திருப்பூர் தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டில் சென்ற வருடம் இடைத்தரகர்கள் கள்ளத்தனமாக வெளிமாநில காய்கறிகளை இறக்குமதி செய்து விற்பதால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஏர்முனை இளைஞர் அணித்தலைவர் *NSP.வெற்றி* அவர்கள் தலைமையில் 200 மேற்பட்ட விவசாயிகள் இடைத்தரகர்களை முற்றுகையிட்டு எச்சரித்ததன் விளைவாக வெளிமாநில காய்கறிகள் வருவது முற்றிலும் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இடைத்தரகர்கள் கள்ளத்தனமாக அதிகாலை வேளையில் காய்கறிகளை கொண்டு வந்து நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர். இதனால் காலையில் உழவர் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளும், தினசரி மார்கெட்டிற்கு காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளும் தாங்கள் கொண்டு வரும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
உழவர் காவலர் NS.பழனிச்சாமி அவர்களின் பெரும் முயற்சியால் சுதந்திரமாக விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வந்த மார்க்கெட் இன்று இடைத்தரகர்களின் ஆதிக்கத்தாலும், பேராசை பிடித்த வியாபாரிகளாலும் கட்டுண்டு கிடக்கிறது.
இவை அனைத்தும் தெரிந்தும் மார்கெட்டை சுங்க ஏலம் எடுத்திருப்பவர்கள் கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.