09/09/2017
இப்படி தான் நாங்கள் சொல்லும் நினைவலை (குலதெய்வ) வேலை செய்யும்...
இடம்: நுங்கம்பாக்கம்
நாள்: 09/09/2017
நிருபர்: அம்மா சொல்லுங்க நீங்க எந்த கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்துறீங்க?
மாணவி: இங்க பாருங்க அண்ணா நாங்க அமைதியான முறையில் நீட்டுக்கு எதிராகவும் அனிதா சாவுக்கு நீதி கேட்டும் போராட்டம் பண்ணோம் ஆனா இந்த போலீஸும் எங்களை அடிச்சு இழுத்துட்டு போறாங்க அங்க பாருங்க அண்ணா கை கட்டி வேடிக்கை பாத்துட்டு இருக்கு அதான் எங்க எச்எம் அதெல்லாம் ஒரு டீச்சரா ணா சப்போர்ட் பண்ணலணாலும் பாதுகாக்கலாம்லண்ணா அவங்களே அடிக்க சொல்றாங்கணா நாங்க என்ன நாய்களா? முடிய புடிச்சு இழுக்குறாங்க கன்னத்துல அறையுறாங்க எங்க உரிமைய கேட்டா அடிப்பாங்களா? சம்பளம் பத்தலணா மட்டும் போராடுவாங்க இதுக்கு வர மாட்டாங்களா?இந்த போலீஸுக்கு எல்லாம் நீட் தேர்வை வச்சிருந்தா இவங்க போலீஸ் ஆயிருப்பாங்களாண்ணா? அவங்களுக்கு எல்லாம் குழந்தைகள் இல்லையா அவங்களுக்கும் சேர்த்துதானே நாங்கள் போராடுறோம், டீச்சரே மெரட்டுறாங்க டீசி குடுத்துருவோனு என்ன பண்ணாலும் நாங்க போராட்டத்தை தொடருவோம். திங்கட்கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.
நிருபர்: நன்றிம்மா உங்க பேரென்ன?
மாணவி: ஆங் எம்பேரு செங்கொடி ணா.
செங்கொடி யார் என தெரிந்தவர்களுங்கு புரியும் இது...
நாளைய நம்பிக்கைகள் இவர்களே...
சாதுமிரண்டால் நாடு கொள்ளாது
போராட்டம் என்றால் இது தான் வீரியமிக்க போராட்டம்..
எச்சை காவல்துறையால் ஒருவரை கூட பிரிக்க முடியவில்லை..
நீட் வச்சு இருந்தால் நீ போலீஸ் வேலைக்கு வந்து இருக்க முடியுமா என்று கேள்வியால் வாயடைத்து நின்ற அடிமைகள்...
கிட்டத்தட்ட 2 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்..
இரண்டுமணி நேரமாக போக்குவரத்தை நிறுத்திய தமிழச்சிகள்..
சல்லிக்கட்டுக்கு பீட்டா
அனிதாவுக்கு நீட்டா
என முழக்கம்..
நுங்கம்பாக்கம் அரசுபள்ளி மாணவிகள்..
சென்னை காவல்துறை மற்றும் தமிழக அரசின் அராஜகம் தொடர்கிறது...
மாணவிகளுக்கு டிசி கொடுப்போம் .. பள்ளியை விட்டு நீக்குவோம் என்று தலைமை ஆசிரியர் மற்றும் காவல்துறை மிரட்டல்...
சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு; போராட்டத்தில் ஒரு மாணவி மயக்கம்...
இந்த போராட்டத்தித்கு ஆதரவு தெரித்த லயோலா கல்லூரி மாணவர்களை வலுகட்டாயமாக அடித்து இழுத்து சென்று கைது செய்து...
போராட்டத்தை கலைத்து விட்டு செல்லுங்கள். இல்லை என்றால் டிசி தர மாட்டோம்.. சிறையில் தள்ளுவோம் என்று மாணவிகளை மிரட்டும் காவல்துறை...
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கை விட மாட்டோம்.. போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருப்போம் என்று மாணவிகள் அறிவிப்பு...
அனிதா நல்ல மார்க் எடுத்திருந்தால் அட்மிஷன் கிடைத்திருக்கும்.அனிதா சாக வேண்டும் என்பது அவரது தலைவிதி. இதில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட முடியாது - லலிதா குமாரமங்கலம் (தலைவர் - தேசிய மகளிர் ஆணையம்)...
இவரும் தமிழர் கிடையாது. இவரது தாயார் ஒரு வங்காளி பிராமணர்..
தேர்தலிலேயே போட்டியிடாமல் பாதுகாப்பு அமைச்சராக ஆகியுள்ள நிர்மலா சீதாராமன் ஒரு தெலுங்கு பிராமணர்.
இவர் கர்நாடகத்தில் தனது அடையாளத்தை மறைத்து பதவியில் இருந்து கொண்டு காவிரி தமிழகத்துக்கு கிடைக்க கூடாது என்று பேசி வந்தவர்.
இவருக்கு தமிழச்சி பட்டம் கொடுத்து வாழ்த்திய பா.ஜ.க மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் ஒரு கன்னடர் (ஒக்கலிக கவுடா)..
கிருஷ்ணசாமி எனும் தெலுங்கரை அவரது மகளுக்கு குறுக்கு வழியில் டாக்டர் சீட் வாங்கிய விவகாரத்தில் அம்பலப்படுத்திய முன்னாள் ச.ம.உ பாலபாரதி கூட ஒரு கன்னட ஒக்கலிகா கவுடா ஆவார்.
மாநில, தேசிய அளவில் பெரிய பெரிய பதவிகளில் தமிழகத்தில் பிறந்த வேற்றின வந்தேறிகளே உள்ளனர்.
பெண்களும் இதில் விதிவிலக்கு கிடையாது.
இவர்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டும் வருகின்றனர்...
இலுமினாட்டி ஜக்கி வாசுதேவின் மொள்ளமாரித்தனம் அம்பலம்...
நதிகளை பாதுகாப்போம் என்று சாமியார் ஜக்கி வாசுதேவ் ஒரு ப்ராஜெக்ட தொடங்கி உள்ளார்.
அதில் ஒரு நம்பரை கொடுத்து MISSED CALL கொடுக்க சொல்லிருக்கிறார்கள்.
அந்த நம்பர் குஜராத் BJP நடத்தும் "GUTKA MUKTH BHARATH" என்ற ப்ரொஜெக்டின் மொபைல் நம்பர்.
இதை தோலுரித்து காட்டிய அண்ணன் பியுஷ் மனுஷுக்கு நன்றி.
ஏற்கனவே வீடு கட்ட லோன் தருகிறோம் என்று மக்களை BJP யில் இணைத்த கூட்டம் இது.
இந்த போஸ்டர்கள் தமிழகத்தில் அணைத்து இடத்திலும் ஓட்டப்படுருக்கிறது...
தமிழகம்.. இதெல்லாம் ஒரு சாம்பிள் தான்..
தமிழ்நாடு என்னமோ காலம் காலமாய் முட்டாள் மாநிலமாய் இருக்கிற மாதிரியும் அதை நிமிர்த்துவதற்குத்தான் நாங்கள் முயற்சி செய்கிறோம் என்றும் ஒரு கும்பல் எங்கோ சலாம் போடுகிறது..
இன்றைக்கு இந்தியாவிற்கே, மருத்துவ தலைநகர்போல் திகழ்கிற்து சென்னை மாநகரம்.. இந்தியாவின் முதல் பெண் டாக்டரே 1912ல் படித்த நம்ம புதுக்கோட்டை முத்துலட்சுமிதான்.
நாட்டிலேயே முதன் முதலில் நரம்பியலுக்கென தனி பிரிவை ஆரம்பித்தது தமிழகத்தில்தான்.. 1950ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் பி,ராமமூர்த்தி அந்த சாதனையை செய்தார். வேலூர் சிஎம்சியும் பிரத்யேக நர்ம்பியலை அப்போதே உருவாக்கியது.
டாக்டர் ஆப் மெடிசன் எனப்படும் D.M. மேற்படிப்பு நரம்பியலுக்கென முதன் முதலில் உருவாக்கப்பட்டதும் 1966ல் தமிழகத்தில்தான்..
ஆரம்பத்தில் உயர் சமூகத்தினர் வெற்றிகொடி நாட்டிய மருத்துவத்துறையில் சமூக நீதிமூலம் மருத்துவ படிப்பு வாய்ப்பு கிடைத்ததும், மருத்துவத்தில் சாதிக்காத சமூகமே இல்லை என்கிற நிலைமை தமிழகத்தில் உருவானது...
தமிழ் இலக்கிய வரலாறு...
இலக்கு + இயம் = இலக்கியம்.
இலக்கினை உடையது இலக்கியம். இலக்கியத்திற்கு "நூல்' என்னும் மற்றொரு பெயரும் உண்டு.
கட்டடம்கட்டும்பொது கோணல்களைக் கண்டுணர்ந்து சரி செய்ய "நூல்' இட்டுப்பார்ப்பது மரபு. அதுபோல் தனிமனித, சமுதாய அளவி லுள்ள சிக்கல்களையும் காரணங்களையும் சுட்டிக் காட்டித் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் புத்தகங்களே "நூல்' என்று போற்றப்படும். இத்தகைய நூல்கள் ஒரு நாட்டின் பண்பு நலனைமதிப்பீடு செய்ய உதவும் துலாக்கோலாகச் செயல்படுகின்றது. தமிழ் மொழியில், மாந்தர் தம் மனக் கோட்டம் தீர்த்து குணக் குன்றில் ஏற்றவல்ல ஏராளமான இலக்கியங்கள் மின்னி மிளிர்கின்றன. அவற்றை ஒரு பருந்தின் பார்வையில் காணப்போம்.
கடல் கொண்ட முச்சங்கங்கள்:
மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் முச்சங்கங்கள் வைத்து முத்தமிழ் வளர்த்தனர் நம் முன்னோர்.
