30/08/2020

செப்.1 முதல் தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி...


பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி - வாஞ்ஜுர்...



பாதங்களைத் தாக்குவதில் பித்த வெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.

இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது.

இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்படக் காரணம்:

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.

பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்...

அதிமுக எடப்பாடியின் தடுப்பூசி வியாபாரம் தொடக்கம்...


இந்தியாவின் கல்வியும் உண்மையும்...


சம நீதி...



சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக் கொள்ளும்படி இயற்றலாமே..

மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது..

அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால் தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகும்..

இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும் தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...

அதைப் போல் பெரும்பாலும் உலகெங்கிலும் இருக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளை "MY LORD" என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதே.

தீர்ப்பை வழங்கும் ஒரே காரணத்தால் நீதிபதிகளை கடவுளுக்கு இணையாக வைத்து கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

அதிமுக மா.பா. பாண்டியராஜனால் திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழ் ஓலைச்சுவடிகள்...



தமிழ்நாட்டில் தமிழருக்கு ஏற்ப்பட்டுள்ள அவலநிலை தஞ்சையில் ஓலைச்சுவடிகள் மாயம்...

இந்தியாவின் போலி ஜனநாயகமும் சட்டமும்...



இந்தியாவில் சட்டத்தைவிட அவர்கள் உயர்வா?

இருவரும் இந்தியர்கள்.

இருவரும் இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்..

ஒருவர் திலீபன் மகேந்திரன். இன்னொருவர் நடிகர் எஸ.வி.சேகர்.

இருவர் மீதும் இந்திய தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுன்ளது.

திலீபன் மகேந்திரன் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமன்றி அவருடைய கையும் போலிசாரால் அடித்து முறிக்கப்பட்டது.

ஆனால் எஸ.வி.சேகர் கைது செய்யப்படவும் இல்லை. சிறையில் அடைக்கப்படவும் இல்லை.

மாறாக, அவர் மன்னிப்பு கோரினால் அவர் மீதான வழக்கை  கைவிடுவதாக போலிசார் கூறியுள்ளனர்.

அதுமட்டுமன்றி மன்னிப்பு கோருவது சம்பந்தமாக அவர் யோசிப்பதற்கு ஒருவாரகால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.

ஆனால் சட்டத்தின் முன் திலீபன் ஒரு மாதிரியும் எஸ்.வி.சேகர் இன்னொரு மாதிரியும் நடத்தப்படுகிறார்கள்.

ஏனெனில் திலீபன் மகேந்திரன் உடலில் இல்லாத ஒன்று எஸ.வி.சேகர் உடலில் உள்ளது அவ்வளவே..

இங்கு 3% சட்டத்தைவிட வலிமையானதாக உள்ளது...

பாஜக அடிமை அதிமுக அரசே.. போலி ஊரடங்கை கை விடு...


பாஜக அண்ணாமலை ஐபிஸ் கோச்சிங் போனது டெல்லி samkalp coaching centre...


அது RSS நடத்தும் Coaching சென்டர்...

அண்ணாமலை Mainsல வாங்குன மார்க் 927. ஆனா முதல் மதிப்பெண் 1090. 1000துக்கும் மேல நிறைய பேர் வாங்கி இருந்தாங்க.

ஆனா இன்டெர்வியூல அண்ணாமலை வாங்குன மார்க் 240.
வேற யாரும் அவ்ளோ மார்க் வாங்கல.
1090 வாங்குனவங்க கூட 240 மார்க் வாங்கல.

RSS மூலமா இவனுக்கு யாரோ அவ்ளோ மார்க் போட வச்சிருக்காங்க.

அப்போ இருந்தே இவனை RSS வளர்த்துக்கிட்டு வந்திருக்காங்க.

எனக்கு இப்ப என்னை சந்தேகம் வருதுன்னா ரமணா படத்துல வர மாதிரி Samkalp coaching சென்டர்ல படிக்குற பல பேரை சங்கீங்க Influenceல பாஸ் பண்ண வச்சி..

நாடு முழுவதும் அவனுங்கள serviceக்கு அனுப்பி வைக்குறானுங்கனு தோணுது.

எல்லா இடத்துலயும் அவங்க ஆள் இருக்குற மாதிரி பண்றாங்க...

பாஜக மோடியின் கொள்ளையால் டிஜிட்டல் இந்தியா திவால்...


விரல்களும் மருத்துவமும்...



1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்...

கடைசி வரை பார்வையாளர்கள் அறை மட்டும் தான் டா 🤣


அதிசய கிளிப் பூ...


இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது..

ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை.

அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ..

வடிவத்தில் மட்டும் பூப்போல இல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வேறுவேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் 'பேரட் பிளவர்' என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்...

"தேவசகாயம்" ஐஏஎஸ் 😍


விரைவில் கல்வியில் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் மாறும் அவல நிலை...


செய்தியைப் பரிமாறும் கருவிதான் மொழியாம்; இதுவே கன்னட ஈ.வெ.ரா. வின் பகுத்தறிவு வழியாம்...



மொழி என்பது மனிதனுக்கு முகமையானதில்லையா?

மொழியின்றி மனிதன் வாழமுடியுமா?

மொழி இயற்கையானதல்லாமல் செயற்கையானதா?

இது எவ்வகையான பகுத்தறிவு?

மொழி என்பது செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் கருவி மட்டுமன்று என்பதை ஈ.வெ.ரா. அறிந்து கொள்ளவில்லை..

மொழி ஓர் இனத்தின் முகம்;
ஓர் இனத்தின நாகரிகம்;
ஓர் இனத்தின தொன்மை ;
ஓர் இனத்தின உணர்வு;
ஓர் இனத்தின் உயிர்..

அந்த மொழியைப் புறக்கணிப்பதன் வாயிலாக அந்த இனத்தின முகத்தினைச் சிதைத்து, அடையாளத்தைக் குலைத்து,
நாகரிகத்தை அழித்து, தொன்மையை மறைத்து, ஓர் இனத்தின் அனைத்துக் கூறுகளையும் திரித்துப் புரட்டுவதாகாதா?

’தமிழர் தலைவர்’ என்று சொல்லப்பட்ட ஈ.வெ.ரா.வுக்கு இஃது அழகா?

நிற்க, தமிழை எடுத்துக் கொண்டாலும் இன்று உலக ஞானத்திலும் முற்போக்குத் தன்மையிலும் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது?

தமிழனுக்கு முதலாவது நேரான சரித்திரம் இல்லை (பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், தொகுதி 2, பக்கம் 987.)

தமிழில் உலகஞானமும், மற்போக்குத் தன்மையும் இல்லை என்று கூறித் தமிழை ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தலாமா?

தமிழனுக்கு வரலாறே இல்லையென்று தமிழினத்தை இழிவுபடுத்தலாமா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..
என்ற வள்ளுவனின் குறளும்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்ற கணியன் புங்குன்றனின் புறநானூற்றுப் பாடலும் உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மை கொண்டவை அல்லவா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் தமிழனின் உலகஞானம் வெளிப்படுகிறது.

தெளிவான நேரான சரித்திரம் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது தமிழ்மொழியைக் கொச்சைப்படுத்துகிற ஈ.வெ.ரா. தாம் சார்ந்திருந்த தெலுங்கு கன்னட மொழியை ஏன் கொச்சைப்படுத்தவில்லை?

தன்னைச் சார்ந்திருந்த - தாம் பேசிய - தெலுங்கு மொழியை ஏன் கொச்சைப்படுத்தவில்லை?

காரணம் அந்த இரண்டு இனமொழி மக்களும் ஈ.வெ.ரா.வைத் தலைவராக ஏற்கவில்லை.

திராவிடத்தைத் தங்கள் இனமாக ஏற்கவில்லை.

அவர்கள் ஈ.வெ.ரா.வையும் திராவிடத்தைத் தங்கள் இனமாக ஏற்கவில்லை.

அவர்கள் ஈ.வெ.ரா.வையும் திராவிடத்தையும் ஏற்காததால் அவரவர் தத்தம் மாநில மொழியையும், இனத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் தற்காத்துக் கொண்டனர்.

ஆனால், தமிழ் நாட்டில் வசிக்கும் தெலுங்கர்களும் கன்னடர்களும், மலையாளிகளும் திராவிடத்தையும் ஈ.வெ.ரா.வையும், பிழைப்புக்காக ஏற்றுக்கொண்டு அரசியலில் பயனடைந்தது ”உள்ளங்கை நெல்லிக்கனி” போன்றதாகும்.

தமிழ்மொழியினைக் கொச்சைப்படுத்திய தோடன்றித் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப்படுத்தி முரட்டு நாத்திகத்தைப் பேசித் தமிழர்களின் நல்ல மரபுகளை ஈ.வெ.ரா. அழித் தொழித்தார்.

ஆகையால் தமிழர்களே..

