06/05/2021

அப்புறம் கடவுளே சாப்டியா? 😡


 உனக்கு என்ன பா?

ஊரடங்கு போட்டு நட சாத்தி வைத்திருந்தாலும் உள்ளுகுள்ள மூன்று நேரமும் அபிஷேக ஆராதனையோட  நெய் வேத்தியம்  செய்வா.

புயல் மழை பூகம்பம் சுனாமி இப்படி ஏதாவது ஒன்ன  கொண்டு வந்து விட்டு  மக்களை கொத்துக்கொத்தா கொல்லுவ...

இப்ப என்ன புதுசா கொரனாவ  கொண்டு வந்து விட்டுட்டு காடாறு மாதம் நாடாறு மாதம் என்று எங்க  உசுர  வாங்குற. நாங்க எல்லாம் சோறு தண்ணி திங்க வேணாமா?

போதாக்குறைக்கு கேன பையன் ஊருக்குள்ள கிறுக்கு பய நாட்டாமைனு  போஸ்ட் போடுற 😡

கிறுக்குப்பயலுக்கு  ஓட்டு போட்ட கேன பயலுக எல்லாத்தையும் கொரனாவுல  கூட்டிகிட்டு போயிடு🙏

எங்கள நிம்மதியா வாழ விடு நாங்க சம்பாதித்துத் தின்னுக்கிறோம்.

ஒழுங்கா வந்து பதில் சொல்லு இதுக்கு ஏதாவது கெக்க பெக்க னு  சிரிச்ச வாயிலேயே குத்துவோம்...

கீரைகளின் மருத்துவ குணங்கள்...

 


வெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்று புண். பேதியை கட்டுப்படுத்தும். அதிக இரும்பு சத்து கொண்டது.

அரைக்கீரை: உடலில் உள்ள விஷங்களை முறிக்க கூடியது. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். குடல் புண் வராமல் தடுக்கும்.

பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி உடையது. தாய் பால் பெருகும்.

முருங்கைக்கீரை : உடலுக்கு சக்தி, வலிமையை அளிக்கக்கூடியது. இரும்பு சத்து அதிகம். ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம் செய்யும். மாத விலக்கு வரும் போது ஏற்படும் வலியை குறைக்கும்.

சிறுகீரை: மலச்சிக்கலை குறைக்கும். உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும். உடல் தளர்ச்சியை போக்கும்.

மணத்தக்காளி கீரை: வயிற்று புண், குடல் புண்ணை குணப்படுத்தும்.

அகத்திக்கீரை: உடல் வெப்பத்தை குறைக்கும். குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம் தலை சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகளை போக்கும்...

டெலிபதி எனும் சித்தர் கலை...

 


இன்று என் பழைய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது... 

அப்போது அவர்களில் ஒருவரின் நண்பர் என்னுடன் சில காலம் ஆன்மீக பாதையில் பயணித்தார்...

அன்றைய காலகட்டத்தில் ( 2012 )அந்த நண்பருடன் சேர்த்து மேலும் 7 பேர் (7 + 1)  என்னுடன் பயணித்தனர்...

இதில் நான் ஒருவன் மட்டுமே பல ஆன்மீக கலைகளை பல குரு விடம் கற்று கொண்டு,  ஆராய்ச்சி, பயிற்சி, மற்றும் சோதனைகளை செய்து வெற்றியும் கண்டுள்ளேன்...

ஆகையால் அவர்கள் என்னிடம் டெலிபதி  கற்று கொடுக்கும் படி கேட்டுக் கொண்டதால்.. நானும் எத்தனை நாட்கள் தான் மாணவனாக இருப்பது என்று நினைத்து குரு வாக மாறி விட்டேன் 😁

(குறிப்பு : நான் பல குரு விடம் பல விதமான ஆன்மீக பயிற்சி கற்றுள்ளேன்ர.. ஆனால் யாரிடம் தீட்சை மற்றும் வாங்கியதில்லை.. நான் ஏன் தீட்சை வாங்கவில்லை என்பது இரகசியம்)

பிறகு அந்த 8 பேருக்கு சொல்லி கொடுத்து பயிற்சி கொடுத்தேன்... அதில் 2 பேர் மட்டுமே நம்பிக்கையோடு விடா முயற்சியில் பயிற்சி செய்து வெற்றியும் கண்டனர்... 

தற்போது அந்த நபரின் நண்பரை தான் சந்தித்தேன்... உன் நண்பன் எப்படியுள்ளான் என்று விசாரித்தேன்... அதற்கு அவர் சொன்ன பதில்...

பயிற்சியும் செய்யாமல் விட்டுவிட்டு.. இனி என்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்று அவன் கற்ற கலையை தவறாக உபயோகித்ததாலும்... 

தற்போது அவன் அரை மெண்டலாகவே மாறி விட்டானாம்... 

இதற்கு தான் ஞாணிகள் எப்போதும் ஒன்றை சொல்வார்கள்...

நீ கற்ற கலையை வைத்து ஆணவத்தில் ஆடாதே... தவறாக உன் சுயநலத்திற்காக பயன்படுத்தாதே... மீறினால் அதுவே உனக்கு வினையாகும் என்று...

( வெற்றியடைய 90 நாள் முதல் 180 நாள் வரை ஆகும்) பிறகு அதை தினமும் பயிற்சி செய்து கொண்டே வந்தால் இன்னும் பல விடயம் உணர முடியும்...

காந்த சத்தியை நம் உடலில் அதிக படுத்தினால் நமக்கு அனைத்து பயிற்சியும் விரைவில் வெற்றியில் முடியும்... 

நீங்கள் எந்த Super natural power பயிற்சி செய்தாலும் அதற்கு காந்த சத்தி மிகமிக முக்கியம்...

இந்த பதிவு எதற்காக போட்டேன் என்றால்.. என்னிடம் சிலர் பயிற்சி கொடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள்... அவர்களுக்காக தான்...

நான் யாருக்கும் பயிற்சி கொடுக்க விரும்பவில்லை... 

ஆனால் ஒன்று நீங்கள் யாரிடம் பயிற்சி பெற்று எந்த கலையை கற்றுக் கொண்டாலும்.. உங்கள் சுயநலத்திற்காக கலையை தவறாக உபயோகித்து விடாதீர்கள் அது வினையாகி விடும் என்று எச்சரிக்க தான்...

திமுக திருடர்களே கேட்டுச்சா.. உங்களை தான் சொல்றார் ஓசி சோறு வீரமணி...

 


திமுக எனும் மது வியாபாரிகள் கலாட்டா...

 


ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...

 


மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.

அதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.

அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில....

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது.

பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம்.

இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...

மோசடி மன்னன் ஹரி நாடார் கைது 😁

 


பிராடு பாஜக மோடியால் தான் இன்று இந்திய மக்கள் இறந்துக் கொண்டிருக்கின்றனர்...

 


பாகற்காயின் மருத்துவ குணங்கள்...

 


உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்...

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை  நோய் உள்ளவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவுடன் சேர்த்து  உண்டு வந்தால், கணையம் சீராகி இன்சுலின் சுரப்பு  நாளடைவில் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. 

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்...

பிராடு பாஜக யோகி யின் ஆட்சி லட்சணம்...

 


மது கடைக்கு கொரோனா போக கூடாதுனு தடை சட்டம் போட்டிருக்கிறோம் ஐயா 😁

 


நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...


நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை...

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல. பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது.

காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த உணவாகும்.

இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்:

கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது.

இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30, 90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது.

நீண்ட கால பயன்கள்..

இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


நாளை முதல் மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கு..

மக்கள் வெளியே வர தடை..

பேருந்துகள் வழக்கம் போல 50% பயணிகளுடன் இயங்கலாம்🙄

புதிய தலைமுறை எனும் மாமா ஊடகமே...

 


அம்மா உணவகத்தை அடித்து நொருக்கியது திமுக ரவுடிகள் என்று உலகிற்கே தெரியும்...

உனக்கு மட்டும் மர்ம நபர்களாக தெரியுதா டா ஏரி கொள்ளையன் நாயே...

அமமுக தினகரன் சொல்லும் உண்மைகள்...

 


மனைவி இனம் என்பதால் பங்காளிகளாச்சே...

 


வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு...

 


இதுக்கு அடிப்படையான மூலிகைகள்...

கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை.

இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் கிடைக்கும்.

வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.

மருந்து சாப்பிடும் போது உணவில் பத்தியம் உண்டு.

புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும்.

மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

மீன், மாமிசம் தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்...

சமூக விரோதிகள் கூடாரம் திமுக தன் வேலையை தொடங்கியது...

 


திமுக தெலுங்கர் ஸ்டாலின் தன் மூலையை உபயோகிக்க தொடங்கினார்...

 


அப்படி திறந்து வைச்சா... கரண்ட் அதிகமா செலவாகும். அப்புறம் தட்டுப்பாடு..

அப்புறம் நம்மளைதான் பத்து வருசம் வைச்சி செய்வாங்க... 

எவன்யா... இந்த மாதிரி ஐடியா குடுக்குறது... 😛😁😂👇

மனுஷங்களைப் போல தான் பேய்களிலும்... ஏகப்பட்ட குரூப்கள்...

 


சில வகைப் பேய்கள் மக்களோடு தான் இருக்கும்..

நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது, கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப் பேய்களுடைய சமாச்சாரங்கள்.

தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச் செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள்.

ரொம்ப உஷாரா இருங்க இவை புத்திசாலிப் பேய்கள்.

சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே இருக்கும்..

கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில் கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ஒரே கதை சொல்றாங்கன்னா, இந்த வகைப் பேய்கள் தான்.

சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள்..

செத்துப் போன நாளைக் கொண்டாட மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி விடும். ஆனால் ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே இருக்குமாம்.

சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள் இன்னொரு வகை..

மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம் டேஞ்சரஸ் பேய் இது.

நிறைவேறாத ஆசை பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்..

பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப் பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.

சிலவகைப் பேய்கள் மெசெஞ்சர் பேய்கள்..

நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க வேண்டிய பேய்கள் இவை.

பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது.

சட்டென மனதில் ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், ஆமாப்பா இப்போ தான் தாத்தா போயிட்டார் என கிடைக்கும் புரியாத Ghost (22)கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.

இன்னொரு வகை பேய் பாசக்கார பேய்..

சொந்தக்காரர்களைத் தேடி வரும். பார்த்து விட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும் தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.

நல்ல பேய் இனத்தில் பாதுகாக்கும் ஏஞ்சல்ஸ் முக்கியமானவை..

இவை ஒவ்வொருவருடைய தோளிலும் அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம்.

பல நேரங்களில் மயிரிழையில் தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின் புண்ணியத்தினால் தான்.

சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும்.

குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க யாருமின்றி இறந்து போனால், அவர்கள் ஆவியான பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்...

நானும் அவளும்...

 


உன்னை ஒருபோதும் விட்டு விலக மாட்டேன் என்றாய் நம்பினேன்.

உனக்காகத்தான் நான் படைக்கப்பட்டிருக்கிறேன் என்றாய் நம்பினேன்.

உன் அளவுக்கு யாராலும் என்னை நேசிக்க முடியாது என்றாய் நம்பினேன்.

நான் என்றென்றும் உனக்கானவள் என்றாய் நம்பினேன்.

நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றாய் நம்பினேன்.

சீக்கிரம் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்றாய் நம்பினேன்.

நான் உன்னை பிரிந்தால் உயிரோடு இருக்க மாட்டேன் என்றாய் நம்பினேன்.

எல்லாவற்றையும் நம்பி விட்ட பழக்க தோஷத்தில் உனக்கு பொய் சொல்ல தெரியாது என்றும் நம்பி விட்டேன்...

😒😒😒

திமுக ஸ்டாலின் பற்றி நீதிபதி கருத்து😁

 


என்ன கொடுமை டா இது...

 


திமுக விற்கு பாடை கட்டாமல் விட மாட்டேன் சொல்லி.. தனித்து நின்று அதிமுக விற்கு ஆப்பு வச்சுட்டியேணே 😁