21/04/2018

சீமான் பின்புலம் என்ன.?


இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை...


வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு குவளை தண்ணீர் விட்டு, ஒரு குவளை அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை குவளை வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப் போக்கவும் பயன்படுகிறது...

தமிழகத்தை இராணுவ மயமாக்க பாஜக மோடி அரசு மிக வேகமாக வேலை செய்து வருகிறது...


தமிழ் மொழியிடம் களவாடி ஆங்கிலம்...


படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி..

Mango - மாங்காய்
Cash - காசு
One - ஒன்று
Eight - எட்டு
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit
representation in Tamil)
Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்).
Vomit - ஒமட்டு (குமட்டுதல்).

பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்...

Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை -
வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்
A"ttack" - தாக்கு
M"ake" - "ஆக்க"ம்
Round - உ"ருண்டை"
Lemon - "இளம"ஞ்சள்காய்
(எலுமிச்சை)
Roll - உ"ருள்"
Orate - "உரை"யாற்று
"Know"ledge - "ஞான"ம்
Ginger - இ"ஞ்சி"
Molecule - மூலக்கூறு
Kill - கொல்
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண்
கயிறு என்று சொல்லுவதை நினைவில்
கொள்க)
Culprit - கள்ளன்(குற்றவாளி)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Surround - சுற்றம்
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்/புட்டி
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Betrothal - பெற்றோர் ஒத்தல்
(திருமணத்திற்கு பெற்றோர்
சம்மதித்தல்)
Grain - குருணை
Button - பொத்தான்
.
இதை விட பல சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தின் 60%சொற்களின் மூலம் நம் தமிழ்மொழியே...

இதற்கு உறுதுணையாக இருந்த அத்துனை நபர்களுக்கும் வாழ்த்துக்கள்...


பத்து வருசமா இதே தொழில் தான் பாக்குதாம் மூதேவி...


சித்தர் ஆவது எப்படி ? - 8...


அக குருவின் பெருமை...

ஒரு குருவின் துணையின்றி நமது சித்தத்தை ஒரு போதும் சீர் செய்ய முடியாது... அகத்திலிருந்து செயல் படும் சித்தத்தின் வேகத்தை அதே அகத்திலே வாழும் கனலை தாங்கிய புத்தி என்ற பூதம் மட்டுமே எதிர்கொண்டு, சமாளிக்கவும், கையாளவும், முடியும்...

வேறு எந்த காரிய குருக்களான புற குருக்களால் சரிவர அந்த பணியினை செய்ய முடியாது.. புற குருக்கள் ஆசையென்ற வார்த்தைகளை அள்ளி வீசி மேலும் மேலும் சித்தத்தை வலு படுத்தி, அதன் ஆதிக்கத்தை அதிகப் படுத்தவே செய்வார்களே தவிர, சித்தத்தை சீர் செய்யவும், தெளிய வைக்க வகையறியாது தவிப்பார்கள்..

இதயத்தில் அன்பு இருந்தாலும் அவர்களுக்குள் அறியாமை ஒன்று உள்ளதே.. என்ன செய்வது ?

சித்தம் தெளிய மருந்து அக குருவாகிய பலப்பட்ட குருவிடம் மட்டுமே உள்ளது...

மந்திரங்கள், உபதேசங்கள், சாஸ்திரங்கள், வேத ஆகம நூல்கள், எல்லாம் ஏறக்குறைய நன்மை செய்வது போல், மாயை காட்டி முடிவில் பக்க விளைவாக சித்தத்தை பலப் படுத்தி குரு பீடத்தை அணுகாமலேயே, கால விரையத்தை ஏற்படுத்துகின்றன...

உதாரணங்களுக்கு உலக விவகாரங்களை காட்டி காட்டி, மேலும் மேலும் வெளிச்சத்தையே காட்ட முயன்று, முடிவில் கனல் குறைந்து, ஆற்றல் குறைந்து, மரணத்தை நோக்கியே பயணப் பட வைக்கின்றன...

அகக்குரு பலப்பட, அமைதியும், சாந்தமும் மௌனமான சூழ்நிலைதான் தேவையே தவிர, சித்தம் கொதிக்க வைக்கும் இலக்கிய சிந்தனைகள், பாரத போர் சூர சம்காரம் போன்ற உணர்ச்சி கொப்பளிக்கும் காட்சி பாவனைகள், உச்ச கட்ட உணர்ச்சியை தட்டி எழுப்ப கூடிய மத போதனைகள், மத கருத்துக்கள் எல்லாம் புத்தியில் நிறைந்து இருக்க வேண்டிய சூனிய தன்மையான இருப்பு தன்மையை, கட்டாயம் நாசம் செய்து அதில் கனல் பெருக்கம் துளியும் ஏற்படாமல் பெரும் தீமையே செய்யும்...

