15/06/2018

மாரடைப்பு தகவல்..


சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு.

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது..

SMILE (சிரிக்க சொல்வது),
TALK (பேச சொல்வது),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும். இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்.

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்.

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்...

சமூக விரோதி உறவுகளுக்கு வாழ்த்துக்கள்...


தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா, நீதிபதி சுந்தர் ஆகிய இருவரும் மாறுபட்ட தீர்ப்பு...


இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்.

3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும் - உயர்நீதிமன்றம்.

அதுவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை நீடிக்கிறது - உயர்நீதிமன்றம்...

பணம் இருப்பவனுக்கு சட்டம் இல்லை...


ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை...


ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை பற்றிய கல்வெட்டு உடையார்குடியில் உள்ளது..

இது தற்போதைய காட்டு மன்னார் கோவில்.

அந்த கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள வாசன்கங்கள் இது தான்..

ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம்

பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)… (இவன்) றம்பி
ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர.

உடையாற்குடிகு சக்கரவர்த்தி செல்லாமல் அவரின் ஸ்ரீமுகம் மட்டும் அனுப்பி தண்டனை நிறைவேற்ற சொல்கிறார்..

இதன் கருத்து வீர நாராயணன் சதுர்வேதி மங்கலத்து பெருமக்களுக்கு சகரவர்தியில் ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்ற துரோகிகளான சோமன் இவன் தம்பி ரவிதாஸன, பஞ்சவன், பரஹ்மாதிராஜனும் இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும், பிள்ளைகளும் இவர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் பெண்களும் இவர்கள் சமப்தபட்ட அனைவரும் அவர்களின் உடைமைகள் சொத்து அனைத்தையும் விட்டு விட்டு உடனே இந்த ஊரை காலிசெய்து வெளியேற வேண்டும் என்று பொருளில் எழுதப்பட்ட கல்வெட்டு...

கார்ப்பரேட் குளிர்பானம் உண்மைகள்...


பரதம் தமிழர்களின் கலை இல்லையெனக் கூறும் நயவஞ்சக தெலுங்கு நாயக்க வழிவந்த வந்தேறிகளான திராவிடர் கவனத்திற்கு...


பரதக்கலை தமிழ்ச்சித்தரான பரதச்சித்தரால் உருவாக்கப்பட்ட தமிழர்களின் கலையென ஊக்குவித்தார் தமிழினத் தேசியத்தலைவர் மேதகு. பிரபாகரன்.

ஆரியன் தன் கலையாக மாற்ற முயற்சி நடந்தபோது, அதற்குப் பக்கவாத்தியம் பாடிய திராவிட வேடதாரிகளும் சேர்ந்து அழிக்க முயன்றபோது, ஈழத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் தமிழர் கலைகளில் ஒன்றான பரதம் புத்துணர்ச்சி பெற்றது.

தேசியத்தலைவர் கலைகளுக்கு முக்கியத்துவம் தருபவர். கலையும் பண்பாடும் இனத்தின் ஓரினத்தின் அடையாளம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் "கலை பண்பாட்டுக் கழகம்" சிறப்புற இயங்கிவந்தமை நாமறிந்ததே. தனது பளுவான பணிகளுக்கிடையிலும் நடன, மிருதங்க அரங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வார். இசை நிகழ்வுகள், கிராமியக் கலைகள் என்பவற்றிலும் ஈடுபாடுகொண்டு ஊக்குவிப்பார்.

இதேபோல் தமிழரின் தற்காப்புக் கலைகள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கராத்தே தற்காப்புக் கலை மிக தாக்கமான முறையில் வன்னியில் வளர்ச்சியுற்றமை நாமறிந்ததே.

கராத்தே சுற்றுப் போட்டிகள், தரப்படுத்தல் போட்டிகள் என்பவற்றில் கலந்துகொண்து அவற்றை ஊக்குவித்த பெருமையும் அவரைச் சாரும்.

பாடசாலைகள் தோறும் 6 ம் வகுப்பிட்குமேல் கராத்தே கற்பிக்கப் பட்டது. தற்காப்புக் கலைகளின் வளர்ச்சிக்காக "தமிழீழ தற்காப்புக்கலை சம்மேளனம்" உருவாக்கப் பட்டிருந்தது. எமது வீரர்கள் சிறிலங்காவில் நடந்த போட்டிகளிலும் முத்திரை பதித்தனர்.

