29/07/2018

திமுக கருணாநிதி மக்களுக்காக உழைத்தார்...


அடேய் வெண்ணைய்களா... எந்த மக்களுக்காக உழைத்தார்?  அதை தெளிவாக சொல்லுங்கடா....

தான் பெற்ற மக்களுக்காகவும் தன் தெலுங்கின மக்களுக்காகவும் உழைத்தார் என்று சொல்லுங்கடா...

ஐயா.. காமராஜரின் கடைசி காலத்தில் அவரிடம் இருந்தது 120ரூபாய், 4வேஷ்டி, 2சட்டை.. நிறைய புக்ஸ்..

கலைஞரின் சொத்து 1லட்சம் கோடிக்கும் மேல்..

இதுல யாரு மக்களுக்கு உழைச்சது.. ?

உலத்தமிழ் செம்மொழி மாநாடா திமுக கருணாநிதியின் குடும்ப மாநாடா...


தமிழ் கூறும் நல்லுலகு இதுவரை 8 உலக தமிழர் மாநாட்டினைக் கண்டுள்ளது. உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஆகும் அப்போது அதன் தலைவராக இருந்தவர் ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா.
(International Association of Tamil Reasearch) உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக நவம்பர் மாதம் 2009ஆம் ஆண்டு தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி இது மரபுக்கு மாறானது. கடந்த 8 உலகத் தமிழர் மாநாடு நடைபெறும் திகதி மற்றும் இடம் போன்றவற்றை உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகமே அறிவித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு பல்வேறு தமிழ் தரப்புக்களிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிவரத் தொடங்கின.

உலகத் தமிழ் ஆராய்ச்சி கழககத்தால் எடுக்கப்பட்ட முடிவு...

உலகத் தமிழ் ஆராய்ச்சி கழககத்தின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா பல்வேறு தரப்பினரையும் கலந்தாலோசித்து விட்டு 2011 ம் ஆண்டில் வேண்டுமானால் உலகத் தமிழர் மாநாட்டைத் தமிழகத்தில் நடத்தலாம் இப்போது இரண்டு மாதக் காலத்தில் தமிழ் அறிஞர்களால் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தயாரித்து மாநாட்டில் சமர்ப்பிக்க போதிய நேரம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் காரணம் யாதெனில் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு 2010 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கின்றார் இந்த 2 மாதக் காலத்தில் தமிழ் பேராசியர்களாலோ அல்லது அறிஞர்களாலோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ ஆய்வுக் கட்டுரைகளை மாநாட்டில் சமர்ப்பிக்கவோ தேவையான கால அவகாசம் இல்லை என்பதால். ஆனால் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு விழா அவசரமாக தேவைப்பட்டது. அதற்கு பல்வேறு சுயலாப காரணங்கள் உண்டு.

உலகத் தமிழர் மாநாடு தொடங்கிய வரலாறு...

யாழ்ப்பாணம் கரம்பனில் 02-08-1913 ஆண்டு பிறந்த தனிநாயகம் என மக்களால் அறியப்பட்ட சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் அவர்களின் முயற்சியாலே தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோற்றம் பெற்றது. 18-07-1981 ல் தனிநாயகம் அடிகளாருக்கு மாட்சி நயப்பு மலர் வெளியிடப்பட்டது அதில் பேராசிரியர் கா.பொ. இரத்தினம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் தந்தையும் தாயும் தனிநாயகம் அடிகள் என்கிறார். அதுமட்டுமன்றி கலாநிதி சு. வித்தியானந்தன் அருள்திரு தனிநாயகம் நினைவு மலரில் (பக்கம்44) உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஸ்தாபகர் தனிநாயகம் அடிகள் என்கிறார். அத்துடன் கலாநிதி கமில்சுவல்லபில் தனிநாயம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஞானத் தந்தை என்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமானது அரசியல் சார்பு கொண்டதாகவோ வர்த்தக நோக்கம் கொண்டதாகவோ இருக்க கூடாது என தொடகத்திலேயே யாப்பிலே குறிப்பிட்டுவிட்டார்கள.

கருணாநிதியின் அரசியல் லாப மாநாடு:
இந்த நிலையிலேயே மாநாடு நடைபெறும் என தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி.
2009ஆம் வருடம் மே மாதம் 18ஆம் தேதி வரையும் ஈழத்திலே தமிழர்கள் கொள்ளப்பட்டும் இலட்சக் கணக்கான மக்கள் புனர்வாழ்வு நிலையம் என்ற பெயரிலே சிறைப்படுத்தியும் வைத்திருக்கும் போது கருணாநிதி வெளியிட்ட தன்னிச்சையான அறிவிப்பானது தமிழையும் தமிழர்களையும் நேசிக்கும் எல்லோரையும் கோபப்படுத்தியது.

ஈழத்திலே நடந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் பலம் இருந்தும் அதனைச செய்யாது விட்டதுடன் தமிழ் மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, ஆளும் கட்சியாக இருந்துக்கொண்டே மனிதச் சங்கிலி போராட்டம் பதவி விலகல், பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என்ற நீண்ட நாடகத்தின் உச்சக்கட்டமாக உண்ணாவிரதம் என்றும் நாடகமாடியதுடன் ஈழத்திலே போர் நிறுத்தப்பட்டுவிட்டது என மிகப் பெரிய பொய்யைச் சொன்னதுடன் அவருக்கிருக்கும் ஊடக பலத்தை வைத்து சாதாரண தமிழக மக்களை நம்ப வைத்தவர் உலகத் தமிழ் மாநாட்டினை நடத்த முனைந்ததானது அவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் மட்டுமே நன்மை பயக்குமே தவிர தமிழுக்கு ஒன்றும் செய்துவிடப் போவதில்லையென்ற கருத்துருவாக்கம் தமிழ் ஆர்வலர்களிடையே இருந்தது.

எதிரியிடம் கைகோர்த்த கருணாநிதி:
தமிழையும் தமிழர்களையும் அழிக்க ஸ்ரீலங்கா அரசுடன் கை கோர்த்ததுடன் மட்டுமன்றி அதனை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட இத்தாலிய நாட்டை தாயகமாக கொண்ட சோனியாவே தொடங்கியும் வைக்கலாம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராக கூட கலந்து கொள்ளலாம். இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூட தமிழ் மொழியின் சிறப்பு பற்றி செம்மொழி மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தமிழ் சமூகமே செத்த வீட்டில் இருக்கும் மனநிலையில் தவித்துக் கொண்டிருக்கையில் முதல்வர் கருணாநிதி மேளம் கொட்டி தாலி கட்டும் வைபவத்தை நடத்திப் பார்க்க முயல்கிறார் என்று தமிழ் படைப்பாளிகள் கழகம் கலைஞரின் செம்மொழி மாகாநாட்டை விமர்சித்தது. ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது முதல்வர் கருணாநிதி டெல்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய வரலாற்று துரோகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இந்த வரலாற்று துரோகத்தை மறைக்கவும் தனது காலத்திலும் உலகத் தமிழர் மாநாட்டினை தாம் நடத்தியதாக வரலாற்றிலே இடம் பிடிக்கவும் தனது வாரிசு அரசிலுக்கு தமிழ் உலகத்தின் அங்கீகாரத்திற்குமே அவசரம் அவசரமாக உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுமென தன்னிச்சையாக அறிவித்தார். அது முடியாது போகவே செம்மொழி மாநாட்டினை நடத்துவதென அறிவித்து வேலைகள் மும்முரமாக நடந்தது.

