14/03/2018

1850 ஆம் காலகட்டங்களில் யூக்கலிப்டஸ் மரம் ஆஸ்திரேலியாவில் இருந்து தருவிக்கப்பட்ட blackwood and silver warde என்ற வகையை சார்ந்தது...


எதற்காக இந்த மர்ம இறக்குமதி செய்யப்பட்டதென்றால் தேயிலை தோட்டங்களில் உள்ள தேயிலை செடி நடுதலில் அதிக ஈரப்பதம் மண்ணில் இருந்தத்தால் வேர்கள் பரவ விடாமல் தடுத்தது...

இந்த யூக்கலிப்டஸ் மரத்திற்கு Natural Borewell என்ற மற்றொரு பெயரும் உண்டு,அதாவது இதன் வேர்கள் 30 அடி வரை செல்லும்,ஒரு நாளைக்கு ஒரு மரம் சுமார் 90 லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சும்... ஆகையால் தேயிலை நடவிற்காக வெள்ளைக்காரர்களால் நடப்பட்டது..

1950 களில் இது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக நடத்துவங்கினர் அங்குள்ள ரேயான் தொழிற்சாலைக்கு எரி விறகுகளாக பயன்படுத்துவதற்கு, தேயிலை தோட்டங்களை தாண்டி சமவெளிகள், தனியார் நிலங்கள் மற்றும் கிராமங்களில் பரவலாக நடத்துவங்கினர் விக்கிகளுக்காக பயன்படுத்த...

1980 களில் ஒரு மிகப்பெரிய வறட்சி தாக்கியது நீலகிரி மாவட்டத்தை,அன்று அதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த பொழுது இந்த யூகலிப்டஸ் மரங்களே காரணம் என்று அறியப்பட்டு அதை நட மாநில அரசு தடை விதித்தது, இதற்காக பெரிதும் போராடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது வேணுகோபால் அவர்களின் தலைமையில் உருவான நீலகிரியை காப்போம் என்ற அமைப்பினரால்...

இன்று அதே யூகலிப்டஸ் மரத்தை வனத்துறை மற்றும்TNPL நிறுவனமும் இணைந்து தமிழகம் முழுவதும் குத்தகை அடிப்படையில் விவசாய நிலங்களை பெற்றுக்கொண்டு இத்தனை ஆண்டுகளுக்கு வளர்த்து அவர்களுக்கு வாடகை வழங்கி வருகின்றனர்...

ஏற்கனவே மழை பொய்த்து கடும் வறட்சி ஏற்படும் சூழலில் இதை அரசாங்கமும் ஊக்குவிக்கிறது, இப்பொழுது தான் சீமைக்கருவேல மரத்தின் தீமைகளை வலியுறுத்தி அதை நீக்க ஆணை பெற்றிருக்கும் வேலையில் அடுத்ததாக இன்னொரு தீமை...

யூகலிப்டஸ் மரம் வளரும் இடத்தில் அதை சுற்றி எந்தவொரு தாவரத்தையும் வளரவிடாது, காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறியும் தன்மை வாய்ந்தது, இதன் இலைகளை கால்நடைகள் உண்ணாது அதுபோக இதன் இலைகள் எளிதில் மக்காது, சராசரியாக 5 ஆண்டுகளில் 35 சதவிகத நிலத்தடி நீரை உறியும் சக்தி வாய்ந்தது...

மண் வளம் காப்போம், நிலத்தடி நீரை காப்போம், இந்த யூகலிப்டஸ் மரத்தை நம் மண்ணை விட்டு அகற்றுவோம்...

இவர்களை தான் இந்த சமூகம் காட்டான் காட்டுவாசி என்கிறது.. இது தான்டா தூயமனிதம்.. நன்றிகள் தோழர்களே...


உங்கள் அரசாங்கம் உங்களுக்கானது இல்லை என்பது தினமும் ஏதாவது ஒன்றின் மூலம் வெளிப்படுகிறது...


அரசாங்கம் அனைத்தையும் செய்யும், பணத்திற்காக..

ஏனெனில் அரசாங்கம் என்பது மக்களை வைத்து வியாபாரம் நடத்தும் பெரிய சந்தை..

அதில் இந்திய அரசாங்கம் மிகப்பெரிய சந்தை, ஆட்சியாளர்கள் மிகச்சிறந்த தரகர்கள்...

மண்ணைக் காக்க வீரம் தேவை.. அதிகாரம் தேவை.. அது நம் முன்னோர்களுக்கு இருந்தது...


தாய்ப்பால் சுரக்க மூலிகை ரசம்...


பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால் தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்...

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை...

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

தாய்ப்பால் சுரக்க கூடியவரை மீன்களை உணவில் சேர்த்தால் அதிகளவு பால் சுரக்கும். அத்துடன் ஒடியல்மாவைச் சேர்த்தாலும் அதிகளவு பால் சுரக்கும்.

அத்தோடு குழந்தையை பெற்ற பெண்களுக்கு மது (Alcohol), சாராய வகை (alcohol) குடிக்கக் கொடுக்கக் கூடாது ஏனென்றால் இதைக் குடிப்பவர்களுக்கு வழமையாகச் சுரக்கும் பாலின் அளவையே குறைத்து விடுகின்றன.

எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு குழந்தை பெற்ற தாய்மாரை பராமரிப்பவர்களும், குழந்தையைப் பெற்ற தாய்மார்களும் கவனத்திற் கொண்டு நடந்து கொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் தாய்ப்பாலிற்காக எங்க வேண்டியிருக்காது...

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க அவசியமில்லை- உச்சநீதிமன்றம் உத்தரவு...


10ஆம் தேதியில் இருந்தே எரிந்து வரும் தீயை ஊடகங்களில் காட்டாததே பல சந்தேகங்களை கிளப்புகிறது...


இது திட்டமிட்டு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மலையை அபகரிக்க செய்த செயலாக இருந்தால் தான் ஊடகங்கள் அதை வேண்டுமென்றே மறைக்க துணை போகியிருக்க வேண்டும்..

காட்டுத் தீ பற்றிய போதிய அறிவிப்பு இல்லாததால் தான் மலையேற சென்று மாட்டி இறந்திருக்க வேண்டும்...

நமக்கு கற்பிக்கப்படும் வரலாறு அனைத்துமே பொய்களே...


குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு : ஈரோடு திவ்யா உயிரிழப்பு...


குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த விவேக்கின் மனைவி திவ்யா மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற விவேக்-திவ்யா தம்பதி காட்டுத்தீயில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே விவேக் உயிரிழந்தார். 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துபாயில் வேலை செய்து வந்த விவேக், ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர். விவேக்கிற்கும் கோபிச் செட்டி பாளையத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்து வந்த திவ்யாவிற்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் ஆகியுள்ளது. திருமணமாகி 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அத்தம்பதியினர் குரங்கிணி மலைப்பகுதிக்கு டிரெக்கிங் சென்றுள்ளனர். கடந்த மார்ச் 9-ம் தேதி கொழுக்குமலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அந்த மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்று மீண்டும் குரங்கிணி பகுதிக்கு திரும்பும் பொழுது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய விவேக் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

ஒரு நாடு மக்களின் ஒற்றுமையால் ஓரு வல்லாதிக்க சக்தியிடம் இருந்து சுதந்திரம் அடைகிறது, ஆனால் மக்கள்..?


கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்...


வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) கடந்த கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.

வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.

இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது...

இதில் இருப்பது உங்களின் ஆதார் தகவலாக கூட இருக்கலாம்...


https://eflupreadmission.verityinfosol.com/Uploads/Certificate/

பாலக்காட்டு சித்தூர் தமிழர்கள்...


1931 கொச்சி மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆவணத்தில் உள்ள மொழி வரைபடம்...

சித்தூர் (பாலக்காடு அருகே உள்ளது) மலையாளிகளுக்கு ஏறத்தாழ இணையாக தமிழர்கள் இருப்பது பதிவாகியுள்ளது.

இதைப் பற்றி மேலும் அறிய, பாலக்காட்டுச் சித்தூரில் தமிழ்த் திருவிழா என்று தேடிப் பாருங்கள்...

பாஜக பினாமி கேடுகெட்ட அதிமுக அரசின் பொய்கள்...


இதுகளை பேக்கப் பண்ணி குரங்கணி மலைக்கு டூர் அனுப்பி வெய்யுங்க...


மீட்புக்கு சென்ற ஹெலிகாப்டர் அருகே நின்று போட்டோ எடுத்துக் கொள்ளும் செல்ஃபி புள்ளைகள்...

கன்னடன் கமல் vs பாஜக தமிழிசை கலாட்டா...


கர்நாடக போத்திசு கடையில் தமிழர்கள் வேலைக்கு பணியமர்த்தபட்டதைக் கண்டித்து கன்னடர்கள் கடையை மூடி ஆர்பாட்டம்...


தமிழ்நாட்டில் இதை செய்தால் இனவெறியர்கள் தானே திருட்டு  திராவிடர்களே...

வடநாட்டு பான்பார்க் பொறுக்கிகளையும்
வடநாட்டு மார்வாடி நாய்களுக்கும் என் மண்னையும்..

மலையாள சேட்டன்களுக்கும், நாயர்களுக்கும் டீ கடையும் கொடுத்து அழகு பார்க்க வைத்த திடாவிட பண கும்பல்களே...

தமிழ்நாட்டின் பெருநகரத்தில் எதாவது ஒரு இடத்தில் தமிழன் வணிகம் இருக்கிறதா...?

