14/05/2018

ஆலை இயங்க இடமும் சூழலியியல் அனுமதி கொடுத்ததும் அரசாங்களா இல்லை நீதிமன்றங்களா...


நாங்கள் ஆலையை மூடமாட்டோம் என வெளிப்படையாக கூறும் நீயெல்லாம் வைகோவை குற்றம் சாட்டுகிறாய் பணம் வாங்கி விட்டார் என்று...

குறிப்பு : சிறிது நாட்களுக்கு முன்பு தான் பாஜக மோடி வெளிநாட்டில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரை சந்தித்து கட்சிக்கு நிதியை வாங்கினார்...

அமெரிக்க தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெறியெற தடை...


கூடங்குளம் பகுதியில் தற்போது இரு அணுவுலைகள் பணிகள் நிறைவு பெற்று மின்சாரம் தயாரிக்கப்படுகிறது...


ஆனால் அதில் முதல் அணுவுலை மட்டும் தான் ரஷ்யா தொழில் நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டது... இரண்டாம் அணுவுலை உள்நாட்டு தொழில் நுட்பத்திலும், அப்பகுதியில் படித்த இஞைர்களையும் வைத்து உருவாக்கப்பட்டது...

மேலும் தற்போது 3,4 வது அணுவுலை பணிகள் நடைபெற்று வருகிறது...
இரண்டு அணுவுலை வைப்பதற்கே எத்தனை போராட்டங்கள், எத்தனை பிரச்சனைகள்?

அது மட்டும் அல்ல இராதாபுரம் பகுதி முழுவதும் சுடுகாடாய் மாற்ற திட்டம் தீட்டி விட்டனர்...

ஆனால் அந்த பகுதியில் மொத்தம் 8 அணுவுலைகள் அமைக்க அவர்கள் திட்டம் அமைத்து (they have permissions ) தொடர்ந்து மறைமுகமாக செயல் பட்டு வருகின்றனர்...

அந்ந பகுதி மக்களுக்கு தோல் வியாதிகள், பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவும், கேன்ஸர் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட்டு அவதிபடுகின்றனர் , இந்த சாதாரண மக்கள் எங்கே செல்ல முடியும்?

கூடன்குளம் பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் சுடுகாடாய் மாறி வருகிறது....

8 அணுவுலை அமைந்தால் கண்டிப்பாக அந்த பகுதி மக்கள் வசிக்க தகுதியற்றதாக மாற வாய்ப்புள்ளது...

தயவு செய்து அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நம்மிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளதை,  அரசாங்கம் அவர்களுக்கு சாதகமாக பயன் படுத்துகிறது...

அணுவுலை வேண்டாம் தடுத்து நிறுத்த உதவுங்கள் என் தமிழினமே..

என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்...

வடகொரியா அணுஆயுதம் தயாரிப்பை கை விடுகிறது...


நீங்கள் செயற்கைகோள் புகைபடத்தில் காண்பது: கடந்த வருடம் நான் என் அலவலக சேலத்து நண்பருடன் இணைந்து இதை தேடிய போது அதிர்ச்சி அடைந்தேன்...


சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் வெட்டி எடுக்கபடும் கனிமவள கொள்ளை கிட்டதட்ட சேலம் மாநகரின் நிலப்பரப்பளவில் 80% இடத்திற்கு இணையாக நிலப்பரப்பில் எடுக்கப்படும் இவைதான் இந்திய மெட்டல் மற்றும் பைபர் தேவையில் 85% தேவையை பூர்த்தி செய்கிறது.

அதுபோல ஏற்காடு திருவண்ணாமலை மலைகள் மழுதும் கனிமவளங்கள் இருப்தை அறிந்து நாசகரமன்னன் ஜியோ அம்பானி இவ்விடத்தின் கனிமவளத்தை சுரண்ட திட்டமிட்டுள்ளதை நீங்கள் தற்போது அனைவரும் அறிந்ததே...