முரஞ்சியூர் முடி நாகராயர், தொல்காப்பியர், நக்கீரர் முதலான புலவர்களின் நாவில் நவிலப்பட்ட நற்றமிழ் நூல்கள் ஏராளம்!ஏராளம்!!. கி.மு. 2387-இல் கற்பனைக் கும் எட்டாத "பிரளயம்' ஒன்று உலகில்நிகழ்ந்தது. சீற்றம் கொண்ட ஆழிப் பேரலைகள் முன் உலகின் மிக உயரமான இமயமலைகூடக் கண்ணுக்குப் புலனாக வில்லை. வீசி எறியப்பட்ட கடல்பொருள்களில் பலஉயரமான இமயமலையில் சிக்கி, தங்கி, உறைந்து, படிவங்களாக மாறிப் போயுள்ளன.
அதன் பின்னர் கி.மு. 504 மற்றும் கி.மு. 306-இல் நிகழ்ந்த அடுத்த இருகடல்கோள்கள் என முப்பெரும் கடல்கோள்கள் தெற்கே பரந்து விரிந்திருந்த தமிழகத்தையே வழித்து வாரிக் கொண்டு போன நிலையில், எண்ணிறந்த பல தமிழ்நூல்களும் கடல்வாய்ப்பட்டு அழிந்தன. முச்சங்க நூல் களுள் சிலவாகியமுதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், பூத புராணம், இசைநுணுக்கம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை, பெருங்கலி, வெண்டாழி, வியாழமாலை, அகவல் என்னும் நூல்கள் பற்றிய குறிப்பு இறை யனார் களவியல் உரை யின்மூலம் வெளிப்படுகின்றது. கடல் கோள் களில் எஞ்சிய நூல்கள் தொல்காப்பியம்,பரி பாடல், நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகியனவே.
எட்டுத்தொகை நூல்கள..
மேற்காண் நூல்களுள் தொல்காப்பியம் நீங்கலான எட்டு நூல்களும், "எட்டுத்தொகை'நூல்க ள் எனப்படும். எட்டுத் தொகையின் ஒவ்வொரு நூலும் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத் தொகையுள் "பதிற்றுப்பத்து'என்னும் பத்துச் சேர மன்னர்களைப் பத்துச்சேரநாட்டுப் புலவர்கள்பாடியது.
சேரநாடுஎன்பது இன்றையகேரளா..
தமிழிலிருந்து தெலுங்கு, கன்னட மொழிகளுக்குப் பிறகு கடைசியாகப் பிரிந்த தென் திராவிட மொழியான மலையாள இலக்கியத்தின் மூத்தநூலான பதிற்றுப்பத்து, தமிழ் எழுத்து வடிவத்திலேயே சங்க எட்டுத் தொகையுள் ஒன்றாக இருப்பது தமிழின் தொன்மையையும், மலையாளத்தின் "பின்மை'யையும் உணர்த்தும் ஆவணம் எனலாம்.
பத்துப்பாட்டு நூல்கள் :
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலை படுகடாம் (கூத்தராற்றுப் படை)என்னும் பத்து நூல்களும் கடல் கோள்களுக்குப் பின்னர் நிறுவப்பட்ட சங்கத்துநூல்கள். இவற்றுள் ஒவ்வொரு நூலும் ஒரு மன்னரை புலவரொருவர் பாடிய பாங்கில் அமைந்துள்ளன. "பேராசிரியர்' (கி.பி.13) என்னும் உரையாசிரியரே இப்பத்துநூல்களையும் ஒன்றாகச் சேர்த்து "பத்துப்பாட்டு' என முதன்முதலில் இனம்காட்டினார். இப்பத்து நூல்களுள் செம்பாகி ஆற்றுப் படை நூல்கள்.
இவ்வாற்றுப்படை நூல்கள் இன்றைய "பயண இலக்கியத்தின் முன்னோடி'யாகத்திகழ்கிறது.
திணை இலக்கியங்களும் வீரநிலை இலக்கியங்களும்..
பொதுவாக சங்க இலக்கியங்களை அக இலக்கியங் கள், புற இலக்கியங்கள் என இருவகையாகப் பகுக் கலாம். அக நூல்களில் குறிப்பிட்ட எவரின் பெயரும்குறிக்கப்படாமல் அகச்செய்திகளை மட்டும் கூறும் மாண்புகாக்கப்பட்டிருக்கும். அக இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் அடிப் படையில் பாடப்பட்டுள்ளதால்"திணை இலக்கியங்கள்' எனப் போற்றப்படுகின்றன: வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, நொச்சி, சழிஞை, தும்பை, வாகை என்னும் போர்முறை களைப் பாடுவதால் புறப்பாடல்கள் "வீரநிலை இலக்கியங்கள்' எனச் சிறப்பிக்கப்படுகின்றன.
காப்பிய நூல்கள் :
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் கூறுவன பெருங்காப்பியங்கள். வீடு நீங்கலாக ஏனையவற்றைக் கூறுவன சிறுகாப்பியங்கள். கி.பி. 2-9- இல் ஐம்பெருங்காப்பியங்களும், கி.பி. 6-16-இல் ஐஞ்சிறுங்காப்பியங்களும் தோன்றின. காப்பிய வகைக்கு வித்திட்ட இளங்கோவடிகளின் சிலம்பும், சாத்த னாரின் மேகலையும் முதல் தமிழ்க் காப்பியங்களாவதோடு பெண்ணின் பெருமை பேணும் காப்பியங்களாகவும் மிளிர்கின்றன.
இவற்றோடு சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசியும் சேர்ந்து ஐந்தும் பெருங்காப்பியங்கள். நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயண குமாரகாவியம், நாககுமார காவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்கள். இவற்றுள் மேகலையும், குண்டலகேசியும் மட்டும் பௌத்த சமயத்தைப் பாட ஏனைய 8காப்பியங்களும் சமணம் போற்றுகின்றது. இது, அக்கால கட்டத்தில் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டுகிறது.
ஐம்பெருங்காப்பியம் பட்டியலுக்குள் வராவிட்டாலும் பெருங்கதை (கி.பி. 6) பெருங்காப்பிய வரிசையுள் மூன்றாவதாக வரிசைப்படுத்தத் தக்க சிறப்புடையது. கம்பரின் கம்பராமாயணத்தை அடியொற்றிஇரகுவம் (கி.பி. 15), இராமாயண நூல் களுக்கு மறுதலையாக எழுந்த புலவர் குழந்தையின் இராவண காவியம் (கி.பி. 1946) தமிழர்ப் பண்பாட்டைப் பேணுவதற்காகவே எழுந்தது. இவற்றைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியங்களுள் கண்ணதாசனின் இயேசு காவிய மும், சிற்பியின் "மௌன மயக்கமும்' கவிஞர் வைரமுத்துவின் "கவிராஜன் கதை'யும் குறிப்பிடத்தக்கன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் :
காலம் ஏறக்குறைய 4 (அ)-ஆம் நூற்றாண்டு கணக்கு = நூல். 50 முதல் 500 முடியஅதிக அடிகளைக் கொண்ட நூல் மேற்கணக்கு நூல்கள். அவற்றைவிடக் குறைந்தஅடிகளைக் கொண்டவை கீழ்க்கணக்கு நூல்கள். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலைஎன்னும் ஆறும் அகநூல்கள்: பொய்கையார் பாடிய களவிழி நாற்பது மட்டும்புறநூல்: ஏனைய நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக்கோவை, பழ மொழி, சிறுபஞ்சமூலம், முதல்மொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் 11 நூல்களும் அறநூல்கள்.
இவற்றுள் திருக்குறள் "உலகப் பொது மறை' என்னும் அரியணை ஏறியது.
பதினொண்கீழ்க்கணக்கின் அறநூல்கள் அடியாற்றிப் பிற்காலத்தில் பல அறநூல்கள்எழுந்தன. ஔவையாரின், கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, ஆத்திசூடி முதலியனவையும் அறநூல்கள். ஔவையின் ஆத்தி சூடியைப் பின்பற்றி பாரதி, பாரதிதாசன் முதல் வாணிதாசன் முடிய ஒன்பதின்மர் "ஆத்திசூடி வகை' நூல்களை இயற்றியுள்ளனர். மேலும், உலகநீதி, நீதிநெறி விளக்கம், பெண் மதிமாலை முதலானவும் அறநூல்களாக அணி செய்கின்றன...
வாழவைப்பதே வாழ வைக்கிறோம் வடஹிந்திய வந்தேறிகளை ஏன் விலக்கி வைக்க வேண்டும்...
(நம் அப்பன் வீட்டு சொத்தா போகிறது) என்ற பரந்துவிரிந்த மனதுடன் திராவிடம் வாழவைத்த வடவர்கள்..
1967ல் உடுமலைப் பேட்டையிலிருந்து தி.மு.க சார்பில் சட்டமன்றத்திற்கு நிற்கவைக்கப்பட்டு வெற்றி பெற்றவர் நாராயண்சிங்.
(உடுமலை நாராயணன் என்று மக்களுக்கு அறிமுகம் செய்விக்கப்பட்டார்).
அண்ணாதுரையால் கோவை மாவட்ட தி.மு.க செயலாளராக நியமிக்கப்பட்டார்.
(உடுமலைப் பகுதியில் தெலுங்கர் யாரும் கிடைக்கவில்லை போலும்)
எம்.ஜி.ஆர் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு சென்று தேடிக் கண்டுபிடித்து உக்கம்சந்த் என்ற மார்வாடியை சட்டமன்ற உறுப்பினருக்கு நிற்கவைத்து வெற்றி பெறச்செய்தார்.
பின்னாளில் இவர் குடிநீர் வாரியத் தலைவராகவும் காஞ்சிபுர மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
(எம்.ஜி.ஆர் செய்தால் சரியாத்தான் இருக்கும் என்ன நான் சொல்வது?)
வீட்டுக்கு ஒருவர் போதாதென்று உக்கம் சந்தின் தம்பி பிரேம்சந்த் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராக ஆனார் (அடடா! என்னே ஒரு திராவிட சேவை)
அடுத்த மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் இதே உக்கம்சந்துக்கு வாய்ப்பளித்தார் கருணாநிதி;
இன்றும் அந்த மார்வாடி தி.மு.க வில் இருந்துகொண்டு தன்னால் முடிந்தவரை திராவிடரை முன்னேற்றி வருகிறார்.