நாம் எதிர்த்து உடைக்க வேண்டியது சாவுக்கார்பேட்டையும் நாயர் கடையும் தான்...

பாஜக பினாமி மானங்கெட்ட அதிமுக அரசே தயாராக இரு...


இது தேனி குரங்கணி மலையேற்றத்தை ஏற்பாடு செய்த சுற்றுல்லா நிறுவன அதிபர் பிரபுவிடம் பெற்ற வாக்குமூலம்...


காவல்துறை தயாரித்த வாக்குமூலத்திலேயே தெளிவாக அனுமதி பெற்று சென்றார்கள் என இருக்கும் போது..

யாரை திருப்தி படுத்த முதல்வரும் துணை முதல்வரும் அவசரபட்டு அனுமதி பெறாமல் சென்றதாக உண்மைக்கு புறம்பாக பேசினார்கள்..

CTC ஐ குறிவைத்து அனைத்து ஊடகங்களும் பாயக் காரணம் என்ன?

நிர்மலா சீத்தாராமன் விமானபடைக்கு மாலையில்  கண் தெரியாது என்று கூறுவது..

ஏதோ மிகப்பெரிய சதித்திட்டத்தின் தொடக்கம்..

"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழும்
அறஞ் சூழும் சூழ்ந்தவன் கேடு"

அரசன் இன்று கொல்வான்..
அறம் நின்று கொல்லும்...

மஹாராஷ்ட்ர அரசு தங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து வீடுகளுக்கு திரும்பும் விவசாயிகள்...


இது ஒற்றுமைக்கும் நியாயத்திற்கும் கிடைத்த வெற்றியாகவும் ஜல்லிகட்டு போராட்டத்தை போன்று ஒரு புரட்சி போராட்டமாகவும் இந்த அளவில் அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

கடந்த 6 ஆம் தேதி துவங்கிய போராட்டம் இன்று 12 ஆம் தேதி முடிவிற்கு வந்துள்ளது...

உணருங்கள்...


உணருங்கள். உணர்ந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் அன்பர்களே.

உணராத வரைக்கும் எல்லாமே பூமியில் சிரமம் தான்...

வழிகளை காட்டும் கடவுள்...

நான் பலத்தைக் கேட்டேன்..

கடவுளோ சிக்கல்களைத் தந்து
இதை சமாளி. பலம் பெறுவாய் என்றான்.

நான் ஞானத்தைக் கேட்டேன்..

கடவுளோ பிரச்னைகளைக் கொடுத்து
இதைத் தீர்க்கும் போது ஞானம் சித்தியாகும் என்றான்.

நான் செல்வத்தைக் கேட்டேன்..

கடவுளோ தந்த அறிவையும், கொடுத்த உடலையும் காட்டிbசிந்தித்து உழைத்தால் செல்வம் சேரும் என்றான்.

நான் தைரியத்தைக் கேட்டேன்..

கடவுளோ அபாயங்களை அளித்து இதை சந்தி. தைரியம் தானாய் வரும் என்றான்.

நான் வாழ்வில் நிறைவைக் கேட்டேன்..

கடவுளோ கொடுத்ததையெல்லாம் காட்டி
தாராளமாய் பகிர்ந்து கொள். நிறைவு நிச்சயம் என்றான்.

கேட்ட எதையும் கடவுள் அப்படியே தருவதில்லை. ஆனால் பெறும் வழிகளைக் காண்பிப்பான்.

பெறுவதும், விடுவதும் அவரவர் கையில்.

கடவுள் அரசியல்வாதியல்ல. எனவே இலவசமாய் எதையும் அவன் தருவதில்லை. பக்தர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதில் அவனுக்கு உடன்பாடில்லை.

தட்டுங்கள், திறக்கப்படும். கேளுங்கள் தரப்படும் என்பதன் பொருள்...

கேட்டு முடித்த பின் மடி மேல் விழும் என்பதல்ல. கேட்டதை கௌரவமாய் பெற வழி காண்பிக்கப்படும், அதற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்பது தான்.

மண்ணை மனிதன் உருவாக்கவில்லை. சூரியக் கதிர்களையும் அவன் உருவாக்கவில்லை. மழையை அவன் உருவாக்கவில்லை. அதையெல்லாம் இறைவன் ஏற்படுத்தித் தந்திருக்கிறான்.

தானியம் பெற விரும்புபவன் கடவுள் ஏரையும் எடுத்து உழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல.

எனவே பிரார்த்தனை செய்வோரே, பிரார்த்தனை செய்து முடித்த பின் அறிவுக் கண்களைத் திறந்து காத்திருங்கள். கடவுள் கண்டிப்பாக வழிகாட்டுவான்.

எத்தனையோ சந்தர்ப்பங்களை உங்கள் வழியில் ஏற்படுத்தித் தருவான். அதைப் பயன்படுத்தி பிரார்த்தித்ததை அடைந்து அனுபவியுங்கள்.

முயற்சியில் பெறுவதே உங்களுக்கும் கௌரவம். அப்படிப் பெற்றாலே பெற்றதன் அருமையையும் நீங்கள் அறிய முடியும்.

எனவே நீங்கள் கேட்டதும், பெற்றதும் என்ன என்பதை அறிவுபூர்வமாக அலசுங்கள். கேட்டதற்கும், பெற்றதற்கும் இடையே உள்ள இடைவெளிக்குக் காரணங்கள் உங்களிடத்தே இருக்கக் கூடும்...

அரசியல் என்பது ஒவ்வொருவரின் வாழ்வியல்..


அதை நாம் தள்ளி வைத்ததன் விளைவு தான், இன்று அரசியல் என்பது எது..? என்பதை கூட அறியாமல்...

விபச்சார ஊடகங்களில் காட்டும் விவாதம் தான் அரசியல் என நாம் அதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்...

வக்கீலை தாக்கி செல்பி எடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் செயலை மன்னிக்க முடியாது - ஐகோர்ட்டு கருத்து...


ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி ஒரு கோரிக்கை முன்வைத்தார்.

அவர், ‘தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு வக்கீல் பெரியசாமி என்பவர் தன்னுடைய கட்சிக்காரருடன் புகார் செய்ய சென்றுள்ளார்.

அந்த புகாரை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம், வழக்குப்பதிவு செய்யவில்லை. அந்த புகாரை பெற்றுக் கொண்டு ரசீது (சி.எஸ்.ஆர்.) தரும்படி கேட்ட வக்கீலை கொடூரமாக சப்-இன்ஸ்பெக்டர் அடித்துள்ளார்.

பின்னர், அந்த வக்கீலை செல்போனில் ‘செல்பி’ எடுக்கச் சொல்லியுள்ளார். அந்த ‘செல்பி’ படத்தில் முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் வக்கீல் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பின்னர், அவரை அடித்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் நின்றபடி ‘போஸ்’ கொடுத்துள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

அந்த ‘செல்பி’ படத்தை நீதிபதிகளிடம், மோகன கிருஷ்ணன் கொடுத்தார். அந்த படத்தை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசு பிளீடர் ராஜகோபாலனிடம், இந்த படத்தை காட்டிய நீதிபதிகள், ‘என்ன இது? இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது.

வக்கீலை தாக்கியது மட்டுமல்லாமல், செல்பி போட்டோவையும் சப்-இன்ஸ்பெக்டர் எடுப்பாரா? சப்-இன்ஸ்பெக்டர் செயலை மன்னிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்கிறோம். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும்’ என்று கூறினார்கள்...

விவசாயிகளிடம் பேரம் பேச நினைக்கும் முன் சிந்தியுங்கள்...


தமிழக விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்...


விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைக்கும் பவர்கிரிட் நிறுவனத்தை கண்டித்தும்..

மத்திய & மாநில நெடுஞ்சாலை வழியாக மின் பாதைகளை அமைக்க, மத்திய &  மாநில அரசு உத்தரவிட வழியுறுத்தி..

17.03.2018 சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் திருப்பூர் மாவட்டம், பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டில் மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது...

அது சமயம் விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கெட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்,
கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்,
ஏர்முனை இளைஞர் அணி,
மற்றும் அனைத்து விவசாய அமைப்புக்கள்.

உண்ணாவிரதம் நடைபெறும் இடம்.
Google Map Lacation.
https://goo.gl/maps/F99zeWpHEN42

விவசாயிகள் பாதயாத்திரையாக தங்கள் பகுதியிலிருந்து கடந்து சென்ற பின்பு அவர்கள் போட்ட குப்பைகளை அள்ளி சாலைகளை சுத்தம்செய்யும் இம்மண்ணையும், மக்களையும் நேசிக்கும் முஸ்லிம் சொந்தங்கள்...


தமிழன் vs திராவிடன்...


தமிழன் : 1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு தமிழர்க்கென்று ஒரு மாநிலம் உருவான பின்பு தென்னிந்தியர்க்கான அரசியலை எப்படி தமிழர்க்கான மாநிலத்தில் எடுக்க முடியும்...

திராவிடத்தின் தேவை (இருந்ததில்லை... ஒரு வேளை இருந்திருந்தால்) 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே முடிகிறதல்லவா...

திராவிடன் : இல்லை... பகுத்தறிவு மூலம் மூடநம்பிக்கை, சாதி மத ஏற்றத்தாழ்வுகளை அழிக்கும் வரை திராவிடதிற்கான தேவை இருக்கும்.

