08/03/2019

பனைமரத்தின் வேர்களுக்கடியில் புதைந்து கிடக்கும் தமிழர்களின் மறைக்கப்பட்ட சரித்திரம்...


சமீபத்தில் இணையத்தில் “மோசசு சோனி” (Moses Jony) என்பவர் பனைமரம் தமிழர்களின் அடையாளம் என்று பதிந்து இருந்தார். அது என்னுள் உறங்கி கொண்டிருந்த அதை பற்றி கடந்த காலங்களில் நான் படித்து தெரிந்து கொண்ட விடயங்களை ஆழ்ந்த மையலில் இருந்து தட்டி எழுப்பி விட்டது. அந்த அன்பருக்கு எனது நன்றிகள்.

பனை மரத்திற்கும் தமிழர்களின் நாகரீகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தமிழ் தேசியம் பேசுகிற போலியான பல அன்னகாவடிகளுக்கு தெரியாத விடயம். பனைமரத்தையும் அதை ஒட்டிய வரலாற்று உண்மைகளையும் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

பனை மரம் என்பது ஒரு மரம் என்ற அளவில் நின்றுவிடாது பண்டைய தமிழர்களின் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவு சார்ந்த கூறுகளை தனது முதுகில் தூக்கி சுமந்த ஓடம். பனையேறும் தொழில் ஏதோ கள், பதனி இறக்குவது மட்டும் என்றல்லாமல் அதையும் தாண்டி அந்த தொழிலுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது.

பனையேறும் தொழில் என்பது தமிழர்களின் இலக்கியத்தோடு தொடர்பு உடையது. எப்படி என்று மண்டை குழம்ப வேண்டாம்.

பனை மரத்தில் இருந்து தான் அன்றைய காலத்தில் எழுத்தோலைகள் தயாரிக்கப்பட்டன. சங்ககாலத்தில் பனை ஓலையை தயார் செய்வது என்பது தற்காலத்தில் அச்சகத்தை, புத்தக பதிப்பகத்தை நடத்துவதற்கு சமம். ஒரு அச்சகத்தை நடத்துபவர் குறைந்த பட்ச கல்வி அறிவு உள்ளவராகவாவது இருக்க வேண்டும். அதே போன்று பனை மரத்தோடு தொடர்புடையவர்களும் சங்ககால அறிஞர்களோடு தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி எனில் பனையேறுதல் ஏன் இழிவான தொழிலாக கருதப்பட வேண்டும் என்று கேள்விகள் எழும்புவது இயற்கையே...

பார்ப்பனியம் தமிழ்நாட்டில் நுழைந்த போது பெரும்பான்மையான தமிழர்கள் புத்த சமண மதத்தை சேர்ந்தவர்களாகவும் கல்வியில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

பார்ப்பனியம் ஒரு சமூகத்தை அழித்தொழிப்பதற்கு செய்யும் வேலையே, அவர்கள் எந்த சமூகத்தை அடிமைபடுத்துகிறார்களோ அந்த சமூகத்தின் கல்வி அறிவை நிர்மூலப்படுத்துவதே.

அப்படி தான் பார்ப்பனியத்தின் சதியில் வீழ்ந்த பண்டைய தமிழகத்தில் கல்வியில் தேர்ந்த அறிஞர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் கல்வி பயிலுவது தடை செய்யப்பட்டு அவர்கள் இழிமக்களாக ஒடுக்கப்பட்டனர். அவர்கள் சார்ந்த தொழில்கள் இழிவானதாக பரப்புரை செய்யப்பட்டது. தமிழர்களுடைய இலக்கியங்கள் அவற்றை சுமந்து கொண்டலைந்த பனையோலைகளோடு கொழுத்தப்பட்டது. அப்படி பட்ட சூரையாடலுக்கு தப்பி பிழைத்தவை தான் தற்போது நாம் கொண்டாடும் சங்க கால தமிழ் இலக்கியங்கள்.

அது மட்டுமா பண்டைய தமிழர்களின் தொழில் நுட்பங்கள் சிதைக்கப்பட்டன. பார்ப்பனியம் அதற்கு தேவைப்பட்ட தமிழர்களின் அறிவுச்செல்வங்களை திருடி அவர்களது பெயரில் காப்புரிமை செய்து கொண்டது. செத்துப்போன மனித உடல்களை பதப்படுத்தும் பண்டைய எகிப்தியரின் தொழில்நுட்பங்களை உலகத்தின் கவனத்தை கவர்ந்தது என்றால், உயிருள்ள தமிழ் இலக்கியங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுமந்த பனையோலைகளை பதப்படுத்தும் தொழில்நுட்பமும் அவற்றை கையாண்ட சான்றோர்களின் நேர்த்தியும் உலகை ஆச்சரியப்படுத்திருக்க வேண்டும் தானே. அது ஏன் நடக்கவில்லை ?

எகிப்தியர்களின் தொழில் நுடபத்தை பற்றிய குறிப்புகளை அறிவதற்கு தடயங்கள் இருந்தது. ஆனால் பண்டைய தமிழர்களின் அறிவு சார் தொழில் நுட்பங்கள் பார்ப்பனியத்தால் தடயமே இல்லாமல் அழிக்கப்பட்டதும் அந்த தடயங்களை பற்றிய தேடல்களின் முயற்சி பார்ப்பனிய சக்திகளால் அவ்வப்போது முடக்கப்பட்டு வருவதன் விளைவு தான் அது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் மிகவும் அதிகமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பின்னணியை பார்த்தால் அவர்கள் கலை, இலக்கிய, தொழில்நுட்ப அறிவு சார்ந்த குடியினராக தான் இருப்பர்.

ஒரு எடுத்துகாட்டிற்கு முன்பு சாணார் என்றழைக்கப்பட்ட நாடார்களையும், பறையர்களின் உயர்ந்த வகுப்பினராக கருதி கொள்ளும் வள்ளுவ குடிகளையும் எடுத்து கொள்ளலாம். பல பேர் சாணார் என்ற வார்த்தையை இழிவான ஒன்றாக கருதலாம். நான் அவ்வாறு கருதவில்லை. அது “சமணர்” என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்பது என்னுடைய யூகம்.

தமிழகத்தில் புத்த சமண மதங்கள் கோலேச்சின என்பதை நாம் இந்த இடத்தில் நினைவில் கொண்டாக வேண்டும். தென் தமிழகத்தில் சாணார் என்றழைக்கப்பட்ட மக்களும் சமணர்களாக இருந்திருக்க வேண்டும்.

இந்த சாணார் என்றழைக்கப்பட்ட குடிகள் தான் பனை மரத்தோடு தொடர்புடைய தொழில்நுட்பங்களில் தேர்ந்தவர்கள்.

அதே போல் பதப்படுத்தப்பட்ட பனையோலைகளில் சாகாவரம் பெற்ற தன்னுடைய இரண்டடி ஆயுதத்தை செதுக்கிய வள்ளுவரும் சமண மரபை சேர்ந்தவர் என்று கூறப்படுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வள்ளுவர் போன்ற தமிழ் ஞானிகளோடு சாணார்கள் என்று தற்போது விழிக்கப்படும் சக சமணர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்த பட்சத்தில் அவர்களும் கல்வி அறிவில் தேர்ந்தவர்களாக தான் இருந்திருப்பர். ஒரு வேளை வள்ளுவரின் குறள்களில் பல அந்த சமணர்களின் பாதிப்பில் எழுந்தவையாக கூட இருக்கலாம்.

பண்டைய இலக்கியங்களில் சமணர்கள் வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள் என்றே குறுப்பிடப்பட்டு இருக்கிறது. வியாபார தொழிலில் சிறந்து விளங்குபவர்களான “செயின்கள்” என்று வழங்கப்படும் இன்றைய வடஇந்திய சமணர்களோடு பொருத்தி பார்க்கும் போது அந்த பண்டைய தமிழ் சமூகத்தை சேர்ந்த சமணர்களின் மரபணுக்கள் தான் இன்றைய நாடார்களின் ரத்தத்தில் இருக்கிறதோ என்னவோ. ம்ம்ம்ம் சாதிகளே இல்லாது இருந்த தமிழர்களின் அடையாளத்தை சிதைத்து அவற்றை இழிவான சாதிய பெயர்களாக கற்பித்த பார்ப்பனியத்தின் வீச்சை பார்க்கும் போது அது எந்த அளவிற்கு தமிழர்களின் பண்பாட்டை சூறையாடி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இடைப்பட்ட காலங்களில் தமிழர்களிடையே புகுத்தப்பட்ட போகி பண்டிகையின் பெயரில் பார்ப்பனிய சக்திகள் அவர்களின் சதியில் சிக்கி அறியாமையில் மூழ்கி கொண்டிருந்த தமிழர்களிடம் “பழையன கழித்தல் புதியன புகுதல்” என்று கூறி பார்ப்பனிய வெறியர்களிடம் சிக்காமல் எஞ்சி இருந்த கலை இலக்கிய அறிவியல் கருவூலங்களை தீயால் எரிக்கவும் ஆற்றில் விடவும் தூண்டினர்.

இப்படி தான் தனிநபர்களிடம் இருந்த அறிவு செல்வங்களும் சூறையாடப்பட்டன. நம்மாளுங்க பல பேருக்கு போகி பண்டிகையின் பின்னணி தெரியமால் இவனுங்களும் வீட்டில் இருக்கிற பழைய பொருட்களை எல்லாம் எரித்து கொண்டாடுவானுங்க. தான் சார்ந்த சமூகத்தின் கலாச்சார பண்பாட்டு அழிவுகளை கொண்டாடும் இனம் உலகத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது தமிழினமாக தான் இருக்கும்

தண்ணீருக்கடியில் எப்படி காற்றை மறைத்து வைக்க முடியாதோ அதே போன்று தான் பார்ப்பனியத்தால் அவர்களால் கீழ் நிலைக்கு தள்ளப்பட்ட மக்களை ரொம்ப காலத்திற்கு அவ்வாறு வைத்திருக்க முடியவில்லை. தமிழ் சமூகத்தில் அவ்வபோது கிளர்ந்தெழுந்த சமூக விடுதலை இயக்கங்களின் தோன்றல்களும், கிருத்துவ மத போதகர்களின் வருகையும் நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் அறிவு தேடல்களுக்கு வழி திறந்து விட்டது. தங்களுடைய மரபணுக்களில் அறிவு சார்ந்த காரணிகளை சுமந்து கொண்டிருந்ததால் தான் என்னவோ கல்வி கற்க உரிமை கிடைத்தவுடன் குறுகிய காலத்திலேயே பார்ப்பனிய வெறியர்களோடு கல்வியில் சரிக்கு சமமாக போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்று விட்டன அந்த சமூகங்கள்.

இவ்வளவற்றிற்கும் இடையில் இத்தனை நூற்றாண்டுகள் கல்வி கற்க தடை செய்யப்பட்ட சமூகங்கள் ஒரு நூற்றாண்டிற்குள் கல்வி அறிவில் தங்களை பெரிய அளவில் வளர்த்து கொள்ள முடிந்ததென்றால், ஒருவேளை பண்டைய தமிழ் மூததையர்கள் பார்ப்பனியத்திடம் அடிமையாகாமல் இருந்து கல்வி கற்கும் உரிமையை இழக்காமல் இருந்து இருந்தால் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவியல் அறிவில் எத்தைகைய முன்னேற்றத்தை தற்போதைய தமிழ்ச்சமூகம் அடைந்து இருக்கும் என்று எண்ணி பார்த்தால் யாரோ சுத்தியால் மண்டையில் போட்டது போன்று வலிக்கிறது...

அணையைத் தகர்த்து காவிரியை மீட்டவன்...


மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173) காவிரியைத் தடுத்த போது இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163) அணையை உடைத்து காவிரியை விடுவித்தான்.

இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும் நாம் உருவாக்கி இருந்தோமானால்...

காவிரியை கன்னடவன் விதிமீறி அணைகட்டித் தடுத்திருப்பானா?

அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?

அல்லது பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கைவிடுவானா?

Secret Drink To Lose Belly Fat / தொப்பை குறைக்க அருமையான ஜூஸ்...


https://youtu.be/NStMvwqteyk

Subscribe The Channel For More Tips...

ஆழ்மன உணர்வு நிலை...


ஆழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல.

ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை.

எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம்.

எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்..

அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர்.

நம் தற்போதைய நோக்கத்திற்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன்.

அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.

மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது.

அவையெல்லாம் மாறும் போது அந்த ‘நாம்’ தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில ‘நாம்’கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில ‘நாம்’கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.

மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன. இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.

இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது. ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.

எனவே தான் “உன்னையே நீ அறிவாய்” என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மீகத்திற்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது. (இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும், ஆன்மீகத்திற்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.).

தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல. ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.

முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா? ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்...

தமிழா விழித்துக்கொள்...


தற்கொலை செய்ய முடியாத கடல்...


சாக்கடலில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடியாது. அக்கடலில் விழுபவர் மிதப்பார். அக்கடலில் விழுபவர்கள் மிதந்த படி பத்திரிகை கூட படிக்கலாம்.

உண்மையில் அது சாகமுடியாத கடல். சாக்கடல் நீரில் தாங்க முடியாத உப்புக்கள் உள்ளன. இதனால் நீரின் அடர்த்தி அதிகம். ஆகவே தான் அந்த கடலில் மிதக்க முடிகிறது.

உப்புகளின் அளவு அதிகம் என்பதால் சாக்கடலில் மீன், நண்டு, ஆமை போன்று எவ்வித உயிரினமும் கிடையாது. எனவேதான் அக்கடலுக்கு அப்பெயர்.

சாக்கடலில் அடியில் நுண்ணூயிர் இருப்பதாக அண்மையில் கண்டுபிடிக்கபட்டது.யேர்மனி மற்றும் இசுரேல் சேர்ந்த இரண்டு நிபுணர்கள் சாக்கடலுக்கல் ஆராய்ந்த போதுதான் நுண்ணூயிர்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

அது மட்டுமன்றி சாக்கடலுக்குள் அடியில் நீரூற்றுகள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அது உப்பற்ற நல்ல நீராக உள்ளதாம்.

சாக்கடலின் நீரின் சேற்றுகளில் விசேச மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இச்சேறு சொரியசிசு(ஸ்) உட்பட சில தோல் கோளாறுகளை குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

சாக்கடல் யோ(ஜோ)ர்டான், இசுரேல் , பாலசு(ஸ்)தீனம் ஆகியவற்றுக்கு நடுவே நான்கு புறம் நிலத்தால் சுழப்பட்டுள்ளது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பாசனதுக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் நதி மீது யோர்டானும் , இசுரேலும் பல அணை திட்டங்க்களை மேற்கொண்டன.

சாக்கடலின் நீலம் 67 கிலோ மீட்டர் , அகலம் 18 கிலோ மீட்டர். அதிகபட்ச ஆழம் 370 மீட்டர்...

காய் கனிந்து பழமாகும்போது இனிப்புச்சுவை எவ்வாறு தோன்றுகிறது?


ஒரு காய் கனியாகும் பருவத்தில் (ripening) அக்காயினுள் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதாவது, அக்காயின் சதைப்பகுதி செல்களிலிருந்து வெளிப்படும் ஆற்றலானது எதலீன் (ethylene), இன்வர்டேஸ் (invertase) உள்ளிட்ட பல்வகை என்சைம்களைச் (enzymes) சுரக்கிறது.

இந்த என்சைம்கள் காயின் சதைப்பகுதியை மென்மையாக்குகிறது. கூடவே சதையின் நிறத்தை மாற்றுகிறது.

பழத்திற்கு மணத்தைத் தரும் பொருட்களும் (flavour materials) உருவாகி,காய் பருவத்தின் கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நீக்குகிறது.

அதைத் தொடர்ந்து காயின் சதைப்பகுதியிலுள்ள மாவுப் பொருட்கள் (starch) சர்க்கரையாக மாற்றம் அடைகிறது.

இந்தச் சர்க்கரைக்கு அதிக இனிப்புச் சுவையைத் தரும் என்சைம் இன்வர்டேஸ் என்சைமே ஆகும்.

குறிப்பிட்ட பருவத்திற்கு (climate change) முன்பாக இந்தச் செயல்கள் காயினுள் தொடங்க ஆரம்பித்து விடுகின்றன.

இந்தக் கனியாகும் செயலின் காலம் (ripening period) கனிகளுக்குக் கனி மாறுபடுகிறது. வாழைப்பழம் மிகக் குறைந்த காலத்தில் பழுத்துவிடும்.

சிட்ரஸ் வகைப் பழங்களான ஆரஞ்சு,சாத்துக்குடி போன்றவை சில மாதங்கள்கூட நீடிக்கும். சில பழங்களின் மாவுப்பொருள் தவிர கொழுப்பும் (fat) சர்க்கரையாக மாற்றம் அடைந்து இனிப்புச் சுவையைத் தருகிறது...

செயற்கை விழித்திரை...


செயற்கை விழித்திரை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை கண் பார்வையற்றவர்களுக்காக செயற்கை விழித்திரையை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே செயற்கையான முறையில் விழித்திரையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித்திரை பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதன் மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து விளையாட ஆரம்பித்தது. எனவே இதே தொழில்நுட்பத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் மனிதர்களிடம் இச்சோதனை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்...

பாஜக மோடிக்கே கோபம் வந்துவிடும் போல இந்த அதிமுக பொய்களை கேட்டால்...


சந்திரகலை என்றால் என்ன...?


இடது நாசிச் (இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி, இடகலை, இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை, பின்கலை, வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு, சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'கடற்பஞ்சு' (Sponge) போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்...

சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும்...


மேற்கத்திய நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள்.

நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர்.

இன்று மொத்த நாடே நாசமாய் போனது.

கையூட்டு (லஞ்சம்)  வாங்கியவர்களின் சந்ததி உட்பட.

சோமாலியாவின் முதல் நாசம் 1960களில் மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் மீத்தேன் மற்றும் இதர வாயுக்களின் சோதனை சோமாலியாவின் ஒட்டு மொத்த விவசாயத்தையே அழித்து விட்டது.

இரண்டாவதாக அந்நாட்டை விளையாத பூமி என்று அதே அமெரிக்கர்களால் முத்திரை  குத்தப்பட்டு,  அந்த நாட்டை உலக குப்பை தொட்டியாக்கி அனுக்கழிவு, மருத்துவக்கழிவுகளை கொட்டி கடல்வளத்தையும் அழித்தார்கள்.

ஓரு விவசாயியும், மீனவனும் இல்லாமல் போனால் எஞ்சியவர்கள் உணவுக்காக கொள்ளையர்களாகத் தானே மாற முடியும்...

அதே அமெரிக்கர் வயிற்று பசிக்கான சோமலியர்களின் கொள்ளையிலும்,  வயிற்றில் புல்லட்டை சுட்டு பரிசளித்தான்.

நம் கண் முன்னே ஓரு நாடே சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல் முழ்குகிறது. 

சோமாலியர் சில நேரங்களில் பல உயிரை கொடுத்து கடத்திய கப்பலில் சில உணவு பொருட்களை திருடி சென்ற அவலமும் உண்டு. பசிக்காக போராடுபவனுக்கு கடல் கொள்ளையன் பட்டமும்...

இன்றைய கார்ப்ரேட் அமெரிக்க,  இஸ்ரேலின் அடுத்த சோமாலிய பார்வை நம்நாடு.

கார்ப்ரேட்களுக்கு நம் நாட்டில் மோடி ஓதுக்கி குடுத்த நிலம் தமிழ்நாடு.

தனக்கு ஓட்டு போடாத இவர்கள் இருந்தாலென்ன,  செத்தாலென்ன என்ற மோடியின் மனநிலையாக இருக்கலாம்.

கிளின் இந்தியா என்று மாய கூச்சலிட்டு மக்களின் கண்னில் மண்னை தூவிய மோடி பல டண் குப்பைகளை இந்தியாவில் கொட்ட உலக நாடுகளுக்கு அனுமதி வழங்கி முடிந்து விட்டது.

சென்னையில் ஓரு கப்பல் விபத்து அதனால் பல லட்சம் லிட்டர் கழிவு ஆயில் கொட்டியது. அது விபத்து அல்ல. நம் தமிழ்நாட்டின் மீது நடத்தப்பட்ட வெள்ளோட்டம்.

இனி வருங்காலங்களில் நம் நாட்டை தேடி கேன்சர் குப்பையும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த மீத்தேன் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால் 3,000 கோடி மத்திய அரசுக்கு,  தமிழக நல்லி எலும்பு நாய்களுக்கு 400 கோடி கிடைக்கும்.

தமிழக மக்களாகிய நாம் விரைவில் சோமாலியாக மாற தயாராகி கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை இந்தியாவிடமிருந்து மீட்க போகிறோமா ?

அல்லது பாஜக தலைவர்கள் சொல்வது போல் இந்தியாவிற்காக தமிழ்நாட்டை இழந்து சோமாலியா போல் செத்து மடிய போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடும் விளிம்பில் நிற்கிறோம்.....

பாஜக போட்டியிடும் 5 தொகுதி தவிர்த்து மற்ற 35 தொகுதிகள் பாமக கூட்டணி வெற்றி பெற வேண்டும்...


திமுக ஸ்டாலினும் நடிப்புத் துறைகளும்...


1987 ல் கருணாநிதியால் கதை வசனம் எழுதப்பட்டது வெளிவந்த ஒரே இரத்தம் என்ற திரைப்படத்தில் நடிகனாக அறிமுகமாகி.. படம் ஒடாததால்... நாடகங்களில் நடித்து விட்டு...

திமுக என்ற நாடக நிறுவனத்திலேயே திரும்பவும் கருணாநிதியின் கதை வசனத்தில் நடிக்க தொடங்கி..

இன்றுவரை ஆட்சியில் இருக்கும் போது ஒரு நடிப்பும்... ஆட்சியில் இல்லாத போது ஒரு நடிப்பாக நடித்து...

அந்த படத்திற்கு பெயராக நமக்கு நாமே என்று சூட்டிக் கொண்டார்...

இதுவே திமுக தெலுங்கர் ஸ்டாலின் வரலாறு...

முதுமையை போக்கி என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி...


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்...

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே..

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்...

மறக்கவும் மாட்டோம்.. மன்னிக்கவும் மாட்டோம்...


தமிழ் தந்த சிறப்பு நன்னூல்.. நன்னூல் தமிழுக்கு தந்த சிறப்பு...


இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது?

பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது ?

துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன்..

தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு, கழுத்து, தலை, மூக்கு, ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது.

இதை ஒலிக்க உதடு, நாக்கு, பல், அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ) அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது, அங்காத்தல் ( வாய் திறத்தல் ) , உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல், குவிதல், என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது..

அ,ஆ எனும் முதல் இரு எழுதும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது..

இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி,  வாய், அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் (பொருந்துதல்) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது...

உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன..

தமிழ் எழுத்துகளுக்கு எத்தனை சிறப்புக்கள் என்று பாருங்கள் ?

உலகில் வேறு ஏதாவது மொழிக்கு இந்த சிறப்பு உண்டா ?

இன்னும் என்ன தயக்கம் தமிழை பெருமையாய் பேச ?

தமிழரின் சாதனைத் தேடல் தொடரும்...

மெக்காலே அடிமைக்கல்வியின் அடிப்படையில் தான், நாம் இதுவரை நம் தனிப்பட்ட வாழ்க்கையின் தீர்வே நிர்ணயிக்கிறோம்...


அதை போல தானே, இந்த அடிமை சமூகத்தில் அதிகாரவர்க்கம் எழுதி கொடுத்த தீர்வே தான் தலைவனும் கொண்டு வந்து நம்முன் வைப்பான்...

நாங்கள் எந்த கட்சிக்கும், எந்த மதத்திற்கும், எந்த சாதிக்கும் தனிப்பட்ட முறையில் எதிரானவர்கள் இல்லை..

அவைகளை எல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை..

என் மக்களை அடிமையாக்கும் அனைத்தையும் எதிர்த்து இந்த உவன் கேள்வி கேட்பான்...

காற்றுக்கு எத்தனை பெயர்கள்...


தமிழர்கள் காற்றினை வகைபடுத்திய விதம். திசை மற்றும் வேகம் போன்றவற்றை கொண்டு காற்றின் வகைகள்.

(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள

(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று..

(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று..

(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று..

(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று..

(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்...

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று..

(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்..

(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்..

(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று..

(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று..

(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று..

(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று..

(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று சூறாவளிக் காற்று...

நீங்கள் 7, 16, 25 எண்ணில் பிறந்தவரா... தவறாமல் பாருங்க...


https://youtu.be/2I6T_oFF8yQ

Subscribe The Channel For More News...

2400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் தயாரித்த (கருப்பு & சிவப்பு நிற ) மட்கலன்கள்...


அழகிய வண்ணமும் நேர்த்தியான தயாரிப்பும் கொண்டது .

590 'C வெப்பநிலையில் சுடப்பட்டது இந்த மட்கலன். மேலே கருப்பும் கீழ் பகுதியில் சிவப்பு நிறம் வருவதற்கு அவர்கள் சுடும் போது கொடுக்கப்பட்ட வெப்பநிலை மாற்றமே காரணம்...

தமிழரின் தொழில்நுட்பம் என்றுமே தன்னிகர் இல்லாதது தான்...

கார்பரேட் பொருட்களை வாங்காதீர்கள்...


இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.13.5 லட்சம் மதிப்புடைய 400 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்...


கால்களில் அணிந்திருந்த செருப்புகளில் மறைத்து வைத்திருந்த சென்னையை சோ்ந்த ஹயரூனிசா (38)என்ற பெண் பயணியை சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை...

