24/08/2018

உலகத்தில் கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கும் பின்லாந்தில் 7 வயதில்தான் ஒரு பிள்ளையை பள்ளியில் சேர்க்கிறார்கள்...


ஆனால் இந்தியாவில் கருவிலேயே ஃபிரீ கேஜிக்கான அட்மிசன் நடைபெற்று விடுகிறது...

அடேங்கப்பா.. இதுவரைக்கும் இந்திய கல்விமுறை குறைபாடுகளை  இவ்வளவு நுணுக்கமாக எடுத்துக்கூறும் எந்தக் காணொளியையும் நான் கண்டதில்லை.

மெக்காலே கல்விமுறையின் அரசியலை தோலுரிக்கும் அருமையான காணொளி...

அனைத்துப் பெற்றோர்களும் பார்த்து பகிருங்கள்...

ஆகஸ்ட் - 23 - 2018 நிலநடுக்கங்கள்...


தமிழ்நாடு கேரளாவின் குப்பை தொட்டியா? நாள்: 28-07-2018...


கேரளா மநிலம் எர்ணாகுளத்தில் அமிர்தானந்தமயிக்கு சொந்தமான மருத்துவ பாரிசோதனை நிலையம் உள்ளது. அங்கிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் தேனி மாவட்டம் போடி அருகே  ‎குச்சனூரில் உள்ள அமிர்தனந்தமயிக்கு சொந்தமான ஆசிரமத்தில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

இதையறிந்த அப்பகுதிமக்கள் பீதி அடைந்து தகவல் அளித்ததின் பேரில் சின்னமனுர் காவல்துறையினர் மற்றும் குச்சனுர் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

(https://www.google.co.in/amp/www.puthiyathalaimurai.com/amp/news/tamilnadu/49059-the-public-is-protesting-to-bring-in-medical-waste-in-tamil-nadu.html)

நாள்: 25-10-2016...

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த 24 லாரிகள் கோவை மதுக்கரையில் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து கோவை மதுக்கரைக்கு நேற்று 24 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த லாரிகள் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு ஒவ்வொரு லாரியாக குப்பைகள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மிக மோசமான துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

இதனையடுத்து, நிற்க வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டுபிடித்த பொதுமக்கள் அந்த லாரிகளை சிறை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ரசாயன மருந்து கழிவுகளை ஏற்றி கொண்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, எட்டிமடையைச் சேர்ந்த செல்லப்பக் கவுண்டர் என்பவரது விவசாய நிலத்தை கழிவுகள் கொட்டுவதற்கு முகமது இலியாஸ் வாடகைக்கு எடுத்துள்ளது தெரிய வந்தது. இந்த இடத்தில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதும் தெரிய வந்தது.

இதனையடுத்து முகம்மது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாகிவிட்ட நிலத்தை வாடகைக்கு கொடுத்த செல்லப்பக் கவுண்டர் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரளாவில் இருந்து இதுபோன்ற மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் லாரிகள் சோதனைச் சாவடிகளில் 200, 300 ரூபாய் லஞ்சம் கொடுத்து தமிழகத்திற்குள் நுழைவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதுவும் இரவோடு இரவாக லாரிகளில் கொண்டு வரப்பட்டு கழிவுகள் கொட்டப்பட்ட பின்னர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் லாரிகள் சென்று விடுகின்றன. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் கழிவுகள் இங்கு இறக்கப்படுவது குறித்து யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. கேரளாவில் இருந்து டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருவதால், கதிர் வீச்சு அபாயம் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எட்டிமடை வட்டாட்சியர் சிவசங்கரன் விசாரித்து வருகிறார். மக்களால் சிறைபிடிக்கப்பட்ட 24 மருத்துவ கழிவு லாரிகளை கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படும் என்று வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

(https://www.google.co.in/amp/s/tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/medical-wastage-from-kerala-dumped-tamil-nadu-265654.html)

நாள்: 04-07-2014...

கேரளாவில் இறைச்சிக் கழிவுகள், மருந்துக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள் ஆகியவற்றைக் கொட்ட தடை இருப்பதால் அவை மொத்தமாக கோவை போன்ற எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் அப்புசாமி 2 நாட்களுக்கு முன் திருப்பூரிலிருந்து லாரியில் பனியன் லோடு ஏற்றி கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் நகருக்கு சென்றார். இவருடன் கோவை கணபதியை சேர்ந்த ராஜன் சென்றார். லோடு இறக்கிய பின்னர் ராஜன், கோவைக்கு கழிவு லோடு ஏற்றி செல்ல வேண்டும், வாடகை 5 ஆயிரம் ரூபாய் தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அப்புசாமி அங்கமாலி விமான நிலையம், அதன் சுற்றுப்பகுதியில் மூட்டை மூட்டையாக குவிக்கப்பட்டிருந்த கழிவுகளை லாரியில் ஏற்றினார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கழிவு லாரி, கோவை வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு வந்தது. அங்கிருந்த காவலாளி மாநகராட்சி அலுவலர்கள் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே இறக்க முடியும் என்றார். இந்நிலையில் நேற்று காலை, வெள்ளலூர் ரோட்டில் சென்ற சிலர் துர்நாற்றத்துடன் நின்ற லாரி பற்றி மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். லாரி பொதுமக்களால் ரோட்டோரத்தில் சிறை வைக்கப்பட்டது. இது குறித்து குறிச்சி வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல்துறையினர் ஓட்டுனரை விசாரித்து அவரை கைது செய்தனர்.

(https://www.google.co.in/amp/m.tamil.webdunia.com/regional-tamil-news/தமிழகம்-கழிவுகள்-கொட்டும்-குப்பைத்தொட்டியா-கேரளாவின்-அட்டூழியம்-113070400032_1.htm%3famp=).

ஸ்டெர்லைட் ஆலையும் பாஜக - அதிமுக வின் நாடகமும்...


சென்னை புழல் ஏரியின் அவல நிலை...


1876 வருடம் சென்னை மக்களின் எதிர்கால குடிநீர் தேவையை கருதி ஆங்கில அரசினர் புழல் ஏரியை அமைத்தனர்.

ஆனால் நாம் எவ்வளவு கேவலமாக பராமரிக்கிறோம் தெரியுமா ?

சமிபத்தில் pwd ஊழியரிடம் பேச நேர்ந்தது புழல் ஏரிக்கு ஆந்திர கிருஷ்ணா நதி நீர்  வரும் பாதையில் மக்கள் மனித  கழிவு நீரை கொட்டுகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் இடத்தில் பெண்கள் மாதவிடாய் பஞ்சுகள் முதல் அனைத்து வகையான கழிவு பொருட்களும் வருகின்றதாம் எவ்வளவு மோசம்.