(பகுத்தறிவு என்ற பெயரில் தமிழரின் அடையாளங்களையும் தமிழர்க்கு அதன் மேல் உள்ள பற்றையும் அழிப்பதே திராவிடத்தின் நோக்கம்)...

தமிழன் : அதை தமிழர் என்ற பெயரில் செய்ய வேண்டியது தானே... ஏன் திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது?

தமிழரை திராவிடர் என்று அடையாளப்படுத்தும் உங்கள் செயலின் நோக்கம் என்ன?

திராவிடம் : ?!@#$%^&*

தமிழரை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழரல்லாத தெலுங்கு கன்னட இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எங்களின் வேண்டுகோள்... தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்...


இராமாயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்...


இராவணன் ஆய கலைகளின் நாயகன்...

அதிலும் பூதகனங்களுக்கேல்லாம் இருக்கும் பக்தியை விட மகேஸ்வரனின் மேல் இராவணுக்கு பக்தி அதிகம்.

அனுமன் நெஞ்சைபிளந்து தான் தனது உள்ளத்தில் சிதாஇராமன் இருப்பதை காண்பித்தார். ஆனால் தனது மூச்சில் கூட மகேஸ்வரன் வாசம் என்பதை வசிஸ்டரின் வஞ்சனையை எரித்ததில் இருந்தே காணலாம்.

சரி கதைக்கு வருவோம்.

பக்த பித்தனான இராவணனுக்கு ஏதாவது தரவேண்டும் என அன்னை மகேஸ்வரனிடம் கேட்க அவனுக்கேன்று ஒரு உலகம் தாருங்கள் என அன்னையின் வேண்டுகோள்.

மகேஸ்வரனின் மறுபதில் அவனுக்கேன்று ஒரு உலகம் தந்தால் எங்கும் சிவ சந்நிதானம் அமைத்து தனக்கேன்று இருக்க இடமின்றி சுற்றிவருவான் என்றதும், அன்னை புன்னகைத்து ஒரு திட்டத்தை கூறினார். இராவணனை அழைத்து மகேஸ்வரர் இராவனா நீதான் ஆயகலைகளிலும் அற்புதன் ஆயிற்றே உனது அன்னைக்கேன்று ஓர் உலகம் செய் என்றார்.

சிவனாரின் வேண்டுகோள் அல்லவா அதுவும் தனது அன்னைக்கு என ஒரு தாய்க்கு மகன் ஆற்றும் கடமை அத்தனையும் உருக்கொண்டு வந்து அமைத்து முடித்தான். முடிந்த உடன் அன்னையை அதைக்காண அழைக்க அதன் அழகைகண்டு வியந்து போனார்கள்.

திட்டப்படி மகேஸ்வரன் இராவணனிடன் இராவணா இவ்வளவு அழகான நகரை படைத்த உணக்கு என்ன வேண்டும் கேள் என்றார்.

அதற்கு இராவணனோ ஐயனே தாய் தந்தை இருக்கும் இக்கயிலையை விட்டு எங்கும் பிரியாவரம் வேண்டும் என கேட்க அதற்கு எம் இருப்பிடம் உனக்கு என்றும் உண்டு. அதே நேரத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடு நாங்கள் கொடுக்கும் எதையும் நீ மறுக்க கூடாது என்பது தான்.

உத்தரவிற்கு இணங்கி வாக்கு கொடுத்தான் இராவணன். இதோ இங்கு உன்னால் அன்னைக்கு ப‌டைக்க‌ப‌ட்ட‌ நாடு உன‌க்காகுக‌ உன‌க்கு த‌ர‌வே அன்னையின் நாட‌க‌ம் என‌ மீன்டும் இராவ‌ணுக்கே அந்த‌ ந‌கரை த‌ந்து உன‌து ச‌ந்த‌தில் இந்ந‌க‌ரில் இருந்து பெருகி உல‌கெங்கும் ப‌ர‌வி உன்னை போல‌வே ப‌ல‌ க‌லைக‌ளில் புக‌ழ்பெற்று விள‌ங்க‌ட்டும் என‌ ஆசீக‌ள் த‌ந்து இல‌ங்கேஸ்வ‌ர‌ன் என்ற‌ பெய‌ரும் இட்டு அனுப்ப‌.

இல‌ங்கேஸ்வ‌ர‌னுக்கு அழ‌கான‌ பெண்குழ‌ந்தை பிற‌க்க இந்த பெண்குழந்தைக்கு அன்பை காட்டும் போது த‌ன‌து அன்னைக்கு காட்டும் அன்பில் குறைவ‌ந்துவிடுமே என‌ அஞ்சி அக்குழ‌ந்தையை பூமாதேவிக்கு வார்த்து விட்டார்.

பூமாதேவியும் அக்குழ‌ந்ததையை ச‌ன‌க‌னிட‌ம்(இன்றைய‌ நேபாள‌த்தின் அன்றைய‌ இராஜா) சேர்க்க‌ அங்கு வ‌ளர்ந்த‌ குழ‌ந்தை இராம‌ண‌னை ம‌ண‌முடிக்க‌ பிற‌கு புத்திர‌கண்ட‌ம் வ‌ந்த‌ த‌ய‌ர‌த‌ன் வாக்குப‌டி இராம‌ன் வ‌ன‌ம் செல்ல‌ த‌னது குழ‌ந்தை காட்டில் ம‌ழையிலும் குளிரிலும் வாடுகிற‌தே என்ற‌ ஏக்க‌த்தில் இல‌ங்கை கொண்டு செல்கிறான்.

இந்த‌ நிக‌ழ்ச்சிதான் வில்ல‌ன் யாரை போடுவோம் என‌ நினைத்த‌ வால்மிகிக்கு கிடைத்தான் இல‌ங்கேஸ்வ‌ர‌ன் பாவ‌ம். த‌ந்தைக்கும் ம‌க‌ளுக்கும் உள்ள‌ உற‌வையே கொடூர‌ப‌டுத்தி விட்டான்.

இந்த‌ செய‌லால் தான் வால்மிகி த‌ன‌து வாழ்வின் க‌டைசி நாட்க‌ளில் குஸ்ட‌ ரோக‌ம் வ‌ந்து இற‌ந்தான் என‌ புரான‌ங்க‌ள் சொல்கிற‌து...

பசு இறைச்சி ஏற்றுமதியில் பிராமணர்களே அதிகம்...


ஒக்கி புயல் அளவிற்கு தீவிரமில்லாமல் காணப்படும் தற்போதைய புயல், அதிகபட்சம் 100கி.மீ வேகத்தில் காற்று வீசுவது அரிதாக இருக்கலாம்...


வரலாற்றில் முதன் முறையாக சந்திக்கும் கோடை புயல் இது! கணிக்க முடியாது என்ன நடக்குமென்று.

இன்று கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சியில் கன மழை கொட்டும்...

குறிப்பு : சம்பந்தமே இல்லாமல் மார்ச் மாதம் புயல் வருகிறது என்றால்.. புரிந்துக்கொள்ளுங்கள்.. இது இயற்கை அல்ல.. செயற்கையாக உருவாக்கப்படுவை என்று...

உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு...


இது வரை நாம் பல தகவல்களைக் கண்டு விட்டோம். அந்தத் தகவல்களுக்குத் உறுதுணையாக சில ஆதாரங்களையும் கண்டு இருக்கின்றோம். ஆனால் அந்த தகவல்களெல்லாம் ஒன்றாக கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே நின்றுக் கொண்டு இருக்கின்றன.

அந்த முத்துக்கள் அனைத்தையும் சிறிது கற்பனை என்னும் நூலினைக் கொண்டு ஒன்றாகச் சேர்த்து வழங்கும் முயற்சியே இந்தப் பதிவு.

உலகின் வரலாறு...

ஆதியில் ஆணும் பெண்ணும் குமரிக்கண்டத்தினில் படைக்கப்படுகின்றனர். அவர்கள் தமிழ் மொழியில் இறைவனிடம் பேசுகின்றனர். தமிழிலேயே உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பெயர் இடுகின்றனர். பூமியின் தட்பவெட்ப நிலைக்கு ஏதாக அவர்கள் கருப்பு நிறத்தில் இருக்கின்றனர்.

மனிதன் தொடர்ந்து குமரிக்கண்டதினில் வாழ்ந்து வருகின்றான். காலத்தில் மனிதன் எண்ணிக்கையில் பெருகுகின்றான். அச்சூழ்நிலையில் தான் குமரிக்கண்டம் கடற்கோள்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இந்தக் கடல்கோள்களுக்கு காரணம் பனிக்காலத்தின் முடிவுக்காலத்தில் ஏற்ப்பட்ட பனி உருகலும் அதனால் கூடிய கடல் அளவுமே என்று அறிவியல் கூறுகின்றது.

சிலர் கருதுவது போல குமரிக்கண்டம் ஒரே அடியாக மூழ்கிப் போய்விடவில்லை. இதனை தமிழ் சங்க இலக்கியங்கள் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.

முதல் வெள்ளத்தில் தப்பிய மக்கள் குமரிக்கண்டத்தின் வடக்கே நோக்கி செல்கின்றனர். மீண்டும் சில வருடங்களுக்கு பின்னர் கடற்கோள் தாக்க மீண்டும் மனிதன் வடக்கே நகருகின்றான். நகர்ந்து இன்றைய தமிழகத்தில் குடி ஏறுகின்றான். இக்காலத்தில் தான் குமரிக்கண்டம் முழுமையாக அழிகின்றது.

