23/07/2018
என்ன வேண்டும் தருகிறேன்: லஞ்சம் வாங்காதீர்கள்: எஸ்.பி., உருக்கம்...
லஞ்சம் மட்டும் வாங்காதீர்கள். அது மிகவும் அவமானமான ஒரு செயல்,'' என, திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
விதிகளுக்கு புறம்பாக கூடுதல் மணல் ஏற்றி வரும் லாரிகளுக்கு, போலீசார் அபராதம் விதிக்கின்றனர். போலீசாரின் சட்டப்பூர்வமான அபராத நடவடிக்கைக்கு எதிராக, மணல் உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், துணிச்சலாக "மாமூல்' பெற்றுக்கொண்டு, மணல் லாரியை அனுமதித்த, மடத்துக்குளம் எஸ்.ஐ., மணிமாறனை "சஸ்பெண்ட்' செய்து, திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க், நேற்று உத்தரவிட்டார்.கடந்த 9ம் தேதி, பகல் 12.30 மணியளவில், தாராபுரம் - உடுமலை ரோட்டில், காரத்தொழுவு அருகே, மாரிமுத்து என்பவரது லாரி, அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் சென்றுள்ளது. மடத்துக்குளம் எஸ்.ஐ., மணிமாறன், காரத்தொழுவில் மணல் லாரியை பிடித்துள்ளார். ஒன்பது ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, மிரட்டியுள்ளார்.
லாரி உரிமையாளர் பேரம் பேசி, நான்கு ஆயிரம் ரூபாயை, எஸ்.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, லாரியை எடுத்துச் சென்றுள்ளார். இத்தகவல், எஸ்.பி.,க்கு கிடைத்தது. ரகசியமாக விசாரிக்க, தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்படி, சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோரை போலீசார் தேடி, கண்டுபிடித்தனர். அவர்களிடம் எஸ்.பி., நேரடியாக விசாரணை நடத்தினார். இதில், எஸ்.ஐ., லஞ்சம் பெற்றுக்கொண்டு, லாரியை அனுமதித்தது உறுதியானது. அதையடுத்து, எஸ்.ஐ., மணிமாறன், நேற்று "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
"லஞ்சம் வாங்காதீர்!':எஸ்.ஐ., மணிமாறன் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டது தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் தெரிந்து கொள்ளும் வகையில், எஸ்.பி., ஆஸ்ரா கர்க், மைக்கில் பேசினார்.
அப்போது, ""போலீசார், தங்கள் பொறுப்பை உணர்ந்து, கடமையை சரியாக செய்தால் போதும். உங்களுக்கு, பணப்பயன் ஏதும் வரவில்லையா; பணியில் சிரமம் உள்ளதா; விடுப்பு வேண்டுமா அல்லது சொந்த ஊரில் குடும்பத்துடன் வசிக்க, "டிரான்ஸ்பர்' வேண்டுமா, தருகிறேன். ஆனால், லஞ்சம் மட்டும் வாங்காதீர்கள். அது மிகவும் அவமானமான ஒரு செயல்,'' என, உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்...
எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?
எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப் போட்டு விடும்.
எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.
எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.
நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.
எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க சில வழிகள்.
1. தியானம் : தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2. புன்னகை : கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகி விடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
3. நண்பர்கள் : முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.
4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல் : சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.
5. குறைகூறாதீர்கள் : உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.
6. உதவுங்கள் : எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது : தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
8. பாடுங்கள் : உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.
9. நன்றி கூறுங்கள் : நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.
10. நல்லதை படியுங்கள் : தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்...
நடுவழியில் நின்ற மின்சார ரயில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்ணை கீழே இறங்க உதவிய காவலர்கள்....
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது. பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா, கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்தார். இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர், அமுதா கீழே இறங்க உதவி செய்தனர். ரயிலின் நுழைவு வாயிலில் இரு காவலர்களும் படிக்கட்டு போல குனிந்து நின்றனர். கர்ப்பிணி பெண் அமுதா, அவர்களின் முதுகின் மீது கால் வைத்து கீழே இறங்கினார். இதேபோல், முதியவர்கள் கீழே இறங்கவும் காவலர்கள் உதவி செய்தனர். காவலர்களின் மனித நேயத்துக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
காவலர்களின் கருணை உள்ளத்திற்கு வாழ்த்துகள்...
ஐந்து வகையான அணிகலன்கள், ஐம்பெருங்காப்பியங்கள்...
சிலப்பதிகாரம்:
சிலம்பு என்பது மகளிர்அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு (முதலாம் நூற்றாண்டு).
மணிமேகலை:
ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இக்காவியம் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும்.
இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. (ஐந்தாம் நூற்றாண்டு).
குண்டலகேசி:
குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல்அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல். (ஐந்தாம் நூற்றாண்டு).
வளையாபதி:
வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல். (ஒன்பதாம் நூற்றாண்டு)
சீவகசிந்தாமணி:
சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும்.
மணிக்கல் - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு. (பத்தாம் நூற்றாண்டு)...
எதற்காக அக்காலத்தில் தமிழர்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை பேணிப் பாதுகாத்து வாழ்ந்தனர்?
கூட்டு குடும்பம் சொர்க்கம். ஏன்?
மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.
மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.
பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.
பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
தங்கைக்காக எதையும் விட்டுகொடுப்பது அண்ணனின் பாசம்.
அண்ணனின் தவறுக்கு தாயியிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.
தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.
வாழ்க்கையை சொர்க்கமாக வாழக் கூடுக்குடும்பமே சிறந்தது....
அதனால் தான் தமிழர்கள் கூட்டுகுடும்ப வாழ்க்கையை பெரிதும் போற்றிப் பேணிக்காத்தனர்...
குண்டலினி யோகம்...
எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்...
காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம்...
புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும்..
ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு.
அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்..
மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள்.
அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது.
உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது.
அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது.
பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது.
இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.
ஆக்கினை சக்கரம் : உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.
அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.
ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.
புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.
தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.
தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும்.
மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும்.
ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்...
சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...
யோகா முத்திரைகள்...
முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த “பஞ்ச மஹாபூதங்கள்” ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும்.
இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன...
1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை...
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில...
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை...
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்...
ரெண்டு நாளைக்கு முன்னாடி ரிசர் பேங்க் சாம்பிளா விட்டபுதிய புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளைவிட சிறியதாக இருக்கும் என்பதால், அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப நாடு முழுவதும் 2.4 லட்சம் ஏடிஎம்களில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை உள்ளது...
இதற்கு 12 மாதங்கள் வரை ஆகும் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். புதிய 100 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களை மாற்றியமைத்து விட்டால், பழைய 100 ரூபாய் நோட்டுகளை அவற்றின் மூலம் விநியோகிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள ஆகும் செலவு 100 கோடி ரூபாய் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்...
இஸ்ரேல் - மொஸாத் - 1...
1939ல் உருவான மொஸாத்தான் படிப்படியாக திட்டங்களை தீட்டி கனகச்சிதமாக 1948ல் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது.
அது எப்படி நடந்திருக்கும்.? பார்ப்போம் வாருங்கள்.
1929ல் உலகிலுள்ள யூதர்கள் பெரும்பாலோர் ஒன்றுகூடி "முதலாம் உலக யூதர்கள் மாநாட்டை"நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட பெரும்பாண்மையான யூதர்கள் "ஜெர்மன்" நாட்டை சேர்ந்தவர்கள்.
அதில் முக்கிய தீர்மானம் "யூதர்களுக்கு தனி நாடு "என்பது தான்..
அதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்கள் அதன் பெயர் "ஹாகானா இயக்கம்".
அதன் முக்கிய நோக்கம் ஜெருசலேத்தை தலைநகராக கொண்டு இஸ்ரேலை உருவாக்குவது..
அந்த நாட்டை மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீனில் அமைக்க திட்டம் தீட்டினார்கள்..
அன்றைய காலத்தில் பாலஸ்தீன், ஜெரூசலம் ஆங்கிலேயர் கையில் இருந்தது..
இப்போதுதான் உளவாளிகள் ஆட்டம் ஆரம்பமானது.
ஆங்கிலேயேரின் அரியனை வரை ஊடுருவினாலதான் தாங்கள் நினைத்ததை சாதிக்க இயலும் என அறிந்த அவர்கள் அதற்கான காய் நகர்த்தலை தொடங்கினர்.
ஹாகானா இயக்கத்தை சேர்ந்த யூதர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் ஊடுருவினார்கள்.
சதிகள்,கீழறுப்பு சூழ்ச்சிகள் மூலமாக இராணுவ உயர்பதவிகளை அடைந்தார்கள்..
இப்போது அப்படியே இந்தியாவில் நடப்பவை பற்றி சிந்தியுங்கள்..
இராணுவத்தில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்.
நீதிபதிகளில் உயர் பதவியில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்.
இப்படி எல்லா துறையையும் உற்று நோக்குங்கள்.
நான் இங்கே இதை குறிப்பிட காரணம் உண்டு காரணம் ரா மற்றும் மொஸாத் ஆகிய உளவு அமைப்பு இணைந்தே சதி திட்டங்கள் இங்கு அரங்கேறி வருகிறது.
காத்திருங்கள் அடுத்த பதிவில்
அவர்கள் நாட்டை அடைந்த விதத்தை கூறுகிறேன்...
சாத்தானுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட 600 மனித உயிர்கள்...
ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்தாள்ளார்..
நரபலிக்காக சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறுவர்களை வழங்கியதாக மதபோதகர் தெரிவித்துள்ளார். முகமூடி அணிந்து வீடியோவில் அந்த மத போதகர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்ததாகவும், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்..இது கானாவில் எந்த பகுதியில், எப்போது நடந்தது என்ற தகவல்களையும் வெளியிட மறுத்துள்ளார். தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்...
தமிழீழ கருத்தியல் பாடம்...
இந்திரா காந்தி அம்மையார் இருந்தவரை அனைத்தும் நன்றாகவே நடந்துள்ளது...
தமிழீழத்தில் நடந்த இரு இனங்களுக்கான பிரச்சனையில் தமீழீழத்திற்கே இந்தியா துணை நின்றுள்ளது..
இந்திரா காந்தி இறப்பிற்குப் பின்னரே இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்கிறது அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது..
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி?
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வி.கே.தஹில் ரமணியை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜிக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக விஜய கமலேஷ் தஹில் ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது வி.கே.தஹில்ரமணி மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி. தற்போது, மும்பை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இடம் காலியாக உள்ளதால் அந்த பொறுப்பையும் வி.கே.தஹில் ரமணி வகித்து வருகிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 1958-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தஹில் ரமணி பிறந்தார். 1982-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து, மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் சிறந்து விளங்கிய இவர்,
அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றிய காலகட்டத்தில், மும்பை கே.சி.சட்டக் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் 1990-ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றத்தில் உதவி அரசு வழக்குரைஞராகவும் , கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராகவும் பதவி வகித்துள்ளார். மேல்முறையீட்டு வழக்குகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற இவர், கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சுமார் 17 ஆண்டுகள் நீதிபதியாக அனுபவம் பெற்ற வி.கே.தஹில்ரமணியை, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்த அறிவிப்பை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்...
இவர்களை போல்தான் நாம் அனைவரும் ஒரு காலத்தில் வாழ்ந்தோம்...
இவர்களின் வாழ்க்கை மெய்யியல் இதுவரை எங்கும் ஆவண படுத்த வில்லை.
அவர்களின் எச்சங்களே கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள்.
இதுவரை மதங்கள் என்றாலே என்னவென்றே தெரியாது நமது கிராமங்களில் வாழும் வயதான மக்களுக்கு.
இங்கு மனிதனின் பிறப்பே இயற்கையுடன் சேர்ந்து வாழத்தான்.
நீங்கள் கூறலாம் இவர்களை போல் ஆடை அணிந்து வாழ வேண்டுமா என்று.
அவர்களை போல் வாழ வேண்டாம் இயற்கையுடன் இனைந்து வாழ்ந்தாலே போதும்.
நாகரீகம் உச்சம் அடைந்த எந்த நிலமும் மனிதனும் இதுவரை மண்ணில் புதைந்து போனதே உண்மை.
நான் ( நாங்கள்) இந்த இயங்கியலில் பயணம் செய்வதை நிறுத்தி விட்டாலும்.
இந்த இயங்கியல் இவர்களை போல் வாழும் மக்களால் உயிர் பெறும்.
உங்கள் பாதை மதம்தான் பெரியது என்று கிணத்து தவளையாக இருந்தால் உங்கள் ( நமது தலைமுறையினர்) அழிவை யாராலும் தடுக்க முடியாது.
எச்சரிக்கை...
ஜூலை 23 வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத நாள்...
திருநெல்வேலி மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அரச வன்கொடுமைக்கு பலியான 17 போராளிளின் நினைவு தினம்..
1998 ஆம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர். தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் முன்னெடுத்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்றனர்.
இதனை அறிந்த அதிகாரத்தை கொண்டிருந்த காட்டுமிராண்டி காவல் துறை அப்பாவிமக்களை கண்மூடி தனமாக தாக்கி பேரணியை கலைத்தனர், தடியடியில் உயிரை பாதுகாத்துகொள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கினார்கள் இதனை அறிந்த காவல்துறை அங்கு சென்று அவர்களை வெளியேரவிடாமல் தடுத்தது, அதில் கைகுழந்தையுடன் இருந்த பெண்மணி தான் இறந்தாலும் தன் பிள்ளை பிழைக்க வேண்டும் என்று தனது கைகுழந்தையை கரையை நோக்கி வீச அதை கண்ட காவல் துறை அந்த பச்சிளம் குழந்தையையும் விடாமல் குழந்தையை ஆற்றிலே தூக்கி வீசி தனது சாதி திமிரை காட்டியது.
இந்த அரச வன்கொடுமையில் பலியான 17 பேரும் பட்டியல் வகுப்பை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது, மேலும் இந்த கோர அடக்குமுறை சம்பவம் 1999 ஆம் ஆண்டு நிகழ்ந்தது அப்போது திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் அவா்களை அனுப்பி ஆய்வு செய்து கலவரம் என்று கூறி ஆற்றில் மூழ்கிதான் இறந்தனா் என தனது சமூக நீதியை நிலைநாட்டியது அயோக்கிய மக்கள் விரோத கருணாநிதி அரசு.
அரச வன்கொடுமைக்கு பலியான போராளிகளிகளின் நினைவு தினம் இன்று...
இலுமினாட்டி களும் சின்னங்களும்...
இரு சிங்கங்கள் காலைத் தூக்கிக்கொண்டு நிற்கும் அந்த இடைவெளிக்குள் இருக்கும் எந்தவொரு பொருளாயினும் அதற்கு "சால்" என்று பெயர்.
இந்த "சால்" -க்கு பல அர்த்தங்கள் உண்டு.
அதை அசோகச் சக்கரம்ன்னு சொல்லுவானுங்க, நீரில் மிதக்கும் தாமரையின் மேலுள்ள பெண்ணின் தீட்டு இரத்தம் என்றும் சொல்லுவானுங்க, முருகன் என்றும் சொல்லுவானுங்க, கேடயம் என்றும் சொல்லுவானுங்க ஆனா எல்லாமே ஒன்னுதான்.
இதைத்தான் சிலம்பில்...
"உரைசால் பத்தினியை
உயர்ந்தோர் ஏற்றுவர்"...
என்பார்கள். இதில் வரும் "உரைசால்" என்பதுதான் மிக முக்கியமானது.
வணிகர்கள் பயணம் செய்வதற்காகவே போடப்பட்டதுதான் "சாலை". இதுவும் "சால்" என்ற சொல்லில் இருந்தே வரும்.
நகரத்தார்களின் கோட்டையாகக் கருதப்படும் நார்த்தாமலை (நகரத்தார் மலை) மற்றும் சித்தண்ண வாயிலில் இன்று வரை வசித்து வரும் ஜைன மதத்தின் புதுகிளையான மதத்தைக் கடைபிடித்து வருபவர்களுக்கு "சாலையார்" என்று பெயர். இதுவும் அதுவே. இது அப்படியே போய்கிட்டே இருக்கும்...
Subscribe to:
Posts (Atom)