குரு பீடத்திற்கு பீடை அதாவது நோய் தான் கவ்வும்.. இதனால் தான் சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆகியவற்றின் ஆசார சங்கல்ப விகற்பங்கள் எம்மை பற்றாதவண்ணம் காத்து அருள் புரிதல் வேண்டும் என அருள் பெருஞ்சோதியை எங்கேயும் எப்போதும் முதலிலேயே வேண்டி கொள்கின்றார் வள்ளலார்... முழுமையாகவே வெளிச்சத்தை கக்கும் தன்மை உடைய சித்தத்தை பலப் படுத்தும் மத சமூக போதனைகள் தரும் தீங்கை புத்தி பலம் உள்ளவர்கள் மட்டுமே உணர முடியும்...

கனல் என்றால் பேரண்ட ஆற்றலின் வரவு.. அந்த வரவின் சமயம் அது உணர்வாக தோன்றும்... எண்ணம் என்பது ஆற்றலின் செலவு.. அது வெளிச்சமாக பொறி புலன்கள் மூலம் வெளியேறும்.... உணர்வும் எண்ணமும் வட துருவம் தென் துருவம் போல.. இரவும் பகலும் போல... ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது.. இதை ஒரு நாளும் மறக்கக் கூடாது... இந்த விதியை பயன் படுத்தி தான் கனல் பெருக்கும் வழியினை இனி விரிவாக காணப்போகிறோம்...

பேரண்ட சக்தி நாம் பெறுகின்ற போது, நமது பஞ்ச பூதங்கள் பெறுகின்ற உருமாற்ற பட்ட சக்தியை அந்த அந்த பூதங்களுக்கு ஏற்றவாறு அழைக்கிறோம்.. நம்மில் அறிவு அனுபவ சக்தியாகவும், புத்தி கனல் சக்தியாகவும் மனம் வெளிச்ச சக்தியாகவும், சித்தம் உந்தல் சக்தியாகவும், தேகம் பொருள் இயக்க சக்தியாகவும் அழைக்கப் படுகிறது... புத்தி அறிவோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது.. மனம் சித்தத்தோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது... அதனால் தான் பொறிபுலன் வழியாக சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தின் உந்தல் சக்தியால் மனம் வெளிச்சமாக எதையாவது செய்ய முனையும்....

கனல் என்பது புத்தியின் சக்தி.. அது அனுபவ அறிவோடு இணைந்து, தகுந்த முடிவு எடுக்க வல்லது... இந்த கனல் சக்தி பெருக்கத்தில் தான் புத்தி தகுந்த முடிவு எடுக்கும்.. இதனையே உள் குருவாக கொள்ள வேண்டும்..

இந்த புத்தியாகிய உள் குருவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படியெல்லாம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் தான் பெற்ற கனல் சக்தியின் அளவினை பொறுத்து தகுந்த, உறுதியான, சரியான முடிவு எடுக்கும்...

ஆகவே நாம் வெளி குருவை போற்றுவதை காட்டிலும் பல மடங்கு உள் குருவாகிய புத்தியை போற்றி அதை பெருக்கும் வழியினை எந்த வகையிலாவது உயர்த்திக் கொள்ள வேண்டும்.. வெளி குருவை போற்றுவதில் தவறு எதுவும் இல்லை..

ஆனால் உள் குருவின் துணையின்றி கடுகளவும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண முடியாது.. உள் குருவின், அக குருவின் பலத்தை பெற்று விட்டால் ஆன்மீகத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சரியான அடியாகவே இருக்கும்.. வெளி குருக்களின் அறியாமை விளைவாக, நம்மை எப்படி எல்லாம் பின் தங்க வைக்கிறார்கள் என்பது நன்கு புரியும்.. அக குருவின் பலத்தை பெற்ற பின் இதுவரை வெளி குருகளிடம் கற்றதை மறக்கும் பணியை செய்யவேண்டி உள்ளதால், இன்னும் நமக்கு கால விரையம் ஏற்படும்.. அந்த நிலையில் தான் கற்ற தெல்லாம் வீணே என்ற வள்ளலார் கூற்று நினைவுக்கு வரும்..

நன்றாக ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.. நமக்குள் இருக்கும் குரு நமது அல்ல.. இதில் நாம் என்ற ஆணவ குறிப்பு உள் குருவை தனதாக பாவிக்கின்ற மாயை தோற்றம்..

அக்குரு அண்ட சராசரம் முழுமைக்கும் பேராட்சி நடத்திக் கொண்டு இருக்கும் பேரறிவின் அம்சம் அல்லவா?

நான் நாம் என்ற குறுகிய வட்டத்தில் அரசாட்சி செய்து கொண்டு இருக்கும் ஆணவம் தான் தனது என உரிமை கொண்டாடுவதால், பேரறிவின் கசிவிலிருந்து வரும் கனலை உடைய புத்தியை, தன்னை விட உயர்ந்ததாக கருதாது.. ஆணவம் என்பது மனதின் பொறி புலன்கள் மேல் உள்ள ஆதிக்கமும், பேரண்ட பேராற்றலால் காரிய பட்ட ஒடுங்கிய செத்த நிலையில் உள்ள புற பொருள்களின் மேல் உள்ள ஆதிக்கமே...