சமூக வலைத்தலங்களில் உலா வரும் சாமனியர்களின் கேள்வி...


எண்ணங்களுக்கும் மூச்சுக்கும் இடையே உள்ள தொடர்பு...


எண்ணங்களுக்கும் மூச்சுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைக்கையில் மூச்சு சீராக இருக்கும். மூச்சு சீராக இருக்கையில் தானாக மனம் அமைதியடையும் என்பதை அனுபவபூர்வமாக அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால். பழக்கமில்லாதவர்களுக்கு மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைப்பதற்கு மனம் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும். பல கவலைக்குரிய விஷயங்களையும், கவனிக்க வேண்டிய விஷயங்களையும் சுட்டிக் காட்டி அதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல்லும். இது பெரிய விஷயமில்லை என்று சொல்லும்.

அரைமணி நேரம் என்று ஆரம்பித்தாலும் ஐந்து பத்து நிமிடங்களில் இப்போதைக்கு இது போதும் என்று முடித்து வைக்கச் சொல்லும். அதையெல்லாம் கேட்டு தங்கள் முயற்சியை அரைகுறையாய் விட்டவர்கள் முதல் படியிலேயே சறுக்கி விட்டார்கள் என்று அர்த்தம். அப்படியில்லாமல் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் முயற்சி செய்து இருந்தது
ஆல்ஃபா அலைகளில் தானா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் அமைதியாக அமர முயற்சி செய்ததே நல்ல ஆரம்பம் தான்.

நாம் என்ன சொன்னாலும் இந்த நபர் இந்த அரைமணி நேரம் இந்தப் பயிற்சி செய்த பிறகு தான் நாம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் மேல்மனம் இடைமறிப்பது தானாகக் குறையும். மனம் தானாக அமைதியடையும். எனவே இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் அதை ஆரம்பிப்பது நல்லது. இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

மனம் உண்மையாகவே அமைதியடையவும், ஆழ்மன சக்திகள் சிறப்பான முறையில் கைகூடவும் மிகச் சிறந்த வழி தியானம் தான். தியானம் அல்லாத முன்பு சொன்னபடி சில பயிற்சி முறைகளாலும் ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல முடியும்
என்றாலும் தியானப் பயிற்சிகளை முறையாகச் செய்தால் ஆல்ஃபா நிலையை சிறப்பாக நமக்கு வேண்டும்படி பயன்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் ஆல்ஃபாவிலிருந்து தீட்டா டெல்டா அலை வரிசைகளுக்குச் செல்வதும் எளிதாகும்.

தியானம் என்றாலே அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. பல மதத்தினரும் பலவித தியானமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற போதும் மதங்களைச் சாராதவர்களும், இறை நம்பிக்கை
இல்லாதவர்களும் கூட தியானப் பயிற்சியால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தியானம் செய்யலாம். பலரும் செய்கிறார்கள்.

தியானப் பயிற்சியால் ஆழ்மன சக்திகள் மட்டுமல்லாமல் பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களும், அனுபவஸ்தர்களும் கூறுகிறார்கள். முறையாகத் தொடர்ந்து உண்மையாக தியானம் செய்பவர்கள் தீய குணங்கள் குறைந்து நல்ல குணங்களைப் பெறுவது உறுதி. அன்பு, பொறுமை, மனக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, அமைதியாக ஆராயும் குணம், பக்குவம், அறிவு வளர்ச்சி, மன அமைதி ஆகியவை அதிகமாகின்றன. கவலைகள், கோபம், பொறாமை, அற்ப புத்தி, குழப்பம், பேராசை போன்றவை குறைகின்றன. தியானம் செய்தும் அப்படி ஆகாமல் இருந்தால் உண்மையில் தியானப் பயிற்சி நடக்கவில்லை என்றும் தியானம் என்ற பெயரில் ஏதோ எந்திரத்தனமான சடங்கு நடந்திருக்கிறது என்று பொருள் என்றும் அடித்துக் கூறலாம்.

