03/11/2017

எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்? என்ற சவாலை இனி அவர்கள் (இந்துக்கள்) விட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது- வார இதழ் ஒன்றில் வெளியான கமலின் கட்டுரைக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது...


பணிகள் குறைப்பால் திண்டாடும் ஊர்க்காவல் படையினர், அரசு தலையிட கோரிக்கை...


தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படை காவலர்களுக்கு மாதம் முழுவதும் 5 பணிகள் மட்டுமே பார்க்க அந்தந்த மாவட்ட  ஊர்க்காவல் படை அதிகாரிகளால் ஆலோசனை கூட்டம் ஏற்படுத்தப்பட்டு காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு  வருகின்றது.

இதனால் ஊர்க்காவல் படையை மட்டுமே நம்பி இருந்த 14000 ஊர்க்காவல் படையினர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதுவரை 3000 க்கு மேல் ஊக்க ஊதியம் வாங்கி வந்த ஊர்க்காவல் படையினர் இனி ( மாதம் முழுவதும் ) ரூ 2800 மட்டுமே வாங்குவர். இதனால் மன உளைச்சலில் ஊர்க்காவல் படை காவலர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இனிமேல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையை தேர்வு செய்து அவர்கள் பொருளாதார நெருக்கடியை ஈடு செய்ய வேண்டிய நிலைக்கு ஊர்க்காவல் படையினர்  தள்ளப்பட்டுள்ளதால், அரசாங்கம் இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்த ஊர்க்காவல் படையினர் எதிர்பார்க்கின்றனர்...

இது தான் திராவிட குடும்பம்...


தொடரும் மின் விபத்து.. குமரி மாவட்டத்தில் ஒருவர் பலி...


குமரி மாவட்டம் மணக்காவிளை அருகே ஆண்டாம்பாறையில்  செல்லையன் என்பவர் இன்று காலை பள்ளிக்கு செல்லும் தனது பேரக் குளந்தைகளை வழியனுப்ப வீட்டின் முன்பு சென்ற போது, அவர் வீட்டின் முன்பிருந்த மின்சார கம்பிகள் அறுந்து, அவர் மீது விழுந்ததில்,  அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்...

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்...


அருகம்புல் பொடி : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

கடுக்காய் பொடி : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பொடி : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி : சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி : மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி : இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி : ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பொடி : நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி : உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி : வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி : மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி : உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி : கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பொடி : குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி : வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி : தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி : உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி : அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி : காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி : அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி : மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி : மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி : தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி : சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி : உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பொடி : ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி : கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி : பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர் : குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி : சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி : குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி : சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி : பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி : ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி : சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி : சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி : நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி : இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி : உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி : சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி : பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி : தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி : குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி : பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி : உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி : கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி : பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்...

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்...


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம்.

மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம்.

இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்...

கடலூர் வெள்ள தடுப்புப் பணியில் ஊழல்: நீதிமன்றமே முன்வந்து வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை...


கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் நிவாரணப் பணி என்று கோடி கணக்கில் கொளையடிக்கப்படுகின்றன. இதை நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை என்றாலே அதிகம் பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டம்தான். இதிலிருந்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு, நிரந்தர வெள்ள தடுப்புப் பணிக்காக ரூபாய் 140 கோடி நிதி ஒதுக்கினார். அத்தோடு, சிறப்பு நிதியாகவும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் எந்த ஒரு பணியும் முழுமையாக முடிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இப்போது தான் கடலூர் நகரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மழைக்கு வெட்டிய வாய்க்கால்களை மழை முடிந்ததும் மூடிவிட்டு, மறுபடியும் அதே இடத்தில் இப்போது தோண்டுகிறார்கள். மழை வந்தால் தோண்டுவதும், முடிந்தால் மூடுவதுமாக இருக்கிறார்கள்.

இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வே இல்லை. இரண்டு நாள் மழைக்கே கடலூர் நகரம் தாக்குபிடிக்காமல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கடுமையான மழை வந்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்ப்படாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

மழை வெள்ள நிவாரணப் பணிகள், நிரந்தர தடுப்புப் பணிகள், தூர்வாருதல் என இரண்டு ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2015-ல் அடித்த மழை வெள்ளத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கியதாக 100 கோடி ரூபாய் கணக்கு காட்டினார் அமைச்சர் எம்.சி.சம்பத். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிற்ப்பு கிளம்பியது.

அதன்பிறகு அது ரூபாய் 40 கோடியாக குறைந்தது. இது ஒன்றுதான் வெளியில் தெரிந்தது.

வெளியில் தெரியாமல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எவ்வளவு அடித்திருக்கிறார்களோ, அல்லது அடிக்கப்போகிறார்களோ என்று தெரியவில்லை. இதுகுறித்து அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். மழை வெள்ளம் என்றாலே பொதுமக்களுக்குத்தான் பயம். ஆனால், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அல்ல. அவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

இதுகுறித்து நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று விசாரணை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...

பாஜக விற்கு தந்தி டிவி செய்யும் மாமா வேலை...



கவண் படம் ஞாபகம் வருதா ?

பாஜக மோடி & அதிமுக அடிமை கூட்டத்திடம் எவ்வளவு பணம் வாங்குனாங்களோ தந்தி டிவி...

திமுக தெலுங்கர் நமக்கு நாமே கலாட்டா...


புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்டதாம்...

ரெண்டு 250 கிராம் பிளேட்டு (கத்திரி பூ கலரு). ஒரு 1/2 கிலோ பிளேட்டு (ஊதா கலரு பிளேட்டு). மொத்தம் 1 கிலோ.

ரெண்டு பக்கமும் சேர்த்து 2 கிலோ...
அப்பறம் கம்பி 1 கிலோ...
எல்லாஞ்சேத்து மொத்தம் 3 கிலோ..

அடுத்தவாட்டி தமிழ்நாட்ட ஆள 'செயலு' எப்புடி பயிற்சி பண்ணுது பாருங்கடா...

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க...


இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப் பொருள்கள்...

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்…. சுவையாகவும் இருக்கும்..

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

மகாபாரதப் போரும் தமிழர்களும்...


மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.

குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா?

கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா?

உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும்..

இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது?

ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்..

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம்..

அதுமட்டுமின்றி, வெறும் ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம்.

இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்..

தமிழ் மன்னர்கள்..

தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார்.

இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர்.

இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப் பெயர்கள்.

ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன்..

பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான்.

கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.
தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம்.

திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார்.

இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன்..

குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும்.

அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான்.

அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா

பீமன்..

மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும்.

ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான்.

இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும்.

வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது.

இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)

சகாதேவன்..

நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர்.

கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன.

முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை.

பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம்.

முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன்..

பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான்.

இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு.

ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது?

பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன்.

தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.

போர் நடந்த இடம்...

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது.

தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும்.

அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும்.

இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படை வீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது..

அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும்.

இப்போதுள்ள தமிழகத்தில் இருந்து கொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்..

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம்..

ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை.

இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

- புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

- பெரும்பாணாற்றுப்படை - 415-417...

பிரபஞ்சமும் உணர்வுகளும்...


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு இரகசியத்தை இங்கே கூறுகிறேன்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடிகொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும். உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்.

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும்போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை. நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும். ஆம் அதும் உணர்வு பூர்வமானதே. அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது.

இது உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதற்கு அறிவு உண்டு. ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு.

இதை நீங்கள் தயவுசெய்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும். ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது. மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்.

இயற்கை எவ்வளவு அற்புதமானது. தொடரும்......

விழித்தெழு தமிழா...


ஆறுமுக நாவலர்...


தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள், என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.

அவர் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் சமசுகிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சிறீ(ஸ்ரீ)லசிறீ(ஸ்ரீ) சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ‘நாவலர்’ பட்டம் பெற்றவர் (1865).

அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்),பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.

1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.

“தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அ?தொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு”. – ஆறுமுக நாவலர்.

தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்களே என்பதைச் “சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்” என்று த. கைலாசபிள்ளை கூறுவது கருதற்பாலது.

சைவ ஆகமங்கள் பற்றியும், சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர். 1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்ல்க் கொடுக்க ஆரம்பித்த நாவலர், பின்னர் பொதுமக்கள் நன்மையின் பொருட்டு 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலிலே சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். இப்பிரசங்க மரபானது அவரது இறுதிக்காலம் வரை நடத்தப்பட்டது.

நாவலரின் பிரசங்கங்களின் பயனாகப் பலர் சிவதீட்சை பெற்றனர்; மாமிச போசனத்தைத் தவிர்த்தனர்; கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத் தொடங்கினர். சைவாசிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர். இங்ஙனம் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்.

நமது சமயத்தின் மீது கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த தாக்குதல்களை எல்லாம் புறங் காணும் நோக்கத்தோடு நாவலர், ‘சுப்பிரபோதம்‘, ‘சைவ தூஷண பரிகாரம்‘ என்னும் நூல்கள் இரண்டை எழுதி வெளியிட்டார்.

“தாம் கொண்ட கொள்கையை நிறுவத் தமது சமய உண்மைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்தாண்ட நூல்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது. எந்தெந்த வகையிலெல்லாம் எதிர்ப்பும் மறுப்பும் தோன்றக்கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றுக் கெல்லாம் தர்க்க ரீதியான பதில் கூறி விளக்கியிருக்கும் சாதுரியத்தை உண்மையிலேயே முதல் தரமான நுண்ணறிவு படைத்த ஒருவரிடத்திலே தான் காண முடியும். இந்நூல் நமக்குப் பெருந் தீங்கையன்றோ விளைவிக்கின்றது?”

இவ்வாறாக 1855 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலே அச்சிடப்பட்ட வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையிலேசைவதூச(ஷ)ண பரிகாரம் என்ற நாவலருடைய நூலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சைவசமயத்தின் அடிப்படை அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டு, சிவனும், சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறி வருகிறார்கள். “சுவரூபி, எங்கும் நிறைந்தவர் என்பதையும் ‘கடவுள் திருமணம் புரிந்தார்’ என்பது அபத்தம், என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்.” என்று நாவலர் தமது சுப்பிரபோதத்திலே கூறியுள்ளார்.

கோவில்களிலே தாசியர் நடனங்களை நடத்தும் துராக்கிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, தேவாரப் பண்களை இசைத்தல், சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.

நாவலரின் சைவப்பிரசங்கக்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே நடக்கும் பிரசங்கங்கள் வழிகாட்டியாக அமைந்தன. கிறிசு(ஸ்)த்தவர்களது வேகமான பிரச்சாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில் அக்கறை உடையவர்களாக சைவக்குருக்கள் விளங்கினார்கள் இல்லை.

மதமாற்றத்தைக் கண்டும், அதைத் தடுக்க ஆவா செய்யாத சைவக் குருக்கள் மீதும், சைவசமயத்தைத் துறந்து சொந்த லாபம் பெறும் நோக்குடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள் துளைக்கத் தவறவில்லை. சைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரைகளைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.

“யாழ்ப்பாணத்திலுள்ள சைவசமயிகளே! உங்களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல்பவைகளைக் கேளுங்கள். நீங்கள் சிவதீட்சை பெறும் என்னை! விபூதி ருத்திராசதாரணம், பஞ்சாசரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை!

உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுவர்க்க நரகங்களையும், சிவபெருமானை வழிபடும் முறைமையையும், அதனாலே பெறப்படும் முக்தியின் இலக்கணங்களையும், கிரமமாகப் படித்தாயினும், கேட்டாயினும் அறிகின்றீர்களில்லை.

உங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லை. உங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதாபாராயாணம், தேவார திருவாசக பாராயாணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை.”

