திருநெல்வேலி மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அரச வன்கொடுமைக்கு பலியான 17 போராளிளின் நினைவு தினம்..
1998 ஆம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர். தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் முன்னெடுத்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்றனர்.
இதனை அறிந்த அதிகாரத்தை கொண்டிருந்த காட்டுமிராண்டி காவல் துறை அப்பாவிமக்களை கண்மூடி தனமாக தாக்கி பேரணியை கலைத்தனர், தடியடியில் உயிரை பாதுகாத்துகொள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கினார்கள் இதனை அறிந்த காவல்துறை அங்கு சென்று அவர்களை வெளியேரவிடாமல் தடுத்தது, அதில் கைகுழந்தையுடன் இருந்த பெண்மணி தான் இறந்தாலும் தன் பிள்ளை பிழைக்க வேண்டும் என்று தனது கைகுழந்தையை கரையை நோக்கி வீச அதை கண்ட காவல் துறை அந்த பச்சிளம் குழந்தையையும் விடாமல் குழந்தையை ஆற்றிலே தூக்கி வீசி தனது சாதி திமிரை காட்டியது.
இந்த அரச வன்கொடுமையில் பலியான 17 பேரும் பட்டியல் வகுப்பை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது, மேலும் இந்த கோர அடக்குமுறை சம்பவம் 1999 ஆம் ஆண்டு நிகழ்ந்தது அப்போது திமுக ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் அவா்களை அனுப்பி ஆய்வு செய்து கலவரம் என்று கூறி ஆற்றில் மூழ்கிதான் இறந்தனா் என தனது சமூக நீதியை நிலைநாட்டியது அயோக்கிய மக்கள் விரோத கருணாநிதி அரசு.
அரச வன்கொடுமைக்கு பலியான போராளிகளிகளின் நினைவு தினம் இன்று...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.