29/07/2018

கலவர அரசியலும் உண்மையை ஓங்கி அடிக்கும் புத்தகமும்...


தாஜ்மஹால் பற்றிய சர்ச்சையில் நாம் மறந்து விட்ட வரலாறு...

தாஜ்மஹாலை கைப்பற்ற யோகி கூட்டம் முயர்சி செய்த போதே பதிவிட வேண்டும் என நினைத்து இருந்தேன்.

ஷாஜஹான் பேரில் மட்டுமல்ல உலகமே வியந்த கட்டுமானத்திற்கு அச்சாணி இட்டவர்.

இவருடைய மகன்களின் ஒருவர் தான் தாரா ஷுக்கோ.

இவரை பற்றிய வரலாறை கொஞ்சம் படிக்கத்தான் வேண்டும்.

இவரை பொருத்தவரை ஹிந்து மதம் மற்றும் சீக்கிய மத தலைவர்களுடன் நட்புறவை கொண்டவர்.

தம் சிறு வயதில் ஹஜ்ரத் மியான் என்ற சூஃபி ஞானியிடம் பாடம் படித்தவர்.

சீக்கியரின் ஏழாவது குருவான ஹர்ராய் என்பவர் தான் இவரது நெருங்கிய நண்பர் என்று வரலாறு கூறுகிறது.

இஸ்லாம் இந்து மத கோட்பாடுகளை ஆய்வு செய்து இரு மதத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்தார்.

இவர் தான் பல சமஸ்கிருத உபநிஷங்களை பெர்சிய மொழிக்கு மொழி பெயர்ப்பும் செய்துள்ளார்.

சூஃபி தத்துவங்களையும் இந்து சமய வேதங்களையும்  இணைத்து அவர் உருவாக்கிய நூல் தான்.

மஜ்மாவுல் பஹ்ரைன்...

இதன் அர்த்தம்
இரண்டு கடல்களின் சங்கமம் ..

இதே நூல் சமஸ்கிருதத்திலும்
வெளி வந்தது... அதன் பெயர்
சமுத்ரா சங்கம..

இதை எழுத இவர்  9 ஆண்டுகள் எடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது .

இதற்காக 14,000 kilometers மொத்தமாக சுற்றி திரிந்தார் எனவும் குறிப்பு உள்ளது.

Ajmer to Delhi, to Agra, Allahabad, Varanasi, Kashmir, Gujarat,  போன்ற நகரங்களில் தங்கி அவர்கள் வாழ்வியலை நேரில் கண்டு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் வாரனாசி கோவிலில் தான் தங்கியுள்ளார்.

இங்கு தங்கி சமஸ்கிருதத்தையும் உபநிஷங்களையும் கற்று கொண்டுள்ளார்.

கூடவே தமது தொழுகையையும் அங்கே தான் நிறைவேற்றினார்.

IksiralAzam என்ற நூலை பின்னர் இவர் எழுதியதாக வரலாறு உள்ளது.

அதாவது உபநிஷத்தில் உள்ள நல்ல கருத்துக்களை தொகுத்து  இக்ஸிர் அல் அஜாம் என்ற நூலை தொகுத்ததாகவும் வரலாறு உள்ளது.

(இதில் மட்டும் சில கருத்து முரண்பாடுகள் உண்டு இக்ஸிர் அல் அஜாம் என்பது வேறொருவரின் தத்துவ நூல் அது போன்று இது உள்ளதாக இவர் மேற்கோள் காட்டினார் எனவும் வரலாறு உள்ளது).

எது எப்படியிருந்தாலும் ஒற்றுமையை மையப்படுத்தி இவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம்.

ப்ரஹ்மாவதியா அல் குர்ஆன் என்ற நூலையும் இவரு எழுதியுள்ளார்..

இதில் கடவுள் தத்துவத்தை கடவுளை தெரிந்து கொள்ள  இந்து மதம் இஸ்லாமிய மதம் கூறும் கொள்கைகளை கூறி இரு மதத்தை ஒற்றுமை படுத்துகிறார்.

ரிஸாலாயே ஹக் ரூமா என்ற புத்தகத்தில் இந்திய மக்களின் யோகா பயிற்சியை சிலாகித்துப்
எழுதியுள்ளார்..

இப்படியாக ஒரு முஸ்லீம் இளவரசர் வாழ்ந்துள்ளார்...

இப்படி கோவில் கோவிலாக சுற்றி அங்கயே தங்கி வேதம் பாடம் படிக்க அனுமதித்த இவரது தந்தை ஷாஜஹான் தான் மதவெறி பிடித்தவராம்..

அல்லது இவர்கள் புதிதாக கலவர அரசியலுக்கு பயன்படுத்தும் வார்த்தை கோவிலை இடித்து விட்டு தான் தாஜ்மஹால் கட்டினார் என்பது.

இவர்களின் வாதத்தையும் உண்மை வரலாற்றையும் கூறிவிட்டேன்.

எது உண்மை என உலகம் தெரிந்திருக்கட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.