03/11/2017

அனைத்து தொலைக்காட்சிகளிலும் சென்னை மாநகர் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது என்று செய்தி போட்டு கொண்டிருக்கிறார்கள்...


சென்னை என்பது திட்டமிடப்பட்ட நகரம் கிடையாது. மழை விடாமல் பெய்தால் தாழ்வான தெருக்களில் தண்ணீர் தேங்கவே செய்யும். குறைந்தபட்சம் 5 நாட்களாவது தண்ணீர் முழுவதுமாக வடிய தேவைப்படும். இந்த நிலை ஐம்பது ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையை சரிப்படுத்த வேண்டுமானால் சென்னை மாநகரில் வட்டத்துக்கு ஒரு ஆழமான குளங்களை நாம் உருவாக்க வேண்டும். சென்னை மக்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த அரசாங்கத்தை இடங்கள் ஒதுக்குமாறு கோரிக்கை வைப்பதை நிறுத்திவிட்டு குளங்கள் அமைக்க இடம் ஒதுக்கி தர கோரிக்கை வைக்க வேண்டும்.

மேலும் அடுக்குமாடி கட்டும் நிறுவனங்கள் சென்னை மாநகராட்சியிடம் ஒரு குறிப்பிட்ட சதுரடி இடம் தர வேண்டும். இது OSR லேண்ட் என்று கூறப்படும். அவ்வாறு  பெறப்படும் இடத்தை பெரும்பாலும் பூங்கா அமைக்கவே பயன்படுத்துகிறார்கள்.

இனிமேல் அவ்வாறு பெறப்படும் பெறப்பட்ட இடங்களில் பூங்கா அமைப்பதை  நிறுத்திவிட்டு குளங்களை அமைக்க வேண்டும். அநத அந்த ஏரியாவில் தேங்கும் தண்ணீர் அந்த குளங்களில் போய் சேரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தால்  நிலத்தடி நீரும் வளம் பெறும்.

இவ்வாறு சென்னையில் உள்ள அனைத்து வட்டத்திலும் குறைந்தபட்சம் ஆயிரம் குளங்களாவது செயற்கையாக உருவாக்கப்பட வேண்டும். இந்த திட்டம் சென்னையில் சாத்தியம் ஆகுமா ? ஆகாதா ? என்பது எனக்கு தெரியாது. ஆனால் நீர் மேலாண்மையில் சிறந்த விளங்கும் வல்லுநர்களை ஒரு குழுவாக அமைத்து இந்த திட்டம் உருவாக்க இயலுமா ? என்று நமது அரசாங்கம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இனி சென்னையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்த கருத்து நான் சிந்தித்து உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதுபோல் நண்பர்கள் தங்களுடைய சிந்தனையில் பிறக்கும் வழிகளை தெரிவியுங்கள்...

செய்தி - ரெட்சன் சி. அம்பிகாபதி.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.