1980ல் அதிமுக மூலம் ஹீராசந்த் என்பவர் திண்டிவனம் நகராட்சித் தலைவர் ஆனார் (அந்த ஆளுக்கு திண்டிவனம் என்று எழுதியிருக்கும் பெயர்ப் பலகையை படிக்கவாவது தெரியுமா?)
இவரே பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும், தென்னாற்காடு மாவட்ட செயலாளராகவும், விழுப்புரம் மாவட்ட செயலாளாராகவும் இருந்தார்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாலாஜி என்ற வடவர் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.
இவரே பின்னாட்களில் சென்னை-செங்கல்பட்டு (தமிழனுக்குப் பாலூற்ற வசதியாக) பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தலைவரானார்.
பவன்குமார் என்ற மார்வாடி அதிமுக சார்பில் திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவரானார்;
இன்றும் திருவண்ணாமலை அதிமுக நகரச் செயலாளராக (திராவிடப் பணியில்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
மேடையேறி செந்தமிழில்(?) பேசும் வடநாட்டு கூத்தாடி நடிகை குஷ்புவை பிளந்த வாயோடு ரசித்து ரசித்து வடவர் எதிர்ப்பைக் காட்டினாரல்லவா கருணாநிதி?
உண்மையான திராவிடர்கள் என்றால் அது வை.கோபால்சாமி நாயக்கரும் (வைகோ) விஜயராஜு நாயுடுவும் (விஜயகாந்த்) தான்.
அவ்விருவர்தான் தெலுங்கர்களால் தெலுங்கர்களுக்காகத் தெலுங்கரே நடத்தும் கட்சியை வைத்துள்ளனர்.
கூட்டணி என்ற பெயரில் கன்னட பிராமணத்தியோடும் வடவரோடும் கைகோர்ப்பது தவறாகுமோ?
தமிழர்கள் கணிசமாக வாழும் அண்டை மாநிலங்களில் மன்ற உறுப்பினராகக் கூட (கவுன்சிலர்) ஒரு தமிழன் வரமுடிவதில்லை;
தமிழக திராவிடக் கட்சிகளைப் போல வருங்காலத்தில் மற்ற மாநிலங்களும் அங்கே வாழும் தமிழருக்கு வாய்ப்புகள் வாரி வழங்குவார்கள் என்று அறவழி நின்று இனவேறு பாடு காட்டாமல் மனதார நம்புவோமாக...
பாஜக மோடி Vs சில்க் சுமிதா...
சில்க் தன் திருமணத்தை மறைத்து சினிமா வாழ்க்கைக்கு வந்தார்.
மோடி தன் திருமணத்தை மறைத்து அரசியல் வாழ்க்கைக்கு வந்தார்.
சில்க் கடித்த ஆப்பிள் ஏலம் விடப்பட்டது.
மோடி போட்ட கோட் ஏலம் விடப்பட்டது.
கேமரா முன் இருவரும் நடிப்பார்கள்.
சில்க் சினிமா கம்பெனியின் நோக்கத்திற்க்கு ஆடுவார்.
மோடி கார்பரேட் கம்பெனியின் நோக்கத்திற்க்கு ஆடுவார்.
சில்க் பேசப்பட்டது (குறைவான) ஆடைக்காக.
மோடி பேசப்படுவது விதவிதமான ஆடைக்காக.
சில்க்கிடம் இல்லாதததை இருப்பதாக காட்ட உதவியது மேக் அப்..
மோடியிடம் இல்லாதததை இருப்பதாக காட்ட உதவிய போட்டோ ஷாப்..
சில்க் சூட்டிங்கிற்க்காக நாடு சுற்றினார்.
மோடி செல்பிக்காக நாடு சுற்றுகிறார்.
இன்னும் என்ன இருக்கு நீங்களும் சொல்லுங்க, நாங்களே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?
தமிழரும் மதங்களும்...
தமிழர்கள் இசுலாமியர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.
தமிழர்கள் கிறித்துவர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.
தமிழர் இன்னும் பல மதங்களுக்கு மாற்றப்பட்டதை ஏற்கும் கூட்டம்.
தமிழர் இந்துவாக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறது.
காரணம் அதில் இருக்கும் வழிபாட்டு/பண்பாட்டு முறைகள்.
ஒன்றை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் மதங்களில் இனங்களில் மொழிகளில் எல்லாவற்றிலும் தமிழ்/தமிழர் தாக்கம் இருக்கும்.
காரணம் தமிழ் தான் முதன் மொழி தமிழர் தான் மூத்த மாந்த இனம்.
இசுலாம் கிறித்து இன்னும் பிற மதங்கள் வேறு நிலப்பரப்பில் இருந்து தமிழர் நிலப்பரப்பினுள் நுழைந்து தமிழரை மதமாற்றம் செய்தது.
ஆனால் இந்து என்று இன்று அழைக்கப்படும் ஆரிய கோட்பாட்டின் கருத்தியல் மதம், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, மொழி, கலை போன்றவற்றை நம் நிலப்பரப்பில் இருந்து கொண்டே, அதை களவாடி (திருடி) பின் திரித்து (ஆரிய கோட்பாடை கலந்து) நம்மிடம் திணிக்கப்பட்டது.
எனவேதான் தமிழர் நாம் இயல்பாகவே தொன்றுதொட்டே நம்மை இந்துக்கள் என்று எண்ணி ஏமாந்து வாழ்கிறோம்.
இதையெல்லாம் அறிந்து தெளிந்து எடுத்துரைத்தால், தமிழர்களே அதற்கு எதிராக நிற்பது, 1800 ஆண்டுக்கும் மேல் அடிமைபட்டு, அடிமைக்கும் அடிமையாகிப் போன நிலை தந்த அறியாமையே.
என் பாட்டன் சொன்னார் என் அப்பன் சொன்னார் என்று நான் மாற மாட்டேன் நான் இப்படித்தான் வாழ்வேன் என்னும் சில வாதங்கள் வேதனைக்குரிய ஒன்று.
நம் பாட்டனும் அப்பனும் அறியாத வரலாற்றை நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து தெளி என் தமிழினமே.
தொன்றுதொட்டு வந்ததை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று மடமையில் விழுந்து உன் இனம் அழிய நீயே வழிகாட்டாதே.
மலேசிய வரலாறுபடி 200 ஆண்டுக்கு முன் அடிமையாய் இந்த நாட்டுக்கு வந்தோம் என்கிறான். எனவே நான் அடிமையாய் வந்தேன் அடிமையாய் தான் இருப்பேன் என்றால் அது சரியா?
200 ஆண்டுதானா உன் வரலாறு?
உன் பாண்டிய சேர சோழன் காலத்தில் நீ உலகை ஆண்டவனா அடிமையா?
2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன்.
6000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த காப்பியன்.
இவர்கள் தமிழரா இந்துவா?
இதற்கு பதிலுண்டா உன்னிடம்..
புரிந்துகொள், நீ 50,000 ஆண்டுக்கும் மூத்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட மாபெரும் தமிழர் எனும் தேசிய இனம்.
இனியும் நீ எழாவிட்டால்..
எழு.. மதத்தை தூரப்போடு
குலத்தில் ஏற்றதாழ்வை தூக்கிப்போடு..
இனம் மீள விடுதலை வெல்ல..
உன் களப் பணியை
செய்.... அல்லது செத்துமடி..
தமிழர் வெல்வது உறுதி...
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே புத்தாண்டு..
தமிழ் அறிஞர்களான மறைமலையடிகள், பாவலேறு பெருஞ்சித்தனார் கூறியது. நமது மதம் தமிழர் மதம். இந்து அல்ல.
எல்லாம் ஆரியர்கள் வந்தபின்பு தமிழர் வழிபாட்டு முறைகளை அனைத்தும் மாற்றி விட்டனர்.
இயற்கையை ஐந்தினைகளுக்கு ஒரு கடவுள் வைத்து வழிபட்டவர்கள்.
தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா?
அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.
இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள்.
தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன?
அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய் இருக்குமா?
இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம்.
இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது.
கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு.
பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலை நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு.
அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது.
அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.
அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும்.
அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது..
ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை"நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம்.
அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம்.
இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி"நான் உங்களிடமே பெண்ணாக இருந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
கிருஷ்ணன் நாரதரை"யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் .
பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் வாழ்ந்து கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள்.
இப்படித்தான் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.
தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆரியக் கதை இப்படி இருக்க, தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது.
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.
வைகறை,காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும்அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.
அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள்.
ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிகநுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.
ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள்.
ஆனால் அது முற்றிலும் தவறு.
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில் தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்!
இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது.
நம் இளவேனில் காலம் தை மாதம் தான்.
அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம்.
தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம்.
இது குறித்து பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு..
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே..
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்..
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு...
தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்...
தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர்என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.
மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.
தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..
தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை மு…றை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம்.
பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
வீரம்:
பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது.
பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன.
மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.
காதல்:
தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும்.
ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.
நட்பு :
சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.
விருந்தோம்பல் :
‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள்.
உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர்.
அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு’
என்கிறார் திருவள்ளுவர்.
விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.
இவை மட்டுமன்றி ஈகை, கொடை, கற்புடைமை, உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்...
சங்க காலத்து கடவுள்கள்...
சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?
சங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே...
புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை...
= 10 Avtars/ 12 Hands
= இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை..
என்ன ஆதாரம்? என்ன தரவு?
“கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது.
அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா..
“விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் சில பெரியவா, தய்யா-தக்கா -ன்னு குதிச்சாங்களாம்:)
Okies; I am Very Sorry! But.. என்ன தான் குதிச்சாலும்.. விநாயகரைச் சங்கத் தமிழில் கண்டுபுடிக்க முடிஞ்சுதா? இல்லை தானே? அதான் உண்மை:)
Matter is Very Simple!
