25/06/2018

பாஜக - அதிமுக - காவல்துறை அராஜகம்...


சென்னையில் திரைப்பட இயக்குநர் கவுதமன் திடீரென கைது. வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை போலீஸ் தரதரவென இழுத்துச் சென்றது.

சென்னையில் நடந்த ஐபிஎல் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக கூறி திருவல்லிக்கேணி போலீசார் அவரின் மீது 8 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி  வழக்குப்பதிவு செய்துள்ளனர்...

இயற்கையை நோக்கி பயனிப்போம்...


மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி...


நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப் போடலாம் என்றும் கூறுவது உண்டு.

நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.

ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும் தான். முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து.

அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய

தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்..

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்...

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.

அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம்.

இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை...

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும்.

அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்..

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அசு(ஸ்)கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரசுக்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போகை(ஹை)ட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பொசுபரசு, வைட்டமின் பி பல பாககங்கள் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர...

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய...

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க...

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர...

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்...

பாஜக விடம் வாங்கி திண்ணும் ஊடகங்கள்...


நம்பிக்கை...


நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல. எல்லா மனிதர்களும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே.

ஆனால், தெய்வ சக்தியின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து ஒருவன் செயல்படும் போது, அவனது திறமையின்மைகூட திறமையாக மாற்றப்பட்டுவிடும்.

- ஸ்ரீஅரவிந்தர்...

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும், மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

- யாக்கோபு 1:27...

நிச்சயமாக அல்லாஹ் (இறைவன்) மனிதர்களுக்கு எந்தவித அநியாயமும் செய்யமாட்டான். எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றார்கள்.

- திருக்குர்ஆன் 10:44...

காரைக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை மீட்பு வெற்றி கூட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான அதிமுக வினர்...


நோயை உமிழ்நீர் சொல்லும்....


உங்கள் நோயை உமிழ்நீர் சொல்லும்! உமிழ்நீர் மூலம் மரபணு நோய்களைக் கண்டறியும் பரிசோதனை சென்னையில் செய்யப்படுகிறது அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்து வைத்துவிட்டுப் போவது பரம்பரைச் சொத்து மட்டுமல்ல; அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒருவிதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது.

நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதசு(ஸ்)வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ச(ஸ)போன் வாசிப்பவராக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இவை மட்டுமின்றி, அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்கிறார்கள் என்பதுதான் வேதனை. அவர்கள் விட்டுச் செல்லும் சொத்து மட்டும் வேண்டும், நோய்கள் வேண்டாம் என்றால் எப்படி?

கவலைப்படாதீர்கள், இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவும் அறிவியல் ஒருவழியை கண்டுபிடித்துத் தந்திருக்கிறது. செர்சி(ஜி) மிகாலோவிச் ப்ரின் என்று பெயர் சொன்னால் உடனே தெரியாது.

ஆனால், ‘கூகுள்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்று சொன்னால் தெரியுமில்லையா?

இந்த செர்சியின் மனைவி ஓர் உயிரியல் தொழில்நுட்பப் பட்டதாரி. கணனி  விற்பன்னரும், உயிரியல் தொழில்நுட்பம் தெரிந்தவரும் இணைந்தால் என்னாகும்?

ஆராய்ச்சிதான். மனித மரபணுக்கள் தொடர்பாக நிறைய துறை சார்ந்த பேராசிரியர்களிடம் நாட்கணக்கில் பேசிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அதாவது நமது மூதாதையர்களிடமிருந்து நமது மரபணுக்களில் கடத்தப்படும் செய்திகள், கணனிகளில் சேமிக்கப்படும் தரவு தளம் (Database) மாதிரி அவற்றை வாசித்துப் புரிந்து கொண்டால், மென்பொருளை திருத்துவது மாதிரி நமக்குத் தேவையான சில திருத்தங்களை செய்துகொள்ளலாம்.

இதெல்லாம் தேவையற்ற வேலை. எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளாத வாழ்க்கையே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றெல்லாம் நிறைய பேர் செர்சியை விமர்சித்தார்கள். செர்சி மெனக்கெட்டு இவ்வளவு ஆராய்ச்சிகளுக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ள ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது.

அவரது தாயாரை பார்கின்சன் நோய் தாக்கியிருந்தது. இது பரம்பரையாக தாக்கக்கூடிய நோய் என்று அவர் நினைத்தார். இதிலிருந்து தன்னை எப்படி எதிர்காலத்தில் காத்துக்கொள்வது என்கிற தேடலில் மூழ்கியதன் விளைவே இதெல்லாம் (பிற்பாடு அந்த நோய் பரம்பரையாக கடத்தப்படுவதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தது வேறு கதை).

இப்படியாகத்தான் 23andMe என்கிற மரபணு பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிற ஒரு நிறுவனத்தை தம்பதி சமேதரரா தொடங்கினார்கள். 23 என்கிற எண் நம்முடைய குரோமோசோம் சோடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 2007ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மரபுரீதியாக நமக்கு என்ன நோய்கள் வரும் என்பதை அறிந்து கொள்ள ஓர் எளிமையான முறையைக் கண்டறிந்தது.

அதாவது நம் எச்சிலைத் துப்பினால் போதும், அதில் இருக்கும் மரபணுக்களை ஆராய்ந்து, அவர்கள் வாசித்துக் கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வரக்கூடிய மரபார்ந்த நோய்களை அறிவார்கள். இவற்றைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ எப்படி என்று மருத்துவர்கள் மூலமாக ஆலோசனை சொல்வார்கள்.

2008ம் ஆண்டு இந்தச் சோதனை முறையை வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக, ‘டைம்’ பத்திரிகை அறிவித்தது. அமெரிக்கர்கள் பலரும் கடந்த ஐந்தாண்டுகளில் இச்சோதனையை மேற்கொண்டு, எதிர்காலத்தில் தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நோய்களின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா..? அவர்களுக்கு மட்டும்தான் பரம்பரை நோய்கள் வருமா..?

இந்த நவீன சோதனைமுறை அவர்களுக்கு மட்டும்தானா என்று அவசரமாக மனம் குமுறாதீர்கள். நமக்கும் இந்த வசதி வந்துவிட்டது. அதிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரபணு நோய்களை முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனையை செய்யும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது.

எக்சு(ஸ்)கோட் வாழ்க்கை அறிவியல் (Ekskot Life Sciences) என்கிற நிறுவனம் இந்தக் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள மட்டுமே பெரும் முதலீட்டில் களமிறங்கியிருக்கிறது. அதற்காக சோதனைக்கு நம்முடைய சொத்தையே எழுதி வாங்கிவிடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

சோதனைக் கட்டணம் ரொம்பவும் அதிகமல்ல, அதே நேரம் ரொம்பவும் குறைவுமல்ல. இச்சோதனையை மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன? www.xcode.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று, உங்கள் மரபணுக்களை சேகரிக்க வேண்டியஉபகரனத்தைக் கோரலாம்.

இரண்டு நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். எச்சிலை சிறியகுழாயினுள் துப்பிவிட்டு, அவர்கள் குறிப்பிடுவதைப்போல தயார் செய்துவிட்டு போன் செய்தால் போதும், பொதி (Courier)மூலமாக அவர்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

மருத்துவமனைக்கோ, பரிசோதனைக்கூடத்துக்கோ அலைய வேண்டியதில்லை. மொத்தமே அவ்வளவுதான். உங்களுடைய அறிக்கையை  நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக உங்கள் வீட்டுக்கே அனுப்பிவிடுவார்கள்.

சர்க்கரை நோய், கொழுப்பு, இதயநோய், வாதம் தொடர்பான நோய்களுக்கான சோதனை முறைகள்தான் இப்போதைக்கு இருக்கின்றன. எதிர்காலத்தில் மரபுரீதியாக வரக்கூடிய மற்ற நோய்களைக் கண்டறிவதற்கான வசதியும் இங்கே கிடைக்கும்.

உங்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடுமென்று சொல்லுவதோடு, அவற்றைத் தவிர்க்கவோ கட்டுப்படுத்தவோ என்னென்ன மாதிரியான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம் என்று மருத்துவ ஆலோசனையும் தருகிறார்கள்.

இப்போது இருக்கும் சோதனை முறைக்கு அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை தான் செலவாகும். அப்புறமென்ன? என்னென்ன நோய் வருமோ என்று அஞ்சி நடுங்காமல், ஒரு சோதனையை எடுத்துவிட்டு வருமுன் காக்கத் தயாராகுங்கள்...

அமெரிக்க வியூகங்கள் இப்படி இருக்க, ஈரானோ கொஞ்சமும் அசராமல் இருக்கின்றது, காரணம் அவர்களின் திட்டமே வேறு...


எடையை குறைக்கும் பட்டை இஞ்சி தேநீர்...


எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள்.

இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்...

பட்டை - 2 அங்குலம்
இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)
கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 2 துண்டுகள்
புதினா - 5-6 இலைகள்
தேன் - தேவையான அளவு

செய்முறை...

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்...

பாஜக பினாமி கலெக்டர் ரோகினியும்.. மோடியின் முதலாளி அம்பானியும் கூட்டு சதி...


