சரி ஏன் தமிழ் நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்கிற வாதம் வந்தது என்பதற்கு இவர் பதில் கூறுவாரா?
பிராமணியம் சுவிகரித்துக் கொண்ட முருகனை முப்பாட்டன் என்பது மதவாதம் என்கிறார்.
சரி ஓனம் என்கிற இந்துக்கள் பண்டிகையை கேரளாவில் வாழும் அனைத்து மத மக்களும் கொண்டாட வேண்டும் என்று அருணன் அவர்களின் ஆசான் இஎம்எஸ் நம்பூதிரி பட் அரசாணை ஒன்றை வெளிட்டாரே அதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
தமிழ் தேசியம் சாதிய வாதம் என்கிறார் அருணன்.
அதாவது தமிழ் தேசியம் ஆட்சி அதிகாரம் என்று வந்தால் மாற்று மொழி மக்கள் மூன்றாம் நான்காம் தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்கிறார்.
தமிழ் நாட்டில் வாழும் எல்லாம் மாற்று மொழி மக்களும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வசதி வாய்ப்புகள் செய்து தரப்பட்டுள்ளது.
ஆனால் இவரின் கூடாரமான கேரளாவில், இவர் பிறந்த கர்நாடகத்தில், ஆந்திராவில் உள்ள தமிழர்கள் தமிழில் கற்க முடியுமா?
அதை தடை செய்தது யார்?
அதற்கு என்ன பெயர் சூட்டுவார் இந்த அருணன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.