*இன்றைய நிலை வேறு; தொன்மம் வேறு!
*இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!
இந்தப் புரிதலே போதும்!
உங்களுக்கு இன்னிக்கி புடிச்சிருக்கு என்பதற்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாது!
*உங்க தனிப்பட்ட விநாயக வழிபாட்டை “இழிவு” செஞ்சா, அது தப்பு.
*ஆனா, “சங்கத் தமிழில் விநாயகர் இல்லை” -ன்னு எழுதினா? தப்பு அல்ல; அது தொன்மவியல்!
தமிழ் நிலத்தின் இறைத் தொன்மம் = “நடுகல்”!
தமிழ் முன்னோர் தலைவர்கள், தங்கள் ஆதிகுடிகளைக் காத்த நினைவாக = கல் சமைத்துப் போற்றுவது= நடுகல்! நீத்தார் பெருமை! அதுவே இறைமை!
“கந்து” என்பதும் உண்டு= கல் தூண்!
கந்து/ நடுகல்லில்= குடி காத்தவர்களின் பெயர்/படம் எழுதி வைப்பதும் உண்டு!
முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்)
= இப்படித் தோன்றியவர்கள் தான்!
= ஆதி குடிகளின் இனத் தலைமை!
கந்தன் = இவன் “ஸ்கந்தன்” அல்ல!
திருமால் = இவன் “விஷ்ணு” அல்ல!
இவர்கள் ஆதி குடி நாட்டார் தெய்வங்கள். (பின்னாளில் சம்ஸ்கிருதம் கலந்து, புராணக் கதைகள் ஏற்றப்பட்டு, “பெரும்”தெய்வங்களாய் மாறிப் போனது அப்புறம் தான்.
சைவம்/ வைணவம் என்ற பேரே சங்கத் தமிழில் கிடையாது; “மத அமைப்பு” இல்லவேயில்லை)
* முல்லை = காட்டின் அடர் “கருமை” = மாயோன்
* குறிஞ்சி = மலை உச்சியின் “சிவப்பு” = சேயோன்
மால் = தங்கள் கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர்“ – திரு.வி.க ஆய்வுரை!
மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” – ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி!
முருகு = பெண்கள் மேல் இறங்கும் ஒரு “ஆவி”த் தெய்வம் என்பதே சங்க மரபு!
“வேலன் வெறியாடல்” என்கிற நாட்டார் பூசை;
வெறியாடிகளின் மேல் ‘முருகு’ இறங்கல்; ஆட்டுப் பலி, “சூர் மடிதல்” -ன்னு பழங்குடி வழக்கம்.
கந்து = யானையைக் கட்டி வைக்கும் குறுந் தூண்; அதையும் அந்த யானையே தான் சுமந்து செல்லும்!
தன்னைக் கட்டும் ஒன்றையும் தானே சுமந்து செல்லுதல் போல்..
கட்டுப்படாக் கடவுளும், அன்பால் தானே கட்டுப்படல்; அதுவே, கந்து + அன் = கந்தன்!
வள்ளி = கந்து (எ) கல்தூணில் படரும் வள்ளிக் கொடி!
இது முன்னோர்களின் காதல் வாழ்வுக்கு அடையாளம்;
(மறைந்து விட்ட) தலைவன் – தலைவி = நடுகல்லும், அதில் படரும் கொடியுமாய்!
= கொடிநிலை கந்தழி வள்ளி (தொல்காப்பியம்)
நினைவு போற்றுதல்! அன்பே தெய்வம்! இயற்கை வாழ்வு! புராணங்கள் இல்லை.
நடுகல்லு வச்ச இடத்தில், ஒரு காதல் காட்சி பார்க்கலாமா? வாங்க..
அவளுக்கு அவன் மேல் “மிக்க” அன்பு! ஆனா, அவனோ அவளைக் “கண்டும் காணாதது” போல் இருக்கான்.
தன் காதலை வாழ்விக்க முடியாம, அவ என்ன பண்ணுறா? = தற்கொலை? இல்லையில்லை!
சூர் நசைத் தலையாய் “நடுகல்” கண்டே
பரிந்தனென் அல்லனோ, இறை இறையானே
முன்னோர்களே, நீங்க தூக்கி வளர்த்த இவனுக்கு..
நீங்களே என் அன்பையும் புரிய வைக்கக் கூடாதா?”
-என்று, நடுகல்லையே அவ வணங்குறா!
தன் முன்னோர் மரபின் மேல், அவ கொண்ட மதிப்பு!
அந்த மதிப்பால், அவன் மதிப்பில் அவ உசந்துட்டா;
அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டான்; இதழ் இழுத்து உறிஞ்சிக்கிட்டான்; இதுவே மாமூலனாரின் குறுந்தொகைப் பாடல்!
இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய “லிங்கம்” போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள்:)
ஆனால், அன்றைய தமிழில் “ல” -ன்னே எழுத்து தொடங்காது; லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்!
லிங்கம் = வடமொழி; தமிழில் எழுதும் போது = இலிங்கம்!
அப்புறம் எப்படி நடுகல் = “லிங்கம்” ஆகும்?
தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்று; “மதம் ஆன பேய்” வந்து ஊடாடினால்? = இதான் கதி:(
தொல்காப்பியர் காட்டும் நடுகல் = “சீர்த்தகு மரபு”
காட்சி, கால்கோள், நீர்ப்படை, “நடுகல்”
சீர்த்தகு “மரபில்“ பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)
இந்த “மரபு” தான் -> தமிழ் மரபு என்று ஓங்கி வளர்ந்தது!
* முன்னை “மரபின்” முதுமொழி முதல்வ = திருமால்
* அரும்பெறல் “மரபின்” பெரும்பெயர் முருக = முருகன்
கலப்பின் காலம்:
வணிகம்-தொடர்பு காரணமாய், வடமொழி (எ) வடநெறி, தமிழ் நிலத்தின் ஓரமா வந்து குந்திக்கிட்டு இருக்கு! இது தொல்காப்பியருக்கும் தெரியும்! அதான் “வட எழுத்து ஒரீஇ” (ஒதுக்கு) -ன்னு எழுதினாரு!
பண்பாடுகள் சற்று கலக்கத் தான் செய்யும்!
யாரும் தனித்து வாழவியலாது; ஆனால்.. ஆனால்…
அப்படிக் கலக்கும் போது,
* ஒரு சமூகம், தன் “வேர்”களை இழந்து விடக் கூடாது!
* மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கல்; அதுவே நல்லது!
தமிழில், 5% பிற மொழிச் சொல் Okay;
ஆனால் 35% சம்ஸ்கிருதச் சொல் புகுத்தினால்?
Parasite போல்… ஒட்டி ஒட்டியே, உறிஞ்சி இழுத்து விடும்!
“சொல்/பொருள்” என்ற சொற்களே நாளடைவில் மறைஞ்சிப் போய்..
“வார்த்தை/அர்த்தம்”-ன்னே புழக்கம் ஆயீரும்!
ஆங்கிலமாச்சும் பரவாயில்லை,
“பிகர்”-ன்னு எழுதினா, உங்க பாட்டி கூட Figure என்பது இங்கிலீஷ்-ன்னு சொல்லீருவாங்க.
ஆனா சம்ஸ்கிருதச் சொற்கள்: “வார்த்தை/அர்த்தம்”?
அதுவும் தமிழ் தானோ? எ. நம்மையே நம்ப வைத்துவிடும் தலைமுறைத் தீமை, இந்த Parasite தீமை!
நம்மிடம் இல்லாத சொற்களை, பிற மொழிகளில் இருந்து பெற்றுக் கொளல் தவறில்லை.
ஆனால் இருக்கும் சொல்லை/சொத்தை அழித்து, கடன் வாங்குதல் அறிவீனம் அல்லவா?
தொல்காப்பியர், வடசொற்களும் தமிழில் புழங்க flexibility (எ) நெகிழ்வு குடுத்தாரு.
எடுத்துக்காட்டு:
*கமலம்= தற்சமம் (அப்படியே எழுதுவது)
*பங்கயம்= தற்பவம் (பங்கஜம்: தமிழ் விதிகளுக்கு உட்பட்டு, பங்கயம் என்று மாற்றி எழுதுவது)
இந்த Flexibility பெயர்ச் சொற்களுக்குச் சரிவரும்!
ஆனா இதையே எல்லாத்துக்குமே நுழைக்கப் பார்த்தால்?
அரசர்கள்-அதிகாரம் மூலமா ‘நுழைந்து’ கொண்டது வடநெறி! “மதம்” என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருக்கே? Emotional Attack!
“உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு”
இப்படில்லாம் சொன்னா, எதுக்கு வம்பு.. உண்மையோ/பொய்யோ.. கொடுத்துத் தொலைச்சிருவோம் என்று செய்வீர்கள் தானே?
பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்
பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்யம்
ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் = இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது!
* முது குடிப் பெருவழுதி -> பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆனான்!
* பெருநற் கிள்ளி = இராஜசூய யாகம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான்!
அரச/ அதிகாரப் பரவலே முதலில்;
பின்பே இலக்கிய/ சமூகப் பரவல்!
ஆம்!… அது கடைச்சங்க காலம்!
கடைச்சங்க காலம் = மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, “மதம்” பிடித்தது, ஜாதியும் பிடித்தது:(
முல்லை-குறிஞ்சி என்ற ஆதிகுடி காட்டு வாழ்க்கை!
புலம் பெயர்ந்து..
மருதம் என்ற வயல்வெளி/ ஆற்றோர நாகரிகம் கண்ட மக்கள்.
நாகரிகம் செழிக்கச் செழிக்க, “அந்நிய நெறிகள்” நுழைந்து, தமிழ் நிலத்தை மாற்றிப் போட்டது!
பண்பாட்டுக் கலப்புக்குப் பின்…
அரசனைக் ‘கொண்டது’ போல், ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிக் ‘கொள்வது’?