தமிழர்களுக்கு எதிரான ஈ.வெ.ரா.வையும் பொல்லாத் திராவிடத்தையும் புறந்தள்ளுவோம்..

தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்..

தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆள வைப்போம்...

அரசியலில் குடும்பமாக இருக்கலாம்., குடும்பமே ஒரு கட்சி அரசியலில் இருக்கலாமா?


இன்றைய பாஜக விளையாட்டு செய்திகள்...


கன்னிமாரா நூலகம்...



கி.பி. 20ம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் வளர்ச்சி என்பது மிகவும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று சொல்லாம்.

எல்லாத் துறைகளிலும் எழில் மிக்க முன்னேற்றம், மாற்றம் ஏற்பட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூலக இயக்கம் சிறந்து விளங்குகின்றது என்பதை அறியலாம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நூலகப் பாதையில் இருபதாம் நூற்றாண்டினைப் “பொற்காலம்” என்று குறிப் பிடலாம்.

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும்.

கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமாக காட்சியளிக்கிறது இந்த நூலகம்.

1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினர் என்பதை அறியலாம்.

அடிக்கல் நாட்டிய ஆளுநர் அவர்கள், 1890 மார்ச் 22ல் ஆற்றிய உரையின் சாரமானது, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெற முடியவில்லை.

காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில் நூலகங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்ற வகையில் தான், பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் முன் நிற்கின்றேன்” என்றார்.

“படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்று அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் அவர்கள் மிகவும் உயர்ந்த எண்ணத்தில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று பெட்டகமாக நமது கண் முன் காட்சியாக காணுகின்றோம்.

கன்னிமாரா பொது நூலகமான சிறப்பான கட்டடம் கட்டப் பெற்று புத்தம் புதிய பொலிவுடன் காட்சியளித்தது. பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் (இன்று) பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

கன்னிமாரா நூலகத்திற்கு கொடையாக நூல்கள் வழங்குபவர்களும் வழங்கினார். பின்பு அரசு மானியத்தில் நூல்கள் வாங்கப் பெற்று சிறப்புடன் வளர்ச்சியை அடைந்தது.

நூலகத்தின் வளர்ச்சி..

1940-ல் தனி நிறுவனம் ஆகியது
1950-ல் தமிழ்நாடு மைய நூலகமானது
1954-ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது
1955-ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமாக மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று
1966-ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று
1973-ல் புது கட்டடம்
1983-ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக நூலக வரலாற்றில் எத்தனை மாற்றம், முன்னேற்றம், தொடங்கியவர்களின் ஆசைகள் நிறைவேறிவிட்டது. ‘நூல்கள் அலமாரிகள் வைக்க இடமின்றி காணப்படுகிறது என்பதை காணும் போது எத்தனை மகிழ்ச்சி.

கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது. இன்னும் எத்தனை முன்னேற்றம் காத்துக் கிடக்கின்றன. நூலகமானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றி பன்னிரண்டு மணி நேரம் திறந்து இருக்கின்றது.

1980 ஏப்ரல் முதல் படிக்க விரும்பும் எவரும் இங்கு வரலாம். வாசிக்க வரும் நபர்கள் எத்தனை ரகம் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர், குழந்தைகள், ஆராய்ச்சி யாளர்கள் என்று எத்தனையோ வகை.

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றார் திருமூலர்.

இதனை மனதில் கொண்டு வாசகர்களுக்கு - படிக்கிறவர்களுக்கு குறிப்புதவி வசதி அளிக்கப்படுகிறது. காலம் கடந்த நூல்களில் இருந்தும் எதிர்கால எதிர்பார்ப்புகளில் இருந்தும் கருத்தைத் தேடிக் கொடுக்கும் கனிவான பணியும் நடக்கிறது.

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான 'பிரெய்லி' மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது.

தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.

இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.

இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ பிலிமில் நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.

“இங்கு என்ன கிடைக்கிறது என்று எளிதிலே கேட்பவர்கள் பலர்! இங்கு எல்லாம் கிடைக்கிறது என்று சொல்லும் நிலையிலே இருக்கிறது - செயல்படுகிறது - நூலகம்.

ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சம் வாசகர்களையும் மூன்றே கால் இலட்சம் பயன்படும் நூல்களையும் பயன்படுத்த வேகம் கொண்டு அறிவுக்களஞ்சியமாக ஆராய்ச்சி மையமாய், நடைப்போடுகிறது நூலகம் இன்று, வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் கன்னிமாரா சென்று கருத்தாக்கம் பெறுங்கள்.