உலக பொருள்கள் எல்லாம் பிரபஞ்சத்தால் தோற்றுவிக்கப் பட்டாலும், அவைகள் அத்தனையும் பிரபஞ்ச கழிவுகள்.. கழிவுகளை ஆதிக்கம் செய்வதால் ஏதோ பிரபஞ்சத்தையே ஆதிக்கம் செய்ய கூடிய அறியாமை தான், மனத்தினுடைய ஆணவம் என்பது.... நம்முள் உள்ள புத்தி ஆணவத்திற்கு சொந்தம் அல்ல.. அது பேரண்ட புனிதத்தின் செயல் பாடு..

இப்படியாக ஆணவத்திற்கு சொந்தமாக பாராட்டாமல் அதனை பேரறிவின் உடமையாக கொண்டதால் தான், தன்னுள் குடிகொண்ட புனித புத்தியின் மூலம், சித்தர்கள் அளப்பறிய ஆற்றல் உடைய சித்தர்கள் ஆக முடிந்தது..

புத்திமானே பலவான் என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய நாம், நம் அக குருவை போற்றி போற்றி, வணங்கி வணங்கி, கனல் பெருக்கும் மார்க்கத்தில், நம்மிடம் உள்ள குரு பீடத்தை திடமாக்குவோம் வலுவாக்குவோம், சித்தராவோம்...

ஜூன், ஜூலை மாதங்களில் சேமித்த விதைகளை விதைப்போம்...


குமிழி - தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?


மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை? அவர்களின் மதகுகளில் மதிமயங்கி, ஏரி குளங்களில் இருந்து குமிழிகளை ஒழித்துவிட்டோமா?

ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழை, வாய்க்கால், ஓடைகளின் வழியே நீர்வரும்போது நீரோடு, களிம்பும், வண்டலும் சேர்ந்தே வரும்.

நீர்நிலைகள் தூர்ந்து போவதற்கு இது முக்கியமான காரணம். இதற்கு தீர்வு என்ன? தமிழரிடம் தீர்வு தெளிவாகவே இருந்தன.

மதகுகள் நீரை வெளியேற்றும் வேலையைச்செய்யும். குமிழிகள், நீரை வெளியேற்றுவதோடு, ஏரி, குளம், கண்மாய்களுக்குள் வாய்க்கால்களில் வந்துவிழும் வண்டல்களையும் அகற்றிவிடும்.

இந்தக்குமிழிப்பொறியியலை புரிந்துகொள்ளவேண்டுமானால், பண்டிதர் மணி.மாறனின் "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" என்ற ஆய்வுக்கட்டுரையை படிக்கவேண்டும்.

பாசனக்கால்வாய்களுக்கு தண்ணீரைத்திறந்துவிடும் பண்டைய தமிழ்ப்பொறி "குமிழி" ஆகும். குமிழிகள் ஏரிக்கரையில் மதகுகளைப்போல அமைக்கப்படுவதில்லை. ஏரிக்கரையிலிருந்து 200-300 அடிகள் தள்ளி
ஏரிக்குள்ளே அமைக்கப்படுவது குமிழி. இன்னும் உள்ளே இருந்தாலும் வியப்பில்லை. ஏரியின் அமைப்பைப்பொறுத்தது இந்த இடைவெளி. ஒவ்வொரு பாசனக்கால்வாய்க்கும் ஒரு குமிழி இருக்கும். கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப்பொறுத்து குமிழிகளின் எண்ணிக்கை கூடவும் இருக்கும். ( 1:1 அல்லது M:1)

ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கற்தளம் அமைத்து, அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டியை வடிவமைப்பார்கள். தொட்டியின் மேற்பாகத்தில் நீர் போவதற்கான பெரிய "நீரோடித்துளை" இருக்கும். தொட்டிக்கடியில் அதே அளவில் துளைபோட்டு, அதனை சுரங்கக்கால்வாயால், ஏரிக்கு வெளியில் இருக்கும் பாசனக்கால்வாயோடு இணைத்துவிடுவர்.

தொட்டிக்குள் நீர்போவதற்கான துளையை மூடவும், தேவையான அளவு திறக்கவும் பயன்படும்

தூம்புக்கல்லை ( conical stone valve) மேலும் கீழும் இயக்குமாறு கற்சட்டகம் உண்டு. இதுவரை, குமிழி செய்வதெல்லாம் மேலைநாட்டு மதகைப்போலத்தான்.
படத்தில், அந்தக்கற்தொட்டியின் பக்கவாட்டிலே மூன்று துளைகள் இருக்கின்றன பாருங்கள், அதுதான் நமது சிறப்பு. அந்தச்சிறுதுளைகளுக்கு "சேறோடித்துளை" என்று பெயர்.

பாசனக்கால்வாய்க்கு நீர் திறக்கும்போது என்னவாகும்? தொட்டியின் மேலேயுள்ள நீரோடித்துளையை அடைத்துக்கொண்டிருக்கும் தூம்புக்கல்லை தூக்குவார்கள். நிறைய வேண்டுமெனில் முழுதாகவும்,
குறைவாக நீர் அனுப்பும்போது சிறிய அளவிலும் தூம்பை தூக்குவார்கள் அல்லவா? ஏரிக்கடியில் இருக்கின்ற இந்த அமைப்பில், ஏரியின் நீர்மட்டத்திற்கேற்ற அழுத்தத்தில் நீரோடித்துளைவழியே நீ சுழித்துக்கொண்டு ஓடுமல்லவா? ஏரிக்கடியில் சிறுதுளை என்றால் சுழலின் வேகத்தை கேட்கவா வேண்டும்? சுரங்கக்கால்வாய் வழியே ஏரிக்குவெளியே உள்ள பாசனக்கால்வாயை நீர் சென்று சேர்ந்துவிடும்.

