10/05/2018

கர்நாடக தேர்தல் காரணமாக கடந்த 15 நாட்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை...



ஒரு பைசா கூட கூட இல்லை...

பெட்ரோல் விலை நிர்ணயம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை இப்பொழுதாவது மக்களுக்கு புரிகிறதா?

எங்கே இந்த டூபாக்கூர் போராளிகள்..?


திருமானூர் மணல் குவாரி முற்றுகை...


மக்கள் விரோத தமிழ்நாட்டு அரசாங்கத்தால் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நடத்தப்படும் மணல் குவாரிக்கு எதிராக, பல நாட்கள் கொந்தளிப்புக்குப் பிறகு மக்கள் தன்னெழுச்சியாக முற்றுகையிட்டு திரண்டிருக்கின்றனர். அறவழியில் இரண்டு நாட்களாகப் போராடிவரும் மக்களை காவல்துறை அச்சுறுத்தி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வருடம் முழுக்க  வற்றாமல் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த கொள்ளிடம் ஆறு, தற்போது மழைக்காலங்களில் கூட சொற்பத் தண்ணீரே ஓடும் நிலைக்கு ஆக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் ஆண்ட, ஆளும் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த பணப்பேராசை ஒப்பந்தக்காரர்களால் கல்லணை தொடங்கி விழுப்பணங்குறிச்சி கிராமம் வரை இயக்கப்படும் மணல் குவாரிகளே. கொள்ளிடக் கரையின் இருபுறமும் இயக்கப்படும் பல குவாரிகள் சட்டவிரோதமானவையே.

அனுமதி வாங்கப்பட்ட குவாரிகளிலும்கூட அரசின் குவாரி விதிமுறைகளை மீறி, எந்தவித சட்ட நடவடிக்கைகளும் இல்லாமல் மணல் அள்ளப்படுகிறது. ஆனால் கரையோர கிராம மக்கள் தங்களின் தேவைக்காக மாட்டு வண்டியிலோ / சணல் சாக்குப் பைகளிலோ மணல் அள்ளும்போது காவல்துறை வழக்கு பதிந்து ரூ. 10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கிறது. அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் கிராம மக்களால் இவ்வளவு பெரிய தொகையை எப்படி கட்ட முடியும்?

இந்த கிராம மக்கள் கொள்ளிட ஆற்றின்மீது ஆண்டாண்டுகளாக வரலாற்று ரீதியாக, பாரம்பரிய உரிமைப் பெற்றவர்கள். இந்த ஆற்றை கிராம நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பதும், ஆற்றின் வளங்களை தங்கள் தேவையறிந்து அனுபவிப்பதும் இந்தப் பகுதி மக்களின் மரபான பண்பு. பணமுதலைகளின் நலனுக்காக குவாரிகள் அமைத்து மக்களின் இத்தகைய உரிமைகளைப் பறித்திருக்கிறது, தமிழக அரசு.

கொள்ளிடக் கரையோர கிராமங்கள் மின் மோட்டார் மூலமாக பாசன விவசாயம் செய்து வருகின்றனர். கொள்ளிட ஆற்றில் தண்ணீர் வற்றியதால் 2, 3 ஆண்டுகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சிறு, குறு விவசாயிகள் மட்டுமே உள்ள இந்த கிராமங்கள் விவசாயம் செய்ய முடியாமல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பல கிராம மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். மக்கள் திரட்சியின் உறுதி வெற்றியையே கொடுத்துள்ளது.

கொள்ளிடக் கரையோர கிராம மக்களோடு துணை நிற்போம்...

அமெரிக்கா விற்கு கடும் எதிர்ப்பு...


மரமும் மனிதனும்...



பெருமரம்...

தமிழர்களோடு தொன்மையான தொடர்புடையது ‘பெருமரம்’. அந்தக் காலத்தில் திருவிழா சமயங்களில் ‘வழுக்கு மரம் ஏறுதல்’ மிகச்சிறந்த பொழுதுபோக்கு. இன்றைக்கும் தமிழகத்தின் பல கிராமங்களில் வழுக்கு மரம் ஏறுதல் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் திருவிழாவுக்காக வழுக்கு மரத்தைத் தேர்வு செய்யும் பணியே திருவிழாபோல் நடக்கும். கோயில் பூசாரிக்கு அருள் இறங்கி, அவர் கைக்காட்டும் திசையிலிருந்து மரத்தைக் கொண்டு வருவார்கள். அந்தக் காலத்தில் கிராமங்களைச் சுற்றிப் பெருமரங்கள் பரவலாக இருக்கும். அதனால், எந்தத் திசையில் சென்றாலும் மரம் கிடைத்துவிடும். ஆனாலும், பூசாரி சொல்லிய திசையில் ஊர்க்காரர்கள் திரண்டு போய், வளைவு நெளிவு இல்லாமல் நேராக வளர்ந்த மரத்தைத் தேர்வு செய்வார்கள். பிறகு, அந்த மரத்தை வெட்டி ஊருக்குக் கொண்டு வருவார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த மரத்தைச் சுற்றி அமர்ந்துகொண்டு, பட்டையை உரித்துச் சோற்றுக்கற்றாழை கூழைத் தடவுவார்கள். பிறகு எண்ணெய், கேழ்வரகு கூழ் ஆகியவற்றைத் தடவித் தூக்கி நிறுத்துவார்கள். அதன்பிறகுதான் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடக்கும். தற்போது, இந்தப் பழக்கமும் கிராமங்களில் அரிதாகிக்கொண்டே வருகிறது.

இம்மரத்துக்குப் பீயன், பீதக்கன் எனவும் பெயர்கள் உண்டு. தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் முக்கிய மூலப்பொருள் இந்த மரம். இதன் பட்டைகளிலிருந்து தீக்குச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இம்மரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூர், குடியாத்தம் போன்ற ஊர்களில் உள்ள நூற்றுக்கணக்கான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இந்த மரங்களை நம்பித்தான் இருக்கின்றன. முன்பு, கேரளாவிலிருந்து ரப்பர் மரங்களைக் கொண்டு வந்து தீக்குச்சிகளைத் தயாரித்தார்கள்.

ரப்பர் மரங்களைப் பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல கேரள அரசு தடைவிதித்த பிறகு, தமிழகத்தில் இம்மரத்துக்கான தேவை அதிகமாகிவிட்டது. மரங்களை வெட்டியவுடன் பட்டையில் ஈரப்பதம் காய்வதற்குள் ஆலைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஈரப்பசை இருந்தால்தான் எளிதாகப் பட்டையை உரிக்க முடியும்.

வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களில் முதன்மையானது பெருமரம். இம்மரத்துக்குப் பராமரிப்பும் பெரிதாகத் தேவையில்லை. தொழிற்சாலைகளில் 16 அங்குலம் முதல் 100 அங்குலம் சுற்றளவுள்ள மரங்கள்தான் வாங்கப்படுகின்றன.

இறவைப்பாசனத்தில் வளர்க்கும்போது நான்கு ஆண்டுகளுக்குள் மேற்சொன்ன அளவுக்கு மரம் வளர்ந்துவிடும். அதிகபடியான பராமரிப்பு செய்து வந்தால் மூன்று ஆண்டுகளிலேயே அபாரமாக வளர்ந்துவிடும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த மரம் சிறப்பாக வளரும். செம்மண், சரளை மண், சுண்ணாம்பு மண், கடற்கரையோர மணல் பகுதிகள், ஆற்றங்கரையோரப் பகுதிகள் என அனைத்து வகையான நிலங்களிலும் இதை நடவு செய்யலாம்.

தண்ணீர் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்களில் வடகிழக்குப் பருவ மழைக்கு முந்தைய காலங்களில் நடவு செய்தால், மூன்று மாதங்கள் பெய்யும் மழையில் செடிகள் உயிர்ப்பிடித்துக் கொள்ளும்.

‘தண்ணீரில்லை; பயிர் வைத்தால் பாதுகாக்க முடியாது’ என நினைத்து எதுவும் செய்யாமல் நிலத்தைத் தரிசாகப் போட்டு வைத்திருப்பவர்கள் பெருமரத்தை வளர்க்கலாம். மானாவாரி நிலங்களில், மழைக்கு ஏற்றவாறுதான் வளர்ச்சி இருக்கும். அதனால், இதுபோன்ற நிலங்களில் நான்கு ஆண்டுகளில் அறுவடை சாத்தியமில்லை. ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மேல்தான் அறுவடைசெய்ய முடியும்.

பெருமரத்தை நாற்று மற்றும் போத்து (குச்சி) மூலமாக நடவு செய்யலாம். நாற்று நடவுதான் சிறந்த முறை. நாற்றுகளை நாமே தயாரித்துக்கொள்ள முடியும். ஏப்ரல் மாதத்தில் மரத்திலிருந்து நெற்றுகள் உதிரும். அதைச் சேகரித்துத் தடி மூலமாக அடித்தால் விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ அளவுக்கு நெற்றுகளைச் சேகரித்தால் எண்ணிக்கையில் பத்தாயிரம் நெற்றுகள் வரை இருக்கும். அவற்றிலிருந்து எண்ணிக்கையில் 15 ஆயிரம் விதைகள் கிடைக்கும். விதைகளை நீண்ட நாள்கள் சேமித்துவைத்தால் முளைப்புத்திறன் குறையும். அதனால், உடனடியாக நாற்றுப் பைகளில் நடவு செய்துவிட வேண்டும்.

மரம் வளர்ந்த பிறகு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இலை முழுவதும் உதிர்ந்துவிடும். இதைப் பார்த்து மரம் பட்டுப் போய்விட்டது எனச் சிலர் நினைப்பார்கள். ஆனால், இது பெருமரத்தின் வழக்கமான நிகழ்வுதான். அடுத்த மழை பெய்யும்போது புது இலைகள் துளிர்த்துவிடும்

பெருமரத்தைச் செடிக்குச் செடி 12 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 300 செடிகள் வரை நடவு செய்யலாம். நிலத்தின் வரப்போரங்களிலும் வேலிகளிலும் இதைச் சாகுபடி செய்யலாம். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வன விரிவாக்க மையங்களில் செடிகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இதை நன்றாக வளர்ப்பவர்களுக்கு மானியமும் உண்டு.

இந்த மரம் நான்காண்டுகளில் நான்கு மீட்டர் உயரம் வரை வளரும். சுற்றளவு 16 அங்குலத்துக்கு மேல் வந்தவுடன் அறுவடை செய்யலாம். மூன்றாண்டுகள் வரை ஊடுபயிர்ச் சாகுபடி செய்துகொள்ளலாம். ஒரு டன் எடை கொண்ட பெருமரம், தற்போது 5,500 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

- வளரும்

பெருமரத்தின் பயன்கள்..

பெருமரத்தின் இலைகள் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்கவும் பட்டுப்புழு வளர்க்கவும் பயன்படுகின்றன. இந்த மரத்தில் பொம்மைகள், படகு சாமான்கள், பீப்பாய்கள், காகிதம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

காவல் நிலையத்தில் பெருமரம்..

சத்தீஸ்கர் மாநிலம், தாம்தரி மாவட்டத்தில் உள்ள சிகாவா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் இருநூறு ஆண்டுகளைக் கடந்த பெருமரம் மரம் இருக்கிறது. அந்த மரத்தைச் சுற்றி மேடை அமைத்துப் பாதுகாக்கிறார்கள். வயது காரணமாக, இயற்கையிலேயே மரங்களில் பல பொந்துகள் உள்ளன. அவற்றைப் புறாக்கள் தங்கள் வாழ்விடமாக்கிக் கொண்டுள்ளன. மனிதநேயம்மிக்க காவலர்கள் அந்த மரங்களில் ஆங்காங்கே மண்பானைகளைக் கட்டி விட்டிருக்கிறார்கள். அவற்றிலும் புறாக்கள் தங்குகின்றன.

ஆஸ்திரேலிய மரம்...

பெருமரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா. இது, ‘சைமருபேசியே’ (Simaroubaceae) எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ‘ஐலாந்தஸ் எக்ஸெல்ஸா’ (Ailanthus Excelsa) என்பது இதன் தாவரவியல் பெயர். எக்ஸெல்ஸா என்பது மரத்தின் ஓங்கி வளரும் தன்மையைக் குறிப்பதாகும்.

இதில், ஐலாந்தஸ் மலபாரிக்கா என்ற ஒருவகை உண்டு. இது, நேராக வளரும் ரகம். பென்சில் தயாரிப்புக்குப் பயன்படும் இந்த மரம், டாப்சிலிப் பகுதியில் வனத்துறையின் மூலம் சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ளது.

 நன்றி வணக்கம் பெருசங்கர் ஈரோடு...

நானும் அந்த வன்முறையாளனின் ஒருவனே...


பேராசை வியாபாரிகளின் பிடியில் திருப்பூர் மார்க்கெட்...


திருப்பூர் தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டில் சென்ற வருடம் இடைத்தரகர்கள் கள்ளத்தனமாக வெளிமாநில காய்கறிகளை இறக்குமதி செய்து விற்பதால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஏர்முனை இளைஞர் அணித்தலைவர் *NSP.வெற்றி* அவர்கள் தலைமையில் 200 மேற்பட்ட விவசாயிகள் இடைத்தரகர்களை முற்றுகையிட்டு எச்சரித்ததன் விளைவாக வெளிமாநில காய்கறிகள் வருவது முற்றிலும் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இடைத்தரகர்கள் கள்ளத்தனமாக அதிகாலை வேளையில் காய்கறிகளை கொண்டு வந்து நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர். இதனால் காலையில் உழவர் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளும், தினசரி மார்கெட்டிற்கு காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளும் தாங்கள் கொண்டு வரும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

உழவர் காவலர் NS.பழனிச்சாமி அவர்களின் பெரும் முயற்சியால் சுதந்திரமாக விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்த மார்க்கெட் இன்று இடைத்தரகர்களின் ஆதிக்கத்தாலும், பேராசை பிடித்த வியாபாரிகளாலும் கட்டுண்டு கிடக்கிறது.

இவை அனைத்தும் தெரிந்தும் மார்கெட்டை சுங்க ஏலம் எடுத்திருப்பவர்கள் கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி...

தமிழினத்தின் தலைவர் அண்ணன் பிரபாகரன் உயிரோடு தான் உள்ளார்... காலம் வரும் காத்திரு பகைகளே...



அமானுஷ்யம் - ஆவிகள்...


இறந்து போனவர்ளுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரயமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மறவர்களோடு பேசுகிறார்கள் என்பதும் உண்மை.

அண்மையில் தினமணி கதிர் பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு. பி.ஜி. கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு.

எனக்கே இதில் அனுபவம் உண்டு.

1941 - ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.

அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.

அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.

ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக் கொண்டிருக்கும் போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.

அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்.

சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும்.

மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.

மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.

இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

இறந்து போனவர்களுக்குப் பிரியமானபதார்த்தங்களை செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்.

தர்க்கத்திற்கு இது நிற்க முடியாது. என்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பங்களைத் தம் வாழ்யாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக்கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.

அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.

இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:

தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர், இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார். அவர் தாமும் பேசிப் பாக்க வேண்டும்ந ஆனால் தமிழைத் தாய் பாஷையாக்க் கொண்ட மூடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷயாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்விக்கேட்டு பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல, இறந்தவருடைய வாக்கே ன்று உறுதியாக் கூற முடியுமென்று சொன்னார். “தம்பியார் யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை; ஆபிஸர் சொல்வது சரியான சோதனையோ சோதித்துப் பார்ப்போமே” என்றுபார்த்தார். ‘உருது’ ஒரு வார்த்தையும் தெரிஆத பிராமணச் சிறுவன் மீடியாமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில்பதில் வரவே ஆபிஞரும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.மேற்கொண்டு பேசவேண்டும் என்று ஆபிசரும் விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், ‘இப்பொழுது மேற்கொண்டு பேசவேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப் பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்உ அறிவித்து விட்டாள். அதன்படி அவர்க வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்துவிட்டார் ஆனதால் நல்ல சக்தி வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்கு தெரியாத பாஷைகளிலும் பேச்சு நிகழ்த்தலாமென்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ மீடியம் கள்ளத்தனமாக வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை போலித்தனமோ, ஓர் அணுவளவும் கல்ல முடியாதென்பதும் பெறப்படுகின்றதல்லவா?

மறதியாகப் பணம் வைக்கப்பட்ட இடத்தை இறந்தவர் அறிவித்தல்:

ஆவி உலகத்திலிருந்து அறிவித்தபடியே அந்த வருமானவரி அதிகாரி தன்னுடைய வீட்டில் உருது பாஷையில் தன்னுடைய சொந்த மகளை மீடியமாக வைத்துப் பேசியதில், அவருடைய மனைவியின் தங்கை ஆவியுலகத்திலிருந்து பல அரிய விஷயங்களை அறிவித்ததாகத் தெரிவித்தார். அவற்றுள் ஒன்று மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம். ஒரு நாள் அவருடைய சட்டைப்பையில் போட்டு வைத்திருந்த ஒரு ரூபாயைக் காணாத காரணத்தால், அவர் தம்முடைய வேலைக்காரன் திருடியிருக்கலாம் என்று கருதி அவனைக் கடுமையாக்க்கோபித்து அடித்துவிட்டார். மறுமுறை ஆவி உலகத்திலிருந்ததன்னுடைய கொழுந்தியாளோடுபேசியது காணாமற் போன ரூபாயைக் குறித்து அவர் ஒன்றும் பேசியதாகவும், அந்த ரூபாய் மேல் பையில் இருப்பதாகவும், அவரே ஞாபக்க்குறைவாக அதில் போட்டிருக்க, கீழ்ப்பையில் போட்டதாக எண்ணிக்கொண்டதாகவும், அந்த வேலைக்காரனைப் பேசியதும் அடித்ததும் பாவமான காரியமென்றும், அந்தப் பாவத்தைப்போக்குவதற்கு அவனிடம் உணைமையைச் சொல்லி, அவனுக்கு ஒரு ரூபாய் வெகுமதி கொடுக்க வேண்டும் என்று அறிவித்ததாகவும், அவர் அந்தப்படியே நடந்து கொண்டதாகவும், அதிலிருந்து ஆவி உலகத்தில் புண்ணியப் பகுதியிலுள்ள சுற்றத்தார் தாங்கள் இருந்த வீட்டில் ஏதாவது விபரீதமான காரியங்கள் நடந்தால், அதை எவ்வளவு கருத்தோடு கவனித்து வருகிறார்கள் என்பதையும் அவர் உணர்ந்த கொள்ள முடிந்ததாகவும் அறிவித்தார்.

இறந்த இஸ்லாமியர் தானாகவே வலிய வந்து தன் மகனது வியாகூலத்தை நீக்கல்...