இத்தனையும் ஏட்டிலே எழுதிவிட்டால் இனிப்பின் சுவை குறைந்து விடும் அதனால் நேரில் சென்று சுவைத்துப் பாருங்கள்...

பாஜக அண்ணாமலை கலாட்டா...


பாஜக மோடியின் புதிய இந்தியா 😒


கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை...



தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?

இது உண்மைதான் நம்புங்கள்..

ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.

உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டு பிடித்து விட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.

அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள்.

தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை.

இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.

உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.

கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.

அதுமட்டுமா?

ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.

இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை. பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும்.

எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எலுமிச்சை...

திமுக கட்சியின் தலைவர். சாதாரண கூட்டல் கணக்குகளில் கூட கோட்டை விடும் இவர், கோட்டையைப் பிடிக்கும் கனவில் இலவுகாக்கும் கிளியாக காத்துக்கொண்டு இருக்கிறார். காத்து கொண்டே இருப்பார்...


அவர் சொல்கிறார்.. பில்கேட்ஸ் உன் ரசாயனங்கள் (GMO) பயன்படுத்தி எங்கள் விவசாயத்தை அழித்துவிட்டாய். இப்போ தடுப்பூசி கொண்டு வந்து மக்கள் தொகை குறைக்க பார்க்கிறாய்...



ஆப்பிரிக்காவில் கொரோனா இல்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தான் அதிகமாக இருக்கிறது அங்கு இருப்பவர்களுக்கு உன்னுடைய தடுப்பூசியை போடு, மேலும் உன் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உன் தடுப்பூசியை போடு. எங்களுக்கு உன் தடுப்பூசி தேவையில்லை. எங்கள் மண்ணில் கால் வைக்க இனி உனக்கு அனுமதி இல்லை.. என்று மிரட்டல் விடுத்துள்ளார்..

இந்த புரிதல் நமக்கும் வரவேண்டும் .. இந்த தடுப்பூசிகளால் வரும் பக்க விளைவுகள் பற்றி எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அவசரஅவசரமாக மக்களிடம் கொண்டு சென்று விற்பனை செய்ய நினைக்கிறார்கள்...

ஆயுத எழுத்தின் சிறப்பு....



கீழ்கண்டவாறு, தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் காணப்படும் முதற்பாடலிலேயே ஆயுத எழுத்தின் பயன்பாடு அறியப்படுகிறது....

தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம் நூன்மரபு சூத்திரம் -1

எழுத்துக்களின் வகை..

1. எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன

குமரிக்கண்டத்தில் ஓடிய ஒரு மிகப்பெரிய ஆற்றின் பெயர் பஃறுளியாறு..

என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது.

ஒரு போர் வீரனின் கேடயம் எஃகினால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில்  இருக்கும்.

அதன் பின் பக்கத்தில், பிடிப்பதற்கென ஒரு கைப்பிடி இருக்கும். முன்பக்கத்தில் மூன்று குமிழிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இருக்கும்.

போர் நடக்கும் சமயங்களில் இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கும் போது, அந்த மூன்று குமிழிகள் போன்ற கடும் பகுதிகள், பகைவனது மார்பின் மீது திரைப்படங்களில் வருவதைப் போல இடித்துத் தாக்கும்.

(அந்த நொடியில் அவன் தொண்டைக் குழியிலிருந்து "ஃ" என்ற முக்கல் ஒலி தானாக எழும் )

அந்த கேடயம் என்ற ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும்  ஆய்தம் எனப் பெயர் பெற்றது.

அந்தக் கேடயத்தால் எதிரியின் மார்பை இடித்து தாக்கும் போது, அவன் வாயிலிருந்து என்ன ஒலி எழுமோ, அதுவே அந்த எழுத்திற்கான உச்சரிப்பாகவும் இருப்பது வியப்பை அளிக்கிறது...

பிற எந்த மொழியிலும் இதற்க்கு இணையான உச்சரிப்பை கொண்ட எழுத்து கிடையாது என்பதும் இதன் சிறப்புகளில் ஒன்றாகும்...

ஆனாலும் சிலர், இந்த ஆயுத எழுத்தானது மிகவும் பிற்காலத்தில்தான் வழக்கிற்கு வந்தது ஆய்வு செய்து எழுதியும் இருக்கிறார்கள்...

அவர்கள் எதை ஆய்வு செய்தார்கள், எப்படி ஆய்வு செய்தார்கள்  என்பது புரியாத புதிராகவே இருக்கிறது...

