23/02/2018

கனடா பிரதமர் திரு. ட்ரூடோ அவர்களை தமிழர் நாட்டின் சார்பாக வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்...


ஈழத் தமிழர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்த வியத்தகு மனிதர்...

தமிழையும் தமிழனையும் உச்சாணிக் கொம்பில் வைத்து, அழகு பார்க்கும் பெருமகன்...

கனடா பிரதமர் திரு. ட்ரூடோ அவர்களை தமிழர் நாட்டின் சார்பாக வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்...

வருகிற 25ஆம் தேதி அவர் தமிழகம் வருவதாகத் தகவல்.. உறுதிப்படுத்தவில்லை...

இலுமினாட்டி (கார்பரேட்) ஈஷா வரலாறு...


1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் ஒரு லோக்கல் கிரிமினல் மீது வழக்கு பதியப்படுகிறது...

பின்னர், அவனது மனைவியை அவனே கொலை செய்ததாக ஒரு புகார் மனைவியின் தந்தையால் கொடுக்கப்பட்டு, அது விசாரிக்காமலே நிலுவையில் வைக்கபடுகிறது..

அப்படியே ஒரு 20 வருடம் கழித்து... அதே கிரிமினல் காட்டை அழித்து, யானையின் வழிதடங்களை அழித்து உருவாக்கி இருக்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் புதிய கிளையை தொடங்கி வைக்க நாட்டின் பிரதமரே நேரில் வந்தார்...

பாமரன் குற்றம் சுமத்தினால் காழ்புணர்ச்சி என்கிறார்கள் முன்னால் நீதிபதி ஹரி பரந்தாமன் கூறினார்...

13லட்ச சதுர அடி வன நிலத்தை ஆக்கிரமித்து கட்டபட்டது தான் ஈஷா யோகா மையம் என்று.. இன்னும் பல ஊழல் நடந்ததாக பட்டியலிட்டார்...

பக்தி வேறு பக்தியின் பெயரால் பணம் திருடும் கும்பலை வளர்த்து விடுவது என்பது வேறு...

எந்த கடவுளும் பொது சொத்தை ஆக்கரிமித்து வனவிலங்குகளின் வாழ்விடத்தை அழித்து சிலைவைக்க சொல்லவில்லை...

ஒரு கருத்தியலை நம் மனதில் விதைக்க எதிர்மறை விளம்பரமும் முக்கியமானது...


கர்ம விதிகள்...


உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12  கர்ம விதிகள்...

1. மகத்தான விதி காரணி மற்றும் விளைவு விதி (Law of Cause and Effect)...

எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய்..

நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி  கெட்டவையாக   இருந்தாலும் சரி. அமைதி, அன்பு , நல்லிணக்கம் ,வளமை ஆகியவற்றை விரும்பினால் அவையே நமக்கு கிடைக்கும்.. இந்த உலகில் நாம் இடும் ஆற்றலுக்கு (எண்ணமும், செயலும்) உடனடியாகவோ அல்லது காலம் கழித்தோ கட்டாயம்  விளைவு உண்டு.

2. படைத்தல் விதி (Law of creation)...

வாழ்க்கையில் எதுவுமே அதுவாக நடப்பதில்லை , நாம் அதை நடக்க வைக்க வேண்டும். நாம் எதை விரும்புகிறமோ அவை நம்முடைய பங்களிப்பு மூலமாக நமக்கு வருகிறது.  நம்மை சுற்றியுள்ள அனைத்துமே யாரோ ஒருவரின் எண்ணத்தில் உதித்தது தான். நாமும் இந்த  பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து இருப்பதால் படைப்பின் பரிணாம வளர்ச்சியில்  நம்முடைய நோக்கங்களும் இருக்கிறது. ஆகவே  நமக்கும் நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் விருப்பத்திற்கும்  உகந்ததாக நம்முடைய படைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும்..

3 பணிவு விதி (Law of Humility)...

மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பது பிரபஞ்ச கோட்பாடாகும். இது எல்லா அமைப்புகளிலும் உள்ள விதி. பெரிய மாற்றங்களை வேண்டினாள் நிகழ்கால சூழ்நிலைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதே சமயம் எதிர்மறையான விஷயங்களை மாற்ற எதிர்மறையான போக்குகளை கடைபிடித்தால் கடைசியில் அதன் விடை பூஜ்யமாகத் தான் இருக்கும்..

4 வளர்ச்சி விதி (Law of Growth)...

நமது சுயவளர்ச்சி எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நம் கையில் தான் உள்ளது.. நாம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரே நபர் நாம் தான்.. நாம் மாறும் பொழுது நமது வாழ்க்கையும் அதற்கேற்றாற் போல் நம்முடன் சேர்ந்து மாறுகிறது. உண்மையான வளர்ச்சி அல்லது மாற்றம் நாம் எப்பொழுது முழுமனதோடு அர்ப்பணித்து மாறுகிறோமோ அப்பொழுது தான் நடக்கிறது..

5 பொறுப்பு விதி (Law of Responsibility)...

நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும், நம்முடைய வாழ்க்கை நாம் செய்வதில் தான் உள்ளது வேறெதினாலும் கிடையாது.. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு தடுமாற்றம் வரும் பொழுது மனதில் நிறைய தடுமாற்றங்கள் வருகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் நமது எண்ணங்களை மாற்றி பிறகு நம்மைச் சுற்றியுள்ளவற்றை மாற்ற வேண்டும்..

6 தொடர்பு விதி (Law of Connection)...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. பெரியதாக இருந்தாலும் சரி , சின்னதாக இருந்தாலும் சரி. நமது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையபவை.  இந்த தொடர்புகளை பயன்படுத்தி நாம் விரும்பும் மாற்றத்திற்கு வழி செய்ய வேண்டும்.

7 கவன விதி (Law of Focus)...

ஒருவனால் ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனத்தை செலுத்த முடியாது, ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியாது, நமது ஆன்மீக வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் ஒரே நேரத்தில் எதிர்மறை சிந்தனை மற்றும் செயல்களை கொண்டு அதனை அடைய முடியாது , நமது முழுக்கவனத்தையும் ஒரே பணியில் இருத்தி அதனை அடைய வேண்டும்..

8 விருந்தோம்பல் மற்றும் கொடுத்தல் விதி (Law of hospitality and giving)...

நம்முடைய பழக்க வழக்கங்கள் நமது எண்ணங்கள் மற்றும் செயல்களோடு ஒத்துப் போக வேண்டும். நமது சுயநலமற்ற தன்மையை செயல் விளக்கம் அளிப்பதே நமது உள்நோக்கமாக இருக்க வேண்டும்.. சுயநலமின்மை என்ற கோட்பாடு ஏதாவது நமக்கில்லாமல் இந்த சமுதாயத்திற்கு பண்ணும் பொழுது தான் தெரியும் அதுவே மிகப்பெரிய சந்தோசம்.. ஒரு சுயநலமிமையில்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லவே இல்லை..

9 மாற்றம் விதி (Law of Change)...

மாற்றம் இல்லாவிட்டால் அதே வரலாறு திரும்ப திரும்ப வரும். மாற்றத்திற்கான மனப்பூர்வமான அர்ப்பணிப்பு மட்டுமே கடந்த காலத்தை மாற்ற வல்ல ஒரே வழி.  நேரமறையான அழுத்தங்களும் மாற்றங்களும் இல்லையென்றால் வரலாறு மாறாது..

10 இங்கே இப்பொழுதே விதி (Law of NOW and HERE)...

நாம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே.. வருத்தத்துடன் கடந்த காலத்தை பார்ப்பதும்.. பயத்துடன் எதிர்காலத்தை பார்ப்பதும்.. நிகழ்காலத்தை கொள்ளையடித்து விடும், பழைய முறை சிந்தனைகளும் நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது..

11 பொறுமை மற்றும் வெகுமதி  விதி (Law of Patience and Rewards)...

பொறுமையான மனநிலை இல்லாமல் எந்த ஒரு மகத்தானத்தையும் அடைய முடியாது. பொறுமையும் விடாமுயற்சியும் அனைத்து வெற்றிக்குமான வெகுமதியை பெற வழிகளாகும், வேறெந்த வழியுமில்லை.  வெகுமதிகள் மட்டுமே  விடையின் கடைசி அல்ல , சத்தியம் , நீடித்த சந்தோசம் மற்றும் உற்சாகம் அனைத்துமே எதை சரியாக இந்த உலக மற்றும் நமது சந்தோஷத்திற்காக  செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்வதில் தான் இருக்கிறது..

12. முக்கியத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் விதி (Law of Signifigance and Inspiration)...

நாம் அளித்த ஆற்றல் மற்றும் முயற்சியின் இறுதி வடிவம் தான் நமக்கு கிடைக்கும் வெற்றி.. ஆகவே முழுமனது மற்றும் அகத்தூண்டலுடன் சுயநலமில்லாமல் நாம் செய்யும் அனைத்துமே மிக முக்கியத்தும் மிக்கவை, காலத்தாலும் மறக்காத காரியமாக இருக்கும்...

கனடா பிரதமருக்கான ஆதரவு ஹாஷ் டேக் யை... உலகளவில் ட்ரண்டாக்கிய தமிழர்கள்...


கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை...


கர்நாடக தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி வரும் 25-ம் தேதி தமிழ் அமைப்பினர் பெங்களூருவில் பேரணி நடத்தி, அம்மாநில ஆளுநரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் ராசன் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது...

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், ஷிமோகா உட்பட பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்திய அரசமைப்பு சட்டத்தில் மொழி சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டுள்ள பல உரிமைகளை கர்நாடக அரசு தமிழர்களுக்கு வழங்க மறுத்து வருகிறது.

கோகாக் அறிக்கை விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறை, காவிரி கலவரம் உள்ளிட்டவற்றால் 10-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோரின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அகதி யாக தமிழகத்துக்கு இடம் பெயர வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

அண்மைகாலமாக உள்ள தமிழ்ப் பெயர் பலகைகளையும், தமிழ்த் திரைப்படங்களின் சுவரொட்டிகளையும் கன்னட அமைப்பினர் அகற்றி வருகின்றனர்.

அதிலும் பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூருவில் நூற்றாண்டுகளை கடந்த கோயில்களின் தமிழ் கல்வெட்டுக்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளுவர் தின பேரணி தொடர்பாக ஒலிப்பெருக்கியில் தமிழில் அறிவிப்பு செய்த தங்கவயல் கவிஞர் தென்னவனை மிரட்டியுள்ளனர்.

இத்தகைய சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மொழி சிறுபான்மையினரான தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் தமிழ் அமைப்புகளின் சார்பாக வரும் 25-ம் தேதி பெங்களூருவில் ‘தமிழர் பாதுகாப்பு பேரணி’ நடத்துகிறோம்.

பெங்களூரு தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்பினரும், முற்போக்கு கன்னட அமைப்பினரும் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவின் முக்கிய சாலைகளின் வழியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே இரத்தானம் முகாம் நடத்தினால் ஒற்றுமை உருவாகும் என்று சொன்ன பரமக்குடி அரிமா சங்கத்தலைவரு எங்கடா...

இலுமினாட்டி கன்னடன் கமல் பற்றி சுப. உதயகுமார் கருத்து...


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் அரசியல் விழிப்புணர்வு பெற்று, சமூக பிரக்ஞய்யுடன் இருக்கும் இளைஞர்களை மடைமாற்றம் செய்ய மூன்றாம் தர பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி இளைஞர்களை ஓவியா பக்கம் திரும்பியவர் கமல்.

சக சினிமாத்துறை கலைஞன் வைரமுத்துவை ஆண்டாள் பிரச்சினையில் இந்துத்துவ மதவாத பிற்போக்கு சக்திகள் தாக்கியபோது அவருக்காக குரல் கொடுக்காது சங்கராச்சாரிக்காக குரல் கொடுத்தவன் கமல்.

தமிழர்களின் பாரம்பரிய மருந்தான நிலவேம்பு ஆண்மையை குலைக்கும் எனவே கார்ப்பரேட்டுகளின் மருந்துகளை வாங்கி அருந்துங்கள் என்கிறார் கமலஹாசன்.

கமல காசன் தில்லி அதிகார வர்க்கத்தால் அதன் ஆதிக்கத்தை இங்கே நிலைநாட்ட திணிக்கப்படுகிறார். இவரா மாற்று அரசியலை தருவார்?

திருநங்கை M.K.அருணாராணி அவர்கள் சென்னை திருவான்மியூர் இரயில் நிலையம் அருகில் புதிதாக உணவகம் ஒன்றை ஆரம்பித்து, சுய தொழில் தொடங்கி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்...


அருணா அவர்கள் நீண்ட காலமாக குக் ஆக இருந்து வருபவர். கடுமையாக உழைப்பவர். வாழ்த்துக்கள். இதற்கு உதவிய சியர் மற்றும் வானவில் அமைப்பிற்கு நன்றி...

தமிழக காவல்துறை சாதனை...


பாஜக மோடியின் ஊழலும்.. நிர்மலா சீதாராமன் பொய்யும்...


முழு பூசனிக்காயை சோத்துல மறைக்கப் பாக்குது...

மாமி ஊருகாய மறைக்கலாம்..

பூசனிக்காயை மறைக்க முடியுமா...

நீரவ் மோடி 12000கோடி வாங்கினது 2017 ல்...

சிபிஐ FIR ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது...

கன்னடன் கமல் இலுமினாட்டி களின் தயாரிப்பே...


666 எண்  இரகசியம்...

இதை சூரிய எண் என்று கூறுவர்...

1080 என்பது சந்திர எண். கற்பனா சக்தியைக் குறிக்கும் சந்திரனுடைய எண்...

666 என்பது சூரிய சக்தியையும் அதிகாரத்தையும் தர்க்கரீதியிலான கொள்கையையும் குறிக்கும் எண்.

இது சூரியனுக்குரிய  மாயச் சதுர எண்ணாகவும் அமைகிறது.

இதுவே இலுமினாட்டி இஸ்ரேல் நாட்டு இறைவனின் புனித எண் என்று கூறப்படுகிறது...

கன்னடன் கமல் கட்சியின் உண்மைகள்...


மையம் எனும் வழக்கத்தை மாற்றி மய்யம்னு பெயர் வைத்த உன்னை தோலுரிப்போம்...

ஆண்டவரே உங்களின் ஆண்டவர் யார் என்பது விரைவில் வெளி வரும்...

ஒவ்வொருவரும் நம் இனத்திற்கான தலைவனாக மாற வேண்டிய தருணம் இது...


பாஜக மோடியின் தூய்மை இந்தியா ஊழல்...


தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில், தினமும் 4000 கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருவதாக தூய்மை இந்தியா திட்டத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சாத்தியமா மக்களே...

கன்னடன் கமல் பாஜக பினாமி என்பது புரிந்துக் கொள்ளுங்கள்...


சுவாசித்தல் முறையும் ஆயுளும்...


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440) மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்...

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்..

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்...

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்....

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்...

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்...

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)...

காய்கறி வண்டியில் பிணம் தவறுதலாக ஏற்றப்பட்டது - சர்ச் பாதர் விளக்கம்...


எந்த காய்கறி வண்டி யில்  ஆம்புலன்ஸ் மாதிரி தோற்றம் பண்ணி வச்சிருக்காங்க பிணம் திண்ணும் கழுகுகளே...

அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது, நமது முன்னோர்கள் நமக்கு அளித்த நம் மண்ணின் வளங்களையும், பாரம்பரியத்தையும், தமிழ் தேசிய அரசியலையும் தான்...


அதிபயங்கர விபத்து தவிர்ப்பு...


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரயில் பாதையின் குறுக்கே நின்ற பள்ளி வேனை கண்டு துரிதமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர்,

ரயிலை உடனடியாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆயர்குடி விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு சொந்தமான வேன் பொன்னாபுரத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தது.

காந்திகாலணி ஆளில்லா ரயில்வே கிராஸிங் அருகே வந்த போது திண்டுக்கல் பழனி மார்கத்தில் சரக்கு ரயில் வந்துள்ளது.

ரயிலை கவனித்த வேன் ஓட்டுநர், அதற்குள் ரயில் பாதையை கடக்க நினைத்து வேனை இயக்கியுள்ளார்.

அப்போது திடீரென பழுதான வேன் ரயில் பாதையில் நின்றுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேன் ஓட்டுநர், வேனை அப்படியே நிறுத்திவிட்டு தப்பினார்.

இதனால் வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் அலறி துடித்தனர்.

அதே நேரத்தில் ரயில் பாதையில் நடுவே வேன் நிற்பதை கண்ட ரயில் ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனை அடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ரயில் பாதையில் இருந்த வேனை அகற்றினர்.

சாதுர்யமாக செயல்பட்டு குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுனரை பொதுமக்கள் பாராட்டினார்.

மேலும் குழந்தைகளை தண்டவாளத்தில் தவிக்கவிட்டு தப்பி ஓடிய வேன் ஓட்டுனர் காவாலிபயலை போலீசார் தேடி வருகின்றனர்...

ரேசன் கார்டும் ஏமாற்று வேலையும்...


செயல்படாத ஏர்செல் நெட்வொர்க்கால் உயிரிழந்த முதியவர்...


ஏர்செல் நெட்வொர்க் வேலை செய்யாததால் நாமக்கல் மாவட்டம் தேவணாங்குறிச்சி அருகே விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏர்செல் நெட்வொர்க் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் ஏர்செல் நெட்வொர்க் வேலை செய்யாததால் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தேவணாங்குறிச்சி அருகே 70 வயதுடைய முதியவரான ராமசாமி கடைக்குச் செல்லும்போது பால் வண்டியில் அடிப்பட்டு கீழே விழுந்திருக்கிறார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏர்செல் எண் மூலம் 108 ஆம்புலன்சை மக்கள் பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்காதத‌ால் வேறொரு நெட்வொர்க் மூலம் ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். அதற்குள் ஒரு மணி நேரம் கடந்ததால், ரத்தம் வீணாகி அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அப்பகுதி மக்கள் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

செயற்கை கேரட்டை வாங்காதீர்கள்...


தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்க.. தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்த அழைப்பு...


மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டு ஊர்வலத்தினர் மீது தடியடி தாக்குதல் நடத்திய தூத்துக்குடி காவல்துறை துணைகண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் நிறைவு நாளான செவ்வாயன்று (20.02.2018) செந்தொண்டர் பேரணி நடைபெற்றது.

மிக அமைதியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் தூத்துக்குடி ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் தலைமையிலான காவல்துறை, எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் கொடும் தாக்குதலை நடத்தியுள்ளது. திட்டமிட்ட முறையில் லத்திகளுக்கு பதிலாக சென்ட்ரிங் வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் பலகைகளை ஆயுதமாக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தையும் அவர்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. 3 பேரின் மண்டை உடைந்துள்ளது. இதுதவிர 2 பேரின் உடலில் சென்ட்ரிங் பலகையால் அடித்ததால் கட்டைகளின் செதில்கள் உடலின் பல பாகங்களில் புகுந்துள்ளதை நீக்க வேண்டியுள்ளது. மிக திட்டமிட்ட முறையில் முதுகுத்தண்டை குறிவைத்து தாக்கியிருக்கிறார்கள். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கொலை, கொள்ளை, வழிப்பறி, பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே செயின் பறிப்பு போன்ற சம்பவங்களைத் தடுத்து நடவடிக்கை எடுக்க திராணியற்ற காவல்துறை, அமைதியான முறையில் பேரணியாக சென்ற செந்தொண்டர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது; இதே போல்தான், சிவகங்கை மாவட்டத்தில் சிறுகடை வியாபாரிகளை காவல்துறையினர் தாக்கியபோது அதை தட்டிக்கேட்ட எங்களது கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் எம்.கந்தசாமி மீது வெறிகொண்டு தாக்கியது காவல்துறை. காவல்துறையின் இத்தகைய தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கதாகும்.

காவல்துறை அதிகாரிகள் வன்முறையின் மூலமும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறைகளின் மூலமும் ஜனநாயக இயக்கங்களை ஒடுக்க முயற்சிப்பது சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது.

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையின்போது ஜவுளிக்கடைகளை அடைக்கச் சொல்லி வியாபாரிகள் மீது ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகளின் உறுதிமொழி அடிப்படையில் கடையடைப்பு கைவிடப்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடியில் பொதுவான கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் நடத்தும் போது மனித்தன்மையற்று நடந்து கொள்வதை காவல்துறை வழக்கமாக கொண்டுள்ளது.

செவ்வாயன்று நடைபெற்ற சம்பவத்தில் ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் திட்டமிட்ட முறையில் சென்ட்ரிங் பலகையை எடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளந்தொண்டர்கள் மீது கொடூர அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். எனவே, ஏஎஸ்பி செல்வநாகரத்தினத்தை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினரையும் இடைநீக்கம் செய்து, உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து துறைவாரியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

காவல்துறையின் இந்த கண்மூடித்தனமாக தாக்குதலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்துமாறு கட்சி அணிகளையும், ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தாக்குதலுக்குள்ளான செந்தொண்டர்கள் மீதே வழக்குப் பதிவு...

தூத்துக்குடியில் செவ்வாயன்று மாலை மார்க்சிஸ்ட் கட்சியின் செம்படை பேரணியில் புகுந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதோடு காயமடைந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். செந்தொண்டர் அணிவகுப்பு பொதுக்கூட்ட திடலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அண்ணாநகர் அருகே காவல்துறையினர் செந்தொண்டர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், காயம் அடைந்த 4பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாங்கள் காயம் அடைந்ததாக கூறி காவலர்கள் அளித்த புகாரின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருப்பூர் விமல் (25), திண்டுக்கல் விஷ்ணு வரதன் உள்ளிட்ட சிலர் மீது 7 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்... பல ஆதரங்களுடன் விளக்கும் ஆய்வாளர்கள்...


கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races" என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது. தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

"Heinrich Kari Brugsh" - "History of Egypt" என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார்.

Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l"Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்...

நேரடியாக அந்த நடிகர்களை எதிர்ப்பதில் எந்த பயமும் இல்லை...


என் மக்களின் அரசியல் வாழ்வியல் என்னவாகும் என்ற பயம்தான் எனக்கு இருக்கின்றது..

இந்த சமுதாயத்தில் அவர்களின் மத்தியில் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என நினைப்பவர்களின் பட்டியலில்  வர மாட்டான்..

இந்த தலைமுறையை இப்படி துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்றால், அடுத்த தலைமுறை எப்படி வாழும் என்ற பயமே...

மூன்று தமிழ் சங்கங்கள்...


மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது.

சங்கம் என்ற சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்கம்  என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.

மூன்று சங்கங்கள் பற்றிய விரிவான செய்தியை அல்லது வரலாற்றை முதலில் குறிப்பிட்டவர் இறையனார் அகப்பொருள் உரையின் ஆசிரியர் நக்கீரர்.

முச்சங்கத்திற்கும் உரிய நூல் அகத்தியம்.

முத்தமிழ் இலக்கண நூல் அகத்தியம்.

இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்.

இசைத்தமிழ் இல்க்கண நூல் முதுநாரை. நாடகத் தமிழ் இலக்கண நூல் இந்திரகாளியம் மற்றும் பஞ்சமரபு ஆகியன.

புலவர்களின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் அகத்தியர். அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர்.

அகத்தியரின் 12 மாணவர்களும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம்.

அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம் தென்தமிழ் மதுரை என்று குறிப்பிடுவது மணிமேகலை.

சங்கத் தமிழ் மூன்றும் தா என்பது ஒளவையாரின் தனிப்பாடல் ஆகும்.

முச்சங்கத்தையும் மறுத்தவர்ள் பி.டி.சீனிவாச ஐயங்கார், கே.என். சிவராஜ பிள்ளை, கா.மச்சிவாய முதலியார் ஆகியோர்.

மூன்று சங்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவணர் ஆகியோர்.

முதற்சங்கம்...

முதற்சங்கம் இருந்த இடம் தென்மதுரை. முதற்சங்கத்தின் காலம் சுமார் 4440 ஆண்டுகள். முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 549.

முதற்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 4449.

முதற்சங்கம் சார்ந்த நூல்கள் அகத்தியம், பெரும் பாரிபாடல், முதுநாரை, முதுகுருகு ஆகியன.

முதற்சங்கம் சார்ந்த புலவர்கள் அகத்தியர், நிதியின் கிழவன் ஆகியோர்.

இடைச்சங்கம்...

இடைச்சங்கம் இருந்த இடம் கபாடாபுரம் (குமரி ஆற்றங்கரை). இடைச்சங்கத்தின் காலம் சுமார் 3700 ஆண்டுகள். இடைச்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 3700.

இடைச்சங்க நூல்கள் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம் ஆகியன.

கடைச்சங்கம்...

கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை (இன்றைய மதுரை). கடைச்சங்கத்தின் காலம் சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கத்தில் புலவர்கள் 449 பேர்.

கடைச்சங்கம் சார்ந்த நூல்கள் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றினை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி ஆகியன.

சிறுமேதாவியார், அறிவுடையார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார் ஆகியோர் கடைச்சங்க காலப் புலவர்கள்...

தமிழா விவசாயிகளை காப்போம்.. ஏப்ரல் 12 முதல் நெடுவாசலில் தொடர் போராட்டம்...


அசோகரால் தான் தமிழ் எழுத்துக்கள் தோன்றின என சாதித்து வந்த வடநாட்டு அறிஞர்களின் வாயை அடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பதித்த பானை இதுதான்...


அசோகர் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட "தமிழி" எழுத்துக்கள் இது கடந்த 2009 ஆம் ஆண்டு பழனி அருகே உள்ள பொருந்தல் என்னும் கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்டது...

கன்னட கமல் அரசியல் = கோக்ககோலா நிறுவனம் விவசாயத்துறையில் முதலீடு.. இவ்வளவுதாங்க இங்க நடக்கிறது...


வேர்கடலை கொழுப்பு அல்ல.. ஒரு மூலிகை…


நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்.

எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயை தடுக்கும்...

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது .

நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.

குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்...

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்...

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல.

மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது.

இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்...

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்...

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது..

கொழுப்பை குறைக்கும்...

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலி அன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை...

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்.

இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்..

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி...

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ்,  கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.

இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்...

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து - 9 மி.கி.
கரையும் (நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது...

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.

நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு...

கனடா பிரதமர் டிஜிட்டல் இந்தியா வந்து பாஜக மோடியை செருப்பால் அடிச்சது போல் இருக்கிறது...


பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் வசியம் செய்ய முடியாது...


மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி, மூக்கடைப்பு (Sinus) பிரச்சனை சரி செய்கிறது.

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. ப்ரேசிலட், கைக்கடிகாரம், காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

கழுத்து சங்கிலி , கழுத்தணி (Necklace)...

கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.

கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் போது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு , பயம் குறைகிறது. மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை. கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஊக்கிகள் (Hormones) சுரப்பும் ஒழுங்குமுறை செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலுவடையும்.

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது சமந்தமான நோய்கள் குணமாகும். 

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். பாலியல்  ஊக்கிகளைத் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும் போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்...