ஈரோடு மார்க்கத்தில் கரூருக்குச் சமீபமாயுள புகழூரிலே ஒரு நாள் இரவு 1 மணிக்கு இறந்துபோன சுற்றத்தாருடன் பேசிக்கொண்டிருக்கையில் ஆவி உலகத்திலிருந்த ஓர் இஸ்லாமியர் வந்து தாம் அவ்வூரிலுள்ள (போஸ்ட் மாஸ்டர்0 தபால் அதிகாரியினுடைய தகப்பனார் என்றும், தம்முடைய மகன்தூக்கம் வராமல் விழித்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இருப்பதாகவும், அவன் அவனுடையமனைவியின் உடல் நிலை விஈயமாகவும் அவளூடைய பிள்ளைப் பேறு விஷயமாகவும் நினைத்துக் கொண்டே இருப்பதாகவும், அவனைத்தயவு செய்து கூட்டிக் கொண்டு வந்து தம்மோடு பேச வைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாராம். இரவில் 1 மணிக்கு அவரை அவ்விதம் கூப்பிடுவது சரியல்லவே என்று கேட்டபொழுது, “அவன் தூங்கிக்கொண்டிருப்பானானால் எழுப்பக்கூடாதுதான். ஆனால் விழித்துக்கொண்டிருக்கும்பொழுது தெருவாயில் கதவை லேசாகத் தட்டினாலே அவன் வந்து திறந்து விடுவான்; அதைப்பற்றி யாதும் யோசிக்க வேண்டாம். அந்த உதவியைச் செய்து தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அதன்படி ஒரு வேலைக்காரனை அனுப்பி, ‘அவருடைய வீட்டுக் கதவைத் தட்டிப் பார்; விழித்திருந்து உடனே கதவண்டை யாரென்று கேட்டால், விவரம் சொல்லிக் கூட்டி வா; அல்லவிடில் வந்துவிடு’ என்று அறிவித்திருந்தோம். அவனும் (போஸ்ட் மாஸ்டர்) தபால் அதிகாரி வீட்டிற்கு சன்று லேசாக்க் கதவைத் தட்ட, அவர் எழுந்து வந்து யாரென்று கேட்டு வ்வரம் அறிந்து, தகப்பனாரிடம் பேச வந்து விட்டார். நாங்கள் இறந்தவர்களோடு பேசும் வழக்கமுள்ளவர்கள் என்பது மாத்திரம் அவருக்கு முன்னமேயே தெரியும். ஆவி உலகத்திலுள்ள தந்தையார் தமது மகனிடம், ‘கவலைப்பட வேண்டாம், மனைவிக்குச் சுகமான பிரசவம் நடைபெறும் ; பிறக்கப்போவது ஆண்குழந்தை’என்று சொல்லி, குடும்ப சம்பந்தமாக எலா நலங்களும் உண்டாவதற்கு மேலுலகத்தில் தாமும் ஆண்டவனிடம் பிரார்த்தித்து வருவதாகவும், வேறு சில இடையூறுகளை வரவொட்டாமல் தாம் தடுத்து விட்டதாகவும் சொல்லி, மகனை உற்சாகப்படுத்திஅனுப்பிவிட்டார்.

பின்னர், அதன்படியே மனைவிக்குச் சுக பிரசவன் நடந்து ஆண் மகவு பெற்றெடுத்தாள் என்பதை அறிவோம்.

இதிலிருந்து ஆவி உலகத்திலுள்ளவர்கள், நாம் நினைத்த மாத்திரத்தில் அந்த இடத்திற்கு வந்து நம்முடைய நிலைகளை நன்றாக அறிய முடிகிறதென்பதை உணருகிறோம். இதனை உபமானமாக்க் கொண்டுவிட்டால் சர்வ வல்லமையுள்ள ஆண்டவன், நாம் நினைப்பதையும் பேசுவதையும் சொல்வதையும் அறிந்து கொண்டும் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்க முடியும் என்பதை யாவரும் உய்த்து உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா?

இறந்தவர் தம் தம்பியிடம் தனது மகனுடைய அந்தரங்கச் செயல்களை அறிவித்து மணம்முடிக்கச் செய்தல்:

ஒருநாள் மதுரைக்கு வந்திருந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஒருவர், அம்மைய நாயக்கனூருக்குத்தம்முடைய சொந்த மோட்டார் காரில் வந்து, காலம் சென்ற தம்தந்தையாருடன் பேசிப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். அதன்படியே அவர் தம் தந்தையாருடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தந்தையார் தம்முடன் ஆவி உலகத்தில் இருந்த மூத்த மகன் (மதுரையிலிருந்து வந்திருந்த செட்டியாருடைய காலஞ்சென்ற தமையன்) தம்பியுடன் வந்திருப்பதாக அறிவித்தார்.அந்த அண்ணாவைப்பேச்ச் சொன்னபொழுது அவர், தம்முடைய மகன் காட்டுப் புத்தூரில் படித்துக் கொண்டிருப்பது போதுமென்றும், அவனைப் பற்றி அவ்வூரில் சில புகார்கள் வருகின்றனவென்றும், அவனும் இன்னொரு வயது வந்த பெண்ணும் காதல் கடிதங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்களென்றும், காரியம் முற்றிவிடுவதன் முன், அவனை ஊருக்குக் கூட்டிக்கொண்டு போய், வேற் பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்றும், அம்மைய நாயக்கனூருக்குக் கொண்டு வந்திருக்கிற காரிலேயே, நேராக்க் காட்டுப்புத்தூருக்குப் போய் அங்குள்ள தம் மகனைக்கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பேச வந்த செட்டியாருக்கு ஒன்றும் புலப்பட வில்லை. தாம் மதுரையில் அநேகரைக் காக்க வைத்து விட்டு, இரவு திரும்பி வந்துவிடுவதாக அம்மையநாயக்கனூருக்கு வந்ததாகவும், ஆனதால் நேரே மதுரைக்குத் திரும்பிப் போய் அங்குள்ள காரியங்களைப் பார்த்துவிட்டு, மறுநாள் காட்டுப்புத்தூர போவதாகவும் பதில் அறிவித்தார்.

ஆவி உலகத்திலிருந்து பேசிய தமையனும், மதுரைக் காரியத்தைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், காட்டுப்புத்தூர் காரியம் மிகவும் அவசரமானது என்றும், மதுரைக்குத் தந்தியைக் கொடுத்துவிட்டு, நேரே காட்டுப் புத்ததூருகுச் சென்று, தன்னுடைய மகன் விஷயத்தைக் கொஞ்சமும் தாமதியாமல் கவனித்து ஆவன செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டுமென்றும் திரும்பத் திரும்பச் சொன்னார். அதைப்பற்றித்தன் தந்தையாரிடம் செட்டியார் கேட்டபொழுது அவரும் அது மிகவும் அவசரமான காரியம்தான் என்று சொல்லவே மதுரைக்குத் திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த செட்டியார், அந்த எண்ணத்தை மாற்றி, தந்தியில் தான் காட்டுப்புத்தூருக்குச் சென்று வருவதாக அறிவித்துவிட்டு, அம்மையநாயக்கனூரிலிருந்தே காரில் காட்டுப்புத்தூருக்குப் போய்விட்டார்.

