23/11/2017

திராவிட பகுத்தறிவு முகத்திரை கிழிக்கப்படும்...


ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்...

மூடநம்பிக்கை...

வீரமணி கூறுகிறார்:

கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டும்.. (விடுதலை 20-7-1997).

இதில் வரும் ‘பேய்‘ என்பது என்ன?

ஆத்திகர்கள் தான் ‘பேயை’ நம்புவார்கள். நாத்திகர்கள் – பகுத்தறிவாளர்கள் நம்பமாட்டார்கள்..

ஆனால் நாத்திகரான – பகுத்தறிவாளரான – வீரமணி என்ன சொல்கிறார்?

பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டுமாம். ‘பேய்’ என்ற ஒன்று இருப்பதை நம்பித்தானே பேயோடு பகையை ஒப்பிடுகிறார்!

அப்படியானால் ‘பேய்’ என்பது இருக்கிறதா? ‘பேயி’ன் இலக்கணம் என்ன? என்று கேட்ட வீரமணிகளுக்கு – அதே கேள்வியை இப்பொழுது ஆத்திகர்கள் கேட்கிறார்கள்..

வீரமணியின் பதில் என்ன?

இலுமினாட்டி களை எதிர்த்த தமிழர்கள்...


இலுமினாட்டிகளை பற்றி பல இணையத்தளங்கள் மற்றும் ஒலி ஒளி படங்கள் ஆங்கிலத்தில் உள்ளது..

இவர்களை பற்றி பலர் மேடைகளிலும் பேசியிருக்கிறார்கள்..

இதனால் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்..

ஆனால் இந்தியாவில் இவர்களை பற்றி பேசியவர்கள் மிகவும் குறைவு.

நம் தமிழகத்திலும் இவர்களை பற்றி பேசியவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் தான் இயற்கை விவசாயம் சொல்லிக் கொடுத்த நம்மாழ்வார் அவர்கள்.

பலர் தற்கால மேலை நாட்டு அறிவியல் முறைகள் வந்த பின் தான் விவசாயம் செழித்துள்ளதாகவும் சாகுபடி அதிகரித்துள்ளதாகவும் எண்ணிக் கொண்டு இருக்குறோம்.

இது உண்மை இல்லை..

எந்த துறையாக இருந்தாலும் இலுமிணாட்டிகள் அதை பற்றிய அறிவை மக்களிடம் இருந்து அழிப்பார்கள்..

பின் தாங்கள் கண்டு பிடித்ததாக கூறி புதிய முறைகளை அறிமுகப்படுத்தி அதிகாரமும் செல்வமும் பெறுவார்கள்.

எனவே கல்வி துறையையும் நம்பாதீர்கள்..

நான் எழுத வந்தது வேறு..

தமிழகத்தில் மேலும் ஒருவர் அவர்களை பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்.

அவர் பெயர் பாஸ்கர் Healer Baskar. இவர் மேலும் அலோபதி மருத்துவத்தின் போலி தன்மையை தோல் உரிக்கிறார்.

இவர் பல கருத்தரங்குகளை தமிழ் நாட்டிலும் இன்னும் சில நாடுகளில் நிகழ்த்தி வருகிறார்...

சாப்ளினின் மௌன சிரிப்பை தடை செய்த அமெரிக்கா... எத்தனை பேருக்கு தெரியும் இதன் காரணம்...


சிரிப்பு என்பது யாராலும் சீக்கிரம் அதை செய்து பிறரை மகிழ்விப்பது கடினம்.

சிலரின் வாய் ஜாலத்தாலும் நடிப்பினாலும் சிரிக்க வைக்கலாம்.

பேசாமல் இருந்து மற்றவரை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க ஒருவரால் தான் முடியும்..

அவர் வேறு யாரும் இல்லை பகைவரையும் தம் மௌனமும் ஆட்டுவிக்க முடியும் என நிரூபித்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின் தான்..

தம்முடைய நடை முகபாவனை சுறுசுறுப்பு போன்றவற்றைக் கொண்டு பிறரை மகிழ்வித்தவர் சாப்ளின்.

அவர் தம் சிறு வயதிலிருந்தே அனைவரையும் சிரிக்க வைத்தவர்.

அந்தப் பெரும் கலைஞனை அமெரிக்கா தன் நாட்டுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுத்த தினம் செப்டம்பர் 19.

அமெரிக்கா தடை செய்தது ஏன்?

தம் விளம்பர படம் ‘லைம்லைட்’ ற்க்காக ப்ரிட்டன் சென்று திரும்பிய அவரை அமெரிக்கா விசாரணையின்றி நுழையவிடாமல் தடுத்தது.

40 ஆண்டுகாலமாக அமெரிக்க குடியுரிமை பெறாமல் இருந்ததே அதன் காரணம்.

மேலும் தம் படத்தினால் கம்யூனிஸத்தை பரப்ப முயன்றாரும் கூறப்பட்டது.

ஆனால் அவரின் ரசிகர்கள் அதை மனிதநேயம், சமத்துவம் போன்றவற்றிற்க்கே குரல் கொடுத்தார் என்றனர்.

தி கிரேட் டிக்டேட்டர் என்கிற தன் படத்தின் வழியாக அதுவரை தான் ஏற்றிருந்த நகைச்சுவையாளர் என்கிற பிம்பத்தை உடைத்து மக்களைச் சிந்திக்கச் செய்யும் வகையில் வசனங்களை அந்தப் படத்தில் ஆங்காங்கே திணித்திருந்தார்.

அமெரிக்கா புறக்கணித்த சாப்ளினை பிரிட்டன் இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டது.

அதன் பிறகு, தனது இறுதிக்காலம் முடிய பிரிட்டனிலேயே கழித்தார் சாப்ளின்.

அவரை, எந்த வகையிலும் விசாரிக்காமல் புறந்தள்ளியது ஒருவேளை, அமெரிக்காவை சங்கடப்படுத்தியிருக்கலாம்.

தன் நாட்டுக் குடிமகன் இல்லை என்று தான் ஒதுக்கிய சாப்ளினை 20 வருடங்கள் கழித்து, அதாவது, 1972-ல் மீண்டும் அவரை அழைத்து, அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கி கெளரவித்தது.

தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய அமெரிக்காவிடம் அவருக்கு பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை, கண்ணீரைத் தவிர.

ஆனால், அங்கே பார்வையாளர்களில் குழுமியிருந்த அனைவரும் சுமார் 12 நிமிடங்கள் அவருக்காக எழுந்து நின்று கெளரவித்தனர்.

அமெரிக்க ஆஸ்கார் வரலாற்றில் எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைத்த நீண்ட நிமிட கெளரவம் இன்றுவரை அதுவே...

பாஜக பத்தர்களின் கவனத்திற்கு...



அலங்கு நாய்...(தமிழ் நாட்டு நாய்கள்)...


தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய்..

தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள்..

சோழர்களின் படைகளில் இவைகள் காவல்,மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது….

தற்ப்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது…

நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்பட வேண்டும்….

தற்ப்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ்த்தேசிய மக்கள் வளர்க்க வேண்டும்…

நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்..

தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது..

உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெசுமாண்ட் மோரிசு எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும் போது இப்படம் அலங்கு நாய் தான் என்பது உறுதியாகிறது..

கோயிலின் உட்பிரகாரத்தில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது..

தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அலங்கு.

வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை என்று நாய்கள்குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds) டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்.

தி நேக்கட் ஏப் (The Naked Ape: A Zoologist’s Study of the Human Animal) என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெசுமாண்ட் மோரிசு தான்..

இன்று பேருக்குக் கூட ஒரு அலங்கு கிடையாது..


வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், தமிழர்களின் நாய் இனங்களை உதாசீனம் செய்ததால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்களே மெதுவாக அழிந்து போயின..

அவற்றில் முக்கியமானது அலங்கு..

அந்த இனத்தைப் பார்த்த வெகுசிலரே உள்ளனர்..

ஏற்கெனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் வடுக வந்தேறிகளான நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்களைத் தீட்டிவிட்டார்கள்.

தமிழரின் வரலாறு திட்டமிட்டு தமிழனிடமிருந்து மறைக்கப்பட்டு தமிழர்களை அழித்தனர்..

இந்த வகை நாயின் உடலமைப்பு குறித்து விளக்கும் டெசுமாண்ட் மோரிசு...

இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல கட்டுமசுதான, சதைப்பிடிப்பு கொண்ட கால்களை உடையது மற்றும் இதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையைக் கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்..

இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்தியபடியும் நிற்கிறது.

அலங்கு வகை நாயின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும்.

நடக்கும்போது நீட்டித் தனது எட்டுகளை எடுத்துவைத்து நடக்கும்.

இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில் காணப்படும்.

சில நாய்களின் மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான நாய்களின் முகம் கருப்பாக இருக்கும்.

எந்த நிறமாக இருந்தாலும் முடியே இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர்.

தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை நாய் கோம்பை...

ராசபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய மூன்று நாய் இனங்களும் அழிவில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், அலங்கு வகை நாயினம் முற்றிலும் அழிந்தே போனது..

அதே போல் செங்கோட்டை நாய் என்ற இனம் குறித்தும் டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்..

இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாட வல்லவை..

இப்படி வேட்டையாடும் போது, அவை தங்கள் உயிரை இழப்பதும் உண்டு..

செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெசுமாண்ட் மோரிசு...

இன்டர்நெட்...



இன்டர்நெட் (internet) என்னும் சொல், 1882 ஆம் ஆண்டிலேயே புழங்கப்பட்டது..

ஒன்றோடொன்று இணைந்த, இணைக்கப்பட்ட செயல்பாடுகள்..

என்பதனைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது..

பின், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1982ல், உலகளாவிய டி.சி.பி/ஐ.பி. நெட்வொர்க் இணைப்பினைக் குறிக்க இது பயன்பட்டது...

ஒரு வருடமாக சம்பளம் கிடைக்காததால், தலைமையாசிரியர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி...


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பள்ளத்தூர் அழகம்மை ஆட்சி தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக புஷ்பநாதன். இவருக்கும் அப்பள்ளியின் தாளாளருக்கும் இடையே நீண்ட நாள்களாகப் பள்ளியின் உரிமை யாருக்கு என்கிற உரிமைப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக இவருக்கு கடந்த ஒரு வருடமாக சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள், இதனால், தனது குடும்பச்செலவுக்கும், பிள்ளைகளின் படிப்பு செலவுக்கும் மிகவும் திண்டாடியுள்ளார்.

இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், இயக்குநர், மாவட்டக் கல்வி அதிகாரி, தொடக்க கல்வி அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை அனுப்பியும் நியாயம் கிடைக்காததால், மனம் வெறுத்து போய், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். உடனடியாக போலீஸார் காப்பாற்றி, விசாரணை நடத்தி வருகிறார்கள்...

இலுமினாட்டி களும் கோகினூர் வைரமும்...


கோகினூர் வைரம் கதை எல்லாரும் கேள்வி பட்டிருப்பீர்கள்...

இந்த வைரம் விலை மதிப்பற்றது..

இந்த வைரத்துக்காகவே இந்தியா மேல பல படையெடுப்புகள் நடந்திருக்கு..

எல்லாருக்கும் இப்போ அந்த வைரம் எலிசபெத் என்ற எரும மாட்டு கிட்ட இருக்குனு தெரியும்..

இது வரை தெரிந்த கதை. இனி தெரியாத கதை..

இலுமிணாட்டிகளுக்கும் கோகினூர் வைரத்துக்கும் என்ன சம்பந்தம்.?

இருக்கு நிறைய சம்மந்தம் இருக்கு..

பிரிட்டிஸ் நாடு நம்மை அடிமை படுத்தவில்லை அது ஒரு கம்பேனி என்று முன்பே சொன்னேன்..

இதோட உரிமையாளன் ரோத்ஸ்சைல்ட். இந்த பக்கிக்கும் எலிசபெத்க்கும் என்ன சம்மந்தம்..

இருவர் குடும்பமும் சம்மந்தம் பண்ணிக்கிச்சி அது தான் சம்மந்தம்.

இப்போ ரோத்ஸ்சைல்ட் குடும்பமும் அரச குடும்பமும் ஒன்னுக்குள்ள ஒன்னு.