(அப்படியே இருந்துவிட்டு போகட்டும்)

ஆயினும், தொல்காப்பியம் எழுதப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது என்பதை நாம் அறிவோம்.

குமரிக்கண்டத்தை கடல்கொண்டு மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது.

அங்கே ஆயுத எழுத்தை தனது பெயரில் கொண்டிருந்த பஃறுளி ஆறு அமைந்திருந்தது.

அப்படியானால், எந்தக் காலத்திளிருந்து வாளின் பயன்பாடும் கேடயத்தின் பயன்பாடும் தமிழர்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்திருக்க கூடும் என்பதை எடுத்துக் கூறும் ஆயுதமாக இருப்பதே இந்த ஆயுத எழுத்தின் வியப்பிற்குரிய சிறப்பாகும்...

பாஜக எஸ்.வி. சேகர் Vs காவல்துறை...


போங்கடா டேய்...


கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள்...



செம்மொழி ஆய்வரங்கத்தில் ஜுங் நம் கிம் எனும் கொரிய ஆராய்ச்சியாளர், கொரிய மொழியில் பயன்பட்டு வரும் 500 தமிழ் வார்த்தைகளை கண்டறிந்து 'கொரிய மற்றும் தமிழ் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்' என்ற தலைப்பில் கட்டுரையாக சமர்பித்திருக்கிறார்.

கொரிய மொழியில் உள்ள தமிழ் வார்த்தைகளை கண்டறிந்தது குறித்து கூறியதாவது:-

கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக பணியாற்றி வரும் நான், ஆறு ஆண்டுகளுக்கு முன் டொரோண்டோ நகரில் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தேன்.

அவர்கள் பேசிய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு கொரிய மொழி போல இருப்பதைக் கேட்டு வியந்தேன்.

அவர்களிடம் விசாரித்தபோது, இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள்.

அப்போதுதான் இரு மொழி வார்த்தைகளுகிடையே உள்ள ஒற்றுமைகளை உணர்ந்தேன்.

அதை தொடர்ந்து தமிழ் மொழியை கற்க ஆரம்பித்தேன்.

மேலும், இரு மொழி வார்த்தைகளுக்குமிடையே உள்ள உச்சரிப்பு ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன்.

அப்போது கொரிய மொழியில் சுமார் 500 தமிழ் வார்த்தைகள் இருப்பதை கண்டறிந்தேன்.

 ஒரே உச்சரிப்பு மற்றும் ஒரே அர்த்தத்தை உடையவையாக அந்த வார்த்தைகள் இருந்தன.

அப்பாவை 'அபா' என்றும் வணக்கம் என்பதை 'வணக்காம்தா' என்று பாம்பு என்பதை 'பாயெம்' என்றும் சந்தோசம் என்பதை 'சந்துதம்' என்றும் ஏன் என்பதற்கு 'வேன்' என்றும் மனைவி என்பதை 'மனுரா' என்றும் கொரிய மொழியில் அழைக்கின்றனர்.

உரத்துக்கு 'உரம்' என்றும், கண்ணுக்கு 'நுகண்' என்றும், மூக்குக்கு 'கோ' என்றும், பல்லுக்கு 'இப்பல்', புல்லுக்கு 'புல்', கொஞ்சம் என்பதற்கு 'சொங்கும்' என கூறுகின்றனர்.

இதுபோல, உடலியல் செய்கைகளும் இரு மொழிகளுக்கிடையே ஒற்றுமையாக உள்ளன.

குழந்தைகளின் தலையை ஆட்டியபடி 'தோரி தோரி' என கூறுவதும் கைகளை தட்டிக் கொண்டு விளையாடுவதும் 'சா சா க்குங்' என குழந்தைகளை கொஞ்சுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

கொஞ்சுதல் என்ற வார்த்தை கூட 'கொஞ்சு' என்றே கொரிய மொழியில் உள்ளது.

வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால், மாவிலைத் தோரணத்தால் அலங்காரம் செய்வது தமிழக பண்பாடு.

நோய் கிருமிகளை அண்டாமல் தடுக்கும் சக்தியாக மாவிலை கருதப்படுகிறது.

இதுபோல, கொரியாவில் ஆண் குழந்தை பிறந்தால் சிவப்பு மிளகாய் தோரணமும், பெண் குழந்தை பிறந்தால் விறகு கரி தோரணமும் தொங்கவிடுவது வழக்கம். கெட்ட ஆவிகளை தடுக்கும் சக்தியாக அவை கருதப்படுகின்றன.

