தமிழ் இலக்கியத்தில் முக்கிய வரலாறு மதுரையை மய்யப்படுத்தி உண்டு
அந்த மதுரை மாகாணத்தில் இன்றைய போலிஸ் வருவதற்கு முன்பு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றது.
வரலாற்றில் தங்கம் வெள்ளியை விட பெரிதும் விலையுயர்ந்த விஷயம் தாணியங்கள் தான்.
தாணியங்கள் விளையும் விவசாய நிலங்களை பாதுகாக்க அக்காலத்தில் ஒரு முறை இருந்தது அது.
சில சமூகம்.
இவர்களை நியமித்து விடுவார்கள் நிலத்தின் உரிமையாளர்கள்,
அந்த நிலத்தின் விளைச்சலுக்கு இவர்கள் தான் பொறுப்பு.
ஒரு வேலை நிலங்களில் உள்ள தாணியங்கள் திருடப்பட்டால் அந்த நியமிக்கப்பட்ட காவலாளித்தான் பரிகாரம் தர வேண்டும்.
உதாரணமாக திருடப்பட்டது 5 மரக்கா நெல் என்றால் பாதுகாக்க தவறியதால் 5 மரக்காள் நெல்லை காவல் காத்தவர் நில உரிமையாளருக்கு தரவேண்டும்.
இதில் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் விளைச்சல் வரை பாதுகாத்து விட்டால் அறுவடை முடிந்ததும் காவல் கூலியாக
10 மரக்காள் முதல் வழங்கப்படும்.
இதனால் இரவும் பகலும் பாதுகாக்க அந்த விவசாய நிலத்திலே குடிசை அமைத்து தங்குவார் அந்த காவலாளி .
இவர்களை தான் சமீபத்திய நவீனம் தோட்டக்காரன் என்று அழைக்கிறது
மேலே குறிப்பிட்டது தான் அழகான முறை.. நஷ்டம் இல்லாமல் பாதுகாத்தால் கூலி யாக நெல்லும்..
பாதுகாக்க தவறினால் நில உரிமையாளருக்கு அதற்குண்டான நஷ்டஈடு தரவேண்டும் என்பது.
இந்த காலகட்டத்தில் தான் பிரிட்டிஷ் ஆட்சி பரவலாக இருக்கக்கூடிய நேரம்,
காவல் நிலையம் கோர்ட் போன்ற விஷயங்கள் புதிதாக வர தொடங்கிய காலம்..
இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாது..
இதோ பாருங்க இவர்கள் தான் காவல் துறை அதிகாரிகள் இவர்களிடம் தான் உங்கள் திருட்டுபோன விடயங்களை
கூறவேண்டும். என்றெல்லாம் மக்களிடையே கூறப்பட்டது.
இந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் காவலர்களுக்கு திருடனை பிடிக்க ஒரு புத்தகம் கட்டாய வாசிப்பாக்கப்பட்டது,
அந்த புத்தகத்திற்கு பெயர்
கரவட நூல்..
இதை எழுதியவர் கருநீசுதர் என்பவர்..
இது மூல மொழி சமஸ்கிருதம்..
கர்நீக சாஸ்திரம் என்ற நூல் சமஸ்கிருத நூல்,
இதில் எப்படியெல்லாம் திருடலாம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது
இதை படித்தால் திருடன் எப்படியெல்லாம் அகப்பட்ட வாய்ப்பு உண்டு அதை எப்படி தவிர்க்க வேண்டும் என்ற உண்மை உள்ளதால் இதை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு கட்டளையிட்டது.
இங்குதான் பிரச்சினை உள்ளது.
இன்றைய நவீன சட்டத்தால் திருடி விட்டான் என்று ஒருவனை நாம் நிறுத்தினால் அதற்கான ஆதாரத்தை நாம் தான் தரவேண்டும்.
எவ்வளவு முட்டாள்தனமான
வாதம் இது.
ஒருவேளை திருடுபவன் இவன் தான் என்று தெரிந்தும் ஆதாரம் இல்லை என்றால் தண்டிக்க முடியாது .
இது அக்காலத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய சட்டம்
கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக இந்த சர்ச்சை தீர்கப்படாமல் இருந்ததாக வரலாறு உள்ளது.
ஏன் இன்றும் கூட இதற்கு பதில் இல்லை.
ஒரு வீட்டில் நகை திருட்டு போய் விட்டால் அந்த பகுதியில் உள்ள காவல்துறை தான் பொறுப்பு திருடனை பிடிக்க முடியவில்லை என்றால் திருட்டுபோன நகையை அவர் தமது சொந்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால்..
திருடன் தப்பவும் முடியாது அடுத்து அடுத்து திருடவும் முடியாது?
இது தான் நம் மூதாதையர்களின் தந்திரம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.