தமிழ்நாடு என்னமோ காலம் காலமாய் முட்டாள் மாநிலமாய் இருக்கிற மாதிரியும் அதை நிமிர்த்துவதற்குத்தான் நாங்கள் முயற்சி செய்கிறோம் என்றும் ஒரு கும்பல் எங்கோ சலாம் போடுகிறது..
இன்றைக்கு இந்தியாவிற்கே, மருத்துவ தலைநகர்போல் திகழ்கிற்து சென்னை மாநகரம்.. இந்தியாவின் முதல் பெண் டாக்டரே 1912ல் படித்த நம்ம புதுக்கோட்டை முத்துலட்சுமிதான்.
நாட்டிலேயே முதன் முதலில் நரம்பியலுக்கென தனி பிரிவை ஆரம்பித்தது தமிழகத்தில்தான்.. 1950ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் பி,ராமமூர்த்தி அந்த சாதனையை செய்தார். வேலூர் சிஎம்சியும் பிரத்யேக நர்ம்பியலை அப்போதே உருவாக்கியது.
டாக்டர் ஆப் மெடிசன் எனப்படும் D.M. மேற்படிப்பு நரம்பியலுக்கென முதன் முதலில் உருவாக்கப்பட்டதும் 1966ல் தமிழகத்தில்தான்..
ஆரம்பத்தில் உயர் சமூகத்தினர் வெற்றிகொடி நாட்டிய மருத்துவத்துறையில் சமூக நீதிமூலம் மருத்துவ படிப்பு வாய்ப்பு கிடைத்ததும், மருத்துவத்தில் சாதிக்காத சமூகமே இல்லை என்கிற நிலைமை தமிழகத்தில் உருவானது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.