13/09/2018

உங்களுக்கு vanta black என்றால் என்ன தெரியுமா ?


பொதுவாக நமக்கு நிறங்களை பற்றி ஒரு குறிப்பிட்ட விஷயம் தெரியும்.
(அல்லது சிலருக்கு இன்னும் தெரியாமல் இருக்கலாம்) அதாவது உண்மையில் நாம் என்ன பொருளை என்ன நிறத்தில் பார்க்கிறோமோ உண்மையில் அந்தப் பொருள் அந்த  நிறம் கொண்டது அல்ல.

உதாரணமாக ஒரு நீலநிறத்தை நாம் பார்க்கிறோம் என்றால் அந்த பொருள் நீல நிறத்தை தவிர மற்ற அனைத்து நிறத்தையும் உள்ளிழுத்துக்கொண்டு  நீலத்தை மட்டும் நமது கண்களுக்கு பிரதிபலிக்கிறது என்று அர்த்தம்.

ஒரு பொருள் எந்த நிறத்தையும் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை என்றால் அந்த பொருளை நாம் வெள்ளை நிறத்தில் காண்போம்.


ஒரு பொருள் அனைத்து நிறத்தையும் உள்ளே இழுத்துக் கொள்கிறது என்றால் அதைதான் நாம் கருப்பு நிறமாக காண்போம். நாம் காணும் அனைத்து கருப்பு நிற பொருட்களும் ஒளியை உள்ளே இழுத்து கொள்பவை தான் ஆனால்... அது 100 சதம் அல்ல..
எப்பேர் பட்ட அடர்த்தியான கருப்பு நிறமும் கொஞ்சம் ஒளியை நமக்கு மிச்சம் அனுப்புகிறது ஒரு பொருள் கிட்ட தட்ட 100 சதம் ஒளியை உட்கிறகித்தால் அது எப்படி இருக்கும்.

அந்த பொருள் தான் vanta black.

1000 வாட்ஸ்.. மிக பிரகாசமான விளக்கை இதன் மேல் பாய்ச்சினாலும்..
இதை வெளிச்சமிட்டு பார்க்க முடியாது..
எவ்ளோ பளிச்சிடும் ஒளியையும் உள்ளே இழுத்து குடித்து..... பார்க்க ஒரு குட்டி பிளாக் ஹோல் ஐ கையில் பிடித்திருபது போல இருக்கும்.

அப்படி ஒரு அடங்காத கருப்பு.
இது தன் மீது விழும் ஒளியில் 99.96 சதம் உள்ளிழுத்து கொள்ளும்.

ஒரு பிளாக் ஹோல் பார்க்க எப்படி இருக்கும் என்பதை பார்க்க மாடலாக இதை வைத்துக் கொள்ள முடியும்.


VAnta black என்பது " Surrey NanoSystems Limited " வைத்த ஒரு ட்ரேட் மார்க் பெயர். இதை தயாரித்தது அந்த பிரிட்டிஷ் நிறுவனம் தான்.

உண்மையில் அது என்ன பொருள்.. ??
"hollow carbon tubes " களால் நெருக்கமாக பின்ன பட்ட ஒரு பொருள் தான் இந்த vanta black.. என்ன ஒன்னு ஒவொரு டியுபின் அகலமும் கிட்ட தட்ட ஒரு அணுஅளவு மட்டும் தான். (அதாவது ஒரு சதுர சென்டிமீட்டரில் 1000 மில்லியன் நேனோ டியுப்கள் இருக்கும்.) இந்த டியூப்களில் ஒளி படும் போது அவைகள் ஒரு முடிவில்லாத பொறியில் சிக்கி வெளியே வர முடியாமல் வெப்பமாக மாறுகின்றன. உள்ளே போகும் ஒளி வெளியே வருவதே இல்லை.  எனவே உண்மையில் இது ஒரு நிறம் அல்ல.. மாறாக நிறம் ஏதும் அற்ற நிலை.

இதன்  சூட்சுமம் இதன் கட்டமைப்பில் இருக்கிறது என்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் இதை எப்படி வர்ணிக்கிறார்கள் என்றால்
" நீங்கள் ஒரு கோதுமை வயலில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த கோதுமை செடிகள் மூன்று நான்கு அடி உயரம் இல்லாமல் கிட்டத்தட்ட 10,000 அடி உயரம் இருந்தால் எப்படி இருக்கும் அப்படி தான் இதன் டியுப்கள் நெட்டுகுத்தாக மிக நீண்ட அமைப்பாக அடுக்க பட்டுள்ளது "

இதை சாதாரண பெயிண்ட்டை போல தொட முயற்சித்தாலோ அல்லது பொருளில் பூச முயற்சித்தாலோ.. இது இதன் தன்மையை இழந்துவிடுகிறது.
எனவே இதை பூச நிபுணர்களின் உதவி தேவை.

( சரி விலைக்கு வாங்கலாம் என்று பார்த்தால் இதன் விலை தங்கம் மற்றும் வைரம் இவை இரண்டையும் சேர்த்து அதைவிட அதிகம்)


ஆனால் சுவிஸ் வாட்ச் கம்பெனி நிறுவனம் ஒன்று லிமிடெட் எடிஷனாக ஒரு வாட்சை தயாரித்தது அதில் டயல் பின்னணி கருப்பு நிறம் vanta black ஆல் செய்ய பட்டது. அந்த கடிகாரத்தில் முட்கள் பின்னணி அற்ற அந்தரத்தில் மிதப்பது போல இருந்ததாம்.(அந்த வாட்ச் இன் விலை நம்ம ஊர் கணக்குக்கு கிட்ட தட்ட 50 லட்ச ரூபாய் )

சரி இதை எதற்காக தயாரித்தார்கள் இதன் பயன்பாடு தான் என்ன ??
இவற்றின் முக்கிய பயன்பாடு விண்வெளி ஆய்வாளர்களுக்கானது
அவர்கள் பயன்படுத்தும் டெலஸ்கோப்பில் உள்பகுதியில் இதை பூசுவதன் மூலம் டெலஸ்கோப்பில் கிடைக்கும் ஒளி விண்வெளியில் இருந்து தான்  கிடைத்தது பக்கத்தில் ஏதும் இடையில் நுழைந்த ஒளி அல்ல என்பதை உறுதி செய்ய உதவுகிறது.
மேலும் சில சக்திவாய்ந்த கேமராக்களை உருவாக்க இதைப் பயன்படுத்த முடியும்.

அதன் வீடியோ காண லிங்க்...

https://youtu.be/DI7tLclZyrE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.