கேட்கவே அருவருப்பா இருக்கிறது.

இந்த  தண்ணீரை தான் நம் மக்கள் குடிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை அதனை பற்றி தான் இந்த பதிவு  .

பொதுமக்கள் உண்ணும் உணவு சுகாதரமா இருக்கவேண்டும் என்று நினைக்கும் அரசு.

பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிக்கும் குடிதண்ணீர் தேங்கும் நீர் நிலையில் சுகாதரத்தை காட்டவில்லை என்பதே உண்மை.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் புழல் ஏரி, குப்பைகள் கொட்டப்படுவதால் மாசடைந்து வருகிறது.

மொத்தம் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி, சென்னை மக்களின் நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வண்டி, வண்டியாக கொண்டு வரப்பட்டு புழல் ஏரியை சுற்றிலும் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

குப்பைகள் மூலம் உருவாகும் கிருமிகள் நன்னீரில் கலப்பதால் புழல் ஏரியின் நீரை அருந்தும் மக்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி இந்த குப்பைகளை தீவனமாக உண்ணும் கால்நடைகளும் உயிரிழக்கும் அவலநிலை உருவாகிறது.

புழல் ஏரியை சுற்றிலும் கொட்டப்படும் குப்பைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் குப்பைகளை எரியூட்டுவதால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலாலும், சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் கரும் புகை, சாம்பல் படலத்தால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

புழல் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை பலமுறை புகார்கள் அளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரியிலிருந்து உபரி நீரை கடலுக்கு கொண்டு செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சென்னையில் கனமழை பெய்தால் அப்பகுதி வெள்ளத்தில் தத்தளிக்க நேரும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்...

இந்தியா - பாக்கிஸ்தான் உண்மைகள்...


முக்கொம்பு மேலணை உடைந்தது...


சமீபத்தில் சில மாதங்கள் முன்பு இந்த பாலம் பொதுப்பணித்துறையால் பராமரிப்பு பனி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது...

காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர் கொள்ளிடம் வழியாக வீணாக கடலில் கலப்பதைத் தடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில், பிரிட்டிஷ் ராணுவ பொறியாளரும், தென்னிந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவருமான சர்.ஆர்தர்  காட்டன் என்பவர், கரிகாலச் சோழனின் கட்டுமான முறையைப் பின்பற்றி 1836 -ம் ஆண்டு முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் பகுதியில் 45 மதகுகளுடன் அணைகட்டி நீரைச் சேமிக்க வழி வகுத்தார்.

6.3 மீட்டர் அகலம் கொண்ட இதன் மேல்பகுதி வழியாக வாத்தலை - முக்கொம்பு இடையே கார், இரு சக்கர வாகன போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டு வந்தது.

கிட்டத்தட்ட 180 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நின்று, டெல்டா மக்களின் வாழ்வதாரத்தை உயர்த்த துணை நின்ற இந்த அணையின் ஒரு பகுதி தற்போது (22.08.2018 அன்று இரவு) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது...

நல்லதை விதைப்போம்...


யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன் ஆணையம்…


1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை.

அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது.

இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம்" 1972 - இல் மு.கருணாநிதி (தட்சிணாமூர்த்தி) தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது.

சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார்.

தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும் தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.

ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க.

சட்டநாதன் ஆணையத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும்.

தமிழ் நாட்டில் தலித் அரசியல் பேசுவோர் தமிழர் நலனில் கவனம் செலுத்த மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளாகவே பார்பார்கள்.

தமிழர் அல்லாதோரின் நலனுக்காக கட்சி கண்ட திராவிட அரசியல் கட்சிகளும் இதை கண்டுகொள்ளாது.

திராவிட இயக்கம் இந்த 'தமிழர் உரிமை மறுப்பை' ஆதரித்து சட்டநாதன் ஆணையத்தையே இனவாதம் என்று கருத்தாக்கம் செய்ய துணியும்.

தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே இந்த தமிழர் உரிமையும் நிலைநாட்டப்படும்.

யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு இனி சட்டநாதன் ஆணையம் சமர்ப்பித்த பட்டியல் தான் பதில்...

சிந்தித்து விழித்தெழு எம் தமிழினமே...


ஈ.வே.ரா வின் தாய்மொழி தெலுங்கா? கன்னடமா?


ஒருமுறை ஈ.வே.ரா பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு இறங்கும்போது ஈ.வே.ராவின் பக்தர் ஒருவர் பணம் கொடுத்து...

(அதாவது ஈவேரா பெயர் வைக்க, சொற்பொழிவு ஆற்ற, புகைப்படம் எடுத்துக் கொள்ள என அனைத்திற்கும் தனக்கு இவ்வளவு என்று கட்டணம் அறிவித்திருந்தார்).

தனது குழந்தைக்கு பெயர்வைக்குமாறு கேட்டுள்ளார்.

பெயர் வைக்கும் முன் இது எத்தனையாவது குழந்தை என்று ஈவேரா கேட்டுள்ளார்.

அந்த நபர் ஏழாவது குழந்தை என்று கூறியுள்ளார்.

உடனே குழந்தைக்கு சாலம்மா (போதுமம்மா) என்று தன் தாய் மொழியான தெலுங்கில் பெயர் வைத்தார்.

சாலு (தெலுங்கு) = போதும் (தமிழ்)...

பாஜக மோடியும் மோசடி வேலைகளும்...


வெளிநாட்டு நிறுவனங்களிடம்  இருந்து  கோடி கோடியாக கட்சி நிதி மட்டும் பா.ஜ.க-விற்கு வருவது எப்படி ? அப்ப எல்லாம் உங்க சட்டம் எங்க பட்டன கழட்ட  போயிருந்துச்சா...?

ஆவிகளும் உண்மைகளும்...


ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்...

சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்..

இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்..

சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்..

பல ஆண்டுகள் கடும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.

இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.

திடீர் விபத்து, தற்கொலை, போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ, அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.

இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.

நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.

சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும். வெளியே எங்கும் செல்ல முடியாது. உயரேயும் பறக்க முடியாது.

இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.

அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை.

துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது. அவர்களை வணங்கக்கூடாது. அவர்களுக்கு படையல் போடக்கூடாது.

உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.

துர்மரணமடைந்தது வாலிப வயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும். வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிப வயதுப் பையனைத் துன்புறுத்தும்.

ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது. ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.