இவ்வாறு பல்வேறுபட்ட துறைகளையும் தாபித்து, வழிப்படுத்தி ஊக்குவித ஒரு பன்முகம்மே பிரபாகரன் முகம்...

மிரட்டல் மனிதர் -3...


மனிதன் நினைத்ததை சாதிக்க வேண்டும்...


மனிதனால் முடியாத காரியம் எதுவும் இல்லை. நம்மால் எதையும் செய்து முடிக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். மனித சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியானாலும் காரியங்களை செய்து முடிக்க முடியாது.

இந்த சக்தியை தெரிந்து பயன்படுத்தி பலவிதமான சித்துக்களையும் காட்டி மறைந்த பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள், நாயன் மார்கள், ஆழ்வார்கள், மகான்கள் போன்றவர்கள் எல்லா மதத்திலும் தோன்றி மறைந்து இருக்கிறார்கள்.

இவைகளை தெரிந்தும், படித்தும், கேட்டும் இன்னமும் செயல்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். காரணம் நம்மை நாம் அறியாததே. நமது சக்தியின் தன்மையை நாம் தெரிந்து செயல்பட்டால் இவ்வுலகில் நாம் சுகபோக வாழ்வு வாழலாம்.

அதற்கு, முதலில் நமது எண்ணங்களை நமக்கு எது தேவையோ அதிலேயே நிறுத்தி வைக்க வேண்டும். மனதில் வேறு பல எண்ணங்கள் புகவிடாமல் மனம் அலைபாயாமல் – நமது என்ன அலைகளை சிதறவிடாமல் ஒரு பிடியாக நாம் நினைத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

ஆத்ம சக்தி என்ற நமது மனோதிட சக்தியை நமது எண்ணம் எதுவோ அதிலேயே இருக்கச் செய்ய வேண்டும்.

நமது விருப்பங்களை இடைவிடாமல் ஏற்றத் தாழ்வு இல்லாமல் சமநிலையில் வைராக்கியத்துடன் எண்ணி அதிலேயே ஊன்றி கவனத்தைச் செலுத்தி வரவேண்டும்.

நாம் விரும்பும் காரியம் முடியும்வரை அதிலேயே மனதை வைத்து செயல்பட வேண்டும். வேறு சிந்தனை கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும்.

நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு எண்ணத்தை மனதில் நிறுத்தி தொடர்ந்து அமைதியாவும், அழுத்தமாகவும் அந்த எண்ணத்தை பற்றியே மனதில் தியானத்துக் கொண்டு இருப்பதே மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலையாகும்.

இந்த மனதை ஒரு நிலைப்படுத்தும் விதத்தைப் பயிற்சிகளினால் தான் பழக்கத்துக்குக் கொண்டுவர முடியும்.

மனதை ஒரு நிலைப்படுத்தி நிற்பது கடினம். காரணம் மனதில் ஆயிரக்கணக் கான எண்ணங்களை வைத்துக் கொண்டு நம் சிந்தனையை பல வழிகளிலும் சிதரவிட்டுக் கொண்டு பலவற்றையும் எண்ணிக்கொண்டே இருப்பதுதான்.

நமக்கு எது வேண்டுமோ அந்த எண்ணத்தையே அடிக்கடி மனதில் எண்ணி அதே எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியும்.

வாழ்க்கையில் தினசரி நாம் நமது மனதை ஒரு முக்கியமான கருவியாக எல்லா வகையிலும் நல்லது-கெட்டது இரண்டுக்குமே உபயோகப் படுத்தி வருகிறோம்.

மனம் இயங்காமல் எதையும் செயல்படுத்த முடியாது...

அசாத்திய மனிதர் - 2...


முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது...


முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது.கி.மு 13 முதல் 14 பில்லியனுக்குள்.

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 – 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 – 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 – 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 – 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 – 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 – 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு – 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு – 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு – 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு – 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் “கலியாண்டு” ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு – 3100 – 3000

துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு – 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு – 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு – 2000 – 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி – சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி – சம்பரன் ஆட்சி.

கி.மு – 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. – 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. – 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. – 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ – துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 – 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 – 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 – 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் – மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 – 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்...

ரிசர்வ் பேங்க் வரலாறு...


மும்பை : ஒர்லி பகுதியில் அமைந்துள்ள பல அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து....


33வது மாடியில் பிடித்துள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி.

குடியிருப்புகளில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றம்...

தரமான சம்பவம் சமூக விரோதிகளா...


