தமிழகத்தினது உணர்வுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடப்பாடி அரசு எழுவர் விடுதலைக்காக தீர்மானம் எடுத்திருக்கிறது.
இனி ஆளுநர் முடிவு.. அது எதுவாகவும் இருக்கலாம். ஆனால் எடப்பாடி அரசின் இந்த முடிவுதான் முக்கியம் - அதுதான் தமிழர் சார் அரசியலும்கூட.
2009 இல் கருணாநிதியிடம் ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் எதிர்பார்த்தது இதைத்தான்.
போர் நிற்கும், நிற்காது என்பதெல்லாம் வேறு பிரச்சினை.
ஆனால் கருணாநிதி அதைச் செய்யவில்லை.
தமிழ் கூட்டு உணர்வுக்கு மதிப்பளிப்பது தான் முக்கியம். அதுதான் தமிழர் சார் அரசியலாகவும் இருக்க முடியும்.
கருணாநிதியின் சுயநல அரசியல் அதற்கு இடமளிக்கவில்லை. விளைவு வரலாற்றில் ஒரு இழி நிலைக்கு வந்து சேர்ந்து விட்டார்.
எடப்பாடி மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இந்த ஒரு தீர்மானத்திற்காகவே வரலாற்றில் கொண்டாடப்படுவார்.
ஏனென்றால் தெரிந்தோ, தெரியாமலோ தமிழ் கூட்டு உணர்வுக்கு மதிப்பளித்திருக்கிறார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.