19/02/2018

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள் 19.2.1855...


'தமிழ்தான் என் அறிவுப் பசிக்கு உணவு' என்பார் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர். ஆம்.. அது உண்மை தான். 19ஆம் நூற்றாண்டில் ஓலைச்சுவடியில் செல்லரித்துப் போகவிருந்த தமிழை அச்சு வாகனத்தில் ஏற்றி பிழைக்க வைத்த பெருமை இவருக்கே உண்டு.

ஏட்டில் இருப்பதை அப்படியே பெயர்த்து காகிதத்தில் அச்சிடுவது எளிது. ஆனால் ஓலைச் சுவடியில் இருப்பதை அச்சாக்கி வெளியிடுவது கடினமான பணியாகும். அவரின் கடும் உழைப்பினால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அச்சு வடிவம் பெற்றன. இதனால் ஓலைச் சுவடிகளில் புதைந்து கிடந்த தமிழர்களின் மூல வரலாற்றை தமிழர்கள் அறிந்தனர். தலை நிமிர்வு பெற்றனர்.

உ.வே.சாமிநாதய்யருக்கு தமிழ் மீது கொண்ட காதலையும் பிற மொழி மீது ஈடுபாடு இல்லாததையும் அவரே எனது சரித்திரம் நூலில் விளக்குகிறார்.

"கல்யாணத்திலும் பொருள் வருவாயிலும், ஊர்ப் பிரயாணத்திலும் எனக்கு லாபம் இருந்ததாகத் தோன்றவில்லை. எனக்கு ஒன்றுதான் நாட்டம்; தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு எவ்வளவுக்கு எவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உத்ஸாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, லாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும் சரி இந்த நிலைமை மாறவே இல்லை.

"எனது தந்தையாரிடம் கும்பகோணம் வக்கீல் வேங்கட்ராவ் அவர்கள் என்னை இங்கிலீஷ் படிக்கச் சொல்லுங்கள்  என்றார். எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் மகிழ்ச்சியை உண்டாக்க வில்லை. அவர் என்னிடமுள்ள அன்பினால் அவ்வாறு சொல்லுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க என் மனம் இடம் தரவில்லை.  அவர்பால் எனக்குக் கோபந்தான் உண்டாயிற்று. தியாகராச செட்டியாரிடம் படிக்க வழி கேட்டால் இவர் இங்கிலீஷ் படிக்கவல்லவா உபதேசம் செய்கிறார்? எனக்கு இங்கிலீஷும் வேண்டாம், அதனால் வரும் உத்தியோகமும் வேண்டாம்.

"எல்லாருடைய விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த் தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவர வில்லை. சில சமயங்களில் அவற்றில் வெறுப்பைக் கூட அடைந்தேன்.

"சங்கீதம் பரம்பரையோடு சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் ஜீவனத்துக்கும் காரணமாகவும் இருந்தமையால் அதன்பால் அன்பு இருந்தது. ஆனால், அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே பற்றிக் கொண்டது. அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச் சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்து கொள்ளத் தமிழ் காத்திருந்தது."

தமிழை அடுத்த தலைமுறைக்கு அச்சு வாகனத்தில் ஏற்றிய தமிழ்த்தாயின் அரும் புதல்வராம் தமிழ்த்தாத்தாவை இந்நாளில் தமிழர்கள் நினைவிலேற்றி கொண்டாடுவோம்...

இந்தியா ஜனநாயக நாடு நம்புங்கள்... கர்நாடகம் vs தமிழகம்...


காவிரி உரிமைப் போராட்டம் நடத்தியதற்காக தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளனர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய அரசுக்கு தெரியாம எப்படி தப்பிச்சு ஓடி போக முடியும், மற்ற நாடுகளில் இப்படி நடக்குமா, மக்களே சிந்தியுங்கள்...


ஆந்திராவில் மீண்டும் 7 தமிழர்கள் படுகொலை...


செம்மரம் வெட்ட சென்றவர்கள் கொல்ல படுகிறார்கள்.. ஆனால் வெட்ட சொன்ன வியாபாரம் செய்யும் முதலாளிகள் இதுவரை ஏன் மாட்ட வில்லை..

தமிழக அரசியல்வாதிகளே இப்போதாவது பேசுங்கடா..

தமிழகத்தில் திராவிடம் என்ற பெயரில் தெலுங்கள் எப்படி வாழ்கின்றனர்..?

முட்டாள் தமிழா திருந்து...

தமிழக ஊழல் முதல்வர் எடப்பாடி ஏமாற்று வேலைகள்...


அட மானங்கெட்ட மொல்லாரி துரோகி ஓபிஎஸ் க்கு பொறந்தவனே... தங்கத் தமிழ் செல்வன் MLA அப்பா சேர்மன்டா...


அவங்க தாத்த பெயரில் தான்டா ராமுத்தேவன்பட்டிங்குற ஊரே இருக்கு...

உங்கப்பனும்... தாத்தன் ஓட்டக்காரத்தேவனும் நடுராத்திரியில வெளக்க ஏத்தி வச்சுட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தப்பி ஓடிவந்தவந்ங்க தானடா நீங்க...

உன் உடன் பங்காளி அண்ணன் முனியசாமி உன் அப்பனையும்... உன் தாத்தனையும் கழுவி... கழுவி ஊத்துறாரு..

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் ஒரு தமிழர் உணவகத்தின் முன் உள்ள பாஜக பினாமி அதிமுக ஓபிஎஸ் சிலை...


மருத்துவ மாஃபியா - இதுவரை அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை சிந்தியுங்கள்...


ஆழ்மனம் அதிசயம்...


உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்.

விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்.

அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.

உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...

உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள்.

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...

உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...

பாஜக மோடிக்கு நெருக்கமாக இருக்குறவன் எல்லாம் பல்லாயிரம் கோடிகளை ரொம்ப அழகா கொள்ளை அடிச்சுட்டு இந்திய அரசாங்கத்தின் அனுமதியோடு கடவுச்சீட்டு மூலமாக எளிமையாக போறாங்க..


நம்மால் வங்கியில் கடன் வாங்கிட்டு எங்கேயும் போக முடியல...

மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்...


என் முப்பாட்டன், பாட்டன், அப்பன், எல்லாம் வெள்ளையனே வெளியேறு என்று.. வெள்ளையர்களை விரட்டிய காலம் போய்..

இப்போது எனது காலத்தில்..
திராவிடனே வெளியேறு என்று..

திராவிடர்களை விரட்ட வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டு உள்ளோம்..

தமிழகத்தை விட்டு..
திராவிடனே வெளியேறு...

உங்கள் வங்கிகள் திவாலாகாது திவாலாக்கப்படும் அவ்வாறு ஆனால் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம்..?


பிறந்த நாள் கொண்டாட்டம் ரவுடிக்கு கேக் ஊட்டிவிட்ட இன்ஸ்பெக்டர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - சேலம் ஆணையர் அதிரடி...


சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளது. இவர் ஒரு ரவுடி. போலிசை கைக்குள் வைத்துக் கொண்டு பல்வேறு காரியங்களை செய்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ரவுடி சுசீந்திரனின் பிறந்த நாளை கொண்டாட தனது வீடிட்டிற்கு அழைத்த இன்ஸ்பெக்டர் கருணாகரன் சுசீந்தரனுக்கு தனது கையால் கேக் உட்டி விட பதிலுக்கு சுசீந்தரன் இன்ஸ்பெக்டருக்கு கேக் ஊட்டிவிட என ரவுடிகளுடன் அமக்கலப்படுத்தியுள்ளார் இன்ஸ்பெக்டர் கருணாகரன்.

இதன் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சேலும் ஆணையர் சங்கர் கருணாகரனை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

முழு விசாரனை முடிந்த பின் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்...

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று...


தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை.

ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது.

தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்..

திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ் கடைசங்கத்தில் அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசி சங்கம்.

அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால்.. இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்.?

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோ அகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார்.

அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர். தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று..

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்..

இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதே..

ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கி இருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கி இருக்கின்றனர்..

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று...

தற்கால நிகழ்வுகளுடன் நீங்கள் அடிமைப்படுத்தப்படுவதையும் முடிச்சு போடுங்கள்...


மேலும் சாகர்மாலா, தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ போன்ற பல திட்டங்கள் இந்த வார்த்தைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு...

ஒவ்வொரு தமிழ் இனக்குழுவும் இதனை ஒரு வரலாற்றுக கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்...


தமிழ்நாட்டில் தமிழர் விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமை ஓங்கிவளர்ந்து வருவதைக் கண்டு திகிலில் இருக்கும் திராவிடர்கள், இந்திய தேசியம் பேசுபவர்கள், தலித்தியவாதிகள், மதவாதிகள், தலித்தியவாதிகள், மார்க்சியவாதிகளும்...

சாதிக்கலவரத்தைத் தூண்டிவிட்டோ, அல்லது சிறு சச்சரவுகளை சாதிக் கலவரமாக மாற்றியோ குளிர்காய நினைக்கிறார்கள்...

தயவு செய்து நாம் திராவிடத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் நாம் அவர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகமால் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தமிழ் இனக்குழுவும் இதனை ஒரு வரலாற்றுக கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்...

உருது இஸ்லாமியர் அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கண்டு பிடிப்பு...


திராவிடம் என்ற பேரில் வந்தேறிகள்...
இந்துத்துவா என்ற பேரில் வந்தேறிகள்...
இஸ்லாமியன் என்ற பேரில் வந்தேறிகள்...

தமிழனை ஏமாற்றி பிழைக்க எப்படி எல்லாம் முகமூடி போட்டு வருகிறான் வந்தேறி என்பதை பார் தமிழினமே...

யாழி என்னும் கொடுர மிருகத்தையும் வீரதமிழர்கள் அடக்கி வீட்டில் வளர்த்தார்கள்...


யாழி போர்படையை உருவாக்கி உள்ளனர்..

யானைபடைய எதிர்த்து தாக்குவதில்
யாழியே முதலிடம் பிடித்தது..

குதித்து யானையின் தலை பகுதியில் தாக்கி அதன் தந்தத்தை பிடிங்கி யானை படையை வீழ்த்தும் திறன் யாழிக்கே உண்டு..

ஆதலால் தான் நம் கோவில்களில் யாழியின் சிலையையும் வைத்து வணங்கி அழகு பார்த்திருக்கிறார்கள்..

யாழி என்னும் உயிரினத்தை கண்டரியனும்.. தமிழனின் பொக்கிஷம் பாதுகாக்கபட வேண்டும்...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ குணங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோமா?


கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.

இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம்.

தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்...

விவசாயிகள் தற்கொலை Vs கார்ப்பரேட் கொண்டாட்டம்.. வாழ்க பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?


அதன் விளக்கம் பின்வருமாறு...

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி).

2.குறையாத வயது (நீண்ட ஆயுள்).

3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்).

4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்).

5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை).

6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை).

7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை).

8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி).

9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்).

10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்).

11.மாறாத வார்த்தை (வாய்மை).

12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி).

13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்).

14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்).

15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு).

16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை).

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர்....

இலுமினாட்டி தயாரிப்புகளான.. மராட்டிய ரஜினி vs கன்னட கமல் கலாட்டா...


நாம செத்தா போக வேண்டிய இடம் சுடுகாடு...

நடிகர்களுக்கு வயசான போக வேண்டிய இடம் முதலமைச்சர் நாற்காலி...

தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்பது இனவாதம் என்கிறார் கன்னடரான கம்யூனிஸ்ட் சித்தாந்த அருணன்...


சரி ஏன் தமிழ் நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்கிற வாதம் வந்தது என்பதற்கு இவர் பதில் கூறுவாரா?

பிராமணியம் சுவிகரித்துக் கொண்ட முருகனை முப்பாட்டன் என்பது மதவாதம் என்கிறார்.

சரி ஓனம் என்கிற இந்துக்கள் பண்டிகையை கேரளாவில் வாழும் அனைத்து மத மக்களும்  கொண்டாட வேண்டும் என்று அருணன் அவர்களின் ஆசான் இஎம்எஸ் நம்பூதிரி பட் அரசாணை  ஒன்றை  வெளிட்டாரே அதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?

தமிழ் தேசியம் சாதிய வாதம் என்கிறார் அருணன்.

அதாவது தமிழ் தேசியம் ஆட்சி அதிகாரம் என்று வந்தால் மாற்று மொழி மக்கள் மூன்றாம் நான்காம் தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்கிறார்.

தமிழ் நாட்டில் வாழும் எல்லாம் மாற்று மொழி மக்களும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வசதி வாய்ப்புகள் செய்து தரப்பட்டுள்ளது.

ஆனால் இவரின் கூடாரமான கேரளாவில், இவர் பிறந்த கர்நாடகத்தில், ஆந்திராவில் உள்ள தமிழர்கள் தமிழில் கற்க முடியுமா?

அதை தடை செய்தது யார்? 

அதற்கு என்ன பெயர் சூட்டுவார் இந்த அருணன்...

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை மராட்டிய ரஜினி மூலம் திசை திருப்ப முயல்கிறார்கள்.. தமிழா விழித்துக் கொள்...


தன்மானமுள்ள தமிழர்களே...


நீங்கள் பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள்..

தமிழினத்தின் எதிர் காலத்தை திரையரங்கத்தில் தேடாதீர்கள்..

இனமானத்தை வந்தேறிகளிடம் அடகு வைக்காதீர்கள்..

திராவிடச் சூது உங்களை
இருளில் மாய்த்து விடச் செய்யும் ..

தனித் தமிழர் தேசியத்தை அறிந்து கொள்ளுங்கள்..
இன பற்றுகொள்ளுங்கள்..
மொழிப் பற்றுகொள்ளுங்கள்..

எந்த ஒரு தமிழனுக்காக மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை.. கன்னடர்களோ , தெலுங்கர்களோ மோதிக் கொள்வதில்லை..

தமிழ் பேசத் தெரியாத , தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும் பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்..

ஏவல் நாய்களா நீங்கள் ?

இன பற்றையும் மொழிப் பற்றையும் வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்..

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..

இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம்..

தமிழர் நாடு தமிழர்களுக்கே...

இலுமானாட்டி மராட்டிய ரஜினியின் திருட்டு அரசியல்...


ஜென் வாழ்க்கையின் சூட்சுமம்...


டோக்குசான் என்ற ஜென் துறவி மூலிகைகளை பறிப்பதற்காக மலைச்சாரல் ஒன்றில் சென்று கொண்டு இருந்தார்.

ஓரிடத்தில் ஒரு குன்றின் மீது சிறிய குடிசை இருப்பதைக் கண்டார். சுற்றிலும் நிறைய தூரத்திற்கு எந்த வீடும் இல்லை.

அது போன்ற ஏகாந்தத்தில் குடிசை இருக்க வேண்டுமென்றால் அதில் வசிப்பது ஒரு துறவியாகத் தான் இருக்க வேண்டும் என்றெண்ணிய டோக்குசான் அந்தக் குடிசையின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்ததோ ஒரு மூதாட்டி.

அந்த ஜென் துறவியைப் பார்த்தவுடன் மூதாட்டி பக்தியுடன் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து வரவேற்றாள். அவருக்கு முகமலர்ச்சியோடு வரவேற்ற அவளைக் கண்டு வியப்பு.

அம்மா நீங்கள் இந்த மலையில் இந்த ஏகாந்தத்தில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்.

ஐயா நான் இங்கு தனியாகத் தான் வசிக்கிறேன். இங்கு யாரும் வருவதில்லை. இங்கு காய்கறிகள் வளர்த்து அருகே உள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்கிறேன் என்றாள் அந்த மூதாட்டி. விளையும் காய்கறிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் அவருக்கு விவரித்தாள்.

மலைச்சாரலில் விளையும் அந்தக் காய்கறிகள் சத்தானவை என்றும் அந்தக் கிராம மக்களுக்கு அந்த சத்தான காய்கறிகளை விற்பதில் தனக்கு ஒரு நிறைவிருக்கிறது என்றும் தெரிவித்தாள்.

அவருக்கும் அந்தக் காய்கறிகளைக் கொண்டு தான் சமைத்திருந்த எளிய உணவை அளித்து உபசரித்தாள்.

தன் வீட்டுக்கு வந்த அபூர்வமான அந்த விருந்தாளியைக் கண்டு அவளுக்கு பெருத்த மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியையும், அன்பையும் கவனித்த டோக்குசான் உணவருந்தியபடியே கேட்டார். வேலை இல்லாத போது நீங்கள் எப்படிப் பொழுதைப் போக்குகிறீர்கள்?

நான் சுவர்க் கோழிகளின் ஓசையையும், மழை, காற்றின் இசையையும், இரவில் நிலவழகையும் ரசித்து மகிழ்வேன். பொழுது தானாகப் போகிறது என்றாள் அந்த மூதாட்டி.

அந்த மூதாட்டியின் பதில் டோக்குசானை மனதினுள் பாராட்ட வைத்தது. அவர் மௌனமாகத் தலையாட்டினார்.

ஐயா நான் படிப்பறிவில்லாதவள். ஆன்மிக ஞானம் அறியாதவள். எனக்கு புத்தரின் அறிவுரைகளைப் போதிப்பீர்களா? என்று மூதாட்டி மிகுந்த அடக்கத்துடன் கேட்டாள்.

தனக்கு சமமானவர்களுக்கு ஒரு மனிதன் போதிப்பதில்லை. மேலும் ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை என்ற டோக்குசான் அந்தப் பெண்மணியைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு விடைபெற்றார்.

இன்றெல்லாம் வேலை என்பதே ஒரு கடுஞ்சொல் என்பது போல் ஆகிவிட்டது. சலிப்புடனும், அலுப்புடனும் அணுகும் சமாச்சாரமாகி விட்டது.

அதுவும் அந்த மூதாட்டியைப் போல் வயோதிகத்தை எட்டும் போது வேலை பெருஞ்சுமையாகவே தோன்றி விடுகிறது.

ஆனால் அந்த மூதாட்டி தன் வேலையை மகிழ்ச்சியாகச் செய்வதுடன் மீதியுள்ள பொழுதையும் நிறைவாகக் கழிக்க முடிந்ததை அந்த ஜென் துறவி கவனித்தார்.

பொழுதைப் போக்க உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கையில், நூறாயிரம் கேளிக்கைகளைத் தேடி ஈடுபட்டும் திருப்தியடையாமல் திணறிக் கொண்டிருக்கையில் சுவர்க் கோழிகளின் ஓசையயும், காற்றும், மழையும் உருவாக்கும் இசையையும், நிலவழகையும் ரசித்தபடி வாழும் அந்த மூதாட்டியின் ரசனையைப் பார்த்து ஜென் துறவி வியந்தார்.

இதுவல்லவா ஜென்னின் வாழ்க்கை முறை என்று நினைத்ததால் தான் டோக்குசான் ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்றார்.

ஜென்னில் இருக்கின்ற இடமோ, செய்கின்ற தொழிலோ முக்கியமில்லை. படித்து முடித்த புத்தகங்களின் எண்ணிக்கையோ, சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தின் அளவோ ஒரு அடையாளமில்லை.

வாழ்கின்ற முறையில் தான் எல்லா சூட்சுமமும் இருக்கின்றது. ஜென் நிகழ்காலத்தில் முழுமையாக இருக்கச் சொல்கிறது. இருப்பவற்றை முழுமையாக ரசிக்கச் சொல்கிறது. கிடைத்தவற்றிற்கு நன்றியுடன் இருக்கச் சொல்கிறது. ஜென்னில் ஒப்பீடுகள் இல்லை. ஒப்பீடுகள் இல்லாத போது துக்கங்களும் இல்லை.

நிகழ்காலத்தில் முழுமையாக வாழும் போது செய்கின்ற செயல்களில் தானாக மெருகு கூடி விடுகிறது. மனதில் தானாக நிறைவு ஏற்பட்டு வருகிறது. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்து வாழ முடிகிறது. ஜென்னில் தேநீர் அருந்துவதே ஒரு தியானத்தைப் போல செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் தேனீரை மிகவும் ரசித்து, ருசித்து, நன்றியுடன், மகிழ்ச்சியுடன், நிதானமாக அருந்த வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது.

இன்றைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களை ரசிக்க முடியாத சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன. தேவைகள் அதிகப்பட அதிகப்பட அதற்காகத் தர வேண்டிய விலையும் அதிகப்படுகிறது. அதுவும் விரைவாக அந்தத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற வெறியும் இருந்து விட்டால் பின் வேறெதற்கும் வாழ்க்கையில் நேரமோ, மனமோ இருப்பதில்லை. அதில் உண்மையில் பலியாவது இது போன்ற சின்னச் சின்ன ரசனைகளும் சந்தோஷங்களும் தான்.

இலக்குகள் மிக முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் ஒவ்வொரு கணமும் வாழப்பட வேண்டுமேயொழிய ஓட்டப்படக் கூடாது. எல்லாம் இயந்திரகதியில் இருந்து விடக்கூடாது. இலக்குகளைப் போலவே அவற்றை நோக்கிச் செல்லும் பயணத்தின் தரமும் முக்கியமே. முழுமனதோடும், ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்ய வேண்டிய செயல்களைச் செய்தோமானால் விரைவாகவும் தரமாகவும் சிறப்பாகவும் எதையும் செய்து முடிக்கவும் முடியும். இதையே ஜென் வலியுறுத்துகிறது.

மேலும் ஜென் எளிய வாழ்க்கையையும், நிறைவான மனநிலையையும் மிக முக்கியமாகக் கருதுகிறது. ஜென்னிற்கு கூர்மையான அறிவு முக்கியமில்லை. பக்குவப்பட்ட மனம் முக்கியம்.

அந்த மூதாட்டிக்கு ஜென் என்றால் என்ன என்று தெரியாமலேயே ஜென் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். அதனால் அதை விளக்க வேண்டிய போதனைகளுக்கு அவசியமிருக்கவில்லை. வாழ்க்கைக்காகவே போதனைகளே அல்லாமல் போதனைகளைக் கற்பதற்காக வாழ்க்கை அல்ல.

சுவர்க்கோழிகளின் ஓசையையும், காற்றையும், மழையையும், நிலவையும் யாரும் என்றும் அந்த மூதாட்டியிடமிருந்து பறித்து விட முடியாது. நம்மிடமிருந்து யாரும், எப்போதும் அபகரிக்க முடியாதவற்றின் மூலம் நம்மால் மகிழ்ச்சியடைய முடிந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் என்றும் குறைவதில்லை அல்லவா?

இதுவே ஜென் சொல்லும் மகிழ்வான வாழ்க்கையின் மிக முக்கியமான சூட்சுமம்...

விவசாயம் செய்பவனே இனி வரும் காலங்களில் உலகில் போற்றப்படுவான் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...


நீங்கள் துவாளு (Tuvalu) என்ற நாட்டை பற்றி கேள்வி பட்டதுண்டா...?


அந்த நாட்டை பற்றி சிறிது கூறிவிட்டு பிறகு விஷயத்திற்கு வருகிறேன்....

ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து பசிபிக் பெருங்கடலுக்கு நடுவில் உள்ள தீவு, வெறும் 26 சதுர கி.மீ பரபளவு கொண்ட குட்டி நாடு. உலகிலே சிறிய நாடுகளில் இது நான்காவது சிறிய நாடு.

இந்த தீவின் மொத்த மக்கள் தொகையே வெறும் 10000 சொச்சம் தான்.

தனி தேசிய கொடியும், 12 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றமும் உண்டு, பிரதமர், அமைச்சர்கள், அவை தலைவர் எல்லாம் உண்டு.

அரசியல் கட்சி எல்லாம் கிடையாது, சமுக அந்தஸ்து கொண்ட நபர்களையே ஆட்சியாளர்களாக மக்கள் தேர்வு செய்கிறார்கள்.

திரும்பும் திசையெல்லாம் பச்சை பசேனென்று என்று காட்சியளிக்கும் இயற்கை வளங்களுக்கு, அழகிற்கும் இங்கு குறைவில்லை.

எந்த நாடும் படையெடுத்து வரமுடியாத இந்த தீவுக்கு இப்பொழுது மிக பெரிய பிரச்சனை....

அது என்னவென்றால் புவியின் வெட்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் கடல் மட்டம் அதிகரித்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இந்த தீவு இதனால் பேராபத்து எதிர் நோக்கி இருக்கிறது...

கடல் மட்டத்துக்கும், இந்த தீவுக்கு தற்போது 4.6 மீட்டர் உயரம் மட்டுமே வித்தியாசம்.....

இதே நிலை தொடர்ந்தால் அந்த தீவு விரைவில் கடல் முழுமையாக விழுங்கி விடும் என்பது சத்தியமா உண்மை ....

ஆகையால் தான் அந்த நாட்டின் பிரதமர் கரியமில வாயு வெளியேற்றப்படுவதை உலக நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று திரும்ப திரும்ப குரல் கொடுக்கிறார்....

அதனால் இனி வரும் காலங்களில் நாம் முடிந்த அளவு வாகனங்கள் உபயோகிப்பதை கட்டு படுத்துவோம், வீட்டில் ஏ.சி, பிரிட்ஜ் உபயோகிப்பதை குறைப்போம்.... கடல் மட்டம் உயர்வதை தடுப்போம்....

இன்று துவாளு நாடு, நாளை நமது தமிழ்நாடாக கூட இருக்கலாம்....

வெறும் 10000 மக்கள் தானே அவசியம் ஏற்பட்டால் வேறு நாட்டிற்கு வந்து விடுங்கள் என்று ஜ.நா சபை கோரிக்கை விட்ட போது அந்த நாட்டு மக்கள் இப்படி சொன்னார்களாம்..

எங்களுக்கு என்று ஒரு தேசம், மொழி, பண்பாடு, கலாசாரம் என சுயமரியாதையோடு வாழ்கிறோம், அகதி என்ற அடையாளத்தோடு இன்னொரு நாட்டில் வாழ எங்கள் மனம் ஏற்கவில்லை....

சபாஷ் துவாளு நாட்டு மக்களே...

அதிமுக உத்தமன் ஓபிஎஸ்.. முன்னால் டீ கடை முதலாளியின்... தற்போதைய சொத்துக்கள் பல.. அதில் சில...


தெலுங்கர் திமுக கட்சியே... தமிழர்களுக்கு காவிரி நீர் பிரச்சனை யை உண்டாக்கியது...


வரலாற்றின் அடிப்படையில் கி.பி.1146 – 1163 ஆண்டுகளில் மைசூரை ஆண்ட போசள மன்னன் மைசூரில் அணை கட்டி காவிரியை தடுத்தான். காவிரியை தடுக்காமல் ஓடவிடுமாறு ஓலை அனுப்பினான் இரண்டாம் ராஜராஜன். தண்ணீர் தர மறுத்த போது படையெடுத்துப்போய் போய் அணையை உடைத்தான்.

பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே அணை எழுப்பி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார். அப்போது இராணிமங்கம்மாள் மைசூர் அணையை உடைக்கப் படையோடு போனார். படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தானகாவே வர தாழ் நிலமான தமிழகம் செழித்தது.

சுதந்திரத்திற்கு முன்பு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் 1892 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. "சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.” ‘கர்நடாகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

1911 செப்டம்பரில் மைசூர் அரசு கவிரியில் ஒரு அணை கட்ட தொடங்கியது. இதனால் இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணையும் (44.827 டி.எம்.சி.) தமிழகத்தில் மேட்டூர் அணையும் (93.50 டி.எம்.சி.) கட்டப்பட்டது.

1974 - இல் 1924 ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டு காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.

1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடகம்.

இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது. தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் 1971ல் வந்தது.  அச்சமயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்பட்டவுடன், தன் மீது சர்க்காரியா கமிஷன் கொடுத்த பரிந்துரையை வைத்து இந்திரா காந்தி வழக்குத் தொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றார் கருணாநிதி.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பிளவு பட்ட போது, காமராஜர் அணியில் இருந்த நிஜலிங்கப்பாவை வீழ்த்தி, தனது ஆதரவாளர் தேவராஜ் அர்ஸை முதல்வராக்கத் திட்டமிட்ட இந்திரா காந்தி, தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து காவிரிச் சிக்கலை கர்நாடகத்திலும் அரசியலாக்கி விட்டார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் திமுக தெலுங்கர் கருணாநிதி...

தமிழரின் மறந்த இசைக் கருவி...


தமிழர் வாசித்த முதல் இசைச் கருவி...

இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது.

இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் - வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.

வடிவம் வகை: யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.

பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) 'பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்' என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது 'இசையும் யாழும்' என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.

யாழின் பரிணாமம்: வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.

தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது.

இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது. யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்: யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.

அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்துள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை 'ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்' 'பண்ணோடி யா‘ வீணை பயின்றாய் போற்றி' என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் 'வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)' என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது.

மேலும், 'வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)' என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.

எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.

ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே.

தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர். வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர்.

ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன.

இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று...