உலகத் தமிழர் மாநாடல்ல கருணாநிதியின் குடும்ப மாநாடு:
30-12-09 அன்று முரசொலி நாளிதழில் செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொள்வோரின் விபரம் வெளிவந்தது. நாடு தெரியாதோர் 4 பேர் விண்ணப்பித்ததாக இருந்தது. எந்த நாடு என்றே தெரியாதவர்களின் விண்ணப்பங்களைக் கூட ஏற்றுக்கொண்டிருந்தார்கள். யாரும் கலந்தக்கொள்ளலாம் எதனையும் எழுதி அனுப்பலாம் என தமிழகம் எங்கும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

தமிழ் கூறும் நல்லுலகின் பேராளர்களும் மாமேதைகளும் தமிழ் ஆராய்சியாளர்களும் சேர்ந்து நடத்தும் உலகத் தமிழர் மாநாடு எங்கே? கருணநிதியின் குடும்பக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் பெயர் ஊர் தெரியாதவர்கள் பங்கு கொள்ளும் செம்மொழி மாநாடு எங்கே?

கருணாநிதியன் குடும்ப மாநாட்டை புறக்கணித்த தமிழர்கள்...

தமிழகத்தைச் சேர்ந்த சில தமிழ் கல்வியாளர்களும் ஈழத் தமிழ் ஆதரவாளாகளும் செம்மொழி மாநாட்டை புறக்கனித்துள்ள அதே வேளையில் உலகெங்குமுள்ள தமிழ் உதிரக்கொடி உறவுகளும் ஈழப் போரில் ஆகுதியாகிப் போன நம் உறவுகளுக்காக புறக்கணித்தனர். கருணாநிதி ஈழத் தமிழருக்கு செய்த வரலாற்று துரோகத்தை மறக்காமல் இருந்தனர். செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் புகழ் பாட சில மிகவும் பிரபலமான திரையுலக கவிஞர்களும் அவரது பக்கவாத்தியங்களுமே மாநாட்டை நடத்தினர்...

திமுக தெலுங்கர் கருணாநிதியும் தமிழின விரோதமும்...


பிரபாகரனுடைய தாயார் தீவிர சிகிச்சைக்காக தமிழகம் வந்த போது விமானத்தை விட்டு இறங்கவிடாமல் திருப்பி அனுப்பினாயே அது எவ்வளவு கொடுமை..

அதைவிட அதிக கொடுமையை நீ அனுபவிக்க வேண்டும்..


இதில் அரசியல், நாகரீகம், மனிதம் என்று பசப்பு வார்த்தையில் பாசாங்கு வேண்டியதில்லை...

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சற்று நேரத்தில் அறிக்கை வெளியிட உள்ளது...


காவேரி மருத்துவமனையில் இருந்து வெளிநபர்கள் வெளியேற்றம்,..

வெளிநபர்களை வெளியேற்ற போலீசார் காவேரி மருத்துவமனைக்குள் செல்கின்றனர்..

காவேரி மருத்துவமனைக்குள் இருக்கும் கட்சி பிரமுகர்கள், தொண்டர்களை வெளியேற்றும் பணி துவங்கியது,..

ஆயுதப்படை காவலர்கள் அரை மணி நேரத்தில் ராஜாஜி ஹால் , ராஜ ரத்தினம் ஸ்டேடியம் , பகுதிகளில் ஆஜராக வேண்டும் என காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்...

அனைத்து காவல் நிலைய காவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும்  கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது...

இன்று அறிவிப்பு வெளியாகலாம்...


மூட்டுவலி, முதுகுவலி, இடுப்புவலி, பெருமூச்சு நீங்க, இரத்தஓட்டம் சீராக, பணப்பை சுருங்காதிருக்க மிதிவண்டி பயன்படுத்துவோம்.. ஆரோக்கியம் காப்போம்...


டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, அடையாறு துணை ஆணையர் விளக்கம்...


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை டிடிவி தினகரன் அமமுக  வை விட்டு நீக்கியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் இல்லம் முன்பு கோஷம் எழுப்பிய புல்லட் பரிமளம் தனது ஓட்டுனர் சுப்பையா என்பவருடன் சேர்ந்த தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்து, கற்களை கொண்டு தாக்கியுள்ளார்.

இதனால் பரிமளத்திற்கு சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டுனர் சுப்பையாவை பிடித்து விசாரணை செய்து வருகிறோம்
- துணை ஆணையர் செஷாங் சாய் விளக்கம்...

வேணும்னா திராவிடத் தலைவர்னு போட்டுக் கொள்ளவும்...


திமுக தெலுங்கர் கருணாநிதியும் தமிழின அழிப்பும்...


இந்த திராவிடர்கள் புரட்சி என்றும் போராட்டம் என்றும் மேடைகளில் வீராவசனம் பேசினாலும் இவர்கள் இறுதியில் சங்கமிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் அமைத்த அரசு ஒரு அரச பயங்கரவாத ஆட்சியை அளிக்கும் அரசாக மட்டுமே விளங்கியுள்ளது...

மக்கள் போராட்டத்தை துப்பாக்கி முனையில் ஒடுக்கும் அரச பயகரவாதியாகத் தான் இந்த கருணாநிதி இருந்துள்ளார். அவரது ஆட்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் ஏராளம்.

19.6.1970 அன்று, தற்போதைய திருப்பூர் மாவட்டம், கனக்கம்பாளையம் பிரிவில் விவசாய சங்கத்தினர் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று விவசாயிகள் பலியாகினர்.

5.7.1972 அன்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மாநிலம் தழுவிய பந்த் நடத்திய போது காவல் துறையினர் பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் எட்டு பேரும், கோயம்புத்தூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் இரண்டு பேரும், திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டியில் ஒருவரும், இராமநாதபுரம் மாவட்டம், சாத்தூர், அழகாபுரி, மானாமதுரை ஆகிய இடங்களில் மூன்று பேரும் என மொத்தம் ஓரே நாளில் 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

17.9.1989 அன்று, தற்போதைய தேனி மாவட்டம், கண்டமனூரில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை, காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த போது, அதனை தட்டிக்கேட்க அந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை கலைந்து போக செய்ய, காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 குழந்தைகள் உண்பட 5 பேர் உயிரிழந்தனர் .

4.1.1999 அன்று, திருவாரூர் மாவட்டம், தேவாம்பாள்பட்டிணம் கிராமத்தில் நிலத்தை தோண்டும் போது கிடைத்த சாமி சிலைகளை வருவாய் துறையினர் கைப்பற்றி எடுத்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் தெய்வத்தை அவர்களே வழிபட ஏற்பாடு செய்யுமாறு, கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்தனர். இது குறித்து வருவாய் கோட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த இறப்பிற்கும் துப்பாக்கிச் சூட்டில் இறந்த அவர்களை விசாரிப்பதற்கும், அங்கு இருக்கக்கூடிய கோட்டாட்சித் தலைவர் விசாரணை மேற்கொண்டார்.

23.7.1999 அன்று, தாமிரபரணி மாவட்டம் மாஞ்சோலையில் நடந்த தொழிலாளர் ஊர்வலத்தின் போது காவல் துறை நடத்திய தடியடியில் 17 பேர் உயிரிழந்தனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் சென்ற போது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இரண்டு ரவுண்ட் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதிலிருந்து தப்புவதற்காக தாமிரபரணி ஆற்றில் குதித்ததிலும் சிலர் உயிரிழந்தனர்.
அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த சோ. பாலகிருஷ்ணன், போலீஸ் கற்களை கொண்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக குற்றஞ்சாட்டி இருந்தார். தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், இடதுசாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.