இன்றைய ஆசுற்றேலியாவினையும் ஆபிரிகாவினையும் ஆசியாவோடு இணைத்துக் கொண்டு இருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு கடலினுள் போக சில புவி மாற்றங்கள் பூமியில் நடக்கின்றது. கடலினுள் இருந்த இமயமலை மேலே வருகின்றது. குமரிக் கண்டம் இருந்த இடத்தினில் தற்போதைய இந்திய மகாக்கடல் தோன்றுகின்றது.

பின் காலப்போக்கில் மனிதர்களின் எண்ணிக்கை கூடக் கூட அவர்கள் வேறு இடம் தேடிச் செல்ல ஆரம்பிக்கின்றனர். சிலர் தெற்கே சென்று எகிப்தில் குடியேறுகின்றனர். சிலர் கிழக்கே செல்லுகின்றனர். சிலர் வடக்கே நோக்கி செல்லுகின்றனர். இவ்வாறு மக்கள் குமரிக்கண்டத்தின் அழிவிற்கு பின்னால் இடம் பெயர்ந்ததையே நோவா கதையாக சமய நூல்கள் கூறுகின்றன.

ஆனால் அனைத்து மக்களும் இடம் பெயரவில்லை. பலர் தமிழகத்திலேயே தங்கி விடுகின்றனர். தமிழகத்திலே ஒரு மாபெரும் கலாசாரம் மலர்ந்து இருக்கின்றது. நகரங்கள் தோன்றி இருந்தன. கடல் போக்குவரத்து சிறந்து இருந்தது. அவர்கள் விரும்பிய அனைத்தும் அங்கே கிடைக்கப் பெற்றது. பாண்டியனின் தலைமையில் தமிழர்கள் அங்கே நிகரின்றி விளங்கிக்கொண்டு இருந்தனர்.

வடக்கே சென்ற தமிழர்கள் தாங்கள் தங்கிய இடங்களுக்கு எல்லாம் தமிழிலேயே பெயர் வைக்கின்றனர். எனவே தான் நாம் இன்றும் அங்கே ‘ஊர்’ என்று முடியும் பெயர்களைக் காண முடிகின்றது. உதா.. செயப்பூர், கான்ப்பூர்.

வடக்கே சென்ற தமிழர்கள் சிலர் கங்கை நதியின் கரையில் சில நகரங்களைக் அமைத்து அங்கேயே குடியேறுகின்றனர். மேலும் சிலர் இன்னும் வடக்கே சென்று பல நகரங்களைக் கண்டப்பின் சிந்து சமவெளியினை அடைகின்றனர்.

பரந்து விரிந்த அந்த செழிப்பான இடத்தினைக் கண்டதும் அவர்கள் அங்கே ஒரு நாகரீகத்தினை தொடங்குகின்றனர். ஆனால் சில காலம் கடந்ததும் மீண்டும் உலகினைக் காண வேண்டும் என்ற ஆவல் மேல்லோங்க சில தமிழர்கள் சிந்து சமவெளியில் இருந்து மேற்கே செல்லுகின்றனர். அங்கே அவர்கள் சுமேரிய நாகரீகம், மேசொபோடமியா நாகரீகம் மற்றும் பாபிலூனிய நாகரீகம் போன்ற நாகரீகங்களைத் தோற்றுவிக்கின்றனர். (இந்தக் கூற்றுகளுக்கு சான்றுகள் பல இருக்கின்றன... அவற்றினை நாம் பின் வரும் பதிவுகளில் காண்போம்)

மேலும் சில மக்கள் வடக்கே செல்லத் தொடங்கினர். மக்கள் தாங்கள் சென்ற இடம் எங்கிலும் தங்களது வழிப்பாட்டு முறையினையும் கொண்டுச் சென்றனர். மிருக பழி வழிப்பாடு கிட்டதட்ட அனைத்து நாகரீகங்களிலும் காணப்படுகின்றது. அதேப் போல் கல் வழிபாடும் காணப்படுகின்றது.

தமிழகத்தில் இருந்து கிழக்கே சென்ற மக்கள் சிலர் தென் அமெரிக்காவிற்கு சென்று அங்கே குடிகொள்கின்றார்கள். சிலர் வட அமெரிக்காவிற்கு சென்று அங்கே குடிக்கொள்கின்றார்கள். சிலர் சப்பானில்… சிலர் சீனாவில்… சிலர் ஆசுற்றலியாவில்…!!! இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்கள் பரவுகின்றனர். (இந்தக் கூற்றினை அம்மக்களின் வரலாற்றினையும் மொழியினையும் வைத்துப் பார்த்து நாம் ஆராய்ந்தாலே அறிந்துக் கொள்ள முடியும்... அவற்றினையும் நாம் மற்ற பதிவுகளில் பார்ப்போம்.)

இந்தக் காலத்தில் தான் புவியின் வெட்ப நிலைக்கு ஏற்றார்ப் போல், குளிர் பிரதேசங்களான மேற்கு பகுதிக்கும் வடக்கு பகுதிக்கும் சென்ற தமிழர்களின் நிறம் வெண்மையாக மாறத் தொடங்குகின்றது. தலைமுறை தலைமுறையாக மேற்கிலேயே தங்கிய மக்கள் தாங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்னும் உண்மையினை காலப் போக்கில் மறக்கத் தொடங்குகின்றனர். ஆனால் கிழக்கில் ஒரு வளமையான நாடு இருக்கின்றது என்ற செய்தி மட்டும் கதையாக அவர்களிடம் பதிந்து விடுகின்றது.

இந்தக் காலத்தில் தான் தமிழ் மொழி மருவ ஆரம்பிக்கின்றது. பிரிந்து சென்ற குழுக்களிடம் புது புது மொழிகளாய் அது உருமாறுகின்றது. இலத்தின், கிரேக்கம் போன்ற மொழிகள் உருபெருகின்றன.

அதேப்போல் மக்கள் இவ்வாறு இடப்பெயர்ச்சி செய்துக் கொண்டு இருந்த காலத்திலும், தமிழகத்தில் இருந்த மக்கள் அந்த அனைத்து நாகரீகங்களுடனும் வாணிக அளவிலான தொடர்பினை வைத்து இருந்தனர்.

எனவே உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழகத்திற்கு வந்து செல்வதும், தமிழர்கள் அவர்களின் நாடுகளுக்குச் செல்வதும் காலத்தில் நடைப் பெற்றுக் கொண்டே இருந்தன. இன்றைய கேரளாவில் அதாவது அன்றைய சேர நாட்டில் கிரேக்கர்கள், அரபியர்கள் போன்றவர் வந்து வாழ்ந்து இருந்தனர் என்பது வரலாற்றில் இருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.

மேலும் பண்டைய ரோமர்களின் நாணயங்கள் தமிழகத்தில் அதிகமாக கிடைப்பதும் அத்தகைய வாணிகம் தமிழகத்தினில் நடைப்பெற்றது என்பதற்கு சான்றாக உள்ளது.

இவ்வாறே காலங்களும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. உலகில் பல நாகரீகங்கள் தோன்றி விட்டன. சில அழிந்தும் விட்டன.

ஒவ்வொரு நாகரீகங்களுக்கும் இடையே போர்களும் தோன்றிவிட்டன.

மனிதன் உலகின் பல்வேறு மூலைக்கும் சென்று பரவி விட்டான். இந்தக் காலத்தில் தான் மேற்கில் இருந்து சில நாடோடிகள் சிந்து சமவெளியின் மீது படை எடுத்து வருகின்றனர். அவர்களைத் தான் நாம் ஆரியர்கள் என்கின்றோம். அவர்கள் கிரேக்கம் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து குதிரையின் மீது ஏறி வந்தவர்கள். யாகம் மற்றும் வேள்வி முறையில் நம்பிக்கை உடையவர்கள்.
அதாவது நெருப்பினை மூட்டி அதில் யாகம் செய்வது.

அந்த நெருப்பினில் உணவுப் பண்டங்களையும் மற்ற பொருட்களையும் போட்டால் அப்படிப் போடப்பட்ட பொருட்கள் கடவுளிடம் போய் சேரும் என்ற நம்பிக்கையினைக் கொண்டவர்கள்.

அதாவது இப்பொழுது ஒரு நெருப்பினை மூட்டி அதில் ஒரு பழத்தினைப் போட்டீர்கள் என்றால் அந்தப் பழம் இறைவனிடம் சென்று விடும். அப்படி சென்ற பழத்தினை இறைவன் உண்டு விடுவார். இது கிரேக்க வழிப்பாட்டு பழக்கம்.

இதே முறை இப்பொழுது நம் ஊரினில் ‘சுவாகா…சுவாகா…!!!’ என்றுக் கூறிக் கொண்டு நெருப்பினில் உணவினைக் கொட்டும் முறையாக இருப்பதை நாம் எல்லா யாகங்களிலும் காணலாம்.

சுவாகா - என்றால் சாப்பிடுங்கள் என்றுப் பொருள்..

அப்பேர்ப்பட்ட ஆரியர்கள் சிந்து சமவெளியினை அடைகின்றார்கள். நீண்ட நெடிய போருக்குப் பின் சிந்து சமவெளி மக்கள் பின் வாங்குகின்றார்கள். சிந்து சமவெளி நாகரீகம் மெதுவாக அழிகின்றது. ஆரியர்கள் வட நாட்டினுள் நுழைகின்றனர். ஆனால் சிந்து சமவெளியில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி இந்தியாவின் மற்ற இடங்களில் அவர்களுக்கு கிட்டவில்லை. அங்கு ஏற்கனவே சென்று தங்கி நகரங்களைக் கட்டி வாழ்ந்து வந்த தமிழர்கள் ஆரியர்களைக் காட்டிலும் பலம் பொருந்தியவர்களாக இருந்ததினால் ஆரியர்களின் போர் முயற்சிகள் அங்கே வெற்றிப் பெறவில்லை. மேலும் ஆரியர்களாக வந்தவர்களின் எண்ணிக்கை தமிழர்களை கணக்கிடும் பொழுது மிகவும் குறைவு.