2ஆம் உலகம் கண்டுபிடிப்பு...


நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டு பிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை மிகவும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சற்று குளிர்ச்சியான, அளவில் பெரிதற்ற, புறத்தோற்றத்தில் நீரைக் கொண்டமைந்துள்ளது மாத்திரமன்றி உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து சூழலையும் இந்த கிரகம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த கிரகத்துக்கு ஏர்த் 2.0 (Earth 2.0) என நாசா நிநுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் பெயர் சூட்டியுள்ளார்.

இந்த கிரகமானது, பூமியிலிருந்து 1,400 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது எனவும் விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் கூறியுள்ளார்...

தமிழினமே விழித்துக்கொள்...


கலியுகம் பற்றி ஆசான் கோரக்கர்...



யோகி பரமானந்த
கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமத
பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள்
பெண்பால் விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள்
குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும்
முறைமை கெட்ட
மூதரிய தாயினையே
சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது
பயில்வார் பங்கில்
பூவலகிற் கலியுனுட
பான்மை கேளே
– ஆசான் கோரக்கர்

உலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.பெண் மக்களே நிறைய பிறப்பார்கள். ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள். இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப்போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு.

கேளே நன்மனுக்கள்
நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல்
அரிதே யாகும்
நாளேமுன் கலியவனும்
வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும்
உயரங்கட்டை
வாளே முன் பின்
வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு
மிடத்தைத் தென்பா
சூளே மெய்ச் சும்பலப் பட்டன்
வைணவ தத்தன்
கொல்லை புண்னை மரத்தின்கீழ்க்
கலி செனிப்பே
– ஆசான் கோரக்கர்

இன்னும் சொல்கிறேன் கேளப்பா இப்பூமியில் நன் மக்கள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக இருக்கும்.நாளாக நாளாக கலியின் கொடுமைகள் ஓங்கி வளர்ந்து நிற்க்கும்.மனிதர்களின் உயரம் குறைந்து குட்டையாக ஆவார்கள். மனிதர்களின் ஆயுளும் குறைந்து 100 ஆகிவிடுமாம்.

கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்.

கலியும் பிறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதையும் கூறுகிறார்.

கலியான ஆண்டு
ஐயா யிரம்பின்
கருத்துடனே
சாதி மத பேதம் ஒன்று
நலியாது சந்திரகலை ஐ
யாயிரம் மட்
டானதப்பால் ரவியோட்ட
மதிக மாகிப்
பொலிவாகப் பூலோகந்
திரண்டே நிற்கும்
பொய்யான அந்தணரின்
கொட்டம் போகும்
வலியுடனே சத்தியத்தான்
நிலையே யோங்கி
வழுவாது மனுக்கள்
ஞானி யாமே.
— ஆசான் கோரக்கர்

கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும். சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும். பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும். தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.

தான தரும தத்துவ
யோகம் அதிகம் ஆகும்
தாரணியில் மாந்தர்
பல வருண மாவர்
ஈனமின்றி யோக ச
க்கி ராதி பத்தியம்
இனமுடனே ஆண்டென்
பத்தீ ராயிரம்
மோனமுடன் இருந்தாண்டு
வசிப்பார் நாடு
முகமினிய நவரத் தின
விளைவுண் டாகும்
போனகமாய்க் குளிகையிட்டுப்
பறப்பார் விண்ணில்
பூரணமாய் ஆயுளுற்று
வாழ்கு வாரே.
— ஆசான் கோரக்கர்

இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும். இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர். ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும். நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள். உண்டாகும்.குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.

அந்தநாள் அக்காலம்
நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள்
அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல்
சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந்
தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம்
ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம்
வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு
மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால்
மாள்வார் கதிரே.
— ஆசான் கோரக்கர்

கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.

கதிரவணுங் கடும்பனியுங்
காருங் கோடைக்
கற்பனைகள் மெத்தவுண்டு
ஆகாயத்தில்
மதி தாழ்ந்து கரியினுட
மண்டை போல
மகாரூப ரூப வெளி
மதி மேற் காணும்
துதியாக நாழி இரு
இருபத் தைந்தில்
தோற்றிடுமே மாத்திரைதான்
மூன்று மட்டும்
சதியாக வடதேசம்
தன்னி லோர்பால்
கடல்போங்கி நெருப்பு ரத்த
மழையுடண் டங்கே.
— ஆசான் கோரக்கர்

கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.