அப்போது தமிழக முதல்வராக மு. கருணாநிதி, போலீஸ் தற்காப்புக்காகவே தாக்குதல் மேற்கொண்டதாக கூறினார்.

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

17.11.1999 அன்று, சென்னை, மத்திய சிறையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சிறைவாசி ஒருவர் மர்மான முறையில் இறந்து போனதையடுத்து, சிறைவாசிகள் சிலர் துணை ஜெயிலரை எரித்து கொன்ற சம்பவத்தின் போது, வன்முறையைக் கட்டுப்படுத்த காவல் மற்றும் சிறைத் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 10 சிறைவாசிகள் உயிரிழந்தனர். 93 சிறைவாசிகள் காயமடைந்தனர். இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு டேவிட் கிரிஸ்டியன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது...

திராவிடத்தை விரட்டுவோம்...


சிலுவை யுத்தங்கள் - 5...


ஐரோப்பாவின் மோசமான சமூக நிலை...

அன்றைய ஐரோப்பிய சமூகம், பாப்பரசரின் தலைமையின் கீழ் ஒரு பகுதியினரும் பேரரசனின் தலைமையின் கீழ் ஒரு பகுதியினரும், பாட்டாளிகள் என ஒரு பகுதியினருமாக மூன்று குழுக்களாகக் காணப்பட்டது.

உரோமத் திருச்சபையை தனியானதொரு சுதந்திர சக்தியாக அமைக்க வேண்டும் என்பதைக் குறியாகக் கொண்டிருந்த பாப்பரசர், தமது மேலாதிக்கத்தைக் கிறித்துவ உலகில் நிறுவுவதற்காகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்காகப் போர் நடவடிக்கைகளைக் கூட ஊக்கவித்தார்.

முஸ்லிம்களுக்கெதிராகச் சிலுவை இயக்கத்தை ஆரம்பிக்கத் தூண்டுவதன் மூலம் கிறித்துவ உலகின் ஆதரவைப் பெறலாம் எனவும், இதன் விளைவாக ஐரோப்பிய மன்னர்கள், இளவரசர்கள் தனது தலைமைத்துவத்தை எவ்வித மறுப்புமில்லாமல் ஏற்றுக்கொள்வா் என்றும் கருதினார்.

எனவே,இவ்வாறு மூன்று பகுதியினராகப் பிரிந்து,அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உட்பட்டிருந்தவர்கள், பாப்பரசரின் பொது அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.

அதாவது, தங்களை இளவரசா்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளவும் மன்னர்களும் இளவரசர்களும் கிழக்கு பிராந்தியத்தில் புதிய சிற்றரசுகளை உருவாக்கிக் கொள்ளவும் பாட்டாளிகள் ஏழ்மையின் கோரப் பிடியிலிருந்தும், அடிமைத் தளையிலிந்தும் தம்மை விடுவித்துக் கொள்ளவும் பாப்பரசரின் அழைப்பை இருகரம் நீட்டி வரவேற்றனர்.

இவ்வாறு தனது மேலாதிக்கத்தைக் கிறித்துவ உலகில் நிறுவிக் கொள்ளும் பொருட்டு ஐரோப்பிய கிறித்துவர்களின் உள்ளங்களில் சிலுவைப் போர் தொடங்குவதற்கான வேட்கையையும் ஆர்வத்தையும் தூவினர்.

- தொடரும்....

எத்தனையோ முறை முதல்வராக இருந்தும்... ஒரு சிறந்த அரசு மருத்துவமனை கூடவா உறுவாக்க முடியல...


சுயநலவாதிகள் ஊழல்.
காசு பணம் துட்டு...

இன்று சர்வதேச புலிகள் தினம்: எண்ணிக்கை அதிகரிப்பதால் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி...


உலகம் முழுவதும் 13 நாடுகளில் உள்ள காடுகளில் புலிகள் வாழ்கி ன்றன. இந்தியா மற்றும் வங்க தேசத்தின் தேசிய விலங்கு புலி. 19-ம் நூற்றாண்டில் இவ்வுலகில் லட்சத்துக்கும் அதிகமான புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. அவற்றில் 97 சதவீதம் அழிந்து, தற்போது வெறும் 3,200 என்ற எண்ணிக்கையில் புலிகள் குறைந்துவிட்டன. 1972-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியா வில் 2 ஆயிரம் என இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2006-ம் ஆண்டில் 1,411 ஆகக் குறைந்தது. இது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஷ்யாவில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில், புலிகள் வாழும் 13 நாடுகள் பங் கேற்றன. அதில், அழிந்துவரும் பட்டியலில் இருக்கும் புலிகள் இனத்தைப் பாதுகாக்க வலிறுத்தி யும், புலிகளின் எண்ணிகையை உயர்த்தும் நோக்கிலும் ஒவ் வொரு ஆண்டும் ஜூலை 29-ம் தேதியை சர்வதேச புலிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, வன உயிர் பாதுகாப் புச் சட்டம், புலிகள் பாதுகாப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டன. மேலும், இயற்கை பாதுகாப்பு உலக நிதியம் மூலம் ஏற்படுத்தப் பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளால் புலிகளின் எண்ணிக்கை அதி கரிக்கத் தொடங்கின.

இந்தியாவில் 2010-ல் 1,706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2014-ல் 2,226 என அதிகரித்தது. இது இயற்கை ஆர்வலர்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் வ.சுந்தரராஜூ கூறிய போது, “மலேசியன், இந்தோசீனா, சுமத்ரன், பெங்கால், சைபீரியன், தென்சீன, பாலினீஸ், காஸ்பியன், ஜவான் என 9 வகையான புலி இனங்கள் உலகில் இருந்தன. இவற்றில் பாலினீஸ், காஸ்பியன், ஜவான் மற்றும் தென்சீனப் புலி இனங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. சுமத்ரன் இனம் அழியும் விளிம்பு நிலையில் உள்ளது.

மனிதர்களின் வேட்டைக் குணம், புலிகள் வாழும் காடுகள் வழியாக சாலைகள் அமைத்தல், ஆக்கிரமிப்பு செய்தல் போன்ற காரணங்களால்தான் புலிகள் இனம் அழிவின் விளிம்புக்குச் சென்றது. புலிகள் வாழும் காடுகள் எப்போதும் நீர்வடிப் பகுதியாகத் திகழும். ஒரு புலியைக் காப்பதன் மூலம் 100 சதுர அடி கிலோ மீட்டர் பரப்புள்ள காட்டை நாம் பாதுகாக்கிறோம்.

புலிகள் முற்றிலும் அழிந்தால், அவை வாழும் சூழியல் தொகுதி யாகிய காடுகளும் அழியும். காடு கள் மனிதனின் முக்கிய வாழ்வா தாரம். இந்தியாவில் மட்டும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ், 49 புலிகள் காப்பகங்கள் செயல்படுகின்றன. அழிவின் விளிம்புக்குச் சென்ற புலிகள் இனத்தின் எண்ணிக்கை பல்வேறு காலகட்ட விழிப் புணர்வுக்குப் பிறகு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தமிழ்நாட்டில் 229 புலிகள்...

புலிகளின் எண்ணிக்கை குறித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்துகிறது. கடந்த 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 229 புலிகள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய காப்பகங்கள் செயல்படுகின்றன...

கலவர அரசியலும் உண்மையை ஓங்கி அடிக்கும் புத்தகமும்...


தாஜ்மஹால் பற்றிய சர்ச்சையில் நாம் மறந்து விட்ட வரலாறு...

தாஜ்மஹாலை கைப்பற்ற யோகி கூட்டம் முயர்சி செய்த போதே பதிவிட வேண்டும் என நினைத்து இருந்தேன்.

ஷாஜஹான் பேரில் மட்டுமல்ல உலகமே வியந்த கட்டுமானத்திற்கு அச்சாணி இட்டவர்.

இவருடைய மகன்களின் ஒருவர் தான் தாரா ஷுக்கோ.

இவரை பற்றிய வரலாறை கொஞ்சம் படிக்கத்தான் வேண்டும்.

இவரை பொருத்தவரை ஹிந்து மதம் மற்றும் சீக்கிய மத தலைவர்களுடன் நட்புறவை கொண்டவர்.

தம் சிறு வயதில் ஹஜ்ரத் மியான் என்ற சூஃபி ஞானியிடம் பாடம் படித்தவர்.

சீக்கியரின் ஏழாவது குருவான ஹர்ராய் என்பவர் தான் இவரது நெருங்கிய நண்பர் என்று வரலாறு கூறுகிறது.

இஸ்லாம் இந்து மத கோட்பாடுகளை ஆய்வு செய்து இரு மதத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்தார்.

இவர் தான் பல சமஸ்கிருத உபநிஷங்களை பெர்சிய மொழிக்கு மொழி பெயர்ப்பும் செய்துள்ளார்.

சூஃபி தத்துவங்களையும் இந்து சமய வேதங்களையும்  இணைத்து அவர் உருவாக்கிய நூல் தான்.

மஜ்மாவுல் பஹ்ரைன்...

இதன் அர்த்தம்
இரண்டு கடல்களின் சங்கமம் ..

இதே நூல் சமஸ்கிருதத்திலும்
வெளி வந்தது... அதன் பெயர்
சமுத்ரா சங்கம..

இதை எழுத இவர்  9 ஆண்டுகள் எடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது .

இதற்காக 14,000 kilometers மொத்தமாக சுற்றி திரிந்தார் எனவும் குறிப்பு உள்ளது.

Ajmer to Delhi, to Agra, Allahabad, Varanasi, Kashmir, Gujarat,  போன்ற நகரங்களில் தங்கி அவர்கள் வாழ்வியலை நேரில் கண்டு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் வாரனாசி கோவிலில் தான் தங்கியுள்ளார்.

இங்கு தங்கி சமஸ்கிருதத்தையும் உபநிஷங்களையும் கற்று கொண்டுள்ளார்.

கூடவே தமது தொழுகையையும் அங்கே தான் நிறைவேற்றினார்.

IksiralAzam என்ற நூலை பின்னர் இவர் எழுதியதாக வரலாறு உள்ளது.

அதாவது உபநிஷத்தில் உள்ள நல்ல கருத்துக்களை தொகுத்து  இக்ஸிர் அல் அஜாம் என்ற நூலை தொகுத்ததாகவும் வரலாறு உள்ளது.

(இதில் மட்டும் சில கருத்து முரண்பாடுகள் உண்டு இக்ஸிர் அல் அஜாம் என்பது வேறொருவரின் தத்துவ நூல் அது போன்று இது உள்ளதாக இவர் மேற்கோள் காட்டினார் எனவும் வரலாறு உள்ளது).

எது எப்படியிருந்தாலும் ஒற்றுமையை மையப்படுத்தி இவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம்.

ப்ரஹ்மாவதியா அல் குர்ஆன் என்ற நூலையும் இவரு எழுதியுள்ளார்..

இதில் கடவுள் தத்துவத்தை கடவுளை தெரிந்து கொள்ள  இந்து மதம் இஸ்லாமிய மதம் கூறும் கொள்கைகளை கூறி இரு மதத்தை ஒற்றுமை படுத்துகிறார்.

ரிஸாலாயே ஹக் ரூமா என்ற புத்தகத்தில் இந்திய மக்களின் யோகா பயிற்சியை சிலாகித்துப்
எழுதியுள்ளார்..

இப்படியாக ஒரு முஸ்லீம் இளவரசர் வாழ்ந்துள்ளார்...

இப்படி கோவில் கோவிலாக சுற்றி அங்கயே தங்கி வேதம் பாடம் படிக்க அனுமதித்த இவரது தந்தை ஷாஜஹான் தான் மதவெறி பிடித்தவராம்..

அல்லது இவர்கள் புதிதாக கலவர அரசியலுக்கு பயன்படுத்தும் வார்த்தை கோவிலை இடித்து விட்டு தான் தாஜ்மஹால் கட்டினார் என்பது.

இவர்களின் வாதத்தையும் உண்மை வரலாற்றையும் கூறிவிட்டேன்.

எது உண்மை என உலகம் தெரிந்திருக்கட்டும்...

சிலுவை யுத்தங்கள் − 4...


இஸ்லாமிய அரசின் பலவீனம்...

ஆசியா ஆப்பிரிக்கா போன்ற தூரப்பிரதேசங்களை உள்ளடக்கிய அப்பாஸிய கிலாபத்தின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த கலீபாக்களின் ஆளுமையின்மை காரணமாக அப்பாஸிய ஆட்சி நலிவுற்றது.

அதாவது ஆதிக்கம் நிறைந்த சில கவர்னர்கள் தமக்கென தனித்தனியாக அரசுகளை நிறுவி அப்பாஸிய ஆட்சியின் சிற்றரசுகளாக செயல்பட்டனர்.

இதனால் மத்திய அரசின் உறுதி குறையலானது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலம் தொட்டே அதன் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் முட்டுக் கட்டைப் போட்டு வந்த கிறித்துவர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இதனால் சிலுவை யுத்தத்தின் ஆரம்ப கால கட்டத்தில் அன்றைய இஸ்லாமிய அரசினால் உறுதியான முறையில் எதிர்த்துப் போராட முடியாது போயிற்று.

ஐரோப்பாவில் காணப்பட்ட மோசமான பொருளாதார நிலை...

ஐரோப்பாவில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நில மானிய முறைப் பொருளாதார அமைப்பு காணப்பட்டதால் அங்கு வாழ்ந்த விவசாய ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

வறுமையில் வாடியிருந்த இவர்கள் கிழக்காசிய நாடுகளின் செல்வங்கள் மீது ஆசை கொண்டு இப்போரில் கலந்து கொண்டனர்.

அது மட்டுமல்லாது, இஸ்லாத்தின் அறிமுகத்திற்கு முன்னர், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த மத்தியதரைக் கடலிலுள்ள தீவுகளிலும், அதன் தென் கிழக்கு கரையிலுள்ள நாடுகளிலும் இஸ்லாம் அறிமுகமானதால் இப்பகுதிகள் முஸ்லிம்கள் வசமாயின.

அதன் பின்னால் இப்பிரதேசங்களின் வர்த்தகத்துறைகள் முஸ்லிம்கள் கைவசமாகியதால் அப்பிரதேச கிறித்துவ மக்கள் தமது வியாபாரத்திலும் வர்த்தகத்திலும் இழப்புகளைச் சந்தித்தனர்.

சிலுவைப் போரின் மூலம் தாம் இழந்த வர்த்தகத் தொடர்புகளை வெனிஸி, ஜெனீவா, பைஸா போன்ற கிழக்கு நாடுகளுடன் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளலாம் என நினைத்து அவர்கள் இப்போரை ஆதரித்ததோடு அப்போர்களில் பங்கேற்றுக் கொண்டனர்.

"சிலுவைப் போர், வளர்ந்து வந்த இத்தாலிய நகரங்களின் வர்த்தக ஆவலுக்குப் புதியதொரு வழியைத் திறந்து விட்டது"

என, வரலாற்றாசிரியரான James  Hosmer தனது The Jews p:137 எனும் நூலில் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

இந்த சந்தர்ப்பங்களைச் சாணக்கியமாக பயன்படுத்திக் கொண்ட சிலுவை வீரா்கள் புதிய புதிய வர்த்தகச் சந்தைகளை ஆரம்பித்ததோடு வியாபார மத்தியஸ்தலங்களையும் ஏற்படுத்தினர்.

இதனால் தான் இந்த வியாபாரிகள் தங்களால் முடிந்த உதவிகளை சிலுவை வீரா்களுக்கு வழங்க முடிந்தது.

- தொடரும்.....

மர்ம முடிச்சு...


ஓடாவி சமூகம்.. பழங்கால படகு போக்குவரத்து.. வைரம் பாய்ந்த கட்டை என்பது எதனால்?


அன்றைய காலகட்டத்தில் படகு போக்குவரத்து தான் அருகருகே உள்ள நிலங்களை இனைத்து மக்கள் வியாபாரம் உணவு போன்றவைகளை பரிமாற்றம் செய்து வாழ முடிந்தது.

இதில் அவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை இடி மின்னல்.

நிலத்தை விட நீரில் இடியின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

இதனால் பல படகுகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பல நமது முன்னோர்கள் இறந்திருக்க வேண்டும்.

இதை தடுக்க இவர்கள் எடுத்த முடிவு தான் கருங்காலி மரம்.

கருங்காலி மரம் என்பது தற்சமயம் கிடைப்பது அரிது.

இந்த மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் எல்லாம் இரும்பை போன்று திடமான உறுதியுடன் இருக்க கூடியது.

இந்த மரத்தின் உள் பகுதியை வைரம் என்பார்கள்..

(வைரம் பாய்ந்த கட்டை என்பது இதன் காரணமாக தான் வந்தது)

கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த மரத்தின் உட்பகுதி மிகவுமே திடமானது.

இந்த மரத்தை வெட்டி எடுத்துத்தான் படகு செய்ய ஆரம்பித்தனர் நமது மூதாதையர்கள்.

இதன் தன்மை தான் லேசான மணல் திட்டுக்களையும் தாண்டிவிடும் ஆழமான கடல் பகுதியையும் தாண்டும்.

 ராட்சத அலைகள் வரும்போது எம்பி குதித்து நீந்தும் தண்மையையும் இந்த கருங்காலி மரம் தன்மையை கொண்டு இருந்தது.

ஒரு வேளை இடி கருங்காலி மரத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட படகில் விழுந்தால் அதை அப்படியே கடத்தி கடலில் நகர்த்தி விடும் தண்மையையும் கொண்டுள்ளது இந்த மரம்,

கடலில் விழும் இடி காலப்போக்கில் அது சிறிய தீவாக மாறும்  என்ற உண்மையும் நமக்கு தெரிகிறது.

இன்றைய மனிதர்களே போகாத கடல்களில் இப்படி தீவுகள் இருப்பதற்கு காரணம் கருங்காலி மரத்தின் விளைவு என்ற உண்மையை
தெளிவுபடுத்துகிறது.

இது ஒரே நாளில் நடப்பது இல்லை காலங்கள் கடந்து நடக்கும் நிகழ்வுகள்.

ஓடாவி சமூகம்..

இவர்கள் தான் இதை நேர்த்தியாக செய்யக் கூடியவர்கள்

இவர்கள் செய்த பாய்மர கப்பல்கள் இந்த கருங்காலி மரத்தை எடுத்து செய்ததால் பெரும்பாலான கப்பல் விபத்து அன்றைய தினம் தடுக்கப்பட்டது.

இந்த ஓடாவி சமூகம் பாய் மர கப்பல்கள் செய்து வாழ்ந்து வந்த சமூகம் அன்றைய காலகட்டத்தில் இவர்களுக்கென்று மரியாதை உண்டு பல மக்கள் இந்த சமூகத்தில் வாழ்ந்துள்ளனர்.

இன்றைக்கு இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

பயணம் என்பது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் அப்படிப்பட்ட விஷயத்தை செய்பவர்களுக்கு அன்றைய மக்கள் மற்றும் மன்னர்கள் இவர்கள் மீது தனி மரியாதை வைத்து இருந்தனர்.

காரணம் அரசனுக்கு போர் கப்பல் தயாரிப்பது இவர்கள் தான் இப்படி மதிக்கப்பட்ட ஒரு சமூகம் இன்றைக்கு அழிக்கப்பட்டுவிட்டது.

இந்த பதிவு தற்சமயம் போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினையில் மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் இருக்கும் கையாலாகாத அரசையும்
குறிக்கும்...

திருட்டுக்காக எழுதப்பட்ட கர்நீக சாஸ்திரம் எனும் கரவட நூல்...


தமிழ் இலக்கியத்தில் முக்கிய வரலாறு மதுரையை மய்யப்படுத்தி உண்டு

அந்த மதுரை மாகாணத்தில் இன்றைய  போலிஸ் வருவதற்கு முன்பு பாதுகாப்பு  எப்படி இருக்கும் என்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றது.

வரலாற்றில் தங்கம் வெள்ளியை விட பெரிதும் விலையுயர்ந்த விஷயம் தாணியங்கள் தான்.

தாணியங்கள் விளையும் விவசாய நிலங்களை பாதுகாக்க அக்காலத்தில் ஒரு முறை இருந்தது அது.

சில சமூகம்.

இவர்களை நியமித்து விடுவார்கள் நிலத்தின் உரிமையாளர்கள்,

அந்த நிலத்தின் விளைச்சலுக்கு இவர்கள் தான் பொறுப்பு.

ஒரு வேலை நிலங்களில் உள்ள தாணியங்கள் திருடப்பட்டால் அந்த நியமிக்கப்பட்ட  காவலாளித்தான் பரிகாரம் தர வேண்டும்.

உதாரணமாக திருடப்பட்டது  5 மரக்கா நெல் என்றால் பாதுகாக்க தவறியதால்  5 மரக்காள் நெல்லை காவல் காத்தவர் நில உரிமையாளருக்கு தரவேண்டும்.

இதில் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் விளைச்சல் வரை பாதுகாத்து விட்டால் அறுவடை முடிந்ததும் காவல் கூலியாக
10 மரக்காள் முதல் வழங்கப்படும்.

இதனால் இரவும் பகலும் பாதுகாக்க அந்த விவசாய நிலத்திலே குடிசை அமைத்து தங்குவார் அந்த காவலாளி .

இவர்களை தான் சமீபத்திய நவீனம்  தோட்டக்காரன் என்று அழைக்கிறது

மேலே குறிப்பிட்டது தான் அழகான முறை.. நஷ்டம் இல்லாமல் பாதுகாத்தால் கூலி யாக நெல்லும்..

பாதுகாக்க தவறினால் நில உரிமையாளருக்கு அதற்குண்டான நஷ்டஈடு தரவேண்டும் என்பது.

இந்த காலகட்டத்தில் தான் பிரிட்டிஷ் ஆட்சி பரவலாக இருக்கக்கூடிய நேரம்,

காவல் நிலையம் கோர்ட் போன்ற விஷயங்கள் புதிதாக வர தொடங்கிய காலம்..

இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாது..

இதோ பாருங்க இவர்கள் தான் காவல் துறை அதிகாரிகள் இவர்களிடம் தான் உங்கள் திருட்டுபோன விடயங்களை
கூறவேண்டும்.  என்றெல்லாம் மக்களிடையே கூறப்பட்டது.

 இந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ்  காவலர்களுக்கு திருடனை பிடிக்க ஒரு புத்தகம் கட்டாய வாசிப்பாக்கப்பட்டது,

அந்த புத்தகத்திற்கு பெயர்
கரவட நூல்..

இதை எழுதியவர் கருநீசுதர் என்பவர்..

இது மூல மொழி சமஸ்கிருதம்..
கர்நீக சாஸ்திரம் என்ற நூல் சமஸ்கிருத நூல்,

இதில் எப்படியெல்லாம் திருடலாம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது
இதை படித்தால் திருடன் எப்படியெல்லாம் அகப்பட்ட வாய்ப்பு உண்டு அதை எப்படி தவிர்க்க வேண்டும் என்ற உண்மை உள்ளதால் இதை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு கட்டளையிட்டது.

இங்குதான் பிரச்சினை உள்ளது.

இன்றைய நவீன சட்டத்தால் திருடி விட்டான் என்று ஒருவனை நாம் நிறுத்தினால் அதற்கான ஆதாரத்தை நாம் தான் தரவேண்டும்.

எவ்வளவு முட்டாள்தனமான
வாதம் இது.

ஒருவேளை திருடுபவன் இவன் தான் என்று தெரிந்தும் ஆதாரம் இல்லை என்றால் தண்டிக்க முடியாது .

இது அக்காலத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய சட்டம்
கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக இந்த சர்ச்சை தீர்கப்படாமல் இருந்ததாக வரலாறு உள்ளது.

ஏன் இன்றும் கூட இதற்கு பதில் இல்லை.

ஒரு வீட்டில் நகை திருட்டு போய் விட்டால் அந்த பகுதியில் உள்ள காவல்துறை தான் பொறுப்பு திருடனை பிடிக்க முடியவில்லை என்றால் திருட்டுபோன நகையை அவர் தமது சொந்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால்..

திருடன் தப்பவும் முடியாது அடுத்து அடுத்து திருடவும் முடியாது?

இது தான் நம் மூதாதையர்களின் தந்திரம்...

தொல்காப்பியர் காலத்தில்..


1-அரசன்,
2-அந்தணர் (பிராமணர் அல்ல)
3-வேளாளர்,
4-வணிகர்.

தமிழீழத்தில்..

1-அரசர்,
2-வேளாளர்,
3-அந்தணர்,
4-வணிகர் இப்படி இருந்தது.

தற்பொழுது..

பிராமணர்
ஷத்திரியர்,
வைசிரியர்,
சூத்திரர்

எனத் திரிக்கப்பட்டது யாரால்?

நம்ப முடியாத கூகுள் உண்மைகள்...


இயற்கை குளியல் சோப்பு...


தற்சார்பை அனைவருக்குள்ளும் விதைக்கும் வகையில் பதிவிடுகின்றோம்...

தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், சிரமம் பாராமல் நீங்களே முயற்ச்சித்து பாருங்கள்...

வெந்தயத்தின் மருத்துவக்குணம்...


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்...

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...

மனிதா... நாகரீக வளர்ச்சி என்னும் மாயையை மறந்து தற்சார்பை நோக்கி செல்லும் காலம் வந்துவிட்டது...


இன்னும், தான் என்ற அகங்காரத்தில் அழியாதே...

கடவுளின் படைப்பில் , நீயும் ஓர் உயிரினமே...

சிலுவை யுத்தங்கள் − 3...


சிலுவை யுத்தங்களின் காரணங்களை நாம் ஆராய முற்படும் போது பல காரணங்களை வரலாற்றாசிரியர்கள் நமக்கு சொல்லிச்செல்கின்றனர்.
முஸ்லிம் உலகுக்கும் கிறிஸ்தவ உலகுக்கும் இடையில் சிலுவைப் போார்கள் நடைபெற பல காரணங்களைக் கூறலாம் அவற்றை நோக்குவோம்.

மதவெறி...

மத ரீதியாகப் பல     பிரிவினராகப் பிளவுப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள், முன்னேற்றத்தின் உச்சத்தை எட்டியிருந்த இஸ்லாத்தின் அரசியல் ஆளுமையைக் கண்டு பொறாமைக் கொண்டு அதை தடுத்து நிறுத்தி தமது சாம்ராஜ்யத்தையும் மதத்தையும் பரப்புவதை இலக்காகக் கொண்டிருந்தனர்.

கிறிஸ்தவ சமயத்தை உலகம் முழுதும் பரப்பி முஸ்லிம் ஆசியாவை கிறிஸ்துவ ஐரோப்பாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து கிறித்துவ ஆசியாவாக மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே இப்போரை ஆரம்பித்தனர்.உண்மையில் இப்போரை முஸ்லிம் ஆசியவுக்கும் கிறித்துவ ஐரோப்பாவுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் என்று கூறுவதை விட இஸ்லாத்துக்கும் கிறித்துவத்துக்கும் இடையில் நடைபெற்ற போர் என்று கூறுவதே பொருத்தமானது.

குலபாஉர்ராஷிதீன்கள் உமையாக்கள் மற்றும் அப்பாஸிய ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் முஸ்லிம்களிடம் இழந்த பிரதேசங்களையெல்லாம் ரோம கிறித்தவர்கள் மீட்க விரும்பினர். கிறித்துவர்களிடையே ரோம திருச்சபை, கிரேக்க திருச்சபை என இரண்டு வகுப்பினர் காணப்பட்டனர். இவையிரண்டிலும் ஓரளவு செல்வாக்கில் மிகைத்திருந்த உரோம திருச்சபையைச் சேர்ந்தவர்கள் கிரேக்க திருச்சபைக்கு எதிராகவும் இஸ்லாத்திற்கெதிராகவும் கி.பி.11−ஆம் நூற்றாண்டில் போர் தொடுத்தனர். இவர்கள் முஸ்லிம்களுக்கெதிரான தமது போர் நடவடிக்கைகளை மறை முகமாகவும் மேற்கொண்டனர்.

ஆசியாவிலும்,ஆப்பிரிக்காவிலும் பரவலாகச் செல்வாக்குப் பெற்றுக் காணப்பட்ட இஸ்லாம்  ஐரோப்பாவின் கதவையும் தட்டியது. இதனைக் கண்ட கிறித்தவர்கள் ஏற்கனவே ஆசியாவையும் ஆப்பிரிக்காவிலும் தன் கிளைகளை வளர்த்துக் கொண்ட இஸ்லாம் எங்கு ஐரோப்பாவிலும் வேறூன்றி விடுமோ என அங்கலாயினர்.

இதன் காரணமாக பலஸ்தீனத்தில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸைத் தரிசிக்கச் செல்லும் கிறித்துவ யாத்திரீகர்களை முஸ்லிம்கள் தாக்கி துன்புறுத்துகின்றனர் என பொய்யானப் புறளி ஒன்றைப் பரப்பி முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கிறித்துவ அறிஞர்கள் முஸ்லிம்களிடமிருந்து இத்தூய இடத்தை மீட்க வேண்டும் என மக்களிடம் ப்ரச்சாரங்களைத் தொடுத்து கலவரத்தைத் தூண்டி போருக்கு ஆயத்தமானார்கள்.

தொடரும்.....

சாகர்மாலா : தமிழகத்தில் தனியார் துறைமுகங்கள்...


தமிழகத்தில் எண்ணூர், திருக்கடையூர், PY-3 (Oil field), காட்டுப்பள்ளி, கூடங்குளம் ஆகிய ஐந்து இடங்களில் தனியார் துறைமுகங்கள் உள்ளன...

திருட்டு திராவிடம்...


திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி ராபர்ட் கால்டுவெல்ஸ் தான்..

கால்டுவெல் அவர்கள் ஆதாரமாக எடுத்துக் கொண்ட நூல் தந்திர வார்த்திகா என்னும் மீமாம்சத் தத்துவ உரை நூல்.

இதை எழுதியவர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் என்னும் வேதவித்வான். இவர் ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவர்.

திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது. நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு.

இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை.

அப்படி என்றால் வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் திராவிடத் தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி.

திராவிட கட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் காமராஜர், பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை. அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள்.

மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லி கொள்ளும் எந்த மாநிலத்திலும் தமிழனை முதல்வராக்க மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லி கொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள் இதுதான் சதி.

எடுத்துகாட்டாக 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சியின் சென்னை மாகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம்...

உண்மையில் செடி, மரம் வளர்ப்பது தான் யா நம்முடைய பொழுதுபோக்கு...


நம்புங்கள், இந்தியா ஒரு விவசாய நாடு..


வந்தேறிகள் யார் ?


வந்தேறி என்பவன் மண், மொழி, மக்கள், உற்றார், உறவினர் என அனைத்தையும் உதறிவிட்டு மண்ணோ, பொன்னோ, பொருளோ தேடிப் பிரிதொரு நிலப்பரப்பிற்கு செல்பவன் ஆவான்.

இன்றும் வாழ வழியில்லாமல், வாழ்வின்மீது பற்றில்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை பரதேசி - பரதேசம் செல்கிறார்கள் என்று கூறுவதுண்டு.

இவ்வாறு வந்தேறிகளாக வந்து தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் சாளுக்கியர்கள், ஹோசைலர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், சாதவாகனர், சுல்தான்கள், களப்பிரர்கள், தெலுங்கு நாயக்கர்கள் ஆவார்கள்...

ஸ்டெர்லைட் ஆலை திறக்க பேச்சு வார்த்தை...


தமிழக ஊடகங்கள்...


ஏதோ ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் என்றால் பரவாயில்லை ...  எப்பவுமே இப்பிடினா எப்பிடி..

இப்பிடி தான் ஜெயலலிதா விசயத்திலும் செய்தீர்கள். இப்ப  கருணாநிதி முறை.. வயது மூப்பு.. அதை தொடர்ந்து உடல் தளர்வு என்பது இயற்க்கையானது..

அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் தமிழகத்தின் மற்ற முக்கிய பிரச்சனைகளை மறைக்க அணைத்து ஊடகங்களும் படாத பாடு படுகின்றன...

திராவிடத்தால் வீழ்ந்தோம்...


இங்கே இருப்பது ஒரே பிரச்சனை தான்...


நம் வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன...

புதியதாக எட்டுவழிச்சாலை,

நாளை இந்த எட்டுவழிச்சாலை பிரச்சனையை மறைத்து இன்னொரு பிரச்சனை...

ஒவ்வொரு கட்டமாக நம்மை பிரித்தும், உளவியல் ரீதியாக மடைமாற்றுகிறார்கள்..

திமுக வின் அனுபாத அரசியல்...


வரலாற்றில் கவிதைகளின் தாக்கம்...


பொதுவாக கவிதைகள் என்பது ரசிக்கின்ற அல்லது நேசிக்கின்ற விடயங்களுக்கு நாம் எழுதுவது அல்லது வாசிப்பது. 

ஆனால் நமக்கு தெரியாத கவிதையின் இன்னொரு அடையாளம் உண்டு. 

அது என்னத்தெரியுமா? 

போர் கவிதைகள்..

இப்படியான வார்த்தை இல்லை என்றாலும் கூட இந்த வார்த்தை வைப்பதற்கு தகுதியே. 

உலகின் உச்சகட்ட போரில் இருந்தாலும் தமது பங்கின் பகுதியாக நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்தவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. 

அந்த வகையில் தான் இந்த கவிதை எழுதும் கவிஞர்களை சொல்லலாம்.

கவிதைகளுக்காக  ஒரு கவிதை..

எல்லாவற்றையும் பற்றி கவிதையில் சொல்லலாம் ஆனால் கவிதையை பற்றியோ கவிதை எழுதும் கவிஞனை பறறியோ சொல்லவேண்டும். 
முடியுமா அல்லது இப்படியாக சிந்திக்க செய்தோமா.

ஆனால் உண்மையில் கவிதையை எழுதும் கவிஞனை பற்றி கவிதை உள்ளது. 

ஆம் இதோ கவிதை க்காக 
ஒரு கவிதை...

கவிஞர்கள் கவிதையை உருவாக்கவில்லை 
கவிதைகள் எங்கோ இருந்துக்கொண்டு உள்ளது. 

அது 
அங்கே 
நீண்ட காலமாக கிடக்கிறது.

கவிஞன் அதை எழுத்தின் மூலம் கண்டுபிடிக்கிறான். 

இப்படியாக அந்த கவிதை முடிகிறது. 

போர் சமயத்தில்  20 ம் நூற்றாண்டு கவிஞரான இத்தாலி நாட்டு கவிஞர் லூஜி பிராண்டல்லோ என்பவர் உலகில் நடக்கும் யுத்த வீரர்களின் தாய் தந்தையரின் மனநிலையை பற்றி இரண்டு வரி கவிதை எழுதினார் 

பாருங்களேன். 

பிள்ளைகளை போரிக்கு அனுப்பிவிட்டு பதக்கங்களை பெரும் பெற்றவர்களே சிறந்த வீரர்கள். 

கவிதைகள் ஒரு பக்கம் இருந்தாலும்..

இரண்டு வரி கட்டுரைகளும் பங்கேற்பு செய்துள்ளது. 

உதாரணமாக பாருங்கள் இந்த மூன்று வரிக்கட்டுரையை.

கதையில் வரும் முக்கியபாத்திரமான குண்டான மனிதர் கேட்கிறார் 
நாடும் சாப்பாடு போல 
அது இல்லாமல் வாழ முடியாது 
அதை ஆராவது காக்கத்தானே வேண்டும்
என்று கூறிவிட்டு தொந்தி தொடை வரை தொங்க நடந்தார். 

இப்படியாக கட்டுரை முடிகிறது. 

எல்லா சிந்தனையையும் மூடிவிட்டு மேலே உள்ள இந்த கட்டுரையை மீண்டும் படியுங்கள். 

உலக யுத்தங்கள் பற்றி எப்படி யூகித்துள்ளனர் என்று பல கோணங்களில் விளங்கும். 

அமெரிக்கா வியட்நாம் யுத்தத்தின் போது வியட்நாம் கவிஞர் இயற்றிய ஒரு கவிதையை பாருங்கள்...

தாயாயிருப்பது லேசானதல்ல வியட்நாமில்..

உலகத்து வழமை தாய் தம் பிள்ளைக்கு பூக்களை காட்டி நேசிக்க பழக்குவது..

இங்கோ குண்டுகளின் தாக்கத்தில் இருந்து எப்படி தப்புவது என்று பழக்குகிறோம்...

உலகத்து வழமை பறவைகளையும் பறவை ஒலியையும் காட்டி நேசிக்க பழக்குவது..

இங்கோ B 52 இரைச்சலையும் 
 F 105 ரைபிள் சத்ததையும் காட்டி தப்பிப்பது எப்படியென பழக்குகிறோம்..

இப்படியாக அந்த கவிதை முடிகிறது. 

ஒரு கட்டத்தில் கவிஞர்கள் எழுத்தாளர்களை பிடித்து மரண தண்டனை கொடுக்கும் அளவிற்கு சென்றது இவர்களது கவிதைகள், 

இதனால் யார் கவிதை எழுதுகிறார்கள் என்ற தகவலை வெளியிடாமல் போர் கவிதைகள் வெளி வர தொடங்கியது அது  மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றது. 