எனவே ஆரியர்கள் மாற்று வழியினை யோசித்தார்கள்.
“வெள்ளையர்களான நம்மால் கறுப்பர்களான இந்த மக்களை பலத்தினால் வெல்ல முடியவில்லையா…. சரி… அப்படியானால் நாம் தந்திரத்தினால் வெல்வோம்…” என்று முடிவு செய்துக் கொண்டு அந்த மக்களுடன் கலந்தனர்.

வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர்.

அவ்வாறு தமிழர்களுடன் கலந்த ஆரியர்கள் தமிழர்களின் வழிப்பாட்டு முறைகளுடன் தங்களது முறைகளை கலக்க ஆரம்பித்தனர்.

“என்ன ஐயா செய்கின்றீர்.. வெறுமனே பலி இட்டால் போதுமா…நெருப்பினை மூட்டி அதனில் சில மந்திரங்களை சொல்லிவாறே இந்தப் பலியினைக் காணிக்கை செய்தால் தானே ஐயா இப்பலி இறைவனை திருப்தி படுத்தும்…இது தெரியாமல் இருக்கின்றீர்களே…” என்றுக் கூறிக் கொண்டே அந்த மக்களின் மனதினை மாற்றுகின்றனர்.

வீரத்தினிடம் வீழாத தமிழர்கள் தந்திரத்தில் வீழுகின்றனர். மந்திரம் மற்றும் யாகம் ஆகியனவற்றை அறியாத சமுதாயத்தினுள் மெல்ல யாகம் அடி எடுத்து வைக்கின்றது. தமிழர்களின் இந்த வீழ்ச்சி ஆரியர்களுக்கு வசதியாக போய் விடுகின்றது. இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழர்களின் கடவுள்கள் பழக்கவழக்கங்கள் முதலியவற்றுள் அவர்களின் கருத்துக்களை திணிக்கின்றனர். கிரேக்க கதைகளை ஒட்டிய இதிகாசக் கதைகள் தமிழ் கடவுள்களுக்கு எழுதப்படுகின்றன. ஆரியர்கள் வட நாட்டினில் தங்களை நிலைப் பெற செய்துக் கொள்ளுகின்றனர். நிற்க.

"ஆரியர்கள் எண்ணிக்கையில் குறைவு என்று கண்டோம். பின்னர் எவ்வாறு அவர்கள் அவ்வளவு செல்வாக்கினைப் பெற்றார்கள். அவர்கள் இனம் தமிழர்களிடையே எவ்வாறு தழைத்தது" என்றுக் கேட்க்கின்றீர்களா... ஆரியர்கள் தமிழர்களை மணமுடித்துக் கொண்டனர். மணமுடித்துக் கொண்டு அவர்களுடன் கலந்தனர். ஆனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தினை மட்டும் விடாது இருந்தனர்.

இவ்வாறே சென்றோம் என்றாம் சூழ்ச்சியால் மக்களை அடக்கி ஆண்டு விடலாம் என்று அவர்கள் என்னும் பொழுது தான் மகாவீரரும் புத்தரும் வருகின்றனர்.

ஆரியர்கள் திகைக்கின்றனர்.. ”யாகத்தினையும் பலியையும் வைத்து நாம் பிழைப்பினை ஒட்டிக் கொண்டு இருக்கும் பொழுது பலி கூடாது என்று இவர்கள் சொல்லுகின்றார்களே… என்ன செய்வது” என்று யோசிக்க ஆரம்பிக்கின்றனர்.

அந்தக் காலத்தில் தான் அசோகரும் வருகின்றார்…. பௌத்தமும் சமணமும் வட நாட்டில் நன்றாக பரவுகின்றது.

ஆரியர்கள் திகைத்தவாறே நிற்கின்றனர்.

வரலாறு தொடரும்…

நினைவு கொள்ளுங்கள், இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது..


உதவி செய்து சென்று விடுவது மாண்பு இல்லை, அவர்களுக்கு உதவி செய்வதோடு, அவர்களின் உரிமையை பெற்றுத்தர முயலுங்கள்..

உரிமை கிடைக்கும் என்றால் அவர்களை எல்லாத்தையும் நம்மை போல் பெறுவார்கள்...

பேச வழிகாட்டுகிறார் வள்ளுவர்...


சொற்கள் மிக மிக வலிமையானவை. அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பெறாத வெற்றிகள் இல்லை. அவற்றை முட்டாள்தனமாகப் பயன்படுத்துபவர்கள் படாத கஷ்டங்கள் இல்லை. பேச்சையே மூலதனமாக வைத்து நாட்டின் ஆட்சியையே பிடித்தவர்களை நாம் அறிவோம். சரியாகப் பேசத் தெரியாமல் இருப்பதெல்லாம் இழந்தவர்களையும் நாம் நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம்.

அந்த அளவு முக்கியமான பேச்சுக் கலை பற்றி வள்ளுவர் பல இடங்களில் விளக்கி உள்ளார். பொதுவாக சில விஷயங்களை அந்தந்த அதிகாரங்களிலேயே விளக்கும் அவர், பேச்சைப் பற்றி பரவலாகப் பல இடங்களில் சொல்கிறார்.

எப்படிப் பேச வேண்டும்?

மிகவும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்

சொல்லுக சொல்லில் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து (645).

(ஒரு சொல்லைச் சொல்லும் போது அதை விடச் சிறந்த பொருத்தமான சொல் இல்லாதவாறு தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்.)

வள்ளுவர் சொல்வது போல் பேசும் முன் சொற்களைத் தெளிவாகத் தேர்ந்தெடுக்கப் பழகிக் கொண்டால் பேச்சில் சொற்குற்றமோ, பொருள் குற்றமோ வர வாய்ப்பே இல்லை.

நன்மை தரும் விஷயங்களையே பேச வேண்டும். அதுவே தர்மம் என்கிறார் வள்ளுவர்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இல்லாத சொலல். (291).

(ஒருபோதும் சிறிதளவேனும் தீமை இல்லாத சொற்களைச் சொல்வதே வாய்மை எனப்படும்.)

மேலும் தீமை இல்லாதபடி பேசுவது, அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதால், அன்பும் நட்பும் கெட்டுவிடாமல் பாதுகாக்கிறது.

அவசியமானதை ரத்தினச் சுருக்கமாகப் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். பேசிக் கொண்டே போவதை அறிவுக் குறைபாடாகக் கருதுகிறார் அவர்.

பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சில சொல்லத் தேறாதவர் (649).

(குற்றமற்ற சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர் உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.)

எனவே அதிகமாகப் பேசும் ஒவ்வொருவரும் தாங்கள் சொல்ல விரும்புவதை இன்னும் சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று அவ்வப்போது ஆராய்ச்சி செய்து கொள்வது நல்லது.

எப்படிப் பேசக் கூடாது?

அடுத்தவர் மனம் புண்படும்படியாக பேசக் கூடாது என்கிறார். ஏனென்றால்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (130).

(தீயினால் சுட்ட புண் வெளியே வடு தெரிந்தாலும் காலப்போக்கில் உள்ளே ஆறி விடும். ஆனால் நாவினால் கடுமையான சொற்களால் சுட்ட வடு என்றுமே ஆறாது).

எத்தனையோ தீராத பகைக்கு முக்கிய காரணமாக இருப்பது புண்படுத்தும் சில அனாவசிய வார்த்தைகளே.

கடுமையான சொற்களைப் பேசுவது கூடாது என்கிறார் வள்ளுவர். அது அர்த்தமற்றது என்றும் முட்டாள்தனமானது என்றும் தன் பாணியில் அழகான உவமைகளுடன் கூறுகிறார் பாருங்கள்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன் கொலொ
வன்சொல் வழங்குவது (99).

(இனிமையான சொற்கள் இன்பம் தருவதைக் காண்கின்றவன் அதற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயனைக் கருதியோ என்று வள்ளுவரே ஆச்சரியப்படுகிறார்.)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (100).

(இனிய சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துவது கனிகள் இருக்கையில் காய்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒப்பானது).

பல நேரங்களில் கடுமையான சொற்களுக்கு அவசியமே இருப்பதில்லை. சொல்லி விட்ட சொல்லைத் திரும்பப் பெறும் வாய்ப்பும் நமக்கில்லை என்பதால் நமக்கோ அடுத்தவர்க்கோ பலனைத் தராத, துன்பத்தை மட்டுமே தருகிற சுடு சொற்களை நம் பேச்சிலிருந்து நீக்கி விடலாமே.

பயனில்லாத சொற்களைச் சொல்வது தவறு என்றால் அதை விவரித்துச் சொல்வதை இங்கிதமில்லாத தன்மை, அறமில்லாத தன்மை என்று கடுமையாக வள்ளுவர் விமரிசிக்கிறார்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்துரைக்கும் உரை (193).

(ஒருவன் பயனில்லாத விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுவது அவன் அறம் இல்லாதவன் என்பதைத் தெரிவிக்கும்.)

