29/07/2018

வரலாற்றில் கவிதைகளின் தாக்கம்...


பொதுவாக கவிதைகள் என்பது ரசிக்கின்ற அல்லது நேசிக்கின்ற விடயங்களுக்கு நாம் எழுதுவது அல்லது வாசிப்பது. 

ஆனால் நமக்கு தெரியாத கவிதையின் இன்னொரு அடையாளம் உண்டு. 

அது என்னத்தெரியுமா? 

போர் கவிதைகள்..

இப்படியான வார்த்தை இல்லை என்றாலும் கூட இந்த வார்த்தை வைப்பதற்கு தகுதியே. 

உலகின் உச்சகட்ட போரில் இருந்தாலும் தமது பங்கின் பகுதியாக நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்தவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. 

அந்த வகையில் தான் இந்த கவிதை எழுதும் கவிஞர்களை சொல்லலாம்.

கவிதைகளுக்காக  ஒரு கவிதை..

எல்லாவற்றையும் பற்றி கவிதையில் சொல்லலாம் ஆனால் கவிதையை பற்றியோ கவிதை எழுதும் கவிஞனை பறறியோ சொல்லவேண்டும். 
முடியுமா அல்லது இப்படியாக சிந்திக்க செய்தோமா.

ஆனால் உண்மையில் கவிதையை எழுதும் கவிஞனை பற்றி கவிதை உள்ளது. 

ஆம் இதோ கவிதை க்காக 
ஒரு கவிதை...

கவிஞர்கள் கவிதையை உருவாக்கவில்லை 
கவிதைகள் எங்கோ இருந்துக்கொண்டு உள்ளது. 

அது 
அங்கே 
நீண்ட காலமாக கிடக்கிறது.

கவிஞன் அதை எழுத்தின் மூலம் கண்டுபிடிக்கிறான். 

இப்படியாக அந்த கவிதை முடிகிறது. 

போர் சமயத்தில்  20 ம் நூற்றாண்டு கவிஞரான இத்தாலி நாட்டு கவிஞர் லூஜி பிராண்டல்லோ என்பவர் உலகில் நடக்கும் யுத்த வீரர்களின் தாய் தந்தையரின் மனநிலையை பற்றி இரண்டு வரி கவிதை எழுதினார் 

பாருங்களேன். 

பிள்ளைகளை போரிக்கு அனுப்பிவிட்டு பதக்கங்களை பெரும் பெற்றவர்களே சிறந்த வீரர்கள். 

கவிதைகள் ஒரு பக்கம் இருந்தாலும்..

இரண்டு வரி கட்டுரைகளும் பங்கேற்பு செய்துள்ளது. 

உதாரணமாக பாருங்கள் இந்த மூன்று வரிக்கட்டுரையை.

கதையில் வரும் முக்கியபாத்திரமான குண்டான மனிதர் கேட்கிறார் 
நாடும் சாப்பாடு போல 
அது இல்லாமல் வாழ முடியாது 
அதை ஆராவது காக்கத்தானே வேண்டும்
என்று கூறிவிட்டு தொந்தி தொடை வரை தொங்க நடந்தார். 

இப்படியாக கட்டுரை முடிகிறது. 

எல்லா சிந்தனையையும் மூடிவிட்டு மேலே உள்ள இந்த கட்டுரையை மீண்டும் படியுங்கள். 

உலக யுத்தங்கள் பற்றி எப்படி யூகித்துள்ளனர் என்று பல கோணங்களில் விளங்கும். 

அமெரிக்கா வியட்நாம் யுத்தத்தின் போது வியட்நாம் கவிஞர் இயற்றிய ஒரு கவிதையை பாருங்கள்...

தாயாயிருப்பது லேசானதல்ல வியட்நாமில்..

உலகத்து வழமை தாய் தம் பிள்ளைக்கு பூக்களை காட்டி நேசிக்க பழக்குவது..

இங்கோ குண்டுகளின் தாக்கத்தில் இருந்து எப்படி தப்புவது என்று பழக்குகிறோம்...

உலகத்து வழமை பறவைகளையும் பறவை ஒலியையும் காட்டி நேசிக்க பழக்குவது..

இங்கோ B 52 இரைச்சலையும் 
 F 105 ரைபிள் சத்ததையும் காட்டி தப்பிப்பது எப்படியென பழக்குகிறோம்..

இப்படியாக அந்த கவிதை முடிகிறது. 

ஒரு கட்டத்தில் கவிஞர்கள் எழுத்தாளர்களை பிடித்து மரண தண்டனை கொடுக்கும் அளவிற்கு சென்றது இவர்களது கவிதைகள், 

இதனால் யார் கவிதை எழுதுகிறார்கள் என்ற தகவலை வெளியிடாமல் போர் கவிதைகள் வெளி வர தொடங்கியது அது  மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றது. 

அப்படி ஒரு கவிதை தான் இது..

யார் எழுதியது என்ற முழுமையாக தெரியாத கவிதை ஆனால்  20 ம் நூற்றாண்டு கவிதை..

அமைதியை போல ஆனந்தமில்லை 
ஆசையை போல நெருப்பும்மில்லை
வெறுப்பை போல இழப்பில்லை
உடம்பை போல வலியில்லை.

அன்னா அஹ்மத்தோவா என்ற 
ரஷ்யா நாட்டு கவிஞர்..

ஹிட்லர் ரஷ்யாவை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார் என்ற செய்தியை கேட்டு ரஷ்யா மக்களுக்கு ஒரு கவிதையை இயற்றினார்..

அந்த கவிதை இதோ...

எது வரினும் உம்மை காப்போம் எம் ருஷ்யா..

எமக்காக மட்டுமல்ல பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்காகவும் எப்போதுமாய். 

இப்படி முடிகிறது கவிதை, 

இஸ்ரேலிய தாக்குதலால் துவண்டு போன பாலஸ்தீனத்தை அடிக்கடி தமது (கவிதை) வார்தையால்  தூக்கி நிறுத்துவது சில பாலஸ்தீன கவிஞர்கள், 

அப்படிப்பட்ட ஒரு கவிதையை பாருங்கள்...

பெரும் போர் களில் உயிர் நீத்தவர் புறமுதுகிடா பெரு வீரர்

அவர் புதைக்குழியிலே மறைவதில்லை. 

இறுதியாக ...

சதாத் ஹஸன் மாண்டே
பஞ்சாப்பில் பிறந்த இவர் எழுதிய இந்தியா (ஒட்டுமொத்தஇந்தியா இல்லை) பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தேறிய 
எழுதிய கவிதை ஒன்று உலகை உலுக்கிய கவிதை 

இதோ. .

வயிற்றை கீறிப்பிளந்த கத்தி நட்ட நடுவே நேராக வந்தது 

வந்த வரத்தில் கீழே இறங்கி அந்த ஆள் போட்டிருந்த பைஜாமாவின் கயிற்றை அறுத்தெறிந்தது

சில விநாடிகளில் சந்தோஷம் மகிழ கத்தினான் ..

பல அர்தங்கள் உள்ள கவிதை ரணங்கள் இவைகள். .

இப்படி கவிதைகளின் தாக்கம் 
போரில் குண்டு வீசுவதையும் விட வேகமாகவே வீசப்பட்டது இந்த கவிதை வரிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.