எங்கெங்கும் சாதுக்கள்
ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய்
எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை
பாத கன்றான்
பக்தர்களை சிறை
கொள்வன் பட்ச மின்றி
மங்கி செக தீசனையே
பூஜிப்பார் கூவி
மாநிலந்தான் பிரளயம்போல்
மயங்கிக் காணும்
சங்கையுடன் சண்டாளர்
சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென்
றறைந்து போனார்.
-ஆசான் கோரக்கர்

எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.

சந்திரரேகை 200 என்ற நூலில் ஆசான் போகரின் சீடரான ஆசான் கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்...

டாரெட் மனிதன்...


அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு மறுசுழற்ச்சி தொழிற்நுட்பத்தை கொடுக்கக்கூடாது என்று சீனா உட்பட பல நாடுகள் முட்டுக்கட்டை போட்டு இருக்கின்றன...


ஆனால் இனி வரும் காலத்தில் அது தகர்க்கப்பட்டு இந்தியா பயன்படுத்தும் அணு குண்டுக்காக... காத்திருங்கள்...

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது... ஆதாரம் இதோ......


W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.

எடுத்துகாட்டுகள் :

Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.

கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது.

இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.

ஆதாரம் : உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள் - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

ஆதாரம் கேட்கும் நண்பர்களுக்காக இந்த ஆதாரத்தைக் காட்டியுள்ளேன்...

எமுத்து வடிவம் ஏன் நமக்கு முக்கியமாக தேவைப்படுகிறது.?



இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை...


வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது...

சாகர்மாலா - உலகப் போர்...


சேலம் 8 வழிச் சாலையும்.. பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதமும்...


மக்கள் கதறும் ஓலம் கேட்கவில்லையா.?

மக்களுக்கா மக்களே தேர்த்தெடுக்கப்படும் ஆட்சி மக்களாட்சி..

இதை பாடப்புத்தகத்தில் மட்டும் எழுதிவிட்டு மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் பாஜக பினாமி அதிமுக அரசே...

இது என்ன மக்களாட்சியா? இல்லை இது மானங்கெட்ட ஆட்சிடா...

இதற்கான அனைத்தும் ஒப்பந்தம் முடிவு செய்து, கையொப்பம் செய்து விட்டார்கள்...


இனி ஒவ்வொன்றாக தனியார் மயமாக்கப்படும்..

உங்களின் அடிப்படை வாழ்வாதாரம் அனைத்தும் இனி தனியார் மயம்,

அப்படியென்றால் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க போகிறவர்களும் அவர்களே....

விருதுநகர் மாவட்டத்திற்கு வருகிறது சிமெண்ட் ஆலை...


கர்நாடக சங்கீதம் தமிழிசையே...


நிறுவிய கிறித்தவரும்... ஆராய்ந்த இசுலாமியரும்...

தமிழிசையே இப்போது 'தென்னிந்திய இசை' என்றும் 'கர்நாடக சங்கீதம்' என்றும் வழங்கப் படுகிறது...

வட இந்திய இசை அல்லது 'ஹிந்துஸ்தானி இசை' இந்தத் தமிழிசையின் ஒரு 'வளர்ச்சி நிலையே' என்றும் தெரிய வருகிறது.

தமிழ்நாட்டு வரலாற்றை நாம் கூர்ந்து பார்க்க வேண்டும்..

கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு வரை இங்கே களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.

தொடர்ந்து 20 ம் நூற்றாண்டு வரை தமிழகம் மாறி மாறி பிறமொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

இடைக் கால சோழர் ஆட்சியும் இடைக் கால பாண்டியர் ஆட்சியும் சிறு இடைவெளிகள் தான்.

இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாக தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.

பல்லவர்கள் வடமொழிக்கும், தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.

நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம்.
பிறகு மாரட்டியரின் காலகட்டம். இந்தக் கால கட்டங்களில் பொதுவாக தமிழ்க் கலைகளுக்கு சரிவும், தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன.

பிற மொழியினர் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் வடமொழியிலும், தெலுங்கிலும் எழுதினார்கள்.

வடமொழி என்பது இந்தியா முழுக்க தொடர்பு ஏற்படுத்தித் தரும் தொடர்பு மொழியாக இருந்தது.

தெலுங்கு ஆட்சிமொழி.

இன்று ஆங்கிலம் நமக்குக் கவர்ச்சியான மொழியாக இருப்பது போல வடமொழியும், தெலுங்கும் உயர்குடி மொழியாகவும் கருதப்பட்டன.

இசை முற்காலத்தில் அரச சபைகளையே பெரிதும் நம்பியிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அரச சபை தெலுங்கிற்கும், வடமொழிக்கும் முக்கியத்துவம் தரும் போது பாடகர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் வேறு வழி இல்லை.

