ஐரோப்பாவின் மோசமான சமூக நிலை...
அன்றைய ஐரோப்பிய சமூகம், பாப்பரசரின் தலைமையின் கீழ் ஒரு பகுதியினரும் பேரரசனின் தலைமையின் கீழ் ஒரு பகுதியினரும், பாட்டாளிகள் என ஒரு பகுதியினருமாக மூன்று குழுக்களாகக் காணப்பட்டது.
உரோமத் திருச்சபையை தனியானதொரு சுதந்திர சக்தியாக அமைக்க வேண்டும் என்பதைக் குறியாகக் கொண்டிருந்த பாப்பரசர், தமது மேலாதிக்கத்தைக் கிறித்துவ உலகில் நிறுவுவதற்காகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்காகப் போர் நடவடிக்கைகளைக் கூட ஊக்கவித்தார்.
முஸ்லிம்களுக்கெதிராகச் சிலுவை இயக்கத்தை ஆரம்பிக்கத் தூண்டுவதன் மூலம் கிறித்துவ உலகின் ஆதரவைப் பெறலாம் எனவும், இதன் விளைவாக ஐரோப்பிய மன்னர்கள், இளவரசர்கள் தனது தலைமைத்துவத்தை எவ்வித மறுப்புமில்லாமல் ஏற்றுக்கொள்வா் என்றும் கருதினார்.
எனவே,இவ்வாறு மூன்று பகுதியினராகப் பிரிந்து,அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உட்பட்டிருந்தவர்கள், பாப்பரசரின் பொது அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.
அதாவது, தங்களை இளவரசா்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளவும் மன்னர்களும் இளவரசர்களும் கிழக்கு பிராந்தியத்தில் புதிய சிற்றரசுகளை உருவாக்கிக் கொள்ளவும் பாட்டாளிகள் ஏழ்மையின் கோரப் பிடியிலிருந்தும், அடிமைத் தளையிலிந்தும் தம்மை விடுவித்துக் கொள்ளவும் பாப்பரசரின் அழைப்பை இருகரம் நீட்டி வரவேற்றனர்.
இவ்வாறு தனது மேலாதிக்கத்தைக் கிறித்துவ உலகில் நிறுவிக் கொள்ளும் பொருட்டு ஐரோப்பிய கிறித்துவர்களின் உள்ளங்களில் சிலுவைப் போர் தொடங்குவதற்கான வேட்கையையும் ஆர்வத்தையும் தூவினர்.
- தொடரும்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.