குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த விவேக்கின் மனைவி திவ்யா மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற விவேக்-திவ்யா தம்பதி காட்டுத்தீயில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே விவேக் உயிரிழந்தார். 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துபாயில் வேலை செய்து வந்த விவேக், ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர். விவேக்கிற்கும் கோபிச் செட்டி பாளையத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்து வந்த திவ்யாவிற்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் ஆகியுள்ளது. திருமணமாகி 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அத்தம்பதியினர் குரங்கிணி மலைப்பகுதிக்கு டிரெக்கிங் சென்றுள்ளனர். கடந்த மார்ச் 9-ம் தேதி கொழுக்குமலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அந்த மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்று மீண்டும் குரங்கிணி பகுதிக்கு திரும்பும் பொழுது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய விவேக் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.