ஹாஸ்டல்கள், அரண்மனைகள், ஆஸ்பத்திரிகள், சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும்.

மாந்திரீகத் தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப் பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை, வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.

நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்...

கர்நாடகாவில் குமாரசாமி முதல்வரான கதை...


சுண்ணாம்பு மருத்துவம்...


சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுமையான தொண்டை கட்டா? இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்...

விடுதி வார்டன்கள் உடந்தையாக இருப்பதாக செய்தி... என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்...?


இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி தமிழகத்தில் - தேரிக்காடு...


ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்று, தேரிக்காடு..

தமிழகத்தின் வேறு பகுதி மட்டும் அல்ல, இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி, தேரிக்காடு.


கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும் வகையில், மணல் மிக மெதுவானதாக மெத்தை போல இருக்கும்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம்.


திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட கடலோரம் ஒட்டிய சாத்தான்குளம், திருச்செந்தூர், திசையன்விளை பகுதியில் வித்தியாசமான சிகப்பு நிற மண்ணுடன் விரிந்த பகுதிதான் தேரிக்காடுகள்.  நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வயதுள்ள வளர்ந்த பனைமரங்கள் இப்பகுதியில் அதிகமாக தென்படும்.

தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது.

மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு, தென்கிழக்காக சற்றே சரிந்த நிலையில் காணப்படும் இந்த தேரிக்காட்டின் மொத்த பரப்பளவு 12 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம், கடல் மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்துவிடும்.

ஒரு சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் பெரிய மணல் மேடாக மாறிவிடும்.


அப்போது அந்த மணல் குன்றுகளே மெதுவாக இடம் மாறி நகர்ந்து செல்வதுபோலத் தோன்றும்.

தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு பலத்த காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயா ஜாலங்கள் அடிக்கடி அரங்கேறும்.

நிமிடத்துக்கு ஒருமுறை அங்கு காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்த தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமம்.

திரும்பிய இடம் எல்லாம் மணல் மேடாக இருப்பதால், இது விவசாயம் செய்வதற்கு ஏற்ற இடம் அல்ல.

ஆனால் மழை காலங்களில், அங்குள்ள பள்ளங்களில் தேங்கும் நீர் செயற்கை ஏரிபோல உருவாகும். அதுபோன்ற இடம் தருவை என்று அழைக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் தண்ணீர் இருக்கும் காலங்களில் நெல் அல்லது வேறு ஏதாவது பயிரிடுவார்கள்.

தேரிக்காட்டின் மற்ற இடங்களில் முந்திரி செடிகள் அங்கும் இங்குமாக வளர்ந்து இருக்கும். அவ்வப்போது வீசும் பலமான காற்று, மணலை அள்ளி வந்து அந்த முந்திரிச் செடிகள் மீது கொட்டிவிடும்.

அதுபோன்ற நேரங்களில் முந்திரிச் செடியின் மேல் கிளை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் காட்சி, சமாதிக் குழியில் இருந்து ஏதோ எட்டிப்பார்ப்பது போன்ற பயங்கர தோற்றத்தைத் தரும்.

இங்குதான் டைட்டானியம் கிடைக்கின்றது என்று டாடா நிறுவனத்தினர் கடந்த 2007ல் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு மக்கள் போராட்டத்தால் அந்த திட்டம் நிறுத்திவைக்கப்படவில்லை. ஆனால்  முடக்கப்படவில்லை. அதன் கோப்புகள் அப்படியேதான் இருக்கின்றன.

இதற்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆரல்வாய் கணவாய் மூலம் வருகின்ற காற்று காற்றாடிகளுக்கு மின் உற்பத்தியை பெருக்க உதவியாக உள்ளது.  மழைகளும் பெரிதாக இப்பகுதியில் பெய்வதில்லை.

இங்குதான் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைத்து கால்வாய் வெட்டி, திசையன்விளை, திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகள் பாசன வசதிக்கு திட்டமிடப்பட்டது. இந்த மண்ணில் வாழை, கொய்யா, மா, முந்திரி, முருங்கை, போன்ற பணப் பயிர்களும் வளர்கின்றன. இந்த விவசாய பூமிக்கு கிழக்கே கடற்காற்றும், மேற்கே இருந்து மழைக் காற்றும் இந்த பயிர்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளன.

இந்தத் தேரிக்காட்டில் வரலாற்று ரீதியாக அரேபியர்கள், கிறிஸ்து மார்க்கத்தை பரப்ப வந்த சவேரியர், ஜி.யு. போப், கால்டுவெல் போன்ற ஆளுமைகள் உளவிய மண்ணாகும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலுமாக இந்த தேரிக்காடு அமைந்து இருக்கிறது.

ஏறக்குறைய ஒரு பெரிய வட்டமான பகுதிபோல இது காட்சி அளிக்கிறது...

பாஜக அடிமை அதிமுக வின் ஏமாற்று வேலைகள்...


சென்ற வருட ஜுன் மாத அறிவிப்பு. 250 கோடியில் 2 லட்சம் தடுப்பனைகளாம்..  த்தத்தூ.. கடைசி வரை வாயிலேயே அரசியல் செய்யும் அடிமைகள்...

கருணாநிதிக்கு கவி பாடிய பெண் போலீஸ் டிரான்ஸ்ஃபர்...


திருச்சியைச் சேர்ந்த பெண் காவலரான செல்வராணி ராமச்சந்திரன், ஒரு கவிஞரும் கூட. சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக அவர் ஒரு இரங்கற்பா எழுதி, கண்ணீருடன் அதை வாசித்தும் சமர்ப்பித்துள்ளார்; சமூக வலைத்தளங்களிலும் இது வைரலானது.

இந்த நிலையில், அவர் திருச்சி காவல் துறை நுண்ணறிவுப் பிரிவிலிருந்து மத்திய மண்டலக் காவல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்...

முல்லை பெரியாறு அணை...


எவ்வளவு பெரிய சாதனை சென்னையில் மறைக்கப்பட்டு உள்ளது...


சென்னை மாநகராட்சியின் இலட்சினை சேர சோழ பாண்டியர்களின் சின்னங்கள் ஆகும். இதுவே மாநகராட்சியின் கொடியும் ஆகும்...

சென்னை மாநகராட்சிக்கு ஒரு கொடி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? 

அந்த கொடியில் தமிழ் மூவேந்தர்களின் சின்னங்கள் மீன், புலி, மற்றும் வில் அம்பும் உள்ளது.