கிருஸ்து பிறப்பதற்கு முன்னால், ரோமாபுரி பேரரசு மற்றும் தெற்கு சீனாவுக்கு தமிழர்கள் வந்திருக்க கூடும்.

ஏனெனில், தென்னிந்தியா மற்றும் இலங்கை போன்ற பகுதிகள் அப்போதைய வர்த்தக மையங்களாக விளங்கின.

மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பாலமாகவும் அவை விளங்கின.

எனவே, கிழக்கு மார்க்கமாக தெற்கு சீனா, கொரிய தீபகற்பம், ஜப்பானிய தீவுகள் போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வந்துள்ளனர்.

கி.பி.முதலாம் நூற்றாண்டு வரையிலும் கொரியாவுக்கு திராவிட இனத்துக்கும் (குறிப்பாக தமிழர்கள்) இடையே தொடர்பு இருந்துள்ளது.

வெப்பமான சூழ்நிலை காரணமாக, வெள்ளை நிற ஆடை அணிவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால், குளிர் சூழ்நிலை இருந்த போதிலும் கொரிய மக்களும் வெள்ளை நிற ஆடைகள் அணிவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

இவ்வாறு ஜூங் நம் கிம் தெரிவித்துள்ளார்...

அதிமுக வுக்கு ஓட்டு போட்டா இது தான் நடக்கும் 😴


குரங்கு கையில் சிக்கிய பூமாலை நிலையில் தமிழ்நாடு 🤦


ஒருவரது பிறப்பு ஜாதகத்தில்...



சூரியனுடன் சனியோ அல்லது சூரியனுடன் ராகுவோ கேதுவோ சேர்ந்தோ பார்வை பெற்றோ
இருந்தால்..

சந்திரனுடன் சனியோ அல்லது  சந்திரனுடன் ராகுவோ கேதுவோ சேர்ந்தோ பார்வை பெற்றோ
இருந்தால்..

அவர்கள் வாழ்வில் நிச்சயம் கண்களுக்கு சிகிச்சையோ அல்லது கண் கண்ணாடி அணிந்து கொள்வார்கள் என்பது நிச்சயம் நடக்கும்...

என்னடா கெட்டப் இது 🤣


அப்புறம் எதுக்குடா மருத்துவமனையில இருக்கனும் 🤣😂😅


திருமண தாமதம் ஏற்படுவது ஏன்...?



திருமணம் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக பத்து வருடங்களுக்கு முன்பு சொல்வதுண்டு.முதிர்கன்னிகள் என கவிதையெல்லாம் எழுதுவார்கள். ஆனால் இன்றோ முதிர்கன்னிகள் நிலை மாறி முதிர் கண்ணன்கள் அதிகமாகி விட்டார்கள். ஒவ்வொரு சாதியிலும் படித்த நல்ல வசதியான ஒழுக்கமான பையன்கள் திருமணம் ஆகாமல் எதனால் இந்த தாமதம் என்றும் புரியாமல் தவிக்கிறார்கள்.

ஒவ்வொரு திருமண தகவல் மையத்திலும் இது போன்ற இளைஞர்கள் ஜாதகங்கள் குவிகின்றன. ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் வைத்திருக்கும் திருமண தகவல் மைய நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தbபோது, திருமணம் பொறுத்தவரை பசங்க ஜாதகம் தான் அதிகம் வருகிறது என்கிறார்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கு 7வது ராசியில் சனி, சூரியன், ராகு, கேது இவற்றில் ஒரு கிரகம் இருந்தாலும் திருமனம் தாமதமாகிறது... லக்னத்தில் மேற்கண்ட கிரகங்கள் இருந்தாலும் குடும்ப ஸ்தானம் எனும் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் மேற்கண்ட அசுப கிரகங்கள் இருந்தாலும் திருமணம் தாமதம் ஆகும்.

பெண் ஜாதகத்தில், 8ஆம் இடத்தில் , செவ்வாய் சேர்ந்திருந்தாலும் சனி மட்டும் இருந்தாலும் சூரியன் மட்டும் இருந்தாலும் ராகு கேது இருந்தாலும், மாங்கல்ய தோசம் என்பார்கள்.. இதனால்  திருமணம் தாமதம் ஆகும்..

ஜாதகத்தில் 6,8ஆம் அதிபதி திசை நடந்தாலும் திருமணம் தாமதம் ஆகும்..7ஆம் அதிபதி,9ஆம் அதிபதி, சுக்கிர திசை புத்தி நடந்தால் திருமணம் தடையின்றி உடனே நடக்கும்.. குருபலம் இருந்தும் சிலருக்கு திருமணம் தாமதம் ஆக சனி லக்னத்திலோ 7,8 ஆம் இடத்திலோ இருப்பதுதான் காரணம் குறிப்பாக பெண்களுக்கு இவ்வாறு இருந்துவிட்டால் சரியான வாழ்க்கை துணை அமைவதில்லை அல்லது திருமண விசயத்தில் முடிவெடுக்க முடியாமலோ அல்லது திருமணத்தின் மீது ஆர்வம் இல்லாமலோ போய்விடும்..

அப்படி அமைந்தாலும் கணவர் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் குடும்பத்தை கவனிக்காதவராகவும் அமைந்துவிடுவதுண்டு...

எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்...



நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது ஆஸ்டியோபோரசிஸை (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார்.

மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது.

வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார்.

ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்...

இந்தியா என்பது தேசியமா அல்லது ஒன்றியமா..?


1.  தேசியம் என்பது என்ன ?

 தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.

2.  தேசம் என்றால் என்ன ?

 சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது.

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.

3. தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா?

இல்லை. தேசம் (Nation) வேறு.

நாடு (Country) வேறு.

ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம்.

ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு.

ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும்.

ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.

ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம்.

வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்.

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்...

ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்.

மேலும் அது கூறுகிறது..

பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும்.

சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல@ அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation ) என்பதாகும்.

இந்தியா ஒரு நாடு ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல.

இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.

(Article 1(1) India, that is Bharat shall be a Union of States )..

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை படியுங்கள் உண்மை புரியும்...

போலி சாதி ஒழிப்பு பெரியாரியாவாதிகளின் பின்னால் போவோர் கணவத்துக்கு...



சாதி ஒழிப்பு பற்றி தோழர் தமிழரசன் சொல்வது...

நமது உண்மையான எதிரிகளை அடையாளம் காண்போம்..

12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் சாதிகளை ஒழிக்க கிளம்பிய 'பசவர்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று “லிங்கயாத்துகள்” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.

15-ஆம் நூற்றாண்டின் கடைசியில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'கபீர்தாசு' இயக்கத்தில் சேர்ந்த இந்து, முஸ்லிம் நெசவாளிகள் இன்று “கபீர்பாந்தி”கள் என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை.

17-ஆம் நூற்றாண்டின் முடிவில் 'சத்தியமே கடவுள்' என்று சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ஜகஜீவன்தாசு' எனும் 'ராஜபுத்திரரின்' இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இன்று “சத்நமி” என்னும் புது சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை..

19-ஆம் நூற்றாண்டின் முடிவில் சாதிகளை ஒழிக்கக் கிளம்பிய 'ரயிதாஸ்' இயக்கத்தில் சேர்ந்த 'சமார்கள்' இன்று புதிய சாதியானார்களே தவிர சாதி ஒழியவில்லை..

சாதிகளை எதிர்ப்பதாகக் கூறி சாதிகளே இல்லாத முஸ்லீம், கிறித்துவ மதங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தன..

ஆனால், அவைதாம் சாதிகள் உள்ளவையாக மாறினவே தவிர சாதிகள் ஒழியவில்லை..

தாழ்த்தப்பட்டவரிலிருந்து முஸ்லீமானவர் ''மூசல்லி" சாதியாகவும்,

பஞ்சாபில் துப்புரவு சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''சூஹ்ரா'' சாதியாகவும்,

பஞ்சாபில் 'கத்தி' சாதியிலிருந்தும், சிந்துவில் 'லோகனா' சாதியிலிருந்தும் முஸ்லீமானவர்கள் ''கோஜா" சாதியாகவும்,

'ராசபுத்திர' சாதியிலிருந்து முஸ்லீமானவர் ''லால்கனி" சாதியாகவும்,

பஞ்சாபில் முஸ்லீமாயுள்ள "அவான், கோஷி, கட்டீ, மிராதி" சாதிகளாகவும்,

மேல் இந்தியாவில் "லால்பெகி, மிவாதி ஜொலாகா" சாதிகளாகவும்,

சிந்து பகுதியில் "மீமான்,
துருக்கிய பஞ்சாரா சமார்,
கௌர் சாதிகளாகவும்",,..

பார்ப்பனரிலிருந்து முஸ்லீமானவர் "தாக்கர் சாதியாகவும்,
டவாய்ப் சாதியாகவும்" ...

சாதியற்ற முஸ்லீம் மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன..

அதேபோன்றே சாதியற்ற கிறித்துவ மதத்தில் சேர்ந்த நாடார்.. கிறித்துவ நாடாராயும், தேவர், கிறித்துவத்தேவராயும், பள்ளர், கிறித்துவப்பள்ளராயும், கவுண்டர், கிறித்துவக் கவுண்டராயும்.....

சாதியற்ற கிறித்துவ மதத்தில் எண்ணற்ற சாதிகள் தோன்றிவிட்டன..

ஆரியமதம், வைதீகமதம், சனாதன மதமென அழைக்கப்படும் இந்து மதத்தின் அடித்த்தளமான சாதியமைப்பை, அம்மதத்திற்குள்ளிருந்து எதிர்ப்பவர்களையும் சரி.,

முறியடித்து அவர்களையே சாதியமைப்பைப் பின்பற்றும்படி செய்யும் வல்லாண்மையுடையதாய் சாதியமைப்பு இருந்து கொண்டிருக்கிறது.

இப்படி சர்வவல்லமையுடன் நிலைத்து நீடித்து நிற்கும் சாதியமைப்பை அடியோடு அழிக்க வேண்டுமெனில் அதைப் பற்றிய மார்க்சிய அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான பார்வையும், அணுகுமுறையும் தேவை..

தோற்றம், வளர்ச்சி, அழிவு, நிலைமைகள் பற்றிய தெளிவும் தேவை..

- தோழர் தமிழரசன் (1945 --1987)
தலைவர், தமிழ்நாடு விடுதலைப்
படை (TNLA)...

பிங்க் நிறத்தின் தாக்கம்...



மிகவும் முரட்டுத்தனமாக முரண்டு பிடிப்பவர்களை அகிம்சைவாதிகளாக மாற்ற வேண்டுமா?

அவர்களை அடித்து உதைத்து, சித்ரவதை செய்து மாற்ற முடியுமா? அல்லது தியானம் பயன்படுமா?

என்று கேட்டால்... இதில் எதுவும் பயன்படாது...

அவர் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ்.

வாஷிங்டன் ஜெயில்களில் பல அடாவடி பார்டிகள் அறையில் பிங்க் பூசிய பொது அவர்கள் சில மாதங்களிலேயே அகிம்சை வாதிகளாக மாறி விட்டார்கள்.

பொதுவாக பிங்க் நிறம் மென்மை மற்றும் பெண்மையை குறிக்கும்.

இயல்பாகவே பெரும்பாலான ஆண்களுக்கு பிங்க் பிடிப்பதில்லை. கோபத்தில் கொந்தளிக்கும் போது ஒருவரால் முழுதாக கோபத்தைக் காட்ட முடியாது..

ஏனெனில் இதயதசைகள் வேகமாக செயல்படாது..

பிங்க் நிறம் ஒருவருடைய ஆற்றலை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும். இதனால் கோபம் குறைந்து சாந்தமாக மாறி விடுவார்கள்..

சாதாரண நிலையில் ஒருவர் இருந்தால் பிங்க் நிறம் லேசான சோம்பலை ஏற்படுத்தும்.

நிறக்குருடு பாதிப்பு கொண்டவர்களும் பிங்க் நிறத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்கிறார் ஸ்காஸ்..

ஹவாய் பல்கலைக்கழகத்தில் வெளியில் இருந்து விளையாட வரும் விளையாட்டு வீரர்களின் தங்கும் அறைகள் பிங்க் அல்லாத வேறு நிறத்தில் இருக்க வேண்டும் என்ற விதியே இருக்கிறது.

காரணம் எதிரணி பிளேயர்களின் அறைகள் பிங்க் நிறத்தில் இருக்க அவர்கள் சோம்பேறிகளாகி பல ஆண்டுகள் தொற்றுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான பாரிஸ் ஹில்டன் ஒரு பிங்க் பைத்தியம்..

ஒருகோடி ரூபாய் பென்ட்லி காரை விலைக்கு வாங்கி அதை அப்படியே பிங்க் நிறத்துக்கு மாற்றிவிட்டார்.

எந்த விழாவாக இருந்தாலும் பிங்க் நிறத்தில்தான் ஆடை அணிந்து வருவார்.

நான் அமெரிக்க அதிபரானால், வெள்ளை மாளிகையை பிங்க் மாளிகையாக மாற்றி விடுவேன்' என்று தைரியமாக சொல்லும் அளவுக்கு பிங்க் பைத்தியமாக ஹில்டன் இருந்தார்...