= வாழ்க்கையின் துன்பமெல்லாம் விலகி ஓடணுமா?
= பூஜா-புனஸ்கார-ஜோதிட-பரிகாரம்
ஜோதிட மயக்கம், நம் அப்பாவி மக்களுக்குப் பெரும் மயக்கம் அல்லவா?
(கண்ணகி கிட்டவும் பரிகாரம் செய்யச் சொல்றாங்க, இழந்த புருசனை அடைய; ஆனா அவள் செய்ய மறுக்குறா)
“Hello தமிழ் மக்களே..
உங்க முருகனும், திருமாலும், இங்கேயும் இருக்கா பாருங்கோ! எங்க சம்ஸ்கிருதத்திலும் இருக்கா பாருங்கோ!
வெறுமனே நடுகல்லா இல்லாம… Magic; ‘ஜாலி’ யான புராணக் கதைகள்”?
தங்கள் வேதக் கடவுள்களான.. சோமன், அக்னி, இந்திரன், அஸ்வின், மித்ரன்..
இவர்களையெல்லாம் சற்றே தள்ளிவைத்து, தமிழ்க் கடவுள்களையே -> புதிய புராணக் கடவுள்களாக உருவாக்கம்!
Local பாணியில் பேசிப் பேசியே, Local மக்களைக் கவரும் அன்றைய “பிராமண சுவிசேஷம்”
* கந்தன் -> ஸ்கந்தன் ஆனான்!
* திருமால் -> விஷ்ணு ஆனான்!
தமிழ்த் தொன்மங்களின் மேலேயே, பலதும் ஏற்றப்பட்டன.
நம் தொன்மங்களை, நாமே இழக்க வைக்கும் “உத்தி” = புராணம் ஏற்றுதல்!
இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?
பிரபலம் ஆகாத வரை= அவள் எளியோரின் சமயபுரத்தாள்!
ஆனால் கொழிக்கத் துவங்கியவுடன்= அர்ச்சகாள் வந்துட்டா!
“ஆத்தாள்” -> “அம்பாள்” ஆகி, தல “புராணமும்” இப்போ வந்துருச்சு அல்லவா? அதே உத்தி!
நமக்கும்.. ஆத்தாளை விட, அம்பாள் என்று சொல்வதே, Promotion அடைந்த திருப்தி.
சிறு தெய்வம்= நம் தாழ்வு மனப்பான்மை!
அதையே மந்திரம் சொல்லிக் கொண்டாடினால்? பெருந் தெய்வம்= உயர்வு மனப்பான்மை!
உங்க நடுகல் முருகனும்/திருமாலும், Sanskritலயும் இருக்கா பாருங்கோ!
*முருகன் aka சுப்ரமண்யன்= கம்மி
*திருமால் aka விஷ்ணு= சற்று அதிகம்
“விஷ்ணு”வை அங்கே அதிகம் பரவிட்டாங்க; மும்மூர்த்தியுள் ஒரு மூர்த்தி.
மோகினி + கிளுகிளு கதைகள்!
“ஸ்கந்தனை”, ஏனோ அங்கு அதிகம் பரவலை; மும்மூர்த்தி ஆக்கலை;
ஆனாலும், சுப்ரமண்ய ஸ்வாமி, தேவ ஸேனாபதி என்ற பட்டம்!
*அங்கு அதிகம் பரவாதவன் மட்டுமே = “தமிழ்க் கடவுள்” முருகன் -என்று இன்றைய கண்ணுக்குத் தெரிகிறான்;
*ஆனால், முருகனும் திருமாலும்= இருவருமே தமிழ்த் தொன்மங்கள் -என்று சங்கத் தமிழ்க் கண்ணுக்கு நல்லாவே தெரியும்!
முருகன்= தமிழ்க் கடவுள் என்று சைவப் பெருமைக்கு, இன்று சொல்லிக் கொண்டாலும்..
அந்தத் தமிழ்க் கடவுள் கதை பூராவும்= சம்ஸ்கிருத/புராணக் கதையாய் இருப்பது ஏன்?
(நெத்திக் கண்ணுல தோன்றினாரு, 6 ஒடம்பு ஒன்னாச்சு, கைலாஸ மலையில் பழம் நீ அப்பா, பிரணவ மந்திர உபதேசம்;
வீரபாஹூ Friend ஆனாரு; பாஹூ= சம்ஸ்கிருதம்; தோள் எ. பொருள்! அப்பறம் எப்படித் தமிழ்க் கடவுள்?
அசுரர் குடியையே கெடுத்தாரு, அசுரர் “குடிகெடுத்த” ஐயா வருக; தூங்கும் குழந்தைகள் உட்பட அசுர பட்டணத்தையே தண்ணிக்குள் மூழ்கடிச்சாரு, தேவஸேனா கல்யாணம்
“தமிழ்க் கடவுள்” முருகன் மேல், ஏன் பூராவும் சம்ஸ்கிருதக் கதைகள்?
இந்த எளிய உண்மை= நம் மக்களுக்கு உறைப்பதே இல்லை அதான் மதம் என்கிற மாயை!
மேலும் பேசுவோம்!
தங்கள் நடுகல்லும்/தொன்மமும் = “பெருந்தெய்வமாய்” மாறிப் போச்சு;
அப்போ ஆதி குடிகளின் கதி?
= கொல்லிப் பாவை, இசக்கி, சுடலை, சாத்தன்-சாத்தி…
இப்படி, முன்னோர்களை, வேறு வேறு பெயரில், வழிபட்டுக் குறுகிப் போயினர்!
(சாத்தன்-சாத்தி என்கிற தமிழ்ப் பெயர்கள்: சீத்தலைச் சாத்தனார், ஒக்கூர் மா-சாத்தியார்)
மக்களும் “மாற”த் துவங்கியாச்சி..
அட, நம்ம முருகன் தானே, அங்கேயும் சுப்ரமண்ய ஸ்வாமியா இருக்கான்?
கூடவே கிளுகிளு கதைகள்!
கல்யாண + வியாபார பரிகாரங்கள் -ல்லாம் சொல்றாங்களே, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு?
1. மன்னன் முதற் கட்ட மாற்றம்! மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி..
2. அரசியல் அதிகாரம் பெருக்கி, மக்கள் இரண்டாம் கட்ட மாற்றம்!
அரசியலும், தன்னலமும்.. எதையும் செய்யும்!
முருக-“இயற்கை” வழிபாடு குறுகி -> முருக-“புராண” வழிபாடு பெருகியது!
பொய்யான “கதைகளே” மலிந்து போய்,
இன்று, ஆலயம் தோறும்.. முருகத் தமிழ்க் கடவுள் & திருமால் தமிழ்க் கடவுள் -> சம்ஸ்கிருதக் கடவுள் ஆகி நிற்கும் கோலம்!
சமணம் & பெளத்தம்:
இவை கூட வடக்கில் இருந்து வந்த நெறிகள் தான்!
ஆனா அவர்கள் தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்கலை; “புது நெறி”-என்றே அறிமுகம் செய்தார்கள். கந்தனை -> “ஸ்கந்த தீர்த்தங்கரர்” ஆக்கலை!
சம்ஸ்கிருத நெறி மட்டுமே = தமிழ் மரபியல் சிதைப்பு செய்தது.
தொன்மத்தின் மேலேயே புராணம் ஏற்றினால்?
= எது இருந்தது? எது வந்தது?
= கண்டுபுடிக்கவே முடியாது! Thatz the Trick! Ir-reversible
இயற்கையான முருகனுக்கு = 6 தலை, 12 கை, 18 கண்
நாமளும், ஆறு-தலை/தரும் ஆறுதலை -ன்னு “வார்த்தை விளையாட்டு” விளையாடி, மகிழ்வு கொண்டு விடுகிறோம்; வெட்கக்கேடு
சென்னைக்கு அருகே திருப்போரூர்;
இது போன்ற பழமையான முருகன் கோட்டங்களில், இன்னிக்கும் நடுகல்லைப் பார்க்கலாம்!
உருவமோ/முகமோ இருக்காது;
ஆனா முகம் போல் எழுதி, அலங்காரத்தில் மறைச்சிருக்கும்!
யாரேனும், “ஹிந்து” மத அபிமானிகள் வாசிக்க நேர்ந்தால் மன்னித்து விடுங்கள்.
உங்களுக்குப் “பிடிக்கலை” -ன்னு தெரியும். அதுக்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாதே?
வசையாடி/இழிவு செய்தால் கோச்சிக்குங்க; ஆனால் சங்க கால உண்மைக்கெல்லாம் கோச்சிக்காதீக, Please!
மனசாட்சி இருப்பின், நீங்களே யோசிங்களேன்.
* சமண-பெளத்தம் = பாளி மொழி -> அதன் கலப்பு தமிழில் இருக்கா?
* வேத/ பிராமணீய மதம் = சமஸ்கிருதம் -> ஏன் இது மட்டும் அதீதக் கலப்பு?
அவரவர் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்
சங்கத் தமிழ் வாசிப்புக்கு = “காலம் அறிதல்” இன்றியமையாதது!
கொஞ்சூண்டு புற400 பாட்டில்… பஞ்ச பாண்டவர், இராமன் + இதர தெய்வங்களின் குறிப்பு கூட வரும் (மிகச் சொற்பமாக)
ஒடனே, “பாத்தீங்களா பாத்தீங்களா? சங்கத் தமிழ்லயே ராமர் இருக்கார் பாருங்கோ; பேஷ் பேஷ்!
தமிழாள் ஸ்ரீ-ராமரையே கும்புட்டாங்க! Bolo, Jai Sri Ram!” -ன்னு எறங்கீறக் கூடாது:)
அப்படீ-ன்னா, “Sati” = தமிழாள் பண்பாடா என்ன?
மாண்ட கணவனோடு, பெண்ணை நெருப்பிலே தள்ளல்! அதுவும் புற400-இல், ஒரு மூலையில் லேசா வரும்
இதுக்குத் தான் காலம் அறிதல் முக்கியம் -ன்னு சொன்னேன்!