மேலும் தமிழர்கள் கடல் கடந்து வாணிகம் செய்த கடலோடிகள் என்பதை குறிப்பிட கடலும் கப்பலும் உள்ளது.

இந்த இலட்சினையை உருவாக்கியது சென்னையை மீட்ட மா.பொ. சி அவர்கள் தான்.

ஆனால் சென்னை மாநகராட்சியின் கொடியை, இலட்சினையை சென்னை நகரில் ரிப்பன் மாளிகை தவிர்த்து வேறு எங்கும் காண முடியாது.

சென்னை நகரம் முழுவதும் பறக்க வேண்டிய இக்கொடி மாநகரில் வேறு  எங்கும் பறக்கவிடப்படவில்லை.

குறைந்த பட்சம் சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களில் இந்த இலட்சினை இடம் பெற்று இருந்தால் கூட அது தமிழரின் பெருமையை உலகிற்கு பறை சாற்றி இருக்கும்.

இணையத்தில் கூட இந்த கொடி அல்லது இலட்சினை தெளிவான படமாக வெளியிடப்படவில்லை.

இது தமிழர்களின் அடையாளங்களை திட்டமிட்டு மறைக்கும் செயலாகும்.

சென்னை நாளை கொண்டாடும் இவ்வேளையில் இனியாவது தமிழர்கள் இந்த மூவேந்தர் இலட்சினையை பரவலாக்கும் வேலையை செய்வோம்.

சென்னை மாநகர கொடி சென்னையின் மையப்பகுதியில் பறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம்..

அதுவே சென்னையை மீட்ட மா.பொ. சி ஐயாவிற்கு தமிழர்கள் செய்யும் மரியாதை ஆகும்..

இணையத்தில் இந்த இலட்சியைனை தெளிவான படமாக வெளியிட தொழில் நுட்ப  தமிழர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்  கொள்கிறோம்...

கார்பரேட்களின் ஏமாற்று வியாபாரம்...


கடுவெளிச் சித்தர் பாடல்...


செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான.

அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.

1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது.

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது.

3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்.

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்.

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்.

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்.

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்.

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல.

ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை தவிர்க்க வேண்டும்....

எங்கப்பா அந்த அதிமுக விஜய பாஸ்கர்...


ஆரிய - திராவிட திமுக கலாட்டா...


சொந்தமாக வீடு, கார் இல்லாமல் செத்துப் போன கருணாநிதி என்ற தலைப்பில் இந்து நாளிதழின் செய்தி ஒன்று காணக் கிடைத்தது...

நவீன பிரெஞ்சு தத்துவமேதை ழான் போத்ரியாவின் மிக முக்கியமான ஒரு ஆய்வு சொல்கிறது ” நவீன மனிதன் இனி போலிகளுக்கும் பொய்மைகளுக்கும் எதிராகவும் போராட வேண்டியிருக்கும்”. அதாவது நிஜத்திற்கும் போலிக்குமான இடைவெளி அருகிவருகிறது.இந்த நிஜத்திற்கும் புனைவிற்குமான இடைவெளியை ஊடகங்கள் மெல்ல மெல்ல அகற்றி வருகின்றன என்கிறார்.

கூடவே,  "இனி உண்மை என்ற ஒன்று இருக்காது.. எல்லோரும் சேர்ந்து கட்டமைப்பதே உண்மை" என்கிறார்.

அதன் உச்ச நிலைதான் கருணாநிதி குறித்த இந்து பத்திரிகையின் இந்த செய்தி.

ஊடகங்கள்,  சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், இடதுசாரிகள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அவரைப் புனிதப்படுத்த தீயாய் வேலை செய்கிறார்கள்.

இந்த லெவல்ல போனால் ஒரு 50 வருடம் கழித்து அவர் சோத்துக்கு சிங்கி அடிச்சு, அநாதையாகச் செத்தார் என்று பாடப் புத்தகத்திலேயே வரும் போல் தெரிகிறது.

ஈழப் போராட்டத்தை தவிர்த்துவிட்டு தமிழக அளவில் மட்டும் வைத்து மதிப்பிட்டால்கூட அவர் போற்றுதலுக்குரியவரல்ல. 50 வருடங்கள் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் அதிலும் குறிப்பாக ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவர் தமிழகத்தின் இன்றைய சீரழிவுக்கு முழுப் பொறுப்பாளியல்லவா?

இதை மறைப்பதனூடாகவும், மறுப்பதனூடாகவும் சாதாரண அடித்தட்டு தமிழக மக்களுக்கு வரலாற்று துரோகம் இழைக்கிறோம் என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

ஒரு கொடுங்கோல் , பாசிச ஆட்சியில்கூட  குறிப்பான ஐம்பது ஆண்டுகளில் சில நல்ல விடயங்கள் இயல்பாகவே நடந்திருக்கும். 

அதையெல்லாம் சாதனையாக அடுக்குவதை என்னவென்பது?

அவை கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பதை இப்போது நடைமுறையில் காண்கிறோம்.

ஆரிய எதிர்ப்பு என்று விட்டு இன்று கருணாநிதி நினைவுரையை நிகழ்த்த இந்து ராம்தான் தேவைப்படுகிறார்.

கூடவே கருணாநிதி சமாதியில் பழம்,பாக்கு, வெற்றிலையுடன் தினமும் முரசொலியும் வைக்கப்படுகிறதாம்.

என்ன கூத்து இது?

இதன் பிறகும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் கருணாநிதி புகழ்பாடி  சாதிக்க விரும்புவது என்ன?

திருட்டு பாஜக - அதிமுக அரசுகள்...


உலகத்தில் மொத்தம் 193 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....


அதில் தனியாக தமிழர் தேசம் (தமிழீழம் + தமிழகம்) என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் அழிந்துவிடாது...

ஆனால் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்... வரும் காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும்....

எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர் தேசம் அமைய போராடு....

இப்போது நாம் தமிழர் தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம்..... என்பதை புரிந்து கொள்ளுங்கள்...

நாம் கஷ்ட பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக.. வாழ வழி செய்வோம்.....

நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றிடுவோம்.....

வாழ்ந்தால் சுகந்திரமாக வாழ்வோம்...
இல்லையேல் களமாடி சாவோம்...

தலைவனை பிரதிபளிக்கும் தொண்டர்படைகள்...


ஒட்டு மொத்த பார்வையும் கேரளாவின் பக்கம் இருக்கும்போதும் கடலூரில் முதல் ஆட்களாய் களம் இறங்கிய சகாயம் ஐயாவின்  இளைஞர் படை....

வாழ்த்துக்கள் தோழர்களே...

கேரளாவை சார்ந்த யூசுஃப் அலி எனும் மலையாளி அரபு தேசங்கள் முழுதும் எண்ணற்ற LuLu Mall 'களை வைத்துள்ளார்...


அதன் மூலம் அரபு தேசங்களின் பல மன்னர் குடும்பங்களோடும் மிக நெருக்கமான உறவில் இருப்பவர்.

அவருடயை லாபியின் பேரில்தான் அமீரகம், இந்தியாவின் மத்திய அரசாங்கம் வழங்கியதைவிட பல மடங்கு அதிகமான உதவித் தொகையை கேரளாவிற்கு வழங்கி இருக்கிறது.

எதிலும் லாப நோக்கத்தை மட்டுமே பார்க்கும் ஒரு முதலாளி தனது மண்ணையும், தனது மக்களையும் இவ்வளவு தூரம் நேசிப்பது (இது முதல் முறையல்ல) பாராட்டுதலுக்குரியது.

கருணாநிதி குடும்பத்திடம் யூசுப் அலியை விட பலமடங்கு அதிக பணமிருக்கும்; அதைவிட அதிகமான பணம் மாறன்களிடம் இருக்கும்; அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத பணம் பெரியார் மாளிகை ட்ரஸ்ட்களில் கொட்டிக் கிடக்கிறது.

முரசொலி மாறன் நினைவிழந்து இனி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தும், அவரை அமைச்சராகவே தொடர்ந்து பல மாதங்கள் வைத்திருந்தது திராவிடம்.

 ஏனெனில் அந்த சலுகைகளையும், அப்போல்லோ செலுவுகளையும் அரசாங்கம் ஏற்குமல்லவா.

இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் ஒரு அமைச்சர் பதவி என்பது ஒரு பொக்கிஷம், அதை தமிழக மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்த வேண்டும்.

ஆனால் காலம்காலமாக அமைச்சர்களை திராவிடம் யார் வீட்டுக்கு சேவுகம் செய்ய பயன்படுத்துகிறது?

இப்போதுவரை அப்போலோவுக்கு மாறனுக்கான வைத்திய செலவை மாறன்/கருணா குடும்பம் செலுத்தவில்லை. மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

மறுபுறம், தமிழர்களின் பல்லாயிரம் கோடி பணத்தை திருடி, அதை வேகவேகமாக சீமாந்திராவின் 'புது தலைநகரை' கட்டுமானம் செய்வதில் முதலீடு செய்கிறது மாறன் குடும்பம்.

யூசுப் அலியை போன்றதொரு 'தங்கள் பிடியை' மீறிய தமிழ் முதலாளி உருவாகிவிடாது தடுப்பதில்  காலம் காலமாக சிரத்தையாக இருக்கிறது திராவிடம்.

கல்வியை பாமர ஏழை தமிழர்களிடம் பல லட்சங்களுக்கு விற்கும் பெரியார் மடத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா?

இவ்வளவுக்கும், அரபுலக அரசியலை  பார்த்தால்...

இந்த உலகில் பொதுவுடமை பூத்து குலுங்காமல் கருகச்செய்தது அரபுலகமே என்று இன்றும் மார்தட்டிக்கொள்கிறது, அரபு தேசங்கள்.

ஆம். ஆப்கான் படையெடுப்புத்தான் சோவியத்துகளின் முடிவுக்கு துவக்கமாக இருந்தது. அங்கே முஜாகிதீன்களை வளர்த்ததும், தயார் படுத்தியதும், பொருளாதார பின்புலமாக இருந்ததெல்லாம் அரபு தேசங்களே.

அந்த வரலாற்று வழி வந்தவர்தான் பின் லேடன்.

அப்படியான கம்யூனிச எதிரிகளான அரபிகளோடு காம்ரேடு பினராயி தன் மக்களை காக்க எளிதாக கை குலுக்குகிறார், 'பற்றிய' அந்த கரங்களை வலுசேர்ப்பதோ பூர்ஷ்வா யூசுஃப் அலி.

ஆனால் இங்கோ, எந்த தமிழ் முதலாளிகளும் உருவாகிவிடாது தடுத்து, தமிழர் பணத்தையும், வளத்தையும் கொள்ளையடித்து தமிழர்க்கு எதிராக முதலீடு செய்கிறது ஒரு கும்பல்.

இனத்தின் எதிரிகளோடு கூட்டு சேர்ந்து இனத்தை அழிக்கவும், இனத்தின் வரலாற்று நாயகர்களை கொலை செய்யவும் சதி செய்கிறது.

இந்த தமிழர் மண்ணை தங்கள் வசதிக்கு சுரண்டத்தான் அதற்கு 'பெரியார் மண்' என பெயரிட்டு, நாம் திருடப்படுவதை நம்மையே வணங்கி கொண்டாட வைக்கிறது...

அரசியல் நாகரிகம் எனும் மாயை...


ஆரியம் திராவிடம் ஓர் ஆராய்ச்சி...


கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும்.

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும். அல்லது ஆரிய இனமாக இருக்கும்.

ஆரியம் என்றால் என்ன ? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன?

இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? இது தொடர்பாக சில சான்றுகளை முன் வைக்கின்றேன்.

முதலில் ஆரியம்...

நம்முடைய வரலாற்றில் தொன்மையானதாகக் கருதப்படும் வேதங்களில் ஆரியம் இருக்கிறதா?

ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் ஆரிய இனத்தவருக்கு மற்றொரு இனத்தவருக்கும் இடையே நடந்தவை என்ற கருத்து திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.

ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள்.

ஆரியர், அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே இல்லை.

இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை.. ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது. இதுவும் தவறு.

வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிரமுடையவர்கலாக இருந்திருகிறார்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் இருக்கிறது. (10:31:11)
இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும், யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கருப்பு. பாஞ்சாலியின் இயற்பெயரான “கிருஷ்ணா” கருப்பு நிறத்தைக் குறிக்கிறது.

வேதங்களில் திராவிட என்ற சொல் இல்லை.

தமிழ் நூல்களில் குறுந்தொகையில் (7:3:5) மேள ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆரியர் கயிறாடு பரையிற் கால்பொரக் கலங்கி வாகைவென் நெற்றோலிக்கும் என்கிறது குறுந்தொகை.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இறைவன் வடமொழும் தென்மொழித் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர்; சாத்விக குணத்தோடு சிவ சிந்தனையோடு இருக்கும் ஞானிகளுடைய சொல்லாக விளங்குபவர் என்று எழுதப்பட்டுள்ளது.

ஆரியம் தமிழோடிசையானவன் கூறிய குணத்தார் குறிநின்றவன் என்பது திருநாவுக்கரசர் பாடல் (176).

மாணிக்கவாசகர் (கி.பி.எட்டாம் நூற்றாண்டு) ஆசாரியன் என்ற பொருள்பட சிவ புராணத்தில் பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே (64) என்று பாடுகிறார்.

பிறகு, கம்பராமாயணம் (கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில் “இற்றைநாள்வரை முதளியான் முன்செய்தன குற்றமுமுளவெனிற் பொறுத்தி கொற்றவர் அற்றதான் முதகத்தினில் விழித்தல் ஆரிய. பெற்றனன் விடையெனப் பெயர்த்து போயினான். (க.ரா.யு.கா. கும்பகர்ணன் வதைப் படலம்) என்று வருகிறது.

இந்த இடத்தில் உரையாசிரியர்கள் ஆரிய என்பதைத் தலைவன் என்று எழதுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் (1370-1443) வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்படுவே செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” (உபதேசரத்தின மாலை) என்று எழுதுகிறார் வேதாந்த தேசிகர் (1269-1370) கான்பனவு முரைப்பனவு மற்றோன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற் பான்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வைத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம் நம் பெரியோமல்லோம் நான் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே (அம்ருதாஸ்வாதி 37) என்கிறார்.

இங்கே ஆரியன் என்பதை சிறப்புடையவன் என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம், ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார் இதை இன அடியாளமாக மாற்றினார்.

கால்டுவெல் வழியில் வந்த சி.என். அண்ணாதுரை ஆரிய மாயை (1943) என்ற புத்தகத்தில் நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணீயமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைச் சரித்திரம் படிப்போர் அனைவரும் நன்று அறிவர் (பக்.26) என்று எழுதினார்.

பூகோளப் படத்தைப் பார்த்தாலே மத்திய பிரதேசத்தின் தெற்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதி, மகாராஷ்டிரம் ஆகியவை நர்மதையின் தெற்க்கே உள்ளன என்று தெரிந்துவிடும் சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோதியும் திராவிடர்களா என்பதை அண்ணாவின் தம்பிகள்தான் விளக்க வேண்டும்.

அடுத்தது திராவிடம்...

திராவிடம் என்ற பொருளில் த்ராமிடம் என்ற சொல் பாகவதத்தில் (8.5.49) வருகிறது.

தமிழைக் குறிக்க சம்ஸ்க்ருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.

கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘தாமரி’ என்று எழுதினர்.

ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ‘தமிரிசி’ என்று எழுதினார்.

இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள் முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும் தமிழகத்தையும் ‘மலபார்’ என்றே அழைத்தார்கள் எனவே தமிழ் திராவிடமாக ஒழிக்க வாய்ப்புகள் இருந்தன.

சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை.

பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில் திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும் சோழ தேசத்திற்கு வடக்கிலும் கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது.

இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

வேதாந்த தேசிகர் ‘த்ரமிடோபநிஷத்’ தாத்பர்ய ரத்னாவளி என்ற நூலை எழுதியிருக்கிறார்.

தாயுமானவர் (பதினெட்டாம் நூட்றாண்டு)
“வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார்.

வேதாந்த தேசிகரும், தாயுமானவரும்
‘திராவிடம்’ என்ற சொல்லை தமிழ் என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது.

இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார்.

இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுய மரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான்.

இந்த இயக்கங்களின் அடிப்படை. கால்டுவெல்லின் கற்பனையில் உருவான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம்தான்.

கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம்.

P.Viii … Psamls of a Saiva Saint/ T Isacc Thabiah/London. Luzee& Co./ 1925
A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils, toallied people in inferior grades of culture.

The responsibility is Bishop Caldwell’s. The wrong done to those, to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an
Ethnological distinction. TheCaldwellterminology is unscientific and unsatisfactory.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார்.

ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும், சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவங்கி வைத்தது தான் திராவிட இனவாதம்.

ஈ.வே.ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்துவிட்டது. இனவாதம் இயக்கமானது.

ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது.

திரைப்படப் பாட்டுப் புத்தகங்களும் இசைத்தட்டுகளும் கிராமங்கள் தோறும் திராவிடப் பொன்னாடும் பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன.

ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது.

தொல்லியல் துறை ஆய்வுகளின்படி அடிப்படையில் ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்துவிட்டது.

இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப்படுகிறது.

இலக்கியமல்லாத ஒரு சான்றையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மற்றும் நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடகள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும். ஜனவரி 5, 2011..

இது பற்றி மேலும் அறிய...

1) புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள், பி.வி.ஜகதீச ஐயர், 1918.
சந்தியா பதிப்பகம் 2009.

2) மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு
கே.வி.ராமகிருஷ்ண ராவ், திராவிடச் சான்றோர் பேரவை: ௨௦௦௯
ஆரியர் அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிறிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதி இங்கே குறிப்பிட வேண்டு.

ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


நிழலுலக ஆயுதம் - Chemtrails...


 சதி கோட்பாடு பகுதி -2...

Chemtrail அந்தந்த வான்பரப்பில் மட்டுமே செய்ய வேண்டிய அவசியமில்லை.  சர்வேதச கடல் பகுதியில் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம், எப்படி வெளியில் தெரியும்.

Contrail, Chemtrail இதெல்லாம் நமக்கு புதிய வார்த்தைகள்.  நேற்றைக்குதான் இந்த சொற்களை நான் கேள்விப்படுகிறேன். 

Chemtrail மனிதன் அறிவியலில் பலமடங்கு முன்னேறியதின் ஒரு சிறு துளி. 

NASA (அமேரிக்க வின்வெளி திட்டம்), UN (ஐநா சபை), DARPA (அமேரிக்க இராணுவ ஆராய்ச்சி மையம்)  போன்ற பல அமைப்புகளின் இரகிய திட்டமே Chemtrails. 

அறிவியல் மனிதனின் கையில் இருக்கும் ஆயுதம்.  அதை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீமைக்கும் விதைக்கலாம். 

மனித குலத்தை அழிவுக்கு அழைத்து செல்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட இராணுவ திட்டமே Chemtrails. 


பற்றி எரியும் வளைகுடா நாடுகள், நரகத்தை நோக்கிப் போகும் உலகப் பொருளாதாரம், அமேரிக்காவை மிரட்டும் Martial Law ஆகியவை போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

சவுதி அரேபியாவில் நடக்கும் சண்டையையும், உக்ரேன், சிரியா பற்றிய செய்திகளை படிக்கும் போதே மூன்றாம் உலகப்போர் ஏற்கனவே தொடங்கி நடந்து கொண்டு இருப்பதை அறியலாம். 

- தொடரும்....

இளவரசி டையனா...


நம்மிடையே வாழும் வேற்றுக்கிரக வாசிகள்...


“Ancient Aliens” என்னும் தொடரைக் ரொம்ப வருடங்கள் முன்னால் தரவிறக்கி பார்த்து இருக்கேன், இது மட்டும் இல்லாம ஏலியன்ஸ் பற்றி எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம். வெளிநாடு போல இங்கு ஏலியன்ஸ் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. ஏலியன்ஸ் watcher இங்கு நிறைய பேர் கிடையாது. “Ancient Aliens” இந்தியாவை பற்றி அதிகம் வரல ஒரே பார்ட் தான் அதுவும் மகாபாரதம் துவாரகை கிருஷ்ணன் அஸ்திரம் என்று கதையை முடித்து விடுகிறார்கள்.இது தவிர்த்து இந்தியாவில் சின்னங்கள் வைத்து ஆரய்ச்சிகள் செய்வது பெரும்பாலும் தங்க புதையல் நோக்கி தான் இருக்கிறது.இந்த ஏலியன்ஸ் விசியத்தில் நம்முடைய ஆராய்ச்சியாளர் பங்கு மிக மிகக்குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.


ஆங்கிலத்தில் உள்ளது போல தமிழில் ஏலியன்ஸ் பற்றி புத்தகம் மிக குறைவு என்றே சொல்லலாம், அப்படி இருக்குமானல் அது ஆங்கிலத்தில் இருந்து மொழி மற்றம் செய்யப்பட்டதாக தான் இருக்கிறது. தமிழில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரியபடுத்தவும் படித்து தெரிந்து கொள்கிறேன்.


The chariots of God  நிறைய ஆதாரங்கள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.இதில் வருவது எல்லாம் உண்மை என்று எடுத்து கொள்வது தவிர்ப்பது உங்களோட முடிவை பொறுத்து.


உலகத்தில் ஏலியன்ஸ் என்று அறியப்பட்ட மிக முக்கியமான வகைகள் மூன்று அவை...

Greys
Reptilians 
Nordics.

பெரும்பாலும் க்ரேஸ் பற்றிதான் நிறைய தகவல்கள் உள்ளது. அவை தான் அதிகம் தென்படுகிறது என்றும் சொல்லபடுகிறது.தோல் வெளிறிய சாம்பல் நிறத்தில் இருப்பதால் இதற்க்கு பேர் greys மற்றும் இதன் தோல் சுருங்கி விரியும் தன்மை கொண்டதாகவும், பெரிய தலை, குமிழ் நெற்றி, முட்டை மாதிரியான கண்கள், மெல்லிய சவ்வுகளால் விரல்களை இணைக்கபெற்று கைகள் மற்றும் கால்களை உடையது. காதுகள் என்று தனியான அனடமி structure இல்லாமல் உருவம் பெற்றதாக.தொடர்புகொள்ள நுண்ணுணர்வு மற்றும் ஒலி அலையை பயன்படுதுகிறது.எப்படி வௌவால்கள் தனக்கான ஒலி அலைவரிசை வைத்து இருக்கிறதோ அது போல greysயும் தனி அலைவரிசையை பயன்படுத்தி மக்களின் மனதில் இருப்பதை அறியும் திறன் பெற்றது.


பெரும்பாலும் இந்தவகை ஏலியன்ஸ் தான் மக்களை, விலங்குகளை மற்றும் இதர உயிரினங்களை ஆய்வுக்காக கடத்திசெல்கிறது என்று சொல்கிறார்கள்.இது பெரும்பாலும் குளிர் மற்றும் பனிபடர்ந்த ஊர்களில் தான் அதிகம் தென்படுகிறது, வெப்பம் இதற்க்கு ஒத்துகொள்வதில்லை போலும்.

இதனால்தான் இந்த வகை ஏலியன்ஸ் இந்தியா போன்ற வெப்ப மண்டல இடத்தில் காணமுடிவதில்லை. இந்த greys வகை ஏலியன்ஸில் கொஞ்சம் hybrid வகைகளும் உண்டு.


அடுத்தது  Reptilians என்று கருதப்படும் ஊர்வன வகை ஏலியன்ஸ், இந்த இனம் பற்றி பல கோட்பாடுகள் உள்ளது சிலர் பண்டையகாலத்தில் இருந்தே இந்த இனம் பூமியில் வாழும் உயிரினங்களில் ஒன்று என்று சொல்கிறார்கள். பூமியில் இந்த வகை இனம் ரொம்ப காலத்திற்கு முன்பே விதைக்கபட்டதாக சொல்கிறார்கள். பண்டைய காலத்தில் இருந்த இந்த ஊர்வன இனம் என்று சொல்லும் இந்த வகை நாம் கோவில்களில் சிலைகளில் பார்க்கும் பறக்கும் நாகம், யாளி போன்றவற்றை சொல்லலாம், சீனாவின் டிராகன் மாதிரியான உயிரினம். இந்த இனம் மனித தோற்றத்திலும் இருக்கும் ஊர்வன என்றும் சொல்லலாம்.

6 முதல் 9 அடி உயரம். நீண்ட கைகள் மற்றும் கால்கள் பலம் மிகுந்த தசை, மற்றும் ஒவ்வொரு கையில் 3 நீண்ட விரல்கள், அவர்களின் தோல் பழுப்பு அல்லது கரும்பச்சை நிறத்திலான செதில்களானது. சில துணை வகைகளுக்கு வெளிப்படையான வால்கள் போன்றஅமைப்பும் இருந்து உள்ளது.கூம்பு போன்ற தலை, காதுகள் மூச்சு நாசி பகுதியில் பிளவுகளை காணலாம்.கண்கள் நாம் காணும் பல்லி மற்றும் பாம்புகள் போல இருக்குமாம். எலும்புகளால் செய்யப்பட்ட இறக்கைகள் போன்ற அமைப்பு. தலையில் சில நேரங்களில் முதுகெலும்பு நீண்டு கொம்புகள் போல இருந்து இருக்கிறது. இந்த வகை உடல் அமைப்பு நமதுபூமியில் காணும் ஊர்வன போலவே உள்ளதா தோன்றும். நாம் இன்று படிக்கும் பார்க்கும் இந்தியா, சீனா மற்றும் கிரேக்க பழங்கால டிராகன்கள் மற்றும் சிறகு கொண்ட பாம்பு, பல தலைகள் கொண்ட பாம்புகடவுளர்களின் அனடமிக்கு சரியாக பொருந்தும் என்று நினைக்கிறன்.


இன்றும் இந்தியாவில் நாம் வணக்கும் நாகம், சரபம் போன்றவைகள் இந்த the Reptilians என்று கருதப்படும் ஊர்வன வகை ஏலியன்ஸ் தான்.இவர்களுக்கு குளிர் அதிகம் ஒத்துகொள்வதில்லை வெப்பமண்டலம் தான் இவர்களது இலக்கு. உதாரணமாக இன்றும் பாம்பு புற்றில தான் வளர்கிறது. புற்றின் வெப்பம் புற சூழலையும் விட அதிகமாக தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.சீனாவின் பழங்கால கதைகளில் வரும் நான்கு டிராகன் இந்த the Reptilians வகை ஏலியன்ஸ் ஆகும், இவர்கள் உருமாறும் தன்மை கொண்டவர்கள் என்று குறிப்புக்கள் உள்ளது, இப்போ உங்களுக்கு ஒன்று ஞாபகம் வருமே அதே தான் ஸ்ரீப்ரிய இச்சாதாரி பாம்பாக நடித்த படம் பற்றி தான் சொல்கிறேன்,நாம் அவற்றை பாம்பு என்று சொல்லிட்டோம், சீனாவில் டிராகன் ராஜாக்கள் என்று வைத்து அவர்கள் ஒவ்வொரு திசைக்கும் அதிபதியாக இருந்து ஆட்சி செய்தார்கள் என்று சொல்கிறார்கள்.

அதன் பிறகும் டிராகன்கள் சினாவின் மிக முக்கிய அடையாளமா இன்று வரை உள்ளது. இறுதியாக கிரேக்க நாடு, ஏதன்ஸ் நாட்டை ஆண்ட முதல் மன்னனை பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும், அவன் பெயர் சிஸ்ரோபஸ் ஆகும். இவனது உடல் ஆனது பாதி மனித அனடமி போலவும் மீதி பாம்பின் அனாடமி போலவும் இருந்ததாக குறிப்புக்கள் உள்ளது. Pergamum temple என்று சொல்லப்படும் கிரேக்க பழங்கால இடிப்படுகளில் மனித தலை கொண்ட பாம்பின் உடம்பு அமைப்பு போன்ற சிலைகள் மற்றும் கற்செதுக்கம் உள்ளதாம்.


இப்போ நம்ம இந்தியாவில் உள்ள கதைக்கு வருவோம் அவை ராகு கேது, மனிததலை கொண்டபாம்பின் உடம்பு, பாம்பின் தலையுடன் கூடிய மனித உருவம் இவரை இரண்டையும் நாம் கடவுளாக பார்க்கிறோம், இன்றும் பல கோவில்கள் இந்த ராகு கேதுவிற்கு உள்ளது. இவர்களையும் ஆராய்ச்சியிளார்கள் ஏலியன்ஸ் என்று தான் சொல்கிறார்கள். இந்த வகை ஏலியன்ஸின் வேலை மனிதனை அடிமைபடுத்தி அவனது மனதில் ஏற்படும் பயம் மற்றும் குழப்பத்தை மூலதனமாக வைத்து செயல்படுவதாக நம்பப்படுகிறது. இந்த வகை ஏலியன்ஸ் நம் மனித இனம் தவிர பிற உலகிலும் தன் ஆளுமையையும் அடக்குமுறையும் செலுத்தும் திறன் கொண்டவர்களாக உள்ளார்கள்.

பிரபஞ்சத்தில் ஏற்படும் குழப்பத்திற்கு மிக முக்கிய காரணியாக இருப்பவர்கள் இவர்கள் தான், இந்த வகை ஏலியன்ஸ்தன்மை மிக அதிகமான நெகடிவ் vibration கொண்டது, இந்த வகை ஏலியன்சால் பீடிக்கப்பட்டவர்களும் முழுவதும் நெகடிவ் vibration கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனித இனத்தில் கலபினம் செய்து அவர்கள் மூலமாக தாங்கள் செய்ய துடிக்கும் காரியங்களை முடிப்பார்கள், ஒரு கட்டத்தில் எல்லாரும் இவர்களது கலபினத்தில் வந்தவர்கள் ஆகி இந்த மொத்த உலகத்தையும் தன் வசம் கொண்டு சென்று விடுவார்கள், இந்த நெகடிவ் vibration ஏலியன்ஸ் இனம் மறைந்து வாழ்ந்து இவர்களால் அடிமைபடுத்தபட்ட மக்களின் நிழல்ளாக இருந்து தூர்காரியங்களை செய்வார்கள்.

ராகு கேதுவின் பண்பு என்ன என்று உங்க எல்லருக்கும் தெரியும், மேற்சொன்ன எல்லாமே ராகுகேது தோஷத்திற்கு பொருந்தும்.


அடுத்த இனம் The Nordics வகை ஏலியன்ஸ், இது மனிதன் போலவே இருக்கும், வித்தியாசமான் ரோம நிறங்கள், கருவிழி நிறங்களை கொண்டது.மனிதன் போலவே இருந்தாலும் இவர்களுக்கு நுண்ணறிவு அதிகம், இந்த வகை ஏலியன்சை hybridஆகா கருதுபவர்களும் உண்டு, இவைபெரும்பாலும் fringeல் வரும் observer போன்றவர்கள், மனிதனின் எல்லா நடவடிக்கைகளும் அவர்கள் கவனிப்பார்கள் மற்ற ஏலியன்ஸ்ல் இருந்து காப்பாற்றி நம்மை வழிநடத்துவார்கள் என்று சொல்லபடுகிறது. இந்த வகை ஏலியன்ஸ் அமைதி விரும்பிகள் ஆன்மிக விழிப்புணர்வு போன்றவற்றை மக்களிடையே பரவ செய்வது தான் நோக்கம்.இது தான் நமது உலகில் இன்று நாம் விடை தேடி ஒரு முடிவுக்கு வரமுடியாத ஏலியன்ஸ் பற்றிய செய்திகள், இதில் இருந்து நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறிர்கள் உண்மையில் ஏலியன்ஸ் உள்ளன?
இல்லை கட்டுகதையா___________?

தொடர் ஆய்வில் வேதவசனங்களில் வேற்றுகிரகவாசிகள்…

Conan The Barbarian - 1982...





உலகையே ஆளும் ஊர்வன இனத்தவர்கள் பற்றி மேலோட்டமாக இந்த படத்தில் தெரிவித்து இருப்பார்கள்...