1996 ஆம் ஆண்டு இரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பதில் தியானத்தின் பங்கு பற்றி சார்லஸ் அலெக்சாண்டர் (Charles N Alexander Ph.D) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு அமெரிக்காவில் மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்தது. தன் முடிவுகளை அமெரிக்க இருதய அசோஷியேசன் வெளியிடும் பத்திரிக்கை Hypertension-ல் 1996 ஆகஸ்ட் இதழில் அலெக்சாண்டர் வெளியிட்டார். அதில் வயதான வேறு பல வியாதிகள் இருக்கும் நபர்களும் கூட தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

1992 ல் USA Today பத்திரிக்கை வயதான தோற்றத்தைத் தடுக்க தியானம் உதவுகிறது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையான தோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

1989 ல் Newsweek பத்திரிக்கை முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த முதியோர்களை (சராசரி வயது 81 வயது) மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவு ஆட்களுக்குத் தியானப் பயிற்சியும், இன்னொரு பிரிவு ஆட்களுக்கு வெறும் ரிலேக்சேஷன் பயிற்சியும் அளித்தது. மூன்றாவது பிரிவினருக்கு தியானப் பயிற்சியோ, ரிலேக்சேஷன் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் தியானப்பயிற்சி செய்த அனைத்து நபர்களுமே உயிரோடிருந்தனர். வெறும் ரிலேக்சேஷன் பயிற்சி செய்திருந்த முதியோரில் 12.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர். தியானமோ, ரிலேக்சேஷன் பயிற்சிகளோ செய்யாதவர்களில் 37.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர்.

மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்ட தியான முறை மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation. அதையும் வேறு சில தியான முறைகளையும் விளக்கமாகப் பார்ப்போம். எல்லா தியானப் பயிற்சிகளிலும்
எல்லோரும் தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது...

புது உலக கோட்பாடு...


திமுக எம்.எல்.ஏ வேலு வின் சொத்து மதிப்பு வெளியீடு...


இயற்கை அளித்த இனிய பானம் இளநீர்....


இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink). இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது. இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் வெப்பம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும்.

அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது.உணவு எளிதில்செரிமானம் ஆவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும்.

நாக்கு வறட்சி நீங்கும். கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்...

ஈழம் தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம்...


ஆனால் அங்குதான் வல்லாதிக்கம் வரலாறு காணாத வகையில் அதிகமுறை தோற்றது..


வல்லாதிக்க சக்திகளை அனைத்து வழிகளிலும் தோற்கடித்தார்..


அதை சகித்துக்கொள்ளாத அந்த சக்திகள்..


ஈழத்தை வளரவிட்டால், நாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில், அவர்கள் இந்தியாவின் உதவியால் ஈழத்தை அழித்தார்கள் என்பதே வரலாறு...

திராவிடத்தின் சாதி ஒழிப்பு யோக்கிதை...


தமிழன் முன்னாடி சாதி ஒழிப்பு போராளியாக நடிப்பது, தெலுங்கன் முன்னாடி தன் சாதிக்காரனா வேடத்தை மாற்றிகொள்வது...

இந்த லட்சணத்தில் கண்டி நாயக்கர் ஆவணப்படத்தில் பெரியாரை நாயக்கர் என்று சொல்லி விட்டார்கள் என்று சீமானுக்கு எதிராக போராட்டம் வேற....

மக்களே இந்த திராவிட திருட்டு கும்பலின் போலி வேடங்களை கிழித்து எறிவீர்..

கண்டி நாயக்கரை பற்றி பேசினால் ஏன் இங்கு திராவிட முகமூடியில் இருக்கும் நாயக்கர்கள் பொங்குரானுங்க... இன பாசமோ ?

விசிக எனும் சாதி கட்சியை புறக்கணித்த மக்கள்...