* முதல்/இடைச் சங்கத் தமிழில்= இது போன்ற “புராணக் குறிப்பு” வராது!
* கடைச் சங்க காலம் = கலப்புக்குப் பின்னரே, புராணம் லேசு மாசாய் வரும்!
இவை = “தொகை” நூல்கள்; தொகுக்கப் பட்டவை! ஒரே காலத்தில் எழுதப் பட்டவை அல்ல!
*முதல்-இடைச் சங்கப் பாட்டும் வரும்
*கடைச் சங்கப் பாட்டும் விரவி வரும்
ஆனா, எதுஎது, எந்தக் காலம்? -ன்னு அகச் சான்று உண்டு!
என் iPod Playlist -இல், பாபநாசம் சிவன், KV Mahadevan, மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா, Rahman -ன்னு “தொகுத்து” இருக்கு!
எல்லோரும் ஒரே காலமா என்ன?
MSV போட்ட “Melody”-க்கு, இன்னிக்கி Remix என்கிற “Tragedy” வேற
இதே போல், குறுந்தொகைக்கெல்லாம் “கடவுள் வாழ்த்து” -ன்னு Remix சொருகினார்கள்
நினைவில் வையுங்கள்:
எட்டுத் தொகையில்= 8 “கடவுள் வாழ்த்துச்” செய்யுள்களும், சைவ சமயப் பிற் சேர்க்கையே! Remix செய்யப்பட்டதே!
மக்கள் வாழ்வியல்:
*குறிஞ்சி: வெறியாடும் முருகன் கூத்து!
*முல்லை: காதலர்கள், மாயோன் (திருமால்) மேல் சத்தியம் செஞ்சி, காதலை நிரூபிப்பது!
-இப்படி.. “வாழ்வியல்” (Social Life);
ஆனால், (இல்லாத) நெற்றிக் கண்ணால் எரிப்பது? பரியை நரி ஆக்குவது?
இது மக்கள் வாழ்வியல் அல்ல; புராணம்!
“வடவரின் புதுக் கதையில் வருவது போல்” -ன்னே சங்கப் பாட்டும் இருக்கு; It’s just a “Myth”
காலம் செல்லச் செல்ல..
மதம் (எ) சக்தி வாய்ந்த ஆயுதம், “நிறுவனப்படுத்தல்” ஆகி விட்டது.
ஆனா அப்போதும், தமிழ்ச் சமூகம் = தன்னை “முழுசா” ஒப்புக் குடுத்துடலை, சம்ஸ்கிருத நெறிக்கு!
Kannagi is the Proof!
கலப்புக்குப் பின்னால் எழுந்ததே சிலப்பதிகாரம்!
கோவலன் திருமணமே = “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்” தான் நடக்குது;
அது காதல் திருமணம் அல்ல!
அரசனுக்கு இயைந்த, வணிகச் சமூகப் பெற்றோர் நடத்தும் திருமணம்!
பெற்றோர் சொற்படி, பார்ப்பனன் நடத்தி வைத்த திருமணமே ஆயினும், அதே கண்ணகி.. சடங்கு செய்ய மறுக்கிறாள்!
பிரிஞ்ச தம்பதிகள் பரிகாரம்:
பிரிந்து விட்டவனை மீண்டும் அடைய, சோம குண்டம்/ சூர்ய குண்டம் = பரிகாரம் பண்ணலாம் வாடீ-ன்னு… அவள் பக்கத்து வீட்டுப் பார்ப்பனத் தோழி தேவந்தி கூப்பிட..
கண்ணகி சொல்லும் தமிழ்நெறிச் சொல் = “அது எங்களுக்குப் பீடு (பெருமை) அன்று”!
பண்பாட்டின் பரவல் | Expansion of Civilization:
முல்லையின் மாயோன், குறிஞ்சியின் சேயோன்
= முதலில் வைக்கிறார் தொல்காப்பியர்;
= காடு-மலை; முதலில் தோன்றிய நாகரிகம் அல்லவா?
காடு-மலை கடந்து, மக்கள் புலம் பெயர்ந்த போது.. தங்கள் தொன்மங்களையும் உடன் எடுத்தே சென்றார்கள்!
மருதம்= வேளாண்மை; நெய்தல்= கடலாண்மை கண்டனர்.
மருத நிலம் = வேந்தன் (அரசன்); மாறிக் கொண்டே இருப்பவன்
நெய்தல் நிலம் = வருணன்/ வருள்நன் (கடல்காற்று); மாறிக் கொண்டே இருப்பது
முருகன்/திருமால் போல்..
வேந்தனோ/காற்றோ = ஒரு நிலைத்த அடையாளம் அல்ல!
அதனால் மக்கள் வாழ்வியலில், வேந்தன்/வருணன் அதிகம் பேசப்படலை.
துறை/கூத்து -ன்னு வேந்தன்/வருணனுக்கு.. “வாழ்வியலாய்” ஒன்னுமேயில்ல; வெறும் நில அடையாளம் மட்டுமே!
கொற்றவை (எ) பழையோள் = இவளும் தமிழ்க் கடவுளே!
= நடுகல்லாய் உதித்து, உருப் பெற்றவள்!
= பாலை நில எயினர்கள்/ வழிப்பறிக் கள்வர்களின் தெய்வம்!
“நாகரிகம் குறைந்த” கள்வர் என்பதால்.. இவள் பேரிலே மிகுந்த இலக்கியப் பாடல்கள் இல்லீன்னாலும்..
திணை அளவில் இல்லாது, துறை அளவிலாச்சும் (கொற்றவை நிலை) குறித்து வைக்கிறார் தொல்காப்பியத்தில்!
தொல்காப்பியர் பேதம் இல்லாதவர்; எவரையும் ஒதுக்காமல், “உள்ளது உள்ளபடி”.. தமிழாய்க் குறித்து வைக்கின்றார்!
மாயோன் மேய மன் பெரும் சிறப்பின்,
தாவா விழுப் புகழ் = “பூவை” நிலையும்
-ன்னு தொல்காப்பியர் சொல்லும் அந்தப் பூ-வை என்பதே => பூ-சை ஆனது;
இப்படி, இயற்கை வழிபாடாய் இருந்த ஒன்று..
* நாள் செல்லச் செல்ல, “புதிய புராணம்”= இலக்கியத்திலும் பரவத் துவங்கியாச்சு
* வேந்தன்= இந்திர பகவான், வருள்நன்= வருண பகவான் -ன்னு ஆக்கியாச்சு!
நினைவில் வைங்க; வேந்தன் = இந்திரன் அல்ல!
வேந்தன்= மருத நில மன்னவர்கள்;
(மாறிக் கொண்டே இருப்பவர்கள்)
அதே போல் வருணன் = (வருள்நன்)
வருள்= சூழ்தல்; நிலத்தை வருளும் (சூழும்) கடல்!
முது “வருண்”, முந்து கிளவாச் செறிவு -ன்னு திருக்குறளே இருக்கு!
வருள்/வருண்= சூழ்தல்!
தமிழ் “வருணம்” வேற; சம்ஸ்கிருத “வர்ணம்” வேற;
வருள்வதால்= வருணன்; வருளும் கடற்காற்று= நெய்தல் நிலத் தெய்வம்!
ஆனால், வேந்தன் = இந்திரன் -ன்னு உரைகளில் மாற்றி எழுதினார்கள்:(
இந்திர விழா என்று மன்னனும் தோற்றுவித்தான்!
வேதக் கடவுள்கள் சோமன் /இந்திரனை, Local மதப் பரப்பலுக்காக “சற்றே ஒதுக்கி வைத்து”, ஹோமம்/ யக்ஞங்களில் மட்டும் இந்திரனை விட்டுவிடாது பிடித்துக் கொண்டனர்! ஓம் இந்திராயா ஸ்வாஹா.. யாகத்தில், இந்திரனுக்கு அவிர்ப்பாகம்!
உலகெங்கும், ஆஸ்திகம்= கடவுள் உண்டு; நாஸ்திகம்= கடவுள் இல்லை!
ஆனால் சம்ஸ்கிருத/ பிராமணீயக் கொள்கையில் மட்டுமே, ஆஸ்திகம்= வேதம் உண்டு; நாஸ்திகம்= வேதம் இல்லை!
(கர்ம மீமாம்சை= இறை மறுத்து, ஆனால் வேதம் மறுக்காதவர்கள்)
வேதம் மறுத்த புத்தரும், மகாவீரரும்.. இவர்களைப் பொருத்த மட்டில்= நாத்திகர்கள்:)
நீ, இறைவனை மறுத்தாலும் பரவாயில்லை; எங்கள் வேதத்துக்கு உடன்பட்டால்= நீயும் ஆத்திகனே!
என்னே இறை அன்பு! கடவுளை விடவும், தங்கள் கட்டமைப்புக்கு உருவாக்கிக் கொண்ட வேதமே பெரிது!
அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே! -என்று பாடும் சங்கத் தமிழ் மாண்பு எங்கே? இச் சுயநலம் எங்கே?
Grammar = The Breeding Ground
தமிழ் இலக்கணமே= இவர்கள் முதலில் கை வைப்பது; Cut at the root!
(உங்க இலக்கணத்தைத் திரித்து, உங்களுக்கே வழங்கும் பண்டிதாள்)
* ஒரு புடை உருவகம் = “ஏக தேச” உருவகம் -ன்னு.. இன்னிக்கி பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்திலெல்லாம் நிலைச்சிருச்சே!
Why should Tamizh Grammar have “ek” & “ekam” inside it?
Does Sanskrit Grammar has, Tamizh words “Or & Eer (ஓர் & ஈர்)” in it? உங்க மனச்சாட்சியைக் கேளுங்கள்!
இது வடமொழி (எ) ஒரு தனிப்பட்ட மொழியின் குற்றமல்ல; அது நல்ல மொழி தான்.
அந்த மொழியில் ஊறிய, ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் குற்றமே இது!
Does Sanskrit have Tamizh sounds ழ & ற?
But Tamizh “MUST” have sanskrit sounds ஸ்ரீ & ஷ!
இது தானே “நியாயம்“?:) புகுத்து, தமிழில் கிரந்த எழுத்தை!
தமிழின் சிறப்பான ழ-க்குப் பதிலா, ட -போட்டுக்கலாம் ன்னு, தமிழ் இலக்கணத்தையே மாத்தி எழுதப் பார்த்தாங்க;
தமிழ்க் கடவுள் முருகனே வந்து “ழ”-க்குப் பதில் “ட” போடச் சொன்னான்-னு சைவக் கதையும் புனையப்பட்டது:) கச்சியப்ப சிவாச்சாரியின் கந்த புராணம்!
ஆனால், எத்துணை “சம்ஸ்கிருத/மதம்” மிகுந்தாலும், இன்று வரை… தமிழ் மொழி இயல் = தொல்காப்பிய அடிப்படையே! அதை எவரும் அசைக்க முடியலை!
காலங் காலமாய்ப் பின்னிப் பிணைந்து… இன்று வரை..
தொல்காப்பியமே காத்துக் குடுக்கும்= நம் தமிழ்த் தொன்மம்!
Further Read/Ref:
1) ஞா.தேவநேயப் பாவாணர் – தமிழர் சமயம்
2) தொ. பரமசிவன் – பண்பாட்டு அசைவுகள்
3) மா. இராசமாணிக்கனார் – கால ஆராய்ச்சி (ebook)
சரி, பெரீய்ய்ய முன்னுரை போதும்:) வாங்க, இன்றைய பாட்டுக்குச் சுருக்கமாய்ச் செல்வோம்:)
தமிழர்களுக்கு, நைவேத்யம் செய்யும் கடவுள்கள் இல்லை! என்ற தெளிவான எதிர்ப்புக் குரல்; சங்கத் தமிழிலேயே!
இது போல் பலப்பல அகச் சான்றுகள்!
நூல்: புறநானூறு (335)
கவிஞர்: மாங்குடிக் கிழார்
திணை: வாகை
துறை: மூதின் முல்லை
காபி உறிஞ்சல்:
அடல் அருந் துப்பின்…..
குரவே, தளவே, குருந்தே, முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;
வெல்ல முடியாத வலிமை (துப்பு) கொண்ட இனம்;
* குரவம், தளவம் (பிச்சிப்பூ), குருந்து, முல்லை
= இந்த நான்குமே இவங்க குடிப் பூக்கள்;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;
வரகு, தினை, கொள்ளு, அவரை = இந்த நான்குமே இவங்க குடி உணவு;
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
துடியன், பாணன், கடம்பன், பறையன் = இந்த நான்குமே இவங்க குடி முறைகள்;
அரசின் உயர் அலுவலர் = பறையன்; But today itz an offensive word;
எள்ளல் பேர்வழிகள் கும்மி அடித்து அடித்து, “பறையன்” என்னும் செந்தமிழ்ச் சொல், தீச் சொல்லாய் மாறி விட்டது
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின், களிறு எறிந்து வீழ்ந்தெனக்
பகைவர்களின் முன்னே அஞ்சாது நிற்பர்;
ஒளி வீசும் தந்தம் உள்ள யானை = அதையே சாய்க்க வல்லவர்;
அப்படிச் சாய்க்கும் போது, தாமும் சாய்ந்து இறந்தார்கள் = குடி காத்த முன்னோர்;
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
அவங்க நினைவாக இட்ட = நடுகல்!
அந்த நடுகல்லைத் தான் போற்றுவோமே அன்றி…
நெல்-அரிசியைக் கொட்டி (உகுத்து),
“நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை! =நெல் உகுத்துப் பரவும் “கடவுளும் இலவே”!
(Strong Views recorded by maangudi kizhaar, during the “culture change” of his times)
இது போன்ற அகச் சான்று= பல சங்கத் தமிழ்ப் பாடல்கள்!
மன்னன் மாறினாலும்.. தான் மாறாது,
தமிழ்க் கொள்கைக்கு எதிரான.. சம்ஸ்கிருத/ வேத/ பிராமணீயம்; அவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்த்தமைக்குச் “சாட்சி”யாய்.. ஆங்காங்கு நிற்கும் சங்கத் தமிழ் வாழ்க...
இலுமினாட்டி - மான்சாண்டோ நிறுவனம்...
பாரம்பரியமான நம்முடைய விவசாயத்தை பல திசைகளிலிருந்து அழிக்கக்கூடிய சூழல் உருவாகிக் கொண்டு வருகின்றன.
இயற்கை விவசாயத்தை பேணிக் காத்த இந்தியாவில் 1960களில் பசுமைப் புரட்சி என்ற திட்டத்தைக் கொண்டுவந்து அழிவு வேலையைப் பார்த்தார்கள்.
அன்றைக்குத் தொடங்கிய விவசாய அழிப்பு வேலை இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த சூழ்ச்சியிலிருந்து விவசாயத்தை பாதுகாக்கப் படவேண்டும்.
மான்சாண்டோவும் நமது மரபு ரீதியான விவசாயத்தை அழிக்கக்கூடிய நிலைமை இன்றைக்கு உள்ளது..
அது குறித்தான பதிவு..
உழவனையும் உலகையும் அழிக்க துடிக்கும் மொன்சாண்டோ - Monsanto..
உங்களுக்கு தெரியுமா?
மான்சாண்டோ இஸ்ரேலிய யூதாவால் உருவாக்கபட்ட ஒரு அமெரிக்க நிறுவனம்.
இது மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்ய தொடங்கிய நிறுவனம்.
கோகோ கோலா, பெப்சி, யுனிலீவர், லிப்டின் , நெஸ்லே ஜான்சன் & ஜான்சன் போன்ற அனைத்து உற்பத்தி பொருளுக்கும் தலைமை தான் மான்சாண்டோ..
1901 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சர்வாதிகார நிறுவனம். உலகின் சந்தை அனைத்தும் இவன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அனைத்து உணவு பொருள்களும் இவனிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற சர்வாதிகார நோக்கம்..
உலகில் பசுமை புரட்சி என சொல்லி பாரம்பரிய உணவு வகையை அழித்தது மான்சாண்டோ..
இயற்கை விவசயிகளின் நண்பனான மண் புழுக்களை நம் தேசத்தில் இருந்து அழித்தவனும மான்சாண்டோ தான்..
நம் ஊரில் விற்கப்படும் பூச்சிக் கொல்லி, உரம். விதைகள் அனைத்துமே மான்சாண்டோ வசம் இருந்து வருகிறது..
மரபணு மாற்றிய விதைகள் நம் மண் வளத்தை கெடுக்கிறது. BT என்றும் சொல்லும் கத்தரிக்காய் இவனால் உருவாக்கப் பட்டதே.
பார்த்தீனியம் செடி உட்பட இவனின் மரபணு மாற்றிய விதையை இந்தியாவில் விற்க மோடி அரசும் உடந்தையே. இதில் தெரிந்தே ஈடுபடுகிறார்கள்..
சில வேளாண்மை பல்கலைக்கழகம் மான்சாண்டோவிற்க்கு வேலை செய்கிறது.
இவனின் இன்னொரு நோக்கம் மக்கள் தொகை கட்டுப்படுத்தும், ஓரின சேர்க்கையை அதிகப் படுத்துவதும் ஆகும்..
மரபணு மாறிய விதை பயன்படுத்தும் போது விதையில்லா பழங்கள் மட்டுமே கிடைக்கும்.
இதனால் நம்மால் பழம் விளைவிக்க இயலாது. அவனிடமே கை ஏந்த வேண்டும்.
இதை தடுக்க இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று போராட வேண்டும்.
மான்சாண்டோ பொருள்களை வாங்க கூடாது.
நம் இயற்கை உழவுத் தொழில் அழிவதற்கு மான்சாண்டோவே காரணம்...
மெல்ல அல்ல விரைவாகவே இனி சாகும் தமிழினம்..
பெர்ட்டிலிட்டி ரேட் என்ற ஒரு எண் உன்டு.... அதாவது சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தை பெறுகிறாள் என்ற கணக்கு அது.
இறப்பு விகிதத்தை எல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு இனம்/நாடு/மாநிலம் என எதுவாக இருப்பினும் அதன் தற்போதைய ஜனத்தொகை குறையாது இருக்க வேண்டுமெனில் ஒரு பெண் குறைந்தது 2 பிள்ளைகளையாவது சராசரியாக பெற வேண்டும்.
ஏனெனில் ஒரு ஆண்/ஒரு பெண் இணைந்து 2 குழந்தைகளையாவது சராசரியாக பெற்றால் தான் அந்த இனம்/நாடு/மாநிலத்தின் ஜனதொகை வளர்கிறதோ இல்லையோ, அழியாமலாவது இருக்கும்.
தமிழ்நாட்டின் ஜனதொகை பெருக்கம் நெருகடிவில் உள்ளது. ஆம் சராசரியாக ஒரு தமிழ் பெண் 1 குழந்தைகளையே பெறுகிறார்.
இந்தியாவின் அதிக மக்கள் தொகை உள்ள உபி,பிகாரில் இது 3 ஆம் சராசரி உபி, பிகார் பெண் 5 குழந்தைகளை பெறுகிறார்.
அதாவது இந்த தலைமுறையில் 2 கோடி தமிழர்கள் இருந்தால் அவர்கள் பிள்ளைகள் கால கணக்கில் 1.7 கோடி தமிழரே இருப்பார்கள்.
ஜனதொகையில் 15% ஒவ்வொரு தலைமுறையிலும் காணாமல் போகும்.
அதே சமயம் இந்த தலைமுறையில் 2 கோடியாக இருக்கும் பிகாரிகள் அடுத்த தலைமுறையில் 3.5 கோடியாக இருப்பார்கள்.
அத்தனை பேர் பிகாரிலும், உபியிலும் எப்படி வசிக்க முடியும்?
அதனால் தான் நாடு, முழுக்க பரவுகிறார்கள்.
இதனால் தான் தென்மாநிலங்களில் ஆள்பற்றாகுறை ஏற்பட்டு பீகார், உபி என வடமாநில தொழிலாளிகளை இறக்குமதி செய்யும் நிலை உருவாகிறது.
இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தேசிய மொழி இந்தியாகவும், அகிலேஷ் சிங் யாதவின் பேரன் தமிழக முதல்வராகவும் இருக்கலாம்.
தமிழை கேட்க வேண்டுமெனில் எங்காவது மியூசியத்தில் போனால் ஒலிப்பதிவுகளை வைத்திருப்பார்கள் கேட்டுகொள்ளலாம்.
இந்த அவலநிலை எப்படி உருவானது, ஏன் உருவானது?
1970களில் நாசகரமான குடும்ப கட்டுபாடு திட்டம் இந்திரா காந்தி அரசால் கொன்டு வரப்பட்டது.
"நாம் இருவர் நமக்கு மூவர்" எனதான் அப்போது ஆரம்பித்தார்கள். இப்போது அது "நாம் இருவர். நமக்கு ஒருவர்" என மாறியுள்ளது.
இனி "நாம் இருவர். நமக்கெதுக்கு இன்னொருவர்" என மாறினாலும் மாறலாம்.
திமுக, அதிமுக இரன்டும் மாறி, மாறி ஆண்டாலும், ஜனதொக்கை கட்டுபாடு எனும் நாசகர விசயத்தில் மத்திய அரசு "போடு தோப்புகரணம்" என்றால் "எண்ணிக்க" என சொல்லும்படித்தான் நடந்து கொன்டுள்ளன.
சத்துணவு ஆயாக்களுக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேஷனுக்கு ஆள்பிடிக்க எல்லாம் டார்கெட் வைத்து அவர்களில் பலர் ஆள் கிடைக்காமல் தாமே ஆபரேசக் செய்து கொண்ட கதை எல்லாம் நடந்ததுண்டு.
குடும்ப கட்டுபாடு ஆபரேசனுக்கு 500 ரூபாய் பணம், மஞ்சள் பையில் ஐந்து கிலோ அரிசி என எல்லாம் கொடுத்த கதை 80களில் வளர்ந்த பலரும் அறியலாம்.
இப்படிப்பட்ட நாசகரமான குடும்ப கட்டுபாட்டு திட்டம் ஒரே தலைமுறையில் தமிழக ஜனதொகை வளர்ச்சி விகிதத்தை நெருகடிக்கு கொண்டு வந்துவிட்டது.
எத்தனையோ தமிழ் சாதிகளில் கல்யானம் செய்ய பெண் இல்லை.
ஒரு குறிப்பிட்ட சாதியில் பெண் கிடைக்காத பையன்கள் படும் அவதியை கூட சிலர் எழுதியிருந்தார்கள்.
இந்த அவலத்துடன் ஆணாதிக்கமும் சேர்ந்து பெண் குழந்தைகளை கருவிலேயே அபார்ட் செய்து, பையன்களை மட்டும் பெற்றுக்கொள்ள வைத்து ஆண்-பெண் விகிதமும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.
இதுமட்டுமின்றி ஜனதொகை குறைந்தால் நாடாளுமன்றத்தில் நமக்கான சீட்டுகளில் குறைந்து தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவமும் குறைந்துவிடும். மாநிலங்களுக்கு ஒதுக்கபடும் நிதியும் குறையும்.
ஜீவாதாரமான இந்த பிரச்சனையை எந்த தமிழக அரசியல் கட்சியும் ஏனோ பேசுவதே இல்லை.
அவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவில்லையா அல்லது சோஷலிச போர்வையில் கொண்டு வரப்படும் ஜனதொகை கட்டுபாட்டு சூழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா என தெரியவில்லை.
இனியாகிலும் விழித்துக் கொள்வோம்.... அதிக அளவில் குழந்தைகளை பெறுவோம்.
ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெறுவது என உறுதி எடுக்க வேண்டும்... இல்லையெனில் அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை, மாமா/சித்தப்பா/அத்தை போன்ற உறவுகள் எல்லாமே அழிந்துவிடும்.
தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தம் தேர்தல் அறிக்கையில் "குடும்ப கட்டுபாட்டு திட்டங்களில் இருந்து தமிழகம் உடனடியாக விலகும்" என்ற அறிவிப்பை கட்சிசார்பின்றி ஒருமனதாக முன் வைக்க வேண்டும்.
பிள்ளைகள் செல்வங்கள். சுமைகள் அல்ல..
விழிப்புடன் இல்லையெனில் மொழியும், இனமும், நாடும் அழிந்து விடும்...
தமிழர் நீதிக்கட்சியை திராவிடர் கட்சியாக மாற்ற நடந்த சதி எல்லாம் இங்கு எழுதி தீராது….
பெரியார் சிந்தனை தொகுதி -2 இயக்கங்கள் -1 பக்கம் 899 குடியரசு 29/01/1944 உரையில் பெரியார் திராவிடம் பார்பனர் எதிர்ப்பு என்று எங்கும் குறிப்பிடவில்லை.
மாறாக தமிழர் என்றால் உங்கள் இதரவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திராவிட சமுதாயம் என்று தமிழர் நாட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?
தமிழன் முந்தியா?
திராவிடன் முந்தியா?
உன் திராவிடனுக்கு என்ன தாய் மொழி ?
நீயும் உன் பெரியாரும் பேசியது எங்கள் தமிழ் தானே ?
அப்போது பேசியது திராவிட நாடு என்று சென்னை மாகாணம் மட்டுமே.. ஏன்?
அதில் ஐதராபாத் நிசாம் , மைசூர் சமாதானம், திருவாங்கூர் கொச்சி சமாதானம் இல்லை..
அப்பாடியானால் திராவிட நாடு என்று கேட்ட முழு தமிழ் பகுதியும் , சிறு தெலுங்கு பகுதியும் ,சிறு கன்னட பகுதியும், சிறு மலையாள பகுதியும் இருந்தது.
தமிழினத்தின் முழு தாயகத்தை இழந்து சிறு பகுதிகளை கொண்டிருந்த தெலுங்கு, கன்னட, மலையாளிகளுக்கு தமிழன் என்ற இனத்தின் பெயரையும் தமிழ்நாடு என்ற மாநில பெயரையும் இழக்க நேர்ந்திருக்கும்?
தொன்மையான தமிழர்களுக்கு திராவிடன் என்ற கலப்பு இன கலப்பு மாநிலம் இழி நிலை ஏற்பட எங்கள் மரபணுவில் கை வைத்த இவனை மன்னிக்க முடியாது.
திராவிட குழுமத்தால் இதரவர்கள் பயன் அடைத்தது போல மண் உரிமைமிகு தமிழன் உறவுகளுக்கு இன்று வரை போராட்டமாகவே உள்ளது?
ஆம்... திராவிட இன வாதம் என்பது தமிழன் மீது இழியவன் நடத்திய திட்டமிட்ட பாசிச இனவாதமே..
பார்ப்பான் ஆதிக்கத்தை ஒழிக்கிறேன் என்று வடுகர்கள் தமிழனின் தோளில் ஏறியதற்கு முழு காரணம் அந்த ஈனபுத்திகாரனின் ஆக்கிரமிம்பு அறிவிலி கொடூரம் தான் காரணம்...
சரி இதை கவனிச்சிங்களா?
இவ்வளவு நாள் நெட்டிசன்ஸ் வச்சு செய்யுறதுக்காகவே எச்.ராஜாவை முன்னிலைப்படுத்திய பிஜேபி இப்ப அவரை எடுத்துட்டு அந்த போஸ்டிங்குக்கு கிருஷ்ணசாமியை நியமிச்சுருக்காங்க.
சும்மா சொல்ல கூடாது, கிருஷ்ணசாமியும் தன்னோட திறமையை எல்லாம் யூஸ் பண்ணித் தான் பார்க்குறாரு. ஆனாலும் பாரபட்சம் பார்க்காம நம்ம ஆளுங்க நொறுக்குறாங்க.
எப்பா எதுனாலும் கொஞ்சம் மெதுவா போங்க. அவரும் போயிட்டார்னா நமக்கு வேற எண்டர்டெய்ன்மெண்ட் இருக்காதுல்ல...
சிலம்பம்...
சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது.
"சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.
கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது.
சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார்.
சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன.
திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
சிலம்பம் பிறநாடுகள் வரை பரவி , அந்த நாடுகளில் மெருகேற்றபட்டு காரத்தே ஆனது என்று சொல்பவர்களும், அதன் காரணமாக தான் "கராத்தே" என்ற பெயர் கரம் என்ற பொருள் தருவதாக உள்ளது என்று வாதிடுவோரும் உள்ளனர்"
கராத்தே கலையின் முன்னோடி குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார் . எனவே கராத்தே கலையின் முன்னோடி சிலம்பம் என்ற கருத்தும் உள்ளது.
சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு,கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கடுபடுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும் குறிப்பு ஒன்று உள்ளது.
பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினை பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் .தமிழக எகிப்திய கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.
சிலம்பத்தின் வகைகள் :
சுவடு
தெக்கன் சுவடு
வடக்கன் சுவடு
பொன்னுச் சுவடு
தேங்காய் சுவடு
ஒத்தைச் சுவடு
குதிரைச்சுவடு
கருப்பட்டிச் சுவடு
முக்கோணச் சுவடு
வட்டச் சுவடு
மிச்சைச் சுவடு
சர்சைச் சுவடு
கள்ளர் விளையாட்டு
சக்கர கிண்டி
கிளவி வரிசை
சித்திரச் சிலம்பம்
கதம்ப வரிசை
கருநாடக வரிசை
கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக்(தடியை) கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.
இன்னைக்கு வெகு சிலரே சிலம்பக்கலையை கற்கின்றனர். இந்தியாவில் தமிழ்நாடு , கேரளா மற்றும் மலேசியா, பிரான்ஸ் போன்ற இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தினர் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயபடிப்பாக சிலம்பம் நடத்தபடுகிறது...
Subscribe to:
Posts (Atom)