http://news.lankasri.com/india/03/136194
07/11/2017
மதிமுக வைகோ நாயுடு தன் குடும்பத்துடன் கிருஸ்துவ மதத்திற்கு மாறி விட்டார்...
http://news.lankasri.com/india/03/136194
ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து...
உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும்.
இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
விதை இல்லாத பேரிச்சம் பழம் - 3-4.
இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்.
பேரிச்சம் பழம்..
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.
இஞ்சி..
இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.
செய்முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை:
தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.
குறிப்பு : இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்...
ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் விளாதி மீரின் சிவலிங்க ஆராய்ச்சி...
சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை.
இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பது தான்.
உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டு பிடித்தார்.
ஒரு மலை உச்சி, அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார்.
புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இடத்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.
உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.
மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.
லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.
அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா?
டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம், அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.
ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.
சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.
இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்.
அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்.
இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.
மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.
இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனுமானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே.
இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்ப முடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான். மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பது போல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்.
இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து.
அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம்.
ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.
உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.
அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.
இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து.
இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...
சோழர் காலத்தில் ஆட்சி முறை அமைப்பு...
ஒரு நாடு சீராய் செயலாற்ற, நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது. இங்கு நாம் பார்ப்பது, சோழ ஆட்சியின் அமைப்பு.
இந்த படம், இன்று மக்களாட்சி என்று நாம் பின்பற்றும் விடயங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த மண்ணில் இருந்தவை என்பதை கூறுகிறது.
நகரின் வகைக்கு ஏற்ப, அதன் ஆட்சியையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைத்துள்ளனர்.
குறிப்பு: ராசராசசோழன் வரலாற்றுக்கூடம் புத்தகத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது...
கன்னட ஈ.வே. ராமசாமி மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?
சில வந்தேறி திராவிட பயல்கள்
அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக் கொடியைக் கொளுத்தினார் என்றும்.. இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும் இரண்டு பொய்களைக் கூறுவார்கள்...
ஈ.வே.ரா இந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.
அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.
1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும், அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலை வெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில்...
திருவல்லிக்கேணி பெரிய தெரு,
வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை
மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.
(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்) என்று எழுதியுள்ளார். (விடுதலை, 13.02.1965).
இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது...
மூட்டு வலி போக்கும் கல்தாமரை...
முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி.
அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. பிறந்தது முதல் அங்குமிங்கும் பலவாறு சுழன்று அசைந்துக் கொண்டிருக்கும் மூட்டுகளுக்கு போதிய பயிற்சி தராவிட்டாலும் பரவாயில்லை... உடல் எடை கூடாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டும். சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.
நமது உடலிலுள்ள ஒவ்வொரு எலும்புகளும் ஒவ்வொரு விதமாக அசைந்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அசையும் எலும்புகளானது இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் மேலும், கீழும், முன்னும், பின்னும், அங்குமிங்கும் என சதா அசைந்து கொண்டும், சுற்றிக் கொண்டுமிருக்கும் நம்முடைய கழுத்து, தோள், இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் மற்றும் விரல் மூட்டுகளை வாழ்நாள் முழுவதும் சீராக இயங்க வைக்கின்றன. ஆனால் உடல் எடை மற்றும் வயது அதிகரிக்கும் பொழுது எலும்பு, எலும்பை பிடித்திருக்கும் தசைநார் மற்றும் பந்தங்கள் பலகீனமடைவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி உயவுத்தன்மையை இழந்து, தங்கள் செயல்பாட்டையும் இழக்கின்றன. இந்நிலையில் எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும். இல்லாவிடில் எலும்பு சந்திகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், இறுக்கம், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன.
போதிய நடைப்பயிற்சியின்மை, அதிகரித்த உடல் பருமன், கொழுப்புச்சத்து, ஒரே இடத்தில் தொடர்ந்து நின்றுக்கொண்டிருத்தல், வைட்டமின்கள் நிறைந்த கீரை, காய்கறிகளை தவிர்த்தல், இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு, மூட்டு இணைப்புகளில் கிருமித்தொற்று, பிற மருந்துகளின் ஒவ்வாமை, முதுமை, பரம்பரை போன்ற பல காரணங்களால் ஆர்த்ரைட்டிஸ் உண்டாகிறது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் முதிய வயதினரே கீல்வாயுவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைவுகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. சமவெளிப்பகுதிகளில் வசிப்பவர்களை விட மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மூட்டுவலிக்கு அதிகம் ஆளாகின்றனர். மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.