இது ஒரு அருமையான ஆரம்பம். சாதி மதத்தால் நடத்தப்படும் கட்சிகளை புறக்கணித்தாலே மக்களிடையே எந்த பிரச்சினையும் எழாது...

ஈழ இனப்படுகொலையின் இறுதி வாரம்... மே 13-18...


சகோதர யுத்தத்தால் தான் இந்த அழிவு.. மழை விட்டும் தூவானம் விடவில்லை.

போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்..

திமுக ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அதிமுக ஆதரவு தரும். காங்கிரசு பின்வாங்கக் கூடாது..

மறக்க முடியுமா மன்னிக்க முடியுமா?.

தமிழ் மண்ணில் புதைப்போம்
காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக கூட்டு கொலைகாரக் கூட்டத்தை....

பாஜக பினாமி சேலம் கலெக்டர் ரோகினியும் நடிப்பும்...


இரண்டு புதிய பேருந்து களும் ரிஜிஸ்டர் நெம்பர் த.நா _30, நா 1038 TN _30, N _1038 இரண்டு வண்டிகளும் மேட்டூர். சேலம்...


என்னப்பா எம்டிகள் கையாடல் செய்கிறார்களா?

தொழிலாளிக்கு கொடுக்க வேண்டியதை தரமுடியாது என்று கூறுகிறார் இந்த இரண்டு வண்டியில் ஒரு வண்டியின் கலைக்சன் யார் வீட்டிற்கு செல்கிறது...

அந்த அம்மா மட்டும் இருந்துருகனும்..


தமிழனின் அறிவியல்...


தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக் கொண்டார்கள்.

அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

அதன் உச்சியில் சங்கு போன்ற அமைப்பு உள்ளது.

ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும்.

இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு.

இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள்.

சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும்.

ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது. ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்து விட்டது என்று அர்த்தம்.

பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.

நீர்மட்டம் குறையும் போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள்.

சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன.

ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன.

ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை...

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் தைலமரம் வேண்டாம் என்று மனுகொடுக்க 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தைலம் மரங்களால் பாதிப்புகளை விளக்கியும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்...


முருகன் - பல பெயர்கள் பற்றி பாவாணர்...


பண்டை மாந்தரில் குறிஞ்சி நில மக்கள்,
தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு சேந்தன் (சிவந்தன்) எனப் பெயரிட்டு வணங்கினார்கள்.

சேயோன்-சேய் என்பன இலக்கிய வழக்காகும்.

வேட்டைத் தொழிலில் அவர்கள் மறம் சிறந்திருந்ததனால் தமது தெய்வத்தையும் மறவனாகக் கருதி அதற்கேற்றவாறு அவனை முருகன் இளைஞன் என்றார்கள்.

குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்ற பொருளைக் கொண்டதாகும்.

குறிஞ்சி நிலத்தின் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும் வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும் முருகனுக்கு பெயர்கள் தோன்றின.

முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தியதால் அவனுக்கு கந்தன் என்ற பெயரும் தோன்றியது.

கந்து என்றால் தூண், கந்தம் என்றால் பெருந்தூண் என்று பொருள்.

கலி கெழு கடவுள் கந்தல் கைவிடப்பலிகண் மாறிய பாழ்படு பொதியில்.

என்ற புறநானூற்றில் 52வது பாடல் மூலம் உதாரணத்தை கந்தம் என்ற சொல்லிற்குகாட்டலாம் - பாவாணர்...

பாஜக எஸ்.வி சேகர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற பேரம் நடந்துக் கொண்டிருக்கிறது...


இந்த மனிதனின் பிணம் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும்...


1994 இல் கிடைத்த இந்த பிணம் ஏலியன் தாக்குதல் உடன் சம்பந்த படுத்தி பேச பட்டது.

இந்த மனிதனின் உடல் மிக கொடூரமாக சிதைக்க பட்டு கிடைத்தது.

கை கால்கள் ஓட்டை போட பட்டு இருந்தது. முகத்தில் உள்ள தோல் பியக்க பட்டு இருந்தது. நெஞ்சில் ஓட்டை போட்டு உள் உறுப்புக்கள் vacuam cleaner போன்ற இழுக்கும் கருவிகள் கொண்டு உறிஞ்ச பட்டு இருந்தது. அது அவன் உயிரோடு இருக்கும் போது செய்யப்பட்டதாக உடற்கூறு ஆய்வு சொன்னது...

இவனது இடது காது இடது கண் பிடுங்க பட்டு இருந்தது. உதடுகள் அறுக்க பட்டு இருந்தது.

மேலும் உடலில் உள்ள மொத்த ரத்தம் உறிஞ்ச பட்டு இருந்ததது.

இந்த கொடுமைகளை இந்த மாதிரி வகையில் மனிதன் செய்து இருக்க முடியாது என்று பலரும் நம்பினார்கள்.

பூமி சாராத ஏதோ ஒன்று மனித உடலில் செய்த சோதனை இது என்று சொல்கிறார்கள்...

Brazil mutilated man...

கோக் பெப்சிக்கு மட்டும் தண்ணீர் எப்படி வருகிறது.?


மனைவி அமைவதெல்லாம்...


உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா.

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டு தான் சாப்பிடுவாராம். அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும் கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?

அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே.

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு.

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு.

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
அடியவனுக்கு இனியவளே.
அன்புடையவளே. என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே. என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே.
பின் தூங்கி முன் எழுபவளே. பேதையே. என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ. என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறு பாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா...

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.

அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவார்கள் என்றார். 

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்...

தண்ணீர் பற்றிய சிந்திக்க வேண்டிய உண்மைகள்...


சீக்ரெட் கோட் ஆப் நெவஜோ...


உலகில் மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று  தாய்மொழி அல்லாத ஒரு மொழியை கற்று கொள்வது...

அதுவும் அந்த மொழி பாரம்பரியம் மிக்க பழமையானதாக இருந்தால் கடினம் தான்

எந்த அளவுக்கு பழமையான மொழியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதை கற்றுகொள்வது சுலபமான காரியம் அல்ல..

தமிழை இன்று சீனர்கள் முதற்கொண்டு கற்க காரணம்..

தமிழ் பழமையானதாக இருந்தாலும் பழந்தமிழ் இன்று இல்லை என்று தான் கூற வேண்டும்...

திருக்குறள் தமிழ் தான் பின்னர் எதற்கு விளக்க உரை..

புரநானூரு போன்ற சங்க இலக்கியங்களை எடுத்து தமிழகத்தில் உள்ள 10 வகுப்பு மாணவனிடம் படித்து விளக்கம் கேட்டால் தெரியாது என்று தான் கூறுவான்.

அதே போன்று பழமையான மொழிகளில் ஒன்று நவஜா மொழி..

உங்களுக்கு இந்த மொழியை பற்றி கூறுவதற்கு முன்பு இதை பேசியவர்கள்..

அதபேஸ்கள் என்கிறார்கள்..

அரிஜோனா அதபேஸ் அமெரிக்கா...

பழங்குடியினர் இரண்டாம் உலகப் போரில் எதிரிகளை நிலைகுலைய வைத்தது இந்த நவஜோ மொழித்தான்..

பழங்குடியினர் சிலரை வைத்து அமெரிக்கா இந்த இரகசிய code யை தயாரித்தது.

இந்த மொழியில் தான் தகவல்கள் பரிமாற பட்டது...

ஜப்பானியர்களின் மொழியை புரியாத தவித்த உலகம் இந்த நவஜோ மொழியையும் அதனுடைய code  யையும் புரியாமல் தவித்தது ...

நவஜோ இன்றும் அமெரிக்காவில் சில பகுதிகளில் பேசப்படும் ஒரு மொழி...

இந்த மொழி பேசப்படுவதை கேட்டீர்கள் என்றால் வித்தியாசத்தை உணர்வீர்கள்...

உதாரணமாக...

zasbas :
THALAITH ih
NAKI h
THAA
DII
ASHTHALA i
HASTHA
TSOSTS I'd
tseebii
nahast ei
neeznah i

மேலே உள்ள எழுத்துக்கள் ஜீரோவில் இருந்து பத்து வரை...

ரீபப்ளிக் ஆஃப் தமிழ்நாடு உருவாக்க முன்னேற்பாடுகள்...


மனித மாமிசம் உண்ணும் மனிதர்களும் தமிழர்களும்...


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு தீவு இருந்ததாக வரலாறு உண்டு.. அந்த தீவுக்கு பெயர் மணிப்பல்லவம்...

இங்கு நக்கசாரனர் என்ற பெயருடைய மக்கள் வாழ்ந்து வந்தனர் இந்த நக்கசாரனர்என்பதற்கு அர்த்தம் மனிதனை உண்ணுபவர்கள் என்று அர்த்தம்..

ஆம் இவர்கள் கேனிபலிசம் என்று அழைக்கப்படும் மனித மாமிசத்தை உண்ணுபவர்கள்...

இந்த மனித மாமிசத்தை உண்ணும் தீவான மணிப்பல்லவம் தீவுக்கு அருகே சாவகம் என்ற பகுதி இருந்த்தாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதன் தலைநகரம் நாகபுரம் என்றும் குறுப்பிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சாவகம் என்ற தீவில் பேசிய மொழி தமிழ் தான்...

நாடுகாண் பயனியான தொலமி சபதாய் தீவு என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது சாவகத்தை சபதாய் என்று குறித்துள்ளார் .

நாம்  ஜாவா தீவு என்றும் சுமத்ரா தீவு என்றும் கேள்விப்பட்டுள்ளோம் அல்லவா அந்த தீவு தான் இந்த சாவகம் தீவு.

ஆகவே  ஜாவா சுமத்ரா பகுதியில் தமிழ் மக்கள் ஆரம்பகாலத்தில் இருந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மை.

மேலே குறிப்பிட்ட மணிபல்லவம் தீவில் நக்கசாரனர் என்ற மனிதனை உண்ணும் மனிதர்கள் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை...

ஆனால் இந்த சாவகம் தீவில் வாழ்ந்த நாகபுரத்து மக்கள் நேரடியாக தமிழகம் வந்தார்கள் என்ற வரலாறு உள்ளது..

இவர்கள் தமிழகத்தில் வந்து சேர்ந்த ஊர் பதிரிதிட்டா என்ற ஊர்.

தமிழகத்தில் உள்ள பதரி திட்டா என்ற ஊருக்கு இந்த நாகர்கள் வந்ததால் நாகர்களின் பட்டினம் ஆனது.

ஆம் இன்றைய நாகப்பட்டினம் என்றழைக்கப்படும் ஊர் தான்...

ஆகவே தமிழர்கள் மனித மாமிசம் உண்ணக்கூடிய மனிதர்களையும் சமாளித்துள்ளார்கள் என்பதாக தெரிகிறது..

குறிப்பு : மணிப்பல்லவத்தை நைனா தீவு என்றும் ஒரு கருத்து உள்ளது..

இந்த தீவு இன்றும் இலங்கையில் உள்ளது.

ஆனால் இந்த தீவுக்கும் மணிப் பல்லவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாக பல செய்திகள் கிடைக்கிறது.

அதனால் எனது ஆய்வின் அடிப்படையில் உறுதியாக கூற முடியாது.

ஒரு வேலை நைநா தீவாகவும் இருக்கலாம்...

புற்றுநோய் ஒரு நோய் அல்ல அது ஒரு வியாபாரமே...