அண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்
அந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறேஒன்றை நண்ணேன் (தாந்)
ஆழ்நிலைத் தியானத்தில், ஆயிரம் இதழ் தாமரைச் சக்கரக் கிளர்தலில் பீனியல் சுரப்பி (மாங்காய்) சுரக்கும் பால் ஆயுளை நீட்டிக்கும் அமிர்தமாகும்.
இச்சுரப்பைத் தூண்டுவது என்பது உள்நாக்கை மடித்து குண்டலினி சக்தியால் நமது உடலின் பஞ்சபூதக் கூறுகளான நரம்பு(மண்), சுக்கிலம்(நீர்), பைத்தியம்(மூளையின் வெப்பம்), தனஞ்சயன்(வாயு), நாடி (சுழுமுனை , புருடன் முதலான நாடிகள்) ஒத்ததிர்வு செய்து செய்யக் கூடிய அரும்பெரும் முயற்சியாகும்.
இப்பயிற்சி மானுடம் என்ற கூற்றின் அடிப்படை அமைப்புகளை எல்லாம் சித்தத்தால் கட்டி ஆளும் மகத்தானதும் மிக்க ஆபத்தானதுமான ஒன்று.
தக்க தகுதியில்லார் , முறையான ஆசிரியர் இன்றி செய்தலினால் ஏற்படும் விளைவுகள் மிக்க தீமையை பயக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
அவ்வாறு செய்தலை அறிந்திருந்தாலும் அதன் விளைவான அமுதத்தை விரும்பேன். அவ்வமுததை அருந்துவதால் வ்ரும் வானவர் தன்மையையும் விரும்பேன்.
ஆதார ஒலிகள் என்று கண்டு கொண்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்ட அமைக்கப் பட்ட வடமொழியினால் மந்திர உச்சாடனங்கள் செய்து அதனால் வரும் பயனையும் விரும்பேன்.
எல்லாவற்றிற்கும் அடிப்படையான மெய்யான அறிவு ஒன்றே நிலையானது. அதைத் தவிர வேறு ஓன்றும் வேண்டேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.