சரி, இந்த இசையமைப்பு தமிழ் நாட்டுக்கு உரியது என்பதற்கு என்ன
ஆதாரம்?

நமது பண்டைய இலக்கியங்களே முதல் ஆதாரங்கள்..

ஆபிரகாம் பண்டிதர் அதை விரிவாக நிறுவியிருக்கிறார்..

நான்கு வகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தது தமிழ் மரபு. நான்கிற்கும் கருப்பொருள், உரிப் பொருள் வகுத்தது.இது நமது கலை இலக்கியங்களுக்கெல்லாம். பொதுவான இலக்கண. அடிப்படையாகும்.

நான்கு நிலத்திற்கும் தனியாக நான்கு பெரும் பண்கள் கூறப்பட்டுள்ளன. நான்கு பெரும் பண்களும். நான்கு சிறு பண்களும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன.

நான்கு நிலங்களும், பாலையாகத் திரிபு கொள்ளும் போது அதற்கும் பெரும் பண் சிறு பண் வகுக்கப்பட்டுள்ளது.

பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன.

நான்குநிலத்திற்கும் உரிய பெரும் பண்களை பாலைஎன்கிறோம்.

நமது பழந்தமிழ் இலக்கியங்களில் 'ஏழ்பெரும் பாலை' என்பது அடிக்கடி குறிப்பிடப் படுகிறது.

சிலம்பு (உரையாசிரியர்கள்) கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ் பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் பண்டிதரே.

ஏழ்பெரும் பாலைகளாவன..

1. செம்பாலை
2.அரும்பாலை
3.கோடிப்பாலை
4.மேற்செம்பாலை
5.படுமலைப்பாலை
6.செவ்வழி
7.விரிம்பாலை

இந்த ஏழு பண்களையும் வட்டப் பாலை முறையில் அமைத்துக் காட்டியவர் பண்டிதரே.

வட்டப் பாலை முறையில் ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனையாகும்.

எல்லாருக்கும் புரிகிற, தெரிந்த உதாரணம் சொல்கிறேனே.

சிலப்பதிகாரத்தில் 'ஆய்ச்சியர் குரவை' என்ற பாடல் பகுதி வருகிறது.

அது "முல்லைத் தீம்பாணி" என்று குறிப்பிடப் படுகிறது.
‘சரிகபத ‘ என்பது அதன் சுரம்.
இந்த முல்லைத் தீம்பாணி தான் இன்றைய"மோகனராகம்".

கர்நாடக இசை என்ற பெயர்
எப்படி வந்தது?

தியாகராஜர் சென்னையைத் தாண்டிப் போனதே இல்லை.

ஒருமுறை திருப்பதி போனதாக தகவல்.
அவர் பாடியதெல்லாம் இங்கே இருந்துதானே?

கர்நாடக இசை என்ற பெயரெல்லாம் பிற்பாடு வந்தது.

பெயர் மாறினால் என்ன?

ருக்மிணி தேவி அருண்டேல் சின்னமேளம் அல்லது சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார்.

பெயர் மாறினால் மரபு மாறுமா?

கேரளத்திலிருந்து திருவிழா ஜெய்சங்கரும்,
ஆந்திராவிலிருந்து லால்குடி ஜெயராமனும் ஒரே இசைதானே பாடுகிறார்கள்? 

(தமிழிசைக்கு அகராதி எழுதிய அறிஞர்  நா.மம்மது அவர்களின் பேட்டியிலிருந்து
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403184&format=print&edition_id=20040318 )

ஆபிரகாம் பண்டிதர் பற்றி...

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபிசையை,
தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக,தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார்.

இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார்.

இராகங்களை உண்டு பண்ணும் முறை,
பாடும் முறை ஆகியவற்றைபழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார்.

அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.

பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917இல் பெரும் இசை நூலாகக் 'கருணாமிர்த சாகரம்' என்ற பெயரில் வெளியிட்டார்.

1395 பக்கங்கள் உடையது இந்நூல்.
இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது...

பாஜக மோடியின் முதலாளி அம்பாணி யின் சொத்து 2 நாளில் 9,300 கோடி உயர்ந்துள்ளது...


வூடு மாந்திரீகம்....


உலக மாந்திரீகத்தில் இரண்டாவது இடம் பிடிப்பது வூடு என்னும் மதத்தின் மாந்திரீகம் ஆகும். 

இது மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தோன்றிய ஒரு மதமாகும். இந்த மதத்தைப் பின் பற்றுகிறவர்கள் வூடோசோ என்பர்.

இவர்களது மதத்தில் இறந்தவர்களை வணங்குவது, பில்லி சூனியத்தை உருவாக்குவது, பில்லி சூனியத்திற்கு எதிராக மக்களைக் காப்பாற்றுவது போன்ற பல முறைகள் உள்ளது. இவர்கள் மாந்திரீக முறைகளிலும், இந்திய முறைகள் போல் மந்திரங்கள், தந்திரங்கள், சடங்குகள் போன்றவை உள்ளன. இவர்கள் முறையிலும் கடவுள் என்று ஒருவர் உண்டு என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இவர்கள் முறையிலும் இங்கு உள்ள மாந்திரீக முறைகளான மஞ்சள் பாவை, மாபாவை, மரப்பாவை போன்றவைகள் போல் அவர்களும் துணிகளை வைத்து பாவைகள் உருவாக்கி மாந்திரீகம் செய்யும் முறை இருக்கிறது. இவர்கள்  மாந்திரீகம் செய்யும் பொழுது இசைகளுடன் ஆடிப்பாடி மகிழ்வர். இது அவர்களுக்கு மன ஒருமைப்பாடை கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

இந்திய மாந்திரீகத்தில் கணக்குகள் பொதுவாக சூரியனைச் சார்ந்ததாக இருக்கும். ஆனால் வூடு மதத்தைச் சார்ந்த மாந்திரீகத்தில் சந்திரனை கணக்காக எடுத்துள்ளனர். பொதுவாக இவர்களில் ஆண் மந்திரவாதியும், பெண் மந்திரவாதியும் அதிகம். இவர்கள் தங்கள் சக்தியை இறந்த முன்னோர்கள் மூலம் பெறுவதாக நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் மூலம் அதிதீவிர சக்தியைக் கொண்ட கடவுளை அணுக முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இந்த வூடு மாந்திரீக முறையில் மாந்திரீகம், மந்திரம், தந்திரம், மருத்துவம் ஆகியவற்றை ஒன்று போல் செய்கின்றனர்.
 
மருத்துவம் என்றால் ஆப்பிரிக்க நாட்டின் பச்சை இலை மருத்துவம் ஆகும். இத்தகைய வூடு மதத்தைச் சார்ந்த வைத்தியர்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றனர். அமெரிக்கா நாட்டில் உள்ள பெரும் செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் தங்கள் காரியங்களை நிறைவேற்ற அவர்களிடம் செல்வதுண்டு. சிலர் ஆப்பிரிக்காவில் நடுக்காட்டில் வசிக்கும் வூடு வைத்தியர்களைச் சென்று பார்க்கும் பழக்கம் உண்டு. அவர்களும் வூடு பொம்மை மீது ஆணிகள் அடித்து காரியங்களை நிறைவேற்றுவதாக ஒரு ஐதீகம் உள்ளது.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இவர்கள் மாந்திரீக முறைகள் அனைத்தும் என் அறிவுக்கு உட்பட இந்திய நாட்டு மாந்திரீக முறையைக் காட்டிலும் சிறந்தது என்று கூற முடியாது...

அணுஉலை - கூடங்குளம்.. கல்பாக்கம் உண்மைகள்...


ஹெக்டருக்கு ஒன்பது கோடி வரை வழங்கப்படும் - சேலம் மா.ஆ. ரோகிணி... திட்ட அறிக்கையில் சேலத்தின் சந்தை மதிப்பு ஹெக்டருக்கு 25 லட்சம். அந்த ஒன்பது கோடி மதிப்புள்ள நிலம் எங்கே இருக்கிறது என ரோகிணி ஆர்மி சங்கம் தேடுகிறதாம்...


தூத்துக்குடியில் நடக்கும் காவல்துறை அராஜகம்...


மன உறுதியே மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும்...


உடல் உறுதியைவிட மன உறுதியே மாற்றங்களை நிகழ்த்திக்காட்டும். இதோ ஒரு உதாரண மனிதன்...

ஏஞ்சலோ சிசிலியானோ என்பவர் இத்தாலியில் பிறந்தவர். பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் மெலிந்த தோற்றத்துடன் இருந்தார். இதை பலர் ஏளனம் செய்தனர். ஒருநாள் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முரடன், ஏஞ்சலோ முகத்தில்படும்படி கடற்கரை மணலை வாரி இறைத்தான். இந்தச் செயல் ஏஞ்சலோவிற்கு பெரிய அவமானத்தை அளித்தது.