ஆழ்மன சக்திகள்...


உடலை விட்டு வெளியேறும் ஆத்மா
மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன. அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது.

பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம்.

ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள்.

விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள்.

ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.
ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது. தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும்.

தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்...

நம்மை தொடாமல் நம் அரசை வைத்து நம்மை எப்படி தாக்குகிறானோ அதே போல் நாமும் மறைமுகமாக தாக்க வேண்டும்...


அவன் வணிகத்தை தடுத்து, வலியை புகுத்து...

பனங்காய் பணியாரம்...


நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள். பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.

நார் வெட்டும் கைகள் பத்திரம். வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்.

அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள். களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.

வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை வாடை போக காச்சி எடுங்கள். ஆறவையுங்கள். இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.

பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்...

பனங்களி – 1 கிண்ணம்
சீனி- ¼ கிண்ணம்
பொரிக்க எண்ணெய் – அரை லீட்டர்.
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா – ¼ கிண்ணம்
உப்பு சிறிதளவு.

செய்முறை...

காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.

தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள்.

மீதிக் களியையும் அவ்வாறே செய்து கொள்ளுங்கள். எண்ணெய்த் தன்மையைப் போக்கிக்கொள்ள காகிதத்தின் மீது  போட்டு எண்ணெய்  வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.

மீண்டும் மீண்டும் சாப்பிட்டு உடனேயே தட்டுக் காலியாகிவிடும். சற்று நேரத்தில் காலியாகப் போகும்..

குறிப்பு...

கோதுமை மா (மைதாமா) கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும். அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் போது களிப்பிடியாக இருக்கும்...

தமிழா சித்திரை 1 என்பது தமிழ் வருதட பிறப்பல்ல.. அது சமஸ்கிருத வருட பிறப்பு...


பொதுவாக நாம் தமிழ் மாதங்கள் என்று குறிப்பிடுவது சமஸ்கிருத மாதப் பெயர்களின் மருவிய வடிவம்.

சமஸ்கிருத மாதத்தின் முதல் மாதம் சைத்ரா-வை சித்திரையாகவும்.. கடைசி மாதமான பல்குனி-யை பங்குனியாகவும் மாற்றி தமிழனை ஏமாற்றி வருகின்றனர்...

ஊசல் என்னும் ஊசலாட்டம்...


பழங்காலத் தமிழர்கள் தங்கள் உடலை வளர்க்கும் பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றனர்.

உடலைச் சிறந்த முறையில் பேணுத அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல் திறனும் தேடிய செல்வமும் அழியும் என்று நம்பியிருக்கின்றனர்.

எனவே, பழந்தமிழர்கள் தங்கள் இளைய பருவத்தினரைத் விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்து அவர்களின் உடல் வளத்தைப் பெருக்குவதில் நாட்டம் கொண்டனர்.

அக்கால மக்கள் தாங்கள் வாழ்ந்த திணைக்கேற்ப விளையாட்டுகளை உருவாக்கிக்கொண்டனர்.

ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது.

மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும்.

இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க இலக்கியங்களில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. நற்றினை எனும் நூலில்...

“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்”

என்ற வரிகள் வெளிப்படுகின்ற “மடவோர்க்கியற்றிய மாமணி யூசல்” என்று சொல்லப்படுகின்றது.

முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஊஞ்சல் விளையாட்டு இன்று குறைந்து விட்டது.

ஆனால், மேற்கு நாடுகளில் பொதுப் பூங்காதோறும் ஊஞ்சல்கள் அமைத்து ஊஞ்சலாடுவது இன்று வழக்கமாகிவிட்டது...

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு தீர்வு...


வெற்றிலைத் தட்டம்...


வெற்றிலைத் தட்டம் பித்தளை உலோகத்தினாலான பாதமும் ஒரு சாண் வரை உயரும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த வளைவான மேற்புறமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் ஆகும்.

இந்தியா, இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிலையும் வெற்றிலைத் தட்டமும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழர் விருந்தோம்பலிலும், வாழ்வோட்ட சடங்குகளிலும் இவை சிறப்பான ஒர் இடத்தைப் பெறுகின்றன.

தென்னிந்தியாவில் வெற்றிலைக் காளாஞ்சி எனவும் இலங்கையின் வடபுறத்தில் கால் தட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது...