23/02/2018

அதிபயங்கர விபத்து தவிர்ப்பு...


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரயில் பாதையின் குறுக்கே நின்ற பள்ளி வேனை கண்டு துரிதமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர்,

ரயிலை உடனடியாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆயர்குடி விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு சொந்தமான வேன் பொன்னாபுரத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தது.

காந்திகாலணி ஆளில்லா ரயில்வே கிராஸிங் அருகே வந்த போது திண்டுக்கல் பழனி மார்கத்தில் சரக்கு ரயில் வந்துள்ளது.

ரயிலை கவனித்த வேன் ஓட்டுநர், அதற்குள் ரயில் பாதையை கடக்க நினைத்து வேனை இயக்கியுள்ளார்.

அப்போது திடீரென பழுதான வேன் ரயில் பாதையில் நின்றுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேன் ஓட்டுநர், வேனை அப்படியே நிறுத்திவிட்டு தப்பினார்.

இதனால் வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் அலறி துடித்தனர்.

அதே நேரத்தில் ரயில் பாதையில் நடுவே வேன் நிற்பதை கண்ட ரயில் ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனை அடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ரயில் பாதையில் இருந்த வேனை அகற்றினர்.

சாதுர்யமாக செயல்பட்டு குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுனரை பொதுமக்கள் பாராட்டினார்.

மேலும் குழந்தைகளை தண்டவாளத்தில் தவிக்கவிட்டு தப்பி ஓடிய வேன் ஓட்டுனர் காவாலிபயலை போலீசார் தேடி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.