உடனே தீர்க்கமாக முடிவெடுத்தார். கடினமான உடற்பயிற்சிகளை செய்து வலிமையான உடலமைப்பைப் பெறுவது என்று உறுதியேற்றார். உடலமைப்பை மெருகேற்றி வந்தார். ஒருமுறை மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலி போன்ற மிருகங்களைக் கவனித்தார். அவை தங்களது தசைகளின் வலிமையைக் கொண்டே ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்தார்.

தானும் அவற்றைப் போல வலிமையான தசைகளைப் பெற வேண்டும் என்று கடினமான பயிற்சி மேற்கொண்டார். இவர் 12 நிலைகளில் பயிற்சியை வரையறுத்துக் கொண்டு பயிற்சி செய்தார். பிறருக்கும் பயிற்சி அளித்தார். இவரது பயிற்சிமுறை உலகளவில் தரமுடையதாகக் புகழ்பெற்று பரவியது.

'அட்லஸ்' சிலை ஒன்று பூமியை தாங்கிக் கொண்டிருக்கும். இதைப்பார்த்த பலருக்கு ஏஞ்சலோ சிசிலியானாவின் கட்டான உடல்தோற்றமே நினைவுக்கு வந்தது. அதனால் அவரை 'சார்லஸ் அட்லஸ்' என்று அழைக்கத் தொடங்கினர். அன்று முதல் தனது பெயரை (சட்டப்படி) அட்லஸ் என்று மாற்றம் செய்து கொண்டு தன்னுடைய பயிற்சி நிறுவனத்திற்கு 'அட்லஸ் பிராண்ட்' என்ற அடையாளத்தையும் உருவாக்கினார்.

இவரது அனுபவம் மற்றும் பயிற்சி என்பது வெறும் எடைகளை தூக்கி உடற்பயிற்சி செய்வது என்று கூற முடியாது. பிறரது கேலிப் பேச்சுகளுக்கும், அவமானத்திற்கும் ஆளான ஏஞ்சலோதான், தன்முனைப்புடன் கடுமையான பயிற்சிக்குப் பின் உலகின் உறுதியான மனிதனின் உடலமைப்புக்கு எடுத்துக் காட்டாகிப் போனார்...

தற்போதைய தேவை மக்களுக்கான கருத்தியலை உடைய அரசியல்...


கதிராமங்கலம் 400வதுநாள் தொடர்துயரப் போராட்டம்...


ஓஎன்ஜிசியே வெளியேறு.. அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்ட, அரசியல்வாதிகளால் ஆதாயம் தேடப்பட்ட, உணர்வுகளால் கட்டப்பட்ட, ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட, மக்களால் மறக்கப்பட்ட, மற்றபிரச்சனைகளால் மறைக்கப்பட்ட...

கதிராமங்கலம் மக்களின் சொல்லிமாளாத் துயரப் போராட்டத்தின் தொடர்துக்கநாளில் இன்று 400வது நாளை கடக்கிறது..

நாங்கள் போராடுவது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக.

கதிராமங்கலத்திற்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்காக.

ஓஎன்ஜிசியே வெளியேறு., மீத்தேன்திட்டத்தை தடைசெய் மட்டுமல்ல எங்கள் கோரிக்கை..

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவதற்காக குரலெழுப்பினோம்..

நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கூறி குரலெழுப்பினோம்.

சாகர்மாலா., பாரத்மாலா திட்டங்களுக்கு கண்டனக் குரலெழுப்புகிறோம்.

சேலம்-சென்னை பசுமைவழிச் சாலையை முற்றிலுமாக எதிர்த்து குரலெழுப்புகிறோம்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தும் செயல்படுத்தப்போகும் ஒவ்வொரு நாசகாரத்திட்டத்தை எதிர்த்தும் தொடர்ந்து குரலெழுப்புவோம்.

எங்களின் குரல்வலையை - அடிமை அரசுமும், அரசகூலிப்படைகளான காவல்துறையும், திரித்துக்கூறி வழக்குகள் சேர்க்கும் உளவுத்துறையும், சில மக்கள் விரோத கட்சி அமைப்புகளும், காசுக்கு விலைபோன சில துரோகிகளும் சேர்ந்து கொண்டு இறுக்கப்பிடித்து நசுக்குகின்றன. வலிகளாலும் வேதனைகளாலும் அவமானங்களாலும் எங்கள் போராட்டம் செதுக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எத்தனை அவமானங்கள் விமர்சனங்கள் இழப்புகள் என அனுபவித்தாலும் ஒருபோதும் நாங்கள் எங்களின் போராட்டத்தை கைவிடப்போவதாய் இல்லை! எண்ணிக்கை குறைந்தபோதும் எங்கள் உணர்வெழுச்சி குறையவில்லை! உங்களின் ஆதரவை நம்பிக்கையாய் கொண்டே நாங்கள் இன்று 400வது நாளை கடக்கின்றோம். என்றும் உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், உங்கள் உரிமைக்கான உரத்த குரல்...

பாஜக வும் ஊழலும்...


விபசாரத்திற்காக டெல்லியில் 4 ஆயிரம் பெண்களை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த அபக் உசேன், சாய்ராபேகம் தம்பதி...


டெல்லியில் 4 ஆயிரம் பெண்களை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி..

டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 4 ஆயிரம் இளம்பெண்களை ஏமாற்றி கடத்தி விபசாரத்துக்காக விற்பனை செய்து, ரூ.250 கோடியை சம்பாதித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி...

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளுக்கு வங்கதேசம் வழியாக பெண்கள் கடத்தப்படும் கொடூரம் ஓசையின்றி நடந்து வருகிறது.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கடத்தப்படுவதை உளவுத்துறையினர் கண்டறிந்தனர்.

பெண்களை கடத்தும் கும்பலை பிடிக்க நாடெங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது டெல்லியைச் சேர்ந்த கணவன் - மனைவியான அபக் உசேன், சாய்ரா பேகம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, அவர்கள் பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப்பெரிய தொழில் போல செய்து வருவதை கண்டு பிடித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் சுமார் 4 ஆயிரம் இளம் பெண்களை ஏமாற்றி கடத்தி விபசாரத்துக்காக மற்றவர்களிடம் விற்பனை செய்து இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு பெண்ணையும் விற்கும் போதும் லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால், நாளடைவில் அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் புரோக்கர்கள், ஏஜெண்டுகளை நியமனம் செய்து பெண்களை கடத்தி விற்பதை விரிவுபடுத்தியுள்ளனர்.
பெண்களை கடத்தி விற்றதன் மூலம் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் ரூ.250 கோடி வரை சம்பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணத்தை கொண்டு அவர்கள் டெல்லி உள்பட பல இடங்களில் சொகுசு பங்களாக்கள் வாங்கி உள்ளனர்.

டெல்லி புறநகர் பகுதியில் பெரிய பண்ணை வீடும் வாங்கி, அங்கு வசித்து வந்தனர். ஆடி, டொயோட்டா, ஹோண்டா என்று விதம் விதமான கார்களில் வலம் வந்தனர்.

தங்கள் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக உசேனும், சாய்ரா பேகமும் 2 போலி நிறுவனங்களை நடத்தி வந்தனர். பெண்களை விற்பனை செய்வதற்கு அவர்களது நிறுவனங்கள் உதவியாக இருந்துள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அபக்உசேனும், சாய்ரா பேகமும் பரம ஏழையாக இருந்தவர்கள். இருவரும் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி டெல்லி சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தைச் சேர்ந்த அபக்உசேன், டெல்லி சென்று ஒரு நிறுவனத்தில் ரூ.3 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் மொரதாபத்தைச் சேர்ந்த சாய்ரா அறிமுகம் ஆனார்.

சாய்ரா விபசார தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவரை 1999-ம் ஆண்டு அபக்உசேன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களை கடத்தும் தொழிலில் ஈடுபட்டனர்.

குறுகிய காலத்தில் ஏராளமான பெண்களின் விபசாரம் மூலம் அவர்களுக்கு பணம் கொட்டியது. நாளடைவில் ஏஜெண்ட் மூலம் அதிக பணம் கிடைத்தால் கோடீசுவரர்கள் ஆகி விட்டனர்.

தற்போது கைதாகி சிறையில் உள்ள அவர்களுடன் பெண்களை கடத்தியதாக மேலும் 10 பேர் உள்ளனர். அவர்கள் மீது 3895 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 126 பேர் காட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

அபக்உசேன் - சாய்ரா இருவரும் பெண்களை கடத்தி விற்று சம்பாதித்த பணம் மூலம் வாங்கிய 18 பங்களாக்கள், 5 கார்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ப்பூரில் உள்ள ரூ. 35 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு, பகவன் நகரில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவும் அடங்கும்...

இது தான் கல்வியின் நிலை...


ரம்புட்டான் பழம்...


ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச் செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச்செய்யப்படுகிறது.

உலகில் பிரதானமாக ரம்புட்டான உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடு தாய்லாந்து ஆகும்.

ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது.

ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் அவுசுத்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

இலங்கையில் பயிர்ச்செய்யப்படும் பழங்களிடையே ரம்புட்டான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.

பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது.

ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200  கிலோ வரையிலான பயனைத் தரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம். ஆடி மாதத்தில் இந்த பழத்தின் பருவகாலம். அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம்.

ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . மிகவும் நன்றாக இருக்கும்...