Smilax zeylanica என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும். தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம். இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றடமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களில் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 53...
ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்...
பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான் என்பதையும் ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் எப்படி அதிக சக்தி பெறுகின்றன என்பதையும் பார்த்தோம். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.
இந்தத் தலைப்பைப் பற்றி எழுதுவதால் தான் எல்லாமே ஆழ்மனம் என்று சொல்வதாக வாசகர்கள் நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர் (ஆழ்மனசக்தி 18 ஆம் அத்தியாயத்தில் இவர் பற்றி விவரமாய் படித்தோம்) ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.
1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.
ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும். சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில் இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.
அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்திற்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி ‘உன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன’ என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.
அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.
இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன்படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.
துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள். முதலாமவன் “என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?” என்று கேட்கிறான். நம் ஆள் “இல்லையே நன்றாகத் தானே இருக்கிறேன்” என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் “என்ன உடம்பு சரியில்லையா?” என்று கேட்கிறான். இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.
நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். ”நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது” என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். “நான் பலவீனமானவன்”, ”என்னால் இது முடியாது”, “எனக்கு ஆரோக்கியம் சரியில்லை” என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும். இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப் பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.
நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.
என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அதிகமாக சிரிக்க மாட்டார். அப்படி யாராவது மிக நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு சிரிக்க நேர்ந்தால் கூட பயத்துடன் சொல்வார். “எவ்வளவு சிரிக்கிறோமோ, அந்த அளவு அழவும் நேரிடும்”. அது போலவே தான் அவருக்கு எல்லாம் அமைவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடைய நம்பிக்கைக்கேற்றபடியே ஆழ்மனம் நிகழ்வுகளை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தி வந்தது. அப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான பலமான அபிப்பிராயம் ஒரு வாழ்க்கையின் மக்ழ்ச்சியையே குலைத்த விதத்தை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
நாம் முன்பே பார்த்தது போல ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். “ஏன்?” என்று கேட்ட போது ”அது தவறு” என்ற பதில் வந்தது.
நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.
இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.
ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.
பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. ”இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். ”என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” அவர்கள் கூறினார்கள். “ஆமாம் பிரபு” இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். “உங்கள் நம்பிக்கையின் படியே உங்களுக்கு ஆகக் கடவதாக!”. அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)”. (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.
ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள். வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.
இனி ஆழ்மனதைப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் வேலைகள் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.
மேலும் பயணிப்போம்.....
எல்லாமே அதிர்வு தான்...
நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.
இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.
கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது.
காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.
மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது.
வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.
மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.
அணுக்களின் விலக்குவிசைதான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு வகையான அதிர்வுகள்தான்.
நாம் எல்லோரும் Frequency generator தான். சுபக்கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும் போது உணர்வுகள் சுகமாகவும்.
அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.
இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்று விக்கிறது.
வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.
பின் பகுத்தறிவில்லாத ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.
ஆக நம் உணர்வுகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி,
எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.
நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்ற பிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.
அதைவிடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.
ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்து விட்டோம் என்று நம்பி அடைந்த பிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.
அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள்...
சிலைகள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது - ஐ.ஜி.,பொன் மாணிக்கவேல் குழுவினர் அதிரடி...
சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருடன் கூட்டு சேர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சுவாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைசெய்த மூவரை, ஐ.ஜி.,பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கைதுசெய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் கிராமத்தில் மூன்றீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்ச லோக சிலைகளும், கற்சிலைகளும் இருந்தன. சரியான வருமானம் இல்லாததால், கோயில் பராமரிப்பின்றி பாழடைந்துகிடந்தது. இந்தக் கோயிலின் வெளிப்பிராகார வாயிலில் இருந்த தொன்மையான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 4 அடி உயரம்கொண்ட துவாரபாலகர் கற்சிலைகள், கடந்த 1994-ம் ஆண்டு காணாமல் போயின. இதுகுறித்து, அப்போது வழக்குப்பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், கண்டுபிடிக்க முடியாத வழக்கு என முடித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைத் திருட்டு மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணையில் களமிறங்கியது. அந்த விசாரணையில், அத்தாளநல்லூர் கோயிலிலிருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகள், ஆஸ்திரேலியாவின் கேன்பரா நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்தச் சிலைகளை மகாபலிபுரத்தைச் சேர்ந்த நரசிம்மன், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஊமைத்துரை, தஞ்சாவூரைச் சேர்ந்த அண்ணாதுரை உள்ளிட்டோர் சிலைகளைத் திருடி, இந்தச் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்றது தெரியவந்தது. அதனையடுத்து, அச்சிலைகளை கடத்தி விற்ற மூவரும் திருச்சியில் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர்.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி கனகராஜ், 23 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த துவாரபாலகர் சிலைகளை லெட்சுமி நரசிம்மன், இவரது சகோதரர்கள் ஊமைத்துரை, அண்ணாதுரை ஆகியோர் கடத்தி, தற்போது சிறையில் இருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள கேன்பரா அருங்காட்சியகத்துக்கு ரூ. 4.98 கோடிக்கு சட்டவிரோதமாக விற்றுள்ளார்கள். இதுகுறித்து ஆஸ்திரேலியா போலீஸாரிடமிருந்து பெறப்பட்ட திருட்டு சிலைகள் பட்டியலின்படி, மூன்றீஸ்வரமுடையார் கோயிலிலிருந்து திருடப்பட்ட துவாரபாலகர் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடைய மூவரும் ஏற்கெனவே சிலை கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் நிலையில், அந்த வழக்கு தொடர்பாக திருச்சிக்கு இன்று கொண்டுவரப்படும் தகவல் கிடைத்து, அவர்களைக் கைக்செய்தோம். கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு, தமிழகத்துக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றார் அவர்...
நேருவின் குடும்ப வரலாறு...
படிக்கிற காலத்துல "பண்டிட் நேரு", "பண்டிட் நேரு"ன்னு சொன்னாங்க.
பிறகுதான் தெரிந்தது அது படித்து வாங்கின பட்டமல்ல, "காசுமீர பண்டிதர்' அப்படி என்றால் பிராமண குலமென்று.
இந்த குழப்பதிருக்கு காரணம் விருதாக பெற்ற பட்டங்களை பெயருக்கு முன்பும் ஜாதியின் பெயர்களை பெயருக்கு பின்பும் போடுகிற முறை இருந்தது தான்..
ஆனால் எப்படியெல்லாமோ போட்டு அசத்திவிட்டார்.
இவர் மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் சிகரெட்டு பற்றவைத்து கொடுத்துவிட்டு, ஒரு சமத்துவதிற்காக தானும் உடன் சேர்ந்து புகைப்பது உலகப் பிரபலமடைந்த திருத்தப்படாத (unedited) புகைப்படமாகும்...
இவர்களது உறவு மரணம் வரை நீடித்ததாக வரலாறு கூறுகிறது.
வலதுபுறம் மௌன்ட்பாட்டனின் மனைவியை விமான நிலையம் சென்று வழியனுப்பிய படம்.
மேலும் அறிந்துகொள்ள: http://nehrufamily.wordpress.com/
ஏழைகளுக்குத்தான் ஜாதியும் மதமும் மிக முக்கியமானதாக இருக்கும்.
ஆனால், அதிகார வர்கத்திற்க்கு அது அவசியமில்லை என்பதை அறிய நேருவின் குடும்ப அட்டவனையை காணவும்...
பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்
பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...
காந்தியும் பகத்சிங்கும் - மறைக்கப்பட்ட உண்மைகள்...
காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்...
ஆனால்...
அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக் கொள்ளவில்லை.. இதையே காந்தியும் விரும்பினார்.
சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் .
அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர்.அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.
இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இந்தியம் அப்போது இழந்தது...
காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள்.
இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்து கொண்டார் .
அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்து விடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.
அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.
ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரை கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள்..
அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு.
ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர்.
பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும்
ஒரு மடங்கு வேகம் காட்டினர்..
லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார் படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை..
அதனால் காவலர்கள் அழைத்த போது, ''நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல் கொடுக்கிறார்.
வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும் ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை.
ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததால், நான் ஒரு போராளியுடன் உரையாடிக் கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.
அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ''இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார்.
இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்...
ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2... உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 4...
உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் வெளியிடப்படும் தீர்க்க தரிசனங்கள் யாவும் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்க தரிசனப் பகுதியில் வெளியிட்ட 66 தீர்க்க தரிசனங்கள் எவ்வாறு ஆரம்பித்து நடக்கப் போகின்றன என்பதற்கான விளக்க குறிப்புகளே தற்போது உண்மைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் நாம் வெளியிடுகிறோம்.
இங்கு ஒரு முக்கிய குறிப்பை தர விரும்புகிறேன். அதாவது இங்கு வெளியிடப்படும் தீர்க்க தரிசனக் குறிப்புகள் யாவும் ஏற்கனவே நமது முன்னோர்கள், சித்தர்கள், ஞானிகள், மகான்கள், தீர்க்க தரிசிகள், வேதக்குறிப்புகள் போன்ற தொகுப்புகளிலிருந்தோ, சொல்லப்பட்ட தீர்க்கதரிசனக் குறிப்புகளிலிருந்தோ எடுத்து தரப்படும் செய்திகள் அல்ல. இவை யாவும் எமக்கு இறைஅருளால் வழங்கப்படும் குறிப்புகளே ஆகும். ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பமே.
இனி உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் நாம் தெரிந்து கொள்ள இருப்பது 4-ம் தீர்க்க தரிசனப் பகுதியின் குறிப்புகள் ஆகும். அவைகளை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
4-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக இடம் பெறுவது கடையேழு வள்ளல்களில் தலைசிறந்த “வல்வில் ஓரி“ என்கிற மன்னன் ஆண்ட கொல்லி மலையில் ஒரு வியத்தகு அதிசய சம்பவம் தற்போது நடைபெற உள்ளதாகவும், வல்வில் ஓரியைப் பற்றி குறிப்புகள் இதன்வழியாக தமிழக மக்கள் மற்றுமின்றி உலக மக்களும் அறிந்து கொள்ளும் ஒரு வியப்பான செய்தியே இதுவாகும் என்று இந்த தீர்க்க தரிசனப் பகுதி எடுத்துக் கூறுகிறது.
அதாவது வல்வில்ஓரி என்கிற மன்னன் ஒரு சித்தன் என்பது எவருக்கும் தெரியாத ஒரு புதுச்செய்தி என்றும், அவன் ஆண்ட குறுநிலப் பகுதி கொல்லிமலை என்றாலும், அவனின் இருப்பிடம் ஒரு மகாதவம் பொருந்திய இருட்டு குகையாகும். அந்த குகை கொல்லிமலையில் அரபளிஸ்வர் சந்நதியின் தென் திசையில் உள்ள ஒரு சாய்வான மலைப் பகுதியில் உள்ளது என்றும், அந்த மன்னன் பகலில் அரசனாகவும் இரவில் சித்தனாகவும் வாழ்ந்து வந்தான் என்றும், அந்த இருட்டு குகைக்கும் அவன் வாழ்ந்த பகுதிக்கும் ஒரு இரகசிய குகை இருந்தது என்றும், இந்த மன்னன் இரவில் சித்தனாக சிவபக்தனாக வலம் வந்தவன் என்றும், வில்வித்தையில் தலைசிறந்தவன் என்றும் இந்த நான்காம் தீர்க்க தரிசனப் பகுதி தனது செய்திக் குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.
வல்வில் ஓரி போகர் என்ற சித்தரை தனது குருவாக ஏற்று தவமியற்றியவன் என்பதும், போகர் அவருக்கு மச்சமுனி என்று பெயரிட்டு ஆசிர்வதித்து வாழ்ந்த கதை இதுவரை உலகம் அறியாத ஒன்றாகும் என்று தீர்க்க தரிசனக் குறிப்புகள் இங்கு குறிப்பை தருகின்றன.
இந்த மச்சமுனி என்கிற வல்வில்ஓரி மரணித்த கதை இதுவரை யாரும் அறியாத சரித்திரம் என்றும், புராணக் கதையாக இவரைப் பற்றி பல குறிப்புகள் இருப்பினும் அதற்க்கான சான்றுகள் ஏதுமில்லை என 4-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.
