23/11/2017

ரியல் எஸ்டேட்டில் பினாமி, கருப்பு பணத்தை தடுக்க புது முயற்சி : சொத்து பத்திரங்களை இனி ஆதார் இன்றி பதிவு செய்ய முடியாது...


கருப்பு பண ஒழிப்பு சட்டம், பண மதிப்பு நீக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனை, ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனை என படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. இதுதவிர கருப்பு பணத்தை மீட்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.

கருப்பு பணம் புழங்குவதில் ரியல் எஸ்டேட் துறைக்கு அதிக பங்கு உள்ளது. இதனால்தான் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் ரியல் எஸ்டேட் பெரும் வீழ்ச்சியை அடைந்தது. தற்போது 7வது சம்பள கமிஷன் பரிந்துரையை தொடர்ந்து மீண்டும் ஏற்றம்பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், சொத்து பரிவர்த்தனை அனைத்துக்கும் ஆதாரை கட்டாயம் ஆக்குவதன் மூலம் இத்துறையில் கருப்பு பண புழக்கம் அடியோடு தடுக்கப்படும் என மத்திய அரசு கருதுகிறது. எனவே இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சொத்து பரிவர்த்தனை அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் புழங்குவது தடுக்கப்படுவதோடு, இதில் பினாமி சொத்துக்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சொத்து பரிமாற்றத்துக்கும் விரைவில் ஆதார் எண் இணைப்பு அமல்படுத்தப்படும். வெளிப்படையான பரிவர்த்தனையை இது உறுதி செய்யும் என்றார். பினாமி சொத்துக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.