இப்போ இந்த கேவளமான அரச குடும்பத்துக்கு ஒரு இரகசிய கதை இருக்கு பிறகு சொல்றேன்..

இப்போ வைரத்துக்கு வருவோம்..

அந்த வைரம் வெறும் அழகு பொருள் அல்ல..

இந்த வைரம் ஓர் துறவிக்கு சொந்தமானது..

அந்த வைரத்தில் ஒரு இரகசியம் இருக்கிறது..

அது ஓர் நினைவு பதிவு..

அந்த நினைவை அடைவதற்கு தான் இத்தனை சண்டையும்..

இந்த அரச குடும்பம் இதை வைத்து என்ன செய்யும் என்று நினைக்றீங்களா?

இலுமிணாட்டிகளோட அரசியே இந்த எலிசபெத் எரும மாடு தான்..

ஆனால் இது வரைக்கும் அவர்களால் அந்த நினைவு பதிவை வாசிக்க முடிய வில்லை..

அதை வாசிக்க கூடியவர்கள் தற்போது இல்லை என்றே தோன்றுகிறது...

குடிநோய் (Alcoholism) பற்றி தெரியுமா?


குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும்...

அதன் முக்கிய அடையாளங்கள்..

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.

குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...?

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று.

நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக
உள்ளது.

போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள்.

இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்து விடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன..

மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?

சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் குறுகியகால
விளைவுகள் மக்களை வெகுவாக ஈர்த்து விடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை
ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்..

குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் தவறான கருத்துக்கள் எவை?

1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்...

அமெரிக்காவின் சூழ்ச்சி கோங்கோ மக்கள் மீது...

லிபியா அதிபர் கடாபியாக இருக்கட்டும். ஈராக் அதிபர் சதாம் ஹுஸேனாக இருக்கட்டும் இது இரண்டுமே வேறொரு நாடு.

இங்கு உள்ளே புகுந்து அந்த அதிபரை கொலை செய்ய அமெரிக்காவால் எப்படி முடிந்தது ?

இதற்கு காரணம் அங்குள்ள செல்வங்கள் என்பது முட்டாளுக்கு கூட தெரியும் ...

அப்படி இருக்கும் தருவாயில் அருகே உள்ள நாடுகள் அமெரிக்காவை ஏன் எச்சரிக்கவில்லை தெரியுமா ?

அமெரிக்காவிடம் ஒரு பழக்கம் உண்டு தாம் குறி வைத்துள்ள செல்வ செழிப்பான நாட்டை அருகே உள்ள பெரிய நாட்டுடன் சண்டையை மூட்டி பிரித்து.. ஏறக்குறைய விடுதலை பெற்று அவர்களை சுதந்திரமாக சில காலம் இருக்க விட்டு திடீரென்று பாய்வது..

ஏறக்குறைய நன்றாக தீவனம் போட்டு வளர்த்து ஒரு நாள் அறுத்து சாப்பிடுவது போன்று..

இதை இப்பொழுது தான் அமெரிக்க செய்து கொண்டுள்ளது என்று நினைக்க வேண்டாம்..

1960 பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காங்கோ மக்கள் அம்மக்களில் சிறப்பான ஒரு தலைவரை தமது சுதந்திர நாட்டின் ஜனாதிபதியாக தேர்தெடுத்தார்கள் அவரின் பெயர் லுலும்பா.

போராட்டம் மக்களின் விடுதலைக்காக போராடிய இவரை ஆட்சியில் வைத்ததால் காங்கோ மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள்.

திடீரென்று புரட்சியை உருவாக்கி நாங்கள் காங்கோ மக்களை காப்பாற்ற போகிறோம் என்று குதித்த அமெரிக்க அதற்க்கு தமது அன்பான பேச்சு திறமையால் முட்டுக்கட்டையாக இருந்த  காங்கோ ஜனாதிபதி லுலும்பா வை விஷம் கொடுத்து கொலை செய்ய சொன்னார்கள்..

செய்ய சொன்னது யார் தெரியுமா ?

1961 அமெரிக்க அதிபரான டிவைட் ஈசன் ஹோவேர் என்பவன்...

அதாவது ஜான் f கென்னடிக்கு முன்னதாக ஆட்சியில் இருந்தவர் தான் இவர்..


லுலும்பா கொங்கோ நாட்டு ஆட்சித் தலைவராக..


அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு கொலை செய்வதற்கு முன்...

நீண்ட காலம் தூங்கும் நத்தை...


நத்தை, முதுகெலும்பற்ற ஓர் உயிரினமாகும்..

நிலம், நன்னீர் நிலைகள் மற்றும் கடலில் இவை வாழ்கின்றன.

ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நத்தை இனங்கள் பூமியில் வாழ்கின்றன.

ஈரப்பதம் கொண்ட உடலின் மூலம் மிகக்கடினமான இடங்களிலும் எளிதில் செல்லும் திறன் கொண்டது.

ஆபத்துக் காலங்களில் உடலினை, முதுகில் இருக்கும் ஓட்டினுள் இழுத்துக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டவை.

சில நத்தையினங்கள் நீண்டகாலம் தூங்கும் ஆற்றல் கொண்டது.

கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள இவை நீண்ட காலம் தூங்குகின்றன.

உலகிலேயே மிகவும் மெதுவாக செல்லக் கூடிய வகையில் படைக்கப்பட்டுள்ள நத்தைகள், சராசரியாக வினாடிக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்து செல்லும்.

இந்த இனங்களில், இரு பாலினமும் இனப்பெருக்க உறுப்புகளை கொண்டிருக்கின்றன.

நத்தை இனங்கள் அவைகளின் வாழ்விடத்திற்கேற்ப 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன.

இரவில் சுறுசுறுப்புடன் இருக்கும் நத்தைக்கு கேட்கும் திறன் கிடையாது.

சில சென்டி மீட்டர் முதல் 12 இன்ச் வரை வளரும் திறன் கொண்ட நத்தை, தன்னுடைய உடல் எடையை விட 10 மடங்கு பெரிய பொருட்களைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது...

அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை பயன்களா..?


சாதரணமாக அனைவரின் வீட்டிலும் உணவு சமைக்கும் போது, அரிசியை கழுவி தான் சமைப்பார்கள்..

ஆனால் அரிசி கழுவிய நீரை பொருட்படுத்தாமல் கீழே ஊற்றி விடுவார்கள்..

அதன் பயன் தெரிந்தால் இனி யாரும் கிழே ஊற்ற மாட்டார்கள்..

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம்.

சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு அதை சுட வைத்து அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றவும்.

உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.

இதனால் விரைவாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும்.

அவை இன்றும் கிராம புறங்களில் பின்பற்றி வருகின்றனர்.

அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்..

பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும்.

வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும்.

இவ்வாறு செய்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவு பெரும்.

ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.

தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும் போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும்...

இதை உங்களால் மறுக்க முடியுமா?


முருகன் என்றால் அழகு... அழகன் என்றால் முருகன்... இந்த அழகனின் மற்ற பெயர்கள் தெரியுமா.?


1. ஆறுமுகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

2. குகன் - குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்..

3. குமரன் - மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.

4. முருகன் - முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

5. குருபரன் -  கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

6. காங்கேயன் - கங்கையின் மைந்தன்.

7. கார்த்திகேயன் -  கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

8. கந்தன் -  கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

9. கடம்பன் -  கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

10. சரவணபவன் - சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

11. ஸ்வாமி -  ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

12. சுரேஷன் -  தேவர் தலைவன் சுரேசன்.

13. செவ்வேள் -  செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

14. சேந்தன் -  செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

15. சேயோன் -  சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.

16. விசாகன் - விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

17. வேலவன், வேலன் - வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

18. முத்தையன் - பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

19. சோமாஸ்கந்தன் - ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

20. சுப்ரமணியன் - சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

21. வள்ளற்பெருமான் - முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞான சக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

22. ஆறுபடை வீடுடையோன் - மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

23. மயில்வாகனன் -  மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்...

மனக்காயங்களுக்கு பின்னான உளவியல் சிக்கல்கள்...


POST TRAUMATIC STRESS DISORDER...

அமெரிக்க மனோவைத்தியர்களின் கூட்டமைப்பின் கருத்துப்படி, அதீத பய உணர்வையும் கொடூரத்தையும் , ஒன்றுமே செய்யமுடியவில்லையே என்கிற பரிதவிப்பையும் ஏற்படுத்தி, ஆழமான மனக்காயத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகிற ஒரு சம்பவத்துக்கு முகங்கொடுக்க நேரிடும் ஒருவரில் உளக்காயத்துக்கு பின்னான உளநெருக்கீட்டுச்சிக்கல் எனப்படும்.

post traumatic stress disorder- PTSD,

ஒரு மனநிலை/நோய் நிலை ஏற்படுகிறது.

இப்படி மனக்காயத்தை உண்டு பண்ணும் சம்பவங்கள்..

1. யுத்தம்.

2. சித்திரவதை.

3. பாலியல் வன்முறை,வன்புணர்வு.

4. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்கள் மீதான வன்முறை.

5. கடத்தப்படுதல்.

6. பயங்கரவாதம்.

7. இயற்கை அனர்த்தங்கள் (தீ, சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி)..

8. பெரும் வாகன விபத்துக்களில் அகப்படுதல்..

9. உயிர்க்கொல்லி நோய் (கான்சர் போன்ற நோய்) தனக்கு ஏற்பட்டிருப்பதை அறிதல்..

10. கொலை,தற்கொலை உயிரிழப்பு சம்பவங்களை நேரில் பார்த்தல்..

இந்தச்சம்பவங்கள் பின்வருவோரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி PTSD ஆக மாற்றமடையும் வாய்ப்பு அதிகம்:

1.ஏற்கனவே இளம் வயதில் இப்படியான சம்பவங்களால் பாதிப்புற்றவர்கள்.

2. ஏற்கனவே மனநிலை/மனநோய்ச்சிக்கல் உடையவர்கள்.

3. கல்வியறிவு குறைந்தவர்கள்.

4. இளம்பராயத்தினர்.

5. பெண்கள்.

6. சமுக உறவு /ஆதரவு இல்லாதவர்.

7. அண்மைய மனதை நெருக்கும் வாழ்க்கை மாற்றங்கள்..

இவர்களில் பின்வரும் இயல்புகள் தென்படும்:

1. மனத்தை வாட்டமடையச் செய்யும் எண்ணங்களும், மனக்காட்சிகளும் தோன்றிக்கொண்டே இருக்கும்.

2. சம்பவம்போல பயங்கர கனவுகள் தூக்கத்தை குழப்புதல்.

3. அந்தச்சம்பவம் மீண்டும் நடைபெறுவது போல உணர்தல், அல்லது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நடந்து கொள்ளல்.

4. புண்படுத்திய சம்பவம் நினைவூட்டப்படும் சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்படல்.

5. நினைவூட்டப்படும்போது, வியர்த்தல், பதட்டம், நெஞ்சுப்படபடப்பு, உடல் விறைப்படைதல்

இவர்கள் மேலும்..

நடந்த சம்பவத்தை நினத்துப் பார்ப்பதையோ, அதைப்பற்றிப் பேசுவதையோ தவிர்ப்பார்கள்.

சம்பவத்தை நினைவு படுத்துகிற மனிதர்களை, இடங்களை, செயல்களைத் தவிர்ப்பார்கள்.

சம்பவத்தின் முக்கியமான பகுதிகளை மறந்து விட்டிருப்பார்கள்.

கொண்டாட்டங்கள், சந்தோஷங்களை , தொழில் ஆர்வத்தை, கல்வியில் உள்ள ஈடுபாட்டை இழந்துவிட்டிருப்பார்கள்.

மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையை நாடுபவர்களாக இருப்பார்கள்.

சந்தோஷப்படுகிற அன்புகாட்டுகிற, னெகிழ்ந்து போகிற தன்மை அற்று மரத்துபோனவர்களாக இருப்பார்கள்.

தமக்கு எதிர்காலம் ஒன்று இல்லை என்பதாக நாளைபற்றிய கனவுகள் எதுவுமற்றுப் போனவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் எப்போது அரண்ட நிலயில் இருப்பதால்..

ஒழுங்கற்ற தூக்கம்.

இலகுவில் எரிச்சலடையும், கோபப்படும் தன்மை.

மனதை ஒருமுகப்படுத்த முடியாத இயல்பு.

எப்போதும் விழிப்பாக ஆபத்து நிகழலாம் என்ற எச்சரிக்கை மனநிலை.

சிறு ஒலிகள், அசைவுகளுக்கு கூட மருளும் இயல்பு.

சிகிச்சை முறைகள்...

1. இந்த மனநிலை பற்றிய தெளிவும் அறிவும் தகவல்களும் கற்றுக் கொள்ளுதல் முதற்படி; தன் மனக்காயத்தை புரிந்து கொள்ள முடியும்.

2. பய உணர்வு ,கோபம், துக்கம் போன்ற உணர்வுகளை கையாளப்பழகுதல்.

3. துன்பப்படுத்தும் நினைவுகளை, செயல்களை எதிர்கொண்டு அவற்றிற்கூடாக உணர்வுகளை வடியச்செய்தல் -  நாடகங்கள். காட்சிப்படுதல், சம்பவங்களைப் பற்றி பேசுதல் போன்றன.

4. எண்ணவழி சிகிச்சை –COGNITIVE THERAPY..

கல்லணை...


உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும்...

நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை...

இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை.

கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம்...



கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்க ப்பட்டவையே மாமல்ல புரம் குடைவரைக் கோயில்கள்.

மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி .

கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன.
மாமல்ல புரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.

நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

கன்னட மராட்டியன் ரஜினியும் ஏமாற்று வேலையும்...


திரிஷாவின் மகளோடு ஜோடியா ஒரு படம் பண்ணிட்டு..

FreeTime இருந்தா அரசியலுக்கு வரலாம்ன்னு இருக்கேன்.

அதுவரை அவசரம் இல்லை...

நடவடிக்கை எடுக்குமா அரசு..?


ரியல் எஸ்டேட்டில் பினாமி, கருப்பு பணத்தை தடுக்க புது முயற்சி : சொத்து பத்திரங்களை இனி ஆதார் இன்றி பதிவு செய்ய முடியாது...


கருப்பு பண ஒழிப்பு சட்டம், பண மதிப்பு நீக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனை, ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனை என படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. இதுதவிர கருப்பு பணத்தை மீட்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.

கருப்பு பணம் புழங்குவதில் ரியல் எஸ்டேட் துறைக்கு அதிக பங்கு உள்ளது. இதனால்தான் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் ரியல் எஸ்டேட் பெரும் வீழ்ச்சியை அடைந்தது. தற்போது 7வது சம்பள கமிஷன் பரிந்துரையை தொடர்ந்து மீண்டும் ஏற்றம்பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், சொத்து பரிவர்த்தனை அனைத்துக்கும் ஆதாரை கட்டாயம் ஆக்குவதன் மூலம் இத்துறையில் கருப்பு பண புழக்கம் அடியோடு தடுக்கப்படும் என மத்திய அரசு கருதுகிறது. எனவே இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சொத்து பரிவர்த்தனை அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் புழங்குவது தடுக்கப்படுவதோடு, இதில் பினாமி சொத்துக்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சொத்து பரிமாற்றத்துக்கும் விரைவில் ஆதார் எண் இணைப்பு அமல்படுத்தப்படும். வெளிப்படையான பரிவர்த்தனையை இது உறுதி செய்யும் என்றார். பினாமி சொத்துக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகிறது...

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடக்கவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் - சேலத்தில் டிடிவி தினகரன் பேட்டி...


தீபா கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத காரணத்தால் அவரது வாதங்கள் ஏற்கப்படவில்லை - தேர்தல் ஆணையம்...


இரட்டை இலை எடப்பாடி அணிக்கே - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ( மோடி மஸ்தான் ) ஆணையம்...


தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் சிந்தனை துளி...


விடுதலைப் போரட்டம் என்பது
இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை...

விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது.

மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.

சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுகந்திரம எனும் சுவர்க்கத்தை நாம் காண முடியும்.

போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது...