13/09/2018

பியூட்டி பார்லருக்குல் புகுந்து பெண்ணை தாக்கும் திமுக கவுன்சிலர்...


பொதுவாக நான் வன்முறையை ஆதரிப்பவன் அல்ல.  அதுவும் காவல்துறை வன்முறையை கடுமையாக எதிர்ப்பவன்...

ஆனால் இவனைப் போன்ற நபர்களை நிரந்தரமாக ஊனம் செய்தால் கூட தவறே இல்லை என்றே தோன்றுகிறது.

ஒருத்தன் பிரியாணி கேட்டு பாக்ஸிங் பண்றான்.  இன்னொருத்தன் பொம்பளையை மிதிக்கிறான்.  மொத்த ரவுடிப் பயலும் திமுகவுலதான் இருக்கான். 

ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னவே இப்படி. வந்தா என்னென்ன பண்ணப் போறானுங்களோ...

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...


ஆர்.டி.ஓ வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான ரூபாய் பணம்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி...


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வாட்டார போக்குவரத்து அலுவலராக இருப்பவர் பாபு. இவர் அதிக அளவு லஞ்சம் பெறுதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரிகள்,  முத்துக்குமார் என்பவரிடம் பாபு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபாட்டார்.

இதையடுத்து ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் பாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் மேலும் பாபுவின்  உதவியாளர் செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து பாபுவை கடலூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் வீடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது  ரூ. 3 கோடி மதிப்பிலான பணம், பொருள், சொத்து ஆவனங்கள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது...

நீதித்துறையின் ஏமாற்று வேலைகள்...


ஆர்கிமிடீஸ் தத்துவம் - பல அறிவியல் கண்டு பிடிப்புகளை அனாயசமாய்க் கண்டவன் தமிழன்...


கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.

சோழர்கள், சேரர்கள், மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானூறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.

ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.

குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார். இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.

துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.

ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி, அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.

முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை, அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ?

ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை.

முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி (குளம்) மண்டபத்தை காட்டினான்.

அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்து யானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.

யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.

பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.

யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.

கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது. பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்...

தேண் கலப்பட உண்மைகள்...


மனோசக்தியால் எதையும் செய்ய முடியும்...


மனோசக்தியால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளவர் அமெரிக்காவின் யூரி கெல்லர். வெறும் பார்வையாலேயே இவரால் தேக்கரண்டி, கத்தி, சாவி போன்றவற்றை வளைக்க முடிகிறது. கை அசைவால், ஓடும் கடிகாரத்தை நிறுத்தவும், ஓடாததை இயங்கச் செய்யவும் முடிகிறது.

டெல் அவிவில் 1946-ம் ஆண்டு பிறந்த யூரி கெல்லருக்கு மூன்று வயதிலேயே இந்தச் சக்தி வந்துவிட்டதாம். இவர், 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் கண்ணைக் கட்டிக் கொண்டு போக்குவரத்து நிறைந்த நகர வீதிகளில் காரை ஓட்டினார்.

அந்தரத்தில் செல்லும் ரெயில்களைப் பார்வையாலேயே நிறுத்தவும், பின்னோக்கிச் செலுத்தவும் யூரி கெல்லரால் முடிந்தது.

அமெரிக்க விஞ்ஞானிகள் யூரி கெல்லரின் அற்புத ஆற்றலைப் பற்றி ஆராய அவரைத் தம் நாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

திரைக்குப் பின்னால் ஒரு திராட்சைக் கொத்தை வைத்து அது என்னவென்று கேட்டனர். கெல்லர் ஒரு பேப்பரில் திராட்சைக் கொத்து படத்தை வரைந்து காட்டினார். உண்மையான கொத்தில் எவ்வளவு திராட்சைப் பழங்கள் இருந்தனவோ, மிகச் சரியாக அதே எண்ணிக்கையில் யூரி கெல்லரின் திராட்சைக் கொத்திலும் பழங்கள் இருந்தன. தனது மனத்திரையில் திராட்சைக் கொத்து தொலைக்காட்சிப் படம் போல தெளிவாகத் தெரிகிறது என்றார் யூரி கெல்லர்.

1973-ம் ஆண்டு பி.பி.சி. தொலைக்காட்சியில் தனது ஆற்றலைக் காட்டினார் யூரி கெல்லர். அப்போது தொலைக்காட்சி நிலையத்துக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்தன.

தங்கள் வீட்டிலும் தேக்கரண்டிகள் வளைந்துவிட்டன, கடிகாரங்கள் நின்றுவிட்டன என்று தொலைக் காட்சி நேயர்கள் கூறினார்கள்.

தனது ஆற்றல் குறித்து யூரி கெல்லர், “மெஞ்ஞான சக்தி ஒன்று என்னை இயக்குகிறது என்று நினைக்கிறேன். என்னால் நினைப்பதைச் செய்ய முடிகிறது. இது என்னவென்பதை விஞ்ஞானிகள்தான் விளக்க வேண்டும்” என்கிறார்.

ஆனால் விஞ்ஞானத்தால் விளக்க முடியாத புதிர் மனிதராகவே உள்ளார் யூரி கெல்லர்...

COMCASA ஒப்பந்த எதிரொலி...


தமிழகத்தில் சூடுபிடித்து வலம் வரும் தமிழ் கையெழுத்து விழா...


ஆறிலிருந்து அறுபது வயதான அத்தனை நபர்களும் தன் கையெழுத்தை தமிழிலே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக கையெப்பம் இட்டவர்கள் இனி ஆங்கிலத்தை எந்த சூழ்நிலையிலும் கையெழுத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதியையும் கொடுத்துள்ளார்கள்...

இந்த அசாத்திய நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் செவ்வென செய்து முடிக்க 'மக்கள் பாதை' இயக்கத்தின் இளைஞர்கள் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள் தமிழகம் மட்டுமின்றி 'சிங்கப்பூர் மலேசியா சவூதி அரேபியா துபாய் அமேரிக்கா போன்ற அத்துனை நாடுகளில் வாழும் தமிழர்களிடத்திலும் இந்த உறுதிமொழி கையெப்பம் வாங்கி இருபது குறிப்பிடத்தக்கது..

இப்படி தமிழகம் முழுவதும் வாங்கிய கையப்பத்தின் எண்ணிக்கை மட்டும் இன்னும் சில தினங்களில் ஒருகோடி எண்ணிக்கையை எட்ட இருக்கிறது..
இதை கின்னஸ் சாதனையாக்கவும் தயாராகி வருகிறார்கள் நம் இளைஞர்கள்....

இயற்கை உரம் நிலத்திற்கு அளிக்கப்படும் பொழுது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி ஆராய்வோம்...


இரசாயன உரம் மற்றும் இயற்கை உரத்தின் செயல்பாடுகள்...

இயற்கை உரம் நிலத்திற்கு அளிக்கப்படும் பொழுது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி ஆராய்வோம்..

விலங்கினங்கள், தாவரங்களை உணவாக உட்கொண்டு கழிவாக வெளியேற்றுகிறது.

இந்த விலங்கின கழிவுகள் மற்றும் இறந்த தாவரங்களின் பகுதிகளை சேர்த்து மட்க செய்து இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

இந்த கழிவு பொருட்களை மட்க வைக்கும் பொழுது அதிலுள்ள சத்துக்கள் மீண்டும் தாவரங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் சத்துக்களாக மாற்றப்படுகிறது.

இதனால் இந்த உரங்களை பயன்படுத்தும் தாவரங்கள் நேரடியாக இந்த சத்துக்களை கிரகித்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு நேரடியாக கிடைக்கக் கூடிய சத்துக்களை காட்டிலும் மறைமுகமாக கிடைக்க கூடிய சத்துக்களின் அளவுதான் அதிகம்.

மறைமுகமாக சத்துக்கள் எங்கிருந்து கிடைக்கிறது, மண்ணிலுள்ள உயிரனங்கள் இச்சத்துக்களை அளிக்கிறது.

தழைச்சத்தை நிலைநிறுத்தக் கூடிய நுண்ணுயிரிகள் ஆகாயத்தில் இருக்கும் நைட்ரஜனை பயிர்கள் எடுக்கக்கூடிய தழைச்சத்தாக மாற்றி பயிருக்கு அளிக்கிறது.

இது போல் பாஸ்போபாக்டீரியா என்ற நுண்ணுயிர் நிலத்திலுள்ள பயிரிகள் எடுத்து கொள்ள முடியாத நிலையிலுள்ள பாஸ்பேட்டாக மாற்றி மணி சத்தாக பயிர்களுக்கு அளிக்கிறது.

இயற்கை உரங்களை நிலத்திற்கு அளிக்கப்படும் போது இந்த நுண்ணுயிரிகள் பெருக தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கிறது.

அதனால் நுண்ணுயிரிகள் பெருகி இந்த சத்துக்களை எல்லாம் பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது.

இயற்கை உரத்தில் பொதுவாக 2-2.5 மூ தழைச்சத்து இருக்கும். அதாவது 1 ஏக்கருக்கு ஒரு டன் இயற்கை உரத்தை அளித்தால் 20-25 கிலோ தழைச்சத்து பயிர்களுக்கு கிடைக்கும்.

100 கிலோ இரசாயன உரம் யூரியாவில் 46 கிலோ தழைச்சத்து உள்ளது.

யூரியாவை பயிருக்கு பயன்படுத்தும் போது 16 கிலோ தழைச்சத்து வேதியியல் மாற்றத்தால் சிதைவடைந்தாலும் மீதம் 30 கிலோ தழைச்சத்து பயிருக்கு கிடைக்கும்.

அதனால் 1 டன் இயற்கை உரம் பயன்படுத்துவதை காட்டிலும் 100 கிலோ யூரியா பயன்படுத்துவது சிறந்தது என்று கணக்கு போட வேண்டாம்.

இயற்கை உரம் அளிக்கப்படும் பொழுது நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள் 100-125 கிலோ தழைச்சத்தை பயிருக்கு கொடுக்க வல்லது.

அவை மட்டுமில்லாமல் இயற்கை உரம் இடுவதினால் அதன் நேரடி பயன்களை விட அதனால் பெருகி வளரும் நுண்ணுயிர்களினால் ஏற்படும் பலன்கள் பல மடங்கு அதிகமாகும்.

இரசாயன உரங்கள் குறிப்பாக யூரியா பயன்படுத்தும் போது செடிகள் விரைவில் பச்சையாக மாறுகிறது.

குறைவான வளர்ச்சி இருக்கிறது.

என்றும் இயற்கை உரங்களை பயன்படுத்தும் போது பயிரின் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது. என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

அதில் எது சிறந்தது என்று ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.

யூரியா பயன்படுத்தும் போது பயிரின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பது உண்மை ஆனால் செடி ஆரோக்கியமாக இருக்க முடியாது.

நோய் தாக்குதலை தாங்கி வளர கூடியதாக இருக்காது.

இந்த செடிகளை தான் பூச்சிகள் அதிக அளவில் தாக்கும்.

இரசாயன உரம் இட்ட பயிர்களுக்கு தான் பூச்சி கொல்லிகள் அதிகம் பயன்படுத்துவதை காண்கிறோம்.

இதனால் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது சிரமம்.

மற்றும் அதற்காக அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

இயற்கை உரம் இட்ட நிலங்களில் இதன் பாதிப்பு குறைவு. இதை தாங்களே ஆராய்ந்து பார்த்தால் எது சிறப்பு என்று தெளிவாக விளங்கும்...

விஸ்டோக் 2018...


இத்தாலிக்கு ஏற்பட்ட வரலாற்று அவமானமும், அதற்கு பழி வாங்கும் படலமும்...


1896 காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி தம் அண்டை நாடுகள் மீது படையெடுத்தது அன்றைய காலகட்டத்தில் நவீன ஆயுதங்களை வைத்து தம் அண்டை நாடுகளை அடக்கியது.

ஏறக்குறைய அனைவருமே அடங்கியும் சென்றனர்.

இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் எந்த ஒரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரே நாடு எத்தியோப்பியா தான்.

இந்த பேரை உடைக்க வேண்டும் என இத்தாலி நினைத்தது.

மட்டுமின்றி எத்தியோப்பிய மக்கள் நாகரிகமற்றவர்கள்.

[பொதுவாக அன்றைய காலகட்டத்தில் கறுப்பர்கள் வாழும் நாட்டை அப்படிதான் நினைத்தது உலகம்].

அவர்களுக்கு இந்த நவீன பீரங்கிகள் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்த தெரியாது எத்தியோப்பாவை இலகுவாகவே கைப்பற்றி விடலாம் என்று இத்தாலி நினைத்து இருந்தது..

இந்நிலையில் தான் 1896 இல் மார்ச் 1 தேதி இத்தாலி முதல் அறிவிப்பை பிரகணப்படுத்தியது.

எத்தியோப்பாவை நாங்கள்  தாக்க போகிறோம் என்று..

எத்தியோப்பியர்கள் பயந்து நடுங்குவார்கள் என்ற கணிப்பு இத்தாலியர்களுக்கு பொய்யானது..

காரணம்.. எத்தியோப்பியா தொடுத்த பதில் அறிவிப்பு..

ஆம் வில், அம்பு, குதிரை படையுடன், நாங்கள் பதில் தாக்குதல் கொடுக்க தயாராகவே உள்ளோம் என்று அறிவித்தார் தெகுவாவி மேனாலிக்..

இவர் தான் அன்றைய எத்தியோப்பியாவில் அரசர்..

ஆரம்பித்தது Battle of Adwa என்று சொல்லக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க போர்.

இந்த போரில் எத்தியோப்பியாவை சார்ந்த படையினர் 3867 பேர் இத்தாலி படையினரால் கொல்லப்பட்டனர்.

8000 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இப்போருக்கு பிறகு உலக நாடுகள்  இத்தாலியர்களை மிகவும் கேவலமாக பார்க்க ஆரம்பித்தனர்.

காரணம்.. இப்போரில் வென்றது எத்தியோப்பியா தான்..

ஆம்  3867 பேர் எத்தியோப்பியார் இப்போரில் இறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா..

அதே போன்று எத்தியோப்பியர்கள் இத்தாலியர்களையும் கொன்றார்கள்..

இவர்கள் கொன்ற எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

6394 பேர்...

எத்தியோப்பாவுடன் தோல்வி பெற்ற இத்தாலியை ஏன் உலக நாடுகள் கேவலமாக பார்த்தது என்றால்..

எத்தியோப்பிய படையினர் இத்தாலியர்களை எதிர்கொன்றது துப்பாக்கி பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களை..

இவர்கள் வசம் வெறும் அம்பு ,வில் ,வால் போன்றவைகள் தான்..

இதை வைத்தே இத்தாலியை ஓட வைத்தது ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகள் உண்டானது..

இதற்கு பிறகு தான் எத்தியோப்பாவை உலக நாடுகள் அங்கீகரித்தது..

எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசி தலைவனால் ஆளப்படுகிறது என்ற மாயையை உடைத்து..

போருக்கு பிறகு எத்தியோப்பிய அரசர் மேனிலிக் ஐரோப்பிய அரசர்களுக்கு நிகராக மதிக்கப்பட்டார்..

இத்தாலியும் தோல்விக்கு பிறகு எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு கொண்டது ...

கடற்கரை ஓரம் உள்ள சில பகுதிகளை மட்டுமே இப்போரில் கைப்பற்றிக் கொண்டது இத்தாலி..

பின்னாளில் இத்தாலியிடமிருந்து விலகி தனி நாடானது...

அந்த பகுதிதான் இன்றைய இரண்டு திருமணம் கட்டாயம் என்ற அறிவித்துள்ள எரித்திரியா நாடு....

இருப்பினும் ஐரோப்பிய வரலாற்றில் அவமானப்பட்ட இத்தாலி பழிவாங்க காத்திருந்தது எத்தியோப்பாவை..

இதற்கு இத்தாலி எடுத்த நடவடிக்க்கை மிகவுமே கொடூரமானது..

ஆம் முசோலினி காலத்தில் எத்தியோப்பியா ?
 
பேசுவோம்...

விரைவில் மூன்றாம் உலகப் போர்...


ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்...


துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது..

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது-. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் மரத்தின வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் சுரவெதிரியில் இருந்து குணம் பெறலாம். துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது. கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும்.

இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.இந்த பழத்தில் கொண்டுள்ள பாஸ்பரஸ் பல் சுகாதாரத்திற்கு உதவுகிறது. துரியன் பழத்தில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான வைட்டமின் சி உள்ளதால் முதிர்ச்சியை தடுத்து இளமையை தக்க வைத்துக்கொள்கிறது.

துரியன் பழம் பைரிடாக்சின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.. உடலில் ஏற்படும் கட்டிகளை தடுக்கிறது. காப்பர் மற்றும் ரிபோப்லாவின் கொண்டுள்ளதால் தைராய்டை பராமரித்து ஒற்றை தலைவலிக்கு நிவாரணம் அளித்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது. துரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. தயாமின் மற்றும் நியாமின் கொண்டுள்ளதால் பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


கள்ளக்குறிச்சி 20 அடி பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் பலி, 14 பள்ளி குழந்தைகள் காயம்...


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி 20 அடி பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் பலியானார்.

வெள்ளிமலையில் இருந்து கருமந்துரை நோக்கி, பிரபாவதி பள்ளிக்குச் சொந்தமான வேன் மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது. வேனை வெங்கடேசன் என்ற ஓட்டுனர் இயக்கி வந்தார். மொட்டையனூர் கிராமம் அருகே சென்றபோது, வேனின் முன் பக்க அச்சு முறிந்து, சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் 3 முறை உருண்டு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனின் ஓட்டுனர் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த 14 பள்ளி மாணவ -மாணவிகள் படுகாயம் அடைந்து, மாவடிபட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டனர். அவர்களை வருவாய் கோட்டாச்சியர் தினேஷ், சந்தித்து ஆறுதல் கூறினார்...

ஓசி செல்போன் திமுக...


இடைக்காட்டு சித்தர் குண்ட‌லினி பாடல்...


அண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்
அந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறேஒன்றை நண்ணேன் (தாந்)

ஆழ்நிலைத் தியானத்தில், ஆயிரம் இதழ் தாமரைச் சக்கரக் கிளர்தலில் பீனியல் சுரப்பி (மாங்காய்) சுரக்கும் பால் ஆயுளை நீட்டிக்கும் அமிர்த‌மாகும்.

இச்சுர‌ப்பைத் தூண்டுவ‌து என்ப‌து உள்நாக்கை ம‌டித்து குண்ட‌லினி சக்தியால் ந‌ம‌து உட‌லின் ப‌ஞ்ச‌பூத‌க் கூறுக‌ளான‌ ந‌ர‌ம்பு(ம‌ண்), சுக்கில‌ம்(நீர்), பைத்திய‌ம்(மூளையின் வெப்ப‌ம்),  த‌ன‌ஞ்ச‌ய‌ன்(வாயு), நாடி (சுழுமுனை , புருட‌ன் முத‌லான‌ நாடிகள்) ஒத்த‌திர்வு செய்து செய்ய‌க் கூடிய‌ அரும்பெரும் முயற்சியாகும்.

இப்பயிற்சி மானுட‌ம் என்ற‌ கூற்றின் அடிப்ப‌டை அமைப்புக‌ளை எல்லாம் சித்த‌த்தால் க‌ட்டி ஆளும் ம‌க‌த்தான‌தும் மிக்க ஆப‌த்தான‌துமான‌ ஒன்று.

த‌க்க‌ த‌குதியில்லார் , முறையான‌ ஆசிரியர் இன்றி செய்த‌லினால் ஏற்ப‌டும் விளைவுக‌ள் மிக்க‌ தீமையை ப‌ய‌க்கும் என்ப‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி.

அவ்வாறு செய்த‌லை அறிந்திருந்தாலும் அத‌ன் விளைவான‌ அமுத‌த்தை விரும்பேன். அவ்வ‌முத‌தை அருந்துவ‌தால் வ்ரும் வான‌வ‌ர் த‌ன்மையையும் விரும்பேன்.

ஆதார‌ ஒலிக‌ள் என்று க‌ண்டு கொண்ட‌வ‌ற்றை அடிப்ப‌டையாக‌க் கொண்டு அமைக்க‌ப் ப‌ட்ட‌ அமைக்க‌ப் ப‌ட்ட‌ வ‌ட‌மொழியினால் ம‌ந்திர‌ உச்சாட‌ன‌ங்க‌ள் செய்து அத‌னால் வ‌ரும் ப‌ய‌னையும் விரும்பேன்.

எல்லாவ‌ற்றிற்கும் அடிப்ப‌டையான மெய்யான‌ அறிவு ஒன்றே நிலையான‌து. அதைத் த‌விர‌ வேறு ஓன்றும் வேண்டேன்...

ஆட்சியில் இருந்தப்ப புடுங்கிக்கிட்டா இருந்தீங்க திமுக ஸ்டாலின்?


ஓடும் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர்...


அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவராக பணியாற்றியவர் மணிகண்டன். இவர் செஞ்சியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் சென்றுள்ளார்.

குடிபோதையில் இருந்த மணிகண்டன், பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்ததாக, பேருந்து நடத்துனர் ராஜ்குமாரிடம் பெண்கள் புகார் கூறியுள்ளனர்.

ராஜ்குமார் இதுபற்றி கேட்கும்போது, தான் போலீஸ்காரர் என்று சொல்லி ராஜ்குமாரையும், பெண்களையும் மிரட்டியுள்ளார். மேலும் நடத்துநர் ராஜ்குமாரை மணிகண்டன் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகார் அரியலூர் மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் செல்வராஜுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் குடிபோதையில் பெண்களிடம் அத்துமீறிய ஆயுதப்படை காவலர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து அரியலூர் மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்...

மோடி அரசையும் பாஜக வையும் அசிங்கபடுத்திய அமெரிக்க டிரம்ப்...


திமுக கருணாநிதியும் தமிழின துரோகமும்...


தமிழகத்தினது உணர்வுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடப்பாடி அரசு எழுவர் விடுதலைக்காக தீர்மானம் எடுத்திருக்கிறது.

இனி ஆளுநர் முடிவு.. அது எதுவாகவும் இருக்கலாம். ஆனால்  எடப்பாடி அரசின் இந்த முடிவுதான் முக்கியம் - அதுதான் தமிழர் சார் அரசியலும்கூட.

2009 இல் கருணாநிதியிடம் ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் எதிர்பார்த்தது இதைத்தான்.

போர் நிற்கும், நிற்காது என்பதெல்லாம் வேறு பிரச்சினை.

ஆனால் கருணாநிதி அதைச் செய்யவில்லை.

தமிழ் கூட்டு உணர்வுக்கு மதிப்பளிப்பது தான் முக்கியம். அதுதான் தமிழர் சார் அரசியலாகவும் இருக்க முடியும்.

 கருணாநிதியின் சுயநல அரசியல் அதற்கு இடமளிக்கவில்லை.  விளைவு வரலாற்றில் ஒரு இழி நிலைக்கு வந்து சேர்ந்து விட்டார்.

எடப்பாடி மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இந்த ஒரு தீர்மானத்திற்காகவே வரலாற்றில் கொண்டாடப்படுவார்.

ஏனென்றால் தெரிந்தோ, தெரியாமலோ தமிழ் கூட்டு உணர்வுக்கு மதிப்பளித்திருக்கிறார்...

இந்தியர்கள் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்..


ஆனால் இந்தி அல்லாதவர்கள் எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

இதில் யார் உண்மையான தேசப்பற்றாளர்கள்?  ஜனநாயகவாதிகள்?

இந்தியர்களா அல்லது இந்தி அல்லாதவர்களா ?

இயற்கை...


திருட்டு திராவிடர்ஸ்...


ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ்மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர்.

இன்னும் உருவாக்கி வருகின்றனர்...

ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (ஆனால் அண்ணாத்துரை ஒரு தெலுங்கர்)  (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி).

என்றும்,

நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன் (குடியரசு 22.08.1926).

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்...

நாடு முழுவதும் கல்வித்திட்டத்தை மேம்படுத்த புதிய திட்டம் - ஈஷா யோகா மைய நிறுவனர் முன்னால் கஞ்சா வியாபாரி கன்னடன் ஜக்கிவாசுதேவ்...


முதுமையை போக்கி என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி...


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே..

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


இன வெறிக் கொள் தமிழா...


பிற மாநில மொழிப் பற்றாளர்கள் அவர்கள் மாநில வங்கியில் பணம் செலுத்தும் போது அவர்களின் மொழியில் படிவத்தை நிரப்புகிறார்கள்..

இதில் என்ன அதிசயம் உள்ளது என்று நினைகிறீர்கள் அல்லவா?

ஒரு உதாரணம் கர்நாடக மாநிலம்...

அவர்கள் எழுத்துக்களை மட்டும் கன்னடத்தில் எழுதவில்லை.

வங்கிக் கணக்கு எண்ணையும் கன்னடத்தில் எழுதி உள்ளதை கவனியுங்கள்...

தமிழகத்தின் இந்தி வங்கிகளில் தமிழில் படிவத்தை நிரப்பிக் கொடுத்தாலே நம்மை ஏற இறங்க பார்க்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.

இந்த நிலையில் நாம் தமிழில் எண்களை நிரப்பினால் நம் படிவத்தை வாங்கவே மாட்டார்கள் வங்கி அதிகாரிகள்.

ஆனால் கர்நாடகத்தில் அந்த வங்கிப்படிவத்தை வாங்கிக் கொண்டு ஒப்புதலும் கொடுத்துள்ளது வங்கி.

கர்நாடகம் அல்லது தமிழகம், எந்த தேசமாக இருந்தாலும் இந்தி அரசு அலுவலகங்களில் அவரவர் மாநில மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள் உறுதி செய்யாதவரை இந்தியின் ஆதிக்கம் தொடரும்.

இது போன்ற செய்கைகள் மூலமாக நாம் நமது மொழி மற்றும் மாநில உரிமையை நிலைநாட்டலாம்...

மக்களை அடிமையாக்கும் கட்டமைப்பை எப்படி உடைப்பது..?



உங்களுக்கு vanta black என்றால் என்ன தெரியுமா ?


பொதுவாக நமக்கு நிறங்களை பற்றி ஒரு குறிப்பிட்ட விஷயம் தெரியும்.
(அல்லது சிலருக்கு இன்னும் தெரியாமல் இருக்கலாம்) அதாவது உண்மையில் நாம் என்ன பொருளை என்ன நிறத்தில் பார்க்கிறோமோ உண்மையில் அந்தப் பொருள் அந்த  நிறம் கொண்டது அல்ல.

உதாரணமாக ஒரு நீலநிறத்தை நாம் பார்க்கிறோம் என்றால் அந்த பொருள் நீல நிறத்தை தவிர மற்ற அனைத்து நிறத்தையும் உள்ளிழுத்துக்கொண்டு  நீலத்தை மட்டும் நமது கண்களுக்கு பிரதிபலிக்கிறது என்று அர்த்தம்.

ஒரு பொருள் எந்த நிறத்தையும் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை என்றால் அந்த பொருளை நாம் வெள்ளை நிறத்தில் காண்போம்.


ஒரு பொருள் அனைத்து நிறத்தையும் உள்ளே இழுத்துக் கொள்கிறது என்றால் அதைதான் நாம் கருப்பு நிறமாக காண்போம். நாம் காணும் அனைத்து கருப்பு நிற பொருட்களும் ஒளியை உள்ளே இழுத்து கொள்பவை தான் ஆனால்... அது 100 சதம் அல்ல..
எப்பேர் பட்ட அடர்த்தியான கருப்பு நிறமும் கொஞ்சம் ஒளியை நமக்கு மிச்சம் அனுப்புகிறது ஒரு பொருள் கிட்ட தட்ட 100 சதம் ஒளியை உட்கிறகித்தால் அது எப்படி இருக்கும்.

அந்த பொருள் தான் vanta black.

1000 வாட்ஸ்.. மிக பிரகாசமான விளக்கை இதன் மேல் பாய்ச்சினாலும்..
இதை வெளிச்சமிட்டு பார்க்க முடியாது..
எவ்ளோ பளிச்சிடும் ஒளியையும் உள்ளே இழுத்து குடித்து..... பார்க்க ஒரு குட்டி பிளாக் ஹோல் ஐ கையில் பிடித்திருபது போல இருக்கும்.

அப்படி ஒரு அடங்காத கருப்பு.
இது தன் மீது விழும் ஒளியில் 99.96 சதம் உள்ளிழுத்து கொள்ளும்.

ஒரு பிளாக் ஹோல் பார்க்க எப்படி இருக்கும் என்பதை பார்க்க மாடலாக இதை வைத்துக் கொள்ள முடியும்.


VAnta black என்பது " Surrey NanoSystems Limited " வைத்த ஒரு ட்ரேட் மார்க் பெயர். இதை தயாரித்தது அந்த பிரிட்டிஷ் நிறுவனம் தான்.

உண்மையில் அது என்ன பொருள்.. ??
"hollow carbon tubes " களால் நெருக்கமாக பின்ன பட்ட ஒரு பொருள் தான் இந்த vanta black.. என்ன ஒன்னு ஒவொரு டியுபின் அகலமும் கிட்ட தட்ட ஒரு அணுஅளவு மட்டும் தான். (அதாவது ஒரு சதுர சென்டிமீட்டரில் 1000 மில்லியன் நேனோ டியுப்கள் இருக்கும்.) இந்த டியூப்களில் ஒளி படும் போது அவைகள் ஒரு முடிவில்லாத பொறியில் சிக்கி வெளியே வர முடியாமல் வெப்பமாக மாறுகின்றன. உள்ளே போகும் ஒளி வெளியே வருவதே இல்லை.  எனவே உண்மையில் இது ஒரு நிறம் அல்ல.. மாறாக நிறம் ஏதும் அற்ற நிலை.

இதன்  சூட்சுமம் இதன் கட்டமைப்பில் இருக்கிறது என்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் இதை எப்படி வர்ணிக்கிறார்கள் என்றால்
" நீங்கள் ஒரு கோதுமை வயலில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த கோதுமை செடிகள் மூன்று நான்கு அடி உயரம் இல்லாமல் கிட்டத்தட்ட 10,000 அடி உயரம் இருந்தால் எப்படி இருக்கும் அப்படி தான் இதன் டியுப்கள் நெட்டுகுத்தாக மிக நீண்ட அமைப்பாக அடுக்க பட்டுள்ளது "

இதை சாதாரண பெயிண்ட்டை போல தொட முயற்சித்தாலோ அல்லது பொருளில் பூச முயற்சித்தாலோ.. இது இதன் தன்மையை இழந்துவிடுகிறது.
எனவே இதை பூச நிபுணர்களின் உதவி தேவை.

( சரி விலைக்கு வாங்கலாம் என்று பார்த்தால் இதன் விலை தங்கம் மற்றும் வைரம் இவை இரண்டையும் சேர்த்து அதைவிட அதிகம்)


ஆனால் சுவிஸ் வாட்ச் கம்பெனி நிறுவனம் ஒன்று லிமிடெட் எடிஷனாக ஒரு வாட்சை தயாரித்தது அதில் டயல் பின்னணி கருப்பு நிறம் vanta black ஆல் செய்ய பட்டது. அந்த கடிகாரத்தில் முட்கள் பின்னணி அற்ற அந்தரத்தில் மிதப்பது போல இருந்ததாம்.(அந்த வாட்ச் இன் விலை நம்ம ஊர் கணக்குக்கு கிட்ட தட்ட 50 லட்ச ரூபாய் )

சரி இதை எதற்காக தயாரித்தார்கள் இதன் பயன்பாடு தான் என்ன ??
இவற்றின் முக்கிய பயன்பாடு விண்வெளி ஆய்வாளர்களுக்கானது
அவர்கள் பயன்படுத்தும் டெலஸ்கோப்பில் உள்பகுதியில் இதை பூசுவதன் மூலம் டெலஸ்கோப்பில் கிடைக்கும் ஒளி விண்வெளியில் இருந்து தான்  கிடைத்தது பக்கத்தில் ஏதும் இடையில் நுழைந்த ஒளி அல்ல என்பதை உறுதி செய்ய உதவுகிறது.
மேலும் சில சக்திவாய்ந்த கேமராக்களை உருவாக்க இதைப் பயன்படுத்த முடியும்.

அதன் வீடியோ காண லிங்க்...

https://youtu.be/DI7tLclZyrE

தமிழகத்தை நாசமாக்கிய நாதாரி பயலுவ புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்...


வேற்றுகிரகவாசி உண்மைகள்...


நமது கடவுள்கள் ஏன் வெளிக்கிரக வாசிகளாக இருக்கக்கூடாது? அவர்கள் நம்மைவிட தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த அறிவியல் மேதைகள். சில உள்கிரக பிரச்சினைகளாலும் , அறிவியலில் பெற்றிருந்த மாபெரும் வளர்ச்சியாலும் , தேடல் ஆர்வத்தாலும் (நம்மைப்போலவே) மானுடக்கிரகத்தை தேடி தேடி ஏன் அறிந்திருக்க கூடாது?

ஹரப்பா மக்கள் நம்மை விட அறிவியலிலும், விண்ணியலிலும் வளர்ச்சியடைந்து இருந்தனர்.
அவர்களின் நகர அமைப்பு பிரமிக்க வைக்கிறது.

மாயன் மக்களின் கிரக விண்ணியல் ஆய்வை பற்றி தனி பல்கலையே துவக்கலாம்.

இவர்களுக்கான விண்ணியல் அறிவை  பிளீயட்ஸ் நட்சத்திர தொகுதியில் இருந்தது வந்த வேற்று கிரகவாசிகளினாலே பெற்றிருக்ககூடும்.

அவர்கள் வந்து சென்றதையும்,
அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அமைக்கப்பட்டதே இந்த பிரமிடு அமைப்புகள்..

மேலும் பூமியின் சகோதர கோள் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கும் இது பொருந்திப் போகிறது...