போகரின் இரண்டாம் பிரவேசம் தமிழகத்திற்குள் நடந்த சமயத்தில் சதுரகிரியில் போகர் அகத்திய முனிவரை சந்தித்து தனது இரசவாதக் கலையின் இரகசியங்களை எடுத்துக் கூறி அதற்கான அங்கீகாரம் சித்தர் சபையில் பெற விண்ணப்பம் செய்த போது, மச்சமுனி தனது குருவான போகரை அச்சமயத்தில் சந்திக்க எண்ணி சூட்சும சரீரத்தில் பயணம் செய்து சதுரகிரியை அடைகிறார். மச்சமுனியை ஆசிர்வதித்த போகர் உமது ஜீவன் முக்தி பெற்றது. இனி கொல்லிமலையில் மச்ச அவதாரம் கொண்டு அரபளீஸ்வரர் சந்நதி அருகே ஓடும் ஓடையில் வீற்றிருப்பாய் என்றும், சித்த புருஷர்கள் இனி உனது வழியில் அங்கு மச்ச உருவம் கொண்டு பல காலம் வாழ்ந்து வருவார்கள். கலிகாலம் முடிவடையும் சமயத்தில் நான் மீண்டும் கொல்லி மலை வந்து சித்தர்களின் மாநாட்டை ஒரு பௌர்ணமி அன்று துவக்கி நடத்தும் சமயத்தில் நீங்கள் அனைவரும் மச்ச அவதாரத்தை துறந்து தூய ஆத்மாக்களாக எழுந்து எம்மோடு இறைவனின் கட்டளையை ஏற்று பணி செய்வீர்கள். அப்பொழுது உலகமே வியக்கும் அதிசயமாக இங்கு நீ வாழ்ந்த அந்த இருட்டு குகை வெடித்து பிளந்து அதிலிருந்து ஒரு நவபாசான சிவலிங்கம் வெளிப்படும். இதனை உலக மக்கள் யாவரும் அறியும் சமயத்தில் உன்னுடைய ஜீவசமாதி அப்பொழுது பூமியிலிருந்து எழும். அங்கு கிடைக்கப் பெறும் குறிப்புகள் உன் வரலாற்றை சொல்லும். மன்னவன் ஆண்ட மலை கொல்லி மலை என்றும், சித்தன் ஆண்ட மலை மச்ச மலை இந்த சிவன் மலை என்று புதிய பெயர் இந்த கொல்லி மலைக்கு கிடைக்கும் என்றும் இந்த 4-ம் தீர்க்க தரிசனம் மச்சமுனி எனும் சித்தரே “வல்வில்ஓரி“ என்ற இரகசியத்தை கூறுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இதனை ஏற்க மறுத்தாலும் வரும் காலம் அதற்கான காலமாக இருக்கும் என்று இந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
இந்த 4-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் அடுத்ததாக “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்க தரிசனப் பகுதியில் வெளியிடப்பட்ட 28-ம் தீர்க்க தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்கள் நாட்டில் நடக்க உள்ளதாகவும் மே மாதம் 30ந் தேதிக்கு பிறகே இவைகள் தொடர் சம்பவமாக நடக்க உள்ளதாக “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனப் பகுதி தனது கருத்தை இங்கு பதிவு செய்கிறது.
மகாபலிபுரம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்றும், கடற்கரை கோவில் ஒன்று வரும் கடல் கொந்தளிப்பால் உள்ளே செல்ல உள்ளதாகவும், அந்த கடல் கொந்தளிப்பால் கடலில் முழ்கிய வரலாற்று சின்னத்தை ஆய்வாளர்கள் கடலில் தேடும் சமயத்தில் பல அதிசயங்கள் அப்பகுதியிலிருந்து மக்களும், வரலாற்று அறிஞர்களும் கண்டறிவார்கள் என்றும், அப்பொழுது விமானம் போன்ற ஒரு வினோத இயந்திரத்தை கண்டு உலகமே வியப்பில் மூழ்கும் சம்பவம் நடைபெறுவதாக இந்த நான்காம் தீர்க்க தரிசனப் பகுதி ஒரு முக்கிய செய்தியினை பதிவுச் செய்கிறது.
