போராட்டத்தின் போது பெண் காவலரிடம் அத்துமீறும் காவல்துறை அதிகாரி..
சேலம் சென்னை இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி விரைவுச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் இன்று ஆச்சாங்குட்டப்பட்டியில் மாணவி வளர்மதி பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் மாணவி வளர்மதியை கைது செய்தனர். மாணவி கைதின் போது பெண் காவலர்களிடம் ஒரு காவல்துறை அதிகாரி போராட்டசாக்கில் அத்துமீறுவது தொலைக்காட்சி பதிவில் தெரியவந்திருக்கிறது. இது பொதுமக்கள் மற்றும் பெண் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது-
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை சென்றடையும் பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுத்தும் பணி துவங்கியிருக்கிறது. 500 ஏக்கர் வனப்பகுதி, ஆறுகள், 8 மலை பிரதேசங்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சியினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் அடிமலைப்புதூர் பகுதியில் விவசாய நிலைத்தில் முட்டுக் கல் நடும் பணி நடைபெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி உட்பட7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் வஞ்சவாடி அருகில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் முட்டுக்கல் நடும் பணி நடைபெற்றது. அப்பகுதியில் சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தார். இதை தடுக்கும் வகையில் அங்கு குவிந்த காவலர்கள் மாணவி வளர்மதியை இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்.
காவலர் அத்துமீறல்
மாணவி வளர்மதியை கைது செய்த போது ஏற்பட்ட தள்ளு முள்ளு சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அங்கிருந்த ஆண் காவல் துறை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு பெண் காவலரின் மார்பில் தொடர்ந்து கை வைக்கும் காட்சி ஊடகங்களின் நேரலை ஒளிபரப்பானது. இது பொதுமக்கள் மற்றும் பெண் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பெண் உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.