 விதமான இயற்கையான வைட்டமின், புரதம், தாதுப்பொருள்கள் அழிக்கப்படுகின்றன. 4 அல்லது 5 செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

பழபானங்களில் தண்ணீரில் வண்ணம் சேர்க்கப்படுகிறது. தயாரிப்பின் போது இயற்கையான சுவை அழிந்து போய் விடுகிறது. எனவே, சுவை கூட்டுப் பொருட்களும் சுவையூட்டுகளும் உணவுத் தயாரிப்பின் போது அழிந்து போகும் சுவையை மீண்டும் கொண்டு வந்து விடுகின்றன.

சாக்லெட் சேர்க்கப்பட்டுள்ள பிஸ்கட்டுகளில் அதிகமான சாக்லெட் சுவை இருப்பது அதில் சேர்க்கப்படும் சுவையூட்டுகளால் தானே தவிர கொக்கோ பழத்தால் அல்ல. இதே போலத்தான் ஜாம் வகைகளும்.

பேன்களைக் கொல்ல பயன்படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, வாழைப்பழம் முதலியவற்றில் (டப்பாக்கள்) துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இவற்றைச் சாப்பிடுவதால் கெடுதல்களே அதிகம்..

கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல. மாவை வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும், பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல் நலத்திற்குத் தீமையே.

செயற்கை உணவுப் பொருட்களால் புற்றுநோய் உண்டாகலாம். உடலுக்குச் சக்தி அளிக்க இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளே சிறந்தவை. வீட்டில் ரவா சேகரி கிண்டினால் இனி கேசரிப் பவுடரைச் சேர்க்காதீர்கள். கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. அல்வா கிண்டினாலும் அதில் வர்ணம் சேர்க்காதீர்கள். அசைவ உணவிலும் செயற்கையான வண்ணங்களைச் சேர்க்காதீர்கள்.

இனி வேண்டாம் இரசாயன விருந்து..

மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய
சுவைகூட்டுப் பொருட்கள்..

பென்சோத்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும் தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம்.

பி.எச்.எ & பி.எச்.டி (BHA, BHT) : காற்று புகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள் - சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள் - இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

எம்.எஸ்.ஜி. (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல், ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை ஏற்படுத்தும்.

நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள் - தலைவலி.

பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள் - கடுமையான தோல் நோய், வீக்கம் அரிப்பு.

சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள் - நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிலரிடையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும்...

கேரளாவில் பாஜக விற்கு மரண அடி...


பிறந்த குழந்தை ஏன் அழுகிறது ?


இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுது கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?

இதோ தெரிந்து கொள்ளுங்கள்...

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும் பொழுது தனது தாயின் இதயத் துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய் மறந்து, அந்த இதயத் துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால் தான்...

குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்...

அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக் கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...

தலைமயற்ற கருத்தியல்ல...


இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை, ஆனா விதைத்தவன் வெளிபட்டால் வாய்ப்புண்டு.

அதனால அந்த கருத்தியல் ஒவ்வொரு சாமானியனும் தாங்கக் கூடியதாக இருக்கனும்...

பாமகவில் இணையும் 3 தலித் இயக்கங்கள்...


அம்பேத்கர் ஜனநாயகப் பேரவை,
அம்பேத்கர் பணியாளர் நலச்சங்கம்,
தமிழ்நாடு ஆதி ஆந்திர பேரவை,

ஆகிய மூன்று இயக்கங்களும் திரு. நாகபூஷணம் அவர்கள் தலைமையில் அணைத்து சமுக மக்களோடு இணைந்து சமுக முன்னேற்றத்திற்கு பாடுபட பாமக வில் விரைவில் இணைகிறார்கள்...

வள்ளலார் வணங்கிய முருகபெருமான்...


தன் கவியில் முருகபெருமானை வணங்கச்சொல்லும் வள்ளலார்.

வள்ளலார் கூறும் முருகப்பெருமான் திருவடியை வணங்காவிட்டால் வரும் கேடுகள்.

அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகள் அருளிய தெய்வமணி மாலையில் கவி-18

"எந்தைநினை வாழ்த்தாத
பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும் வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை
வணங்காத மூடர்தலை
இகழ்விறகு எடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி
காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்த அழுகண்
கடவுள்நின் புகழ்தனைக்
கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎனாப்
பாவிகள் தம்நெஞ்சம்
பகீர்என நடுங்கும் நெஞ்சம்
பரமநின் திருமுன்னர்
குவியாத வஞ்சர்கை
பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில்
கந்தகோட்டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி
உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே"

அதிகாலையில் எழுந்தவுடன் "முருகா" என்று சொன்னால் புத்துணர்ச்சியும், தெளிவான அறிவும் கிடைக்கும்...

இந்தியா என்பது வியாபார சந்தை என்று உறுதிப்படுத்திய பாஜக...


இந்திய மக்களின் வரிப்பணத்தில் தான் இராணுவத்திற்கு  சம்பளம் கொடுக்கப்படுகிறது...

இந்திய மக்களை காக்க தான் இராணுவம் என்று ஒன்று உருவாக்கப்பட்டது...

ஆனால் இந்த இந்திய இராணுவம் சொந்த மக்களை காக்கவே கூலி வாங்கி தான் வேலை செய்கிறது...

ஏனெனில் டிஜிட்டல் இந்தியா மிகப் பெரிய கார்ப்பரேட் சந்தையாகி விட்டது...

ஆகையால்.. ராணுவ விமானங்கள் வாடகைக்கும், ராணுவ வீரர்கள் கூலி வேலைக்கும் இங்கு கிடைக்கும்...

தமிழர் பயன்படுத்திய போர்க் கருவி சுருள்...


சுருள் பட்டை என்பது ஒரு வளையக்கூடிய மெல்லிய உலோகத்தால் ஆன வளையக்கூடிய, நீண்ட வாள் ஆகும். இது ஒருவரின் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து வெட்டக் கூடிய அளவுக்குக் கூர்மையானது.

அதே வேளை ஒரு வளையமாகச் சுருட்டி விடக் கூடியது. சுமார் முக்கால் அங்குலம் அகலமும் நான்கு அல்லது ஐந்தரை அடி நீளமும் கொண்ட இந்த வாளை இரும்பினாலான சவுக்காகவும் கருதலாம்

இது தமிழர் பயன்படுத்திய போர்க் கருவிகளில் ஒன்றாகும்.

தமிழில் இந்த ஆயுதத்தின் மற்றொரு பெயர் சுருள் வாள். இன்றும் தென் தமிழகத்தில் இவ்வாள் பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம். தற்காப்புக் கலைகளான வர்மக் கலை மற்றும் குத்து வரிசை ஆகியவற்றில் இவ்வாள் பயன்படுத்தப்படுகிறது.

கேரள தற்காப்புக் கலையான களரிப்பயிற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மலையாளத்தில் இந்த வாளானது, வட கேரள களரிப்பயிற்று முறைப்படி உருமி எனவும் தென் கேரள களரிப்பயிற்று முறைப்படி சுட்டுவாள் எனவும் அழைக்கப்படுகிறது.

இவ்வாள் மலையாளச் சொற்களான திரும்பு அல்லது சுழல் என்ற பொருள் கொண்ட சுட்டு மற்றும் வாள் ஆகிய இரு சொற்களையும் சேர்த்துசுழலும் வாள் என்ற பொருளில் சுட்ட வாள் என்ற பெயர் பெற்றுள்ளது.

சண்டையின் போது இதனை ஒருவர் சுழற்றிப் பயன்படுத்தும் முறையால் இப்பெயர் இதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.

சுருள் பட்டையைப் பயன்படுத்துவதில் சிறந்த பயிற்சியுடையவராக ஆவதற்கு வலிமையையும் வேகத்தையும் விட வளையக்கூடிய தன்மையும் சாமர்த்தியமான திறமையுமே தேவை.

இதனைச் சுழற்றுவதும் எதிராளியின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதும் மிகவும் கடினமானதும் ஆபத்தானதுமான கலையாகும். சரியான முறையில் கையாளப்படாவிட்டால் பயன்படுத்துபவருக்கு நிரந்தரமான காயங்கள் ஏற்பட்ட வாய்ப்புண்டு.

இக்கலையில் வல்லுநர்களுக்கும் கூட இதனைப் பயன்படுத்தும்போது சிதறாத ஒருமுகக் கவனம் தேவை. பல எதிரிகளுக்கு இடையில் தனியாக மாட்டிக் கொள்வது போன்ற சூழ்நிலையில் ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ளச் சுருள் பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இடுப்புப் பட்டையாக இதனை அணிந்து கொள்ளலாம் என்பதால் ஒருவர் இதை வைத்திருப்பது மற்றவர்களுக்கு எளிதாகத் தெரியாது, எடுத்துச் செல்வதும் எளிது...

மனிதா சிந்தி...


எல்லா வழிபாடுகளுக்கும் காரணம் மனிதனின் அறிவு...

எல்லா அழிவுக்கும் காரணம்
மனிதனின் மனம்...

உலகின் திகில் கிளப்பும் தீவு...


கன்கஞ்சிமா தீவு (Gunkanjima Island)...

ஜப்பானின் நாகசாகி அருகே இருக்கும் ஒரு தீவு.

இந்தப் பகுதியில் 1800 களில்  நிலக்கரிச் சுரங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பிரபல மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்த சுரங்கத்தில் வேலை செய்ய மக்கள் தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

16 ஏக்கர் பரப்பரவிளான தீவு முழுக்க, காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக் கூடங்கள் என அனைத்தும் கட்டப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடியும் வரை பணியாளர்கள் அனவரும் கொத்தடிமை முறையிலேயே பணி புரிந்து வந்தனர்.

1960களின் முடிவில் சுரங்கம் மூடப்பட்டது.

மக்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்தவாறு வெளியேறினர்.

ஒரு வரலாற்றுத் துயரத்தின் சாட்சியாக நீலக் கடலின் நடுவே கான்கிரீட் தீவாக நின்று கொண்டிருக்கிறது கன்கஞ்சிமா...

யார்..


ஒரு உயிர் தன்னை யார் என்று உணராமல் உடல் விட்டுப் போவது மரணம்.

ஒரு உயிர் தன்னை யார் என்று உணர்ந்து தானாக உடல் மனம் கடந்து போவது விடுதலை.

ஒரு உயிர் துன்ப துயரங்களின் பாதிப்பு இல்லாமல் அன்பாக ஆனந்தமாக வாழ்வது முக்தி.

ஒரு உயிர் சக்தி உடல் மனம் கடந்து அமைதியில் உறங்குவது சமாதி.

ஒரு உயிர் அதீத இன்பம் காண்பது பரவச நிலை.

இன்ப துன்பங்களை சமநிலையில் இருந்த கொண்டு அனுபவித்து வாழ்வது ஆனந்தம்.

துன்பங்களே தெரியாமல் வாழும் ஆனந்தமே பேரானந்தம்.

இன்பம் துன்பம் இரண்டும் இல்லாத பேரானந்த நிலையில்..

அந்த படைப்புடன் உயிர் ஒன்றி கலந்து எல்லையற்ற  தன்மையாகவும் மாறிப் போவது பரம்மானந்தம்....

சொத்துக்காக எனது மகளுக்கு கட்டாய திருமணம்.. அதிர்ச்சியை கிளப்பிய காடுவெட்டி குருவின் மனைவி...


காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

காடுவெட்டி குருவின் அக்கா மீனாட்சிதான் இந்த கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார்.

போலீசில் தஞ்சம் போலீசில் தஞ்சம் இந்த நிலையில் மாலையும் கழுத்துமாக இந்த ஜோடி இன்று கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டார்கள்.

தாங்கள் இப்படி கல்யாணம் செய்து கொண்டதால் ஊருக்குள் எங்களை விட மறுத்து மிரட்டுகிறார்கள் என்று போலீசில் தஞ்சமடைந்த மணமக்கள் சொன்னார்கள்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காடுவெட்டி குருவின் மனைவி லதா அடுத்த பகீரை கிளப்பியுள்ளார். இவ்வளவு நாள் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் பெற்றோர் வீட்டிலிருந்த லதா, இன்று நேராக காடுவெட்டி கிராமத்துக்கு வந்துவிட்டார். அங்கு குருவின் சமாதியில் உட்கார்ந்து மகளின் திருமணத்தை பற்றி சொல்லி அழுது புலம்பினார்.

பின்னர் இது சம்பந்தமாக செய்தியாளர்களிடமும் லதா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது...

விருப்பமில்லாத திருமணம் எனக்கு எதிராக எனது மகன் மற்றும் மகளை எனது கணவரின் தங்கை குடும்பத்தினர் திருப்பிவிட்டுள்ளனர். எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விருப்பமில்லாமல் எனது மகள் விருத்தாம்பிகைக்கும் எனது கணவரின் தங்கை சாவித்திரியின் மகன் மனோஜ்க்கும் எனக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இவ்வாறு லதா தெரிவித்தார்.

ஒரு பக்கம் திருமணம் நடந்து மகள் போலீஸ் ஸ்டேஷனே போய் புகார் கொடுத்துள்ள நிலையில், விருப்பமே இல்லாமல் மகளின் திருமணம் நடந்துள்ளது என்று லதா கூறியுள்ளது இன்னும் அதிகமான குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இங்கு உள்ளவை வரைபடக்கலை தந்திரமல்ல. வேண்டுமென்றால் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்து தேசங்களில் அவரை தேடிப் பாருங்கள். இயேசு யூதராயிருந்தார். படங்களில் உள்ளபடி, வேறுபட்ட கலாச்சாரங்களும் இனங்களும் பெரும்பாலும் இயேசுவை தங்கள் பைபிளிலிருந்தே சித்தரித்துள்ளனர். இது உலகின் எல்லா தேசங்களுக்கும் இயேசு வந்ததை அடையாளப்படுத்துவதையே காட்டுகிறது.

பல நூற்றாண்டுகளாக கிறித்துவம் பெரும்பாலும் ஐரோப்பாவில் இருந்து வந்தது என்பதால், இந்த முக்கிய இரட்சிப்பின் வரலாறு பெரும்பாலும் வெள்ளை ஐரோப்பியர்கள் என சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற கலாச்சாரங்கள் தங்கள் சொந்த தோற்றத்தின்படி அவர்களை சித்தரித்து உள்ளனர்.

உண்மையிலேயே அவர் ஒரு கருப்பர்...

காலப் பயணத்தின் ஆதாரங்கள்...


1500 ஆண்டு பழமையான மம்மி  அணிந்திருந்த ADIDAS காலனி..

மங்கோலியா வில் அல்டாய் மலை அருகில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1500 ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தின் சில பாகங்களை கண்டு பிடித்தனர்...

அந்த பெண் அணிந்திருந்த காலனி நவீன ADIDAS நிறுவன தயாரிப்பு காலனி போல் உள்ளதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது..

இந்த மம்மியை பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் இனம் கைவினை பொருட்கள் தயாரிப்பதில் தன்னறிவு பெற்று மிகவும் முன்னேறி இருந்திருக்கும் என கூறினார்..

கைவினையில் சிறந்த இனமாக விளங்கி இருந்தாலும் நவீன அடிடாஸ் நிறுவன தயாரிப்பை  ஒற்ற ( அடிடாஸ் நிறுவதத்தின் தனித்துவமான வரிகள் இந்த காலனிகளில் காணப்பட்டன )..

கால பயணத்தின் ஆதாரமாகவே இதை பலர் பார்க்கின்றனர்...

வாழ்க்கையை வாழுங்கள்...


நாம் எதை நினைக்கிறோமோ அதுபோலவே உருவாகி செல்கிறோம்.

நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

எதை நாம் எப்போதும் சிந்திக்கிறோமோ அந்த சிந்தனைகள் நம்மை மாற்றி விடுகின்றன.

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்வை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் மனதில்  தினமும்.

வெறுப்புள்ளவை, துக்கமுள்ளவை, வேதனைகளை, மறந்து விடுங்கள் குப்பை என்று.

பின் உங்களை யார் வந்தாலும் மகிழ்வில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது.

உங்கள் எண்ணங்களுக்கு சக்தி அதிகம்
 மக்களுக்கு அன்பு பெருகட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும்.

வாழ்க்கையை தேடி நீங்கள் செல்ல வேண்டாம்.

வாழ்க்கையை வாழுங்கள்...

பறிபோன செங்கோட்டை காடு...


மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும்.

ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.

அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக் கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால்பங்கு கூட காடு இல்லை).

பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.

1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.

அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.

மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும் போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.

இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.

இதை நாம் இழந்தோம்.

வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது...

God என்பதின் உண்மையான அர்த்தம்...


God என்பதை நாம் தான் தவறாக புரிந்து வைத்துள்ளோம்.. ஆனால் அமெரிக்கா அதை சரியாக புரிந்துள்ளது..

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பறக்கும் தட்டுகள் நமது கிரகம் அறியாத படைப்பாளியின் படைப்பு என்று நாம் பார்த்து வருகிறோம். இருப்பினும், சில வேற்றுகிரக ஆய்வுகள் சிறிய ஆளில்லா "ட்ரோன் வகை பறக்கும் தட்டுகள்" உள்ளன, என்பதை விளக்கும் விதமான ஒரு வழக்கு ஜப்பானில் ஆவணப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று ஜப்பானிய நகரான கொச்சியில் உள்ள 'கெரா' பகுதியில் நடைபெற்றது. அந்த நாள் மதியம், 13 வயதான மாணவர் மிக்கோயோ சீவோ பள்ளியில் இருந்து திரும்பி வரும் வழியில், ஒரு தரிசு நிலத்தில் ஏராளமான சிறிய தொப்பிகள் போன்ற பொருளை கண்டார்.

அந்த பொருள் உலோகம் போன்றும் மற்றும் பிரகாசம் இல்லாமலும் இருந்தது. இளைஞன் அந்த பொருளை நெருங்க முயன்றான், ஆனால் அந்த பொருள் உடனடியாக ஒருவித ஒளியை ஊடுருவவிட்டு, அந்த சிருவனை கண்களை தற்காலிகமாக குருடாக்கிவிட்டது.

அச்சம் காரணமாக அந்த சிறிய பறக்கும் தட்டை மேலும் தூண்டிவிட விரும்பாததால் அந்த இடத்தைவிட்டு வெளியேற முடிவு செய்தான். அவன் தனது விசித்திரமான அனுபவத்தைப் பற்றி தனது நண்பர்களிடம் சொல்ல ஓடினான். அவன் கூறியதை கேட்டு, மிச்சியோவின் நண்பர்களில் நான்கு பேர் அந்த இடத்திற்கு சென்று, மர்மமான பறக்கும் பொருளை உணர முயற்சி செய்தனர்.

இறுதியில் அந்த பொருள் இருந்த இடத்திற்கு வந்ததும். அந்த பொருள் சூரியன் அஸ்தமனம் போன்று ஒளி இல்லாததும், மற்றும் பல வண்ண ஒளியை வெளிப்படுத்தவும் தொடங்கியது. இளைஞர்களில் ஒருவன் அந்த பொருளை அணுக முயன்றான், ஆனால் அந்த பொருள் ஒரு களிப்பு ஒலியை வெளிப்படுத்தியதுடன், தீவிரமான நீலமாக மாறியது. இளைஞர்கள் அதை கண்டு பயந்து, அந்த இடத்தை  விட்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

செப்டம்பர் 4 அன்று, ஒரு வாரம் கழித்து, அந்த நண்பர்கள் குழுவினர்,
அந்த இடத்திற்கு மேலே ஒரு மீட்டர் உயரத்தில் சிறிய பறக்கும் தட்டுகளை கண்டனர். மறுபடியும், அந்த பொருள் விளக்குகளை வெளிப்படுத்தத் தொடங்கியது, குழுவிற்கு பயந்து வந்துவிட்டது. அடுத்த நாள், அந்த குழுவினர் திரும்பி வந்தனர், இந்த முறை ஒரு கேமராவுடன் ஆனால் அந்த நேரத்தில் பொருள் தோன்றவில்லை. செப்டம்பர் 6 அன்று, அந்த குழு மீண்டும் தெரியாத பொருள் ஒன்றை எதிர் கொண்டனர்.

செல்லும் வழியில் அவர்கள் ஒரு மினி பறக்கும்தட்டை தரையில் பார்த்தனர். அவர்கள் புகைப்படத்தை எடுத்துக் கொண்ட கணம், பொருள் அதன் சொந்த அச்சில் கேமராவின் ஃப்ளாஷ் லைட் மூலம் தூண்டிவிடப்பட்டது போல் திரும்பியது. யுஎஃப்ஒ காற்றில் இருந்தபோது, குழு இரண்டாவது புகைப்படத்தை எடுத்தனர். பின்னர், பொருள் ஒரு பிரகாசமான வெளிச்சம் உமிழப்பட்டு தரையில் விழுந்தது.

இளம் வயதினர்களில் ஒருவரான ஹிரோஷி மோரி அந்த பொருளை அணுகி, அதைத் தெரிந்து கொள்ள முடிவு செய்தான். பொருளை எடுப்பதற்குள், அதன் உட்புறத்தில் ஏதோ ஒன்று திருப்பிக் கொண்டிருப்பதை அவர்கள் கவனித்தனர். அந்த பொருளை குழுவினர், போர்வைகளில் மூடி, ஒரு பையுடாக வைத்துக் கொண்டனர்.

குழுவில் செய்த முதல் காரியம்,
அந்த பொருளை அளவிட வேண்டும் என்பது தான்.  இது 20.32 செமீ (8 அங்குலம்) அகலமும் 10 செமீ (4 அங்குல) உயரமும் கொண்டதாகவும் மற்றும் தோராயமாக 1 கிலோ (2.2 பவுண்டுகள்) எடையும் இருந்தது. அதன் தளத்தின் அடியில் வட்ட வரிசைகளில்; 31 துளைகள் மற்றும் ஒரு பறவை, ஒரு பறக்கும் பொருள் மற்றும் மோசமான வானிலையை ஒத்த மேகத்தை குறிக்கும் மூன்று வடிவங்கள் செதுக்கப்பட்ட இருந்தது.

ஈரமான காலநிலை யுஎஃப்ஒவின் பலவீனமான புள்ளியாக இருப்பதை அறிந்த அவர்கள் தங்களது அடுத்த தேடல் முயற்சியில் வாளியுடன் தண்ணீரை எடுத்து, தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். மீண்டும், அவர்கள் தரையில் பொருளை கண்டுபிடிக்க. விரைவாக போர்வைகளால் மூடி, அதன் மேல் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் அவர்கள் அந்த பொருளைத் திருப்பி, துளைகள் வழியாக தண்ணீர் ஊற்றினர். அந்த பொருள் பிரகாசிப்பதோடு ஒரு சப்தத்தை உண்டாக்கத் தொடங்கியது.  ஆரம்பத்தில் கவனிப்புடன் இருந்த அவர்கள். பின் முடிவுகளை அடைய, வன்முறை கையாண்டனர். (ஒரு சுத்தியலை பயன்படுத்துவது போன்ற ஒன்றை) தேர்ந்தெடுத்தனர். ஆனால் அது அப்படியே இருந்தது. அடுத்த நாள் காலை மீண்டும் பொருள் மறைந்துவிட்டது.

இந்த சம்பவம் நடந்து யாருக்கும் அவ்வளவாக தெரியவில்லை . ஆனால் விசயம் ஒரு நாவலாசிரியரிடம் கசிந்து, 2004 ஆம் ஆண்டு ஒரு காமிக் புத்தகமாக மாற்றப்பட்ட போது பிரபலமடைந்து.

அதன் காரணமாக 2007 ஆம் ஆண்டு ஜப்பானிய விண்வெளி பெனோமெனா சொசைட்டியின் இயக்குனர் கஜோ ஹயாஷி,ஒரு விசாரணை குழுவை  உருவாக்கி இந்த சம்பவம் விசாரிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கை உறுதி செய்து. சாட்சியங்களைக் கொண்டு மேலும் பல விவரங்களை அறிந்தனர். அந்த பொருள் மனிதன் கைவினையா? அதை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அல்லது வேற்றுகிரகப் பொருளா? என பல கோணங்களில் ஆராயப்பட்டது தகவல் சேகரிக்கப்பட்டது.

விசாரணையின் முடிவில், நாம் அதன் நடத்தை பகுப்பாய்வு செய்தால், இந்த சாதனம் பறக்கும் தட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரபல்யமான சாதனம் போல வெளிப்படையான துல்லியத்துடன் பறந்து. மேலும் பிரகாசமான விளக்குகள் மற்றும் உரத்த குரல்களைப் பயன்படுத்தி தன்னைத்தானே பாதுகாக்க விரும்பும் ஒரு விருப்பத்தையும் காட்டுகிறது.

எந்தவொரு உயிர்களையும் போலவே, இந்த "இயந்திரம்" இளைஞர்களின் சிறைப்பிடிப்பின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்தது. மேலே கூறப்பட்டவை அனைத்தும் செயல்திறன் நிறைந்த வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதற்கு ஆதாரம்., என்ற போதிலும் இந்த யோசனை புதிதாய் உள்ளது என்றார்.

ஒருவேளை நாம் ஒரு கிரகத்தின் பிராந்திய கண்காணிப்பு சாதனம், வேற்றுகிரக ட்ரோன் வகைகள் இங்கே கையாளபட்டதாக நினைக்கிறேன். ஒருவேளை தெரியாத தொழில் நுட்பத்துடன் சில உலகத்திலோ அல்லது நேரத்திலோ அல்லது பரிமாணத்திலோ, மனித இனத்தை உளவு பார்க்க / கடலின் ஆழத்திலிருந்து கூட இதை  அனுப்பியிருக்கலாம், என ஜப்பானிய விண்வெளி பெனோமெனா சொசைட்டியின்  தலைவர், இந்த பறக்கும் பொருள்கள் தற்காலிகமாக மற்றொரு பரிமாணத்தில் இருந்து நமது கிரகத்தில் நடப்பதை உளவு பார்க்க வந்தது என்றும், பின்னர் தங்கள் வழியை இழந்தது என்றும் கூறினார்...