அடுத்ததாக மன்னார் வளைகுடாவில் உருவாகும் புயல் சின்னம் பல கொடுமையான பாதிப்புகளை உருவாக்க உள்ளதாகவும், புத்தனின் சிலை ஒன்று கடல் கரையில் ஒதுங்கும் சமயத்தில் தமிழகத்தில் பல இன்னல்கள் நடக்க உள்ளதாகவும், இதுவே அதற்கான முன் அறிவிப்பாக மக்கள் கருத வேண்டும் என 4-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கு பதிவுச் செய்கிறது.
வான் மண்டல ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகளுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்து உள்ளது என்றும், அந்த ஆச்சர்யமான செய்திக் குறிப்பை அவர்களே உலக மக்களுக்கு தெரிவிப்பார்கள் என்ற குறிப்பை இந்த 4-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மதம் கொண்ட யானை ஒன்று நிகழ்த்தும் விபத்து ஒன்று இதுவரை வரலாற்றில் நடந்திராத துயரச் சம்பவமாக கேரளாவில் நடக்க உள்ளதாகவும், அச்சமயத்தில் திறக்காத கதவு ஒன்றை கள்ளர்கள் திறக்கும் சம்பவம் நடந்தேறி இருக்கும் என்றும் இது உலகத்திற்கான ஒரு எச்சரிக்கை செய்தியாக மக்கள் பேசிக் கொள்ளும் சம்பவம் ஒன்று நடந்தேறிட உள்ளதாக இந்த 4-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
நிகழ்வுகள் நிச்சயம் நிகழும் அதுவரை “உண்மைகள் எப்பொழுதும் உறங்காது” அது கண்விழித்து எழுவதை காண நாம் காத்திருப்போம்.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...
கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்களின் திருமணத்தை எதிர்த்து திராவிட நாடு பத்திரிக்கையில் [03.07.1949] தெலுங்கர் அண்ணாத்துரை வரைந்த கட்டுரை இது...
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.
கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26. அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.
சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர்.
பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.
தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும். திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.
நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம். அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.
வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.
திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை. பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.
காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.
பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.
பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார். அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார். தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது. ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.
என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை. இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்..
ஏம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே. சீர்திருத்தம் இயக்கம் இது.
இதோ பாரய்யா, சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம் என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.
கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு! என்று பரிகாசம் பேசுகிறார்களே.
ஊருக்குத்தானய்யா உபதேசம்! என்று இடித்துரைக்கிறார்களே.
எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை. என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!
ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது..
பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.
முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண! வேதனைப்படுகிறோம் தனிமையிலே! ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.
இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.
எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?
எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே! இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்! கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!
இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?
பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.
பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது! புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.
அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது. அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!! இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும். நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்! பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.
சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.
அன்புள்ள
சி. என். அண்ணாதுரை
திராவிட நாடு : 3-7-49...
தமிழகத்தின் ராகுல் காந்தி - காங்கிரசின் ஸ்டாலின்...
இருவருமே தங்கள் குடும்ப காரணத்தினால் மட்டுமே கட்சி பொறுப்பில் இருப்பவர்கள்..
இருவருமே தங்கள் அறியாமையால் தான் கட்சி தலைமை பொறுப்பை பெற முடியாமல் இருக்கிறார்கள்..
இருவருமே துக்ளக் பட்டத்து இளவரசர்கள்..
இருவருமே குறிப்பில்லாமல் எந்த பிரச்சனை குறித்தும் பேச முடியாதவர்கள்..
இருவருமே தேர்தல் காலத்தில் ஸ்டண்ட் அடித்து மக்களை ஏமாற்ற முயல்பவர்கள்..
இருவருக்குமே ஏழைகளின் வாழ்க்கை பிரச்சனை தெரிவதில்லை..
இருவருமே தமது அருகில் சிறு கூட்டத்தை வைத்துக் கொண்டு உண்மையான உழைப்பாளிகளை விரட்டி கட்சி நடத்துபவர்கள்..
இத்தனை வருட அரசியலிற்கு பின்னும் இத்தனை அறியாமையில் இருவரும் இருப்பதற்கு காரணம் பட்டமும், பதவியும் கழுத்து மாலையாக தானாக வந்து விழும் என்ற அபாரா நம்பிக்கையால் தான்...
Subscribe to:
Posts (Atom)