29/07/2018

உலத்தமிழ் செம்மொழி மாநாடா திமுக கருணாநிதியின் குடும்ப மாநாடா...


தமிழ் கூறும் நல்லுலகு இதுவரை 8 உலக தமிழர் மாநாட்டினைக் கண்டுள்ளது. உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஆகும் அப்போது அதன் தலைவராக இருந்தவர் ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா.
(International Association of Tamil Reasearch) உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக நவம்பர் மாதம் 2009ஆம் ஆண்டு தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி இது மரபுக்கு மாறானது. கடந்த 8 உலகத் தமிழர் மாநாடு நடைபெறும் திகதி மற்றும் இடம் போன்றவற்றை உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகமே அறிவித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு பல்வேறு தமிழ் தரப்புக்களிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிவரத் தொடங்கின.

உலகத் தமிழ் ஆராய்ச்சி கழககத்தால் எடுக்கப்பட்ட முடிவு...

உலகத் தமிழ் ஆராய்ச்சி கழககத்தின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா பல்வேறு தரப்பினரையும் கலந்தாலோசித்து விட்டு 2011 ம் ஆண்டில் வேண்டுமானால் உலகத் தமிழர் மாநாட்டைத் தமிழகத்தில் நடத்தலாம் இப்போது இரண்டு மாதக் காலத்தில் தமிழ் அறிஞர்களால் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தயாரித்து மாநாட்டில் சமர்ப்பிக்க போதிய நேரம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் காரணம் யாதெனில் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு 2010 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கின்றார் இந்த 2 மாதக் காலத்தில் தமிழ் பேராசியர்களாலோ அல்லது அறிஞர்களாலோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ ஆய்வுக் கட்டுரைகளை மாநாட்டில் சமர்ப்பிக்கவோ தேவையான கால அவகாசம் இல்லை என்பதால். ஆனால் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு விழா அவசரமாக தேவைப்பட்டது. அதற்கு பல்வேறு சுயலாப காரணங்கள் உண்டு.

உலகத் தமிழர் மாநாடு தொடங்கிய வரலாறு...

யாழ்ப்பாணம் கரம்பனில் 02-08-1913 ஆண்டு பிறந்த தனிநாயகம் என மக்களால் அறியப்பட்ட சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் அவர்களின் முயற்சியாலே தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோற்றம் பெற்றது. 18-07-1981 ல் தனிநாயகம் அடிகளாருக்கு மாட்சி நயப்பு மலர் வெளியிடப்பட்டது அதில் பேராசிரியர் கா.பொ. இரத்தினம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் தந்தையும் தாயும் தனிநாயகம் அடிகள் என்கிறார். அதுமட்டுமன்றி கலாநிதி சு. வித்தியானந்தன் அருள்திரு தனிநாயகம் நினைவு மலரில் (பக்கம்44) உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஸ்தாபகர் தனிநாயகம் அடிகள் என்கிறார். அத்துடன் கலாநிதி கமில்சுவல்லபில் தனிநாயம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஞானத் தந்தை என்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமானது அரசியல் சார்பு கொண்டதாகவோ வர்த்தக நோக்கம் கொண்டதாகவோ இருக்க கூடாது என தொடகத்திலேயே யாப்பிலே குறிப்பிட்டுவிட்டார்கள.

கருணாநிதியின் அரசியல் லாப மாநாடு:
இந்த நிலையிலேயே மாநாடு நடைபெறும் என தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி.
2009ஆம் வருடம் மே மாதம் 18ஆம் தேதி வரையும் ஈழத்திலே தமிழர்கள் கொள்ளப்பட்டும் இலட்சக் கணக்கான மக்கள் புனர்வாழ்வு நிலையம் என்ற பெயரிலே சிறைப்படுத்தியும் வைத்திருக்கும் போது கருணாநிதி வெளியிட்ட தன்னிச்சையான அறிவிப்பானது தமிழையும் தமிழர்களையும் நேசிக்கும் எல்லோரையும் கோபப்படுத்தியது.

ஈழத்திலே நடந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் பலம் இருந்தும் அதனைச செய்யாது விட்டதுடன் தமிழ் மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, ஆளும் கட்சியாக இருந்துக்கொண்டே மனிதச் சங்கிலி போராட்டம் பதவி விலகல், பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என்ற நீண்ட நாடகத்தின் உச்சக்கட்டமாக உண்ணாவிரதம் என்றும் நாடகமாடியதுடன் ஈழத்திலே போர் நிறுத்தப்பட்டுவிட்டது என மிகப் பெரிய பொய்யைச் சொன்னதுடன் அவருக்கிருக்கும் ஊடக பலத்தை வைத்து சாதாரண தமிழக மக்களை நம்ப வைத்தவர் உலகத் தமிழ் மாநாட்டினை நடத்த முனைந்ததானது அவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் மட்டுமே நன்மை பயக்குமே தவிர தமிழுக்கு ஒன்றும் செய்துவிடப் போவதில்லையென்ற கருத்துருவாக்கம் தமிழ் ஆர்வலர்களிடையே இருந்தது.

எதிரியிடம் கைகோர்த்த கருணாநிதி:
தமிழையும் தமிழர்களையும் அழிக்க ஸ்ரீலங்கா அரசுடன் கை கோர்த்ததுடன் மட்டுமன்றி அதனை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட இத்தாலிய நாட்டை தாயகமாக கொண்ட சோனியாவே தொடங்கியும் வைக்கலாம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராக கூட கலந்து கொள்ளலாம். இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூட தமிழ் மொழியின் சிறப்பு பற்றி செம்மொழி மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தமிழ் சமூகமே செத்த வீட்டில் இருக்கும் மனநிலையில் தவித்துக் கொண்டிருக்கையில் முதல்வர் கருணாநிதி மேளம் கொட்டி தாலி கட்டும் வைபவத்தை நடத்திப் பார்க்க முயல்கிறார் என்று தமிழ் படைப்பாளிகள் கழகம் கலைஞரின் செம்மொழி மாகாநாட்டை விமர்சித்தது. ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது முதல்வர் கருணாநிதி டெல்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய வரலாற்று துரோகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இந்த வரலாற்று துரோகத்தை மறைக்கவும் தனது காலத்திலும் உலகத் தமிழர் மாநாட்டினை தாம் நடத்தியதாக வரலாற்றிலே இடம் பிடிக்கவும் தனது வாரிசு அரசிலுக்கு தமிழ் உலகத்தின் அங்கீகாரத்திற்குமே அவசரம் அவசரமாக உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுமென தன்னிச்சையாக அறிவித்தார். அது முடியாது போகவே செம்மொழி மாநாட்டினை நடத்துவதென அறிவித்து வேலைகள் மும்முரமாக நடந்தது.

உலகத் தமிழர் மாநாடல்ல கருணாநிதியின் குடும்ப மாநாடு:
30-12-09 அன்று முரசொலி நாளிதழில் செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொள்வோரின் விபரம் வெளிவந்தது. நாடு தெரியாதோர் 4 பேர் விண்ணப்பித்ததாக இருந்தது. எந்த நாடு என்றே தெரியாதவர்களின் விண்ணப்பங்களைக் கூட ஏற்றுக்கொண்டிருந்தார்கள். யாரும் கலந்தக்கொள்ளலாம் எதனையும் எழுதி அனுப்பலாம் என தமிழகம் எங்கும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

தமிழ் கூறும் நல்லுலகின் பேராளர்களும் மாமேதைகளும் தமிழ் ஆராய்சியாளர்களும் சேர்ந்து நடத்தும் உலகத் தமிழர் மாநாடு எங்கே? கருணநிதியின் குடும்பக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் பெயர் ஊர் தெரியாதவர்கள் பங்கு கொள்ளும் செம்மொழி மாநாடு எங்கே?

கருணாநிதியன் குடும்ப மாநாட்டை புறக்கணித்த தமிழர்கள்...

தமிழகத்தைச் சேர்ந்த சில தமிழ் கல்வியாளர்களும் ஈழத் தமிழ் ஆதரவாளாகளும் செம்மொழி மாநாட்டை புறக்கனித்துள்ள அதே வேளையில் உலகெங்குமுள்ள தமிழ் உதிரக்கொடி உறவுகளும் ஈழப் போரில் ஆகுதியாகிப் போன நம் உறவுகளுக்காக புறக்கணித்தனர். கருணாநிதி ஈழத் தமிழருக்கு செய்த வரலாற்று துரோகத்தை மறக்காமல் இருந்தனர். செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் புகழ் பாட சில மிகவும் பிரபலமான திரையுலக கவிஞர்களும் அவரது பக்கவாத்தியங்களுமே மாநாட்டை நடத்தினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.