அங்கு சென்று காரியங்களைப் பரிசீலனை செய்து பார்க்க, தம் தமையனார் சொன்னது முற்றிலும் உண்மை என்று புலனாயிற்று. ஆனதால், தன் தமையனார் தனக்கு அறிவித்தது போல், படித்துக்கொண்டிருந்த பையனுடைய படிப்புக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று, கால தாமதமில்லாமல் கல்யாணமும் செய்துவிட்டார். நாங்களும் அக் கல்யாணத்திற்குச் சென்று சிறப்பித்தோம்.

ஆகவே, ஆவி உலகத்திலிருக்கிற தந்தை தம்முடைய மகனுடைய நடத்தைகளைக் கண்காணித்து வருகிறார்ர் என்பதும், அதற்கு இன்னது செய்ய வேண்டுமென்று அறிவிக ஆர்வத்துடன் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருக்கிறார் என்பதும் இதிலிருந்து புலப்படுகிற தல்லாவா? அல்லாமலும் அம்மையும் அப்பனும் ஆகிய சர்வ வல்லமையுள்ள ஆண்டவனும், நாம் செய்கின் காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமல் கண்காணித்து வருகிறார் என்பதை ஊகித்து உணர்ந்து கொள்ளவும், நாம் நம்முடைய நடத்தைகளைத் திருத்தி அமைத்துக்கொள்ளவும், இச்சம்பவன் உள்ளத்தைத்தூண்டுகிற அளவுக்கு, எத்தனை புத்தகப் படிப்பும் மக்களைத்தூண்ட முடியாதன்றோ..

அசுரர்களே விரைவில் உங்கள் கலியுக ஆட்சியை தமிழர்களாகிய நாங்கள் முடிவுக்கு கொண்டுவருவோம்...


மூளையைத் தூங்க விடாதீர்கள்...


பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள்.

இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி செயல்முறைத் திட்டம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு செயல்முறைத் திட்டம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 செயல்முறைத் திட்டங்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்...

அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தை கை விட்டது...


காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகள் என்ன பன்னுனீங்க..?


காங்கிரஸ் கட்சி மீண்டும் அரியணை ஏறியதும் காவிரி பிரச்னை தீர்க்கப்படும் - ப.சிதம்பரம், முன்னாள் மத்திய நிதியமைச்சர்...

மக்களை கெடுக்கும் மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள்... மக்களுக்கு உணவை கொடுக்கும் உழவர்களுக்கு நாம் கொடுக்கும் உயரிய விருது வறுமை மட்டுமே...


நடிகர் நடிகைகள், தாங்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு கோடி கணக்கில் ஊதியம் நிர்ணயித்து வாங்குகின்றனர்.

ஆண்டு முழுக்க வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருள்களுக்கு அவர்கள் விலை நிரனயிப்பது இல்லை . அரசு விலை நிர்ணயம் செய்கிறது .பூமி பந்தில் இந்தியாவில் மட்டுமே இந்த நிலை .

உடல் நோகாமல் நடிப்பவர்களுக்கு இந்த நாட்டின் உயரிய தேசிய விருது .
உடல் வலிக்க உழைப்பவர்களுக்கு வறுமையும், பசியும், பட்டினியும் , தற்கொலை மட்டுமே நாம் அவர்களுக்கு கொடுக்கும் தேசிய விருது .

ஒரு கிலோ அரிசியின் விலை வைத்து அதனை மதிப்பிடாதீர்கள் .அதற்கு பின்னால் உழவனின் ,ஏழைத் தமிழனின் அவனின் வறுமையான வாழ்வு இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

உங்களுக்கு உயர் தர அரிசியை விளைவித்து கொடுத்து விட்டு இலவச அரிக்கு கையேந்தி நிற்கும் அவலத்தை எண்ணி பாருங்கள்.

உழைத்து உழைத்து உடலின் வலியை போக்க குடித்து சீரழியும் அவன் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்.

நீங்கள் உண்பது உணவல்ல .அவனின் ரத்தமும், சதையையும் உழைப்பாக மாற்றி, நாம் உயிர் வாழ அவன் விளைவித்து கொடுக்கும் உணவால் நம்மை வாழ வைத்து தன்னை அழித்து கொள்ளும் உயரிய மாந்தன் நம் உழவன் .

சில ஆண்டுகளுக்கு முன் சேலம் அருகே சிற்றூருக்கு சென்றிருந்தேன் .நம் உறவினர் நெல்லை அறுத்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்டேன் எப்படி விளைச்சல் பரவாயில்லையா என்று அவர் கூறினார் பரவாயில்லை தம்பி ஏழாயிரம் செலவழித்தேன் இருக்கும் நெல்லை விற்றால் ஏழாயிரம் தேறி விடும் என்றார் .

ஐயா அப்படியெனில் உங்களுக்கு என்றேன் .வைக்கோல் கிடைத்தது அல்லவா மாட்டிற்கு ஆயிற்று .

இதுதான் இன்றைய உழவர்களின் நிலை.

பள்ளி .மாணவர்களே கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள் நீங்கள் உயிர் வாழ உழவன் உணவை அளிக்கிறான் .நீங்கள் உங்கள் நடிகருக்கு, உங்கள் உழைப்பையும் கொடுத்து, உங்கள் பணத்தால் பாலபிசேகம், விளம்பர தட்டிகள் என்று செலவழிக்கிரீர்களே சிந்தித்து பாருங்கள்...

இல்லுமினாட்டி களும் சுனாமி உண்மைகளும்...


கேரட் வைத்தியம்...


தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.

உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...

தமிழக காவல்துறை கலாட்டா...


எங்கே இருக்கிறது ஷம்பலா...


ஷம்பலா பனி படர்ந்த திபெத்திய மலைகளுக்கு அப்பால் எவரும்நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் அழகிய சொர்க்கமே ஷம்பலா.

தூய உள்ளம் கொண்டவர்கள் வாழும் ஷம்பலாவில் மகிழ்ச்சி மட்டுமே உண்டு. அங்கே இருப்பவர்கள் என்றென்றும் இளைமையுடன் நோய் என்ற ஒன்றை அறியாதவர்களாக இருப்பார்கள்.

மேலும் அன்பும் ஞானமும் மட்டுமே பின்பற்றப்படும். அநீதி அங்கே அறியப்படாத ஒன்று மிக அழகான முறையில் மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ளும் அவர்கள் அசாத்திய சித்திகளை கொண்டவர்களாக வெளி உலகத்தை விட பன்மடங்கு சிறந்த மனிதர்களாக ஞானமுடையவர்களாக இருப்பார்கள்.

ஷம்பலா என்பதன் பொருள் மறைவான எனபது, பலரும் ஆன்மீகவாதிகள், கண்டு பிடிப்பாளர்கள் ,என ஷம்பலாவை கண்டு பிடிக்க முயன்ற போதும் அவர்களால் சிறு புள்ளியை கூட கண்டு பிடிக்க இயலவில்லை, எனினும் அவர்கள் கூற்றுப்படி ஷம்பலா இன்னும் இருக்கிறது.

மானுடம் காணவியலா உலகின் ஏதோ ஒரு விளிம்பு பகுதியில், இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான ஸ்தூல இணைப்பாக உள்ளது .

திபெத்திய புத்த பாரம்பரியத்தில் புராண நகரமான ஷம்பலா, ஆசியாவில் உள்ளார்ந்த பகுதியில் மறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஷம்பலா பற்றி புராதன நூல்களான காலசக்ர தந்த்ரம், மற்றும் ஜாங் ஜுங் கலாச்சாரத்திலும் திபெத்தின் இந்த நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

திபெத்தியர்களின் பொன் கல்வெட்டுகள் ஷம்பலாவை பற்றி மேலும் அதிக விஷயங்கள் கூறுகின்றன.

ஷம்பலாவின் வரலாறு எதுவான போதும் இந்த நகரம் புத்த பிக்குகளின் தூய பகுதி, இந்த அற்புதமான நகரம்.

இதனை பற்றி அறிந்தவர்கள் பயணிகள் என அனைவரையும் இந்த ஷம்பலா ஈர்த்து கொண்டு இருக்கிறது.

ஷம்பலா என்பதன் சம்ஸ்கிருத அர்த்தம் சாந்தத்தின் உறைவிடம் அல்லது அமைதியான இடம் என்பதாகும்.

ஷம்பலாவின் உண்மையான இருப்பிடம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் ஷம்பலாவினை எட்டு பெரும் மதங்கள் இருப்பதாக கூறுகின்றன .

இந்த பிரபஞ்சத்தின் ஆத்மீகத்தின் மைய இடமாக இருப்பது இந்த ஷம்பலா என கூறப்படுகிறது .

மேலும் இதனை பற்றி கூறும் போது இங்கு வசிப்பவர்கள் தங்களுக்குள் சிறுகுழு ஒன்றை ஏற்படுத்தி கொண்டு. மனிதர்களுக்கு எல்லா காலங்களிலும் உதவி புரிகிறார்கள்.

பலநூறு மைல் தூரத்திற்கு வலை பின்னல் அமைப்பு கொண்ட துளைத்த பாதைகள் மூலம் ஷம்பலா புவிபகுதிக்கு மேலும் கீழும் இணைந்து உள்ளது.

ஆண்ட்ரீவ் தாமஸ் தனது ஷம்பலா நூலில் அவர்களின் ரதங்கள் ஒளிமையமாகவும் தனித்த வடிவமைப்புடன் காணப்படுவதாக கூறுகிறார்.

அதுமட்டுமின்றி அவர்களின் செயற்கை ஒளி ஷம்பலாவில் காய் கறிகள் மாற்றிய உணவு பண்டங்களை உற்பத்தி செய்ய போதுமான அளவில் உள்ளதாகவும், இந்த உணவு பொருள்களின் மூலமே அவர்கள் நீண்ட நாள் நோயற்ற வாழ்வினை பெறுவதாக கூறுகிறார்.

மேலும் பல ஆய்வார்கள் ஷம்பலாவை பற்றி என்ன கூறுகிறார்கள் என பிறகு காண்போம்...

மறுக்க முடியாத உண்மை...


சேலைக்குள் வாள்...


சங்ககாலத்தில் போர்களம் வரை சென்ற பெண்கள் நேரடியாகக் களத்திற்கு செல்லாவிடினும் போர்ப் பாசறையில் பாவை விளக்கு ஏற்றிவைத்து அது அணையாமல் பார்த்துக்கொண்டு காத்திருப்பார்கள்.

இப்பெண்கள் தங்கள் மேலாடையில் (கச்சு), பளபளப்பான வாளினைச் சேர்த்துக் கட்டியிருந்தனர்.

திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர் (முல்லைப்பாட்டு 46-45)..

படம்: ஓலைச் சுவடி எழுதும் பெண்...

இந்தியா ரா உளவுத்துறையின் நேரடி நியமனம் கிரிஜா வைத்தியநாதன்...


அச்சு கலையை ஹிடன்பர்க் என்ற ஜெர்மானியர் பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் கண்டு பிடித்தார் என வரலாறு எழுதும் உலகமே...


கீழடியில் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் எங்கள் பாட்டன் பயன்படுத்திய இந்த பொருள் என்ன?

அறிவியல் கண்டு பிடிப்புகளையும் வரலாற்றையும் உலகம் மறுபடி திருத்தி எழுத வேண்டும்...

ஒண்றை மறவாதீர்கள்.... அஸ்தமிக்கும் சூரியனுக்கும் பஸ்பமாக்கும் சக்தியுண்டு...


ஜெர்மனியின் சாதனை...


தன்னுடைய மின்சார தேவையில் வெறும் 15 சதவீதம் மட்டுமே அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்துவிட்டு மீதமிருக்கும் அனைத்து தேவையையும் புதிப்பிக்கக்கூடிய ஆற்றலலிருந்து உற்பத்தி செய்து உலக சாதனை படைத்துள்ளது ஜெர்மனி நாடு.

2011 ஆம் புகுஷிமா விபத்து ஏற்பட்டவுடன் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூடிவிடுவோம் என்று தைரியமாக அறிவித்து, உடனடியாக சூரிய சக்தி, காற்றாலை மின்சார உற்பத்தியில் தனி கவனம் செலுத்தியதன் விளைவு இன்று இந்த நிலையை எட்டியுள்ளது.

தேவையை விட அதிகமாக மின்னுற்பத்தி நடந்து மின் கட்டணங்கள் நெகடிவிற்க்கு (மின்சாரத்தை பயன்படுத்த நிறுவனங்கள் பணம் கொடுக்கும் நிலை) சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனர்ஜிவெய்ண்டே என்ற திட்டத்தை ஜெர்மனி அறிவித்து, 2050 ஆம் ஆண்டுக்குள் அனல் மின் நிலையங்கள் இல்லாத புதுப்பிக்க கூடிய ஆற்றல் மட்டுமே கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து அன்றைக்கு தேவைப்படும் அளவைவிட அதிக உற்பத்தி செய்யும் திட்டத்தில் உள்ளது.

நாள் ஒன்றுக்கு சில மணி நேரங்கள் மட்டுமே சூரிய ஒளி இருக்கும் ஜெர்மனியில் இதை சாதிக்க முடிகிறதென்றால் அதிக நேரம் சூரிய ஒளி இருக்கும் நம் நாட்டில் நிச்சயம் இதை செய்ய முடியும்.

அணுசக்தி நிறுவனங்களின் லாபத்தை நோக்கத்தில் அரசுகள் செயல்படாமல், மக்களின் தேவைகளை மனதில் வைத்து செயல்படும் அரசுகள் மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும்...

கஞ்சா பல நோய்களுக்கு தீர்வாகும் மருந்து... இதை கார்பரெட் நிறுவனத்திற்காகவே தடை செய்து வைத்துள்ளது அரசு...


புற்றுநோய் மனிதனால் உருவாக்கப்பட்டதே...


கன்னட பலிஜா ஈ.வே.ரா தமிழர் தலைவரா.?


கூலி உயர்வு கேட்டதால்தான் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது - ஈ.வே.ரா அறிக்கை...

1968ல் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை தன் அடியாட்கள் மற்றும் ஆயுதங்களுடன் சென்று தாக்கி விரட்டிவிட்டு, முதியோர், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை (தமிழர்கள்) வீட்டுக்குள் பூட்டிவைத்து உயிரோடு எரித்துக் கொன்றான் அப்பகுதி மிராசுதாரான கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வந்தேறித் தெலுங்கன்.

உடனே ஈ.வே.ரா கொதித்து எழுந்தார். அறிக்கைவிட்டார்.

யாருக்கு எதிராக?

அன்று கூலித்தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நின்ற கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக.

பின்னே ஒரு வந்தேறி அதிலும் நாயுடு,
இன்னொரு வந்தேறியை அதிலும் நாயுடுவை எதிர்த்து அறிக்கை விடுவானோ?

ஈ.வே.ரா, கீழ்வெண்மணி படுகொலை பற்றி விட்ட அறிக்கை 28.12.1968 அன்று விடுதலையில் வந்துள்ளது.

இடப்பட்டுள்ள இடங்களைக் கவனிக்கவும்.

தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள், விவசாய மக்களுக்கு நலன் செய்வது போல
அவர்களுக்காகப் பாடுபடுவது போல
ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவது போல மேடைகளிலே பேசுகிறார்கள்.

உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலி வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.

கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும்.

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டு தான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல்,
நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி..

இன்றைய தினம்,வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி,இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி.அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை.தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம் கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட்களின் குறி கீழத் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அதாவது கீழ்வெண்மணி படுகொலைக்குகம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என்று கூறுகிறார்.

மேலும், கூலித் தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்திக் கேட்கக்கூடாது.கிடைக்கும் சம்பளத்திற்குள் வாழ்ந்து கொள்ள வேண்டும்.

மீறி கலகம் செய்தால் கீழ்வெண்மணி போன்ற படுகொலைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

அப்படியும் அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்தால் அரசாங்கம் அடக்கி ஒடுக்கும்.

(அப்போது வந்தேறி அண்ணாதுரை முதல்வர், நடந்து கொண்டிருந்தது திராவிட வந்தேறிகளின் ஆட்சி).

இதுதான் அவர் கூறுவரும் கருத்து.

ஈ.வே.ரா எந்த இடத்திலும் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு கண்டனமோ
அல்லது வெண்மணி பள்ளர்களுக்கு இரங்கலோ தெரிவித்ததே இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார்.

கீழ்வெண்மணி படுகொலையில் கைது செய்யப்பட்ட நாயுடு நிராபராதி என்று 1965ல் விடுதலை செய்யப்பட்டான்.

இதற்கு வந்தேறித் தெலுங்கனான கருணாநிதி அமைத்த விசாரணைக் கமிஷன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு ஆதரவாக இருந்தது முக்கிய காரணம்.
நீதிபதி மகாராஜன் தீர்ப்பில் கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை என்று கூறினார்.இதற்கு நன்றிக்கடனாக திருநெல்வேலியில் ஒரு பகுதிக்கு அவர் பெயர்வைக்கப்பட்டது. அது தான் மகாராஜ நகர்.

நாயுடு விடுதலையான போது அவரை வரவேற்ற தி.மு.க வினர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைத்தனர்.

தி.மு.கவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்யவும் இல்லை.

1968ல் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த13 வயது சிறுவன் நந்தன் தன் நண்பர்களுடன் சேர்ந்து 12 ஆண்டுகள் கழித்து 1980 டிசம்பரில் கோபால கிருஷ்ண நாயுடுவை வெட்டி படுகொலை செய்தார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (எம்.எல்) கம்யூனிஸ்ட்களின் அழித்தொழிக்கும் குழு என்று அறியப்பட்ட இவர்களை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை.
கம்யூனிஸ்ட் தலைமை இக்குழுவினருக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஏனென்றால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்போதும் வந்தேறிகளாகவே இருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்டத்தில் இருந்த தமிழர்களுக்கு மேல்மட்டம் எந்த ஆதரவையும் தரவில்லை.

அடுத்த தேர்தலில் கருணாநிதியுடன் அக்கட்சி கூட்டணியும் வைத்துக் கொண்டது.

இன்றைக்கும் கூட இறந்த அப்பாவி மக்களை 'வீரர்கள்' என்று கம்யூனிஸ்ட் கொடியோடு சென்று வணக்கம் வைக்கிறார்களே ஒழிய
கோபால கிருஷ்ணனை கொலை செய்து பழிக்குப்பழி வாங்கிய உண்மையான வீரர்களை கொண்டாடுவதில்லை.

நந்தன் உட்பட வெண்மணிப் பள்ளர்கள் 11பேர் தண்டனை பெற்று சிறை சென்றனர்.சாட்சிகள் இல்லாததால் தண்டனை நிரூபணம் ஆகாமல் சில ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர்.

எந்த போராட்ட வரலாறையும் கடைசி நேரத்தில் நுழைந்து ஆட்டையை போடும் பெரியாரியக் கூட்டம் கோபால கிருஷ்ண நாயுடு கொலை வழக்கை வந்தேறி தெலுங்கரான கோவை ஜி.ராமகிருஷ்ணன் மூலம் எடுத்து நடத்தியது.

என்னமோ அந்த கொலையை தி.க தொண்டர்கள் தான் நடத்தினார்கள் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் கோபால கிருஷ்ணனைக் கொலை செய்தவர்கள் திராவிட அமைப்புகளையும் கம்யூனிஸ்ட் அமைப்புகளையும் நம்பி மோசம் போய் கடைசியில் தங்களது சொந்த இழப்புக்கு பழிவாங்கத் தாமே களத்தில் இறங்கியவர்கள் ஆவர்.

கொலை நடந்த பிறகு ஆளாளுக்கு பங்குக்கு வருகிறார்களே ஒழிய அந்த கொலையைச் செய்ய முடிவெடுத்தவர்களுக்கு எந்த உதவியையும் எந்த அமைப்பும் செய்யவில்லை.

கீழ்வெண்மணி கொலை நிகழ்வு ஒரு நாளில் நடந்த நிகழ்வு கிடையாது.1946 லேயே பிரச்சனை தொடங்கிவிட்டது.
அங்கே விவசாயக் கூலிகளாக இருந்த பள்ளர்களுக்கும் ஆதிக்கசாதியான நாயுடுகளுக்கும் உரசல் இருந்து வந்தது.

பள்ளர்கள் நடத்திவந்த இரவு நேர குடிசைப் பள்ளியை நாயுடுகள் நிறுத்தச் சொன்னார்கள்.பள்ளர்கள் மறுத்தனர்.
ஆதிக்கசாதியினர் எலும்புத்துண்டுகளை வீசி காவல்துறையை அனுப்பினர்.

பள்ளர்கள் காவல்துறையை அடித்து உதைத்து விரட்டினர்.மறுநாளே ரிசர்வ் படை வந்து இறங்கியது.முக்கியமான இரண்டு பேரை அழைத்துச் சென்று சிறையிலடைத்தது.

இப்படி புகைந்து கொண்டே வந்த பிரச்சனை முற்றி இறுதியில் நடந்தேறியது தான் 5 ஆண்கள், 20 பெண்கள், 19 குழந்தைகளைப் பலிகொண்ட அந்த திட்டமிட்ட படுகொலை.

ஜனநாயகமுறையில் தமிழர்களுக்கு கிடைக்காத நீதி  ஆயுதம் மூலமாகக் கிடைத்தது.ஆனாலும் இழப்பு என்னமோ தமிழர் பக்கம்தான் அதிகம்...

மணல் கடத்தல் உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...


பாட்டில் நீரில் பிளாஸ்டிக் துகள்கள்...


''நீரின்றி அமையாது உலகு'' என்ற வரிகள் வருங்காலத்தை அறிந்தே எழுதப்பட்டவை. இன்றைய காலக்கட்டத்தில் நீரின் தேவையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதேசமயம் நீர் சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடே குடிநீர் பாட்டில்.

சர்வதேச சந்தையில் குடிநீர் பாட்டில்களின் விற்பனை ஆண்டிற்கு 147 மில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே உகந்தது என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி இருக்கையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் பிளாடிக் துகள்கள் இருப்பதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த லாபநோக்கமற்ற பத்திரிகை நிறுவனமான ORB MEDIA நடத்திய ஆய்வில் ஒரு குடிநீர் பாட்டிலில் ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி குடிநீர் பாட்டில் நிறுவனங்களில் இருந்து 250 பாட்டில்களை பரிசோதனை செய்ததில் பாலிப்ரோபலீன், நைலான், பாலி எத்திலீன் டெரப்தலேட் (PET) உள்ளிட்ட பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் #ORB_MEDIA நடத்திய ஆய்வில் தோராயமாக ஒரு லிட்டருக்கு 10.4 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். சோதனைக்குட்படுத்திய சில பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் ஏதுமில்லை. ஆனால், ஒரு சில பாட்டில்களில் 10,000 நுண்ணிய துகள்கள் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் 2.1 பில்லியன் மக்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுகாதாரமற்ற நீரால் பரவும் நோய்களுக்கு நாள் ஒன்றிற்கு 4,000 குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ORB MEDIA வெளியிட்ட தகவல் குறித்து இரு முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், ORB MEDIA-வின் அளவுகள் பெரிதாகக் காண்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
AQUA , AQUAFINA, BISLERI , DASANI , EPURA, EVIAN , GEROSTEINER, MINALBA, NESTLE PURE LIFE, SAN PELLEGRINO, WAHAHA உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களில் இருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டுள்ளனர். அதில், இந்திய நிறுவனமான BISLERI-ல் அதிகபட்சமாக 5,230/லிட்டர் மற்றும் NESTLE PURE LIFE-ல் 10,390/லிட்டர் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
 
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குழாய் நீர் சுகாதாரமற்றது என்று நினைத்து குடிநீர் பாட்டில்கள் அதிகம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், குடிநீர் பாட்டில்களில் கூட பிளாஸ்டிக் போன்ற மாசு துகள்கள் கலந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இவைகளே இப்படி என்றால்; நாம் பருகும் கேன் நீரை நினைத்துபார்கவும். 

கையில் எடுத்து தரும் உணவை விட பலமடங்கு ஆபத்தானது கையில் கிளவுஸ் அனைத்து பரிமாறும் உணவு; நாகரீகம், சுத்தம் எனும் பசப்பு வார்த்தையில் வாழ்க்கையில் நாம் நமது வாழ்நாட்களை குறைத்துக்கொண்டு வருகிறோம். இது போன்ற தகவல்களை அறிந்தும் இவற்றால் ஒரு தீமையும் இல்லை என்ற மனப்பாங்கு மக்களிடையே உள்ளது என்பது வேதனை.

தமிழர் ஆய்வுக் கூடம்
Tamil Research Institute (Tamilri)...