இதற்கு எத்தனையோ தினசரி உதாரணங்களை நாம் பார்க்க முடியும். தேவையற்ற, யாருக்கும் பலனளிக்காத விஷயங்களை விரிவாகப் பேசுபவன் அதன் மூலம் தன் தரத்தை மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்கிறான்.

எதை எங்கே பேசக் கூடாது?

தெரியாத விஷயங்களைப் பேசக் கூடாது. அதுவும் தெரிந்தவர்கள் முன் பேசவே கூடாது என்கிறார் வள்ளுவர். பேசி முட்டாள் என்பதை நிரூபிப்பதை விட அமைதியாக இருந்து நல்ல பெயரை வாங்கிக் கொள்வது நல்லது என்கிறார்.

கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாதிருக்கப் பெறின் (403).

(கற்றவர் முன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்களேயானால் கல்லாதவர்களும் நல்லவர்களே ஆவர்).

மேலும் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அங்கே உளறிக் கொட்டி அறிவின்மையை பறைசாட்டுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா?

நல்ல பேச்சிற்கு என்ன பலன்?

நன்மை தரும் நல்ல பேச்சு கேட்பவருக்கு தக்க சமயத்தில் தவறி விடாமல் காத்துக் கொள்ள உதவும் என்கிறார் வள்ளுவர்.

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
ஒழுக்கமுடையார் வாய்ச் சொல். (415).

(ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள் வழுக்கும் சேற்று நிலத்தில் ஊன்று கோல் போல் தளர்ந்த சமயம் உதவும்.)

வாழ்க்கையில் வழுக்கி விழாமல் இருக்க அறிவார்ந்த அனுபவஸ்தர்களின் வார்த்தைகளை விடச் சிறந்த ஊன்றுகோல் கிடையாது. அவை பல இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டும்.

கேட்பவருக்குப் பலன் அதுவென்றால் பேசுபவருக்கு என்ன பலன்?

நன்மையான பேச்சுகளை நல்ல விதமாகச் சொல்பவரை உலகமே பின்பற்றி நடக்கும் என்கிறார் வள்ளுவர்.

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648).

(கருத்துகளை ஒழுங்காகக் கோர்த்து இனிமையாகச் சொல்ல வல்லவருடைய ஏவலை உலகமே கேட்டு நடக்கும்.)

நல்ல கருத்துகளை நல்ல விதமாகச் சொல்லி பலர் வாழ்க்கைப் பாதைகளை நெறிப்படுத்த முடிந்தால் அந்தத் திருப்திக்கு நிகரேது?

மொத்தத்தில் நல்லதை மட்டுமே, சுருக்கமாக, இனிமையாக, மற்றவருக்குப் பயன் தரும் வண்ணம் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

நாம் அப்படிப் பேசப் பழகிக் கொண்டால் அது அடுத்தவர்களுக்கு நல்லது, நமக்கு மிக மிக நல்லது...

ஏர்செல் சிம்மில் டவர் இல்லையா கவலை வேண்டாம் மேலே உள்ள முறையை பயன்படுத்தி உங்கள் Port எண்ணை பெற்று வேறு நெட்வொர்க்கு மாற்றிக்கொள்ளுங்கள்...


குமரிக்கண்டம் …உண்மையா?… கற்பனையா?- ஒரு வரலாற்று ஆய்வு...


இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே.

ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது.

இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம்.

குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்…

௧) ஆபிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒன்றுப் போல் இருக்கும் விடயம்.

௨) ஆசுதிரேலிய பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம்).

௩) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.

௪) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.

௫) தனுசுக்கோடி மற்றும் காவேரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கிய வரலாறு.

௬) ஆடு மேய்ச்சான் பாறை என்று பெயர் கொண்ட பாறை கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி கடலின் நடுவில் இருக்கும் செய்தி.

ஆனால் குமரிக்கண்டம் என்பது கற்பனையே என்றுக் கூறுவோர் கூறும் காரணங்கள்…

௧) இதை அறிவியல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

௨) இக் கதைகள் சங்க இலக்கிய செய்திகளில் மட்டுமே இருப்பதினால் இவை வரலாறாக ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. இவை புராணங்களே.

இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்…

அறிவியல் குமரிக்கண்டதினை மறுக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை… ஏனெனில் அறிவியல் அங்கே இன்னும் சென்று ஆராய்ந்தே பார்க்க வில்லை. ஆராய்ந்து தெளிவு படுத்தாத விடயங்களை அறிவியல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அறிவியலின் உதவி தற்போது குமரிக்கண்டதினைப் பற்றிய விடயத்தில் நமக்கு கிட்டவில்லை.

எனவே இப்பொழுது நாம் மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்றுப் பார்ப்போம்.

அவர்களின் கூற்றுப்படி,

மனிதன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்.முதல் மனிதன் - தமிழன்.முதல் மொழி - தமிழ். குமரிக்கண்டதினில் தோன்றிய மனிதனே வடக்கே பயணித்து சென்று அங்கே சில நாகரீகங்களை நிறுவி பின் உலகம் முழுவதும் பரவுகின்றான். இதற்கு சான்றாக அவர்கள் பல விடயங்களை தருகின்றார்கள்.

உதாரணமாக “பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.”

இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்.

இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.

“அப்படி எவ்வாறு கூறுகின்றீர்கள்… வடக்கில் இருந்தும் அவன் தெற்கே வந்து பெயரிட்டு இருக்கலாம் அல்லவா?” என்று கூறுகின்றீர்களா.

சரி தான். அதற்கும் வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் மொழியறிஞர்கள் ஏன் அப்பெயர்கள் தெற்கில் இருந்து வடக்கே சென்றன என்று கூறுகின்றனர் என்பதனை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது, ஒரு நாகரீத்தில் இருந்து மற்றொரு நாகரீகத்திற்கு பெயர்கள் கொண்டு செல்லப் பட்டு இருக்கின்றன என்றால் முதலில் தோன்றிய நாகரீகம் காலத்தில் இரண்டாவது நாகரீகத்திற்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டும். எனவே வடக்கில் இருந்து இந்த பெயர்கள் தெற்கே வந்தன என்றால் வடக்கில் உள்ள நாகரீகம் காலத்தில் தெற்கு நாகரீகங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரீகங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலேயோ அல்லது மேசபோடமியாவிலேயோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரீகங்கள் இருந்தனவா?… அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை. இந்நிலையில் தான் நாம் ஒரு ஆங்கிலேய ஆய்வாளரைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவர் பெயர் கிரகாம் கான்காக் (Graham Hancock). உலகமே சுமேரியாவையும் மேசொபோடமியாவையும் சிந்து சமவெளியையும் ஆராய்ந்துக் கொண்டு இருந்த வேளையில் இவர் இந்தியாவில் தெற்கினை நோக்கி தன் ஆராய்ச்சியினை தொடங்குகின்றார்.

அவரின் ஆராய்ச்சி பிரம்மிப்பூட்டும் பல தகவல்களை வெளி இடுகின்றது. உதாரணமாக சிந்து சமவெளிக்கும்  3000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் ஒன்று குசராத் மாநிலத்தில் கடலோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நாகரீகதினைத் தொடர்ந்து அவர் மீண்டும் தெற்கே நோக்கி நகர்கின்றார்.

அங்கே குசராத் நாகரீகத்தினை விட 3000 ஆண்டுகள் பழமையான ஒரு மாபெரும் நாகரீகத்தினை அவர் கண்டுப்பிடிக்கின்றார்….
 தமிழகத்தினில்!!! அந்த இடம் பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினம். அவரின் கூற்றுப் படி இந்த நாகரீகம் சுமார் 11000 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்த நாகரீகம் கடற் கோள்களால் அழிந்தது என்றும் (400 அடி உயர் அலைகளால் என்றும் குறிப்பிடுகின்றார்) கூறுகின்றார். மேலும் அந்த இடங்களை நன்றாக ஆராய்ந்தோம் என்றால் பல உண்மைகள் வெளி வரும் என்றும் ‘அந்த இடத்தினை ஏன் ஆராயாது இது வரை விட்டு வைத்து இருக்கின்றார்கள் என்பது தமக்கு வியப்பளிப்பதாகவும்’ அவர் கூறுகின்றார். இவருடைய இந்தக் கருத்தினை இங்கிலாந்தில் உள்ள துர்கம் பல்கலைக்கழகமும் (Durham university) ஏற்று உள்ளது.

ஆனால் அந்த ஆராய்ச்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு மேற்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் பூம்புகார் பற்றிய இந்தத் தகவல்கள் மக்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.

இவ்வாராய்ச்சிகள் மொழியறிஞர்கள் சொல்லும் கூற்றினை, அதாவது நாகரீகம் தெற்கில் தோன்றி பின்னர் வடக்கே நோக்கி சென்று இருக்கின்றது என்பதனை மெய்ப்பிப்பது போல் இருக்கின்றன. தொடர்ந்து இந்த இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டால் உண்மைகள் வெளிப்படும். ஆனால் இந்திய அரசாங்கம் இந்த ஆராய்ச்சிகளை தானும் மேற்கொள்ளாது மற்றவர்கள் மேற்கொண்டாலும் அதற்கு தடங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா?உண்மை வெளிப்படுமா?

சிந்திப்போம்…

சில நண்பர்கள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்களை பகிருமாறு கேட்டுக்கொண்டார்கள். இதோ சில ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்கள்…

மா.சோ.விக்டர் - இவர் மொழியியல் அறிஞர். உலகின் தாய் மொழி தமிழ் தான் என்றும் மற்ற மொழிகள் அனைத்தும் தமிழின் திரிபுகளே என்றும் அவர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறுகின்றார். பல புத்தகங்களை இவர் மொழி தொடர்பாகவும் குமரிக்கண்டம் மற்றும் தமிழர்கள் தொடர்பாகவும் எழுதி உள்ளார். உதா… ‘குமரிக் கண்டம்’ ‘எபிரேயத்தின் தாய் மொழி தமிழே’ ‘அ’….

தேவநேயப் பாவாணர் - இவரும் ஒரு மொழி அறிஞர். தமிழ் மொழியில் இருந்தே வடமொழி போன்ற அனைத்து மொழிகளும் தோன்றின என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை நிரூபித்தவர். இவரும் பல புத்தகங்களை மொழி தொடர்பாகவும் தமிழர் வரலாறு தொடர்பாகவும் எழுதியுள்ளார். உதா… தமிழர் வரலாறு.

மாத்தளை சோமு - இவர் ஒரு ஆய்வாளர். உலகம் முழுவதும் சென்று அங்கு வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் இடங்கள் போன்றவற்றை ஆராய்பவர். இவருடைய நூல்கள் பல அவற்றுள் நான் எடுத்துக் கொண்ட நூல் ‘வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்’.

மறைமலைஅடிகள் - இவரும் ஒரு தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் இயக்கத்தினை தோற்றுவித்து தமிழை வளர்த்தவர். தமிழ் தொடர்பாகவும், ஆரியர் திராவிடர் போன்ற கூறுகளைப் பற்றியும் பல நூல்களை எழுதி உள்ளார். உதா… தமிழர் மதம்.

தெய்வநாயகம் - இவர் ஆன்மீக ஆராய்ச்சியாளர். தமிழிலேயே அனைத்து மதங்களுக்கும் பொதுவான தத்துவ மற்றும் ஆன்மீகக் கருத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அனைத்து மதங்களும் அடக்குமுறைகளில் இருந்தும் பகைமையில் இருந்தும் விடுபட்டு மக்களின் நலனுக்காக மாறுவதற்குரிய வழி தமிழில் இருக்கின்றது என்னும் கருத்தினை உடையவர். சைவ வைணவ சமயங்கள், கிருத்துவ சமயம் மற்றும் இசுலாமிய சமயங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இவரும் பல நூல்களை எழுதி உள்ளார்.

சரி... குமரிக்கண்டதினைப் பற்றி பார்த்தாயிற்று.. மேலும் விவிலியம், அசோகர், சமணம்...புத்தம், பக்தி இயக்கம் போன்றியவற்றை பற்றியும் பார்த்து இருக்கின்றோம். ஆனால் அந்த அனைத்துச் செய்திகளும் கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே இருக்கின்றன... உலகின் வரலாறினை அறிய அந்த முத்துக்கள் கோர்க்கப்பட வேண்டும்.

கோர்ப்போம்... உலகின் வரலாறு காத்து இருக்கின்றது...

ஆதார் பாதுகாப்பாக உள்ளதாம்...



Take a look at Elliot Alderson (@fs0c131y): https://twitter.com/fs0c131y?s=09

தமிழக விபச்சார ஊடகங்களின் முகமூடியை கிழித்து எரியும் வழக்கறிஞர் அருள்மொழி...


அப்படி இல்லம்மா.. அவர்கள் எல்லோரும் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று, நாடி நரம்பு நார் தசையெல்லாம் நக்கிப் பிழைப்பதே தொழிலாகக் கொண்டவர்கள்.

கருத்து திருகாணிகளும் கூட.

நாம் மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகுன்னு வாழுறவுங்க.

மோடி பதவியில் இருந்து விலகும் போது தீக்குளிப்பாங்க.

நாக்கை கூட அறுத்துக் கொள்வார்கள்னா பாருங்களேன்.

அப்போது நாம் பேசுவோம்.

இதுல நம்ம ராஜ குலோத்துங்கன் ராமசுப்புவை விட்டுட்டீங்கம்மா.

அவர்கள் செட் ப்ராப்பர்ட்டீஸ் இல்லை
செட்டிங் ப்ராப்பர்ட்டீஸ்...

இது போன்ற செய்திகள் படிக்காத அலட்சியம் தீவிரவாத பிம்பத்திற்கு ஆளாகிறோம்...


உளவுத்துறை, இந்துத்துவா...

மும்மைத் தாக்குதலுக்கு காரணம் ஹபிஸ் சயித் என கொக்கரிக்கும் ஊடகம்.

கர்கரை கொலை செய்தது யார்?

உளவுத்துறை மூலம் இந்துத்துவா மூலம் நடந்த தாக்குதலை மும்மை மாநகரத்தை தாண்டவில்லை செய்தி, காரணம் குற்றவாளி மராட்டிய மொழியில் பேசியதாக கூறினார் நீதிபதி ஒரு பாகிஸ்தானி எப்படி மராட்டிய மொழியில் பேச முடியும் என்றார் நீதிபதி அப்போது அது பாகிஸ்தானி கிடையாது செய்தது இந்துத்துவா, உளவுத்துறை என தெளிவாகிறதா? இதையெல்லாம் முடி மறைத்தது ஊடகம் கேட்டால் இந்த செய்தி மும்மையில் மட்டும் செல்ல வேண்டும் என மேலிடத்திலுருந்து வந்த  உத்தரவாம். அப்போது ஒரு சிறு வெங்காய வெடி வெடித்தாலும் அதை பெரிதாக காட்டி முஸ்லீம் தீவிரவாதிகள் கைது என கூறும் ஊடகம் அரசும் அவர்களுக்கும் இதுக்கும் சமபந்தமில்லை என்ற செய்தியை மூலையில் போட காரணம்.

இதுபோன்ற முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த உளவுத்துறை, இந்துத்துவா வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது.

இந்த புத்தகத்தை அதிகம் படியுங்கள் அதைவிட அதிகம் பரப்புங்கள் நீதிமன்றங்களில் எதிரொலிக்கும் வரை.

படியுங்கள் : (வேர்கள் பதிப்பகம்)
கர்கரை கொலை செய்தது யார்?

26/11 நீதித்துறை மயங்கியது ஏன்?

கசாப் - ஐ ரகசியமாக தூக்கிலிட்டது ஏன்?

புரோகித் ன் லேப்டாப்பில் இருந்தது என்ன?

சுவாமி அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

(வைகறை வெளிச்சம் வாசகர் மார்ச் 2018 மாத இதழ்)

ஆசிரியர் மு.குலாம் முகம்மது MGM-MNP விடியல் வெள்ளி நிறுவனர், தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் வேர்கள் பதிப்பகம் நிறுவனர்...

தமிழனை அழிக்க தோன்றியதே திராவிடம்...


இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்.

இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று 'திராவிடரிடம்' செல்வது வடிகட்டிய முட்டாள்தனம்.

ஏனெனில் தமிழனை வீழ்த்தி, அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் நாயக்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்...

தமிழ்நாட்டின் ஒவ்வொரு அழிவுக்கு பின்னும் திமுக இருக்கும்...


உணவு பாதுகாப்பு சட்டத்தால் அரிசி மானியம் ரத்து ரேஷன் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை மேலும் தமிழகத்திற்கு அதிக நிதி சுமை...

உணவு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் உடன் கூட்டணியில் கொண்டு வந்தது இந்த திமுக தான்....

இன்று ரேஷன் கடைகள் முன்பு போராட்டம் நடத்தி நடித்துக் கொண்டிருப்பதும் திமுக தான்...

இதற்கு பெயர் தான் நமக்கு நாமே...

நீங்களே வேறு கடைகளை நோக்கி ஓடினால் இயற்கை பொருட்கள் அழியாமல் என்ன செய்யும்...


அய்யாகண்ணு திமுகவால் இயக்கப்படும் பினாமி என்று என்றோ சொல்லி விட்டோம்...


அந்த பழைய பதிவு இது...

அய்யாக்கண்ணு 1970 ஆண்டிலிருந்து திமுகவின் உறுப்பினர்...

திமுக உறுப்பினர் அட்டை வைத்து இருக்கிறார்..

அவரது மகளை மு.க. ஸ்டாலினின் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்  பேரிலேயே டெல்லியிலும் சென்னையிலும் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இதற்காக கோடிக் கணக்கில் பணம் பெற்று இருக்கிறார்.

மீத்தேன் விஷயத்தில்  தமிழக  விவசாயிகள் ஸ்டாலின் மேல் கொண்டிருக்கும் கோபத்தை மறைத்து, அவர்களை மறுபடியும்  திமுகவின் பக்கம் அழைத்து செல்லும் வேலையை அய்யாக்கண்ணு மேற்கொண்டு இருக்கிறார்.

இவரது போராட்ட களத்துக்கு மற்ற தலைவர்கள் வரும் போது இல்லாத ஒரு சந்தோஷம் ஸ்டாலின் வரும் போது மட்டும் நூறு மடங்கு பொங்கி வழியும் இவருக்கு..

விசாயிகளுக்கு நட்ட ஈடு தருவதைக் காட்டிலும், மீத்தேன் விஷயமே ஒட்டு மொத்த  தமிழகத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாகும்.

அப்படி இருக்கும் போது மீத்தேன் விஷயத்தை பேசாமல், விவசாயிகளுக்கு நட்ட ஈடு, இழப்பீடு என்று பேசி, மீத்தேன் விஷயத்தில் இருந்து மு.க. ஸ்டாலினை காப்பாற்றி வருகிறார் இந்த அய்யாக்கண்ணு.

அப்படி இல்லாவிட்டால், போராட்ட களத்துக்கு வரும் மு.க. ஸ்டாலினின்  சட்டையைப் பிடித்து, இவர்  மீத்தேனுக்கு கையெழுத்துப் போட்டுட்டு இப்ப எங்கடா இங்க வந்தே படவா ராஸ்கல் ? என்று கேட்டு இருப்பார். ஆனால் அப்படி செய்யவில்லையே...

ஸ்டாலின் வந்து விட்டால் போதும் குதி குதி என்று குதிக்கிறார் அதை உன்னிப்பாக கவனியுங்கள்...

குறிப்பு : திமுக போராட்டத்திற்கு ஸ்டாலின் அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக டெல்லி போராட்டத்தை நிறுத்தி விட்டு திமுக போராட்டத்தில் கலந்து கொண்டு விருந்து உண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

விவசாயிகளின் துரோகி அய்யாக்கண்ணு...

அதிமுக எடப்பாடி படிப்படியாக வளர்ந்து முன்னேறிய போது...


மலேசிய தமிழர் நிலை?


தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பார்கள். உலகம் முழுவதும் தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாம். குறைந்த  பட்ச்சம் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியுமா?

இதோ மலேசிய தமிழரின் குரலை கேளுங்கள்.

இந்நாட்டில் எல்லா இனத்திற்கும் அரசாங்கம் சமமான வாய்ப்புகளையே வழங்கி வருகின்றது என்று மக்களின் வரிப் பணத்தில் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப் படுகின்றன.

எழுதிவைத்துள்ளச் சட்டத்தையே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாய்ச் சட்டத்தையா அமல் படுத்தப் போகிறது இந்த அம்னோ அரசாங்கம்? நடப்பில் உள்ள உண்மைகளைப் படியுங்கள்.

1.    நாட்டில் உள்ள 5 முக்கிய வங்கிகளில் 4 (அரசாங்கத்தின் கோட்பாட்டின் காரணமாக) மலாய்க்காரர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது.

2.    பெட்ரோனாஸில் உயர் அதிகாரிகளில் 99% மலாய்க்காரர்கள். இந்நிருவன வேலை வாய்ப்பில் 3% சீனர்களும், 0.1% இந்தியர்களும் உள்ளனர். இந்த 0.1%த்தில் 70% முசுலிம் இந்தியர்கள் ஆவர்.

3.    நாட்டில் உள்ள 2000 பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையங்களில் 99% உரிமையாளர்கள் மலாய்க்காரர்களே.

4. பெட்ரோனாஸில் பதிவுப் பெற்றக் குத்தகையாளர்கள் 100% மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும்.

5.    மலாய்க்காரர்களின் நிருவனங்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கிடையாது. ஆனால் ஆனால் மற்றவர்கனின் நிருவனங்களில் 30%அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் உண்டு.

6.    அரசாங்கத் துறைகளான, காவல்துறை, தாதிமை, தற்காப்பு ஆகியவைகளில் புதிதாக வேலைக்கு அமர்த்தப் படுபவர்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் 4%க்கும் குறைவானவர்களே.

7.    ஆகாயப் படையில்1960ல் சீனர்கள் 40%மும், இந்தியர்கள் 50%மும் இருந்தவர்கள் இன்று சீனர்கள் 2% இந்தியர்கள் 0.4% மட்டுமே உள்ளனர்.

8.    புத்ராஜெயாவில் உள்ள அரசாங்க நிர்வாகங்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் 2%த்திற்கும் குறைவானவர்களே.

9.    95% அரசாங்கக் குத்தகைகள் மலாய்க்காரர்களுக்கே. ரி.ம. 100,000.00 வரை மதிப்புக் கொண்ட அரசாங்க குத்தகைகள் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே.

10.    எல்லா வியாபார உரிமங்களும் மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில்.

11.    மலாய்க்காரர்கள் அல்லாதவர்களினால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பல நிருவனங்கள் அரசாங்கத்தின் மிரட்டலின் மூலம் அவை மலாய்க்காரர்களின் கட்டுப் பாட்டுக்கு மாற்றப்பட்டன. உதாரணம். UTC, UMBC, MISC, SOUTHERN BANK, WORKERS BANK,

12.    கடந்த 40 வருடங்களில் சீன, இந்தியர்களுக்குச் சொந்தமான குறைந்தது 15 பேருந்து நிருவனங்கள் கட்டாயம் மற்றும் அதிகாரத்துவ மிரட்டலாலும் மலாய்க்காரர்களுக்கு மாற்றப் பட்டுள்ளன.

13.    மூவார் பேருந்து நிலையத்தில் 2004 இல் மலாய்க்காரர்கள் அல்லாதவர் ஒருத்தருக்குக் கூட அங்கு கடை கொடுக்கப்பட வில்லை.

14.    புதியப் பொருளாதாரக் கொள்கையில் கீழ் கடந்த 34 ஆண்டுகளில் ரிங்கிட் மலேசியா 8,000.00 கோடியை, ASB, ASN, MARA, TABUNG HAJI, சில அரசாங்க நிருவனங்களைத் தனியார் நிருவனமாக மாற்றி அமைத்ததன் மூலம் அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

15.    1968லிருந்து 2000வரை, 48 சீன தொடக்கப் பள்ளிகளும், 144 தமிழ்ப் பள்ளிகளும் மூடப்பட்டு இதேக் காலக் கட்டத்தில் 2637 theesiya ஆரம்பப் பள்ளிக் கட்டப் பட்டுள்ளன.

16.    பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடுகளில், மலாய்ப் பள்ளிகளுக்கு 96.5%மும், சீனப்பள்ளிகளுக்கு 2.5%மும், தமிழ்ப் பள்ளிகளுக்கு 1%மும் ஒதுக்கப் பட்டுள்ளது

17.    எல்லா அரசாங்கப் பல்கலைக் கழகங்களிலும் உதவி தலைமை அதிகாரிகளாக மலாய்க்காரர்கள் மட்டுமே.1965ல் 70%மாக இருந்த மலாய்க்காரர்கள் அல்லாத விரிவுரையாளர்களில் இன்று 5%மட்டுமே உள்ளனர்.

18.    இதுவரை STPMஇல் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு அவர்களின் விருப்ப தொடர்கல்வியை அரசாங்கம் திட்டமிட்டே மறுத்திருக்கின்றது.

19.    கடந்த 40 வருடங்களில் 2 மில்லியன் சீனர்களும், 0.5 மில்லியன் இந்தியர்களும் வேறு நாடுகளுக்குத் தஞ்சம் புக, 3 மில்லியன் இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பினோக்களுக்கு இங்கே குடியுரிமை வழங்கப்பட்டதோடு, பெரும்பாலானோருக்கு பூமிபுத்ரா தகுதியும் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த 6 இலட்சம், சீனர் மற்றும் இந்தியர்களுக்கு இன்னும் குடியுரிமை மறுக்கப் படுகின்றது.

20.    அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைகாட்சி நிலையங்களான TV1, TV2,TV3ன் நிர்வாக அதிகாரிகளாக மலாய்க்காரர்கள் மட்டுமே.

21.    வைப்புத் தொகைக்கான வட்டி 2%லிருந்து 3.5% பேங்க் நெகாரா நிர்ணயித்திருக்கும் போது ASB மற்றும் ASN போன்றவைகள் 12.5%வரை தங்கள் அங்கத்தினர்களுக்கு வட்டியாகக் கொடுத்திருக்கின்றன.

இதுமட்டுமல்ல. நாட்டின் பொன் முட்டை இடும் வாத்து என்றுக் கருதப்படும் நிருவனங்கள் அம்னோ புத்ரா கட்டுப் பாட்டில் உள்ளன.

அ. வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிருவனம் (KHAZANAH)

ஆ. நீர் வினியோகம் மற்றும் கட்டுமானத் துறை (GAMUDA, MMC, HI-COM)

இ. தொடர்புத் துறை (CELCOM, TM)

ஈ. அரிசி இறக்குமதிக்கான உரிமம் (BERNAS, SYED MOKTAR)

உ. அன்றாட தேவைக்கான இறக்குமதி உரிமம் (UMNO TENAGA BANK)

இதுப் போன்ற சான்றுகள் எத்தனையோ இருக்க, ஓட்டுகள் வாங்குவதற்காக, மேடைகளில் கவர்ச்சிகரமாகப் பேசினால் மட்டும் போதாது. மக்களை மிரட்டி பணிய வைக்கும் நடைமுறையை மாற்றி அமைத்தால் ஒழிய, சத்து மலேசியா யாருக்கு என்ற அச்ச உணர்வு தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

கடைசியில் இந்தியர்கள் சப்பி எடுக்கப்பட்ட சாத்துக்கொடிகளாய் தான் வாழ வேண்டி உள்ளது. ஆட்சி மாறனும் அல்லது ஆட்சியை மாற்றனும்.

இது போன்ற ஒரு உரிமை குரல் எழுப்பிய ஒரு இயக்கம் இருக்கிறது. குண்டர் கும்பல் என்றும், சட்ட விரோத அமைப்பு என்றும் அறிவிக்க பட்ட ஒரு இயக்கம். அதை பற்றி பிறகு பாப்போம்...