என உள்ளம் நொந்து நாவலர் சைவசமயிகளுக்கு விடுத்த விண்ணப்பத்தில் ‘உங்களிடத்திலுள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவைகளைக் கேளுங்கள்’ என்ற அவர் கூற்று சமுதாயத்தின் அக்கால நிலைமையை வெளிப்படுத்துகின்றது.

சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத சைவக்குருக்கள் போக்கும் நாவலரை வேதனைக்குள்ளாக்கியது. இவை யாவற்றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார். நாவலரோடு ஒருகாலை மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடையிடையே பிரசங்கம் செய்து வந்தார்.

தான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங்காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லரவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரை ஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.

“தமிழ்க்கல்வியும், சைவசமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ச(ஸ்)தாபித்தலும், சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள்.

ஆதலினாலே நல்லொழுக்கமும், விவேகமும், கல்வியில் விருப்பமும், இடையறாமுயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீட்சக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம், வசுத்(ஸ்)திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும், சைவசாத்(ஸ்)திரங்களையுங் கற்பித்தல் வேண்டும். அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப்பிரசாரகர்ளாகவும் நியமிக்கலாம்.”

மேற்குறிப்பிட்ட ஆறுமுகநாவலர் கூற்றிலிருந்து தமிழ், சைவம் என்ற இரண்டினையும் அபிவிருத்தி செய்வதற்காக இளஞ்சந்ததியினரை ஊக்குவிப்பதற்கு நாவலர் ஒரு திட்டத்தினையே மனதிற் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது.

நாவலரின் கடைசிப் பிரசங்கம்

நாவலர் பிரசங்கங்களையும் புராண படலங்களையும் இருந்து கொண்டு செய்வார். ஏனைய சமூக, பொருளாதார விடயங்கள் பற்றிப் பிரசங்கங்கள் செய்யும் போது நின்றுகொண்டு செய்வார். பிரசங்கம் செய்யும்போது தரித்திருக்கும் பட்டாடையும் திரிபுண்டரமும் கௌரிசங்கமும் தாழ்வடமும் எவரையும் வசீகரிக்கும்.

இவரது இனிமையான குரல் வெகுதூரம் கேட்கும். எல்லா வகையான இராகங்களும் நாவலருக்கு வரும். சிலசமயம் நான்கு மணி நேரம் வரையும் காலெடுத்து மாறி வையாமலும் உடலுறுப்புக்களை அசைக்காமலும் ஒரே மாதிரியிருந்து கொண்டு பிரசங்கிப்பார்.

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை தினமான ஆடிச்சுவாதியன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது. அன்று பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்ற சுந்தரரின் தேவாரத்தைப் பீடிகையாக வைத்துப் பிரசங்கித்தார்.

நிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகிறது. அதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்கு வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தலும், சைவப் பிரசங்கத்தைச் செய்வித்தலும் இன்றியமையாதனவாகும். நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செய்துள்ளேன்.

எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். எனவே உங்களுக்காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம், இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணமாட்டேன் என்ற கருத்துப்பட பேசினார்..

அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டழாதவர் எவருமில்லை.

மறுநாள், நேற்றிரவு ஏன் இவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள்? என்று அன்பரொருவர் கேட்டபோது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றாராம் நாவலர்.

நாவலரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் அவரது கடைசிப் பிரசங்கமாக அமைந்தது. இப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின் அவர் சிவபதமடைந்தார்...

டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி-க்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கக் கூடாது, இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் - டிடிவி. தினகரன்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 49...


உயர் உணர்வு நிலைக்கு முதல் பயிற்சி- அடையாளங்கள் நீங்களல்ல...

அணுவைப் பிளந்து பார்த்த போது அறிவியல் பிரமித்துப் போனது. அணுவிற்குள் இடை விடாது இயங்கிக் கொண்டு இருந்த சக்திகளின் செயல்பாடுகள் விஞ்ஞானிகளை அசத்தின. அணுவின் சக்திகளுக்கே இப்படி என்றால் பிரபஞ்சத்தின் சக்திகளை ஒட்டு மொத்தமாக ஓரளவுக்காவது அறிவது மனிதனின் அதீத கற்பனைகளுக்கும் கூட எட்டாத பிரம்மாண்டம் என்றே சொல்ல வேண்டும்.

ராஜ யோகிகள் இந்த பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாகவே மனிதனைக் கண்டார்கள். அந்த சக்திக்கு எதிர்மாறாக இயங்காமல், அந்த சக்திகளுக்கு ஏற்ப ஒத்த விதத்தில் தன்னை ’ட்யூன்’ செய்து கொண்டால் அவன் பெறக்கூடிய சக்திகளும் எல்லை அற்றவை என்று உணர்ந்தார்கள். அந்த சக்திகளைப் பெற அவன் பிரபஞ்ச சக்தியின் அங்கமாகத் தன்னை உணர்வது மிக முக்கியம் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். அரசனைப் போல அதிகாரங்களை அவன் அமல்படுத்தும் முன் தன்னை அரசன் என்பதை உணர்வது முக்கியம் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. இல்லா விட்டால் அது கற்பனையான கேலிக்கூத்தாகவே இருக்கும் என்று கருதினார்கள்.

தன் உடலையும், தொழிலையும், செல்வத்தையும், மற்றவர்களுடைய அபிப்பிராயங்களையும் வைத்தே தன்னை வரையறுத்துக் கொள்ளப் பழகி இருக்கும் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய, உயர் உணர்வு நிலை பெறுவது அவசியம் என்று ராஜ யோகிகள் கருதினார்கள். அந்த உயர் உணர்வு நிலைக்குச் செல்ல முறையான பயிற்சிகளை ஏற்படுத்தினார்கள். அதில் முதல் பயிற்சியைப் பார்ப்போம்.

1) அமைதியாக ஆரவாரமற்ற ஓரிடத்தில் தனிமையில் அமருங்கள்.

2) இது வரை சொன்ன தியானங்களில் உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தந்த ஒரு தியானத்தைச் செய்யுங்கள். முறையாகச் செய்து முடித்தால் உடலும் இளைப்பாறி இருக்கும், மனமும் அமைதி அடைந்திருக்கும்.

3) முதலில் உங்களை இந்த உடலுக்குள் குடியிருக்கும் பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாக உணருங்கள். இந்த உலகில் நீங்கள் மற்றவர்களால் அறியப்படும் பெயர், தோற்றம், கல்வி, தொழில், சமூக நிலை போன்ற அடையாளங்களால் அல்லாமல் உங்களை நினைத்துப் பாருங்கள். இது ஆரம்பத்தில் மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். நாம் நம்மைப் பற்றிய அந்த அடையாளங்களை நீக்கி விட்டால் நினைத்துப் பார்க்க எதுவுமில்லை என்பது போலவே தோன்றும். ஆனால் சிந்தனையை ஆழப்படுத்தினால் இந்த அடையாளங்கள் தற்காலிகமாக வந்தவை, மாறிக் கொண்டே இருப்பவை என்பதை உணர்வது சிரமமல்ல. திடீர் என்று உலகில் ஒரு நாள் தோன்றி, வாழ்க்கையில் இந்த அடையாளங்களைப் பெற்று, ஏதேதோ செய்து, திடீரென்று அழிந்து போகும் ஒரு தற்காலிக உயிரல்ல நீங்கள். தோன்றுவதற்கு முன், மறைந்ததற்குப் பின் என்ற இரண்டு பெரிய கேள்விக்குறிகளுக்கு மத்தியில் உள்ள பொருள் இல்லாத குழப்பம் அல்ல நீங்கள். மாறிக் கொண்டே இருக்கும் இந்த அடையாளங்களுக்கு நடுவே மாறாத ஒரு அற்புதமே நீங்கள். இந்த சிந்தனையை மனதில் மையமாக்குங்கள்.

4) இந்த உடல் என்ற கூட்டில் வசிக்கும் பிரபஞ்ச சக்தி நீங்கள் என்ற சிந்தனையை உங்களுக்குள் ஏற்படுத்தி அதை பலப்படுத்துங்கள். இந்த கூட்டை, வெளியுறையை பிரபஞ்ச சக்தியான நீங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினையுங்கள். இந்த புதிய சிந்தனையும் உங்களுள் ஆழமாகப் பதியட்டும். உடல் என்ற கருவியை ஆரோக்கியமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருக்க உங்களால் முடியும் என்பதை நம்புங்கள்.

5) அடுத்ததாக உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்கள் உடலை நீங்கள் காண முடிவதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலைத் தெளிவாக நீங்கள் வெளியே இருந்து காண்பது போல் காணுங்கள். ஆரம்பத்தில் இது சுலபமாக இருக்காது. அதனால் சிலர் கண்ணாடி முன் அமர்ந்து கண்ணாடியில் தெரியும் தங்கள் பிம்பத்தை உண்மையான உடல் என்றும் தாங்கள் வெளியே இருந்து உடலைக் காண்பதாகவும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த பயிற்சியைப் பயன்படுத்தி அப்படிக் காண்பதில் தவறில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் கண்ணாடியின் உபயோகத்தைத் தவிர்த்தே இந்த பயிற்சியைச் செய்து தேற வேண்டும்.

6) இனி உங்கள் கவனத்தை உடலில் இருந்து முழுமையாக எடுத்து விடுங்கள். உடலில் இருந்து வெளியேறிய நீங்கள் உங்கள் உடலைப் பார்த்து பின் உங்கள் கவனத்தினை உண்மையான உங்கள் மீது திருப்பிக் கொள்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த உண்மையான உங்கள் தன்மையினை நீங்கள் அமைதியாக, நிதானமாக, சிறிதும் சந்தேகம் இல்லாமல் கீழ்க்கண்டவாறு உணருங்கள்.

7) நான் பிரபஞ்ச சக்தியின் மையம். சூரியனை பூமி சுற்றுவது போல என் உலகம் என்னைச் சுற்றியே இயங்குகிறது. என்னுடைய சக்தி எல்லை இல்லாதது. உடல் எனக்கு கூடு தான். அது எனது தற்காலிக வசிப்பிடம் தான். நான் உடலில் அடங்கிக் கிடக்கும் அடிமையல்ல. அந்த உடல் இல்லாமலும் என்னால் இயங்க முடியும். நான் நிரந்தரமானவன்/ நிரந்தரமானவள். எனக்கு அழிவில்லை. எனக்குள் இருக்கும் எல்லை இல்லாத ஆழமான சக்தியை நான் முழுமையாக உணர்கிறேன். இந்த ஞானத்தால் என்னுள்ளே அமைதியைப் பரிபூரணமாக நான் உணர்கிறேன்.

8) இந்த எண்ணத்தை உங்களுக்குள் வேர் விடச் செய்யுங்கள். வார்த்தைகள் முழுமையாக இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கிற உண்மை இந்த செய்தியாக இருக்க வேண்டும். இது உயர்வு நவிற்சி போல சிலருக்குத் தோன்றக்கூடும். ஆனால் ராஜ யோகிகள் நம்மை மட்டுப்படுத்திக் கொண்டு, நம்மைக் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு நாம் எதையும், என்றும் சாதித்து விட முடியாது என்று தெளிவாக அறிந்திருந்தார்கள். இப்படி நினைப்பதால் நமக்கு கர்வம் வந்து விடாதா என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம். கர்வம் என்பது அடுத்தவர்களை மட்டமாக நினைத்து நம்மை உயர்வாக நினைக்கும் போது மட்டுமே எழக் கூடியது. நமக்குப் பொருந்தும் இந்த உண்மை அடுத்தவருக்கும் பொருந்தும் என்று அறிந்திருக்கும் போது, அடுத்தவரைக் குறைவாக எண்ண முடியாது. எனவே முறையாக உணரும் போது கர்வம் வர வாய்ப்பில்லை.

9) இது ஒருசில நாட்களில் தேர்ச்சி பெறக் கூடிய பயிற்சியல்ல. தாழ்வான உணர்வு நிலையில் இருந்தே வருடக்கணக்கில் பழகி விட்ட நமக்கு மேம்பட்ட உணர்வு நிலைக்குப் பழக்கப்பட பல நாட்கள் பயிற்சி தேவைப்படும். இதில் முன்னேற்றம் கூட சிறிது சிறிதாகத் தான் தெரியும். அதனால் பொறுமையாக இந்தப் பயிற்சியைச் செய்து வரவும்.

இனி அடுத்த பயிற்சிக்குப் பார்ப்போம்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்...


மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்..

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும்.

இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.

அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது.

தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்...

கருர் நகராட்சி 35வது வார்டில் உள்ள இந்த மின் கம்பம் எந்த நேரமும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது...


பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அலட்சியமாக உள்ள  அதிகாரிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள். விபத்து ஏற்பட்டால் இதற்கு யார் பொறுப்பு.........?

நாம் உண்ணும் உணவு சரியானது தானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி...


அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும் போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும்..

உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம்..

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்..

விளையாடும் போதும் ஓடும் போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம்..

காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள்.

அதன் காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாத போதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது.

அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே..

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டு பண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்..

எண்ணை கொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டு பண்ணும்..

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும்..

காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால் தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன.

அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம். ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்...

கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல்.....


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது..

கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை..

மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது..

மேலும் , பெண்கள் கர்ப்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும் போது , இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும்..

ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது..

ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது.

ஆக , கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...

அன்று உலகம் முழுவதும் தமிழர்களே ஆட்சி செய்தனர் என்பதற்கு சான்று...


இருதய நோயாளிகளுக்கு மருந்து...


இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்...

இது உண்மைச் சம்பவம்....

இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

தயவு செய்து கவனியுங்கள்..

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்..

ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்..

நீங்கள் குணமடைவீர்கள்..

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்..

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்..

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டு விட்டதாகவும் தெரிவித்தார்..

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000 த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார்..

தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்..

இதனை கவனமுடன் படியுங்கள்,  நீங்களும் குணமடையலாம்..

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்..

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள்.

இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும்.

சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....

சுவையாகவும் இருக்கும்..

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

சென்னையில் மழை நின்ற பிறகே போக்குவரத்து சரியாகும் என அதிகாரிகள் தகவல்...



மிதக்கிறது சென்னை - சென்னையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு...


தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தல்...


தமிழ்நாட்டின் தலைசிறந்த கோட்டை...


செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது ஒன்றியம் (Union) பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.

மராட்டிய மன்னரான சிவாசி(ஜி), இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.

பிரித்தானியர் இதனைக் கிழக்கின் ட்ரோய் என்றனர்.

முகலாயர்களால் பாதுசாபாத் என்றும் , சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை.

பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது.

அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.

இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு சை(ஜை)னர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பல்லவர் காலத்தில்(கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது.

அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது.

இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கி.பி.580-630 விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது.

மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது .

செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது.

871 முதல் 907 இரண்டாம் ஆதித்ய சோழன் முறையே ஆட்சி செய்திருகின்றனர்.

அவன் தம்பி ராசராசன் சோழன் (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது.

1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விசயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது.

அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர்.

13 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.

குறிப்பாக, விசயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.

தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமை இடமாகவும் இது விளங்கியது.

வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது.

மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீச(ஜ)ப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின.

இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாசி இதனை மேலும் பலப்படுத்தினார்.

ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாசியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராசாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான்.

முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை.

இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராசாராம் அங்கிருந்து தப்பி விட்டான்.

பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது.

அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர்.

எனினும் சிறிதுகாலம் இதனை கை(ஹை)தர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தார்..

அனைத்து தொலைக்காட்சிகளிலும் சென்னை மாநகர் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது என்று செய்தி போட்டு கொண்டிருக்கிறார்கள்...


சென்னை என்பது திட்டமிடப்பட்ட நகரம் கிடையாது. மழை விடாமல் பெய்தால் தாழ்வான தெருக்களில் தண்ணீர் தேங்கவே செய்யும். குறைந்தபட்சம் 5 நாட்களாவது தண்ணீர் முழுவதுமாக வடிய தேவைப்படும். இந்த நிலை ஐம்பது ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையை சரிப்படுத்த வேண்டுமானால் சென்னை மாநகரில் வட்டத்துக்கு ஒரு ஆழமான குளங்களை நாம் உருவாக்க வேண்டும். சென்னை மக்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த அரசாங்கத்தை இடங்கள் ஒதுக்குமாறு கோரிக்கை வைப்பதை நிறுத்திவிட்டு குளங்கள் அமைக்க இடம் ஒதுக்கி தர கோரிக்கை வைக்க வேண்டும்.

மேலும் அடுக்குமாடி கட்டும் நிறுவனங்கள் சென்னை மாநகராட்சியிடம் ஒரு குறிப்பிட்ட சதுரடி இடம் தர வேண்டும். இது OSR லேண்ட் என்று கூறப்படும். அவ்வாறு  பெறப்படும் இடத்தை பெரும்பாலும் பூங்கா அமைக்கவே பயன்படுத்துகிறார்கள்.

இனிமேல் அவ்வாறு பெறப்படும் பெறப்பட்ட இடங்களில் பூங்கா அமைப்பதை  நிறுத்திவிட்டு குளங்களை அமைக்க வேண்டும். அநத அந்த ஏரியாவில் தேங்கும் தண்ணீர் அந்த குளங்களில் போய் சேரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தால்  நிலத்தடி நீரும் வளம் பெறும்.

இவ்வாறு சென்னையில் உள்ள அனைத்து வட்டத்திலும் குறைந்தபட்சம் ஆயிரம் குளங்களாவது செயற்கையாக உருவாக்கப்பட வேண்டும். இந்த திட்டம் சென்னையில் சாத்தியம் ஆகுமா ? ஆகாதா ? என்பது எனக்கு தெரியாது. ஆனால் நீர் மேலாண்மையில் சிறந்த விளங்கும் வல்லுநர்களை ஒரு குழுவாக அமைத்து இந்த திட்டம் உருவாக்க இயலுமா ? என்று நமது அரசாங்கம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இனி சென்னையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்த கருத்து நான் சிந்தித்து உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதுபோல் நண்பர்கள் தங்களுடைய சிந்தனையில் பிறக்கும் வழிகளை தெரிவியுங்கள்...

செய்தி - ரெட்சன் சி. அம்பிகாபதி.

தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மிக கன மழை: பிபிசி எச்சரிக்கை...


மெர்சலுக்கு காட்டிய எதிர்ப்பு ஏன் இங்கு காட்டவில்லை ? பாஜக தமிழிசையிடம் கேள்வி கேட்ட பாலிமர் செய்தியாளரை பகிரங்கமாக மிரட்டி அடிக்கப் பாய்ந்த பாஜக வினர்...


சென்னை கொடுங்கையுரில் சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து கேள்வி கேட்ட பாலிமர் செய்தியாளரை  பாஜகவினர் அனைவரின் முன்னிலையிலும் மிரட்டி அடிக்க பாய்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகாவை சீண்டுவோர் நிம்மிதியாக இருக்க முடியாது என சில நாட்களுக்கு முன்னர் ஹெச் ராஜா பேசியிருந்த நிலையில் கேள்வி கேட்ட செய்தியாளரையே பாஜகவினர் தாக்க முயன்றுள்ளது குறிப்பிடதக்கது.

இறுதியில் சக செய்தியாளர்கள், அந்த பகுதி மக்கள் மற்றும் போலிசார் செய்தியாளரை மீட்டனர். தங்கள் கட்சி தலைவியிடம் கேள்வி கேட்டது பிடிக்கவில்லை எனில் அதை நாகரீகமான முறையில் தெரிவித்துக் இருக்கலாம் இறங்கல் வீட்டிற்கு வந்திருக்கின்றோம் என்று கூட பார்க்காமல் அங்கேயும் பாஜகவினர் பிரச்சனை செய்தது பாஜகவினர் என்ன மாறியான அரசியலை தமிழகத்தில் கொண்டு வரப் பார்க்கின்றார்கள் என அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்...