மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.
அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும்.
ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.
தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.
ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.
அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக் கொண்டது.
(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால்பங்கு கூட காடு இல்லை).
பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள் பறிபோனது ஆகும்.
1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.
அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.
மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும் போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.
இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.
இதை நாம் இழந்தோம்.
வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.