நீரோடித்துளை வழியே நீர் சுழித்தோடும் வேகத்தில், பக்கவாட்டில் உள்ள சேறோடித்துளைவழியே, ஏரியின் அடிமட்டத்தில் இருக்கும் கலங்கியசேறு இழுபடும். இந்தச்சேறும் நீரோடு சேர்ந்து பாசனக்கால்வாய்க்குச்சென்றுவிடும்.

இந்தச்சேறு அடியிலேயே தங்கித்தங்கி வலுவடைவதாற்றான் ஏரி தூர்ந்துபோகிறது. நீரைவிட சேறு அடர்த்தியில் அதிகமென்பதால் அடியில் தங்குவது நாம் நன்கறிந்ததே. அதை அவ்வப்போது இழுத்து, தன்னியக்கமாக, இயல்பாக, நிகழ்நேரத்தில் வெளியேற்றுவதுதான் தமிழர்களின் குமிழிப்பொறியியல். (it is a real-time disilting system). எப்போது ஏரியிலே நீர் வற்றும் என்று ஆண்டுக்கணக்கில் காத்திராமல், அவ்வப்போது, தூரை வெளியேற்றிவிட்டதால் நீரும் வளமும் மிகுந்திருந்தன

பண்டைய தமிழகத்தில்.
இந்த வண்டல், சேறு என்பன, வயலுக்கு உரமாகவும் பயன்பட்டன. குமிழிகள் மதகாகவும், சேறோட்டும் பொறியாகவும் பயன்பட்டன. ஆனால், மேலைநாட்டுமதகுகளில் மதிமயங்கிப்போனதால் குமிழிகளை ஒழித்துக்கட்டி புதுமை என்ற பெயரில் ஏரிகளிலும் மதகுகளை வைத்துக்கொண்டோம்.

விளைவு, ஏரி, குளம், கண்மாய், ஊரணி, குட்டை, ஏந்தல் போன்ற எல்லா நீர்நிலைகளும் தூரேறிப்போயின.
தூர்வாருதல் என்பதனை வருடாவருடம் செய்துகொண்டே இருக்கமுடியாது. அப்படியே செய்தாலும், ஒரு சிறு அளவிற்கு, வயலுக்கு வரப்பு வெட்டுவோமே (அல்லது சீர்படுத்தல்) அந்தளவில் பேணப்படுவதுவதாகவே இருக்கமுடியும்.

இன்றைக்குப்பெய்திருக்கும் மழையும், ஏரி, குளங்களை நீரால் மட்டும் நிரப்பவில்லை; சேறாலும்தான்?
இந்தச்சேற்றை எப்போது வெளியேற்றுவோம்? ஏரிகளிலும், குளங்களிலும் இருக்கும் மதகுகளை ஒழித்துவிட்டு, தமிழ்க்குமிழிகளை கட்டமைக்கவேண்டும்.

நீர்நிலைகளின், வெளிப்புறத்தை வீடுகளாலும், நிறுவனங்களாலும் கைப்பற்றினோம். நீர்நிலைகளின் அடிமட்டத்தில் இருந்த குமிழிகளை தொலைத்துக்கட்டினோம். கழிவுகளை நீர்நிலைகளில் செலுத்தினோம். நாகரிகத்தையும் இழந்தோம். தொன்ம அறிவையும் இழந்தோம். தொன்மத்தையாவது மீட்போம். இருக்கும் ஏரிகளைக்காப்போம். நமது பழமை  அறிவியலை மீட்போம்.

கட்டுரை: நாக.இளங்கோவன். மூலமும், படமும்: "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" - ஆய்வுக்கட்டுரை, தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன், சரசுவதிமகால் (வெளியீடும்)...

இங்கு இருக்கும் ஒரே பிரச்சனை கச்சா எண்ணெய் யார்..? கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தான்...


தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?


1957ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த முதல் காரியம்,மலையாள மொழியைச் செம்மைப் படுத்துவதாக்கூறி 45 சமஸ்க்ருத அறிஞர்களை 12 ஆண்டு காலத்திற்குப் பணிக்கு அமர்த்தினார்.

அவர்களது பணி என்பது அப்போது மலையாள மொழியில் இருந்த தமிழ் சொற்களை அகற்றி விட்டு அதற்குப் பொருத்தமான சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்து மலயாள மொழியை வளப்படுத்தவேண்டும் என்பது தான்.

தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?

கம்யூனிஸ்ட்டுகளுக்கு மொழி, இன, மத  சாதிய உணர்வு கிடையாது, இருக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு மட்டும் பாடம் எடுப்பது ஏன்?

ஈ.எம்.எஸ் செய்கை மொழி வெறியா?. அல்லது மொழிப் பற்றா?

என்னங்கடா இது வேங்கை மவன் மராட்டிய ரஜினிக்கு வந்த சோதனை...


