15/06/2018

என்னங்கடா காலா படத்து இரண்டாம் பாதிய அப்படியே ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100ஆவது நாள் போராட்டத்துல நடத்தி வச்சிருக்கீங்க...


இத பாத்து தமிழர்கள் உங்க சரியில்லாத சிஸ்டத்த உணர்ந்திர கூடாதுனு வேங்க மவனை பேசவிட்ட மாறி தெரியுதே..

படத்துல காட்டுன கரிகாளன்கள் தூத்துக்குடி முழுக்க ‘நிலம் நீர் எங்கள் உரிமை போராடுவோம்’னு நெஞ்சை நிமித்தி நின்னத பாத்து சகிக்காம படத்தில் காட்டிய கதாப்பாத்திர வில்லனின் மெய்யான உருவமாய் அரச இயந்திரம் மற்றும் கார்பரேட்களின் கங்கானியாய் ‘சமூக விரோதிகள் ஊடுவிட்டாங்க’ என்ற வசனத்தில் தூத்துக்குடியில் அசத்தி விட்டார் ரசினி.

Climaxல் வில்லனுக்கு எதிராக காட்டப்பட்ட கரு நிறம் புடைசூழும் symbolismமும் தூத்துக்குடியில் ரசினியைப் பார்த்து ‘யாரு யா நீ’ என்று போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர் கேட்ட யதார்த்த நிலையும் மெய் சிலிர்க்க வைக்கின்றது.

போராட வேண்டியதும் விழிப்படைவதும் நம்ம ஒவ்வொருத்தரோட கடம..
ஆமா..

உரிமைய மீட்கனும்..
ஆமா ஆமா..

அதிகாரம் மிக வலிமையானது அத பணிய வைக்கனும்!
ஏன்? அதே அதிகாரத்த கைப்பற்றுவதும் நம்ம உரிமையில்லயா? எத்தன நாளைக்கு இந்த போராட்டம்?
நம்ம அதிகாரம்.. நமக்கான உரிமை.. திரும்பவும் இந்த திராவிட கங்காணிகள் கைகளுக்கு போகம இருக்கனும்னா இந்த முறை தமிழ் தேசியத்தை ஏற்று விழிப்படைந்த உழைக்கும் கூட்டம் அதிகாரத்த நிறுவனும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.