அப்படி ஒரு கவிதை தான் இது..

யார் எழுதியது என்ற முழுமையாக தெரியாத கவிதை ஆனால்  20 ம் நூற்றாண்டு கவிதை..

அமைதியை போல ஆனந்தமில்லை 
ஆசையை போல நெருப்பும்மில்லை
வெறுப்பை போல இழப்பில்லை
உடம்பை போல வலியில்லை.

அன்னா அஹ்மத்தோவா என்ற 
ரஷ்யா நாட்டு கவிஞர்..

ஹிட்லர் ரஷ்யாவை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார் என்ற செய்தியை கேட்டு ரஷ்யா மக்களுக்கு ஒரு கவிதையை இயற்றினார்..

அந்த கவிதை இதோ...

எது வரினும் உம்மை காப்போம் எம் ருஷ்யா..

எமக்காக மட்டுமல்ல பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்காகவும் எப்போதுமாய். 

இப்படி முடிகிறது கவிதை, 

இஸ்ரேலிய தாக்குதலால் துவண்டு போன பாலஸ்தீனத்தை அடிக்கடி தமது (கவிதை) வார்தையால்  தூக்கி நிறுத்துவது சில பாலஸ்தீன கவிஞர்கள், 

அப்படிப்பட்ட ஒரு கவிதையை பாருங்கள்...

பெரும் போர் களில் உயிர் நீத்தவர் புறமுதுகிடா பெரு வீரர்

அவர் புதைக்குழியிலே மறைவதில்லை. 

இறுதியாக ...

சதாத் ஹஸன் மாண்டே
பஞ்சாப்பில் பிறந்த இவர் எழுதிய இந்தியா (ஒட்டுமொத்தஇந்தியா இல்லை) பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தேறிய 
எழுதிய கவிதை ஒன்று உலகை உலுக்கிய கவிதை 

இதோ. .

வயிற்றை கீறிப்பிளந்த கத்தி நட்ட நடுவே நேராக வந்தது 

வந்த வரத்தில் கீழே இறங்கி அந்த ஆள் போட்டிருந்த பைஜாமாவின் கயிற்றை அறுத்தெறிந்தது

சில விநாடிகளில் சந்தோஷம் மகிழ கத்தினான் ..

பல அர்தங்கள் உள்ள கவிதை ரணங்கள் இவைகள். .

இப்படி கவிதைகளின் தாக்கம் 
போரில் குண்டு வீசுவதையும் விட வேகமாகவே வீசப்பட்டது இந்த கவிதை வரிகள்...

உண்மை தானே ?


இங்கு கடவுள்கள் மற்றும் மதங்கள் எப்போதோ அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதப்பட்டு விட்டது...


இப்போது நாம் மத ரீதியாக மோதுவது என்பது அவர்கள் ஒன்றாக இருப்பதற்காகவும்...

நாம் பிரிந்து இருப்பதற்காகவும் அவர்களால் உருவாக்கப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சிகள், அவ்வளவே...

ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?


ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான்.

இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.

இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.

ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும்.

அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம்.

அனைவரும் சேர்ந்து ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும்.

உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும்.

அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம், இல்லை என சொல்ல yes, no வையும் காண்பிக்கும்.

ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்....

ஸ்டெர்லைட் காய் நகர்த்தல்...


இன்று எமது குரல்கள் எட்டாமல் இருக்கலாம்...

ஆனால் ஆலை திறந்த பின் அந்த மக்களின் அழுகுரல் எட்டும் அன்றைய தினம் நீங்கள் அனைவரும் குற்றவாளிகளே...

தி.க கீ.வீரமணியின் தற்சாதி (சுய சாதி) பற்று அல்லது வெறி...


தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு பகுத்தறிவுவாதியாகவும் சாதி ஒழிப்பாளராகவும் தாலி ஒழிப்பாளராகவும் காட்டிக்கொண்டு இருக்கும் வீரமணியை என்ற போலியின் யாதவ சாதிப்பற்று...

சான்று கீழே..

இவர் தாக்கப்பட்ட போது இவரின் சாதியான யாதவ சாதி உணர்வை மைய இழையாக கொண்டு செயல்படும் யாதவ மகா சபை சமாஜ்வாடி (முலாயம் சிங் யாதவ்) ராஷ்ட்ரிய லோக் தல் (லல்லு பிரசாத் யாதவ் ) போன்றவை இவரை சந்தித்தது விடுதலையில் செய்தியாக வந்திருக்கிறது.

சாதியில் நம்பிக்கை அற்ற ஒருவர் அதிலும் "தமிழர் தலைவர்" ஒருவர் தனது சாதி சங்க ஆட்களுடன் சந்தித்து தனக்கு தனது சாதியினரின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்வது என்ன வகையான சாதி ஒழிப்பு என்பது பகுத்தறிவுக்கே வெளிச்சம்...

மறைக்கப்பட்ட உணவு தற்சார்பு முறையும் மருத்துவ வியாபார உலகின் மறுமுகமும்...



மூன்றரை வருடம் கழித்து ரயிலில் வந்த உரம்.. அதிர்ச்சி சம்பவம்...


கடந்த 2014ம் ஆண்டு விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் குப்தா என்பவர் ரூ 10 லட்சம் மதிப்பிலான உரங்களை மத்திய பிரதேச மாநிலம் பஸ்திக்கு கொண்டு செல்ல சரக்கு ரயில் பெட்டி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதன்படி விசாகப்பட்டிணத்தில் இருந்து பஸ்தியை நோக்கி சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. விசாகப்பட்டிணத்தில் இருந்து பஸ்திக்கு சுமார் 1400 கிலோ மீட்டர் ஆகும்.

குறிப்பிட்ட நாளில் அந்த ரயில் சென்று விட்டது.  ஆனால் குப்தா பதிவு செய்திருந்த உரமூட்டைகள் அடங்கிய பெட்டியை மட்டும் காணவில்லை. பல மாதங்களாகியும் தான் பதிவு செய்திருந்த பெட்டி வராததால் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்களும் பெட்டி எங்கே போனது தேடி தேடி பார்த்தனர். ஆனால் அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த குப்தாவும் இது குறித்து மறந்து போய் விட்டார்.

இந்த நிலையில் அந்த ரயில் பெட்டி இந்த மாதம் ஜூலை 25ம் தேதி பஸ்தி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதாவது சுமார் மூன்றரை வருடங்கள் கழித்து வந்துள்ளது. பின்னர் இது குறித்து குப்தாவுக்கு தகவல் தெரிவித்து உங்கள் உர மூட்டைகளை எடுத்து செல்லுங்கள் என்று கூறி உள்ளனர். ஆனால் குப்தாவோ இத்தனை வருடங்கள் கழித்து வந்துள்ள கெட்டுபோன உர மூட்டைகள்  எனக்கு வேண்டாம். எனக்கு அதற்குரிய நஷ்டஈட்டை கொடுங்கள் என்று கூறி உள்ளார்.

ரயில்வே அதிகாரிகளும் இந்த விஷயத்தில் யார் தவறு செய்தார்கள்  என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர்...

திராவிட கட்சிகள்...


தியானம்...


மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...

மனதின் அதிர்வெண்கள்..

14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG (Electro Encephologram) மூலம் அறியலாம்.

நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.

ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...

அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....

யோகத்தின் வகைகள்..

யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் .

இதில் தியானம் என்பது ஒரு படி
சக்கரங்கள்..

கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7...

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )...