21/06/2018

கொஞ்சம் உண்மை.... நிறைய பொய்.. கொஞ்சம் மிச்சம்.... நிறைய செலவு.. கொஞ்சம் நன்மை.... நிறைய பாதிப்பு - அத்தியாயம் -1...


சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான எட்டு வழி பசுமை சாலை அமைக்கப்பட்டு விட்டால்  தமிழகம் சொர்க்கபுரி ஆகி விடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். இந்த திட்டத்தால் ஏராளமான மக்கள் பயனடைவார்கள் என்று கூறியிருக்கிறார். உண்மையில் இந்தத் திட்டத்தால்  ஆயிரக்கணக்கான கோடிகளை கையூட்டாக பெறவிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், அந்த சாலையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்தையும் தவிர தமிழகத்தில் வேறு யாருக்கும், எந்த நன்மையும் பயனும் ஏற்படப் போவதில்லை என்பது தான் உண்மை ஆகும்.

பொய்யான புள்ளி விவரங்கள்...

பசுமைச்சாலை தொடர்பாக ஏராளமான புள்ளிவிவரங்களை  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அவற்றில் பசுமைச்சாலை 8 வழித்தடங்களைக் கொண்டிருக்கும் என்பது மட்டுமே உண்மை. மற்ற தகவல்கள் அனைத்தும் வடிகட்டப்பட்ட பொய் ஆகும்.

முதலமைச்சர் சொன்ன முதல் பொய்:
‘‘ சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான  இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும் அகலப்படுத்தினால், ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் 15 மீட்டர், அதாவது 30 மீட்டர் அகலத்திற்கு கையகப்படுத்த வேண்டும். இதற்கென மொத்தம் சுமார் 2,200 ஹெக்டேர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த பசுமை விரைவுச்சாலை அமைக்க சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும். இதில் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகும். இப்புதிய சாலையினால், கிட்டத்தட்ட 300 ஹெக்டேர் நிலம் குறைவாக கையகப்படுத்தினால் போதுமானது’’ என்று கடந்த 11&ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறினார்.

இது எந்த வகையில் தவறான புள்ளிவிவரம் தெரியுமா?

 பசுமைச் சாலை திட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி பசுமை சாலை 70 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். முதலமைச்சர்  கூறியவாறு ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்த 30 அடி அகலத்திற்கு நிலம் எடுக்க மொத்தம் 2200 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த வேண்டுமாம். ஆனால், 70 மீட்டர் அகலத்திற்கு நிலம் எடுக்க 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தினால் போதுமானதாம். இந்த விளக்கத்தை மூன்றாம் வகுப்பு மாணவன் கூட ஏற்க மாட்டான்.

பறிக்கப்படும் நிலங்களை பாதியாகக் காட்டுவதா?

விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளி விவரங்களின்படி 2791 ஹெக்டேர், அதாவது 6,978 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டுமாம். அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1229 ஹெக்டேர், அதாவது 3072 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டுமாம்.

ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ ‘‘1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தினால் போதுமானது. அதிலும் 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் என்பதால் 1500 ஹெக்டேர் அதாவது   3750 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தினால் போதுமானது’’ என்று கூறுகிறார். திட்ட அறிக்கையில் கூறப்படும் 6978 ஏக்கருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறும் 3750 ஏக்கருக்கும் உள்ள இடைவெளியை பாருங்கள். பறிக்கப்படவுள்ள நிலங்களை பாதியாக குறைத்துக் காட்டி மக்களை ஏமாற்றத் துடிக்கிறார் எடப்பாடி.

பித்தலாட்டம்...

அடுத்ததாக ‘‘இச்சாலையின் மொத்த நீளமான 277.30 கிலோமீட்டரில், 9.955 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை மட்டுமே, செங்கல்பட்டு, ஆரணி, போளூர், செங்கம் மற்றும் அரூர் ஆகிய வனப்பகுதியில் செல்கிறது. அதாவது, கையகப்படுத்த தேவையான 1,900 ஹெக்டேரில், 49 ஹெக்டேர் மட்டுமே வன நிலத்திற்குள் அடங்கும்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால், விரிவான திட்ட அறிக்கையிலோ 13.290 கி.மீ தொலைவுக்கு வனப்பகுதியில் பசுமை சாலை அமைக்கப்படவுள்ளது என்றும், இதற்காக 120 ஹெக்டேர், அதாவது 300 ஏக்கர் வன நிலம் கையகப் படுத்தப்பட வேண்டும் என்றும் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டில் யார் சொல்வது உண்மை. திட்ட அறிக்கை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆவணம். அது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.  அப்படியானால், எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தானே பொய்யாக இருக்க வேண்டும். இதிலிருந்தே புரிந்து கொள்ளுங்கள் முதலமைச்சர் பதவியில் இருப்பவரின் பித்தலாட்டத்தை...
 நாளை.... கொஞ்சம் மிச்சம்.... நிறைய செலவு..

- தொடரும்...

பசுமை வழிச் சாலை உண்மைகள்...


சாகர்மாலா உண்மைகள் - 2...


பாகிஸ்தானின் க்வடர் (Gwadar), வங்கதேசத்தின் சிட்டகாங் (Shittagong), மியான்மரின் சிட்வெ (Sittwe), தாய்லாந்தின் கரா கால்வாய் (Kra Canal), வியட்னாம் அருகில் உட்டீ தீவுகள் (woody islands) ஆகிய இடங்களில் சீன கடற்படை தளங்களுக்கான பணிகள் நடந்து வருகிறது.

இலங்கையின் அம்பாந்தோட்டம் துறைமுகம் சீனாவுக்கு வழங்கியுள்ளது இலங்கை அரசு. அங்கே சீன துறைமுகம் அமைக்க நேரடி முதலீடு செய்து வருகிறது.

மரபார்ந்த அறிவியலும், தொழில்நுட்பம் சிறந்து விளங்கிய மாயன், இன்கா போன்ற பல்வேறு பூர்வகுடிகளை அழித்து உருவாக்கபட்ட நாடு தான் அமெரிக்கா

அதேபோல இத்திட்டங்கள் மூலம் அழிய போவது தமிழ் நாட்டின் இயற்கை வளங்களும் தமிழர்களின் வாழ்வாதாரமும் தான்

மேலும் அடுத்த பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்...

சாமானியர்களின் வேதனை அரசுக்கு தெரியாது...


சட்டமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம்...


தமிழக சட்டமன்றத்தில் கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை தொலைக்காட்சி நேரலையில் மக்களுக்கு அளிக்க பணம் இல்லாத அரசின் சட்டமன்ற செயல்பாடுகளைக் காண நேரில் செல்வதை தவிர வேறு வழி இல்லாததால் சில முக்கிய துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் இயக்க நண்பர்கள் பார்வையாளராக கலந்துக்கொண்டனர்.

நேரில் சென்று பார்த்த அனுபவத்தை வைத்து பார்த்தால் தமிழ்நாட்டை ஆளும் சட்டமன்றம் இயங்கும் விதம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

எடுத்துக்காட்டாக, சட்டமன்றத்திற்கு பின்னால் உள்ள இராணுவ பயிற்சி மைதானத்திற்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அரசு வாகனம் முதல் மக்கள் பயன்படுத்தும் வாகனம் வரை அனைத்தும் எந்த ஒரு ஒழுங்குமின்றி ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, சட்டமன்றத்தை காண வரும் பார்வையாளர்களை, நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களைப்போல கடிகாரம்,மோதிரம்,Belt,சில்லறைக்காசு,காப்பு,வளையல்,அலைப்பேசி என மேலணிந்துள்ள எல்லா பொருட்களையும் அகற்றியப்பிறகே அனுமதிக்கின்றனர். கண்ணாடியும் அணிந்து செல்லக்கூடாது என மறுத்த பேரவை காவலர்கள்,  நீண்ட விவாதத்திற்கு பிறகே அனுமதித்தனர். பேரவை உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகவே இத்தனை கெடுபிடிகள் என காரணம் கூறினாலும், அகற்றிய பொருட்களை வைக்க பாதுகாப்பற்ற ஒரு குருவிக்கூண்டு மட்டுமே உள்ளது. இதில் விலைஉயர்ந்த பொருட்களை வைக்கவும் அனுமதி இல்லை. சட்டப்பேரவையை காண வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைக்க சட்டமன்றத்திலேயே இடம் இல்லாத சூழல்தான் நிலவுகிறது.

மூன்றாவதாக, பேரவைக்கூட்டத்தை காண வரிசையில் காத்திருக்கும் மக்கள் குடிநீர் அருந்த எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. குடிநீர் எங்கும் இல்லாத காரணத்தால் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் அலுவலத்தில் சென்று குடிநீர் அருந்திவந்தோம்.

நான்காவதாக, பொதுமக்களுக்குத்தான் இத்தனை பிரச்சனை என்றால் பேரவையினுள் அமர்ந்து இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், TNSTC அரசு பேருந்தில் அமர்ந்து பயணம் செய்வது எவ்வளவு நெருக்கடியாக இருக்குமோ அந்த அளவிற்கான நெருக்கடியில் அமர்ந்து உள்ளனர்.

 உலக வங்கியிடம் கடன் பெற்றாவது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நன்கமர்ந்து விவாதிக்க ஒரு புதிய சட்டமன்றத்தை தமிழக அரசு கட்ட பரிசீலிக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்திடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1) பாராளுமன்றக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துக்கொள்ள தேவையான அனுமதி படிவம் பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ளதைப்போல சட்டப்பேரவையைக்காண வரும் பொதுமக்களுக்கான அனுமதி படிவத்தையும் பேரவை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்தல்.

2) சட்டப்பேரவையைக் காண வரும் பொதுமக்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க வசதி ஏற்படுத்துதல்.

3) பேரவையைக்காண வரிசையில் நிற்கும் பொதுமக்களும், அமைச்சர்களை காண வரும் பொதுமக்களும் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலையை தவிர்க்க தக்க குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதுதல்.

4) நெரிசலில் சிக்கித்தவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்கு அமர்ந்து பங்கேற்க ஏதுவாக புதிய சட்டமன்றத்தைக்கட்ட கோருதல்...

முட்டாள் சமூகவே விழித்துக்கொள்...


மர சவஅடக்கம் (Tree Burials)...


மரப்பெட்டியில் அடக்கம் செய்வது தெரியும், அது என்ன மர அடக்கம் என்கிறீர்களா? 

உலகின் சில பண்டைய பழங்குடியினர் வழக்கப்படி, பிணங்களை சமபகுதியான பூமியில் புதைப்பதை விட, மிகவும் உயர்ந்த இடங்களில் சவஅடக்கம் செய்வதே பாதுகாப்பான, சிறந்த வழி என நம்புகிறார்கள்.

ஆஸ்திரேலியா, ப்ரிட்டிஷ் கொலம்பியா, சைபீரியா நாடுகளைச் சேர்ந்த பழங்குடியினர் இவ்வழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.

அதாவது, பிணங்களை ஒரு துணியில் சுற்றி அதை ஒரு கொக்கியில் மாட்டி , உயரமான மரத்தில் தொங்கவிட்டு விடுகிறார்கள்.

என்ன கொடுமை சரவணன் இது?

http://www.youtube.com/watch?v=ER4ybQt9yLk

சாகர்மாலா உண்மைகள்...


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை : ஆட்சியர் தகவல்...


தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் உத்திரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் (மாற்றுத்திறன் குறைந்தது 40சதவீதம்) எவரேனும் தமிழக அரசின் மூலம் மாதாந்திர உதவித் தொகை பெறவில்லை எனில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியரை அணுகி மாதாந்திர உதவித்தொகை வேண்டி மனு அளிக்கலாம்.

மனு அளிக்க செல்பவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (3) ஆகியவற்றுடன் சென்று மனு அளித்து பயன் பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...

அரசாங்கம் - அதிகார வர்க்கம்...


குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது?


உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தையும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது?

நாகு, காடு, மாசு, மாடு, ஆடு, தேடு, யாது, காது, பாகு, ஆறு - இந்தச் சொற்களில் வரும் ‘உ’ கரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

‘உ’கரத்தின் முன் ஒரு நெடில் எழுத்துதான் இருக்கவேண்டும்.

நாகு என்பதில் உள்ள ‘நா’ வை ‘ந்’ + ஆ எனப் பிரித்துப் பார்த்து, ‘உ’கரத்துக்கு முன் உயிர் எழுத்து வந்துள்ளதே.. அதனால் இதனை உயிர்த் தொடர் என்று சொல்ல வேண்டும் என்று எண்ணுவது தவறு.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் அதன் முன்பு இரண்டு மூன்று எழுத்துக்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அரசு, அழகு, பயறு, வயிறு, உதடு, செவிடு, குருடு, ஏற்காது, வாராது, போராடு, வருமாறு - இவை உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள்.

குசுடுதுபுறு என்பவற்றில் ஏதாவது ஓர் ‘உ’கரத்தைக்கொண்டு ஒரு சொல் முடிந்துவிட்டதாலேயே, அந்தச் சொல் குற்றியலுகரத்தில் முடிந்திருப்பதாகக் கருத முடியுமா?

முடியாது.

அது, ஒடு, முசு, பசு, கொசு, நடு, படு, குறு, பகு, தபு - இந்தச் சொற்கள் குசுடுதுபுறுவில் முடிந்தாலும், இந்த ‘உ’கரங்கள் குற்றியலுகரங்கள் ஆகாது. அதே வேளையில் யாது, ஓடு, மூசு, நாடு, பாடு, கூறு, பாகு என்று நெடிலாக வந்தால் குற்றியலுகரங்களாக மாறிவிடும்.

எழுத்துகளைப்பற்றி வேறு செய்திகள் உள்ளனவா?

உள்ளன. உயிர் எழுத்து, மெய்யெழுத்து, சார்பு எழுத்து என்று கண்டோம்.

போலி எழுத்து என்பது உண்டு. போலி எழுத்தாளர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. எழுத்தில் போலியா?

ஆம். போலி எழுத்து குறி்த்து பார்ப்போம்.

‘ஐ’ என்னும் நெடில் எழுத்துடன் 'அ' 'இ' சேர்ந்து போலியாகும். எப்படி? 'ஐவனம்' என்பதை 'அஇவனம்' என எழுதலாம். (ஐவனம் என்றால் மலை நெல் என்று பொருள்)

'ஔவை' என்பதை 'அ உவை' என எழுதலாம்.

மேலும் ‘ஐ’ என்பது ‘ய’கரப் புள்ளியையும் ஔ என்பது ‘வ’கரப் புள்ளியையும் பெறும். அதாவது அய்வனம் என்றும், அவ்வை என்றும் எழுதலாம். ( இன்னமொரு உதாரணம் ' ஐயப்பன் ' 'அய்யப்பன்' )

ஐவனம், அஇவனம்= அய்வனம்; ஔவை, அஉவை= அவ்வை என மூன்று மாதிரியாக எழுதலாம்.

எழுத்துக்களைப் பற்றி அறிந்தோம், இனி சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

தமிழ் மொழியில் உயர்திணை சொற்கள், அஃறிணைச் சொற்கள் என இரு பிரிவுகள் உண்டு.

திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்.

உயர்ந்த ஒழுக்கமுடையவன் மனிதன், கடவுள், தேவர்கள்.

அவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணை என (திணைக்குப் பிரிவு என்றும் பொருள் உண்டு) குறிப்பிடப்படும்.

உயர்திணையில் ‘மூன்று பால்களும்’, அஃறிணையில் ‘இரண்டு பால்களும்’ எனக் கூடுதல் ‘ஐந்து பால்கள்’ உண்டு.

உயர்திணை : ஆண்பால், பெண்பால், பலர்பால்.
அஃறிணை : ஒன்றன்பால், பலவின்பால்.

பால் என்றால் அதை ‘பிரிவு’ என்று பொருள் கொள்ள வேண்டும்

அறத்துப்பால் என்றால் அறமாகிய பிரிவு என்று புரிந்து கொள்ளவேண்டும்.

பாலாகிய பிரிவினையை உதாரணமாக வைத்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்:

அவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார் (அவர் என்பது பன்மை); அது வந்தது; அவை வந்தன.

தமிழ்மொழியின் அடிப்படைகளில் வேறு என்னென்ன அறிந்துகொள்ள வேண்டும்?

திணை, பால், எண் (ஒருமை,பன்மை), இடம் (தன்மை - நான், நாம்; முன்னிலை - நீ, நீவிர், நீங்கள்; படர்க்கை - அவன், அவள், அவர், அது, அவை), காலம் ( இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) ஆகியவை அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியவை.

ஆங்கிலத்தில் பெயர்ச் சொல், வினைச் சொல் என்று சொற்களைப் பலவாறு பிரிக்கின்றார்களே, அப்படிப்பட்ட பிரிவு தமிழில் உண்டா?

உண்டு. பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், என்று நான்கு வகை உண்டு.

கனி=பெயர்ச் சொல்

பழுத்தது=வினைச் சொல்

கனியைச் சுவைத்தேன்= இதில் ‘ஐ’ என்பது இடைச் சொல் ( ஐ= வேற்றுமை உருபு);

கனி நனி சுவைத்தது - இதில் 'நனி' என்பது உரிச்சொல்.

எழுத்தாளர்கள் எழுதும் போது எப்படியெல்லாம் தவறுகள் ஏற்படுகின்றன?

தவறுகள் பலவகை. சொற்பொருள் தெரியாமல் ஏற்படுவது ( அரம் -அறம்)

ஒற்றெழுத்துப் பிழை (விளையாட்டு செய்திகள்= கண்டிப்பாக ‘ச்’ வர வேண்டும்)

முயற்ச்சி (கண்டிப்பாக ‘ச்’ வரக் கூடாது)

ஒருமை பன்மை பிழைகள் - ( நிவாரணங்கள் வழங்கப்பட்டது. ( வழங்கப்பட்டன என்பதே சரி ) )

ஒரு போடவேண்டிய இடத்தில் ஓர் போடுவது - (ஓர் கண்ணாடி - ஒரு கண்ணாடி என்று தான் எழுத வேண்டும்)

செய்வினை, செயப்பாட்டுவினை தவறுகள் எனப் பலவகை உண்டு.

இவ்வகைத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

ஆங்கில மொழியில் 'a', 'an' எங்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி உண்டு. அதைப்போல் தமிழிலும் உண்டா?

உண்டு. உயிர் எழுத்துக்கு முன்பு ‘ஓர்’ பயன்படுத்த வேண்டும்.

ஓர் இரவு
ஓர் இலை
ஓர் ஊர்
ஓர் அணு
ஓர் ஏர்
ஓர் இந்தியன்

உயிர்மெய் எழுத்துக்கு முன்பு ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும்

ஒரு சொல்
ஒரு வில்
ஒரு வீடு
ஒரு நாற்காலி

‘ஓர், ஒரு’ போல வேறு சொல்லமைப்புகள் உண்டா?

உண்டு.
இரு, ஈர் என்னும் சொற்கள் உண்டு. உயிருக்கு முன்பு ஈரும், மெய்யுக்கு முன்பு இருவும் பயன்படுத்த வேண்டும்.

ஈருடல்
ஈர் ஓடை
ஈர் உருளி
ஈர் இரண்டு
ஈர் உளி

இரு கப்பல்கள்
இரு புலிகள்
இரு தலைகள்

தமிழ் மிக இனிமையான, எளிமையான மொழி...

பாஜக - அதிமுகவின் அடுத்த சதி வேலை...


திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை...


அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டை ஆக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது.

திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா!

அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.

சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள மூளையின் புறணி (frontal cortex) என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் மூளை பின்புற மேடு (Hippocampus) என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த மூளையின் புறணி சிறப்பான முறையில் தொழிற்படும்.

உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும்.

அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்...

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது...

கந்தவர் கோட்டை செட்டியா குளம் இந்த நிலையில் உள்ளது...


துர்வார அரசு நிதி ஒதுக்கியும் இன்னும் சுத்தம் செய்யப்பட வில்லை.....

இதே போல் வங்கார ஓடை, சங்கூரணி இன்னும் தூர்வார படாமல் உள்ளது...

8வழிச் சாலைக்கு நில அளவீடு...


போராட்டத்தின் போது பெண் காவலரிடம் அத்துமீறும் காவல்துறை அதிகாரி..

சேலம்  சென்னை இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி விரைவுச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் இன்று ஆச்சாங்குட்டப்பட்டியில்  மாணவி வளர்மதி பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து  காவல் துறையினர் மாணவி வளர்மதியை கைது செய்தனர். மாணவி கைதின் போது பெண் காவலர்களிடம் ஒரு காவல்துறை அதிகாரி போராட்டசாக்கில் அத்துமீறுவது தொலைக்காட்சி பதிவில் தெரியவந்திருக்கிறது. இது பொதுமக்கள் மற்றும் பெண் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது-

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை சென்றடையும்  பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக  8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுத்தும் பணி துவங்கியிருக்கிறது.  500 ஏக்கர் வனப்பகுதி, ஆறுகள், 8 மலை பிரதேசங்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சியினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் அடிமலைப்புதூர் பகுதியில் விவசாய நிலைத்தில் முட்டுக் கல் நடும் பணி நடைபெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி உட்பட7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் வஞ்சவாடி அருகில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் முட்டுக்கல் நடும் பணி நடைபெற்றது. அப்பகுதியில் சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தார். இதை தடுக்கும் வகையில் அங்கு குவிந்த காவலர்கள் மாணவி வளர்மதியை இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்.

காவலர் அத்துமீறல்
மாணவி வளர்மதியை கைது செய்த போது ஏற்பட்ட தள்ளு முள்ளு சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அங்கிருந்த ஆண் காவல் துறை அதிகாரி  ஒருவர் திட்டமிட்டு பெண் காவலரின் மார்பில் தொடர்ந்து கை வைக்கும் காட்சி  ஊடகங்களின் நேரலை ஒளிபரப்பானது. இது பொதுமக்கள் மற்றும் பெண் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பெண் உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்...

எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா?


வாங்கோ வாங்கோ.. சுத்தமான காற்று ஹே.. தமிழ்நாடு ஹே விற்பனைக்கு ஹே...


நீரும் காற்றும் இனி பணத்துக்கு எனில்...நாய் பூனை கொக்கு மைனா..

எல்லாம் எங்கு போகும்..?
எந்த கடையில் வாங்கும்..?

மனிதர்களுக்கான உலகா.. இது..
க்கும். இலங்கை காட்டுக்குள் இருந்து கொண்டே... AC காற்று கேட்கும் என் சமூகத்திற்கு இதன் பயங்கரம் புரியவா போகிறது..?

வீட்டில் கிணறு இருந்தும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் என் சமூகத்திற்கு தெரியாது..

மாடு கட்டி சூடடிக்க போதாது என்று யானை கட்டி சூடடித்த தமிழ்நாட்டில் ஒரு குடம் தண்ணீரின் விலை 10-30 ரூபாய் என்று..

30×3=90 ஒரு குடம் தண்ணீரின் விலை என்று..

எதும் பண்ண முடியாதுனாலும் தெரிஞ்சு வச்சுக்கங்க..

தூய காற்றும் விற்பனைக்காம்...

பத்திரிகையாளர் நூருல் ஜஹபரை கைது செய்திருப்பதற்கு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது...


தமிழின் பெருமைகள்...


தமிழுடன்  பிறந்த பல மொழிகள்  இன்று இல்லை.

எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை.

ஏசு பேசிய  அரமிக்  இன்று இல்லை.

புத்தர் பேசிய பாளி மொழியும் இன்று  இல்லை.

ஆனால் தமிழ்  மொழி  எத்தனை  சோதனை  வந்தாலும்  அதனை  வென்று  தன்னிகரில்லா இடத்தை பெற்று நிலைத்து உள்ளது...

தங்களை உருவாக்கிய தலைவியையே கொள்ளைக்காரி என்று கூறிய அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...


திராவிடலு பகுதி - 6...


ஆங்கிலேயர் திராவிடத்தை உருவாக்கியது என்பது முன்பே ஊகித்து செய்தது அது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப்  பயன்பட்டது.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் 'உங்கள் சிறப்பை ஆராய்கிறேன் பேர்வழி' என்று கூறிக்கொள்ளும் சில ஆராய்ச்சியாளர்களையும் மதபோதகர்களைஅப்பகுதி மக்களோடு கலந்துவிடுவர்.

இதைப் பொதுவாக அன்றைய அனைத்து காலணியாதிக்க நாடுகளும் செய்தன என்றாலும் ஆங்கிலேயலர் இதை மிகவும் சிரத்தையுடன் செய்தனர்.

இன்றும் 'ஆங்கில மொழி' உலகை ஆட்டிப்படைக்கக் காரணம் அன்றைய ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும் சென்று அப்பகுதி மக்களின் இனவரலாறு, மதம்,உணவுப்பழக்கம், பண்பாடு,மருத்துவம், கலாச்சார நம்பிக்கைகள் என அத்தனைத் தகவல்களையும் ஆங்கிலத்தில் தொகுத்து வைத்ததேயாகும்.(அப்போது தானே பிரித்தாள முடியும்).

மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் தமிழரை ஆராய வந்த வெளிநாட்டவர் தமிழ்மேல்காதல்கொண்டு தமிழுக்குத்தொண்டு செய்து  தமிழரோடு தமிழராகஒன்றிவிட்டனர்.

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தான் வீரமாமுனிவர்,ஜி.யு.போப் போன்றவர்கள்.

அவ்வாறு தமிழ்நாட்டுக்கு வந்தவர்தான் 'திரு.ராபர்ட் கால்டுவெல்'.

'திராவிடம்' என்கிறக் கருத்தியலை உருவாக்கியவர்.

இவர் 1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.

ஸ்காட்லாந்தில் கல்வி கற்ற இவர் மொழியாராய்ச்சியிலும் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

கிறித்துவ மதத்தை பரப்ப 1838ல் தமிழகத்துக்கு வந்தார்.

தமிழருடன் நெருங்கிப்பழக தமிழ் கற்க ஆரம்பித்துதமிழின்மீது ஈடுபாடு அதிகமாக, தமிழர்வரலாற்றை ஆராயத்தொடங்கினார்.

தென்னிந்திய மொழிகளின் ஒற்றுமையையும்வடமொழிகளிலிருந்து அவை முற்றிலும்வேறுபட்டவை என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்ட இவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம்' இன்றும் திராவிடவாதிகளின் வேதநூலாக உள்ளது.

இவரைப்பற்றிய விமர்சனங்களும் உள்ளன..

சாணார் மக்களைப் பற்றி இவர் எழுதிய நூலின்கருத்துக்களுக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கஆங்கில அரசே அந்நூலைத் தடைசெய்யும் நிலையும் வந்தது (அப்போது இவர் இரண்டு வருடங்கள் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது).

இவர் கிறித்துவ மதத்தில் தீவிரமாக இருந்தவர் என்றும் தெரியவருகிறது.

ஆனால் இவர் தமிழுக்கு செய்த தொண்டைக் கருத்தில் கொண்டால் இவர் உண்மையில் தமிழ்ப் பற்றுள்ளவர்என்றே தெரிகிறது.

எது எப்படியோ, இவர் பிராமணரே ஆரியர்என்றோ தென்னிந்தியர் அனைவரும் ஒரே இனத்தவர் என்றோ கூறவில்லை.

இவர் எடுத்துரைத்த 'திராவிடம்' தென்னிந்திய மக்கள் பேசும் மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததென்ற கருத்தியலை முன்வைக்கிறது அவ்வளவே.

திராவிடம் அல்லது திராமிடம் எனும் சொல் 'தெற்கு' எனும் பொருள்தருவதாக வடமொழியில்வழங்கிவந்ததாகக் கூறுவர்.

திராவிடப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட...

ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை பற்றிப் பாடிய பாடலில் 'திரமிட' எனும் சொல் தெற்கு என்றபொருள்படும்படி கையாளப்பட்டுள்ளது.

த்வ சத்ன்யாம்
மான்யே தாரணிதாரா கன்யே ஹிருதயதா
பய பராப்ஹார பரிவஹதி சாரச்வத்மியா
தஹயவாத்யா தாட்தம் திரமிட
சிசு ராசவத்யா தாவா யாத்
காவீனம்
ப்ரோயுதனா மஜானி காமனியா கவாயிதா.

இப்பாடலில் ஆதிசங்கரர் திரிஞானசம்பந்தரை 'திராவிடசிசு'என்று இழிந்து கூறுவதாக திராவிட வாதிகள்மேடைதொறும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முட்டி மோதி உருண்டு புரண்ட பின்பு அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் இதுதான்.

இதுவும் உண்மையா என்றால் அதுவும் இல்லை.

முழுப்பாடலையும் ஆராய்கையில், இது திருஞானசம்பந்தரை புகழ்வதாகவே அமைந்துள்ளது.

தெற்கில் ஒரு குழந்தை உன் மார்பில் பால் குடித்ததால் சிறந்த அறிவுடன் விளங்குகிறது என்று பார்வதியை புகழ்வதாக இப்பாடல் பொருள் தருகிறது.

தவிர இதில் 'திரமிட' என்ற வார்த்தை தான் வந்துள்ளது 'திராவிட' என்று வரவில்லை.

(திராவிட- எதிலிருந்து வந்தது என்பதைப் பின்னர் விளக்குகிறேன்).

இவற்றைக் கூறியது ஏனென்றால், திராவிடம் என்ற சொல் தமிழுக்கு சிறிதும்சம்பந்தமில்லாதது என்பதையும்,
திராவிடம் என்ற கருத்தியலே தற்போதைய 'திராவிடக் கோட்பாட்டுக்கு' முரணானது என்பதையும் விளக்கவே.

நூறுவருடம் எடுபடாத ஒருகோட்பாடு எப்படி நடைமுறையில்திடீரென்று குதித்தது?

தமிழ்ப் பிராமணர்களே ஆரியர்என்று எப்படி நம்ப வைக்கப்பட்டது?

மற்ற மொழியினரும் தம்மொழிப் பிராமணரை அந்நியராகக் கருதினரா?

- தொடரும்...

இது தான் வளர்ச்சியா.?


எதிர்கால சந்ததியினருக்கு நிகழ்காலத்தில் விருந்து வைத்த விஞ்ஞானி...


அறிவியல் உலகில் பல்லாண்டு காலமாக நீங்காத மர்மங்களில் Time Travel (காலப்பயணம்) முக்கியமான
இடத்தினை பிடிக்கிறது.

தற்போது இருக்கும் காலத்தில் இருந்து
இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ பொருள்களை அனுப்புவதோ, தகவல்கள் சமிக்ஞைகளை அனுப்புவதோ, அல்லது மனிதர்கள் பயணம் செய்வதையோ காலப்பயணம் என குறிப்பிடுகின்றனர்.

ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட சிறப்பு சார்பியல் மற்றும் பொது சார்பியல் கொள்கைகளே காலப்பயணம் என்ற கருத்தை முதலில் முன்வைத்தது.

மேலும், இவ்வாறான காலப் பயணத்தை அடைய பயன்படும் தொழிநுட்ப சாதனத்தினை கால இயந்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.

அதாவது, ஒளியின் வேகத்திற்கு இணையாக பயணித்தால் காலப்பயணம் சாத்தியம் என்று கூறப்படுகிறது.

கடந்த 19ம் நூற்றாண்டில் இருந்து காலப் பயணம் மற்றும் கால இயந்திரம் பற்றி எண்ணற்ற புனைவு கதைகள் வரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்த காலப்பயணத்தை உண்மை என நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஸ்டீபன் ஹாக்கிங்.

அனு இயலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பிறகு, உலகின் அதிமுக்கிய அறிவு ஜீவியாக அறியப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இந்த பேரண்டத்தின் புரியாத பல ரகசியங்களை மனிதகுலத்துக்கு புரிய வைத்தவர்.

2009ம் ஆண்டு யூன் மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மண்டபத்தில். காலப்பயணிகளை வரவேற்கிறோம் (Welcome Time Travellers) என்ற பெயரில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்து அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்தார்.

அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தில் உயர்தர விருந்துக்குத் தேவையான அனைத்து உணவு வகைகள், ஷாம்பெய்ன் பாட்டில்கள் என அனைத்தும் தயார் நிலையில் இருந்தன.

விருந்துக்கான நேரம் நெருங்கிக் கொண்ட ருந்தது. ஆனால், விருந்தினர் ஒருவர்கூட வரவில்லை.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த விழாவுக்கு
அழைப்பிதழே வழங்கப்படவில்லை என்பது தான்.

அழைப்பிதழே கொடுக்காத விருந்துக்கு
யார் வருவார்?

காரணம் அந்த விருந்து நிகழ்கால மனிதர்களுக்கானது அல்ல, எதிர்காலத்தில் வசிப்பவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

அதாவது, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பூமியில் வாழப்போகும் நம் எதிர்காலச் சந்ததியினர், ‘காலப் பயணம்’ (Time Travel) மூலமாக இறந்த காலத்துக்கு வந்து, இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.

இது படிப்பதற்கும், கேட்பதற்கும் சற்று சாத்தியமற்றதாக இருந்தாலும், இவையெல்லாம் வருங்கால அறிவியல் உலகில் சாத்தியம் என்று வலியுறுத்தி வருகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்...

கேளிக்கை திசைத்திருப்பல்...


ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?


வ.உ.சி நடத்திய மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கி. அவரை சிறையில் தள்ளி அவரது கப்பல் கம்பெனியை இல்லாமல் செய்து. அந்த செம்மலை சவுக்கால் அடித்து செக்கிழுத்த வைத்த ஆஷ் துரை என்ற வெள்ளைக்காரனுக்கு..

தமது அடிவருடவே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட  திராவிட வந்தேறிகள்தான் வீர வணக்கம் வைக்க வேண்டும்.

வ.உ.சி ஏற்படுத்திய திருநெல்வேலி எழுச்சியை அடக்கி. நெல்லை மக்களை படாதபாடு படுத்திய ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்.

பிறப்பால் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக சாதி வெறியோடு வெறுக்கும் மந்தை கூட்டமாக தமிழர்கள் மாறவேண்டாம்.

இந்தியா மறந்திருக்கலாம்.
தமிழகம் மறந்திருக்கலாம்.

ஆனால் நெல்லை மக்கள் அத்தனை நன்றி கெட்டவர்கள் இல்லை.

செங்கோட்டை மண்ணின் மைந்தன் வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்று விட்டு தானும் இறந்த போது அவருக்கு வெறும் 25 வயது.

அரசாங்க வேலையை உதறிவிட்டு நிறைமாத சூலியான தனது மனைவி பொன்னம்மாளை அப்படியே விட்டுவிட்டு.

புதுச்சேரி போய் பாரதிதாசனிடம் துப்பாக்கி வாங்கி வந்து ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தனது உயிரையும் விட்டவன் தான் வாஞ்சி.

அவரது உடல்கூட குடும்பத்தினரிடம் கொடுக்கப்படவில்லை. என்ன செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது.

அதனால் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் போய்விட்டு திரும்பி வந்த பொன்னம்மாள் தன் கணவர் இறந்ததை கடைசி வரை நம்பவில்லை.

இறக்கும்வரை சுமங்கலியாகவே இருந்து இறந்தார்.

இன்றும் செங்கோட்டை அக்கிரகாரத்தில் சுமங்கலி மாமி வீடு எது என்று கேட்டால் சொல்வார்கள்.

ஒருவேளை வாஞ்சியின் குறி தவறினால் அடுத்ததாக இன்னொரு துப்பாக்கியுடன் நின்றவர் மாடசாமிப்பிள்ளை.

இவரை கடல்வழியாக தப்பிக்கவைத்தார் பாரதிதாசன்.

அவர் அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

இதெல்லாம் நெஞ்சைத் தொடாது பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறி கொண்ட ஆட்டுமந்தைக் கூட்டத்திற்கு.

ஆனால் 'அக்கிரகாரத்தின் வழியாக தாழ்த்தப்பட்ட கர்ப்பிணியை அழைத்துச் சென்றதால் பார்ப்பான் கோபமாகி போட்டுத் தள்ளி விட்டான்' என்று திராவிடம் எழுதிய கற்பனை கதை மட்டும் நெஞ்சை வருடும்...

நன்றி கெட்டவர்கள்...

பாஜக பினாமி அதிமுக வின் ஏமாற்று வேலைகள்...


கியூபாவின் பிரபாகரன்ஜோஷ் மார்ட்டி...


கியூப விடுதலைப் போராளி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது 'பிடல் காஸ்ட்ரோ' என்ற பெயர் தான்.

ஆனால், பிடல் காஸ்ட்ரோ என்ற 32 வயது இளைஞன் மூன்றே ஆண்டுகள் போர் நடத்தி வெற்றி பெற்று கியூபா விடுதலை அடைந்தது என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும் அது உண்மையில்லை.

விரல்சொடுக்கில் விளைந்ததல்ல கியூபா விடுதலை.

1820 ல் இருந்து 1920 வரை ஸ்பெயின் வல்லாதிக்கத்தை எதிர்த்தும்..

1920 ல் இருந்து 1958 வரை அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்தும் நடந்த மிக நீண்ட விடுதலைப் போர் தான் கியூபாவுக்கு வெற்றியைத் தந்தது.

கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் அதில் பெரும்பாலும் ஆயுதப் போராட்டம்.

கியூபர்கள் தாங்கிய வலிகளுக்கு அளவே கிடையாது.

முதலில் செஸ்டபஸ் தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி பின் அது முற்றிலும் முறியடிக்கப்பட்டு 1880ல் செஸ்படஸ் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு பதினைந்தாண்டுகள் கழித்து 1895ல் ஜோஷ் மார்ட்டி தலைமையில் ஆயுதக் கிளர்ச்சி மாபெரும் அளவில் எழுந்தது.

1898ல் ஜோஷ் மார்ட்டி வீரமரணம் அடைந்த பிறகும் போர் தொடர்ந்து நடந்து கடைசியில் தோல்வியில் முடிந்தது.

அதன் பிறகு ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் கழித்து 1952ல் பிடல் காசுட்ரோ தலைமையில் ஆயுதப் போராட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டு அவர் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு மீண்டும் 1958ல் பிடல் காசுட்ரோ மற்றும் சே குவேரா தலைமையில் மாபெரும் விடுதலைப் போர் மூன்றாண்டுகள் நடந்து அதன் பிறகு தான் கியூபா தனது மூச்சுக்குழலில் விடுதலைக் காற்றை உணர முடிந்தது.

கியூபாவின் பிரபாகரன் ஐயத்திற்கிடமில்லாமல் 'ஜோஷ் மார்ட்டி' ஆவார்.

அன்று அவர் கியூபா தேசியவாதியாக விதைத்த விதை தான் இன்று கியூபா மக்களின் தலைநிமிர்ந்த வாழ்வு.

புரட்சி வெற்றி பெற்ற பிறகு தான் அங்கே பொதுவுடைமை நுழைகிறது.

கியூபாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது அவர்களின் தேசிய உணர்வே ஆகும். கம்யூனிசம் இல்லை.

நாமும் தமிழ்த்தேசிய உணர்வோடு நமது தனித்தமிழ்க் குடியரசை நிறுவியபின் நமது வெற்றியை பங்குபோட கம்யூனிசம் வந்தாலும்  வரும்..

வந்து கைகுலுக்கிவிட்டு தமது மாணவர்களிடம் பிரபாகரன் என்று ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார்.அவர் தான் இன்று வல்லரசாக விளங்கும் தமிழ்க்குடியரசின் விடுதலைப் போராளி என்று பாடமும் நடத்தும்...

சிந்தித்து விழித்துக்கொள் எம் தமிழினமே...


ஊளைச் சதையை குறைக்கும் பெருஞ்சீரகம் (சோம்பு) நீர்...


இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா வேலைகள்...


வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது?


செயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினாறாவது நூற்றாண்டு முடியுமுன் இத்தாலிய வான்கணிப்பாளர் (astronomet) கலிலியோவால் (Galileo) முதன் முதலாக உருவாக்கப் பெற்றது.

அது முதல் வளி வெப்பமானியாய் (airthermometer) சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகையைப் பயன்படுத்தி அவர் அதனுடைய கணிப்புத் திறனை மிகுதிப்படுத்தினார்.

பெரும்பாலான வெப்பமானிகள் வேலை செய்வதற்கான கோட்பாடு என்னவெனில், ஒழுகு பொருள் அல்லது வளி பயன்படுத்தப்பட்டு வெப்பநிலை மாற்றங்கட்கேற்ப அதன் கொள்கலனா கிய கண்ணாடியை விட விரைவாக விரிவடைந்து அல்லது குறைந்து நின்று அளந்துகாட்டித் தெரியப்படுத்து வதாம்.

எனவே வண்ண ஒழுகுபொருள் குறுகலான இலேசான கண்ணாடிக் குழாய்க்குள் அமைந்து, விரிவின் வேறுபாட்டை ஒழுகுபொருள் படிப்படியான எண்ணிட்ட அளவுகோலில் எங்கு நிற்கிறது என அறிவித்து வெப்ப அளவைத் தெரிவிக்கும்.

ஏறத்தாழ 1714இல் யே(ஜெ)ர்மானிய அறிவியலார் கேபிரியல் டேனியல் பேரன்கீ(ஹீ)ட் (Gabriel Daniel Fahrenheat) ஒரு வெப்பமானியை வடிவமைத்து முதன்முதலாகப் பாதரசத்தை (mercury) அளக்கும் இயக்கியாகப் பயன்படுத்தினார்.

அத்துடன் தன் பெயரால் அழைக்கப்பட்ட 32 பாகையை தண்ணீர் உறைநிலை அளவாகவும் 212 பாகையை கொதிநிலை அளவாகவும் கொண்ட அளவுகோலை அறிமுகப்படுத்தினார். பாதரசம் பெரும்பாலான வெப்பமானிகளில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது.

ஏன் எனில் பாதரசத்தின் கொதிநிலை 674 பாகை ஆகவும் கீழ் உறைநிலை -83 பாகை ஆகவும் இருப்பதாலேயே ஆகும். சாராய வகை வெப்பமானி இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஏறத்தாழ 1731 ஆம் ஆண்டில் ரேனேடே  (rene de Reaumur) என்ற பிரெஞ்சு இயற்கையறிவு நிபுணரால் இது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும்.

அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடன் நாட்டின் வான் கணிப்பாளர் அண்டர்சு(ஸ்) செலிசியசு(ஸ்) (Anders Celsius) என்பவர் நூற்றியல் அளவைக் கொண்ட நூற்றியல் வெப்பமானியை முதலாவதாகப் பயன்படுத்தினார் உறை நிலை அளவு 0 பாகை ஆகவும் கொதிநிலை 100 பாகை ஆகவும் இதில் அளவுகள் அமைந்துள்ளன...

உலக விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் கண்டுபிடிப்பு... ரகசியத்தை கூற முன்வராததால் முடக்கப்பட்ட தமிழர் மகேஷ்...


நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்யும் போலீசார்; தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார்...


நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் கைவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென துாத்துக்குடி முருகேசன் நகர் பகுதிமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்...

சேலம் சென்னை 8வழிச்சாலை...


அரசாங்கம் வணிகர்களுக்காகவும், அதிகாரம் Cross Thread பேடிகளுக்கும் கட்டமைக்கப்பட்டது... நீ வெறும் சாமானியன் தான் சமூக விரோதி தான்...

இந்தியா எனும் மாயை...


தன்னுடைய மண், இனம் உரிமைக்காக போராடியவர்களின் அனைவரின் பெருமைகளையும், தியாகத்தையும்..

இந்தியா தேசம் என்ற தேசப்பற்றாக உருவாக்கி..

நம்மை அதில் அடிமையாக்கி விட்டனர் என்பதே உண்மை...

தேசத்தை நேசியுங்கள், அது உங்களை அடையாளப்படுத்துகிறது..

ஆனால் ஒருபோதும் அரசாங்கத்தை நேசிக்காதீர்கள், அது உங்களை விற்கிறது..

