09/08/2018
ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசலில் இரண்டு பேர் நசுங்கி பலி...
சென்னை காவேரி மருத்துவமனையில் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பிரமுகர்களோடு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுக்க இருந்து திமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் சென்னை நகரமே தொண்டர்களால் நிரம்பி வழிகிறது. தலைவரின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்த்து விட மாட்டோமா என்று என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
அதுபோல சென்னை மெரினா பீச்சில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அப்போது தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த செண்பகம் (60) மற்றும் 60 வயது மதிக்ககத்தக்க மற்றொருவரும் உயிரிழந்தனர்...
மானங்கெட்டத் தமிழனே...
உலக மக்களின் பார்வை படும் மெரினாவில்...
தெலுங்கர் அண்ணா சமாதி,
மலையாளி எம்ஜிஆர் சமாதி,
கன்னட ஜெயலலிதா சமாதி,
கன்னட தெலுங்கர் பெரியார் சிலையென்று எல்லா எழவும் இருக்குது...
எங்கடா அந்த
ராஜராஜ சோழன் சமாதி ?
எங்கடா அந்த
ராஜேந்திர சோழன் சமாதி ?
எங்கடா போனது என்
சூர்யவர்மன் சிலை?
எங்கடா அந்த
குலோத்துங்கன் நினைவிடம்?
எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்.?
எங்கடா அந்த
கரிகால சோழனின் சிலை?
எங்கடா இருக்கு என்
வேலுநாச்சியார் சமாதி ?
எங்கதான்டா இருக்கு
சேரன் செங்குட்டுவனின் சமாதி ?
எங்கடா அந்த அழகுமுத்தோட
நினைவு மண்டபம்.?
எங்கு பார்த்தாலும்
அண்ணா அறிவாலயம்
அண்ணாநகர்,
அண்ணா சாலை
அண்ணா சிலை
பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை
பெரியார் சிலை
எம்ஜிஆர் மணிமண்டபம்
எம்ஜிஆர் பல்கலைகலகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர்
எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை
எம்ஜிஆர் சிலை
அடுத்தால அம்மா, சின்னம்மா, புஜ்ஜிமா, கட்டுமரம் இப்படி சொல்லியே நாசமா போங்க..
உலக சாம்ராஜ்யங்களை வென்றுகாட்டி நம் தேசத்திற்கு வெள்ளையனைத் தேடி
வரவழைத்த நம் முன்னோர்களுக்கு சரியான சிலைகளுமில்லை, நினைவு கட்டிடங்களும் இல்லை.
அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத்திட்டத்தில் ஒழுங்காக இல்லை..
இடையில் வந்த அத்துனை கழிசடைகளின் வரலாறும் பாடத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறது.
கரிகாலன் கட்டியக் கல்லணை இன்றுவரை சுற்றுலாத் தலமாக மாற்றப்படவில்லை.
ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான்.. அந்தக் கோவிலைக் கட்டியவன் யாரென்று கூடத் தெரியாமல்..
அந்தக் கோவிலைக் கட்டிய மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட.. அப்பேற்பட்ட அவனது
நடுநிலைத்தன்மையைப் பாராட்டி நீ அல்லவா அவனது பெயரை உலகம் போற்றிட. செய்திருக்க வேண்டும்.?
ஒன்றுமே செய்யாமல் இருந்துவிட்டாயே நன்றி கெட்டவனே.
பசுவுக்காக தன் மகனையே கொன்ற சோழனின் கல்லறையை பாரடா..
கஜினி முகமதுவை பதினேழு முறை ஓடவிட்டு விரட்டிய நம் சோழனின் கல்லறையை பாரடா..
தான் கட்டியக் கோவிலில் தன் பெயரை எழுதாமல் அதில் வேலை செய்த சிற்பக் கலைஞர்களின் பெயரை எழுதி வைத்த நம் ராஜ ராஜ சோழனின் கல்லறையை பாரடா..
தெற்காசியாவை ஆண்ட ஒரு மாமன்னனின் கல்லறையை நீ வைத்திருக்கும் கோலத்தைப் பாரடா மானங்கெட்டத் தமிழனே.
அப்படி என்னாடா இந்த இடையில் வந்தவன் உனக்கு செய்து விட்டான்?
இடையில் வந்த ரெண்டு நல்ல மனுஷன் கக்கனும், காமராஜரும்..
கக்கன் யாரென்று யாருக்குமே தெரியாது.
காமராஜரை சாதிசங்க தலைவராய் மாற்றி வைத்துவிட்டாய்.
மாகராஷ்ட்ராவில் எத்தனையோ தலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத் தான்.
அந்த மான உணர்வு உனக்கு ஏனடா இல்லாமல் போனது மானங்கெட்டத் தமிழனே..
ஏன்டா எல்லா மாநிலத்துலயும் கடற்கரை இருக்கு அத்தனை பேரும் அதை சுடுகாடாவா ஆக்கியிருக்கான் நீங்க தான்டா இப்படி பண்ணுதீங்க...
பழ மருத்துவம்...
திராட்சை...
உடல் வறட்சி நீங்கி தோல் மென்மையாகும்.
மலச்சிக்கலை நீக்கும்.
நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் உடல் நடுக்கத்தை சீர் செய்யும்.
குடல் கோளாறுகள், நாக்குப் புண், வாய்ப்புண், தொண்டைப் புண் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
ஆப்பிள்...
உடல் குளிர்ச்சியாகும்.
இதயத்திற்கு வலிவைத் தரும்.
உணவை ஜீரணிக்கச் செய்யும்.
இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை பலத்தைக் கொடுக்கும்.
கொய்யா...
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
பற்களுக்கு வலுவூட்டும்.
எலும்புகளுக்கு வலுவூட்டும்.
விஷக்கிருமிகளைக் கொல்லும்.
ஆரஞ்சு...
தோல்நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
மேனியை அழகாக்கும்.
பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.
வாய் துர்நாற்றம், குடல் வறட்சி, அஜீரணம், மலக்கட்டு, கணைச்சூடு, பித்த மயக்கம், தலைச்சுற்றல், உடல் மெலிதல் முதலியவற்றை நீக்கும்.
சப்போட்டா...
தொண்டைப் புண்ணை ஆற்றும்.
இருமலைத் தடுக்கும்.
குடல்புண்ணை ஆற்றும்.
பெண்களின் கர்ப்பப் பை கோளாறுகளை நீக்கும்.
சர்க்கரை நோயாளிகள் உண்ணத் தகுந்தது.
சீறுநீரகக் கோளாறுகளை நீக்கும்.
மூல நோயைத் தணிக்கும்.
பேரிக்காய்...
எலும்புகளை உறுதிப்படுத்தும்.
பற்களை பலப்படுத்தும்.
இரைப்பை, குடலைப் பலப்படுத்தும்.
பசியைத் தூண்டும்.
குழந்தை பெற்றவர்கள் இதனை உட்கொண்டால் தேவையான பால் சுரக்கும்.
மாதுளை...
நினைவாற்றலை அதிகரிக்கும்.
மயக்கம், நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, சீதபேதி, ஆஸ்துமா ஆகியவற்றிற்கு அருமருந்தாகும்.
மூலம், முடக்குவாதத்திற்கு நல்ல மருந்தாகும்.
மாம்பழம்..
மலம் இளக்கும் தன்மையுடையது.
நரம்புகள் வலுப்பெறும்.
தூக்கத்தைத் தூண்டும்.
தாது விருத்தியாகும்.
பலாபழம்...
நரம்புகள் பலப்படும்.
ரத்தத்தை விருத்தி செய்யும்.
பற்களை கெட்டிப்படுத்தும்.
பற்கள் சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும்.
அன்னாசி...
அன்னாசிப்பழச் சாறு மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும்.
ரத்தத்தைச் சுத்தி செய்து, ரத்த விருத்தியை உண்டாக்கும்.
ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தி, மலக்குடலை சுத்தப்படுத்தும்.
விளாம்பழம்...
நோய்க்கிருமிகளை அழிக்கும்.
எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.
இளைஞர்களின் ஞாபக மறதியைப் போக்கும்.
வயோதிகர்களின் ஜீரணத்தை செம்மைப் படுத்தும்.
மூல நோய்க்குச் சிறந்த மருந்து.
இதயத்துடிப்பை சீராக வைத்திருக்கும்.
பப்பாளி...
வைட்டமின் "சி' சத்து அதிகமாக உள்ளது.
குடல் பகுதியில் புற்றுநோய் தாக்குவதைத் தடுக்கும்.
காதில் நோய்த்தொற்று, சளி, காய்ச்சல் தாக்காமல் பாதுகாக்கும்.
பப்பாளியின் விதை மற்றும் இலைகள் குடலில் புழுக்களை நீக்குவதற்கான மருந்தாகச் செயல்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று...
தனி பெரும் துணைக்கான ஓட்டம் பற்றி...
இங்க பலரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் தனக்கான துணைகளை தேடுகின்றார்கள் அதுவும் முழுநேர வேலையாக (அப்போ அப்போ நானும்) இது தேவையா ? தேவையில்லை யா ? இதில் என்ன நடக்கிறது முன்பும் பின்பும்...
இங்க இரண்டே விதத்தில் மட்டுமே இரு துணைகளுடன் வாழ்க்கை பயனிக்கிறது.
இரு அண்டம் சேர்ந்த பின் இரு பிண்டம் சேரும். (Soul then body = love marriage)
அல்லது...
இரு பிண்டங்கள் சேர்ந்து பிறகு அண்டத்தை அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் (body then soul = arranged marriage).
soul then body..
நீ இந்த பூமியில் படைக்கப்பட்ட பின்போ இல்லை படைக்க தயாராகி கொண்டிருக்கும் நேரத்திலோ உனக்கான துனை படைக்கப்பட்டோ படைக்கப்பட்டு கொண்டிருக்கலாம் (உடலால் அல்ல ஆன்மா ரீதியாக
புரியும் னு நினைக்குறேன்)..
இந்த முறையில் துணையாக வரபோகும் பிண்டத்தை நீ தேர்ந்தெடுப்பதற்கு முன்பே உன் அண்டம் இன்னொரு அண்டத்தை தேர்ந்தெடுத்துவிடும். இல்லை என்றால் புது அண்டத்தின் நகர்வுகள் பார்த்து நமது அண்டமும் அந்த அண்டத்தின் பிண்டம் நமது அண்டத்திற்கும் பிண்டத்தின் நகர்வுகளுக்கு சரிவரும் என்று உணர்ந்து இரு அண்டங்களும் முடிவு செய்யும்
(ஆக இந்த செயலை நோக்கி நீ ஓட தேவையில்லை காலம் வருசைபடி அதன் வேலையை செய்து கொண்டு வரும் போது உன்னக்கான காலத்தில் அது உனக்காக இயக்கும் / இயக்கப்படும்)
அண்டம்= ஆன்மா , பிண்டம் = உடல்
(சும்மா ஒரு clarification காக)..
Body then soul (Arranged marriage)...
இப்படி இணையும் இரு பிரபஞ்சத்தை பற்றி பார்ப்போம்...
இந்த முறையில் முதலில் பிண்டம் இணைந்து விடும் பிறகு வழியில்லாமல்
இரு அண்டங்களும் உணர்ந்து இரு பிண்டங்களும் அண்டங்களுக்கும் அதன் நகர்வுகளுக்கு பாதிப்பு வராமல் இரு பிண்டங்களும் தங்களின் அண்டங்களின்
நகர்வுகளை மறு கட்டமைப்பு செய்து கொள்வார்கள்..
இப்படி மறு கட்டமைப்பு நடக்கவில்லை என்றால் இரு பிரபஞ்சங்களுக்கும் சேதம் தான் அது எந்த அளவுக்கு போகும் என்றால் இரு அண்டங்களும் வெவ்வேறு பாதையில் நகர செய்துவிடும்..
ஆனால் இதில் இன்னொரு வகையும் இருக்கு பிரிந்த இரு பிரபஞ்சங்களில் உள்ள அண்டங்கள் நகர்த்தி மீண்டும் இணைக்கும் (innum deep uh orunal pessalam)...
தன்னுடைய அப்பா ஏரியா 51இல் வேலை செய்ததை அறியாத ஒரு மகன் அவர் இறந்ததும் கண்டெடுத்த படத்துடன் அவர் கொடுத்த குறிப்பு இது...
"Recently, my father passed away and while i always thought that he worked in the BLACK OPS ARENA i never thought that he had anything to do with aliens certainly, he never mentioned it. While cleaning out his house, i ran across the attached photo, if you look in the bottom right hand corned of the container there is an AREA 51 badge..."
இந்தப் படத்தை எப்படி எடுப்பது? இது பற்றி என்ன சொல்வது?
இவற்றையெல்லாம் நம்புவதோ அல்லது வதந்தி என ஒதுக்குவதோ எங்கள் பிரச்சினை என்றாலும், இது உண்மையாக இருந்தால் என்னும் கேள்வி, காட்டமான விளைவையே உருவாக்கக் கூடியது. இந்த ஏரியா 51 ஐ, 'இன்டிபென்டன்ஸ் டே' (Independence Day) என்னும் 'வில் ஸ்மித்' (Will Smith) நடித்த படத்தில் விபரமாகவே காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் அடிப்படைக் கருவே நான் மேலே சொன்னது தான்...
தமிழ்ச் சித்தர்கள் கண்டு பிடித்த ஆமை அதிசயம்...
ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து
-திருக்குறள் 126..
ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.
ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.
ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம். ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது.
இன்றைய உயிரியல் (Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.
இதையே திருமூலரும் கூறுகிறார்...
ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்கு
மேல்ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே
-திருமந்திரம் 2264, 2304...
மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் - ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்...
வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.
இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும்.
ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.
மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டு பிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும்.
திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு...
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர்...
1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்...
மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757)
பூலித்தேவன் (1715-1767)
வாண்டாயத் தேவன்
பெரிய காலாடி
வேலு நாச்சியார் - முத்து வடுகநாதர்
மருது பாண்டியர்
மருதநாயகம் (1725-1764)
விருப்பாச்சி கோபால நாயக்கர்
கட்டபொம்மன் (1760 - 1799)
தீரன் சின்னமலை (1756-1805)
மயிலப்பன் சேர்வைகாரர்
சின்ன மருது மகன் துரைச்சாமி
வீரன் சுந்தரலிங்கம்
வடிவு
ராமச்சந்திர நாயக்கர்
தூக்குமேடை ராஜகோபால்
சுத்தானந்த பாரதி
மோகன் குமாரமங்கலம்
சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்
மேயர் டி. செங்கல்வராயன்
சாவடி அருணாச்சலம் பிள்ளை
தூத்துக்குடி பால்பாண்டியன்
முத்துவிநாயகம்
டி. என். தீர்த்தகிரி
ஏ. பி. சி. வீரபாகு
எம். சங்கையா
கல்கி டி.சதாசிவம்
ஸ்ரீநிவாச ஆழ்வார்
தியாகி விஸ்வநாததாஸ்
திருச்சி வக்கீல்ரா. நாராயண ஐயங்கார்
மதுரை பழனிகுமாரு பிள்ளை
ஹாஜி முகமது மெளலானா சாகிப்
தஞ்சை ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்
அகினி திராவக அபிஷேகம்
கவி கா.மு.ஷெரீப்
எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
பி. சீனிவாச ராவ்
காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி
வீரன் வாஞ்சிநாதன்
எஸ். என். சோமையாஜுலு
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
ப. ஜீவானந்தம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
ஐ. மாயாண்டி பாரதி
புதுச்சேரி சுப்பையா
ஜி. சுப்பிரமணிய ஐயர்
வெ. துரையனார்
கோடை எஸ். பி. வி. அழகர்சாமி
வத்தலகுண்டுபி. எஸ். சங்கரன்
மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
சுப்பிரமணிய சிவா
எம். பி. டி. ஆச்சார்யா
ஆ. நா. சிவராமன்
ம. பொ. சிவஞானம் கிராமணியார்
என். எம். ஆர். சுப்பராமன்
அ. வைத்தியநாதய்யர் மதுரை
டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு
செண்பகராமன் பிள்ளை
சேலம் ஏ. சுப்பிரமணியம்
குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன்
வ. வே. சுப்பிரமணியம்
வ. உ. சிதம்பரனார்
திரு. வி. கலியாணசுந்தரனார்
மகாகவி பாரதியார்
ராஜாஜி
திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
திருப்பூர் பி. எஸ். சுந்தரம்
பி. வேலுச்சாமி
தர்மபுரி குமாரசாமி
க. சந்தானம்
புலி மீனாட்சி சுந்தரம்
சீர்காழி சுப்பராயன்
கு. ராஜவேலு
மட்டப்பாறை வெங்கட்டராமையர்
முனகல பட்டாபிராமையா
பெரியகுளம் இராம. சதாசிவம்
திண்டுக்கல் மணிபாரதி
தேனி என். ஆர். தியாகராஜன்
பழனி கே. ஆர். செல்லம்
மதுரை ஜார்ஜ் ஜோசப்
மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார்
பி. எஸ். சின்னதுரை
செங்காளியப்பன்
கே. வி. ராமசாமி கோவை
தியாகி வைரப்பன் வேதாரண்யம்
திருச்சி டி. வி. சுவாமிநாத சாஸ்திரி
திருச்சி பி. ரத்னவேல் தேவர்
திருச்சி டி. எஸ். அருணாசலம்
பழனி பி. எஸ். கே. லக்ஷ்மிபதிராஜு
ஸ்ரீமதி செளந்தரம் ராமச்சந்திரன்
ம. சிங்காரவேலர்
சர்தார் வேதரத்தினம் பிள்ளை
கே. பி. சுந்தராம்பாள்
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பாஷ்யம் என்கிற ஆர்யா
திருப்பூர் குமரன்
காம்ரேட் பி. ராமமூர்த்தி
பி. கக்கன்
தி. சே. செள. ராஜன்
டி. கே. மாதவன்
பூமேடை ராமையா
எம். பக்தவத்சலம்
கு. காமராசர்
ரா. கிருஷ்ணசாமி நாயுடு
சி. பி. சுப்பையான் கோவை
கோவை என். ஜி. ராமசாமி
கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்
தீரர் சத்தியமூர்த்தி
தோழர் கே. டி. கே. தங்கமணி
கோ. வேங்கடாசலபதி
கோவை அய்யாமுத்து
முஹம்மது இஸ்மாயில்
ச. அ. சாமிநாத ஐயர்
லீலாவதி
பங்கஜத்தம்மாள்
அம்புஜம்மாள்,
கடலூர் அஞ்சலையம்மாள்
மூவலூர் இராமாமிர்தம்
நீலாவதி இராம. சுப்பிரமணியம்
முத்துலட்சுமி ரெட்டி
அசலாம்பிகை அம்மையார்
கண்ணம்மையார்
நாகம்மையார்
கே.கே.எஸ். காளியம்மாள்
எஸ். என். சுந்தராம்பாள்
வை. மு. கோதைநாயகி
செல்லம்மா பாரதி
மீனாம்பாள்
மணலூர் மணியம்மா
கே. பி. ஜானகியம்மாள்
இலட்சுமி சாகல்
கோவிந்தம்மாள்
ஜானகி ஆதி நாகப்பன்
இராசம்மா பூபாலன்
இராமு தேவர்
எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
பூலித்தேவன் : நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பூலித்தேவன் மற்றும் பூலித்தேவரின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத்தேவன் போன்றவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகச் செயல்பட்டனர். 1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக்கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று அறிவித்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.
பின்னர் 1755 -ல் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் கெரான் என்பவரோடு போரிட்டு வெற்றி பெற்றார். இதுவே பாளையக்காரர்கள்-ஆங்கிலேயர் மோதல்களில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வியாகும். மேலும் பூலித்தேவன் 1750 முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டு காலம் தொடர்ந்து பல போர்களை நடத்திவந்தார்.
பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.
இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச்
செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.
முத்துராமலிங்க சேதுபதி : இருபது ஆண்டுகளுக்கு மேலாக கப்பத்தொகையினை யாருக்கும் கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி வந்த இராமநாதபுரம் சேதுபதியை ஆயுத வலிமை கொண்டு அடக்கிட நாவாப் விரும்பினார். 1772-ல் நவாப் முகமது அலியின் மகனான உம் தத்துல் உம்ரா, கம்பனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆக்யோர் தலைமையில் பெரும்படை ஒன்று இராமநாதபுர கோட்டையைக் கைப்பற்றினர். அங்கிருந்த ராணி, அவரது இரு பெண்குழந்தைகள் இளவல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 1781-ல் நாவாப் சிறையிலிருந்த இளம் சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத் தொடர வழி கோலினார்.
சேதுபதி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிப் பாளையக்காரர்களுடன் நட்புகொண்டார். மேலும் நவாபுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் எதிராக டச்சுக்காரர்களுடனும் உடன்பாடு செய்துகொண்டார். ஆற்காடு நவாப்பின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில் அவரது சலுகைகளை எதிர்பார்த்து தங்களது வணிக தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் சேது நாட்டின் வணிகத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் சேதுபதி மன்னர் மறுத்தார். எனவே பலவகையில் முயன்று ஆற்காட்டு நவாப்பிற்கும், ஆட்சியர் பவுனிக்கும் முறையிட்ட கம்பனியர் போர் தொடுக்க இரகசியத் திட்டம் தீட்டினர். மன்னருக்கு மிகவும் நம்பிக்கையான தளபதி மார்ட்டினிடம் கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் இருந்தன.
எனவே 1795 பிப்ரவரி எட்டாம் நாள் கம்பெனியாரது படை இராமநாதபுரம் கோட்டை வாயிலைக் கடந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டது. ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் பயிற்சிபெற்ற நாலாயிரம் போர்வீரகள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் இருந்தும் மன்னர் வஞ்சகமாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்ட . மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரைத் தப்புவிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தபின் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சியொன்றைத் தொடங்கினார். முதுகுளத்தூர், அபிராமபுரம், கமுதி ஆகிய ஊர்களிலுள்ள கம்பெனியாரது தானியக் களஞ்சியம், கிடங்குகள் ஆகியன சூறையாடப்பட்டன
இப்புரட்சியில், குளத்தூர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சலங்குறிச்சி மக்களும் கலந்துகொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இப்புரட்சி கம்பெனியாரது ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது. மன்னர் சேதுபதி திருச்சி சிறையிலிருந்து நெல்லூர் சிறைக்கு மாற்றப்பட்டர். அங்கு கொடுமைதாளாது, இரவுபகல் தெரியாமல் பதினான்கு ஆண்டுகள் கழித்தார். குற்றாச்சாட்டுகள், விசாரணைகள் என எதுவுமே இல்லாமல் தமது வாழ்நாளைச் சிறையில் கழித்த சேதுபதி மன்னர் 1809-ல் இறந்தார்.
வேலு நாச்சியார் : 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரு க்கு மனைவியானார். 1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர்
எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது.
அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை (doctrine of lapse) தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வயாது வரை சிறப்பாக ஆட்சி நடத்தினர். மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.
வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். 1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.
மருதுபாண்டியர் : இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு.
பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக தனது திறமையை நிரூபித்தனர்.
அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றியபின் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதுசகோதரர்கள் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.
1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார். மருது சகோதரர்கள் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கவாக அமைந்தது. இசுலாம் மற்றும் கிறித்தவ மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர்.
இளையவரான “ சின்ன மருது” அரசியல் ராஜதந்திரம் மிக்கவராக விளங்கினார். தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி முடிய மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயர்க்கு எதிரான போரட்டதிற்கு வித்திட்டனர் . 1801 ஜுன் 16 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. 24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.
இதுவே தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக மன்னர்கள் நடத்திய போர். அதன் பின்னர் நடந்ததே வேலூர் புரட்சி, பல தமிழர்களுக்கு இது இன்றும் தெரியாமல் இருப்பதே வேதனை,
இந்த சுதந்திர தினத்திருக்கு முன்பாகவே அணைத்து தமிழர்களுக்கும் இவர்களை பற்றி தெரியட்டும்...
சந்திர விழிபாடும் - சூரிய வழிபாடும்...
பலிகொடுத்து சந்திரனின் அடிப்படையில் வாழ்க்கையை வகுத்தவர்கள் சந்திர வழிபாடு செய்பவர்கள்...
சூரிய வழிபாடு என்பது சூரியனை மிகத்துல்லியமாக கணித்து அதன்படி அந்த சூரியசக்தியை தனக்கு சாதகமாக (இயற்கைக்கு எதிராக) வளைத்து தனது வாழ்க்கையை அமைப்பது சூரிய குலம்.
இயற்கை மனிதனுக்கு கொடுத்த வாழ்வியல் சந்திர வழிபாடு தான்.
சந்தேகம் இருந்தால் இதுவரை தீவுகளை விட்டு வெளியே வராத பழங்குடி கூட்டங்களை கவனித்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் சந்திரவழி தனது வாழ்க்கையை அமைத்தவர்கள்.
இந்த சூரியகுலம் என பெருமை பேசி கொள்ளும் எந்த இனக்குழுவும் உண்மையான சூரியக்குலம் இல்லை அவர்களுக்கு சூரியனை எப்படி கணிக்க வேண்டும் என்பதே தெரியாது.
எடுத்துக்காட்டு பள்ளர்களில் சிலர் இப்போது நாங்கள் தான் சூரியகுலம் அதாவது இந்திரனின் குலம் என சொல்கிறார்கள், ஆனால் கிராமத்தில் உள்ள பள்ளர்களிடம் கேட்டால் அவர்களின் நாள் கணக்கு வளர்பிறை தேய்பிறை அம்மாவாசை பெளர்ணமி கீழ்நோக்கு மேல்நோக்கு என எல்லாமே சந்திரனை மையப்படுத்தியே இருக்கும். குலதெய்வத்திற்கு பலி கொடுப்பார்கள். அவர்களில் சிலர் தனது சாதி அரசியலுக்காகவும் அரசகுடும்பம் அடிமை பணிக்காகவும் பெருமை என்ற பெயரில் சில தீமைகளை ஒரு இனக்குழுவின் மேல் வழிந்து திணிக்கிறார்கள்.. இதே போல் தான் ஒரு நேரத்தில் தேவர் சாதிகாரர்களுக்கு நடந்தது என்பதை நோக்க வேண்டும்.
எனவே உண்மையான சூரியகுலம் என்பது அந்த அரசகுடும்பம் தான்...
வேண்டுமானால் இப்போது இருக்கும் நகரத்தார் என்ற அரசகுடும்ப எச்சங்களை கொஞ்சம் கவனித்து பாருங்களேன்...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 5...
எட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி. அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி.ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை 'பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)' என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி 'முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்' (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.
"ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்... மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்..."
பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு 'மஹாத்மா'க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.
விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார். விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.
அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் "ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.
உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார். விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். 'இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது' என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.
நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் 'நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்' என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.
இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?
பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள். இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் "யோக சூத்திரங்களி"ல் எழுதியிருக்கிறார்.
இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ?
இனியும் ஆழமாய் பயணிப்போம்...
ரேசன் கடைகளில் அரிசி வழங்குவதை நிறுத்தக்கூடாது: நேரடி மானியம் வீண் - பாமக அறிக்கை...
நியாயவிலைக்கடை மூலம் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை வழங்குவதை நிறுத்தி விட்டு, அவற்றுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மானியத்தை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தும்படி தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவினியோகத் திட்டத்தை சீரழிக்கும் நோக்கம் கொண்ட இந்த யோசனை கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய அரசின் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பொது வினியோகத் திட்டத்தின்படி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக, அதற்கான மானியத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த யோசனை செயல்படுத்தப்பட்டால் இந்தியாவில் பொது வினியோக முறை என்ற உன்னதமானத் திட்டம் முற்றிலுமாக அழிந்து போய்விடும்.
அரிசி மற்றும் சர்க்கரையை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்துவது இது புதிதல்ல. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததுமே பொதுவினியோகத்திட்டம் மற்றும் இந்திய உணவுக் கழகத்தை சீரமைப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக முன்னாள் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சாந்தகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 2015-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி அளித்த அறிக்கையில், உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி பயனடைபவர்களின் எண்ணிக்கையை 67 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும்; நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டை தாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடியை மிச்சப்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதன்படியே அரிசி, சர்க்கரைக்கு பதிலாக மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி மத்திய அரசு கூறியிருக்கிறது.
அரிசி, சர்க்கரைக்கு மாற்றாக நேரடி மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் சாத்தியமற்றது ஆகும். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து குறைந்தது 12 கிலோ முதல் 50 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கிலோவுக்கு ரூ.20 வரை மானியம் வழங்குகின்றன. சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ.6 வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் சாதரண ரக அரிசி கிலோ ரூ.42 முதல் ரூ.50 வரையும், சர்க்கரை கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது நேரடி மானியம் வழங்கப்பட்டால், 20 ரூபாயை வைத்துக் கொண்டு ஒரு கிலோ அரிசி வாங்குவதோ, ரூ.31&க்கு ஒரு கிலோ சர்க்கரை வாங்குவதோ சாத்தியமற்றது. இது மக்களின் சுமையை அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நேரடி மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பொது வினியோகத் திட்டம், நேரடிக் கொள்முதல் திட்டம் ஆகிய இரண்டுமே ஒழிக்கப்பட்டு விடும். அத்தகைய சூழலில் ஏழை மக்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்கும் நிலையும், உழவர்கள் தங்களின் விளை பொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்க நேரிடும். அப்படி ஒரு நிலை உருவானால் ஏழைகளும், விவசாயிகளும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
இந்தியாவிலேயே பொது வினியோகத்திட்டம் தமிழகத்தில் தான் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது என்று உச்சநீதிமன்றமே பாராட்டியிருக்கிறது. நேரடி மானியத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் உன்னதமான பொதுவினியோகத் திட்டம் சீரழிக்கப்பட்டு விடும். ஏழை மக்களுக்கு இப்போதுள்ள உணவுப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். எனவே, அரிசி, சர்க்கரை ஆகியவற்றுக்கு பதிலாக நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தக் கூடாது. மத்திய அரசு வலியுறுத்தினாலும் அதை ஏற்காமல் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொதுவினியோகத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்...
இறந்தவரை எரிக்க முயன்றபோது உயிரோடு எழுந்த அதிசயம்.. அலறி அடித்து ஓடிய உறவினர்கள், வெட்டியான்...
உத்தரபிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹாசங்கர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனிளிக்காததால் இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
எனவே உறவினர்கள் அவரை வீட்டுக்கு எடுத்து வந்து இறுதி சடங்குகள் எல்லாம் செய்து, பின்னர் சுடுகாட்டில் எரிப்பதற்காக கொண்டு சென்றனர். அங்கும் அனைத்து சம்பிரதாயங்களும் முடித்து கொள்ளி வைக்கும் நேரத்தல் ஹசாங்கர் திடீரென சிதையில் இருந்து எழுந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் வெட்டியான் உள்பட அனைவரும் அலறி அடித்து ஓடினர். பின்னர் அவர் நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என கூறியதும் பின்னர் உறவினர்கள் அருகில் பீதியுடனே வந்தனர். அவர்களிடம் பசிக்கிறது எதாவது இருந்தால் கொடுங்கள் என்றார்.
உறவினர்கள் வாழைப்பழத்தை சிதையில் படுத்தவாறே சாப்பிட்டார். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பின் மீண்டும் திடகாரத்திரமாக உள்ளதாக ஹசாங்கரின் உறவினர்கள் தெரிவித்து உள்ளர்...
மூலிகையின் பெயர் எலுமிச்சை...
தாவரப்பெயர் :- CITRUS MEDICA.
தாவரக்குடும்பம் :- RUTACEAE.
பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் பழம்.
வளரியல்பு :- எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்தது. எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு வளரும். இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு. எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது. வழிபாட்டில் வரவெற்பிலும் முதன்மை வகிப்பது. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள் :- பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.
பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.
பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.
பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.
நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.
வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.
பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.
இதன் சாறு 30 மி..லி. இந்துப்பு-15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.
இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும்.
பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம், முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.
இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.
படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.
வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால், புகை ஆகாது.
எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.
இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.
குடற்புண், காச்சல், டைப்பாய்டு சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்...
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் விலை அதிகரித்துள்ளது என்பது தவறான தகவல்...
6.4000 mm 1kg காப்பர் விலை விபரங்கள்...
ஜனவரி ; Rs 762.00
ஜூன் ; Rs 765.00
ஆகஸ்ட ; Rs 725.00
பொது மக்களுக்கு தீங்கு விளைவித்து ஆலை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை மாசுபட செய்த ஒரே ஒரு ஆலையை மட்டும் மூடுவதால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் வராது.
சில பொருட்களை நம் நாட்டில் உற்பத்தி செய்தால் ஆகும் செலவைவிட இறக்குமதி செய்தால் விலை குறைவாக இருக்கும். அது போல் காப்பர் கிடைக்க வாய்ப்பு உருவாகும்.
என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்...
நாம் யார்? நமது பிறவி என்ன? நமது பிறவியின் தன்மை என்ன?
ஞானிகள் அருளிய அருட்கவிகள்...
நந்தி அகத்தியர்மூலர் புண்ணாக்கீசர்
............நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்திடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
............கருவூரார் கொங்கணர் காலாங்கி அன்பிற்
சிந்தில் அழுகண்ணர் அகப்பையர் பாம்பாட்டி
............தேரையரும் குதம்பயைருஞ் சட்டைநாதர்
செந்தமிழ்ச் சீர்சித்தர் பதினெண்பேர் பாதம்
............சிந்தையுணிச் சிரத்தணியாச் சேர்த்தி வாழ்வாம்.
-தனிப்பாடல் - 1.
மேற்கண்ட கவியின் சாரம்..
ஆசான் நந்தீசர், மகான் அகத்தீசர், திருமூலதேவர், மகான் புண்ணாக்கீசர், பிரம்மமுனிவர், புலத்தீசர், ஆசான் பூனைக்கண்ணார், மகான் இடைக்காடர், ஜோதி ரிஷியாகிய போகர், மகான் புலிப்பாணி சித்தர், அருள்மிகு கருவூரார், வினை தீர்க்கும் கொங்கண மகரிஷி, மகான் காலாங்கிநாதர், அழுகண்ண மகரிஷி, அகத்தின் இயல்பை அறிந்த அகப்பைச் சித்தர், பக்குவமுடைய பாம்பாட்டி சித்தர், தெளிவுமிகு தேரைய மகரிஷி, குணம் மிகுந்த குதம்பைச் சித்தர், தேகமென்னும் சட்டை நீக்கிய சட்டை முனிவர் மேற்கண்ட முத்தமிழ் வித்தகர்களாகிய பதினெட்டு சித்தர்களும் மகா அருள் வல்லவர்கள் ஆவார்கள். அவர்களை தினமும் வரிசைப்படுத்தி நாமஜெபம் செய்து வந்தால் பலபிறவிகளில் "யான்" என்ற கர்வத்தாலும், பொருள் வளமென்னும் செருக்காலும், ஆள்படை அகந்தையாலும் மற்றும் உத்யோக திமிராலும், பொல்லாத காமதேகத்தின் கொடுமையாலும், கொடிய சினத்தாலும் மேலும் புலால் உண்ணுதல், உயிர்க்கொலை செய்தல் போன்ற கொடிய பாவத்தாலும் வந்த கேடுகள் அத்தனையும், மேற்கண்ட ஞானிகளின் நாமத்தை சொல்லி வந்தால் பாவங்கள் எல்லாம் பொடிப்பொடியாகிவிடும்.
மேலும் சிறப்பறிவு உண்டாகும். "நாம் யார்?" "நமது பிறவி என்ன?" "நமது பிறவியின் தன்மை என்ன?" "இந்த பிறப்பால் அடையக்கூடிய லாபநஷ்டமென்ன?" என்பதை அறிய முடியும். நஷ்டத்தை நீக்கி ஆன்ம லாபம் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்து வருகின்ற பிறவிக்கு அறியாமைதான் காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆன்ம இயக்கமும், அதை தாங்குகின்ற உடம்பு பற்றியும், அந்த உடம்பால் வருகின்ற நன்மை, தீமைகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.
உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல). ஆகவே, மேற்கண்ட பதினெட்டு மகான்களை உருகி தியானம் செய்தால், நாம் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம். எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்...
ஆட்டோவில் விரட்டிச்சென்று ஐம்பொன் சிலையை மீட்ட ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்...
போரூர் காரம்பாக்கம் பகுதியில் காரில் ஐம்பொன் சிலைகள் கடத்தப்படுவதாக ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி 9 பேர் அடங்கிய குழுவுடன் 3 ஆட்டோவில் சென்ற அவர் புகார் தெரிவிக்கப்பட்ட காரை மறித்தார். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் காரில் சோதனையிட்ட போது அதில் 20 கிலோ கிராம் எடையில் தாலிக்கொடியுடன் அம்மன் ஐம்பொன் சிலையை கண்டுபிடித்தனர்.
சிலையை கைப்பற்றிய பொன்.மாணிக்கவேல் டீம், சிலை கடத்தியதாக 4 பேரை கைது செய்தனர்...
சிசேரியனில் உள்ள கொடூர லாபம்...
சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்து குழந்தை எடுத்த பிறகு..
அரசு மருத்துவமனையில் தற்காலிக குழந்தை தடுப்பு சாதனம் குழந்தை பெற்றெடுத்த தாயின் கர்பப்பையில் வைக்கிறார்கள் இதனால் உடனே குழந்தை உருவாகாது என்பதை தாண்டி..
அந்த தாய்க்கு தொடர் உதிரப்போக்கும் தொடர்நது உடலில் பலவீனமாகவும் ஆக்கிவிடும் இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை செய்ய வேண்டும்.
இரண்டு மூன்று முறை அரசு மருத்துவமனையில் காண்பித்து சரியாகவில்லை என்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். .
ஏற்கனவே பலவீனமாகவும் இருக்கும் அந்த தாயை குழந்தையை தூக்கி கொண்டு அலைய வைத்து காசு பார்க்கும் கேவலமான இழி பிறவிகள் இவர்கள். .
அதுபோன்று சிசேரியன் செய்து குழந்தை பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் தான் ஆகும் மற்றுமின்றி இரண்டு குழந்தைக்கு மேல் பெறவும் முடியாது அல்லது மூன்று. அவ்வளவுதான். .
முக்கியமான விஷயம் சிசேரியன் செய்து பிறந்தால் தாய்ப்பால் சுரப்பு வெகுவாகவே குறைய வாய்ப்புள்ளது.
இப்போது லாக்டோஜன்,அமுல்ஸ்பிரே, நான் பவுடர்,இவைகளை கொண்டே குழந்தைகள் வளருகிறது. .
தாய்ப்பால் இல்லாமல் இந்த பவுடர்களை கொண்டு வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அதனால் சின்ன காய்ச்சல் என்றால் கூட 500 ரூபாய்க்கு மாத்திரை மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். .
இதுல இவ்வளவு இருக்கும் போது வீட்டிலேயே சுக பிரசவம் செய்து கொள்வது எப்படி என்று சொல்லி கொடுத்தாலோஅல்லது வீட்டிலேயே செய்தாலோ கார்பரேட்டுக்கு கோபம் வரத்தானே செய்யும். .
இங்கு விழிப்புணர்வு நமக்குத்தான் தேவை...
இந்தியாவில் வாழ்ந்த கொடூர சமூகம் - தக்கர்கள்...
ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆங்கிலேயர்களையே வியப்பில் ஆற்றிய ஒரு சமூகம் தான் தக்கர்கள்.
இவர்களது பூர்வீகம் எது எதையோ எழுதி வைத்துள்ளது வரலாறு.
ஏறக்குறைய எல்லாமுமே தவறானது.
இந்த தக்கர்கள் இந்தியா முழுக்க பரவி கிடந்தார்கள்.
அந்த காலத்துல வழிப்போக்கர்கள் செல்வந்தர்கள் ஜமீன்கள் சிப்பாய்கள் ஏன் அரசபிரதினிதிகள் உட்பட எல்லோரும் நெடுந்தூர கால்நடை பயணத்தில் திடீரென காணாமல் போய்விடுகிறார்கள்.
இது எங்கோ சில அல்ல பல்லாயிரக்கணக்கானவர்கள் இப்படி திடீரென மாயமாக மறைந்து விடுவார்கள் அவர்கள் பற்றிய குறிப்போ தடமோ எதுவுமே இருக்காது .
பல ஆண்டுகளாகவும் அரசாங்க கச்சேரியில் (காவல்நிலையத்தில்)
பிராது (புகார்) குவிந்த வண்ணம் உள்ளது. .
மூலையை கசக்கி கண்டுபிடிக்க முயர்சி செய்தாலும் இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. .
ஒருவேளை இறந்து போனால் கூட உடல் கிடைக்க வேண்டுமே.
இப்படி பல வருட குழப்பத்திற்கு காரணம் இந்த தக்கர் என்று சொல்லக்கூடிய கொடூர கொள்ளை கூட்டம் தான்.
ஆம் தக்கர்கள் என்பது கயிற்றை தலையில் வீசி சுருக்கு கயிறு கட்டி சாகடித்து ஆபரணங்களை கொள்ளையடித்துக்கொண்டு ஓடும் கூட்டம் தான். .
1800 களிலும் அதற்கு முன்பும் பின்பும் இந்தியர்களையும் ஆங்கிலேயர்களையும் கதரவிட்ட தக்கர்கள் பற்றி யாருக்குமே தெரியாது என்பது தான் பெரிய விஷயம்.
காரணம் தக்கர்களுக்குள் தலைவர் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர் அந்த அந்த பகுதி தக்கர்கள் அந்த ஏரியா ஜமீன்களின் மறைமுக கட்டுப்பாட்டில் இருப்பர்.
கொள்ளையில் ஒரு பங்கு ஜமீனுக்கும் போகும்...
தலைவர் ஒருவர் மட்டும் என்பது அந்த அந்த குழுவில் மட்டுமே.
தக்கர்கள் என்பவர் ஒரே இடத்தில் கூட்டமாக வாழ்பவர்கள் அல்ல மக்களோடு மக்களாக இருப்பர்.
தம் சக தககர்களை அடையாளம் கண்டு கொள்ள சங்கேத குறியீடுகளை கொண்டு அடையாளம் கண்டு கொள்வார்கள். ..
இவர்களது கடவுள் காளி என்பார்கள்.
நரபலி பூஜை எல்லாம் உண்டு..
எப்படி மாட்டாமல் தப்பிப்பார்கள் ?
யாரையெல்லாம் கொலைசெய்ய மாட்டார்கள்?
பயணிகளோடு பயணிகளாக வழியில் கலந்துக்கொண்டு சிரித்து பேசி உண்டு மகிழ்ந்து அன்பளிப்புகளை பரிமாறி முழு நம்பிக்கை பெறும் அளவிற்கு பழகுவார்கள்.
அவர்களுக்கான திட்டமிடல் முன்கூட்டியே இருக்கும் அந்த இடம் வந்ததும் திடீரென அரக்கர்கள் போல மாறி சப்தம் இடுவார்கள் குலை நடுங்கும் சப்தமும் டர்பனை (முண்டாசை) அவிழ்த்து முழுமையாக அவர்களது தோற்றமும் பார்பவர்களை கதிகலங்க வைக்கும் சிறுவர்களை அப்புறப்படுத்தப்படும்..
தலையில் உள்ள முண்டாசை முறுக்கி தொண்டைகுழியில் தலையிலிருந்து வீசி நெறித்து கொள்வார்கள் அவ்வளவுதான் தொப் தொப்பென்று பிணங்கள் விழும். .
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உடலில் உள்ள ஆடைகளை முதற்கொண்டு கலட்டி விட்டு ஏற்கனவே தோண்டி வைத்துள்ள பாதாள சுரங்கத்தில் உடலை வீசிவிடுவார்கள். ..
இது அவ்வளவும் கன நிமிடங்களில் நடக்கும்.
இன்னும் இது சம்பந்தமான
விஷயங்கள் உண்டு.
பிரிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்..
தக்கர்கள் மொத்தமாக கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சம்...
Subscribe to:
Posts (Atom)