காலிபிளவர்யில் உள்ள நன்மை...


கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்...

காவிரி நீர்மட்டுமே போதுமா...?


பழைய காட்சிகளை புதுமைப்படுத்தி மறு வெளியீடு செய்வதே ஆட்சி மாற்றங்கள்...


ஏனெனில் நீங்கள் என்னடா இது இரண்டும் ஒன்றுபோல் இருக்கிறது என சலித்துப்போய் இந்த அமைப்பை விட்டு வெளியே வந்து ஒருகணம் கூட நீங்கள் யோசிக்க கூடாது என்பதற்காகவே

ஆட்சிகள் மாற்றப்படுகிறது..

அதுவும் எங்களால் தான் மாற்றம் வந்தது என தற்பெருமையும் கொள்வார்கள் பலர்..

ஆனால் காட்சிகள் என்றைக்கும் ஒன்றே..

இந்த அமைப்பின் அடித்தளத்தை நீங்கள் உடைத்தெறியாமல் ஒருபோதும் உங்களுக்கான அடித்தளத்தை உருவாக்க முடியாது...

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்...



மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.

இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது.

உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர்.

இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க
மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற
வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய்
கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்

இதன் விளக்கம் : இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும். எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு. கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான பிராண வாயு (Oxygen) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும்.

இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விசமாக நேரிடும்...

ரொம்ப அருமையான முயற்சி தோழரே...


வேற்று கிரகவாசிகள் - 2...


கண்களால் பார்த்த பின் நம்புவதற்குப் பெயர் பகுத்தறிவு அல்ல; அதற்கு ஒரு மிருகத்தின் அறிவு கூடப் போதும். கண்ணால் ஒரு விசயத்தைப் பார்க்க முடியாத போது, அதை ஆதாரங்களின் அடிப்படையிலும், சிந்தனையின் அடிப்படையிலும் நம்புவதற்குப் பெயர் தான் பகுத்தறிவு; முறையாக சிந்திக்கும் மூளை இதற்கு அத்தியாவசியம். தற்கால உலகின் நவீன விஞ்ஞானத்துக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன.

1. மையநீரோட்ட விஞ்ஞானம் (Mainstream Science).

2. மாற்றீட்டு விஞ்ஞானம்
(Alternative Science) இந்த இரண்டு முகங்களையும் தனித்தனியாகப் பிரித்து நோக்கினால், ஒவ்வொன்றினுள்ளும் பாதி தான் உண்மையிருக்கும்; மீதியைப் பொய்களே நிரப்பியிருக்கும்.
இரண்டு முகங்களையும் இணைத்து விளங்க யாரால் முடிகிறதோ, அவரால் மட்டுமே உண்மையான விஞ்ஞானம் என்னவென்பதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும்.

மையநீரோட்ட விஞ்ஞானம்:

பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நமக்கு விஞ்ஞானம் என்ற பெயரில் கற்பிக்கப் படுவது மையநீரோட்ட விஞ்ஞானம் மட்டும் தான். விஞ்ஞானத்தின் முழுமையான வடிவம் இது தான் என்று கூறுவதற்கில்லை. “விஞ்ஞானம் என்பது, கல்விக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்படும் இந்த மையநீரோட்ட விஞ்ஞானம் மட்டுமே; இது அல்லாத வேறு எதுவும் விஞ்ஞானமே கிடையாது” என்று யாராவது உறுதியாக அடித்துக் கூறினால், அவர் ஆய்வு செய்யத் தெரியாத கிணற்றுத் தவளை என்று தான் அர்த்தம்.

ஒருசில மனிதர்கள் எழுதிய சில புத்தகங்களைக் கண்மூடித் தனமாக நம்பிக் கொண்டிருப்பவர் என்று தான் இதற்கு அர்த்தம். உண்மை இதை விடப் பல மடங்கு விசாலமானது. மையநீரோட்ட விஞ்ஞானத்தில் சில உண்மைகளும் இருக்கின்றன; சில பொய்களும் இருக்கின்றன. இதில் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் (Experimented Facts), மற்றும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளால் முன்வைக்கப் பட்டிருக்கும், நிரூபிக்கப்படாத தனிப்பட்ட சித்தாந்தங்கள் (Theories) ஆகிய இரண்டும் இரண்டறக் கலந்திருக்கும்.

அதாவது, இதை எளிய நடையில் சொல்வதென்றால், இந்த மையநீரோட்ட விஞ்ஞானத்தின் ஒரு பகுதிக்கு ஆதாரம் உண்டு; மற்றப் பாதிக்கு ஆதாரம் இல்லை; ஏதோ ஒரு தனிமனிதனின் ஊகம் மட்டுமே அதில் உண்டு. அதாவது இதை இன்னும் எளிய நடையில் சொல்வதென்றால், இந்த விஞ்ஞானத்தின் ஒரு பாதி ஆதாரபூர்வமான உண்மை; மறு பாதி, வெறும் கற்பனை மட்டுமே.

மையநீரோட்ட விஞ்ஞானம் என்பது உண்மையில் ஓர் அரசியல் கட்சியைப் போன்றது. நிர்வாக மட்டத்தில் இருக்கும் ஒருசில சர்வதேசத் தலைவர்கள் மூலம் மட்டுமே இதன் விதிமுறைகள் அனைத்தும் இயற்றப்பட்டிருக்கின்றன. இவர்களின் விருப்புவெறுப்புகளுக்கு அமையவே உலகில் ஒவ்வொரு மூலையிலும் இன்று விஞ்ஞானம் கற்பிக்கப் படுகிறது. எதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்; எதை மறைக்க வேண்டும்; விஞ்ஞானத்தில் எதைப் பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும்; எதை இருட்டடிப்புச் செய்ய வேண்டும்... என்பன போன்ற அனைத்தும் இந்தத் தலைவர்களால் மட்டுமே தீர்மாணிக்கப் படுகின்றன என்பது தான் உலகில் அனேகமானோர் அறியாத உண்மை.

மையநீரோட்டவியல் சித்தாந்தம் (Mainstreamism):

மையநீரோட்ட விஞ்ஞானம் மட்டுமல்ல; மையநீரோட்ட வரலாறு, மையநீரோட்டக் கல்வித்திட்டம், மையநீரோட்ட மருத்துவம், மையநீரோட்ட மீடியா... என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதாவது இன்றைய உலகில் இருக்கும் எந்தத் துறையை எடுத்தாலும், அந்தத் துறையை நிர்வகிக்கக் கூடிய பிரதான அமைப்புகளாக இருக்கும் அமைப்புகளால், எதுவெல்லாம் அங்கீகரிக்கப்படுமோ, அவை மட்டுமே

மையநீரோட்டம் என்பது தான் இன்றைய உலகின் நிலை. இவை அனைத்தையும் தமது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு, தமது விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய ஒரு ரகசியக் கும்பல், இந்த உலகைப் பல நூற்றாண்டுகளாக நிர்வகித்து வருகிறது. இவர்கள் வைத்தது தான் இன்று உலகில் சட்டம். இவர்கள் நினைக்கும் போது உலகில் யுத்தங்கள் மூளும்; இவர்கள் நினைக்கும் நாடுகளில் மட்டும் அமைதி நிலவும். இவர்கள் கட்டளைப்படி மட்டுமே மீடியாக்களில் செய்திகள் கூட ஒளிபரப்பாகும். இவர்கள் எதைக் கற்பிக்கச் சொல்கிறார்களோ, அவை மட்டுமே பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடநெறிகளாகக் கற்பிக்கப்படும். உள்ளூர் வங்கியிலிருந்து உலக வங்கி வரை உலகிலிருக்கும் அத்தனை வங்கிகளுக்கும் இவர்கள் தான் திரைமறைவில் உண்மையான சொந்தக் காரர்களாக இருப்பார்கள்.

இவற்றின் மூலம், உலகின் மொத்தப் பொருளாதாரத்தையுமே தமது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறார்கள். உலகில் வாழும் ஒவ்வொரு குடிமகனது இரத்தத்திலும் என்னென்ன பதார்த்தங்கள் கலக்க வேண்டும்; அவற்றின் மூலம், உலக மக்கள் அனைவரும் எப்படியெல்லாம் இவர்கள் தயவிலேயே என்றென்றும் தங்கி வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்களோ, அவ்வாறான பதார்த்தங்களே மருந்து மாத்திரைகள், தடுப்பூசிகள் என்ற பெயரில் உலக சுகாதார திணைக்களம் போன்ற அமைப்புகளின் ஊடாக உலகின் ஒவ்வொரு குடிமகனின் இரத்தத்தினுள்ளும் வந்து சேரும்.

சுருங்கக் கூறினால், உலக அரங்கின் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, உலகையே கட்டியாண்டு கொண்டிருப்பது இந்த இரகசியக் கும்பல் தான். ஆனால் இவர்கள் யாருமே தலைமைப் பதவிகளில் இருக்க மாட்டார்கள்; அனேகமானோருக்கு இவர்கள் யாரென்று கூடத் தெரியாது. உலகின் எல்லாத் துறைகளிலும் அதிகார மட்டத்தில் (பெரிய பெரிய நாடுகளின் ஜனாதிபதிகள் உட்பட) இவர்களது அடியாட்களே இவர்கள் சார்பாக அட்சி செய்து கொண்டிருப்பார்கள். அவ்வாறான ஆட்சித் தலைவர்களைத் தமது இஷ்டத்துக்கு ஏற்றவாறு குடுமியைப் பிடுத்து ஆட்டுவிப்பதன் மூலமே இவர்களது ரகசிய சாம்ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் யார் என்பதை அலசுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல; சுருக்கமாக இப்போதைக்குக் கூறுவதென்றால், “இலுமினாட்டி” (Illuminati) என்று அழைக்கப்படுவோர் இவர்கள் தாம். பதின்மூன்று யூத கோத்திரங்களைச் சார்ந்த அங்கத்தவர்கள் தாம் இவர்கள். அஸ்தர், Bபண்டி, கொலின்ஸ், டுபோண்ட், ஃப்ரீமன், கென்னடி, லீ, ஒனாஸிஸ், ரெனோல்ட்ஸ், ரொக்கஃபெல்லர், ரொத்ஷைல்ட், ரஸல், வான்டுய்ன் ஆகிய 13 பழமை வாய்ந்த கோத்திரங்களும் தான் இவை. இந்தப் பதிமூன்று கோத்திரங்களிலும் இருந்து முளைத்த இன்னும் ஒருசில உப கோத்திரங்களும் இருக்கின்றன.

உதாரணத்துக்கு மெரோவேங்கியன், டிஸ்னி, மெக்டானல்ட் போன்ற குடும்பங்களைக் குறிப்பிடலாம். இதில் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், இந்தக் கோத்திரங்கள் அனைத்துமே யூதக் கோத்திரங்கள். ஆனாலும், இவர்கள் யூத பைபிளைப் பின்பற்றுவதில்லை; மாறாக “லூசிஃபேரியனிசம்”
(Luciferianism) எனும் ஷைத்தானிய மதத்தைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள். இவர்களது கடவுள் வேறு யாருமல்ல; இப்லீஸ் தான். இவர்களுக்கும், இப்லீஸின் பட்டாளத்தைச் சேர்ந்த ஜின்களுக்கும் இடையில் ஏராளமான இரகசியத் தொடர்புகள், மற்றும் ஒப்பந்தங்கள் இருக்கின்றன. அந்த ஒப்பந்தகளின் அடிப்படையில் தான் இவர்கள் இன்றைய உலகை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அதாவது, இதை இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், இப்லீஸின் பாரிய திட்டங்களை உலகில் செயல்படுத்தும், இப்லீஸின் மனிதப் பிரதிநிதிகள் தான் இவர்கள். மனித ஷைத்தான்கள் என்பது இவர்கள் தாம். கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. இதை விரிவாகத் தகுந்த ஆதாரங்களோடு இந்தத் தொடரில் அலச இருக்கிறோம். இவர்களின் இப்போதைய இலக்கு ஒன்றேயொன்று தான்: தஜ்ஜால் வரும் போது, அவனது கையில் இந்த உலகின் மொத்த நிர்வாகத்தையும் ஒப்படைக்க வேண்டும். மிக சீக்கிரத்தில் தஜ்ஜால் வெளிவரவிருப்பதை இவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
தஜ்ஜால் வந்தவுடன், அவனது கையில் மொத்த உலகத்தினதும் ஆட்சியை ஒப்படைக்கும் விதத்தில், இன்றைய உலகம் மொத்தத்தையும் அதற்கேற்றாற்போல் ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் பணியில் தான் இப்போது இவர்கள் மும்மரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய அறிமுகம் இவ்வளவும் போதும். மீண்டும் விசயத்துக்கு வருவோம்.

உலகிலிருக்கும் மையநீரோட்ட சித்தாந்தங்கள் அனைத்தையும் இவர்கள் தான் திட்டம் வகுத்து, உருவாக்கி, நிர்வகித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் இன்று விஞ்ஞானம் என்ற பெயரில் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படும் மையநீரோட்ட விஞ்ஞானம் கூட இவர்கள் வகுத்த பாடநெறி தான். பாதி உண்மையான விஞ்ஞானத்தோடு மீதி பொய்யான சித்தாந்தகளையும் கலந்து தான் கல்விக்கூட விஞ்ஞானத்தின் பாடநெறிகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதன் நோக்கம், சுயமாக சிந்திக்க முடியாத, மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சமூகத்தை உலக அரங்கில் உருவாக்குவது மட்டுமே.

இது தான் மையநீரோட்ட விஞ்ஞானத்தின் நிலை. இனி அறிவியலின் அடுத்த முகத்துக்கு வருவோம். மாற்றீட்டியல் சித்தாந்தம் (Alternativism): ஷைத்தானின் திட்டங்களை உலகில் அமுல்படுத்திக் கொண்டிருக்கும் இலுமினாட்டி கோத்திரங்களின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் அனைத்துத் துறைகளிலும், அவர்களுக்கு சவாலாகவும், அவ்வப்போது உண்மைகளை அம்பலப் படுத்துபவர்களாக வும் ஒருசில சிந்தனையாளர்கள் வரலாற்றில் முளைப்பதுண்டு. இவ்வாறான சிந்தனையாளர்களின் பார்வையில் அறிவியல், விஞ்ஞானம், வரலாறு போன்ற அனைத்தும் சற்று மாறுபட்டதாக இருக்கும்.

மையநீரோட்டக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் இவ்வாறான சிந்தனையாளர்கள் வாயிலாக உலக அரங்கில் முன்வைக்கப்படுவதுண்டு. இதற்குக் காரணம் இவ்வாறானவர்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும், இன்னொருவரது சிந்தனை ஆதிக்கம் இல்லாமலும் ஆய்வு செய்வது தான். இவ்வாறான ஆய்வுகள் மூலம் வெளிப்படும் கருத்துக்கள் தான் மாற்றீட்டியல் சித்தாங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு
மாற்றீட்டு விஞ்ஞானம்
(Alternative Science),
மாற்றீட்டு மருத்துவம்
(Alternative Medicine) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறான மாற்றீட்டு அறிவியல் கூட நூற்றுக்கு நூறு உண்மையென்று சொல்லி விட முடியாது. அதிலும் பல தவறான சித்தாந்தங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

இந்த இடத்தில் தான் நமது பகுத்தறிவை நாம் சரியாக உபயோக்கிக்க வேண்டும். நமக்கு வழங்கிய சொந்த மூளையைக் கொண்டு சுயமாக சிந்தித்து நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இரண்டு தரப்புக் கருத்துக்களையும் முடிந்தவரை ஒப்பிட்டு அலசி, நமது சிந்தனைக்கு ஏற்ப, எது உண்மை என்பதை நாம் தான் தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். இது தான் சிந்திக்கும் மக்கள் செய்யும் காரியம். இதைத் தான் இந்தத் தொடர் மூலம் நான் செய்ய முயற்சித்திருக்கிறோம்....

இது ஒரு மதத்திற்குள் இருக்கும் இருபிரிவுகளின் பிரச்சனை இல்லை...


உலகில் இருக்கும் இரு வல்லாதிக்கத்தின் யார்..? பெரியவன் என நடக்கும் அதிகார சண்டை...

இலுமினாட்டி களின் சக்திவாய்ந்த ஆறு துறைகள்...


இலுமினாட்டிகள் கைப்பற்றியுள்ள முக்கிய ஆறு துறைகளையும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளையும் பற்றி பார்ப்போம்...

வங்கி துறை...

International money center banks
central banks
International money funds
International bank of settlement
Multinational corporation & Foundation
Regional Federation
International Labour Union
etc.

இரகசிய குழுக்கள் (SECRET SOCIETIES GROUPS)...

Free masonry
Skull and bones
Grant Oriental lodge
Knight Templars
Royal Order of Berarpal
Ferrari De Zion
Isorius
etc.

அரசியல் குழுக்கள் (POLITICAL GROUPS)...

International Gourmet Leaders
United Nation
Trilateral Commission
CFR - Council of foreign Relationship
Club Of Rome
Aspens Institute
Phokiman Group
etc.

உளவுத்துறை (INTELLIGENCE GROUP)...

CIA
KGB
FBI
British Intelligence
Mafia Organized Crimes
Interpol
community party
Etc.

சமயம் (RELIGION)...

World Council Of Church
National Council Of Churches
World Parliament Of Religions
Vatican
Smom
New Age Groups
Liberal Protestant Unity Church
Unilateral Universal Church
Temple Of Understanding
etc.

கல்வி துறை (EDUCATION)...

UNESCO
World Peace Group
Plannitary Congress
World Federalists Association
World Constitution and Parliament Association
Environmental Groups
Lucy Trust
World Good Will
World Union
SNL Institute
Media Establishment
etc.

மற்றவை (OTHERS)...

ACI
Council Of Nine
Johnson Groups
Mothers Of Darkness
Federal Reserve Bank, USA
Johnson Security
Cosmo Club
CFR
OTO
Processed Church
Temple Of Power
All Security Forces
Central Education Board
Illuminocorp
IMF
Bank Of London
Newark  Stock Exchange
Federal Emergency Management Agency
World Cort
WHO
African Union
United Nation
etc.

இந்தியாவில் இவர்களது நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...

வல்லுறவு, கள்ளவுறவு வரிசையில் தீ வைப்பும் பாஜக வினருக்கு அரசியல் ஆயுதமே...


இந்த உவனை சாதாரணமாகவும், ஏளனமாகவும் கடந்து செல்பவர்களுக்கு...


இந்த முகமூடிக்குள் பல ஆண்டுகால அடிமைத்தனத்தின் ரணமும், எதிர்கால தலைமுறையினர் அடிமையல்லா வாழ்க்கையின் கனவுகளும் இருக்கின்றன..

நானும் இந்த அடிமைத்தனத்தில் ஒருவனே..

அதிலுருந்து நான் மீண்டு வர முயற்சிக்கிறேன்,

நீங்களும் மீண்டுவர முயற்சிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் பயணிக்கிறேன்..

ஏனெனில் தனிமனித மாற்றமே சிறந்த தொடக்கம்...

தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர் - பாஜக பொன் ராதாகிருஷ்ணன்...


தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக....


திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.

சமாச்சாரம் இது...இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... ஆனால் இன்று பல வீடுகளில் சீரியல் சத்தம் மட்டுமே கேட்கின்றது.. இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...

கண்ணாடியில் தெரிவது நீதான்...


விழிப்புணர்வை பேசத்துவங்குங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் உலக அரசியலின் விளைவை சொல்லுங்கள்...


முதலில் அதிர்ச்சியடைவர் பின் அவர்களை அழிப்பது எப்படி என கேட்பார்கள்...

இயற்கையை நோக்கி செல்வதும், வணிகத்தை தவிர்ப்பது மட்டுமே தீர்வு...

நியூட்ரீனோ திட்டத்திற்காக பாஜக மற்றும் அதிமுக வின் சதிகள் ஆரம்பம்.. விழித்துக்கொள் தமிழா...


வானவியலில் தமிழரின் பெருமை...


பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை(?) நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1(க)-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல். கண்டு பிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படுகிறது….?