நீங்கள் எதிர்த்தால் உங்களை கொல்கிறது...

சிந்தியுங்கள் மக்களே...


சர்வாதிகாரிகளின் வாழ்க்கை இறுதி எப்போதும் மிக மிக மோசமானது...


அரசின் திட்டங்களில் உள்ள குறைகள் என எதை எதிர்த்து நியாயமான கேள்வி நாலை கேட்டாலும் உடனே வளர்ச்சி வளர்ச்சி என்கிறார்கள்.தேச விரோதிகள்  சமூக விரோதிகள் நக்சலைட் என முத்திரை குத்துகிறார்கள்.

நேற்று முருகன் ஐஏஎஸ் என்றொரு உலக மகா மாங்கா மடையன் நியூஸ் செவன் தொலைக்காட்சியில் சேலம் எட்டு வழி சாலை குறித்த விவாதத்தில் கலந்து கொண்டான். என்ன ஒரு அகங்காரம் திமிர்.

நெறியாளரையே தேச விரோதி என்னும் ரேஞ்சுக்கு நீ வா போ என ஒருமையில் பேசுவதும் மிரட்டல் தொனியில் சவால் விடுவதும் மக்களை இப்படித் தான் அடக்கி ஒடுக்க வேண்டும் என்றும் அவன் பேசிய பேச்சுக்களை கேட்ட போது இப்படிப் பட்ட மாங்கா மடையனுங்க எப்படி ஐஏஸ் பதவியில் உட்கார்ந்து கொண்டு இருந்திருக்கானுங்க என்றே எண்ண தோன்றியது. இந்த முருகன் கதை இன்று நேற்றல்ல ஊடகங்களில் பேசும் ரொம்ப வருசமாவே இப்படித் தான் என்பது தனிக் கதை.

உலக மகா திட்டங்களை எல்லாம் மக்கள் நலனுக்காக என்று திணிக்கும் போது மக்களிடம் உட்கார்ந்து திட்டத்தை குறித்து பேச வேண்டும். அவர்களுக்கு சந்தேகம் இல்லாத வகையில் புரிய வைக்க வேண்டும்.

நிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக மார்க்கெட் விலையை விட நான்கு மடங்கு என்று மத்திய அரசு வரையறையாக இருப்பதாக சொல்லும் போது மாநில அரசு சரியான இழப்பீட்டு தொகை மற்றும் அதனை உடனடியாக வழங்கும் வேலைகளை செய்யாமல் மக்களை அடக்கி ஒடுக்கி சிறையில் அடைத்து எதையும் சாதிக்கலாம் என்ற சர்வாதிகார போக்கு எல்லா காலத்திலும் வெற்றி அடையாது. மிகப் பெரிய சர்வாதிகாரிகளின் வரலாறுகளே முடிவில் மிக கொடூரமாய் முடிந்த கதைகளை படியுங்கள்.

மதுரை விமான நிலையத்துக்காக கையகப் படுத்தப் பட்ட நிலங்களை சரியாக பயன் படுத்தவும் இல்லை. உரிய இழப்பீட்டு தொகையை கூட பல ஆண்டுக்கணக்காக தராமல் மோசடி செய்கிறார்கள் என மாநிலம் முழுக்க ஏழை எளிய விவசாய மக்களின் கண்ணீர் குரல்கள் இப்போதும் கேட்க முடிகிறது. எந்த திட்டத்திலும் உரிய இழப்பீடும் இல்லை.

சரியான நேரத்தில் பணத்தை கொடுக்காமல் ஐந்து ஆண்டுகள் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கும் பல உதாரணங்கள் மாநிலம் முழுக்க இருக்கிறது. அரசாங்க நில கையப் படுத்தல் என்றாலே அது மாபெரும் மோசடி மற்றும் அராஜகம் என்று மக்கள் எண்ணும் அளவுக்கு தான் முந்தைய இன்றைய வரலாறு இருக்கிறது.

விவசாய விளை நிலங்களை பிடுங்கி கொண்டால் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி சொல்ல வேண்டும்.

கூடவே பல மடங்கு இழப்பீடு மற்றும் உரிய காலத்துக்குள் அந்த இழப்பீடு என எல்லா வழிகளையும் மக்களிடம் வெளிப்படையாக பேசி மக்களை சரி செய்யும் எந்த முயற்சிகளையும் செய்யாத அடக்குமுறை தவறு.

அரசின் எந்த சமரச முயற்சிகளுக்கும் இழப்பீடுகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதும்  மாற்று வழிகளை சிந்திப்பதும் தவறானதல்ல.

ஆனால் மக்களிடம் சரியான வகையில் பேச்சு வார்த்தை புரிதல் இழப்பீடு வெளிப்படைத் தன்மை என்று எதையுமே செய்யாமல் ஒரு அரசு சர்வாதிகாரமாக எல்லாவற்றையும் சாதிக்க நினைப்பது முட்டாள்தனம்.

மக்கள் நலன் மற்றும் மக்கள் தான் அரசு என்ற நிலையில் இருந்து சிந்தித்து செயல்பட வேண்டிய அரசாங்கம் குண்டர்களையும் தடியர்களையும் காவல்துறை என்ற பெயரில் வைத்து ரவுடித் தனத்தால் எல்லாவற்றையும் சாதிக்க நினைப்பதன் முடிவு ஆட்சியாளர்களின் அழவு. அதற்கான காலம் நெருங்கி விட்டது.

எடப்பாடி சாமி என்று தியேட்டரில் விளம்பரம் வேற தேடும் அளவுக்கு என்ன கூந்தலை புடுங்கி தள்ளிட்டாரு எடப்பாடி.

சர்வாதிகாரிகளின் முடிவு என்று ஹிட்லர் காலத்தை எல்லாம் உதாரணமாக எடப்பாடிக்கு சொல்ல மாட்டேன். கண் கண்ட சாட்சியாக ஜெயலலிதா இருக்கும் போது..

தமிழை வளர்ப்பது எப்படி?


தமிழில் சொல் விளையாட்டு, வார்த்தை  விளையாட்டு, அகராதி காணும்  பயிற்சி, ஒவ்வொரு பொருளினுடைய  தமிழ்  பெயர் கண்டறிதல், தமிழ் கவிஞர்களின்  பாடல்கள்  அதன் விளக்கங்கள்  ஆகியவற்றை  மேற்கொண்டால்  தமிழை  ஆர்வத்துடன் கற்பார்கள்...