என்னங்கடா காலா படத்து இரண்டாம் பாதிய அப்படியே ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100ஆவது நாள் போராட்டத்துல நடத்தி வச்சிருக்கீங்க...


இத பாத்து தமிழர்கள் உங்க சரியில்லாத சிஸ்டத்த உணர்ந்திர கூடாதுனு வேங்க மவனை பேசவிட்ட மாறி தெரியுதே..

படத்துல காட்டுன கரிகாளன்கள் தூத்துக்குடி முழுக்க ‘நிலம் நீர் எங்கள் உரிமை போராடுவோம்’னு நெஞ்சை நிமித்தி நின்னத பாத்து சகிக்காம படத்தில் காட்டிய கதாப்பாத்திர வில்லனின் மெய்யான உருவமாய் அரச இயந்திரம் மற்றும் கார்பரேட்களின் கங்கானியாய் ‘சமூக விரோதிகள் ஊடுவிட்டாங்க’ என்ற வசனத்தில் தூத்துக்குடியில் அசத்தி விட்டார் ரசினி.

Climaxல் வில்லனுக்கு எதிராக காட்டப்பட்ட கரு நிறம் புடைசூழும் symbolismமும் தூத்துக்குடியில் ரசினியைப் பார்த்து ‘யாரு யா நீ’ என்று போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர் கேட்ட யதார்த்த நிலையும் மெய் சிலிர்க்க வைக்கின்றது.

போராட வேண்டியதும் விழிப்படைவதும் நம்ம ஒவ்வொருத்தரோட கடம..
ஆமா..

உரிமைய மீட்கனும்..
ஆமா ஆமா..

அதிகாரம் மிக வலிமையானது அத பணிய வைக்கனும்!
ஏன்? அதே அதிகாரத்த கைப்பற்றுவதும் நம்ம உரிமையில்லயா? எத்தன நாளைக்கு இந்த போராட்டம்?
நம்ம அதிகாரம்.. நமக்கான உரிமை.. திரும்பவும் இந்த திராவிட கங்காணிகள் கைகளுக்கு போகம இருக்கனும்னா இந்த முறை தமிழ் தேசியத்தை ஏற்று விழிப்படைந்த உழைக்கும் கூட்டம் அதிகாரத்த நிறுவனும்...

அன்றைய காலத்தில் தற்சார்பு மிகவும் மேலோங்கி இருந்தது...


இன்றைய கால நிலமையே வேறு...
கையேந்துர கூட்டம் என்னைக்கும் இப்படிதான் கையேந்துமோ...?

இந்த 10 கிரகத்தில் ஏலியன்ஸ் இருக்கலாம்; நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு...


கோடிக்கணக்கான விண்வெளி ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் இந்த தகவலுக்காக தான் காத்திருந்தனர்...

வேற்றுகிரகவாசிகள் பற்றிய ரகசியங்களையே அறிய, நாசா தனது விண்வெளி தொலைநோக்கியான கெப்லரை பயன்படுத்தி, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆய்வு நடத்தி வந்தது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான விண்வெளி ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் இந்த தகவலுக்காக தான் காத்திருந்தனர்.

நாசாவின் அறிக்கையில், “நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம், 219 புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில், நட்சத்திரங்களின் வாழ்விட மண்டலத்தில் உள்ள 10 கிரகங்கள், பூமியின் அளவிற்கு ஏறக்குறைய ஒரேமாதிரி இருக்கின்றன. இந்த 10 பத்து கிரகங்களிலும் திரவ நீர் காணப்படுகின்றன. இந்த சூழியல் அமைப்புகளால், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

இதுவரை கெப்லர் விண்வெளி தொலைநோக்கி, மொத்தம் 4,034 கிரகங்களை கண்டறிந்துள்ளது. அவற்றில், 2,335 கிரகங்கள், சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ளவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் 30 கிரகங்கள், பூமியைப் போன்று ஒத்த அளவுடன் நட்சத்திரங்களின் வாழ்விட மண்டலத்தில் உள்ளன.

கடைசியாக கண்டறியப்பட்ட 200 கிரகங்கள், இரண்டு வேறுபட்ட குழுக்களாக பிரிக்கப்பட்டன. நெப்டியூனை விட சிறியதாக உள்ள வாயு கிரகங்கள் மற்றும் பூமியின் அளவுடைய கிரகங்கள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பொதுவாக, பாறை கிரகங்களை 75% பூமியை விட பெரிதாக உருவாக்கியுள்ளது” என நாசா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது...

பினாமிகள் தற்கொலை புதிது இல்லை...


தோழர் முகிலனை விடுதலை செய்...


சிறையில் உண்ணாவிரதம் இருந்த முகிலன் மருத்துவமனையில் அனுமதி...

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் சுற்றுச்சூழல் போராளியான முகிலன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் போராளியான முகிலன் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பாகத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுத் திரும்பியபோது போலீஸாரால் கூடங்குளம்  போராட்ட வழக்குக்காகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 269 நாள்களாகப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நீதி கிடைக்க வேண்டும், கூடங்குளத்தில் அப்பாவி மக்கள் ஒரு லட்சம் பேர்மீது தொடரப்பட்ட வழக்குகளைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 9 நாள்களாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விடுவிக்க வலியுறுத்தி அநீதிக்கு எதிரான கூட்டியக்கம், காவிரி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பாகக் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது 

இந்த நிலையில், காவிரி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மு.ராஜேஸ்வரி, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சம்பத், நந்திரபாலன், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த நெல்லை பீட்டர், எஸ்.டி.பி.ஐ மாநிலத் துணைத் தலைவர் முபாரக், பி.யூ.சி.எஸ் வழக்கறிஞரான அப்துல் நிஜாம், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராஜா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், ``கடந்த 9 மாத காலமாக முகிலன் சிறையில் இருந்து வருகிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதெல்லாம், நீதிபதியிடம், ‘என்மீது போடப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை. அதற்காக அரசு சார்பாக எத்தனை சம்மன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிறையில் இருப்பதால் வழக்குகளை அரசு விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். என் மீதான வழக்குகளை மட்டும் தனியாகப் பிரித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும். வழக்குகள் குறித்த முழு விவரங்களையும் கொடுக்க வேண்டும்’ எனப் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அரசு சார்பாக முறையாக விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

தற்போது 5 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் சிறைக்கு உள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இது போன்ற சூழலில், அவரிடம் சிறைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், சிறைத்துறையினரோ அரசு சார்பாகவோ அவரிடம் எந்தச் சமரச பேச்சுக்கும் தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் பிடிவாதமாக உண்ணாவிரதம் இருப்பதால் அவருடைய உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அதனால் அரசு சார்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அத்துடன், அவரை சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதற்காகத் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் நபர்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் அளிக்க உள்ளோம். சிறையில் 9 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் முகிலன் தன் உடல் நலனைக் கவனத்தில் கொண்டு உடனடியாக அதைக் கைவிட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்கள்...

மிரட்டல் மனிதர் - 1...


உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்....


படத்தில் பார்ப்பது ஒத்த தட்டு தராசு.

நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு. இத நம்ம ஊர்ல 'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, தூக்குகோல்ன்னும் சொல்லுவாங்க.

வெள்ளைக்கோல்வரை என்கின்ற
சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம்ம வாய்களுக்குள்ள நுழஞ்சி சிதஞ்சி வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு.

அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க. அதனாலதான் இந்த பேரு. அந்த கோடுங்கதான் எடைகளுக்கான குறியீடுங்க. பொதுவா தாரசுன்ன இரண்டு தட்டு இருக்குறது வழக்கம். ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டியத வைக்க. ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது.

அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க. தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த.கோட்டுலயே கயித்த இருக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான். கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல பாக்க தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம்.

கோல் கீழபாக்க தாந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு. இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல. இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும்.

ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல. இன்னக்கு ரயில்வே ஸ்டேசன், லாரி ஆபீஸ் மாதரி இடங்களில பண்டங்கள நிறுக்க பயன்படுத்தப்படுகிற 'மேடை சமநிலை' (Platform Balance) ங்களுக்கு மூலம் நம்ம தாத்தாங்க கண்டுபிடிச்ச ஒத்தத்தட்டு தராசு தான். நாம அபிவிருத்தி பண்ணியிருக்க வேண்டிய நம்ம தாத்தாக்களோட தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திகிட்டு இருக்கான். நாம வேடிக்க பாத்துகிட்டு இருக்கோம். என்ன கொடுமை சார் இது?....

திருவள்ளுவர் சொன்ன "சமன் செய்து சீர்தூக்கும் கோல்" இது தான். இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல்ங்கிறது வேற ஒண்ண ஞாபாகப்படுத்துது. தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம்ன்னு ஒரு பேரு இருக்கு. இந்த பேரு எத்துக்குன்ன சூரியன் துலாரசில சஞ்சரிக்குற மாதம் இது. சூரியன் துலா ராசில நுழையுற நாள் அன்னக்கி பூமில பகலும் ராத்திரியும் சம நீளத்துல இருக்கும்.

அதாவது பகல் 12 மணி நேரம் ராத்திரி 12 மணி நேரம். மத்த நாளையில எல்லாம் பகலுக்கும் ராத்திரிக்கும் நீளத்துல கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும். என்வே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம்ன்னு பேர் வச்சிருக்கிறாங்க நம்ம தாத்தாங்க.

இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம்ம ஒத்ததட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கு.

இப்படி வானியல், கணக்கு, கணக்கீடு, சமானம்ன்னு நம்ம தாத்தாங்களோட பன்முக அறிவு செழிப்பை நினச்சி பார்க்கையில நம்மால் ஆ.... ன்னு வாய பிளக்கதான் முடியுது. நம்ம தாத்தாங்களோட அறிவு தொடர்ச்சி கண்ணி நம்ம விட்டு எப்ப, எங்க அறுந்து போச்சுங்கிற கேள்விதான் பதில் இல்லாம நம்ம முன்னால நின்னுக்கிட்டு இருக்கு.....

கதிராமங்கலம் - 389ம் நாள் போராட்டம்...


மரவள்ளிக் கிழங்கு....


மரவள்ளி என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது.

இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.

மரவள்ளிக் கிழங்கு என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் சவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது.

மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது.

இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு "இனிப்பு" மரவள்ளி, "கசப்பு" மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்கக்கூடும்.

"கசப்பு" மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் "கசப்பு" மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.

மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது. உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, கையிட்டி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைசீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்சு மற்றும் இந்தோனேசியா ஆகும்.

உலகெங்கும் சுமார் 15.7 மில்லியன் கே(ஹெ)க்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. ஒரு கெக்டேருக்கு சராசரி 10 தொன்கள் மரவள்ளிக் கிழங்கு வீதம் 158 மில்லியன் தொன்கள் உற்பத்தியாகிறது. மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் கண்டங்களில் 51.44 மில்லியன் கெக்டேர் அளவில் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆசியா 3.97 மில்லியன் கெக்டேர் அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

உலகளவில் மரவள்ளிக் கிழங்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் 57%-ம் (சுமார் 95 நாடுகளில்) ஆசியாவில் 25%-ம் விளைவிக்கப்படுகிறது. மண் வளம் போன்ற எவ்விதமான வேளாண் சூழலையும் தாங்கி வளரக்கூடிய பயிராதலால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் குறிப்பாக, ஆப்பிரிக்கா,அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் ஒரு முதன்மைப் பயிராக மரவள்ளிக் கிழங்கு விளங்குகிறது...

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம் ஆரம்பம்...


தூத்துக்குடி மாவட்டம்… மகளிர் திட்ட இயக்குநர் P.J.ரேவதியின் இலஞ்ச பட்டியல்… இலஞ்சத்தில் அமைச்சருக்கு பங்கு...


தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் P.J ரேவதி அவர்களின் மகளிர் சுயஉதவிக்குழு நடத்தும் பெண்களிடம் தொடர்ந்து இலஞ்சம் வசுலித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து தேசிய நகர் புற வாழ்வாதார இயக்க மகளிர் குழு பெண்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ் யிடம அளித்த  புகாரில்  திட்ட இயக்குநர் பி.ஜே .ரேவதி லஞ்சமாக கேட்கும்  பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.. இதோ பட்டியல்..

சுழல் நிதியில் ரூ10,000க்கு இலஞ்சம் ரூ.1000/-

வங்கிகடன் பரிந்துரை கடிதத்திற்கு ரூ.2000/–

SHG(self help group)ஊக்குநர்பயிற்சிக்கு ரூ.2000/-

உறுப்பினர் பயிற்சிக்கு ரூ.1000/-

புதிய சமுதாய அமைப்பாளர் பணிக்கு ரூ.50,000/-

பணியிடம் மாற்றத்திற்கு ரூ.50,000/-,-

ALF பகுதி அளவிலான அமைப்பு பயிற்சிக்கு ரூ10,000/-

ALF சுழல்நிதி ரூ50,000க்கு இலஞ்சம் ரூ.5000/-

பூமாலை வணிக வணிக வளாக கடைக்கு ரூ.3000/-

CRP ஊதியம் ரூ.500ல் கூட ரூ.200/- என்று பட்டியல் போட்டு லஞ்சம் வசூலிக்கிறார்.

இது பற்றி விசாரித்த போது ரேவதியிடம் 96குழுக்கள்,  வேணி 50குழுக்கள், தேவசகாயத்திடம் 180குழுக்கள், டவுன் பஞ்சாயத்து 100குழுக்கள் என கடந்த ஆண்டு  451 மகளிர்குழுக்களும், இந்த ஆண்டு 302 மகளிர் குழுக்களும் இயங்கி வருகிறது. திருச்செந்தூரில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச வாகன ஓட்டுவதற்கு பயிற்சி 50 பேருக்கு வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது. பல இலட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் கடந்த 5ம் தேதி கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்புலெட்சுமி என்ற பெண் அங்குள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் ரூ.19700/-வங்கியில் செலுத்தியுள்ளார். திட்ட இயக்குநர்  ரேவதி அபிராமி தங்கம் என்பவர் பெயரில் பினாமி  வங்கி கணக்கு துவக்கியுள்ளார்.  திட்ட இயக்குநர் ரேவதிக்கு நாகர்கோயில் சொந்த ஊர் என்பதால் நாகர்கோயில் அருகே உள்ள வடிவீஸ்வரம் ஸ்டேட் வங்கியின் கிளையில் வங்கி கணக்கு எண்.10477789575ல் இலஞ்சம் பணம் போட வேண்டும் என்பது வாய் மொழி உத்தரவு..

இந்த நிலையில் புகார்  அளித்த சமுதாய அமைப்பாளர் ஏ.ரேவதிக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. ந.க.எண்.அ4 (NULM)/1237/2017 அனுப்பியுள்ள குறிப்பாணையில் களப்பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  22சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் ஆதார் கார்டு விவரங்களை சேகரித்து  ஆன்லைனில் பதிவு செய்யப்படவில்லை மற்றும் 03.06.2018ல் 04.06.2018 ஆகிய இருதினங்கள் பணி தொடர்பான விவரங்களை தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ரேவதி அனுப்பியுள்ள பதிலில் 2016ம் ஆண்டு முதல்  சுமர் 96 மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி பராமரித்து வருகிறேன். மேலும் ஆதார் விபரங்களை வாங்கி ஆன்லைனில் பதிவு செய்துள்ளேன். நான் பணியில் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

ஆனால், மகளிர் திட்ட இயக்குநர் பி.ஜே. ரேவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாறுதல் பெற்று  வந்து சுமார்  1 ½ வருடங்கள் ஆகிறது. இந்த 1 ½ வருட பணி காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவிடம் மட்டும் மாதந்தோறும் சுமார் ரூ5 இலட்சத்திற்கு மேல் லஞ்சம் வாங்கி வருகிறார் என்று தெரிகிறது. மாதம் குறைந்தபட்சம்  ரூ5 இலட்சம் என கணக்கீட்டால் 18 மாதங்களில் வாங்கிய  இலஞ்சம் ரூ1 கோடியை தாண்டும்..  மாவட்ட திட்ட இயக்குநர் ரேவதி மகளிர்  குழுக்களிடம் உங்களிடம் இலஞ்சம் வாங்கி நானா வைத்துக்கொள்கிறேன். நீங்கள் கொடுக்கும் இலஞ்சத்தில் பெரும்பகுதி சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு பங்கு கொடுத்து விடுகிறேன் என்று வெளிப்படையாக பேசுகிறார்..

இந்த பிரச்சனைகளை தூண்டி விடுவதாக மகளில் உதவி திட்ட இயக்குநர் சுகுமார் மீது, மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோப்பை அனுப்பினார் மாவட்ட திட்ட இயக்குநர் பி.ஜே.ரேவதி. 12.6.18ம் தேதி மாலை 4மணியளவில் சுகுமார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். வேறு இடத்திற்கு மாறுதல் உத்தரவு கொடுக்காத காரணத்தால் சுகுமார், சென்னையில்  உயரதிகாரிகளை சந்திக்க சென்றுவிட்டார்…

மாவட்ட திட்ட இயக்குநர் பி.ஜே ரேவதியின் செயல்பாடுகளால் தேசிய நகர் புற வாழ்வாதார இயக்கம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது...

சுப.உதயக்குமாரை அச்சுறுத்தும் காவல்துறை...


தமிழனின் வளரி எனும் ஆயுதம்...


வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன் படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.

தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

"வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்)

இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.

ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது.

ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம்.

இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்...

ஏன் மிகப்பெரும் சாலைகள்...